அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-33-அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன்-இத்யாதி ..

 பெரிய ஜீயர் அருளிய உரை

முப்பத்து மூன்றாம் பாட்டு –அவதாரிகை
அஸ்த்ர பூஷண அத்யாயத்தில் சொல்லுகிறபடியே -மனஸ் தத்வாதிகளுக்கு அபிமாநிகளாய்-இருக்கிற திரு வாழி முதலான திவ்ய ஆயுதங்களினுடைய ப்ரசாதத்தாலே-இந்திரிய ஜயாதிகள்-உண்டாக வேண்டி இருக்க – எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கவே இவை எல்லாம் உண்டாம் என்கிறது –
என் கொண்டு -என்ன – அந்த ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களும் லோக ரஷண அர்த்தமாக எம்பெருமானார் பக்கலிலே யாயின-என்கிறார் –
அதவா –
அவை எல்லாம் லோக ரஷண அர்த்தமாக எம்பெருமானாராய் வந்து திருவவதரித்தன –என்னவுமாம் –

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தாண்டும் ஒண் சார்ங்கமும் வில்லும்
படையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனியாயின விந் நிலத்தே -33 –

வியாக்யானம்
இலை நெருக்கத்தை உடைத்தான தாமரையினுடைய பூவை ஜன்மபவனமாக வுடையளான-பிராட்டிக்கு வல்லபனானவனுடைய திருக் கையிலே வர்த்திப்பதாய் –
சல ஸ்வரூப மத்யந்த ஜவே நாந்தரிதா நிலம்-சக்ர ஸ்வரூபஞ்ச மனோ தத்தே விஷ்ணு கரே ஸ்த்திதம் -விஷ்ணு புராணம் -1 22-71 – –
என்கிறபடியே –மனஸ் தத்வ அபிமானியாய் இருக்கிற திரு வாழி என்று-பிரசித்தமான திவ்ய ஆயுதத்தோடே-
பிபர்த்தி யச்சாசி ரந்த மச்யுதோ த்யந்த நிர்மலம்-வித்யா மயந்துயத் ஜ்ஞானம் -விஷ்ணு புராணம் – 1-22 74- –என்கிறபடியே –ஜ்ஞான அபிமானி யான திரு வாளும்–
புத்திரத் யாஸ்தே கதா ரூபேண மாதவே -விஷ்ணு புராணம் – 1-22 69- – –என்கிற படியே –புத்ய அபிமானியாய் ரஷண த்திலே பரந்து இருக்கும் ஸ்ரீ கதையும்
பூதாதி மின்த்ரியாதிஞ்ச த்விதா ஹன்கார மீச்வர-பிபர்த்தி சங்க ரூபேண சாரங்க ரூபேண ச ஸ்த்திதம் -விஷ்ணு புராணம் – 1-22-70 – –என்கிற படியே இந்திரிய காரணமான சாத்விக அஹங்கார அபிமானியாய் இருக்கிற-விலஷணமான ஸ்ரீ சார்ங்கம் என்னும் திரு நாமத்தை உடைய திரு வில்லும்
பூத காரணமான தாமச அஹங்கார அபிமானியாய் மிக முழங்கு கைக்கு உறுப்பாம்படி
புடை பருத்து தர்சநீயமான சந்நிவேசத்தை உடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும்
இந்தப் பூதலத்தை ரஷிக்கைக்காக வென்று -இந்தப் பூதலத்திலே எம்பெருமானார் பக்கலிலே ஆயின –
இவர் பக்கலிலே ஆகையாவது –இவர் நினைவைக் கடாஷித்து நின்று அதிகரித்த கார்யத்துக்கு சஹகரிக்கை –
அடையார் கமலம் -என்று தொடங்கி–புடையார் புரி சங்கமும் –
பூதலம் காப்பதற்கு -என்று இந்நிலத்தே இராமானுச முனி இடையே ஆயின -என்று அந்வயம் –
மற்றைப் பஷத்தில்
அடையார் கமலம் -என்று தொடங்கி –புடையார் புரி சங்கமும் இந்தப் பூமியை ரஷிக்க வேணும் என்று-இந்த பூமி தன்னிலே நடுவே எம்பெருமனாராய் அவதரித்தன -என்கை-
இத்தால்-இவருடைய விரோதி நிரசன சாமர்த்த்யத்தைப் பற்ற ஸ்ரீ பஞ்ச ஆயுத ஆவேச அவதாரம் என்று-பிரபாவ கதனம் பண்ணினார் ஆயிற்று
அடை-இலை
படை-ஆயுதம்
படர்தல்-பரம்புதல்–

ஆழி -மனஸ் தத்வம் / கட்கம்-நந்தகம் -வாள்-கத்தி -அசி -ஞானம் -அஞ்ஞானம் உறை / தண்டு -கதை -கௌமோதிகம் புத்தி தத்வம் -உறுதி /சார்ங்கம் -வில் சாத்விக அஹங்காரம் /சங்கம் -பாஞ்ச ஜன்யம் -தாமச அஹங்காரம் அபிமானி /
இடை -சஹகாரி என்றுமாம் –
விரோதிகளுக்கு ஆயுதம் ஆஸ்ரிதற்கு ஆபரணம் இரண்டு ஆகாரங்களை ஸ்வாமிக்கு உண்டே –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை
-இலைகளாலே நெருங்கி இருக்கிற -தாமரைப் பூவிலே அவதரித்த பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான-சர்வேஸ்வரனுடைய திருக்கையிலே ஸ்தாவர பிரதிஷ்டை யாய் இருக்கிற திரு ஆழி ஆழ்வானும் – அவனோடு ஒரு
கோர்வையாய் இருக்கிற ஸ்ரீ நந்தகம் என்னும் -பேரை உடைத்தான கட்கமும் -ஆஸ்ரித ரஷணத்தில் பொறுப்பை-உடைத்தான ஸ்ரீ கதையும் – அதி ச்லாக்யமான ஸ்ரீ சார்ங்கமும் -புடையாலே தர்சநீயமாய் வலம்புரி என்னும் பேரை-உடைத்தான ஸ்ரீ பாஞ்ச சந்யமும் -கலி தோஷாபிபூதமாய் காணப்படுகிற இந்த லோகத்தை ரஷிப்பதாக எம்பெருமானார்
அதிகரித்த கார்யத்துக்கு சஹா காரியர்களாக கொண்டு -அவர் பக்கலிலே ஆய்த்து என்கிறார் -அன்றிக்கே பஞ்ச-ஆயுதங்களும் எம்பெருமானாராய் வந்து திரு அவதரித்து அருளின -என்கிறார் ஆகவும்

வியாக்யானம்
அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் –
தாமரை தான் -கம்பீராம்பஸ் சமுத்பூதமானால் –செவ்வி நாற்றம் -குளிர்த்தி முதலான குணங்கள் எல்லாம் மிகுந்து இலை நெருக்கத்தை உடைத்தாய் இருக்கும் இறே
அப்படிப் பட்ட தாமரை பூவின் உடைய பரிமளம் தான் -ஒரு வடிவு கொண்டால் போல் இதிலே ஈடுபட்டு-விட மாட்டாதே திரு வவதரித்த பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான -ஸ்ரீ பரவாசுதேவனுடைய –அடை-இலை –
கை யாழி என்னும் படையோடு –
திருக் கையிலே நிரந்தரமாக இருந்துள்ள திருவாழி என்கிற ஆயுத விசேஷத்தோடே –
சல ஸ்வரூப மத்யந்த ஜவே நாந்தரிதா நிலம் சக்ர ச்வரூபஞ்ச்சமனோ தத்தே விஷ்ணு கரஸ்த்திதம் -என்று
அஸ்த்ர பூஷண அத்யாயத்தில் சொல்லுகிறபடியே –மனஸ் தத்தவ அபிமானியாய் –கம்பீர ஸ்வபாவனான
திருவாழி ஆழ்வான் உடன் ஒரு கோவையாய் கணிசிக்கப்பட -என்றபடி –விரோதிகளால் ஆஸ்ரிதர்
நலிவு பட்டு -ஸ்ரீ கஜேந்த்திரன் ஆழ்வானை போல கூப்பிட -அக் கூப்பீடு கேட்டு ஆயுதம் வரக் கொள்ளில்
பணிப்படும் என்று -எப்போதும் ஆசிலே கையை வைத்து கொண்டே இருக்கிறான் காணும் –படை -ஆயுதம்
நாந்தகமும்
-பிபர்த்தியஸ் சாசிரத்ன மச்யுதோத் யந்தநிர்மலம் – வித்யா மயந்து தத்ஜ்ஞா நமவித்யாசர்-மசம்ச்த்திதம் -என்கிறபடியே ஞான அபிமாநியாய் நந்தகம் என்னும் பேரை உடைத்தான திரு வாளும் –படர் தண்டும் –
புத்தி ரப்யாச்தே கதா ரூபேண மாதவே -என்கிறபடியே புத்த்யபிமானி யாய் –
ஆஸ்ரித விரோதிகளான பிரதி பஷத்தை சிஷிக்கும் பொது -அதி விபுலமாய் தோன்றும் –ஸ்ரீ கதையும் –படர்தல்-விபுலத்வம் –
ஒண் சாரங்க வில்லும் புடையார் புரி சங்கமும்
-பூதாதிமிந்த்ரியாதி சாத்வித-அஹங்காரம் ஈஸ்வர பிபர்த்தி சங்கு ரூபேண சாரங்க ரூபேண ச ஸ்த்திதம் -என்கிறபடியே இந்திர-காரணமான சாத்விக அஹங்கார அபிமானியாய் -அத்யந்த விலஷணமாய் சார்ங்கம் என்னும் பேரை-உடைத்தானை திரு வில்லும் -பூத கரணமான தாமச அஹங்கார அபிமானியாய் -மிகவும்
முழங்கு கைக்கு உறுப்பாயும் படி புடை பெருத்து தரசநீயமான சமஸ்தானத்தை உடைய
வலம்புரி யான ஸ்ரீ பாஞ்ச சந்யமும்ஒண்மை -அழகு புடை-இடம் -புரி -வலம்புரி அதாவது தஷினாவர்த்தம்
இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
பரிதர்ச்ய பானமாய் கீழில் பாட்டில் போல் கலி சாம்ராஜ்யம் பண்ணி
வேத மார்க்கத்தை மூலையடியே நடத்திக் கொண்டு போருகிற-இருள் தரும் மா ஞாலத்தை ரஷிக்கைக்காக -என்று –
இடையே
-மத்யே வந்து -இந்நிலத்தே -நித்ய சூரிகளான இவர்கள் அத்யந்த ஹேயமாய் அருவருக்கும் படியான இந்த-லோகத்திலே
இராமானுச முனி யாயின
-எம்பெருமானார் தாம்மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற இந்த-ஜகத் ரஷண கார்யத்துக்கு தாங்கள் சக கரிக்கைக்காக-இவர் பக்கலிலே ஆயின –எம்பெருமானார்க்கு-கை யாளாக இருந்தன என்றபடி -அன்றிக்கே-இந்த லோகத்தை ரஷிக்கைகாக ஸ்ரீ பஞ்சாயுதங்களும்-தாங்களே வந்து லோகத்திலே –எம்பெருமானாராய் அவதரித்தன -என்னவுமாம் –
பிரதயன் விமதேஷூ தீஷ்ணா பாவம் பிரபுரச்மத் பரி ரஷனே எதீந்திர-அப்ர்தக் பிரதிபன்ன அன்மயத்-வைர வவர்த்தே பஞ்சபி ராயுதைர் முராரே -என்று இவ் அர்த்தத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

————————————————————————–

அமுது விருந்து
அவதாரிகை
புலன் அடக்கம் முதலானவை மனம் முதலிய தத்துவங்களுக்கு அபிமானியான
திரு வாழி யாழ்வான் முதலிய திவ்ய ஆயுதங்களினுடைய ப்ரசாதத்தாலே உண்டாக வேண்டி இருக்க –எம்பெருமானாரை சேரவே இவை எல்லாம் உண்டாகும் எனபது எங்கனம்பொருந்தும் என்ன –அந்த திவ்ய ஆயுதங்களும் எம்பெருமானார் இடத்திலேயே உள்ளன -என்கிறார் –
பத உரை –
அடை ஆர் -இலை நிறைந்துள்ள
கமலத்து -தாமரைக் கொடியினுடைய
அலர் மகள் -பூவிலே தோன்றியவளான பிராட்டிக்கு
கேள்வன் -கணவனுடைய
கை-கையிலே உள்ள
ஆழி என்னும் -சக்கரம் என்று பேர் பெற்ற
படையோடு -திவ்ய ஆயுதத்தோடு
நாந்தகமும் -நந்தகம் என்னும் திரு வாளும்
படர்-காத்தலில் பரவி நிற்கும்
தண்டும் -ஸ்ரீ கதையும்
ஒண் -விளங்குகிற
சார்ங்க வில்லும் -ஸ்ரீ சார்ங்கம் என்னும் திரு வில்லும்
புடை ஆர் -பக்கத்தில் பருத்த
புரி சங்கமும் -வலம் புரியாய் அமைந்த ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்ற சங்கமும்
இந்தப் பூதலம் -இந்த பூமியை
காப்பதற்கு என்று -ரஷிபதர்க்கு என்று
இந் நிலத்தே -இப்பூமியிலே
இராமானுச முனி இடையே -எம்பெருமானார் இடத்திலே
ஆயின -இருப்பனவாக உள்ளன –
வியாக்யானம் –
அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் –
அலர் மகளான பிராட்டியினுடைய சந்நிதியாலே திவ்ய ஆயுதங்கள் அழிப்பனவாக ஆகவில்லை-அளிப்பவன வாயின -இவள் இல்லாத போ து ஆயுதங்கள் இராவணாதி யரை அழித்தன –உள்ள போது ப்ருஹ்மாச்த்த்ரமும் காகத்தை அழிக்க வில்லை -காகம் காக்கப் பெற்றது –கருணை வடிவினளான இவள் சந்நிதியில் கேள்வன் காருணிகனாக அன்றோ இருக்கிறான் –
கை யாழி என்னும் படையோடு –
எப்போதும் கை கழலா நேமியாய்க் கையார்ந்து இருக்கையாலே –கை யாழி-என்கிறார் –இத் திரு வாழி ஆழ்வான் மனம் என்னும் தத்துவத்திற்கு அபிமானியாய் விஷ்ணு
புராணத்தில் அஸ்த்ர பூஷண அத்யாயத்தில் பிரசித்தம் –
நாந்தகமும் –
நந்தகம் என்னும் திரு வாள்-ஞானத்திற்கு அபிமானியாய் பிரசித்தம்
படர் தண்டும்
புத்தி தத்துவத்திற்கு அபிமானியாக -கௌமோதகி -என்னும் கதை பிரசித்தம் –
காத்தலில் முற்பட்டு நிற்றலின் –படர் தண்டு -என்கிறார் –
ஒண் சாரங்க வில்லும் புடை ஆர் புரி சங்கமும்
இந்திரிய காரணமான சாத்விக அஹன்காரத்திற்கு அணிமானயாய் சாரங்க வில் விளங்குவது பிரசித்தம் –பூத காரணமான தாமச அஹங்காரத்திற்கு அபிமானியாக ஸ்ரீ பாஞ்ச சன்னியம் என்னும் சங்கம்-விளங்குவது பிரசித்தம் -நன்கு முழங்குகைக்கு உறுப்பாக புடை பருத்து இடமுடைத்தாய் இருத்தல்-பற்றி புடை ஆர்ந்ததாக சங்கை விசேடிக்கிறார் –
இந்த பூதலம் –
கீழ்க் கூறியபடி செறு கலியால் வருந்திய ஞாலம் என்றபடி-இந்நிலத்தே ஆயின
விண்ணாட்டவரான திவ்ய ஆயுத புருஷர்கள் அருவருக்கத் தகுந்த இந்த உலகத்தில்
ஆயினவே என்றபடி –
இராமானுச முனி இடையே யாயின –
இராமானுச முனிவன் -உலகினை காப்பதையே எப்போதும் மனனம் செய்து -கொண்டு இருப்பவர் –அவரது காக்கும் நினைவுக்கு ஏற்ப துணை புரிதலே இராமானுச முனி பக்கலிலே-ஆயினமை-என்க-
இனி இடையே -என்பதற்கு -நடுவே -என்று பொருள் கொண்டு –
இந்நிலத்தே இடையே இராமானுச முனி யாக ஆயின – -வந்து அவதரித்தன என்று
பொருள் கொள்ளலுமாம் -இதனால் பகை களைந்து காப்பதில் உள்ள திறமையைப்
பற்ற பஞ்ச ஆயுதங்களின் ஆவேச அவதாரமாக எம்பெருமானாரின் பிரபாவத்தை வருணித்தார் ஆயிற்று –
வேதாந்த தேசிகன் -யதிராஜ சப்ததியில் –
பிரதயன் விமதேஷூ தீஷணபாவம் பிரபுர ஸமத் பரி ரஷன
யதீந்திர அப்ருதக் பிரதிபன்ன யன் மயத்வை வவ்ருதே பஞ்ச-ப்ராயுதைர் முராரே -என்று
தனிப் பட்டு தோன்றாது -எம்பெருமானார் மயமாகவே பஞ்ச ஆயுதங்களும் வளம் பெற்றன –
அத்தகைய யதிராஜர் பிறமதவிஷயங்களில் தம் கொடிய தன்மையை வளர்ப்பவராய்
நம்மைக் காப்பாற்றுவதில் திறன் படைத்தவராக இருக்கிறார் -என்று அருளிச் செய்தது –இந்த நிர்வாஹத்திற்கு ஏற்புடையதாக உள்ளது –ஒரே திரு மேனியில் ஐந்து ஆயுத புருஷர்களும்-ஆத்மாவாகவே இருப்பது இசையாமையாலே -அவ் ஐவருடையவும் ஆவேச அவதாரமாகவே-எம்பெருமானாரைக் கொள்வது மணவாள மா முனிகளின் திரு உள்ளம் –இங்கனம் கொண்டால்-ஆதி சேஷனுடைய சாஷாத் அவதாரமாகவும் -பஞ்ச ஆயுத ஆழ்வார்கள் முதலியவர்களின்-ஆவேச அவதாரமாகவும் கொள்வதில் யாதொரு முரண்பாடும் இல்லை -என்று உணர்க –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது –

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் ஸ்ரீ வல்லபன் ..
முதலில் பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -ஆரம்பித்தார் ..கடைசியிலும் சொல்லுவார்.-ஒவ் ஒரு திருவாய் மொழியிலும் .7 வது பாசுரமாக கொண்டு போனால் திரு வாய் மொழி-முழுவதிலும் புதுசாக சாராம்சம் கிடைக்கும்-பூ மன்னு-1- அலர்மகள் கேள்வன் -33-/வானம் கொடுப்பது மாதவன் -66-/ பங்கய மா மலர்ப் பாவை -108-/
திருமகள் சம்பந்தம் விடாமல் அன்றோ அருளிச் செய்கிறார் –
அடையார் கமலத்து-.இலைகள் நெருக்கமாக இருந்த கமலம் அலர் மகள் கேள்வன்
கேள்வன்-வல்லபன் பிரணயித்தவம் பறை சாற்ற படுகிறது
மனம் புத்தி வளர இந்த்ர்யங்கள் அடக்க அதிர்ஷ்டான தேவதை உண்டு என்பரே
ஸ்வாமி யால் கிடைக்கும் என்றீரே–கேள்வி பிறக்க -இந்த பாசுரம்.
ரதி-பிரிதி / மதி -புத்தி-அறிவு /சரஸ்வதி- அடிப்படை கல்வி /த்ருதி-தைர்யம் /
சமிர்த்தி – செழிப்பு /சித்தி – கார்ய சித்தி /ஸ்ரீ -சுதா சகி
-புருவ நெறிப்பாலேயே பிராட்டி அளிக்கிறாள் இதையே
-சுகா சகி-ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கு கொடுத்த பெயர் பட்டரால்
ரதி-பக்தி /மதி -கர்ம ஞானம் /சரஸ்வதி -வாக் வைபவம்/த்ருதி – ஞானம் /
சமிர்த்தி -அடிமை செல்வம்/சித்தி – சொரூப லாபம்/ஸ்ரீ–கைங்கர்ய செல்வம் செல்வம்-என்றும் சொல்வார்கள்
மனசு- சக்கரம்.கௌஸ்துபம் -ஜீவாத்மா -பிரதிநிதி ஆவேசம் போல மூல பிரகிருதி -ஸ்ரீ வட்சம்-கை ஆழி என்னும் படை= அஸ்தரம்../தொட்ட படை எட்டும் –
-ஆஸ்ரித சம்ரஷணம்..நாந்தகமும் படர் தண்டும் ஒண் சாரங்க வில்லும் புடையார் புரி சங்கமும்
ராமானுச முனி இடை ஆயின- அவருக்கே உறுப்புகளாக /முன்னும் பின்னும் பல அவதாரங்கள்–இப் பொழுது ஆவேச அவதாரம்.ஆதி சேஷ அவதாரம் இல்லை என்று தப்பாக -சிலர் சொல்ல –..ஆயிரம் நாக்குகளால் திரு நாராயண புரம் -ஆயிரம் புற சமயிகளையும் வென்றாரே உண்மை
அஸ்த்ர பூஷண அத்யாயம்- விஷ்ணு புராணத்தில் உண்டு …அஸ்த்ரங்கள் சாஸ்த்ரங்களை விளக்கி இருக்கும்..செலுத்துபவன் செலுத்த படும் இரண்டையும் சொல்லும் ..இவை அனைத்தும் லோக ரஷண அர்த்தமாக ஸ்வாமி பக்கலில் ஆயின -ஸ்வாமி யாகவே திரு அவதரித்தனவாம்.ஸ்வாமி அதிகரித்த காரியத்துக்கு சக காரிகை -இவை அனைத்தும்
.ஆழ்வார் திருகுருங்குடி நம்பி போலவும் விஷ்வக் சேனராகவும் போல
…மைத்ரேயர் கேட்க பராசரர் அருளுகிறார்..விஷ்ணுவை வணங்கி இதை சொல்கிறேன்
விஷ்ணு வசிஷ்டர் அனுக்ரகனம் வேணும்
.கௌஸ்துபம் -ஆத்மா
ஸ்ரீ வட்சம் -பிரதானம் -மூல பிரகிருதி
புத்தி -கதை
சாத்விக அகங்காரம் -சார்ங்கம்-சார்ங்கம் உதைத்த சர மழை போல..
தாமச அகங்காரம் -சங்கு -முழங்கு தற்கு புடை பெருத்து வலம் புரி -ஆழி போல் மின்னி .சக்கரம்-மனசு
வன மாலை -பஞ்ச பூதங்கள்
தன் மாத்ரைகள் முத்து மாணிக்கம் மரகதம் வைரம் நீலம்
அம்பு- இந்த்ரியங்கள்
கத்தி- ஞானம்
உறை அவித்யை அஞ்ஞானம்
கர்மா தீனமாக நாம் பிறக்க – ரூபமே இல்லாதவன்- -இச்சா ரூபம்- அடியார்களுக்குகாக தரிக்கிறான் இவற்றை-சர்வானி -உருவம் அருவம் -அத்தனையும் அவன் சரீரமே..
ஆத்மா மாயைய சம்பவாமி -அதிஷ்டாய -மாயை –பொய்மை இல்லை ஆச்சர்யம்
நடுவே-பராங்குச பரகால யதிவராதிகள் .இடையே ஆழ்வார் ஆச்சார்யர் நடுவில் இடையே தோன்றினார்.
..கை ஆழி- ஸ்தாவர பிரதிஷ்ட்டை -கை கழலா நேமியான் -நம் மேல் வினை கடிவான்
கூப்பிடு கேட்டு ஆயுதம் கொள்ள கொள்ளில் தாமசம் ஆகும் என்று கை ஆழி
சிலை அன்றோ கை தலத்தே ..பிரயோக சக்கரம் -திரு கண்ண புரம்..
பொய்கை ஆழ்வார் – பாஞ்ச சன்யம் அம்சம்
பூதத் ஆழ்வார் -கதை அம்சம்
பேய் ஆழ்வார் – நந்தகம்-கட்கம் அம்சம்
திரு மழிசை ஆழ்வார் -சக்கரம் அம்சம்
திரு மங்கை- ஆழ்வார் – சார்ங்கம் அம்சம்
–வந்து எடுத்து அளித்த
செறு கலி -கீழே சொல்லிய படி -வேத மார்க்கம் மூலையில் நடத்தி போக
-நடு நிலையாளர் அனுபவிக்க இருள் தரும் மா ஞாலத்தை ரஷிக்க
–தேவர்களும் அருவருக்கும் இந்த இடத்தில்-ஆதி சேஷன்-உடன் திவ்ய ஆயுதங்களும் வர .முனி ஆயின-மனன சீலன்- ஜகத் ரஷணமே எண்ணம் நினைக்க நினைக்க பஞ்ச ஆயுதங்களும் வந்து சேர்ந்தன–கை ஆளாக -சங்கல்பம் பார்த்து கார்யம் செய்ய ..
பஞ்ச ஆயுதம் சொல்ல வந்த பொழுது அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன்
இவள் இருந்தால் அளிக்கும்- இல்லை என்றால் அழிக்கும் என்பதால்
அஸ்த்ரமே பூஷணம் இவள் இருந்தால் இல்லை என்றால் தானே ஆயுதம் என்பதால்
இங்கு அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் -சொல்லி ஆரம்பிக்கிறார் .

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: