அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-34-நிலத்தை செறுத்து உண்ணும் நீசக் கலியை -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
முப்பத்து நாலாம் பாட்டு –அவதாரிகை
அவதாரிகை –
கலி தோஷ அபிபூதமான ஜகத்தை ரஷித்தமையை சொல்லி -இவரை -ஆஸ்ரயிப்பார்க்கு-ஆத்ம குணாதிகள் தானே வந்து சேரும் என்னும் அத்தையும் -இவருடைய ஆத்ம குணோத்-பாதகத்வ ஹேதுவான சகாய பலத்தையும் அருளிச் செய்தார் கீழ் இரண்டு பாட்டாலே –
இப்பாட்டிலே -இப்படி கலி தோஷத்தைப் போக்கி -லோகத்தை ரஷித்த அளவிலும் –
எம்பெருமானார் குணங்கள் பிரகாசித்தது இல்லை-என் கர்மத்தைக் கழித்த பின்பு
வை லஷண்யத்தை தரித்தது -என்கிறார் –

நிலத்தை செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை என் பெய் வினைதென்
புலத்தில் பொறித்த வப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பெறுத்தது இராமானுசன் தன நயப் புகழே -34 –

வியாக்யானம்
எம்பெருமானாருடைய ச்ப்ருஹநீயமானகுண ஜாதம் -லோகத்தை அபிபவித்து
ஹிம்சியா நின்று உள்ள ஹேயமான கலியை மனச்சாலே பரிச்சேதிக்க அரிதாய் இருந்துள்ள பலத்தை –
தேஜஸ் சகாசத்தில் திமிரம் போலே அபிபூதமாம்படி பண்ணின வளவிலும் பிரகாசித்தது இல்லை –என்னாலே உண்டாக்கப் பட்ட பாபங்களை யம லோகத்திலே எழுதி வைத்த அந்தப் புஸ்தக பாரத்தை-தஹித்த பின்பு ஔ ஜ்ஜ்வல்ய ரூபமான வை லஷண்யத்தை தரித்தது –
பிறங்குதல்-பிரகாசித்தல்
தென் புலம் -யம புரம்
சும்மை-சுமை
பொறுத்தல்-தஹித்தல்
நயம்-விருப்பம்–

பொறித்த -கல் வெட்டு போலே செய்த கர்மங்கள் -நைச்சிய அனுசந்தானம் -புண்யம் தாமரை -விகாசம் அடைய -பாபம் ஆகிட இருள் போக்க ராமானுஜ திவாகரன் –

————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை
கீழ் இரண்டு பாட்டாலே -கலியினுடைய க்ரௌர்யத்தாலே க்லேசப்பட்ட லோகத்தை ரஷித்த –எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்களுக்கு ஸ்வரூப அனுரூபமான சம்பத்துக்கள் தன்னடையே வந்து சேரும்-என்றும் -அவர்தாம் அந்த ரஷணத் துக்கு உறுப்பான வைபவத்தை உடையவர் என்றும் பிரதி பாதித்து
இப்பாட்டிலே -அப்படிப்பட்ட ரஷணத்திலே எம்பெருமானார் உடைய பிரபாவம் பிரகாசித்தது இல்லை –என்னுடைய ஆசூர க்ருத்யங்களை யம லோகத்தில் எழுதி வைத்த புஸ்தக பாரத்தை எல்லாம்-தஹித்த பின்பு காணும் அவருடைய கல்யாண குண வைபவத்துக்கு ஒரு பிரகாசம் லபித்தது -என்கிறார் –

வியாக்யானம் –
நிலம்-
தர்மார்த்த காம மோஷ புருஷார்த்தங்களுக்கு எல்லாம் விளை நிலமான மகா பிர்த்வி
க்ர்தத்ரே தாத்வபாரதி யுகங்களிலே -சாதுர்வர்ண மயா ஸ்ரஷ்டா குண கர்ம விபாக -என்று சொல்லப்படுகிற-தம் தம் மரியாதைகளில் நடந்து -சூகோத்தரமாக பகவத் ஆஜ்ஜா பரிபாலனம் பண்ணிக் கொண்டு போருகிற பூமி –என்றபடி –
நிலத்தை
அந்த பூமியிலே வர்த்திக்கிற சேதனரை -செறுத்து -அந்த மரியாதை எல்லாம் மூலையடியே-நடத்திக் கொண்டு பூர்வ காலத்துக்கு விபரீதமாக எல்லாரையும் துக்காகுலராம் படி பண்ணி –
உண்ணும் –
லோகத்தாரை எல்லாம் ஸ்வ வசமாக கொண்டு சாம்ராஜ்யம் பண்ணி நிற்கிற கலி தான் லோகத்தை-அழித்த பிரகாரத்தை கீழில் பாட்டில் பரக்க சொன்னோம்

-நீசக் கலியை -மனுஷ்யரிலே சண்டாளரைப் போலே
காணும் யுகங்களிலே அதி ஹேயமான கலி யுகமும் –நீசக் கலியை –நீசமான கலி யுகத்தின் உடைய –நினைப்பரிய பலத்தை -அப்ராப்ய மனச சஹா -என்னுமா போலே எத்தனையேனும் தரம் உடையார்க்கும்-அந்த யுகத்தின் உடைய க்ரௌர்யம் தட்டாதபடி வர்த்திப்போம் என்று நினைத்து இருக்கவும் அரியதாய் இருக்கிற
பலத்தை –மனசால் பரிச்சேதிக்க அரிதாய் இருக்கிற பலத்தை -என்றபடி -மகா பல-என்று சொல்லப்படுகிற-சர்வேஸ்வரனுடைய பலத்தை பரிச்சேதிக்கிலும் இதனுடைய பலத்தை பரிச்சேதிக்க ஒண்ணாது காணும் –
செறுத்தும் –
பாஸ்கரன் உதித்து அந்தகாரத்தை சவாசனமாகபோக்கினது போலே -கலி தோஷத்தை
நிவர்த்திப்பித்த அளவிலும் -பொலிக பொலிக பொலிக போயிற்று வல் உயர் சாபம் நலியும் நரகமும்-நைந்த நமக்கு இங்கி யாதொன்றுமில்லை -கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று மயர்வற-மதி நலம் அருளப் பெற்றவரும் இவருடைய அவதாரத்தைக் கொண்டாடினார் இறே –
ஸ்வ புருஷம் மபிவீஷ்ய பாசாஹச்துவம் வததியம் கிலதச்ய கர்ண மூலே -என்றும்
பரிஹர மதுசூதன பிரபன்னா ப்ரபுரகம் அன்யக்ர்ணா ந வைஷ்ணவானாம் –என்றும்
பவ சரணம் இதீரயந்தியே வைத்ய ஜடதூரதரென தானபாபான் -என்றும்
நகலு பாகவதாயாம் விஷயம் நச்சந்தி -என்கிறபடியே இவர் அவதரித்து -எல்லாரையும் பிரபத்தி மார்க்கத்திலே-நடப்பித்து -பாகவதாரக் பண்ணி -கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து நாவலிட்டு உழி தருகின்றோம்-நமன் தமர் தலைகள் மீதே -என்கிற பிரகாரத்திலே கலியினுடைய வெக்காயம் தட்டாதபடி
லோகத்தை எல்லாம் -ரஷித்த அளவிலும் என்றபடி
-இராமானுசன் தன் நயப் புகழே –
எம்பெருமானார் உடைய-ச்ப்ர்ஹநீயமான கல்யாண குணங்கள் –நயம் -விருப்பம் -பிறந்கியது இல்லை -பிரகாசித்தது இல்லை பின்னை
எத்தாலே பிரகாசித்தது என்றால் –என் பெய் வினை -அநாதி காலமே தொடங்கி இவ்வளவாக –தேப்யோ ப்யதி காநிதான்ய ஹமபி சூத்ர கரோமிஷனாத்-என்றும் -யாவச்ச்சயம் சதுரிதம் சகலச்ய-ஜந்தோ தாவச்சதத் தத்தி கஞ்சமா மாச்திசத்யம் -என்றும் சொல்லப்படுகிற ஹேய உபாதேய விவேக-சூன்யனான என்னாலே உண்டாக்கப்பட்ட அகர்த்த்ய கரணமும் கர்த்த்ய அகரணமும் தொடக்கமான பாபங்களை
பெய்கை
உண்டாக்குகை –தென் புலத்தில் -தஷிண திக்கில் பாதக ஸ்தலமாய் கொண்டு இருக்கிற யம லோகத்திலே
தென்புலம் -யம புரம் -பொறித்த -சித்ர குப்தனாலே எழுதப்பட்ட –அப் புத்தக சும்மை -அந்த புஸ்தக பாரங்களை
சும்மை-பாரம் -இத்தால் பகவத அபசார – பாகவத அபசார -அசஹ்யா அபசார ரூபமாய் -சமசித்த பிராரப்த காமி-ரூபமாய் இருக்கிற கர்மங்களினுடைய அபரிமிதத்வத்தை சொலிற்று ஆய்த்து –பொறுக்கிய பின் -அந்த-பாபங்களை எல்லாம் பிரிகதிர் படாதபடி தஹித்த பின்பு –பெறுக்குதல்-தஹித்தல் –நலத்தை-பொறுத்தது -பாபத்வாந்த ஷயாயச ஸ்ரீ மான் ஆவிர்பூத் பூமாவ் ராமானுஜ திவாகர -என்கிறபடியே-பிரகாசத்தைப் பெற்றது அப்போது -என்றபடி –

————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
செறு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்தமையும் –
ஆஸ்ரயிப்பார்க்கு ஆத்ம குணாதிகள் தாமே வந்து சேருதலும் -ஆத்ம குணங்களை உண்டாக்குவதற்கு-இவருக்கு ஏற்ப்பட்டு உள்ள சகாய பலமும் -கீழ் இரண்டு பாட்டுக்களாலும் கூறப் பட்டன –இந்தப் பாட்டில் இப்படிக் கலியை செறுத்து உலகை ரஷித்த படியால் எம்பெருமானார் குணங்கள்-பிரகாசிக்க வில்லை –என் வினை யனைத்தையும் விலக்கிய பின்னரே அவை பிரகாசித்தன -என்கிறார்

பத உரை –
இராமானுசன் தன் -எம்பெருமானார் உடைய
நயப் புகழ்-விரும்பத் தக்க குணத் திரள்
நிலத்தை -உலகத்தை
செறுத்து -நிலை குலையச் செய்து
உண்ணும் -துன்புறுத்தும்
நீசக் கலியை -கீழ்த் தரமான தன்மை கொண்ட கலியினுடைய
நினைப்பரிய -நெஞ்சினாலும் இவ்வளவு என்று நினைக்க முடியாத
பலத்தை -வலுவை
செறுத்தும் -தொலைத்தும்
பிறங்கியது இல்லை -விளங்கியது இல்லை
என்-என்னாலே
செய்-செய்யப்பட்ட
வினை-பாபங்களை
தென் புலத்தில் -யம லோகத்தில்
பொறித்த -எழுதி வைத்த
அப்புத்தகச் சும்மை -அத சுவடிச் சுமையை
பொறுக்கிய பின் -கொளுத்திய பின்
நலத்தை -விளங்கும் சிறப்பை
பொறுத்தது -தாங்கிக் கொண்டது-

வியாக்யானம்
நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக் கலி –
நிலம்-நிலத்தில் உள்ளசேதனர்
செறுக்கப் படுபவர் அவரே ஆதலின்
கலி நீசனாதற்கு ஹேது நிலத்தை செறுத்து உண்ணுதல்
உண்ணல்-கபளீகரித்தல்
ஆவது -உலகைத் தன வசம் ஆக்குதல்
காலம் ஆதலின் உலகத்தை தன வசத்திலே ஆக்கி வியாபகமாய் இருத்தல் பொருந்தும் –
கிருதாதிகள் நிலத்தில் வியாபிக்கும் அவை அன்றி செறுத்து உண்பவை அல்ல –
செறுத்தல் ஆவது -வர்ண ஆஸ்ரம மரியாதைதையும் இறைவனை வழி படும் நெறியையும் குலைத்தல் –
வர்ண ஆஸ்ரம ஆசார வதீ பிரவ்ருத்திர் நகலவ் ந்ருனாம்-என்று வர்ண ஆஸ்ரமங்களை பொறுத்த
நடவடிக்கை மானிடர்க்கு கலி காலத்தில் இல்லை -என்று சரீரத்தோடு கூடிய நிலைக்கு ஏற்ப வகுக்கப்பட்ட
அறநெறி வரம்பும் -விசிஷ்ட வேஷ மரியாதையும் –
கலவ ஜகத்பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டார மீச்வரம்
நார்ச்ச யிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோபஹதா ஜனா -என்று
மைத்ரேயரே -உலகின் தலைவனும் அனைத்தையும் படைத்தவனும் -ஈஸ்வரனும் ஆகிய விஷ்ணுவை-பாஷண்டர்களால் கெடுக்கப்பட்ட ஜனங்கள் கலி காலத்தில் பூஜிக்க மாட்டார்கள்-என்று-சரீர தொடர்பு அற்ற பரிசுத்த ஆத்ம தத்துவத்துக்கு ஏற்ப வகுக்கப்பட்ட நெறி முறையும் –
நிஷ்க்ருஷ்ட வேஷ மரியாதையையும் -குலைக்கப்படுவது கலியினால் அன்றோ –
இருவகை மரியாதையையும் குலைத்தலின் கலி நீசனாயினான் -வர்ண தர்மங்கள் விட்டவரும்-நெடும் தகையை நினையாதவரும் நீசர் அன்றோ -விடச் செய்தவனும் நினைக்க ஒட்டாதவனும்-நீசனாகக் கேட்க வேணுமோ –
செறுத்தல் உணவாய் -தாரகமாதல் பற்றி உண்ணும் -என்கிறார் -ஆகவுமாம்-
கலியை-உருபு மயக்கம்
நினைப்பரிய பலத்தைச் செலுத்தும் பிறந்கியது இல்லை –
நிலத்தை எல்லாம் செறுத்து உண்ணும் கலியாதலின் அதன் பலம் நினைப்பு அரியதாயிற்று –
உலகு உண்டவன் பலத்தை பரிச்சேதித்தாலும் உலகைச் செறுத்து உண்ணும் இதன் பலம் பரிச்சேதிக்க
வரிது–இறைவனாலும் காக்க முடியாத படி அன்றோ இது செறுகிறது
இத்தகைய கலியின் பலத்தை செறுத்து அதை ஒடுக்கினால் இராமானுசன் புகழ்
எவ்வளவு பிறந்கியதாக வேண்டும் –
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழி தரக் கண்டோம் -திரு வாய் மொழி -5 2-1 – – என்று
நம் ஆழ்வாரும் இவரால் கலி கெடுவதை அருளிச் செய்தார் –
பகவன் நாமத்தை அண்டை கொண்டவர்க்கே கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நமன் தமர் தலைகள் மீது நாவல் இட்டு உழி தர முடியுமானால் இராமானுசனை
அண்டை கொண்டவர்க்கு கேட்க வேணுமா -இவ்வாறு கலியின் மிடுக்கை ஒடுக்கியதால்
இராமானுசன் புகழ் பிறந்கியது இல்லையாம்-ஏன் எனில் அவருக்கு இது ஒரு பெரிய காரியம் அன்றாம் –
பின்னையோ   எனின் –
என் பெய் வினை பொறுத்தது –
இவரால் வினைகள் ஒவ் ஒன்றாக செய்யப்படுவன அல்ல –
ஒரு பொழுதில் பல வினைகள் பெய்யப்படுகின்றனவாம் –
யத் பிரம கல்ப நியுதா நுபவேப்ய நாச்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹா ஷனார்த்தே-என்று-பதினாயிரம் பிரம கல்ப காலம் அனுபவித்தாலும் -தீராத பாபத்தை அரை நொடியில் இங்கு-ஒரு பிராணி சிருஷ்டி செய்து விடுகிறது -என்றபடி இவர் செய்த வினைகள் யம புரத்தில்
சித்ர குப்தனால் புத்தகத்தில் எழுதப்படுகின்றன -அங்கனம் எழுதப்பட்ட புத்தகங்கள்
சுமை சுமையாக இருக்கின்றனவாம் -அவை எல்லாவற்றையும் ஒரு நொடியில் கொளுத்தி விட்டது –
இராமானுசன் தன்னைப் புகழ்-இது யாராலும் செயற்கரிய செயல் ஆதலின் இச் செய்கையால் நலத்தை-பொறுத்தது –
இவ் வுலகில் உள்ள அனைவரும் செய்த வினைகள் அனைத்தும் சேர்ந்தாலும் -என் வினைக்கு ஈடாக மாட்டா —ஆதலின் கலியைச் செறுத்து நிலத்தாரைக் கலியின் கொடுமையிலிருந்து விடுவித்ததனால்-எம்பெருமானார் புகழ் பிறந்கியது இல்லை-யம லோகத்தில் சுமை சுமையாக புத்தகத்தில்-எழுதப் பட்ட என் வினைகளைப் பொசுக்கியதாலேயே அது பெருமை பெற்று விளங்குகிறது-எனபது அமுதனார் கருத்து

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தல்

ஈசன் வானவர்க்கு என்பான் என்றால் அது தேசமோ திரு வேங்கடத்தானுக்கு .
. -நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே.-ஆழ்வார்-…அது போல ஸ்வாமி நய புகழ் -விரும்பிய புகழ் -அமுதனாரை –
நயம்-விருப்பம் ஸ்ப்ருஹநீயமான–குண ஜாதகம் –
ஆற்ற படைத்தான் வள்ளல் பெரும் பசுக்கள்-
700 சன்யாசிகள் 10000 ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டிகள் 74 சிம்காசானாதிபதிகள் -கொண்டதால் வந்த நய புகழ்
எல்லோரும் சிங்கங்கள் தான் ..பசு போல இருந்தார்கள்..சத்யம் சத்யம் எதிராஜரே ஜகத் குரு என்றாரே -ஆழ்வான்
இவரின் பெய் வினை தென் புலம்-யம பட்டணம்-பொறித்த புத்தக சுமை -பொறுக்கிய பின்பு தான் ஒளி விட்டது
..நலத்தை பெறுத்தது இப் பொழுது தான்
… நீச .கலியை -நினைப்பு அரிய பலம் முடித்தாரே அதனால் ஒளி விட வில்லை..
கலியை-இரண்டாம் வேற்றுமை உருபு-மயக்கம்-கலியின் -கலி உடைய அர்த்தத்தில்.
.இவரின் கர்மத்தை கழித்த பின்பு வைலஷன்யத்தை தரித்தது என்கிறார்
..அந்தாமத்து அன்பு செய்-ஆவி சேர் அம்மான்-கலந்து சேர்ந்த பின்பு தான் விலஷணம் ஆனது என்று ஆழ்வார் அருளியது போல .
ஆவி சேர்ந்த பின்பு தான் அம்மான் ஆனான்
.தளிர் புரையும் திருவடி என் தலை மீது ..திரு மங்கை ஆழ்வார் கிட்டியதும் சருகாய் இருந்தது தளிர் விட-அகில ஜகத் நாதன் அஸ்மின் நாதன்-ஸ்ரீ ரெங்க நாத மம நாத
தம் வினைகள் பாரம் -குறித்து அதை போக்கியதே கலியை கெடுத்ததை விட சுவாமிக்கு புகழ் என்கிறார்
தீயினில் தூசாகும்
தாமரை இலை தண்ணீர் போல நீங்கும்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
.புத்தக சுமையை
வேங்கடங்கள்மெய் மேல் வினை முற்றவும்
மாதவன் என்று ஓத வல்லீரேல் …. ஏதம் சாராதே .
.இப் பொழுது தான் ஒளி விட்டது
பிறங்குதல் -பிரகாசித்தல் பொறுத்தல்-தஹித்தல்
தெய்வீ சம்பத் ஆசுரி சம்பத்து- விபத்து என்று சொல்ல வில்லையே கீதையில்-
அவன் அபிப்ராயத்தால் சம்பத் என்றே சொன்னது
…சம்பத் -கைங்கர்ய செல்வம்..ஆசுர க்ருத்யங்களை பொசுக்கிய
-ஆசுர கருத்தியம் பிறப்பால் இல்லை -நடத்தையால் தான்
.27 சாஷி வைத்து இருக்கிறார் ப்ருத்வி நட்ஷத்ரங்கள் போல
.எல்லாம் புத்தக சுமையில் ஏறும்..பாபங்களை எறித்தார் என்று சொல்ல வில்லை
புத்தக சுமையை எறித்தார் .உடையவர் ஆணை அங்கும் செல்லும் உபய விபூதிக்கும் நாதன் அவரே
..நிலம்-தர்மம் அர்த்தம் காமம் புருஷார்த்தம் -விளை நிலம் ஆன மகா ப்ருத்வி
– கொண்டாடுகிறார்.. ராமன் கண்ணன் ஆழ்வார் திருவடி பட்ட இடம்.என்பதால்
இதுவும் அவன் விபூதி தானே
.கலி படுத்தும் பாட்டால் நிலத்தை பழிக்க கூடாது
வைபவம் நிறைய கர்ம பூமி..வர்ண ஆஸ்ரம பிரிவின் படி நடந்து ஞானம் பெற்று பக்தி வளர்க்க -ஹேதுவான நிலம்
-செல்வ செழிப்பு, ஆரோக்யமாக, பயம் நீங்கி ,இளையவர் மரிப்பதை பார்க்க வேண்டாத படி
,தான தான்யம் நிறைந்து ஆனந்தமாக இருந்தார்கள்.
.பகவத் ஆணை படி நடந்த காலம்..-முன்பு உள்ள யுகங்கள்
இவற்றை மூலை அடி பண்ணி விபரீதமாக துக்கமே அனுபவித்து சாம்ராஜ்யம் பண்ணி வச படுத்தி கொண்டு
-நிலத்தை செறுப்பதே சோரு கலிக்கு
..சேஷத்வ பரதந்த்ர்யம் பார்க்காமல்-ஆத்மாகுணத்துக்கு
வர்ண ஆஸ்ரம ஆசாரமும் கேட்டு-விசிஷ்ட ஆத்மா-தேக -தர்மம் கெட்டு எல்லாம் கலி படுத்தும் பாடு..
யுகங்களில் நீசம் கலி .. பாபம் பண்ண தூண்டுவதால் நீசம்
..உலகுண்டவன் பலம் சொல்லலாம்–அவன் ரஷிக்க உண்கிறான்
.. உலகத்தை செறுத்து உண்ணும் பலம் சொல்ல ஒண்ணாது .
.கலியை முடித்த பின்பும் .கலியும் கெடும் கண்டு கொண்மின் …பொலிக பொலிக பொலிக
-மயர்வற மதி நலம் அருள பெற்றவரும் கொண்டாடும் படி
பிர பத்தி மார்கத்தை உபதேசித்து நல் வழி படுத்தி
-சாதுவராய் போதுமினீர்
மறந்தும் புறம் தொழா மாந்தர்
அரவணை மேல் பேர் ஆட்பட்டாரை நமன் தமரால் ஆராய பட மாட்டார்கள்
..கலி தன்னை கடக்க பாய்ந்து-நாம பலத்தால்..
செறுத்தும்-ஸ்வாமி பாகவதர் களாக மாற்றி செறுத்தார்..
என் பெய் வினை-ஹேய உபாதேய விவேக சூன்யனான நான்
-பற்றுதல் விடுதல் எது என்று தெரியாமல்-கிருத்திய அக்ருதம் அக்ருத்ய கருத்தம் போல்வன
..பகவத அபசாரம் பாகவத அபசாரம்- அசக்யா அபசாரம்-நானாவித அபசாரங்களும் செய்த நான்
சஞ்சித பிராரப்ய ஆகாமி -கூட்டங்கள்- அபரிமித வினைகள்.பொறுக்கிய பின் -தகித்தார்-.பிரி  கதிர் படாத படி -கொளுத்த படாதது ஒன்றும் இல்லை..
தன் வைலஷண்யம் பிரகாசம் பெற்றது இப் பொழுது தான் என்கிறார் ..

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: