அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-32-பொருந்திய தேசும் பொறையும்-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
முப்பத்து இரண்டாம் பாட்டு –அவதாரிகை
இராமா னுசனனைப் பொருந்தினம் -என்று இவர் ஹ்ருஷ்டராகிற வித்தைக் கண்டவர்கள் -நாங்களும் –இவ்விஷயத்தை லபிக்கப் பார்க்கும் அளவில் எங்களுக்கு உம்மைப் போலே ஆத்ம குணங்கள்-ஒன்றும் இல்லையே என்ன -எம்பெருமானாரை சேரும் அவர்களுக்கு ஆத்ம குணாதிகள் எல்லாம்
தன்னடையே வந்து சேரும் -என்கிறார் –

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-

வியாக்யானம் –
அபிபவியா நின்று உள்ள கலி தோஷத்தாலே துக்கப்பட்ட பூமியை -இத்தலையிலே
அர்த்தித் வாதி நிரபேஷமாக தம்முடைய ஒவ்தார்யத்தாலே -வந்து -நிமக்நோத்தாரணம்
பண்ணி -ரஷித்தவராய் -பிரபன்ன ஜன கூடஸ்தர் ஆகையாலே –
தஸ்மான் நியாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ-தைத்ய நாரரா -என்கிறபடியே
சர்வ தபச்சுக்களிலும் மேலாய்க் கொண்டு -துர்லபமாய் இருக்கிற சரணாகதி ரூப தபஸ்ஸை உடையராய்-எங்களுக்கு தம்மை முற்றூட்டாக தந்த-எம்பெருமானாரை-சேரும் அவர்களுக்கு ஸ்வரூப அனுரூபமான மதிப்பும்-வியசன சுகங்களில் அனவ சாதா நுத்தர்ஷ-ஹேதுவான ஷமா குணமும் -ஜிதேந்த்ரியத்வ ரூபமான பராபிபவன சாமர்த்த்யமும்-குணவத்தாப்ரதையும்-தத்வ ஹித புருஷார்த்தங்களை விஷயமாக வுடைத்தாய் ஆகையாலும்-கட்டளைப் பட்டு இருந்துள்ள ஜ்ஞானமும்-தத் கார்யமான பக்தி ரூப சம்பத்தும்-ரதிர் மதி –ஸ்ரீ குணரத்னகோசம் -17 – இத்யாதி -ஸ்லோகத்தின் படியே பிராட்டி கடாஷ லஷ்யமானவர் களுக்கு-அவை தானே மேல் விழும் என்றால் போலே-இங்கும் அபேஷியாது இருக்க தானே வந்து சேரும் –
பொருந்துதல்-சேருதல்-அதாவது ஸ்வரூப அனுரூபத்வம் /தேசு-மதிப்பு–

உடையவர் நித்ய விபூதியும் -இஹ பர லோக இன்பம் அருளுவார் -அல் வழக்குகள் போக்கி அடியார்க்கு ஆட்படுத்த வல்லவர் அன்றோ -ஆன்மிக இன்பம் இங்கே அருளி –
வள்ளல் தன்மை -காண் தகு தோள் அண்ணல் ஆதி இணை பூண்டதால் வந்த வள்ளல் தன்மை –
உடையவர் -சரணாகதி அரும் தவம் உடையவர் -நமக்காக செய்து அருளி -தன்னை முற்றூட்டாக திருமேனி அழகைக் காட்டிய வண்மையினால் எடுத்து அளித்த வள்ளல் தன்மை -தன்னையே கொடுத்ததால் -எல்லாமே பெற்றோம் ஆவோம் -ஆறு -தேஜஸ் இத்யாதி உயர்ந்த நிலைக்கு கூட்டி -வாமனன் போலே -நாம் அறியாமலே -கொடுத்தே தன்னைப் போலே மாற்றி -கலியும் கெடும் -கண்டு கொண்மின் -ராமானுஜ திவாகரன் –
சரணாகதி தர்மம் எடுத்து -ஸ்ரீ ரெங்க நாதன் திருவடிகளில் அளித்து -அவர்கள் கிருபையை எடுத்து நமக்கு அளித்தார் அன்றோ -எடுத்து அளித்த பின்பு தான் எங்கள் இராமானுசன் என்று அறிந்தோம் –கலியை மாற்றியவர் பொருந்திய -தேஜஸ் -இத்யாதியாக மாற்றுவதை கேட்க வேணுமோ -புலன்களை வெல்லும் திறல்-கைங்கர்ய திறல் -ஞானம் முடிந்த பக்தியும் கைங்கர்யமுமே செல்வம் –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை
இராமானுசரைப் பொருந்தினமே என்று இவர் ஹ்ருஷ்டரான -இத்தை கண்டவர்கள் -நாங்களும்-இவ் விஷயத்தை லபிக்கப் பார்க்கும் அளவில் -எங்களுக்கு உம்மைப் போலே ஆத்ம குணங்கள் ஒன்றுமே இல்லையே என்ன –
எம்பெருமானாரை சேருமவர்களுக்கு ஆத்ம குணங்கள் முதலியனவை எல்லாம் தன்னடையே-வந்து சேரும் என்கிறார்
வியாக்யானம் –
செறு கலியால் வருந்திய ஞாலத்தை
-கலேஸ் ஸ்வரூபம் மைத்ரேய யதிவாச்ச்ரோத்ய்மிச்சசி –தன்னிபோதசமாசே நவர்த்ததே யன் மகா முனே -வர்ணாஸ்ரம ஆசார வதீப்ரவர்த்திர் நகலவ் ந்ர்னாம்-ந சாம யஜூர் ரிக் தர்ம வி நிஷ்பாத ந ஹெதுகீ -விவாஹோ ந கலவ தர்ம்யான் ந சிஷ்ய குரு சம்ஸ்த்தித்தி-நதாம் பத்யக்ரா மோனைவ வஹ்னி தேவாத்மா க்ரம – என்று தொடங்கி-பரித்யஷ்யந்தி பர்த்தாரம் நஹினம் ததாஸ்த்ரிய –பார்த்தா பவிஷ்யதி கலவ வித்தவா நேவாயோஷிதாம் -ஸ்த்ரிய கலவ் பவிஷ்யந்தி ச்வைரின்யோ லலிதஸ்பர்ஹா –
அனாவ்ர்ஷ்டி பயப்ராயா பிரஜா ஷூத்ப்ப்யாகாதரா -பவிஷ்யந்தி ததா சர்வா கக நா சக்தத்ர்ஷ்டைய – அச்னான போஜி-நோ நாக்னி தேவதா திதி பூஜனம் -கரிஷ்யந்தி கலவ் ப்ராப்ப்தே ந பைத்ரியாதிகா க்ரியா -பாஷண்ட சம்ஸ்ரிதாம் வர்த்திம்
ஆஸ்ரய இஷ்யந்த சம்சக்ர்தா -யதா யதா ஹி பாஷண்ட வ்ர்த்திர் மைத்ரேய லஷ்யதே – ததா ததா கலேர் வர்த்தி ரனுமேயவிசஷனை –என்னும் அளவும் பிரதிபாதித்த படியே அபிபவயாய் நின்றுள்ள -கலியாலே க்லேசப்படுகிற பூ லோகத்தை -இருள் தருமமா ஞாலமான-பூ லோகத்தில் இருந்த சேதனரை என்றபடி
-வண்மையினால் –
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹி நாம் ஷன பங்குர -தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்ட பிரிய தர்சனம் –என்னும்படி ஞான மாந்த்யத்தாலே இத்தலையில் அபேஷை அன்றிக்கே இருக்க -தம்முடைய பரதுக்க அசஹிஷ்ணுத்வ லஷண-கிர்பா மூல மான ஔதார்யத்தால் வந்து-பரம பதத்தில் நின்றும் கிர்பா மாத்திர பிரசன்னராய் கொண்டு இந்த-லோகத்திலே எழுந்து அருளி –புண்யம் போஜ விகாசாயா பாபத்வந்தஷாயா யச -ஸ்ரீ மா நாவிர பூத் பூமவ் ராமானுஜ திவாகர –என்னக் கடவது இரே – வெறிதே அருள் செய்வார் -என்கிறபடியே -நிர்ஹேதுகமாக வந்து அருளி –
எடுத்து அளித்த
1–சாஷாத் நாராயணோ தேவ க்ர்த்வாமர்த்யமா ஈம்தநூம் -மக்னானுத்தர தேலோகான் காருண்யாஸ்-சாஸ்திர பாணினா -என்கிறபடியாக லோகத்தார் எல்லாரையும் அர்த்தித்வ நிரபேஷமாக-சம்சாரத்தில் நின்றும்-உத்தரிப்பித்து ரஷித்தவராய் -2-–திரு கோஷ்டியூர் நம்பி குஹ்ய தமமாக உபதேசித்துப் போந்த சரமச்லோக அர்த்தத்தை-எல்லார்க்கும் பூரிதானம் பண்ணியும் -3–ஸ்ரீ ரங்க நாயகியார் முன்னிலையாக அழகிய மணவாளன் திருவடிகளில்-பிரபத்தி பண்ணியும் ரஷித்து அருளினவர் என்று பிரசித்தம் இறே-
அரும் தவன் –
சத்கர்ம நிரதாஸ் -சுத்தாஸ் சாங்க்ய யோகா விதச்ததா -நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடி தமீமபி-யத்யே நகா மகா மேன ந சாத்தியம் சாதநாந்தரை – முமுஷூணா யயத்சாக்கியர் நாயோ கேனசபக்தி -தேன தேனாப்ய-தே தத்தத் நயா செனிவ மகா முனே -என்றும் சொல்லுகிறபடி -தபச்சுக்களில் எல்லாம் வைத்துக் கொண்டு –
உத்தமமான தபச்சாய் -வ்யாவசாயிகளுக்கு துர்லபமாய் -பிரபத்தே ரன்யன் நமே கல்பகோடி சகஸ்ரேனாபி-சாதனா நமச்தீதி மந்வான -என்று தம்மாலே நிஷ்கரிஷிக்கப் பட்ட -சரணாகதி ரூப தபஸை உடையராய் –
எங்கள்
-எங்களுடைய ஸ்வாமியான -எங்களுக்கு தம்மை முற்றூட்டாக கொடுத்து அருளின -என்னுதல்-ஞாலத்தை எடுத்து அருளுகை ஒரு வ்யாஜமாய்-தம்மை எடுத்து அருளுக்கைக்காகவே வந்தார் என்று காணும்-இவர் அபிசந்தி –அன்றிக்கே -விநாயாச துஷ்க்ர்தாம் -என்று பஹுவசனத்தாலே சொல்லி அநேகம் பேரை
சம்ஹரித்தாலும் -ஹிரண்ய ராவண கம்சாதிகளே ப்ரத்ய அவதாரத்திலும் பிரதானராய் இருக்குமா போலே –லோகத்தாரை எல்லாரையும் உத்தரிப்பிக்க வேணும் என்று அவதரித்தார் ஆகிலும் தம்மை ஒருவரையுமே-உத்தரிப்பிக்க வேணும் என்று -அவதரித்தாராக காணும் இவர் நினைத்து இருப்பது –
இராமானுசனை
-இப்படிப் பட்ட எம்பெருமானாரை -அடைபவர்க்கே-சமாஸ்ரயணம் பண்ணினவர்களுக்கே –ஷேமஸ் ச ஏவ ஹிய தீந்திர பவச்ரிதானாம்-என்னக் கடவது இறே –
பொருந்திய தேசும்
ஸ்வரூபத்துக்கு தகுதியான பராபிபவன சாமர்த்தியமும் – சரஸ்வதி பண்டாரத்தில் இருந்த-மாயாவாதிகளையும் -திரு நாராயண புரத்தில் இருந்த பௌத்தரையும் -யாதவ பிரகாசன் யக்ஜா மூர்த்தி-தொடக்கமானவரையும் -பிரசங்க முகத்தாலே அபிபவித்தவருடைய மதிப்புக்கு போலியானமதிப்பு என்றபடி –
பொருந்துதல்-சேருதல் -அதாவது ஸ்வரூப அனுரூபத்வம் -தேசு-மதிப்பு –பொறையும் –எத்தனை வயசன சுகங்கள் வந்து-மேல் விழுந்தாலும் அனவசாதானுதர்ஷங்களுக்கு உடலாய் -விபதி தைர்ய மதாப்யுதயேஷமா-என்னும் படியான ஷமா குணமும் –
திறலும் -பகவத் பாகவதார்ச்ச விஷயங்களிலே -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றால் போலே சகலவித கைங்கர்யங்களையும்-பண்ணித் தலைக் கட்டுகைக்கு உறுப்பான மனோ பலமும்-புகழும் -சம தம ஆத்ம குணம் என்னுதல் -சகல திக் அந்த வ்யப்தியான-கீர்த்தி என்னுதல்
நல்ல திருந்திய ஞானமும்
சேதனராய் இருப்பார்க்கு எல்லாம் சாதரணமாய் இருப்பதொரு ஞானம்
உண்டு -ஐகிஹா ஆமுஷ்ய விஷயங்களிலே அனுகூலமாயும் பிரதி கூலமாயும் இருக்கும் விஷயங்களையும்-அவற்றுக்கு சாதனமாய் இருக்குமவற்றை அறிவிப்பிக்க கடவதாய் -அப்படி அன்றிக்கே -சதாசார்யா சமாஸ்ரயணம் பண்ணி –
குருகுலவாசாதிகளாலே அவனுக்கு முக மலர்த்தி உண்டாக்கி -அவனால் உபதேசிக்கப்பட்ட தத்வ ஹித புருஷார்த்த-தத் யாதாம்ய ஞானமும் -தத் வித்தி பிரணிபாதென பதிப்ரசேனசேவையா -உபதேஷ்யந்தி தேஜ்ஞானாம் ஜ்ஞானி ந
ஜ்ஞாநீஸ் தத்வ தர்சனி – என்றும் -மைத்ரேய பரிபப்ரச்ச்ச பிராணிபாத்யபிவாத்யச -என்றும் -ஏதத் ஞானம் மிதிப்ரோக்தம் –என்றும்
-செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான் -என்றும் சொல்லுகிறபடி -சதாசார்யா ப்ரசாதத்தாலே-கட்டளைப்பட சம்யஜ்ஞானமும்
-செல்வமும்
-சாஹி ஸ்ரீ ரம்ர்தாசதாம் -என்றும் சொல்லப்படுகிற வேத வேதாந்த-
பாரகத்வம் ஆகிற ஸ்ரீ யும் -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -என்கிற கைங்கர்ய ஸ்ரீ யும் என்னுதல் -நல்ல பதத்தால்-மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே -என்கிறபடி ஐகிஹ ஸ்ரீ யும் என்னுதல் -இவை எல்லாம் அஹம் அஹம்-மிகையாய் வந்து தன்னடையே சேரும் என்றது ஆயத்து .

————————————————————————–அமுது விருந்து
அவதாரிகை
இராமானுசனைப் பொருந்தினமைக்கு இவர் களிப்பதைக் கண்டவர்கள் -நாங்களும் இங்கனம் களிக்க-கருதுகிறோம் -ஆயின் -எங்களிடம் ஆத்ம குணங்கள் சிறிதும் இல்லையே -அவை உம்மிடத்தில்-போலே இருந்தால் அன்றோ -நாங்கள் இராமானுசனைப் பொருந்த இயலும் என்று கூற –எம்பெருமானாரைச் சேரும் அவர்களுக்கு ஆத்ம குணங்கள் எல்லாம் தாமே வந்து அமையும் -என்கிறார்-

பத உரை
செறு கலியால்-நெறி முறையை குலைக்கின்ற கலி தோஷத்தினால்
வருந்திய -துன்புற்ற
ஞாலத்தை-நிலத்தை
வண்மையினால்-தன் பால் உள்ள வள்ளல் தன்மையினால்
வந்து எடுத்து -அவதரித்து கை தூக்கி விட்டு
அளித்த -காப்பாற்றின
அரும் தவன் -அரிய தவத்தை உடைய
எங்கள் இராமானுசனை -எங்களை சேர்ந்த எம்பெருமானாரை
அடைபவருக்கு -சேரும் அவர்களுக்கு
பொருந்திய -தங்கள் தன்மைக்கு இசைந்த
தேசும் -மதிப்பும்
பொறையும் -பொறுமையும்
திறலும் -சாமர்த்தியமும்
புகழும் -கீர்த்தியும்
நல்ல -விலஷணமான
திருந்திய -திருத்தம் பெற்ற
ஞானமும் -அறிவும்
செல்வமும் -தனமும்
சேரும் -தாமாகவே வந்து சேரும்-

வியாக்யானம் –
பொருந்திய தேசும்
தேசு -மதிப்பு -ஏழைமை இன்மை –
அது பொருந்துவதாவது-இவன் தன்மைக்கு ஏற்ப்புடைத்தாய் இருத்தல் – –
தேஜ-என்பது தேசு -என்றாயிற்று -வட சொல் விகாரம் –
ஐம்பூதங்களில் மூன்றாம் பூதத்தையும் -பிறரை எதிர் பார்க்க வேண்டாத நிலையையும் –
பிறரை அடர்க்கும் திறனையும் -தேஜ -என்னும் சொல் கூறும் –
இவ்விடத்தில் பிறரை அடர்க்கும் திறனில் நின்றும்
தனித்து இராத பிறரால் அடர்க்கலாகாமை கருதப்படுகிறது –
ஏழைமை இல்லாமை -என்னும் மதிப்பினாலேயே -அமைவது ஆதலின் அம்மதிப்பையே இதன்-பொருளாக கொள்ளல் வேண்டும் -தேஜ துர்ஜனை அனபிபவநீய த்வம்-என்று
தேஜசாவது தீயோரால் அடர்க்கபடாமை என்னும் கீதா பாஷ்யமும் – 16-3 – அதன்
சந்திரிகா வியாக்யானமும் காண்க –
பொறையும் –
துயரம் நேரும் போது சோர்வின்மை -அனவசாத்திற்க்கும்
இன்பங்கள் நேரும் போது களிப்பினைக்கும் -அனுத்தர்ஷத்துக்கும் -ஹேதுவான பொறுமை-கீழ் சொன்ன மதிப்புக்கு ஹேது இப்பொறை உடைமையே -என்க
பிறரால் துன்புறுத்தப் படும் போதும் -பிறர் திறத்து எத்தகைய மனோ விகாரமும் அற்று இருத்தலே –பொறை உடைமை —
திறலும் –
புலன்களை அடக்கும் சாமர்த்தியமே திரள் -என்க
பொறை க்கு புலன் அடக்கம் ஹேது என்று அறிக –
புகழும் –
இனி கீழ் கூறியவற்றால் ஏற்படும் பயன்கள் கூறப்படுகின்றன –
வாழ்வு எய்தி -ஞாலம் புகழும்படியான படியான புகழ் –ஆத்ம குணம் வாய்ந்தவன் என்னும் புகழ்-புகழினால் பிறரும் இவரைப் பின்பற்றி உய்வர் ஆதலின் அது வேண்டுவது ஆயிற்று –
நல்ல திருந்திய ஞானமும்
அறிந்தேயாக வேண்டிய தத்துவ ஹித புருஷார்த்தங்களை பற்றியது ஆதலின் -ஞானம் நல்லது ஆயிற்று –முறைப்படி கற்று உணர்ந்தமையால் அவற்றை உள்ளபடி காட்ட வல்லது ஆதலின்-திருந்தியதும் ஆயிற்று அந்த ஞானம் -என்க –
செல்வமும் சேரும் –
கீழ் கூறிய ஞானத்தின் பயனான பக்தி -செல்வம் என்று-சொல்லப்படுகின்றது –
தனமாய தானே கை கூடும் -முதல் திருவந்தாதி -43 -என்றார் பொய்கையாரும் –
இவ் ஆத்ம குணங்கள் தேட வேண்டியவைகள் அல்ல –எம்பெருமானாரைச் சேரும் அவர்க்கு தாமாகவே வந்து சேரும் என்கிறார் –
ஸ்ரீ ரங்க நாச்சியாரை அடைபவருக்கு பிராட்டி கடாஷிக்க முற்படும் போதே -ரதி மதி முதலிய-நலம் எல்லாம் போட்டி இட்டு பலவாறு தாமே அவர்கள் உடைய வேண்டுதலை எதிர்பாராது-வந்து மேல் விழுவதாக ஸ்ரீ பராசர பட்டர் அருளிய ஸ்ரீ குணரத்னகோச ஸ்லோகம் ஒப்பு-நோக்கத் தக்கதாகப் பெரிய ஜீயர் உரையிலே காட்டி உள்ளார் -பட்டர் அருளிய ஸ்ரீ குணரத்னகோச ஸ்லோகத்தின்-பொருளை எமது சூவர்ண குஞ்சிகா வ்யாக்யானத்தில் கண்டு கொள்க –
செறு கலியால்–அரும் தவன்
செறுகிற கலி-செறு கலி -வினைத் தோகை –இதனால் செறுதல் கலியின் இயல்பு என்பது தோற்றும்-கலியின் கொடுமையினால் நெறி முறை கேட்டு ஞாலம் குலைந்து -கீழ் நிலையை அடைந்தது –மேலே ஏற ஒண்ணாது அது வருந்தியது-
ஞாலம் என்பது ஆகு பெயராய் ஞாலத்தில் உள்ள -மாந்தரை உணர்த்திற்று –
ஞாலத்தார் அதோ கதி அடைந்து -வருந்திய நிலையில் வந்தார் எம்பெருமானார் –
ஏனைய அவதாரங்கள் -தேவர் இரக்க வந்தவை –
எம்பெருமானார் ஆகிய ஆச்சார்ய அவதாரமோ -இரப்பார் இல்லாமலே தானே வந்தது –
ஞானக் கை தந்து மேலே எடுப்பவர் ஏனைய ஆசார்யர்கள் –
மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்திர பாணி நா -அழுந்தினவர்களை சாஸ்திரக்-கையினால் தூக்கி விடுகிறார் -என்று கூறப்படுவதும் காண்க –
எம்பெருமானார் ஆகிற ஆசார்யரோ தம் அரிய தவத்தின் வலுவினால் ஞாலத்தாரை எடுத்து-மீண்டும் விழாது -காத்து அருளுகிறார் -அத்தகைய அரிய தவம் அவரது -இங்கு தவம் என்பது –தான் வாட வாடச் செய்யும் தவம் அன்று -தவங்களுள் சிறந்தது சரணாகதி -என்று சிறந்த தவமாக-ஓதப்படுகின்ற சரணாகதியே -என்க
எம்பெருமானார் செய்த சரணாகதியின் பயனாக அவர் தொடர்பை எவ்வகையாலேனும் பெற்ற-ஞாலத்தவர் -உய்வு பெற்று விடுகிறார்கள்-இவ் அரிய உண்மை அமுதனாரால் இங்கு உணர்த்தப் படுகிறது –இதனை வேதாந்த தேசிகன்-மணவாள மா முனி போன்ற ஆச்சார்யர்கள் விளக்கிக் காட்டி உள்ளனர் –
எங்கள் இராமானுசன் –
ஞாலத்தாரை எடுத்து அளிக்க வந்தவர் -கீழ்க் கூறிய பாசுரப்படி -நினைப்பு இல்லாமலே -நான் இருக்கும் போது –தம்மைப் பொருந்தும்படி -செய்து தம் அனுபவத்தை முற்றும் பெறும்படி -செய்தலின் -விசேடித்து -எங்களுடைய-இராமானுசன் ஆகிறார் -என்கிறார் –ஞாலத்தை எடுத்து அளிக்க வரினும் தம் போன்றார் வாழ்வுக்காகவே-எம்பெருமானார் வந்ததாகக் கருதுகிறார் அமுதனார் -என்க–

————————————————————————-

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தல்

ராமனுசனை பொருந்தினம்-என்று இவர் ஹ்ருஷ்டராகிற இதை கண்ட நாம்
எங்களுக்கு உம்மை போல் ஆத்ம குணங்கள் ஒன்றும் இல்லையே என்ன
-ஸ்வாமியை சேரும் அவர்களுக்கு ஆத்ம குணங்கள் எல்லாம் தன்னடையே வந்து சேரும்.
விட்டு விட்டே பற்றனும்-ஆழ்வானும் ஆண்டானும்.பேசிக்கொண்ட ஐதிக்யம்
-கொஞ்சம் வைராக்கியம் வந்து திரு வடி பற்றிய பின் தன அடைவே போகும் என்றாரே
.அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்குவார்-இல்லாதார்க்கு அன்றோ நீ இரங்கணும் ஸ்வாமி../செறு கலியால் வருந்திய உலகத்தை வள்ளல் தண்மையினால்/
வந்து -நித்ய லோகத்தில், இருந்து – பிரார்திக்காமலே வந்து/
எடுத்து -நம்மை /அளித்த ..அருந்தவத்தால்-சரணா கதி..அடைந்தால்-அனைத்தும் கிட்டும்
..ஸ்வாமி பங்குனி உத்தரத்தில் தாமே பண்ணிய சரணா கதி தான் நமக்கும் மோஷ சாதனம் என்பதற்கு இந்த பாசுரமே சாட்சி.
–அருந்தவம் என்ற சொல் உயிர் ஆன சொல் ..ஞான கை தா மயர்வற மதி நலம் அருளிய அவனே ஆழ்வாருக்கு ஆச்சார்யர் ..
வந்து எடுத்தார் -உத்தாரணம்..
அருந்தவம் என்றதால் -அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே ஆழ்வார்
.இவரோ நமக்கு என்றதால் பிர பன்ன குல கூடஸ்தர் ஸ்வாமி தான்
..யதி -தவம் சரணாகதி ரூபமான தவம் ..எங்கள் இராமனுசன்..எங்களுக்கு தன்னை முற்றூட்டாக கொடுத்தார்
–அமுதனார்-தன்னை எடுத்தால்-பலித்த இடம் இவர் இடம் என்பதால்
..பொலிந்த தேசும்-ஸ்வரூபம் அநு ரூபமான
அடியவன் சேஷ பூதன் பார தந்த்ரன் – இது தான் பொருந்திய தேசு.
பொறையும்- துக்கம் வந்தால் வருத்தம் இன்றி சுகத்தக்கு மகிழாமல்
/ திறல் -கலங்காமல் இந்த்ரயங்கள் அடக்கும் சாமர்த்தியம்
/கீர்த்தி புகழ்
/நல்ல திருந்திய ஞானமும்
-உண்மை பொருள் -கட்டளை பட்டு இருந்து பெற்ற ஞானமும்
-ஆச்சார்யர் கைங்கர்யம் பண்ணி கேட்டு கொண்ட ஞானமும்…
.செல்வமும்-அதனாலே பக்தி ரூப சம்பத்தும்
.ரதி மதி சரஸ்வதி திருதி சமர்த்தி .சித்தி ஸ்ரிய போல கடாஷம் பெற்றதும் அனைத்தும் கிட்டும் .
செறுகிற கலி-செறுகையே ச்வாபம் கலிக்கு
..வர்ண ஆஸ்ரமம் தர்மம் குலையும்..வேதங்கள் மதிக்க படாமல்
..சிஷ்ய குரு பாவம் குறைந்து..கலி கோலாகுலம்
.பித்ரு காரியம் அக்னி காரியம் குறைந்து பாஷாண்டிகள் மிக்கு .விஷ்ணு புராணம் சொல்லும்.-கலியின் கோர தசையை –
.பர துக்க சகியாத வள்ளல் தனத்தால் -கிருபையால்-வந்த வள்ளல் தனம்-
.பரம பதத்தில் இருந்து – எமக்காக அன்றோ அவதரித்தார்
-க்ருபா மாத்ரா பிரசன்னாச்சர்யர் / இதற்க்கு முன் அநு வர்த்தி பிரசன்னாச்சர்யர்கள்
கொடுத்தார்கள் சேவித்து கைங்கர்யம் பண்ணி பெறணும்.
.ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார்.
.புண்ய அம்போக -ஞானம் விகாசம் அடைய -ஸ்ரீமான் ஆவிர்பாதித்தார் ராமானுஜ திவாகரன்
/வெறிதே அருள் செய்வார்..பிறவாதவன் பிறந்தான் வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்தது இவரோ–அது கூட இல்லாமல்
..நிர்துஹே ககமாக– வெறிதே அருள் செய்வர் வண்மையினால்-இதனாலே மட்டுமே -வந்து எடுத்து அளித்த
–கீழ் புக்க வராக கோபாலரை போல உத்தாரணம் பண்ண
-சாஸ்திர பாணியாக -இதையே சஸ்த்ரமாக கொண்டு
.கோபம் இல்லை கருணை மட்டுமே -அர்த்தித நிரபேஷமாக சம்சாரத்தில் இருந்து ரஷித்த்தார்
-எடுத்த -திரு கோட்டியூர் நம்பி குக்ய தமமாக எடுத்து -18- தடவை நடக்க வைத்து -உபதேசித்து போந்த சரம ஸ்லோக அர்த்தத்தை
..-திரு மந்த்ரம் என்று தப்பாக சொல்வார்கள் -அர்த்தத்தை வழங்கினார்
..உபதேசித்தும் இது. தானே பிர பத்தி பண்ணியும் அனுஷ்டித்து அளித்தார்
..ஆழ்வார்கள் அரங்கன்என்பர் /ஆச்சார்யர்கள் அழகிய மணவாளன் என்பர்
— பெரிய பிராட்டியார் உடன் இருந்த பங்குனி உத்தரம் அன்று
..இந்த அரங்கத்தில் இனிது இரு -பிள்ளைகள் நாம் சொத்தை அனுபவித்து வருகிறோம்
..ந்யாசம்-சரணா கதி- தவங்களில் சிறந்தது ..மகா விச்வாசகம் பூர்வகம்
-அருமை-சுலபம் இல்லை.. பிர பத்தியில் நம்பிக்கை
– ஈஸ்வர பிரவர்த்தி விரோதி -சு பிரவர்த்தி நிவ்ருத்தி ஏற்பட்டால் தான் சரணா கதி.
. கதய த்ரயத்தில் -கல்ப கோடி சகஸ்ரஸ் ஆண்டுகள் போனாலும் வேறு கதி இல்லை கர்ம ஞான பக்தி ஏற்படாது
–எங்கள் இராமனுசன்- ஞாலத்தை எடுத்து அளிக்க வ்யாஜ்யமாய் அமுதனாரை உத்தாரணம் பண்ணவே வந்தார்
விநாசாய துஷ்க்ருதாம்–பகு வசனம் -ஹிரண்ய ராவண கம்சன் பிரதான விரோதி நிரசனம் பண்ண வந்தது போல-.என்னை உத்தாரணம் பண்ண- வந்தார்- எங்கள் இராமனுசன் அமுதனார் தம்மை தாழ நினைத்து கொள்கிறார்
..சமாச்ரண்யம் பண்ணினவர்களுக்கு -பற்றுதலே வாழ்வு-
பொருந்திய தேசு-மதிப்பு ஏழைமை இன்மை நாம் யார்க்கும் குடி அல்லோம் நமனுக்கு அஞ்சோம்.
கொள்வான் அன்று கொள்ளாமல் போகாது. பகவான் இடமே ஒன்றும் கேட்ட மாட்டோம்.
.அடிமை தனத்துக்கு வரும் எதிரிகளை அடக்கும் தேஜஸ்
-சொரூபத்துக்கு பொருந்திய /சுவாமிக்கு பொருந்திய தேஜஸ் கிடைக்கும்
மாயா வாதிகள்/-சரஸ்வதி பண்டாரம் /ஆயிரம் பேரை வாதிட்டு யாதவ பிரகாசர் யக்ஜா மூர்த்தி வென்ற மதிப்புக்கு தக்க தேஜஸ்../
அடர்க்க படாமை ஏமாறாமல்–கெட்டவர்களால் அடர்க படாமல்
-தேசு =மதிப்பு..
/பொறை-மதிப்புக்கு பொறை காரணம்
/துக்கம் வரும் பொழுது சோர்வின்மை சுகம் வரும் பொழுது களிப்பின்மை /
பொறுமை வர திறல்
-மனோ பலம் இந்த்ர்யங்களை அடக்கும் தன்மை/
கைங்கர்யம் பண்ணும் திறமை சர்வம் கரிஷ்யாமி .
இவை இருந்தால் புகழ் -கீர்த்தி-ஆத்ம குணம்-சமமும் தமமும் பிரதானம் வெளி வுள் இந்த்ர்யங்களை அடக்குவது .
.பின் வற்றி வாழ புகழ் பரவும் .
/நல்ல திருந்திய ஞானமும்-.சேதனர்களுக்கு சாமான்ய ஞானம்
-இதை சொல்ல வில்லை -சதாசார்யா சமாச்ரண்யம் குருகுல வாசத்தால் ஆனந்திப்பித்து
தத்வ ஹிதம் புருஷார்த்தம் யாதாத்மா ஞானம் இது.
.செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான்.. கட்டளை பட்ட ஞானம் -திருந்திய ஞானம்
செல்வமும் சேரும்-வேத வேதாந்த பிரம ஞானமே செல்வம்.
.திருவடி யாரை பார்த்தால் என்பு உருகி அன்பு பெருகுமோ அது போல..
-கைங்கர்ய ஸ்ரீ யை -லஷ்மண- ஸ்ரீ- ஸ்வாமி தன்னாலே தர முடியும்.
சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே ..
/நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்கள்
-கைங்கர்யம் பண்ண அனுகூலராக -அகம் அகம் என்று இவை எல்லாம் வரும்.இவை தானே வந்து சேரும்
-எங்கு கலி இலே இந்த பூ உலகத்திலே.

————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: