அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-31-ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம்-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
முப்பத்தோராம் பாட்டு-அவதாரிகை

அநாதி காலம்  அசங்க்யாதமான யோநிகள் தோறும் தட்டித் திரிந்தநாம் இன்று
நிர்ஹேதுகமாக எம்பெருமானரை சேரப் பெற்றோமே என்று -ப்ரீதி பிரகர்ஷத்தாலே –
திரு உள்ளத்தை குறித்து அருளி செய்கிறார் –

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-

வியாக்யானம் –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கையாலே இரண்டு தசையிலும் கூடி நிற்கிற நெஞ்சே –தினமாய்-மாசமாய் -சம்வத்சரங்களாய் -கொண்டு வர்த்தியா நின்றுள்ள -காலம் எல்லாம் –
தேவாதி பேதத்தாலும் -அதில் அவாந்தர பேதத்தாலும் -பரிகணிக்க ஒண்ணாதபடி -திரண்டுபல வகைப்பட்ட -யோநிகள் தோறும் -ஒரு கால் நுழைந்த இடத்தே -ஒன்பதின் கால் நுழைந்துதட்டித் திரிந்த நாம்-இன்று ஒரு நினைவு இன்றிக்கே இருக்க செய்தே -காணத் தகுதியாய் இருந்துள்ள-திருத் தோள்களை உடையராகையாலே -ரூப குணத்தாலும் உத்தேச்யராய் -நமக்கு வகுத்த சேஷிகளாய் –
தர்சநீயமான திரு வத்தியூரிலே -நித்ய வாசம் பண்ணுகையாலே -அவ்வூரைத் தமக்கு நிரூபகமாக-உடைய பேர் அருளாள பெருமாள் உடைய -பரஸ்பர சத்ருசமான -திருவடிகளின் கீழே -பிணிப்புண்ட-சிநேகத்தை உடையரான –எம்பெருமானாரை சேர்ந்து கொண்டு நிற்கப் பெற்றோம் –
நிகழ்தல்-வர்த்தித்தல் / ஈண்டுதல்-திரளுதல் /யோனி-ஜாதி–

வரத வலித்ரயம் -தாமோதரன் / கனக வளை முத்திரை / ஸ்ரீ நிதிம்-சம்ப்ரதாயம் நிலை நிறுத்திய தேவ பெருமாள் அன்றோ -திருமங்கை ஆழ்வாருக்கு நிதி -ராமானுஜர் -பிள்ளை லோகாச்சார்யார் -நின்று வேலை செய்ய அரங்கன் படுத்துக் கொண்டே அனுபவிக்கும் -ராஜதானி -பூண்ட -ஆபரணம் -சென்னிக்கு அணியாக –
குடை -பிரசித்தம் -கொடைத்தன்மை என்றுமாம் -அஹம் ஏவ பர தத்வம் சொல்லி நிமிர்ந்த தோள்கள் -தோற்று தாளில் -தாளும் தோளும் சமனிலாத பல பரப்பி -தாளில் விழுந்தால் தோள் அணைப்பு கிட்டும் -வையம் கொண்டாடும் வைகாசி கருட சேவை –

——————————————————————————————————————
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை

லோகத்தில் ஒருவனுக்கு ஒரு நிதி லபித்தால் தன்னுடைய அந்தரனுக்கு சொல்லுமா போலே –இவரும் தம்முடைய பந்த மோஷங்களுக்கு எல்லாம் பொதுவான மனசை சம்போதித்து கலா முகூர்த்தாதி-ரூபமாய்க் கொண்டு வர்த்திக்கும் காலம் எல்லாம் தேவாதி தேகங்கள் தோறும் சஞ்சரித்து இவ்வளவும் போந்தோம் –
இப்போது ஒரு சாதனம் இன்றிக்கே -சுந்தர பாஹுவாய் -தமக்கு உபாகரகரான பேர் அருளாளன் திருவடிகளின் கீழே-அங்குத்தைக்கு -ஒரு ஆபரணம் போலே இருந்துள்ள பிரேமத்தை உடையரான எம்பெருமானாரை சேர்ந்து கொண்டு-நிற்கப் பெற்றோம் கண்டாயே -என்று சொல்லி ஹ்ருஷ்டர்  ஆகிறார் –
வியாக்யானம்

ஆண்டுகள் நாள் திங்களாய் -நிகழ் காலம் எல்லாம் -கலா முகூர்த்தம் க்ர்ஷ்டாச்சா ஹோராத்ரச்சா
சர்வச -அர்த்தமாசாமா சாரிதவத்சம் வத்சரஸ் சகல்பதம் -என்றும் -நிமேஷோ மாநுஷோயோசவ் மாத்ரா மாத்ர ப்ரமாணாத –தைரஷ்டாதசபி காஷ்டாத்ரி சத்காஷ்டா கலாச்ம்ரத்தா -நாடிகாது பிரமானே னகலா தசசபஞ்சச -நாடிகாப்யா மதத்வ்யாப்யோ
முஹூர்த்தொர்விஜச த்தம -அஹோராத்ரா முஹூர்த்தாஸ்து த்ரிம்சன்மாசாஸ் துதைச்ததா -மாசைர்த்வாதச பிர்வர்ஷா-மகோராத்ரம் துதத்வி -என்றும் சொல்லப்படுகிற – சர்வ காலமும் -ஆண்டுகள்-வத்சரங்கள் -நாள்-தினம் -திங்கள்-மாசம் –நிகழ்தல் -வர்த்தித்தல்
ஈண்டு பல் யோனிகள் தோறு உழல்வோம் -தேவ மனுஷ்யாதி ஜாதிகள் -ஒவ் ஒன்றிலே தானே அநேகம் அநேகமாக-அவாந்தர ஜாதிகள் உண்டு -அவை எல்லாவற்றிலும் ஒருக்கால் புகுந்ததிலே ஒன்பதின் கால் புகுந்து –
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்கிறபடியே அநாதிகாலம் பிடித்து -சஞ்சரித்து போந்தோம் –ஈண்டுதல் -திரளுதல் /யோநி -ஜாதி -உழலுகை -தட்டித் திரிகை -மனமே -பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் -அறிவுக்கு பிரசவ த்வாரமான
நீ அறிந்தாய் என்று -அந்தரங்கமான மனசை சம்போதித்து அருளிச் செய்கிறார் -ஏவம் சம்ஸ்ர்தி சக்ரச்தே பிராமய மானேஸ்-ச்வகர்மபி ஜீவேது காகுலே -என்கிறபடி இவ்வளவும் சஞ்சரித்துப் போந்தோம் –இன்று-இப்போது-
ஓர் எண் இன்றியே -நான் ஒன்றை எண்ணிக் கொண்டு இராதே இருக்க –எம்பெருமானார் திருவடிகளிலே-ஒரு சைதன்ய கார்யத்தையும் பண்ணாதே இருக்ககாண் தகு தோள் அண்ணல் –
ஆயதாஸ்ஸ சூவ்ர்த்ததாச சபாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா என்கிறபடியே இருந்துள்ள-திருத் தோள்களை உடையவராய் -விந்த்யாடவியில் நின்றும் காஞ்சி புரத்துக்கு துணையாக வந்து –
அஹம் ஏவ பரதத்வம் -என்று திரு கச்சி நம்பி மூலமாக உபதேசித்த உபாகாரகனாய் –தென் அத்தியூர் -தர்சநீயமான –
நகரேஷு காஞ்சி -என்னப்பட்ட காஞ்சி புரத்திலே -ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்வல பாரிஜாதம் -என்று தாமே அருளிச் செய்யும்படி
ஹஸ்த கிரியில் எழுந்து அருளி வகுத்த சேஷியான பேர் அருளப் பெருமாள் உடைய –கழல் இணைக் கீழ் -பாவனத்வ-போக்யத்வங்களுக்கு பரஸ்பர சதர்சமான திருவடிகளின் கீழே பூண்ட அன்பாளன் -சிரோ பூஷணமான-திரு அபிஷேகத்தை அலங்கரிக்கும் அவர்களைப் போலே தம்மாலே அலங்கரிக்கப்பட்ட
பக்தி பிரகர்ஷத்தை உடையரான –இராமானுசனை -எம்பெருமானாரை –பொருந்தினமே -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
என்றும் -ராமானுஜ பதாச்சாயா -என்றும் சொல்லுகிறபடியே பொருந்தி விட்டோம் கண்டாயே -என்று-தாம் பெற்ற வாழ்வுக்கு ஹர்ஷித்துக் கொண்டு நின்றார் ஆய்த்து

——————————————————————————————————————-
அமுது விருந்து

அவதாரிகை –
நெடும் காலம் பல பல பிறப்புகளில் புக்கு பெரும்பாடு பட்ட நாம்-இன்று
நினைப்பின்றியே எம்பெருமானாரை சேரப் பெற்றோம் என்று
பெறும் களிப்புடன் தம் திரு உள்ளத்தை குறித்து அருளி செய்கிறார் .
பத உரை
மனமே -நெஞ்சமே
நாளாய் -தினமாய்
திங்களாய்-மாதமாய்
ஆண்டுகளாய்-வருஷங்களாய்
நிகழ் காலம் எல்லாம் -நடந்து கொண்டு இருக்கிற காலம் எல்லாம்
ஈண்டு-திரண்டு
பல் யோநிகள் தோறும் -பலவகைப்பட்ட பிறவிகள் தோறும்
உழல்வோம் -கஷ்டப்பட்டு கொண்டு திரிந்த நாம்
இன்று-இப்பொழுது
ஓர் எண் இன்றியே -ஒரு நினைப்பு இல்லாமலே
காண் தகு-காண்பதற்கு தக்கவைகளாக உள்ள
தோள்-திருத் தோள்களை உடைய
அண்ணல் -ஸ்வாமி யாய்
தென் -அழகிய
அத்தியூரர் -திரு வத்தி யூரில் எழுந்து அருளி உள்ள பேர் அருளாள பெருமான் உடைய
கழல் இணைக் கீழ்-ஒன்றுக்கு ஓன்று ஒத்த திருவடிகளின் கீழ்
பூண்ட-நன்கு செலுத்தின
அன்பாளன் -பக்தியை உடையவரான
இராமானுசனை -எம்பெருமானாரை
பொருந்தினம் -சேர்ந்து நிலை நிற்க பெற்றோம்
வியாக்யானம் –
ஆண்டுகள்–உழல்வோம் –
தமது பண்டைய நிலையையும் எதிர்பாராது வாய்ந்த இன்றைய சீரிய நிலையையும் பார்த்து வியந்து-தன் நெஞ்சினைப் பார்த்துபேசுகிறார் -இரண்டு நிலைகளையும் தம்மோடு ஒக்க இருந்து நேரே கண்டதாதலின்
நெஞ்சினைப் பார்த்து பேசுகிறார் –
காலம் எல்லாம் நாம் பிறந்த பிறவிகளுக்கு எல்லை இல்லை –
தேவர் மனிதர் விலங்கு தாவரம் -என்று பெறும் பிரிவுகளும்
அவற்றின் உட் பிரிவுகளுமாக என்ன ஒண்ணாத திரண்டு பல வகைப் பட்டு உள்ளன அப்பிறவிகள் –
ஒரே வகையான பிறவியே பலகால் எடுத்து தட்டித் தடுமாற வேண்டியது ஆயிற்று –
சில பிறவிகள் ஆண்டுக் கணக்கில் இருந்தன –
மற்றும் சில மாதக் கணக்கில் இருந்து மாய்ந்தன
வேறு சில நாள் கணக்கில் நசித்தன –
இப்படிப் பட்ட நம் பல் வகைப் பிறப்புகளிலும் இப் பிறப்பிலே எம்பெருமானாரை பொருந்தும் பேற்றினை
நம் பெற்றோம் -என்றபடி –ஆய்-என்பதை ஆண்டுகள் -நாள் -என்பவற்றோடும் கூடிப் பொருள் முறைக்கு ஏற்ப
நாளாய் -திங்களாய் -ஆண்டுகளாய் –என்று அன்வயித்து பொருள் கொள்க –
பிறக்கும் போதே நசிக்கும் பிறப்புகளை சொல்லாது ஒழிந்தது உழலுகை நிகழும் காலமாய்-அமையாமை பற்றி -என்க –உழல்வோம் -தன்மை பன்மை வினையால் அணையும் பெயர் –
காண் தகு தோள் —பூண்ட அன்பாளன்
எதிர்பாராது இன்று வாய்த்த எம்பெருமானாரைப் பொருந்தின சீர்மை விளக்கப் படுகிறது –சக்கரவர்த்தி திருமகனுடைய அணி பூணாத தோள் அழகிலே ஈடுபட்ட சிறிய திருவடி போலே-புறப்பாடாகி திரு மாலை களைந்ததும் -பேர் அருளாளர் வெறும் தோள் அழகிலே ஈடுபட்டு ரசித்தார் எம்பெருமானார் –
அவருக்கு காணத் தக்கவனவாய் இருந்தன அத் தோள்கள்-
அவ் அழகிய தோள்கள் அவரை அண்ணலாக காட்டிக் கொடுத்தன –
விந்திய மலைக் காட்டிலே -வேடன் வடிவிலே -தன் தோள் வலிமை காட்டி -அச்சம் ஒட்டி
உற்சாகம் ஊட்டி -தம்மை அத்தியூரிலே -தன்னோடு கூட்டிக் கொண்டமை பற்றித் தேவப் பெருமாள்-அழகிய தோளிலே எம்பெருமானார் ஈடுபட்டமையைக் கூறுவதாகவும் கொள்ளலாம் –
இனி தரும் என்று அண்டினவர் அனைவர்   கோரும் அவை யனைத்தும் சேரும் வண்ணம் வழங்கும்-வரம் தரும் மணி வண்ணனான அத்தி யூரர் அலம் புரிந்த நெடும் தடக் கையின் அழகில் எம்பெருமானார்-ஈடுபாட்டைக் கருதலுமாம்
தடக்கை -என்பதற்கு -லோகம் அடங்க ஒதுங்கினாலும் விஞ்சி இருக்கும்படியான தோள் -என்பது-பெரிய வச்சான் பிள்ளை வியாக்யானம் .
தென் அத்தியூரர் –
தேவப் பெருமாள் எழுந்து அருளி இருக்கும் திருமலை -அத்திகிரி -எனப்படும் –
அத்தி-யானை
திக் கஜங்கள் வழிபட்ட இடம் ஆதலின் –அத்தி கிரி -என்று பேர் பெற்றது –
திங் நாகைரர்ச்சி தஸ் தத்ர புரா விஷ்ணு ச்ச்நாதன-ததோ ஹஸ்திகிரீர் நாமக்க்யாதி ராஸீன் மகாகிரே -என்று-அவ்விடத்தில் முற்காலத்தில் சனாதன புருஷனான மஹா விஷ்ணு திக் கஜங்களால்-பூஜிக்கப் பட்டான் -அதனால் பெருமை வாய்ந்த அம்மலைக்கு அத்திகிரி -என்னும் பிரசித்தி ஏற்பட்டது –
என்னும் புராண பிரமாணம் காண்க -.அத்தி கிரி உள்ள ஊர் ஆதலால் அது அத்தியூர் எனப்படுகிறது –
அத்தி யூரான் புள்ளை யூர்வான் -என்றார் பூதத் ஆழ்வார் -கோயில் திருமலை பெருமாள் கோயில் -என்னும்-பண்டைய வழக்கிலே பெருமாள் கோயில் எனப்படுவதும் இவ்வத்தி யூரே -பாரதம் பாடிய பெறும் தேவனார் –
தேனோங்கு நீழற் றிருவேம்கடம் என்றும்
வானோங்கு சோலை மலை என்றும் -தானோங்கு
தென்னரங்க மென்றும் திரு வத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டோ துயர் -என்று கூறப் பட்டு உள்ளமை காண்க –
திருமலை என்பது திருவேம்கடம் ஆகிய திருமலையையும்
திரு மால் இரும் சோலை மலையாகிய தெற்குத் திரு மலையையும் குறிக்கும் ஆதலின்
அவ்விரு திருமலைகளையும் – பெரும் தேவனார் தம் பாடலில் குறிப்பிட்டு உள்ளார் –
வரம் தரு மா மணி வண்ணன் -அருளாளப் பெருமாள்-இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி -பெரிய திரு மொழி -2 9-3 – –என்று திரு மங்கை மன்னன் அருளிச் செய்தபடி -காஞ்சி என்று ஊரை குறிப்பிடாது அத்தியூர் என்று-குறிப்பிட்டு இருப்பது -கவனித்தற்கு உரியது –பிரமதேவன் பூஜித்த இடம் ஆதலின் காஞ்சி -என்று பேர் ஏற்பட்டது –
அப்பேரை விட விலங்கு இனங்களாகிய யானைகள் பூசித்த இடம் ஆதலின் தேவப் பிரான் உடைய-எளிமையை விளக்குவதாக அமைந்த அத்தியூர் என்னும் பேரே சிறந்தது என்னும் கருத்துடன் அப்பேரினையே-கையாண்டார் -என்க
மேலும் ஊரகம் பாடகம் முதலிய பல திருப்பதிகளைத் தன்னகத்தே கொண்ட நகருக்கு காஞ்சி -என்பது பொதுப் பெயராக-வழங்கப்படுகிறது –அத்தியூர் -என்பதோ -தேவப்பெருமாள் நித்ய வாசம் செய்யும் பகுதிக்கே சிறப்பு பெயராய்
அமைந்து உள்ளது -ஆதல் பற்றியும் அப்பெயரினையே கையாண்டார் -என்க
அத்தியூரிலே நித்ய வாசம் பண்ணுதல் பற்றி அதனையே நிரூபகம் ஆக்கி தேவப் பெருமானை அத்தி ஊரர் -என்கிறார் –
கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன்
தோள் கண்டமை கூறப்பட்டது கீழே –தாள் கண்டமை கூறுகிறார் இங்கே –
கழல்கள் ஒன்றுக்கு ஓன்று இணையாகப் பொறுந்தி உள்ளன-அவற்றின் கீழ் அன்பு பூண்டார் எம்பெருமானார்
அவன் தாள் இணைக் கீழ் புகும் காதலன் -திரு வாய் மொழி – 3-9 8– -என்றபடி
கழல் இணையின் கீழே பூண்ட அன்பை ஆளுகின்றார்-வாழ்ச்சி தாள் இணையக் கீழ் அன்றோ
பூண்ட அன்பு –
பூட்கை யாவது -வலிமை –வலிமை வாய்ந்த அன்பாவது விலகாது அடிக்கீழ் நிலை பெற்று இருத்தல்-பிணிப்புண்ட சிநேகம் -என்று உரைப்பர் பெரிய ஜீயர் –
தன்னைக் கொண்டு நிரூபிக்க வேண்டும்படி வலிமைபெற்று அவ்வளவு அமைந்து
இருக்கிறது அன்பு எம்பெருமானார் இடத்திலே -திருவாளன் என்பது போலே அன்பாளன் என்கிறார் –
திருவரங்கத்தில் எழுந்து அருளி இருக்கும் போதும் தேவப் பெருமாளையே
திரு வாராதனப் பெருமாளாகக் கொண்டு தென்னத்தி யூரர் கழல் இணைக் கீழ் பூண்ட
அன்பாளராய் அன்றோ எம்பெருமானார் இருந்தார் –
இனி காண் தகு தோள் அண்ணல் என்பதை எம்பெருமானாருக்கு அடை ஆக்கலுமாம்-
இதனால் திரு மேனி குணமும் அன்பாளன் என்பதனால் ஆத்ம குணமும்
அனுசந்திக்கப் படுகின்றன –
இராமானுசனைப் பொருந்தினமே
பொருந்திவிட்டோம்-இனிப் பிரிந்திடற்கு வழி இல்லை
மேவினேன் அவன் பொன்னடி -கண் நுண் சிறு தாம்பு – 2- என்றபடி
இம்மையிலும் மறுமையிலும் பிரிவிலாது பொறுந்தி விட்டோம் என்றது ஆயிற்று –
——————————————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தல் –
இந்த பிரபந்தத்தில் 9 திவ்ய தேசங்கள் —ஆழ்வார் அவதார ஸ்தலங்கள் -3–மங்களா சாசனம் செய்கிறார் அமுதனார்/திரு குருகூர்-3 பாசுரங்கள்/திரு மழிசை-மழிசை க்கு இறைவன் 1/திரு கொல்லி நகர் 1/திரு குறையலூர் 1 /திரு குருகூர் மூன்று பாசுரங்கள்/திரு அரங்கம் 14 பாசுரங்கள்/திரு வேங்கடம் 2 பாசுரங்கள்/திரு கச்சி 1 /திரு கோவலூருக்கு 1/திரு மால் இரும் சோலை 1/திரு கண்ண மங்கை நின்றான்1/திரு பாற்கடல் 2/திரு பரம பதம் -2/

திரு அரங்கம் சென்ற பின்பு ஆராத்ய தெய்வமாக தேவ பெருமானை கொண்டவர் ஸ்வாமி../மனமே -கூப்பிட்டு பாசுரம்.அருளிகிறார் அமுதனார் இதில் –நாளாய் திங்களாய் ஆண்டுகளாய்–திரண்டு நிகழ் கால் எல்லாம் பல் யோனிகள் -தேவ மனுஷ்ய திர்யக்-துர் தசையிலும் நல தசையிலும் மனம் தெரியும்.பந்தத்துக்கும் மோஷத்துக்கும் மனசே -காரணம்அந்தரங்கர் மனம் தானே ..இன்று ஓர் எண் இன்றியே எண்ணமும் இன்றி ../ராமனுசரால் காண தக்க தோள் கொண்ட அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணை அடி கள் கீழ்-பூண்ட அன்பாளன் -வலிமை கொண்டவர் ..பொருந்தினேன்-மேவினேன் மதுரகவி ஆழ்வார் போல்..முன்பு உழல்வோம். இன்று -ஒன்றும் பண்ணாமல்-ஆழ்வான் திரு வடியால் சேர்த்து கொண்டார்..அத்வேஷம் ஒன்றே கொண்டு.. -இயைந்து போனேன்

அன்பாம் அனகன் . இதில் அன்பாளன் பூண்ட அன்பு.திவ்ய ஆபரணங்கள் போல ஸ்வாமி அன்பு பூண்டான் தேவ பிரான்..அடியார்களுக்கு தான் அவன் ஆபரணங்களும் ஆயுதங்களும்..அனைத்தும்/திரு அபிஷேகம் நீண்ட கிரீடம் -புஷ்பம் சாத்தி ..சிக்கத்தாடை .சாத்தி கொண்டு..-வேடனாக அழைத்து கொண்ட செய் நன்றிக்கு தலையில் சாத்தி கொண்டான்/ஸ்வரூப நிரூபக தர்மம் அன்பாளன் ஸ்வாமி/திருவாளன் அவன்../திருவுக்கும் திருவாகிய செல்வா/திருவே அகந்தா அவனுக்கு அது போல பூண்ட அன்பு– அன்பை நம்பி நாம் இருக்கிறோம்/பீதி உடன் இல்லை பிரிதி உடன் எல்லாம் பண்ணனும்/மீனுக்கு உடம்பு எல்லாம் தண்ணீர் போல ஸ்வாமிக்கு அன்பு-அந்தரங்கர் மனசு- ஆழ்வார் களுக்கு மனமே துணை.நிர்கேதுகமாக-ஓர் எண் இன்றி ..உழன்றது மனசே உன்னால் தான்/..இன்று கிட்டியது ஸ்வாமி யால் தான் அத்வேஷம் காட்டினது மனசு இரண்டு தசையிலும் கூடி நிற்கும்/ஞானம் அறிவு /நினைவுக்கு இருப்பிடம் மனசு புத்தி இந்தரியங்களில் ஓன்று இல்லை/.ஆத்மா புத்தி மனசு ஞானம் -பிரித்து புரிந்து கொள்ளணும்/ஈஸ்வர தத்வம் காட்டி கண்ட இடத்தில் ஓடிய மனசை – திருப்பனும்..சேர்த்து தான் வேலை பார்க்கணும்./கர்துத்வம் -செய்ய அசித் தத்வம் வேணும்/11th தத்வம் மனசு.சுக்ரீவனை ஒத்து கொள்ள வைத்து விபீஷணனை ஏற்று கொள்ள வைத்தால் போல/சுக்ரீவன் மனசு ராமன் ஆத்மா விபீஷணன் நல்ல காரியம்/தேவாதி பேதம் அவாந்தர பேதம் -உள் பிரிவுகள் -பரி கணிக்க ஒண்ணாத படி பல யோனிகள் ஈண்டு-திரண்டு -சில பிறவி நாளில் முடியலாம் பிறவிக்குள்ளே நாள் திங்கள் ஆண்டு ஓடும்–ஒரு கால் நுழைந்த இடத்தே ஒன்பது கால் நுழைந்து தட்டி திரிந்த நாம்-இது நமக்கு ஸ்வரூப நிரூபக தர்மம்/இன்று ஓர் நினைவு கூட இன்றி-அத்வேஷம் -விலக்காமை/வரவாறு ஓன்று இன்றியே -விதி வாய்க்கின்றதே–ரூப குணத்தாலே -வகுத்த சேஷி-தான் என்று காட்டி கொடுத்து/இவன் தான் என்று எழுதி வைத்த -கண்டவாற்றால் தானே என்று -நிற்கிறானே-தென்-தர்சநீயமான -அத்தியூரான் பிள்ளை யூர்வான்-பரஸ் பர தர்சமான -பிணிப்பு உண்ட அன்பாளன் -எம்பெருமானாரை சேர்ந்து கொண்டு நிற்க பெற்றோம்..சுந்தர பாகுவாய்/ஸ்வாமிக்கு உபாகரராய்-கண் இமைத்தல்-1 நிமிஷம் /15 நிமிஷங்கள் 1 காஷ்டை //30 காஷ்டைகள் 1கலை /15 கலை நாழிகை/உழல்வோம்-தன்மையிலே பன்மை /பக்தி ஆரம்ப விரோதி தொலைக்க கர்ம யோகம் செய்ய வேண்டும்..பல யோனிகள் சஞ்சரித்து ..ஓர் எண் இன்றி -சைதன்ய கார்யம் ஒன்றும் இன்றி..ஜீவாத்மா என்று அறிவிக்காமல் கல் போல கட்டை போல..அண்ணல் -வகுத்த சேஷி உபகாரன்- அநிஷ்ட நிவ்ருத்தி வேடனாக கொண்டு வந்து இஷ்ட பிராப்தி– அஹம் மேவ பரம் தத்வம்-ஆறு வார்த்தை அருளியது அண்ணல் தானே-ரஷகன்- அதற்க்கு காண் தகு தோள்..இதை கண்டு தானே சிறிய திருவடி பெருமாள் இடம் ஈடு பட்டார் ./.வேடனாக சேவிக்கும் பொழுதும் காண் தகு தோள்-ஆபரணங்கள் இன்றி-சர்வத்தையும் காட்டி ஆட கொண்ட அண்ணல்/பெரும் தேவி மார் உடன் சேர்ந்து -ரஷித்து அருளிய பிரபாவம் கொண்ட அண்ணல்/.தென் அத்தியூரர்-ஹஸ்தி கிரி-திக்கில் உள்ள யானைகள் அர்ச்சிக்க அதனால் ஹஸ்தி கிரி-.கச்சி பல திவ்ய தேசங்கள் உண்டு..அதனால்..பிரம்மாவால் தொழ பட்ட=பரத்வம் .. அத்தியூரர்-யானைகள் தொழுத சௌலப்யம்/..வரம் தரும் மா மணி வண்ணன்/மணி மாடங்கள் சூழ் கச்சி.-அலம் புரிந்த நெடும்தட கை ஜகம் முழுவதும் அடக்கினாலும் நிறையாத திரு கை ..வாங்கி கொண்டவனே கொடுக்க ஆரம்பிப்பான்— கற்பக கா என/தென் ஓங்கு நீள திரு வேங்கடம் என்னும்.. திரு மால் இரும் சோலை என்னும் .. தான் ஓங்கு தென் அரங்கம் என்னும் திரு அத்தியூர் என்னும் சொல்வோருக்கு உண்டோ துயர் ..தாமே அருளி செய்த படி..ஸ்ரீ ஹச்திசைல -பாரிஜாதம்-சுவாமியே அருளி செய்த/தோள் கண்டார்.. தாள் கண்டார். பாவனா போக்யத்வங்கள்/உபாய உபேய- கழல் இணை/ திருவடிகள் /தாள் இணை கீழ் புகும் காதலன்/சிரோபோஷனமான-பக்தி உடையவர்..மரகத பூதர -மலைக்கு பீஜம் -அடிக்கு இந்த தோள்கள்..குதிரை கருட வாகனத்தில் திரு ரத ஆளும் பல்லாக்கில் காட்டி கொண்டு ..திரு மேனி அழகை சேவித்து வைகுண்ட ஆசை தவிர்த்தேன் -தேசிகன்.சமுத்ரம் -ஆழ்ந்து கலக்க முடியாத கருநீல பெருத்த சுற்றளவு -பரிணாமம் உண்டு/திக்கு -முடிவு இல்லை ..வர பிரதன்-பச்சை மரம் போல -கற்பகக கா என நல் பல தோள்-ஈர் இரண்டு வளர்ந்து கொண்டே போகிறதே/பிராட்டி ஆலிங்கனம் செய்ய செய்ய வளருமே/அல்லி மாதர் புல்க நன்ற ஆயிரம் தோளன்.-/மாலோலன் ஸ்ரீ லஷ்மி தாயார் அணைத்து கொண்டே இருப்பதால் இந்த பாசுரம்
சிங்க வேள் குன்றம் பதிகத்தில் அமைத்தார் திரு மங்கை ஆழ்வார்
-இந்திரா பெரிய தேவியார் அணைப்பாலா ?–கோபிகள் ராசா க்ரீடையாலா ?–யசோதை கையால் கட்டு பட்டா ?-காரணம் சொல் –ஆழ்வான்..பத சாயா -நிழல்- அந்த பெயரை பெற்றோமே -அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே-இளையவர்க்கு அளித்த மௌலி அடியேனுக்கும் கொடுத்து அருளு ..காண் தகு தோள் அண்ணல் இராமனுசன் -தேவ பெருமாளுக்கு விசேஷணம் இன்றி ஸ்வாமி தோள் களுக்கு என்றும் கொள்ளலாம்..ஜகத்தையே அடக்கிய தோள்கள் அவனுக்கு /அவன் இவர் இடம்.. யான் பெரியன் நீ பெரியை போல–ரூபம் குணம் முக்கியம் சொரூபத்தால் வ்யாப்தி தெரியும் வேதாந்தங்களால்..ஆழ்வார் ரூபமே இதை காட்டும்..பிரத்யட்ஷமாக ஸ்வாமி திரு மேனியில் சேவித்து கண்டு கொள்ளலாம் /அடியாரை அரங்கன் இடம் சேர வைத்த மகிழ்ச்சியால் பூரித்த தோள்கள்/ஸ்வாமி காண் தகு தோள் அண்ணலை சேவித்தவனுக்கு தென் அத்தியூர் கழல் அடி இணை கீழ் பூண்டும் அன்பாளனாக ஆக்குவார்/திரி தந்தாகிலும் -தேவ பிரானை காண்பன் -.மேவினேன் அவன் பொன்னடி/ மீண்டு ஸ்வாமி அடிகளை பொருந்தினமே-

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: