அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-30-இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என்-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
முப்பதாம் பாட்டு –அவதாரிகை
இப்படி இவர் பிரார்த்தித்த இத்தைக் கேட்டவர்கள்-இவ்வளவேயோ -அபேஷை உமக்கு -இனி பரம பத ப்ராப்தி-முதலானவையும் அபேஷிதங்கள் அன்றோ -என்ன –
எம்பெருமானார் என்னை அடிமை கொண்டு அருளப் பெற்ற பின்பு-
சுகவாஹமான மோஷம் வந்து சித்திக்கில் என் –துக்க அவஹமான நரகங்கள் வந்து சூழில் என் –என்கிறார் –

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பழ சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

வியாக்யானம் –
பிரவாஹா ரூபேண பழையதாய் போருகிற ஜகத்தில் நித்தியராய் -அசங்க்யாதரான
ஆத்மாக்களுக்கு சேஷியானவன் – ஸ்வரூப ரூப குணங்களால் ஆசார்ய பூதனான சர்வேஸ்வரன்-என்று -ஸ்ரீ பாஷ்யாதி முகேன அருளி செய்த ச்நேஹத்தை உடையராய் -இப்படி சிநேக ரூபமாக-உபதேசிக்கும் அது ஒழிய -க்யாதி லாபாதிகளில் விருப்பத்துக்கு அடியான பாப சம்பந்தம் இன்றிக்கே-இருக்கிற எம்பெருமானார் -என்னை அடிமை கொண்டு அருளினார் -ஆன பின்பு -ஆனந்தாவஹமாய்-ஆத்ம அனுபவம் மாதரம் அன்றிக்கே -பரம புருஷார்த்த லஷணமான மோஷமானது – வந்து சித்திக்கில்  என் –
அசங்க்யேய துக்காவஹமான நரகங்கள் பலவும் வந்து -தப்ப ஒண்ணாதபடி -வளைத்துக் கொள்ளில் என் –இவற்றை ஒன்றாக நினைத்து இரேன் -என்று கருத்து –

நரகமே ஸ்வர்க்கமாகுமே -/எம்மா வீடு இத்யாதி -/பிராணவாகார விமானம் -ஸ்ரீ பாஷ்யாதி -சேஷி /
மன் பல் உயிர் கட்கு இறையவன்-தத்வ த்ரயங்களும் -சொன்னபடி இத்தால் –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை
-கீழ்ப் பாட்டிலே எம்பெருமானாருடைய கல்யாண குண வைபவத்தை உள்ளபடி அறியும் பெரியோர்கள் உடைய-திரள்களைக் கொண்டு -ஆனந்தத்தை பெறுவிக்குமதான -பாக்யம் உண்டாவது எப்போதோ -என்று இவர் அபிநிவேசிக்க –
இத்தைக் கண்டவர்கள் உம்முடைய அபேஷை இவ்வளவேயோ பின்னையும் உண்டோ என்ன -அநாதியான சம்சார சாகரத்திலே-பிரமித்து திரிகிற -ஜந்துக்களுக்கு எல்லாம் ஸ்வாமி யாய் -ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையனான சர்வேஸ்வரன் என்று
ஸ்ரீ பாஷ்ய முகேன அருளிச் செய்து -பிரயோஜனாந்தர கந்த ரஹீதமான -ப்ரீதியோடு உபகரித்து அருளும் எம்பெருமானார்
அடியேனை அடிமை கொண்டு அருளினார் -இனி ஆனந்த அவஹமான பதம் வந்து ப்ராபித்தால் என்ன – அசங்க்யாதங்களான-துக்கங்கள் வந்து பிராபித்தால் என்ன – இவற்றை ஒன்றாக நினைக்கிறேனோ என்று தம்முடைய அத்யாவசாய தார்ட்யத்தை
அருளிச் செய்கிறார் –

வியாக்யானம் –
தொல் உலகில் மன் பல் உயிர் கட்கு –
ஏவம் சம்சர்த்தி சக்ரச்தே ப்ராம்யமானே ஸ்வ கர்மபி -என்கிறபடியே –
அவித்யா கர்ம வாசன ருசி பிரகிருதி சம்பந்தம் உடைய -சம்சாரத்தில் நித்தியராய் -அசங்க்யாதராய் கொண்டு வர்த்திக்கிற-ஆத்மாக்களுக்கு –
இறையவன்
-யஸ் சர்வேஷூ பூதேஷு திஷ்டன் சர்வேஷாம் பூதானாமந்திர -ய சர்வ பூதாநா விந்தந்தி –யஸ்ய சர்வே பூதாஸ் சரீரம் யஸ் சர்வேஷாம் பூதான மந்த ரோய மயதி-நத ஆத்மா அந்தர்யாம்யமர்த்த -என்றும்
சர்வேச்மைதேவாபலி மாவஹந்தி -என்றும் -பீஷாச்மாத்வாத பவதே -பீஷோ தேதி சூர்யா பீஷாஸ் மாதகநிஸ் சேர்ந்தச்ச-மிர்த்யுத்தாவதி பஞ்சமா இதி -என்றும் -அந்தர்பஹிஸ்ஸ சதத்சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்த்தித -என்றும் –
இத்யாதிகளில் சொல்லப்படுகிற வகுத்த சேஷியானவன் –
மாயன் என –
த்ர்விக்கிரம நர்சிம்ஹாதி ரூபேண ஆவிர்பாவ ஜடாயு மோஷ பிரதான சேது பந்தன
அயோத்யாவாசி த்ர்குணா குல்மலாதி முக்தி ப்ராபண கோவர்த்தன உத்தரணாதி ஆச்சர்ய-சேஷ்டிதங்களை உடையனான சர்வேஸ்வரன் என்று
-மொழிந்த அன்பன்
-ஸ்ரீ பாஷ்யாதி முகேன –லோகத்தார்க்கு எல்லாருக்கும் அருளிச் செய்தும் -உபதேசித்தும் -போந்த பரம ப்ரீதியை உடையவன் –
அநகன்
-இந்த உக்தி உபதேசங்களாலே சில க்யாதி லாப பூஜைகளை அபேஷித்து இருந்தால் அது அரசமாய்த் தலைக் கட்டும் –
அப்படி அன்றிக்கே -பரிதி பிரேரராய் கொண்டு அவற்றை பண்ணி அருளினார் ஆகையாலே –அநகன் -என்று அருளிச் செய்கிறார் –
இராமானுசன் –
எம்பெருமானார் -என்னை-அதிகாரமில்லாத என்னை -இவ்வளவும் பிரதி கூலித்து போந்த என்னை –
ஆண்டனனே
பரகத ச்வீகாரமாக என்னை ஆளா நின்றார் -ஆத்மாந்த தாச்யத்திலே அந்வயிப்பித்து உஜ்ஜீவிக்கும்படி-என்னை அடிமை கொண்டு அருளினார் -இப்படிப் பட்ட புருஷார்த்த காஷ்டை யைப் பெற்ற பின்
இன்பம் தரு பெரு வீடு எய்தில் என் –
அமர்தச்யை ஷசேது -என்றும் ரசோவைச -ரசஹ்யேவாயோ லப்த்த்வா நந்தீபவதி -என்றும் –
நிரஸ்தாதிசயாஹ்லாத சூககர்வைக் லஷணா-என்றும் நலம் அந்தம் இல்லாதோர் நாடு -என்றும் -அந்தமில் பேரின்பம் -என்றும்சொல்லுகிறபடியே ஆனந்த அவஹமாய் -ஆத்ம அனுபவம் போலே பரிமிதமாய் இருக்கை அன்றிக்கே –
பரம புருஷார்த்த லஷணம்-மோஷமானது – இங்கே மேல் விழுந்தால் என் -அத்தை சுகமாக கணிசித்து இருக்கிறேனோ
எண்ணிறந்த துன்பம்
சங்க்யைக்கு நிலம் இல்லாத துன்பம் -யாம்ச கிங்கர பாசாதி க்ரஹனம் தண்ட தாடனம்-
யமச்ய தர்சனஞ் சோகர முக்ரமார்க்க விலோகனம் -கரம்பவாலு காவாஹ் நியந்திர சஸ்த்ராதி பீஷணை –பிரத்யேக நரகேயஸ் சயாதநாத் விஜாதுச்சகா -க்ரகசை பாட்யமா நா நா மூஷா யஞ்சாபி தஹ்யதாம்-குடாரைக்ர்த்தயமா நா நா பூமவ்சாபி நிகன்யதாம்-சூலை ராரோப்ய மாணா நா வயாக்ரா வக்த்ரை -பிரவேச்யதாம்
க்ர்த்தைரைஸ் சம்பஷ்ய மாணாநா -த்வீபிபிஸ் சோப புஜ்யதாம் -க்வாத்யதாம் தைலமத்யேச க்லத்யதாம் ஷார க்ர்த்தமே –
உச்சானி பாத்யம நா நாம் ஷிப்யதாம் ஷேபயந்தரகை-நரகேயாநிது க்காநிபா பஹேதூத் ப்பவாவாநிச
ப்ராப்யந்தே நாரேகர்விப்ரதேஷாம் சங்க்யா நா வித்யதே -என்னும் படியான துக்கங்களை -தரும்-நிரயம் பல சூழில் என் –
கொடுக்கும் நரகங்கள் ஒன்றும் சேஷியாதபடி -வந்து வளைத்து கொண்டாலும் என் -இப்படிப்-பட்ட நரகங்களை ஒரு துக்கமாக நினைத்து இருக்கிறேனோ என்று தம்முடைய த்ரட அத்யாவசாயத்தை-அருளிச் செய்தார் ஆய்த்து –
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரந்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலின –என்று எம்பார் அருளிச் செய்தார் இறே –

————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை –
இங்கனம் ஈட்டங்கள் கண்டு நாட்டங்கள் இன்பம் எய்திடல் வேண்டும் என்று இவர் ப்ரார்த்தித்ததைக்-கேட்டவர்கள்-உமக்கு இவ்வளவு தானா தேட்டம் -வீட்டை அடைதல்-முதலிய பேறுகளில் நாட்டம்
இல்லையா -என்று வினவ –
எம்பெருமானார் என்னை ஆட் கொண்டு அருளப் பெற்ற பிறகு இன்பம் அளிக்கும்
வீடு வந்தால் என் -துன்பத்தினை விளைக்கும் நரகம் பல சூழில் என் -இவற்றில்
ஒன்றினையும் மதிக்க வில்லை -நான் என்கிறார் –

பத உரை
தொல் உலகில் -பண்டைய உலகத்தில்
மன்-நித்தியராய்
பல்-எண்ணற்றவராய்
உயிர்கட்கு -ஆத்மாக்களுக்கு
இறையவன்-சேஷியானவன்
மாயன் என -ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரன் என்று
மொழிந்த -நூல் அருளி செய்த
அன்பன் -அன்புடையவரும்
அனகன் -குற்றம் அற்றவருமான
இராமானுசன்-எம்பெருமானார்
என்னை ஆண்டனன் -என்னை அடிமையாக கொண்டு அருளினார்
இனி
இன்பம் தரு -இன்பத்தைக் கொடுக்கின்ற
பெரு வீடு -பெருமை வாய்ந்த மோஷம்
வந்து எய்தில் என் -வந்து கிட்டியதால் என்ன பயன்
எண்ணிறந்த -எண்ணீக்கை இல்லாத
துன்பம் தரு -துன்பத்தை விளைக்கும்
நிரயங்கள் பல -நரகங்கள் பலவும்
சூழில் என் -என்னை வந்து சூழ்ந்து கொண்டதனால் என்ன கெடு

வியாக்யானம் –
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்திலேன் –
வீடு -என்னும் வினையடி -முதல் நீண்டு -வீடு என்னும் பெயர் சொல்லாயிற்று —விடுதலை -அதாவது மோஷம் -என்றபடி –
மோஷமாவது இயல்பான அறிவினை மயக்கும் தன இரு வினைகளின்றும் -அறவே விடுபடுதல் -என்க-
கைவல்யம்-அதாவது ஜீவான்ம தத்துவம் -தன்னந்தனியே -தன்னைத் தானே அனுபவித்து கொண்டு இருக்கும்
நிலையம் -மோஷம் ஆதலின் -அதனை விலக்குதற்காக –பெரு வீடு -என்கிறார் –
ஆத்மானு பூதிரிதி யாகில முக்தி ருக்தா -என்று ஆத்ம அனுபவ ரூபமான கைவல்யத்தை -ஆழ்வான்-முக்தி என்பதை -காண்க .
அணு வடிவனான ஆத்மாவை அனுபவிப்பதால் உண்டான இன்பம் அளவு பட்டதாதலின் அது சிறு வீடாயிற்று –
அளவற்ற தன்மை வாய்ந்த பரம புருஷனை அனுபவிப்பதால் உண்டான ஆனந்தம் அளவிறந்ததாதலின் இது
பெரு வீடாகிறது -ஆத்ம அனுபவம் போலே அளவு படாமையாலே -பரம புருஷார்த்த ரூபமாய் இருக்கும் மோஷம் –
என்று அருளிய எம்பெருமானார் -ஸ்ரீ சூக்தியை அடி ஒற்றி -பெரு வீடு -என்கிறார் –
இனி –பெரு வீடு -என்பது  பேர் இன்ப மயம் அன்றோ -முக்திர் மோஷோ மஹா நந்த -என்று-வீடும் -மோஷமும் -பேர் இன்பமும் ஒரு பொருளானவாகப் படிக்க படுகின்றன -அன்றோ –
அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு-என்று திருவாய் மொழியும் உள்ளதே –
ஆக பெரு வீடு என்பதே அமையுமாய் இருக்க –இன்பம் தரு -என்று அடை மொழி இடுதல் மிகை யாகாதோ -எனின் –
ஆகாது -வீடு -எனபது தன சொல் ஆற்றலால் கன்மன்களால் ஆய எல்லா துன்பங்களின் நின்றும் விடுதலையே குறிக்கும் –
அதனையே ஆதரம் தோற்ற – இன்பம் தருவது -என்று வேறு ஒரு வகையானும் கூறுதல் மிகை யாகாது –ஏகமே கஸ்வ ரூபேண பரேனச நிரூபிதம்-இஷ்ட ப்ராப்திர நிஷ்டச்ய நிவ்ருத்திச் சேதி கீர்த்யதே -என்று
ஒன்றே இயல்பான நிலையினாலும் -மற்று ஒன்றினை முன் இடுவதினாலும் நிரூபிக்கப் பட்டு-இஷ்டமானது அடைதலாகவும் -அநிஷ்டமானது ஒழிதலாகவும் சொல்லப்படுகிறது -என்னும்
-ரகச்யத்ர்ய சாரம் -மூல மந்திர அதிகாரம் -தேசிகன் -ஸ்ரீ சூக்தி -இங்கு அறியத் தக்கது –இங்கு மோஷம் ஒன்றே இன்பம் தருவது என்று இயல்பான நிலையினால் இஷ்டத்தை அடைதலாகவும்-துன்பங்கள் ஒழிதல் என்று மற்று ஒன்றினை முன்னிடுவதினால் -அநிஷ்டம் ஒழி தலாகவும் –கூறப்படுகின்றது என்று உணர்க –
இனி -பாவாந்தரமபாவ -ஒரு பொருளின் இல்லாமை மற்று ஒரு பொருளின் வடிவமாய் இருக்கும் -என்னும்
சித்தாந்தமான கொள்கையின் படி துன்பங்களின் இல்லாமை இன்ப வடிவமாயே இருக்கும் அன்றோ -அதனை
வேறு ஒரு வகையால் பிரித்து கூறுவதனால் பயன் என் -எனின் -கூறுதும் –
இவ் உலகில் பிரதி கூலமான -அநிஷ்டமான -ஒரு பொருள் ஒழி தலால் ஆகிய இல்லாமை -மற்று ஒரு-பிரதி கூலமான பொருள் வடிவமாகவும் -அன்றி -அனுகூலமும் -பிரதி கூலமும் அல்லாத ஒரு பொருளாகவும்
இருத்தல் கூடும் ..மோஷத்திலோ -அங்கன் அல்லாது -இஷ்டம் அல்லாதவை அனைத்தும் முழுதும் ஒழிந்து
விடுகையாலே மேல் முழுக்க இஷ்டமாகவே இருக்கும் -ஆகையால்-முன்னைய துன்பங்களின் உடைய
இஷ்டம் அல்லாமையும் -பின்னைய வைகுண்ட ப்ராப்த்தி முதலியவை களின் இஷ்டமான தன்மையும்
வெளிப்பட தோன்றும்படி -செய்வதற்காகப் பிரித்து வேறு ஒரு வகையால் கூறுகிறார் -என்க –
இனி -ஏனைய ஸ்வர்க்கம் போன்ற பயன்கள் போல் அல்லாது -இப் பெரு வீடு -இன்பமே தருவது –
துன்ப கலப்பு சிறிதும் அற்றது என்னும் கருத்துடன் –இன்பம் தரு பெரு வீடு -என்றார் ஆகவுமாம்-
இனி –அத்வைதிகளின் உடைய மோஷத்தை -விலக்குவதற்காக -இன்பம் தரு-என்று பெரு வீட்டினை –
விசேடித்தத்தாகவுமாம் -அவர்கள் உடைய மதத்தில் இன்பமே பெரு வீடு -இன்பம் தருவது அன்று –
அமுதனார் -இன்பம் தருவதாதலின் விரும்பப்படும் புருஷார்த்தமாக பெரு வீட்டினை காட்டுதலின்
அத்வைதிகளின் உடைய மோஷம் விலக்கு உண்டது -என்க –
முக்தியில் -நான்-என்ற தோற்றமும் இல்லை -அநுபூதி-மாத்ரமே எஞ்சி உள்ளது -என்னும் அத்வைத மத
கொள்கையின் படி பார்க்கில் -சம்சாரத்தில் உள்ள தாப த்ரயம் -மீளாதவாறு -அடியோடு -தீர்ந்து –
சாந்தியை நான் பெற்றவனாக வேணும் -என்கிற வேட்கை-மோஷத்தில் விருப்பம் -எவனுக்கும் ஏற்பட வழி இல்லை –
தனி அனுபூதியே உள்ளது -நான் என்பதே இல்லை -என்பதை அறிந்த பின் நான் சாந்தி பெற்றவனாக வேணும் என்று
முயல மாட்டான் அன்றோ -ஆக முக்தி பெறும் சாதனத்தை கைக் கொள்வார் எவருமே -இருக்க மாட்டார்கள் ஆதலின்
அதனைக் கூறும் வேதாந்த சாஸ்திரம் அனைத்தும் -பிரமாணமாக ஏற்க முடியாததாகி விடும் -என்று
ஸ்ரீ பாஷ்யத்தில் -அத்வைத மோஷம் -புருஷார்த்தம் ஆகாது -எனபது விளக்கப் பட்டு உள்ளமை ஈண்டு உணரத் தக்கது –
ததச்ச அதிகாரி விரஹா தேவ சர்வம் மோஷ சாஸ்திரம் அப்ரமாணம் ஸ்யாத்-எனபது ஸ்ரீ பாஷ்ய சூக்தி –
இதனால் அல்லல்கள் அனைத்தும் தொலைந்து கல்லினைப் போலே சுக துக்கங்கள் இல்லாது இருத்தல் மோஷம்
என்பார் கூற்றும் விலக்கு உண்டதாயிற்று –
எண் நிறந்த —சூழில் என் –
எண்ணிறந்த -எண்ணிக்கையை கடந்த
துன்பம் என்பதனோடு இதனை இயைக்க –
நரகேயானி துக்கா நிபாபஹேதூத் பவாநிச ப்ராப்யந்தே
நாரகைர் விபர தேஷாம் சங்கா நவித்யதே – என்று பாபம் செய்வதினால் உண்டான துக்கங்கள் நரகத்தில்
எவைகள் உண்டோ-உள்ளவர்களினால் அனுபவிக்கவும் -படுகின்றனவோ -அவைகட்கு அந்தணரே -எண்ணிக்கை இல்லை –
என்னும் பிரமாணத்தை அங்கு அடி ஒற்றி -எண்ணிறந்த துன்பம்-என்கிறார் -இனி நெஞ்சினால் எண்ணிப் பார்க்கவும்
முடியாத என்னலுமாம்-நிரயம் -என்றாலே துன்பம் -தருதல் தானே தோற்றும் ஆயினும் -துன்பம் தரு –
என்று விசேடித்து -இன்பத்தின் கலப்பு சிறிதும் அற்று -பேர் இன்பத்துக்கு எதிர் தட்டை துன்ப மயமானது
என்னும் கருத்தினால் என்க -துன்பமே தரும் நிரயம்-என்றது ஆயிற்று –
சூழின் -என்றமையால்-தப்ப ஒண்ணாது வளைத்துக் கொண்டு உள்ளமை -தோற்றுகிறது –
தொல் உலகில் –மொழிந்த
இதனால் ஸ்ரீ பாஷ்யத்தின் சாரத்தை சுருங்க சொல்லுகிறார் -அமுதனார்
தொல் உலகு -என்பதனால் உலகு அநாதி என்று உணர்த்தப்படுகிறது –
ஆற்று ஒழுக்கு போலே தொடர்ந்து வருவது என்றபடி –
பிரகிருதி தத்துவத்தின் மாறுபாடாக ஆவதும் -அழிவதுமாய் -தொடர்ந்து படைக்கப்பட்டு
பிரவாஹம் போலே வருகின்ற இவ் உலகிலே -என்றபடி –
இதனால் மாறுபடும் இயல்பினதாய் -இறைவனுக்கு உரிய அசித் தத்துவம் கூறப்பட்டது –மன் பல் உயிர் -என்பதனால் சித் தத்துவம் கூறப்படுகிறது
சித் தத்துவம் மாறு படாத ஸ்வரூபமாய் இருத்தலின் -நித்தியமாய் -அறிவுடையதாய்-அணு பரிமாணமாய் –
இருப்பது –மன் -என்பதனால்-உயிரினுடைய ஸ்வரூபம் நித்யம் -என்று கூறப்படுகிறது –பல் உயிர் கள் என்பதனால்-சித் எனப்படும் ஜீவாத்மாக்கள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டு –பலவாய் இருத்தல்-புலப்படுத்தப் படுகிறது -உயிர் கள் என்னும் பன்மையினாலே -அவை ஒன்றுக்கு ஓன்று வேறு பட்டமை-புலப்ப்படுமாயினும் -பல -என்று மிகை பட கூறியது -ஆன்ம தத்துவம் உண்மையில் ஒன்றே -தேகங்கள் வேறு பட்டு-இருப்பது பற்றி அவற்றில் உள்ள ஆன்ம தத்துவம் வேறு பட்டதாக காணப்படுகிறது -என்கிற -ஏகாத்ம வாதிகளின்-கொள்கையை உதறித் தள்ளுகிறது –
நித்யர்களுள் நித்யனாயும்-சேதனர்களுள் சேதனாயும்-பலர் உடைய விருப்பத்தை ஒருவனாய் இருந்து-நிறை வேற்றுகிறான் -என்று வேதத்தில் நித்யரகவும் பலராகவும் ஜீவாத்மாக்கள் ஓதப்பட்டு உள்ளதை-அடி ஒற்றி -மன் பல் உயிர் கள்-என்றார் –இந்த சுருதி ஆன்மாக்கள் உடைய நித்யத்வம் பஹூத்வம் காம விதானம் ஆக
இம் மூன்றும் வேறு ஒன்றினால் அறியப்படாமையால் -நித்தியர்களான பல சேதனருக்கு
காம விதானத்தை சேர விதிப்பதாக ஸ்ருத பிரகாசிகாகாரர் வியாக்யானம் செய்து இருப்பது-இங்கு அறிய தக்கது -ஜீவர்கள் உடைய பேதம் உலகில் காணப் படுதலின் -அறியப் பட்டதே ஆயினும் –பரிசுத்தமான அதாவது பிராகிருத தேக சம்பந்தம் அற்ற ஜீவாத்மாக்களின் பேதம் அறியப் படாமையின் –
அதனையும் சேர விதிப்பதே -இந்த ஸ்ருதியின் நோக்கம் என்று உணர்க –
இறைவன் -சேஷி -அதாவது யாவற்றையும் தான் விருப்பபடி பயன் படுத்த கொள்ளும்
உரிமை வாய்ந்தவன் -இதனால் ஈஸ்வர தத்வம் பேசப்பட்டது
ஆக தத்வ த்ரயமும் பேசப்பட்டது –இவைகளில் அசித்தும் சித்தும் உரிமைப்பட்டன -மாயன்-உரியவன் –
மாயன்-ஆச்சர்ய படத் தக்க குணம் செய்கை இவைகளை உடையவன் –
தன எத்தகைய மாறு பாடும் இன்றி -பிரியாது -தன்னோடு இணைந்த –
பிரகிருதியை -உலகமாக மாறு படுத்தி -பிரமன் முதல் மன் பல் உயிர் கட்கும்
உடையவனாய் தான் எதனிலும் ஒட்டு அற்றவனாய் இருப்பது இறைவன் பால் உள்ள ஆச்சர்யம்-என்க
உயிர் அனைத்துக்கும் சர்வேஸ்வரன் சேஷி என்பதையே ஸ்ரீ பாஷ்யம் சாரமாக உணர்த்துகிறது-என்பர் ஸ்ரீ பாஷ்யம் வல்லோர் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவாபரம்
பரஸ்ய ப்ரக்மணோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே -என்று
எவ்விடத்தில் பரப்ரமம் தெளிவாய் சேஷி-சேஷனை உடையவன்-உரியவன்-ஆக காணப்படுகிறதோ –
அந்த இரண்டாவது ஸ்ரீ ரங்க விமானம் போன்ற பிரணவ ஆகாரமான ஸ்ரீ பாஷ்யத்தை வந்தனை செய்கிறேன்
என்னும் ஸ்ருதப்ரகாசிகாகாரர் ஸ்ரீ சூக்தி இங்கே அனுசந்திக்க தக்கது –
ஸ்ரீ ரங்க விமானம் பிரணவ விமானம் –ஸ்ரீ பாஷ்யமும் பிரணவ வடிவமே –
பிரணவம் அ உ ம என்னும் மூன்று எழுத்துகளால் ஆகியது –
அ காரத்தால் சொல்லப்படும் சர்வேஸ்வரனுக்கே
ம காரத்தால் கூறப்ப்படும்ஜீவாத்மா சேஷப்பட்டது –
உயிர் இனங்களுக்கு சேஷி சர்வேஸ்வரன் எனபது பிரணவத்தின் பொருள் –
ஸ்ரீ பாஷ்யமும் -அ உ ம என்னும் எழுத்துக்களை முறையே
முதலிலும் -இடையிலும் -கடையிலும் -கொண்டு அமைக்கப் பட்டது –
அகில புவன -என்று முதலில் அ காரத்தில் தொடங்கியும் –
இடையில் மூன்றாம் அத்யாயத்தில் -மூன்றாம் பாதத்தில் -உக்தம் -என்னும் சொல்லில் உ காரியத்தை அமைத்தும்
கடையில் சமஞ்ஜசம் என்று ம காரத்தில் முடித்தும் -ஸ்ரீ பாஷ்ய காரர் தம் நூல் பிரணவ அர்த்தத்தை உட கொண்டது
என்பதை ஸூ சகமாக காட்டி இருப்பது இங்கு அறிய தக்கது –
அன்பன் அனகன் –
இங்கனம் ஸ்ரீ பாஷ்யம் அருளி செய்து மாயன் மன் பல் உயிர் கட்கு இறைவன் என்று பிரணவ அர்த்தத்தை
உபதேசித்தது அன்பின் செயலே அன்றி கியாதி லாப பூஜைகளைக் கோரிச் செய்த செயல் அன்று -என்கிறார்
பயன் கருதி உபதேசிப்பது பாபம் ஆதலின் அப்பாபம் அற்றவன் என்கிறார் –
அனகன் -அகம்-பாபம் அனகன் -பாபம் அற்றவன் -வட சொல்
என்னை ஆண்டனனே
எம்பெருமானார் என்னை அடிமை கொண்டதற்கு பிறகு வந்து எய்தும் பெரு வீட்டையும்
சூழும் பல நிரயங்களையும் பொருள் படுத்த மாட்டேன் என்று தம் மன உறுதியை வெளி இட்டபடி –
நம் ஆழ்வார் எல்லாப் பொருள்களும் இறைவன் இட்ட வழக்கு என்கிற ஞானம் பிறந்த பிறகு-பெருவீடு பெற்றில் என் -நரகம் எய்தில் என் -என்று தம் மன உறுதியை வெளி இட்டாலும் -நரகம் ஆகிய-சம்சாரம் இந்த ஞானத்துக்கு விரோதி ஆகையாலே இங்கு இருக்க அஞ்சுகின்றேன் -பரம பதத்துக்கு கொண்டு போக-வேணும் என்று இறைவனை இரக்கிறார் –
யானும் நீ தானே ஆவதோ மெய்யே-அரு நரகு-அவையும் நீ -ஆனால்
வான் உயர் இன்பம் எய்தில் என் -மற்றை-நரகமே எய்தில் என் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும்-அஞ்சுவன் நரகம் நான் அடைதல்
வான் உயர் இன்பம்மன்னி வீற்று இருந்தாய்-அருளு நின் தாள்களை எனக்கே -8 1-9 – – எனபது அவர் அருளிய பாசுரம் –
அவருடைய உறுதிப்பாட்டினும் அமுதனாருடைய உறுதிப்பாடு அதிசயிக்கத் தக்கதாக உள்ளது –
இவர் பேரனான பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருவரங்கக் கலம்பகத்திலே –
நான் அந்த வைகுந்த நாடு எய்தி வாழில் என் ஞாலத்து அன்றி
ஈனந்த வாத நிரயத்து வீழில் என் யான் அடைந்தேன்
கோனந்தன் மைந்தனை நான்முகன் தந்தையைக் கோயிலச்சு
தானந்தனை எனக்காரா வமுதை அரங்கனையே -என்றுபாடிய பாடலை இதனோடு ஒப்பிடுக –

————————————————————————-

-அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தல்
பரமபத ப்ராப்தி வரை அனைத்தும் அபேஷிதங்கள் அமுதனாருக்கு இனி மேல் –
எம்பெருமானார் என்னை அடிமை கொண்டு அருள பெற்ற பின்பு
.முன்பு ஈட்டங்கள் கிடைத்தது நிலை நிற்க பிராத்தித்தார்..கூடும் கொலோ என்று பிரார்த்தித்த பின்பு
. உடனே .நடக்கும்.நடந்து விடும் என்ற மகா விசுவாசம்..
கௌசல்யை இடம் 14 வருஷம் 14 நிமிஷங்களாக நினை வந்து விடுவேன் என்று ஒரு வார்த்தை பெருமாள் அருளியதும் ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தாள்
.. அணி அழுந்தூருக்கு தூது விட்டு உடனே அடுத்து செங்கால மட நாரையை திரு கண்ண புரம் தூது விட்டாரே–அறிவிப்பே போதும் –
..மானச சாஷாத்காரம் ..கிருபை தம் பேர் விழுந்தது அமுதனாருக்கு என்று கொண்டு அடுத்த பாசுரம் அருளுகிறார்..
29 பாசுரத்துக்கும் 30 பாசுரத்துக்கும் இடையில் பாசுரம் இல்லை என்பதாலே கண்டு கொள்ளலாம்.
.வண் துவாராபதி மன்னனை ஏத்துமின்–தொழுது ஆடி தூ மணி வண்ணன் -சொல்லாமலே எப்படி எழுந்தாள் ..
திரு நாமம் சொல்லுங்கள் என்று சொன்ன உடனே -எழுந்தாள்-செவி பட்டதே .
/ஆண்டனன்-கை கொண்ட பின்-அடிமை ஆக்கி /
அடியார்க்கு ஆட் பட்ட வைத்ததால் ஆண்டனனே தனக்கு என்றால் அருள் புரிந்தான் என்பர்..
/எடுத்து இஷ்ட விநியோகம்..
/எய்து தல் /ஒரு தடவைதான் -பரம பதம்..ஆனால் நரகம் சூழில் என்– பல சூழ்ந்து சூழ்ந்து வரும் என்பதால்
–அன்பால்- ப்ரீதியால் /ஸ்ரீ பாஷ்யம் அருளினார்..
-க்யாதி லாபாதிகளில் விருப்பம் இன்றி .
. அனகன் -குற்றம் இல்லாதவன் ../
ஆழ்வாரின் அவா -தான் –மைத்ரேயர்
அவா உந்த உந்த மேலே பாசுரம் அருளினார்/
அமுதனார் அடியவர் குழாங்களில் அருளி செய்ததால்/
இப்படி பிரார்த்தித்த இத்தை கேட்டவர்கள் -பரம பதம் கேட்க போகுரீர் என்று சொன்னதாக கொண்டு
/சுகம் துக்கம் சமமாக கொள்ள உபதேசித்தான் கீதாசார்யன்
/அனுஷ்டித்து காட்டினார் ஸ்வாமி/
திருவடி பெற்றால் தானே இந்த நிலைமை கிட்டும்..
/தொல்-பழமையான உலகில்..பிரவாகம் போல நித்யம்-உளன் சுடர் மிகு சுருதியுள்
-அனுமானம்பிரத்யட்ஷம் பிரமாணங்கள் ஆகாதே –விளக்கில் திரி எண்ணெய் குறையும்..சுடர் ஒன்றே போல் தோற்றினாலும்
பல் ஈரில -உயிர் களுக்கு இறையவன் -சர்வ சேஷி மாயன்-
ஆஸ்ரித சேஷ்டிதன்-பெயரை சொல்ல வில்லை-பிரக்ருதியை இச்சை படி ஆட்டி விக்கிறவன் –அவனை பற்றி
..அன்பு ஒன்றாலே ஸ்ரீ பாஷ்யம் அருளி
–அனகன்-பாப சம்பந்தம் இன்றி -அகம் இல்லாதவர்..அனகர்
..இவன் தனிமை தீர்க்க அன்று அவன் தனிமை தீர்க்க அன்று ஆயனுக்கு மங்களாசாசனம் பண்ண
-வாழாட் பட்டு— ஏடு நிலத்தில் முன்னம் –அண்ட குல உள்ள அனைவரையும் கூப்பிடாரே அது போல-
..க்யாதி லாப பூஜைகளுக்கு -அன்றி
-அன்பால் -தாய்-சீதை- மகனுக்கும் தம்பி தனயன் மகன் -பிரகலாதன் -இவர் ஆழ்வார் அடி பணிந்தார் -ஸ்வாமி
ஆகியவருக்குமே இந்த குணம் –../இன்பம் தரு பெரு வீடு- மோஷம் வீடு-கைவல்யம்/
பெரு வீடு -பரம புருஷார்த்த லஷண மோஷம்–வழுவிலா அடிமை செய்வதே -குண அனுபவம் பண்ணி
-அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யமே -புருஷார்த்தம் ..
அசந்கேய துக்க ஆவகம் -நிரயம்=நரகம் -பலவும் வந்தால் என்
-தப்பிக்க ஒண்ணாத படி .-இவருடைய திரு பேரனார்- பிள்ளை பெருமாள் ஐயங்கார் – அருளியது போலே
நான் அந்த வைகுண்ட நாடு எய்தி வாழில் என்.. நிரயம் என் கோன் அனந்தன் மைந்தனை நான் முகன் தந்தையை
..கோவில் அச்சுதனை ஆனந்தனை ஆரா அமுதை அரங்கனை அடைந்த பின்
/ஆழ்வாரோ-இன்பம் எய்த்தில்ன் மற்றை நரகம் எய்தில் என்-எனினும்
..அஞ்சுவன் நரகம் அடைதல் ..இது வித்யாசம்
பிரதம பர்வ நிஷ்ட்டையருக்கும் சரம பர்வ நிஷ்ட்டையருக்கும் .
.திண்ணம் இவர்களுக்கு ..
தொல் உலகில் மன் பல் உயிர் களுக்கு
-சுழல் -கர்மாவால் -அவித்யை கர்ம வாசனை ருசி பிரகிருதி சம்பந்தம் -இவற்றால்
அநந்த கிலேசபாஜனங்கள் -அடி பற்றி மொத்தமாக தீர்க்கணும்
— இல்லை என்றால் சம்சாரத்தில் நித்தியராய்-இருக்கிறார்கள்..–நியந்து – உள்ளே தாங்க- வெளி வியாபித்து -இறையவன்-
வகுத்த சேஷி –மாயன் என மொழிந்தார்./அவதாரங்களே மாயன்/கோபம் பிரசாதம் நரத்வம் மிருகம் கலந்த மாயம் .
.சரபேஸ்வர் பிரத்யங்கரா தேவி கதைகள் -ராகு கால பூஜை -இவற்றை உலவ விட்ட மாயம்..
அலகிலா விளை யாட்டு உடை ..ஆவிர்பாவ -பிறவாதவன் பிறந்தவன்
உண்ணும் குலத்தில் பிறந்தாயே உண்ணாதவன்
-இரண்டு பஷிகள் ஒரு மரத்தில் ஓன்று ஆத்மா உண்டு கர்மம் அனுபவித்து உள்ள
மற்று ஓன்று -பரமாத்மா கர்மம் தீண்டாமல் இருக்கும் –
/ஜடாயு மோஷ பிரதானம்- நம்பிள்ளை சஷ் சிஷ்யர் இடம் கேட்டு அறிந்த வித்வான்
அரசன் இடம்சொல்லி பரிசு பெற்று பின்பு நம் பிள்ளை திருவடிகளில் சேர்ந்த வ்ருத்தாந்தம்
-சத்யேன லோகன் ஜயதி- தானம் கொடுத்து தீனார்களை ஜெயித்தான்
சத்ய வாக்யத்தால் லோகங்களை ஜெயித்தவன். மோஷ பிரதன்
மோஷம் கொடுத்தவன்..ஆழ்வானும்
-சீதா நஷ்டா வன வாசா ஜடாயு மோட்ஷம் போக வார்த்தை அருளினாயே
சேது பந்தன சபல சித்தம் குரங்கு கொண்டு /கதம்பம் மரங்களுக்கு மோட்ஷம் கொடுத்தாய்
குன்றினால் குடை கவித்ததும்-போல மாயங்கள் ..
ஸ்ரீ பாஷ்யம் -தொல் உலகு அசித் தத்வம் சொல்லி .
. மன் பல் உயிர் கள்-பல் சப்தம் எதற்கு-
சித் தத்வம்..ஆத்மாக்கள் பல
..உபாதி பட்டு பிரதி பலிக்கும் என்பர் சங்கர பாஸ்கர
.உபாதி தேகமும் பொய் என்பர் சங்கர /தேக பேததாலே ஆத்மா பேதம் என்பர் பாஸ்கர –
பல் தேக பேதத்தால் இல்லை என்று காட்ட..நித்யா நித்யானாம் ஏகம் -வாக்கியம்.
.இறையவன்-ஈஸ்வர தத்வ -சேஷித்வம்-பிர பத்தியே பிரவணாகாரம் பாஷ்யம் ரெங்க- சேஷித்வம் குட வீஷித்யே
அமலன் உகந்த மந்தி
–ஸ்ரீ பாஷ்யத்தில் . அகில புவன ஆரம்பித்து மகரதால் முடித்து .குண உப சம்கார பாதம்-உபாசனத்துக்கு 3-3 உ காரம் .-வைத்தார்
ப்ரீதி உந்த அருளியதால் அனகன் .என்னை அதிகாரம் இல்லாத என்னை -ஆண்டனனே
-பரக்கத ச்வீகரமாய் -உய்வித்தார்..இது கிட்டிய பின்-
இன்பம் தரு பெரு வீடு-விசேஷணம் எதற்கு?–
. நலம் அந்தம் இல்லாதோர் நாடு..விடுதலை -வினை அடி வீடு -கட்டு பட்டு இருந்தோம்-முக்தி-அந்தமில் பேர் இன்பம்.-
/அதிசய ஆக்லாத /அபரிமித .வீடு-கைவல்யம் பெரு வீடு-
தனி மா தெய்வம் .நனி மா கலவி இன்பம்…மா பகவத் அனுபவம்
.இதனால் பெரு வீடு..அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி
.ஒன்றை முன் இட்டு இன் ஓன்று /பரித்யஜ்ய சரணம் விரஜ /நம நாராயண போல ..
ஒன்றின் இல்லாமை மற்றதில் உள்ளமை
..பிறக்கும் பொழுதே போகும் போன பின்பு பிறக்கும்
…கடாவச்தை மண் நாசம் குடம் பிறப்பு அதன் நாசம் மண் அவஸ்தைக்கு பிறப்பு.
.ஒன்றின் அழிவில் மற்று ஒன்றின் பிறப்பு..இன்பம்
தரு-அநிஷ்டம் தொலைந்த பின்பு -இஷ்டமும் அநிஷ்டம் இல்லாத நிலை.
.அஜீர்ணம் போனாலும் சக்கரை பொங்கல் கிடைக்கா விடில்..வெவ்வேறு தானே
துன்பம் தரு -அனுபவிக்கும் பொழுது பொய் இன்பம் வரும். இது நச புன ஆவர்ததே என்பதால்
இத்தால் அத்வைதம் மறுக்கிறார் இன்பம் தரு.என்ற அடை மொழியில்
இன்பமே பெரு வீடு அத்வைதம் ஞானம் மாத்ரமே மோஷம்..
இன்பம் தரு பெருவீடு. தரு-சப்தம் தான் விசிஷ்டாத்வைதம்
நான் தத்வம் பொய் அனுபவமே மோஷம்
தன்னை தானே அழித்து மோஷம் பெற வர மாட்டான்
சொல்லி கொடுக்கவும் ஆள் வர மாட்டான்
பிரமாணங்கள் பொய் ஆகும்.
அதனால் இன்பம் தரு பெரு வீடு.
.சுகபாவைகையே லஷணம்- துன்பம் திரும்பி வராது
-லீலா -சாஷி பிரமம் கண்டனம் /அகில புவன
..சுருதி சிரச-பல நிரசனம் பண்ணி ஸ்ரீநிவாசே
-விசேஷ வாசகம் பக்தி ரூப .ஒரே ஸ்லோகத்தாலே
-மங்கள ஸ்லோகத்திலே அர்த்தம் எல்லாம் கொடுத்த அன்பன்
அனகன் –எண் நிறைந்த துக்கம்-நரகங்கள்- நெஞ்சினால் நினைக்க முடியாத–பல சூழில் என்–திட அத்யாவசியம் அருளுகிறார்
..சத்ய லோகமே புல்லுக்கு சமம் ராமானுஜர் திருவடிபெற்றவனுக்கு –எம்பார் ..

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: