அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-26-திக்குற்ற கீர்த்தி இராமானுசனை-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை –
இருபத்தாறாம் பாட்டு -அவதாரிகை
எம்பெருமானார் விஷயீ கரித்து அருளின பின்பு -அவருடைய குணங்களே தமக்கு தாரக போஷாக போக்யங்கள்
ஆயிற்று என்றார் கீழ் -அவ்வளவு அன்றிக்கே -அவர் திருவடிகளுக்குப்   அனந்யார்ஹராய் இருக்கும்
மகா ப்ரபாவரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய பூர்வ அவஸ்தைகளில் ஓர் ஒன்றே என்னை எழுதிக் கொள்ளா-நின்றது -என்கிறார் –

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே  –26- –

வியாக்யானம் –
த்விஷந்த பாபக்ருத்யாம்-என்கிறபடி பிறரதாய்-அசல் பிளந்து ஏறிட வந்தது அன்றிக்கே -என்னாலே செய்யப்பட்ட
கர்மம் ஆகிற நிலை நின்ற தோஷத்தை போக்கி-இவன் விரோதியைப் போக்க பெற்றோம் -என்னும்
ப்ரீதியாலே தாம் உஜ்ஜ்வலரான பரம உதாரராய் –
திக்குகள் தோறும் வ்யப்தையான குணவத்தாப்ரதையை வுடையராய் இருக்கிற எம்பெருமானாரை-
ராமா நுஜபதச்சாயா -ஸ்ரீ ரங்க ராஜஸ்த்வம்- -1 2- -என்கிறபடியே
பதாச்சாயாதிகள் போலே அப்ருதக் சித்தமாம் படி பொருந்தி இருக்கும் விலஷணர் ஆனவர்கள்
யாதொரு குற்றத்தை வுடையவராகவும் யாதொரு பிறப்பை வுடையராகவும் யாதொரு வருத்தத்தை வுடையராகவும்
முன்பு நின்றார்கள்-அந்தக் குற்றமும் -அந்தப்பிறப்பும்-அந்த இயல்வுமே –
சிறுமா மனிசர் -திரு வாய் மொழி – 8-10 3- – என்னலாம் படி மகா ப்ரபாவரான இவர்கள் நிஸ்க்ருஷ்ட
ஜன்மாதிகளைப் பரிக்ரஹித்து  -தாத்ருசரான நம் போல்வாரும் -இவ்விஷய சமாஸ்ரயண அர்ஹர் –
என்னும் அத்தை தர்சிப்பைக்காக என்று நினைத்து இருக்கிற நம்மை அனுசந்திக்கும் தோறும்
எழுதிக் கொள்ளா நின்றது -இவ்வளவான பிரதிபத்தி பிறந்தால் இறே ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல்
சஜாதீய பிரதிபத்தி குலைந்தது ஆவது
அதவா
2-அவர்கள் விஷயத்தில் அதிமாத்ரா ப்ரவணரான நம்மை என்னவுமாம்
அப்படி இருக்கும் இறே ப்ராவண்ய அதிசயம்
அன்றிக்கே
3-எக்குற்றவாளர் எது பிறப்பு எது இயல்வாக நின்றோர் -என்றது
அஹங்கார ஹேதுவான ஜன்ம வருத்த ஞானங்களால் உண்டான ஸ்வ நிகர்ஷத்தை அனுசந்தித்து
நின்ற நிலையாய் -அவ்வவ ஸ்வபா வங்களே என்னை எழுதிக் கொள்ளா நின்றது என்கிறார் -என்னவுமாம் –
மெய்யாவது -நிலை நிற்கும் அது-நிலை நிற்கை யாவது -அனுபவ விநாச்யம் ஆதல்-பிராயச்சித்த விநாச்யம் ஆதல் – அன்றிக்கே இருக்கை
என் செய்வினையாம் மெய்க்குற்றம் நீக்கி என்றது -மத்க்ருத கர்மம் அடியாக உண்டான தேக சம்பந்த
ப்ரயுக்த அஹங்காராதி தோஷங்களை போக்கி என்னவுமாம் -அப்போதைக்கு வினையாம் -என்றது –
வினையாலே உண்டான என்றபடி-ஜன்ம வ்ருத்தங்களோடே சகபடிக்கையாலே –எக்குற்றவாளர் -என்கிற இடத்தில்
குற்றம் என்றது ஞானத்தில் குறையாக கடவது –
இயல்வு -வ்ருத்தம்–

-26-வைபவம் உண்டே -தனிக் கோல் செய்யும் வீவில் சீர் –விலக்ஷண பாசுரம் இது -அத்புத பாசுரம் -ததீயர் வைபவம் சொல்லும் பாசுரம் – பதச்சாயா -நிழல் -தண்ட பவித்ரங்கள் -உள்ளங்கை நாயனார் -குற்றம் உள்ளோரும் எம்பெருமானை பற்றலாம் என்று காட்டவே எம்பார் -செயல்பாடு -நிஸ்க்ருஷ்ட ஜென்மம் வ்ருத்தம் ஏறிட்டுக் கொண்டு -நமக்கு காட்டி அருளினார் -என்ற நினைவு வேண்டுமே -பாகவத அபசாரம் பல விதம் -ஓன்று அவர்கள் பக்கல் ஜென்ம நிரூபணம் –
1-குற்றம் இருப்பதால் தானே நம் ஆச்சார்யர் உடையவர் திருவடிகளைக் காட்டு ஆட்க்கொண்டார்கள் -த்யாஜ்ய தேக வியாமோஹம் -இந்த பிறப்பு தானே திருவடி பெற பெற்றது என்பதால் என்றுமாம் -அதுவே நம்மை ஆட்க்கொள்ளும் என்றுமாம் -2-உறுதி விசுவாசம் பிறப்பித்தது இந்த குற்றம் இந்த பிறப்பு இந்த இயல்புகள் தானே -என்றுமாம்-3-உயர்ந்த ஜென்மத்தில் பிறந்து -நாமும் அவர் ஜென்மம் -நினைப்பதே -குற்றம் -தானே -சேர்த்து பார்த்து -நாம் விஸ்வசிக்க பிறந்தார் -என்றுமாம்
4-கண் மூடித்தனமாக ப்ராவண்யம் கொண்ட நம்மை உணர்த்த என்றுமாம்
5-குலம் குடி அனுஷ்டானம் மோக்ஷத்துக்கு ஹேது என்று நினைத்து -அஹங்காரம் போன பின்பு -நல்ல வேளை தாழ்ந்த ஞானம் -தாழ்ந்த குலம் என்கிற நல்லோர் ஞானம் பிறந்த பின்பு நின்ற நிலை என்றுமாம் -6-சரீர சம்பந்தத்தால் வந்த குற்றம் இருந்தாலும் என்றுமாம் -7-தாமரை இலை தண்ணீர் போலே ஒட்டு அற்று இருப்பார்களே -என்றுமாம் -8-அவர்கள் இவற்றால் பட்ட ஸ்ரமம் நம்மை ஆட் கொள்ளும் என்றுமாம் –
நிர்வேதம் வெறுப்பு தானே முதல் படி –
ஏய்ந்த பெரும் கீர்த்தி -திக்குற்ற கீர்த்தி -பாட்டு தோறும் கீர்த்தியும் திருவடியும் விடாதவாறு அமுதனார் -ஆஸ்ரயித்த பின்பு புண்ணியத்துக்கு அஞ்சுமவன் பாபம் பண்ணான் இ றே -ஆக பூர்வாகம் சரணாகதி பண்ணின பின்பு மாய்ந்த -உத்தரவாதம் செய்யான் -இதனால் அவர்களை சஜாதீய புத்தி கொள்ளக் கூடாது என்று சொன்னபடி –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை
-மேகம் போலே உதாரரான எம்பெருமானார் தம்மை விஷயீ கரித்த பின்பு அவருடைய
கல்யாண குணங்கள் -தமக்கு தாரகமாய் இருந்த படியை கீழ்ப் பாட்டில் சொல்லி -இப்பாட்டிலே –
அவர்க்கு அனந்யார்ஹராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஜன்ம வ்ருத்தாதிகளிலே
ஓர் ஒன்றே அடியேனை எழுதி கொள்ளா நின்றது என்கிறார் .

வியாக்யானம் –
என் செய் வினையாம் –
த்விஷன் தாபபக்ர்த்யாம் -என்கிறபடி அசல் பிளந்து ஏறிட வந்தது அன்றிக்கே –
என்னால் செய்யப்பட அக்ர்த்தி கரணாதி ரூபமாய் -பிராயசித்தாதிகளாலே நிவர்தியாதே -நாபுக்தம் ஷீய தி கர்ம கல்ப கோடி சதைரபி –
என்னும் படியான கர்மம் ஆகிற –
மெய்க்குற்றம் –
நிலை நின்ற தோஷம் -வாசா மகோசர மகாகுண தேசிகா க்ரய-கூராதிநாத கதிதா கில நைச்ய பாத்ரம் எஷோஹமேவ நபு நர்ஜிக தீத்ர்ச -என்றும்
-பூர்வைஸ் ஸ்வ நைச்ய மனுசம்ஹித மார்ய வைர் மாமேவ வீஷ்ய மஹாதாநந ததஸ்தி தோஷம் –
நைச்யந்தவிதம் சடரிபோ மமத்ச்யமேவ மத்தபரோ நம விநோயத ஆவிரஸ்தி-யாவச்சயச்ச துரிதம் சகலச்யஜந்தோ
தாவச்சதத் தததி கஞ்சம மாஸ்தி சத்யம் -என்றும் சொல்லுகிற படி ப்ரத்யயம் பண்ணி சொல்கிறார் .
மெய்யாவது -நிலை நிற்குமது -இதி நிலை நிற்கையாவது அனுபவ விநாச்யமாதல் -பிராயச்சித்த வினாச்யம் ஆதல்
இன்றிக்கே இருக்கை -இப்படிப் பட்ட பாபத்தை நீக்கி -வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்று
கண்டிலமால் -என்கிறபடி போன இடம் தெரியாதபடி சவாசனமாகப் போக்கி
.-விளங்கிய –அத்தாலே அத்யுஜ்வலமான –
இவன்விரோதியைப் போக்க பெற்றோமே என்னும் பிரீதியாலே காணும் அவர் தாம் உஜ்வலரானது
-மேகத்தை –
வர்ஷூ-கவலாஹகம் போலே பரமோதாரராய் –மேகத்தை -என்றது முற்று உவமை –திக்குற்ற கீர்த்தி -ஏய்ந்த பெரும் கீர்த்தி –
என்கிற படி அஷ்ட திக்கிலும் வியாபித்து இருக்கிற குணவத்தா பிரதையை உடையரான
-இராமானுசனை -எம்பெருமானாரை –
மேவும் –
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே -என்கிறபடி -ராமானுஜச்ய சரணவ் சரணம் -என்னும்படி
அவருடைய திருவடிகளையே பிராப்யமாகவும் பிராபகமாகவும் அத்யவசித்து இருக்கிற
நல்லோர் –
நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் -என்கிறபடி -அநந்ய பிரயோஜனரான மகாத்மாக்கள் –
அன்றிக்கே –மேவும் நல்லோர் -ராமானுஜ பதச்சாயா -என்கிறபடி பதாசாயிகள் போல அப்ருதக் சித்தமாம்படி
பொருந்தி இருக்கும் விலஷணமானவர்கள்-என்னவுமாம்
-எக் குற்றவாளர் எது பிறப்பு எது இயல்வாக நின்றோர் –
அந்த மகாத்மாக்கள் ஆஸ்ரயண பூர்வ காலத்தில் -யாதோர் ஞான சங்கோசம் ஆகிற குற்றத்தை உடையாராகவும் –
யாதொரு உத்கர்ஷ்ட அபகர்ஷ்ட ஜாதியை உடையராகவும் -யாதொரு நிஷித்த அனுஷ்டானம் ஆகிற வர்த்தியை
உடையாராகவும் நின்றார்கள்-குற்றம் -ஞான சங்கோசம் -இயல்வு -வ்ர்த்தம்-அவர்களுடைய -அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வு –
இவை எல்லாம் அவ்யவதாநேன ஆஸ்ரயண பூர்வ பாவிகள் ஆகையாலும் -அந்த சரீரத்தோடு தானே ஆஸ்ரயணத்தை
பண்ணினார்கள் ஆகையாலும்
-சிறு மா மனிசர்-என்னலாம் படி மகா ப்ரபாவரான இவர்களுடைய பூர்வ தசாவஸ்தித
விசேஷங்கள் ஆன இவையே –நம்மை ஆட் கொள்ளுமே -1–இவ்வளவு பிரதி கூலித்து போன நம்மையும் தாச பூதராய்
க்ரயவிக்ரயார்ஹராம்படி எழுதிக் கொள்ளக் கடவன் -அன்றிக்கே-2–நம்மை ஆட் கொள்ளுமே -இப்படி மக ப்ரபாவரான
இவர்கள் நிக்ர்ஷ்ட ஜன்மாதிகளை பரிக்ரஹித்து  தாதர்சரான நம் போல்வாரும் இவ் விஷய சமாச்ரயண அர்ஹர் –
என்னும் இடத்தை தர்சிப்பைக்காகா என்று நினைத்து இருக்கிற நம்மை அனுசந்திக்கும் தோறும் எழுதிக் கொள்ளா
நின்ற -என்னவுமாம் -துராசாரோபி சர்வாசீ க்ர்தக்னோ நாஸ்திகபுரா-சமாஸ்ரயே தாதி தேவ ச்ரத்தயா சரணம் யதி-
நிர்தோஷம் வித்திதம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன-என்கிற வசனம் இவ்விடத்து பிரமாணம் –
அப்போது ஆதி தேவ சப்தத்தாலே -பிரதம ஆசார்யன் என்று தோற்றினாலும் -அந்த சர்வேஸ்வரனே சேஷி
என்றபடியாலே – உபதேசித்து உபக்ரமித்தவர் ஆகையாலே –ஆதி தேவ சப்தமும் -எம்பெருமானாரை சொல்லும்
என்ன குறை இல்லை -அன்றிகே எம்பெருமானாருக்கு அனந்யார்ஹமான மகாத்மாக்கள்-3- எந்த வர்ணம்
உடையார் ஆகிலும் -எந்த வ்ருத்தம் உடையார் ஆகிலும் -எந்த ஸவாபம் உடையார் ஆகிலும் -அந்த வர்ண வ்ருத்த
ஸ்வபாவங்கள் -இவையே நமக்கு உதேச்யமாய் இருக்கும் -என்னவுமாம் -அந்த மகாத்மாக்கள் எந்த வர்ணத்தில்
ஜனித்தாலும் -பிரகிருதி சம்பந்தாயத்தமாய்க் கொண்டு -அதுக்கு அநு ரூபங்களான ஸ்வபாவ வ்ர்தங்களும்
உண்டாய் இருக்கும் இறே குற்றங்களே இல்லை யாகிலும் -மணி தர்பணாதி ஸ்வ ச்சத்த்ரவ்யன்களிலே எதிர் இருந்த
பதார்த்தங்கள் எல்லாம் தோற்றுமா போலே -நிர்மலரான அவர்களைக் கொண்டு தம்தாமுடைய ஸ்வபாவ
வ்ர்த்தங்களை அவர்கள் பக்கலிலே ஏறிட்டுக் கொண்டு அஜ்ஞராய் பிரமித்து இருப்பார் இறே சிலர் –
அப்படிப்பட்ட ஸ்வபாவ வ்ர்த்தங்கள் ஆகிலும் நமக்கு உத்தேச்யம் என்னுதல் –  அங்கனம் அன்றிக்கே
3-அவர்களுக்கு சரீர சம்பந்தத்தாலே ப்ராமாதிகமாய்க் கொண்டு -சில குற்றங்களுண்டாய் இருந்தாலும் –
பத்ம பத்ரமி வாம்பச -என்கிறபடியே அவர்கள் அவற்றோடு ஒற்று அற்றே இருப்பது -அப்படியே யானாலும்
அவர்களுக்கு அவையும் உண்டாகையாலே நம்மை உத்தரிப்பிக்கைக்கு அவையே போரும் –
இப்படியே எம்பெருமானாருக்கு அனந்யார்ஹராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஜன்ம
வ்ருத்தாதிகளால் குறை உண்டானாலும் அவர்கள் நமக்கு ஆஸ்ரயநீயர் -என்று கருத்து
யஸ்மின் மிலேசேபி வர்த்ததே -தஸ்மை தேயம் ததோக்ராஹ்யம்சச பூஜ்யோயா தாஹ்யஹம் -என்று
மிலேச்சன் ஆகிலும் பக்தன் ஆகில் என்னைப் போலே பூஜ்யன் -அவன் பக்கல் ஞான உபதேசம் கொள்ளலாம் –
என்றான் இறே -அபிசேத்சூ துராசொரோபஜேதேமாம் அநந்ய பரந்யாது ரேவ சமந்த வியஸ் சம்யக் வ்யவஹி தோஹிச
-மாம் – -திருத் தேர் தட்டிலே அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணா நின்று கொண்டு -கீதாசார்யனான என்னை –
அநந்ய பிரயோஜனாக பஜித்தான் ஆகில் அவன் எப்படிப்பட்ட குற்றத்தை உடையவன் ஆகிலும் –
சாதுரேவ சமந்தவ்ய -என்றான் இறே -இத்தால் அவர்களுடைய ப்ராமாதிகமான ஸ்வபாவ வ்ர்த்தங்கள் எல்லாம்
அகிஞ்சித்கரம் -ஆஸ்ரய பிராபல்யமே பிரதானமாக அவர்கள்பூஜ்யர் -என்றபடி -தஸ்மாத் மத் பக்த பக்தாஸ்ஸ-பூஜநீயா விசேஷதே – என்றான் இறே
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் பயிலும் பிறப்பிடை
தோறும் எம்மை யாளும் பரமரே -நம்மை அளிக்கும் பிராக்களே –எம் தொழும் குலம் தாங்களே -படியாதுமில்
குழவிப் படி எந்தை பிரான் தனக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார்
அடியோங்களே – என்றும் -சிறுமா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே -என்றும் அவர்களுக்கே
குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே -என்று இவ் அர்த்தத்தை பத்தும் பத்தாக நம் ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –
பிரத்யஷி தாத்ம நாதா நாம் நைஷாம் சிந்தயம் குலாதிகம் -என்றான் இறே ஸ்ரீ பரத்வாஜ முனியும்
.இனி -4–அக்குற்றம் -என்றதுக்கு -ப்ராமாதிகமாய் -வந்தது அன்றிக்கே – ஆஸ்ரயண அந்தர்பாவி
புத்தி பூர்வாக பரமாய் அர்த்தம் சொல்லில் -தீபோர்வோத்தர பாப்மனா மஜநநாத் -என்றும் புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன்
பாபத்தை பண்ணான் இறே -என்றும் சொல்லுகையாலே -இவர்களுக்கு அது புத்தி பூர்வகமாக வர வழி இல்லை –
ஜாதேபி -என்கிறபடி பிரகிருதி சம்பந்தத்தாலே -புத்தி பூர்வகமாக பிரசக்தம் ஆனாலும் -என் அடியார் அது செய்யார் –
செய்தாரேல் நன்று செய்தார் -என்றும் சொல்லப்படுகிற பகவத் அபிசந்தி விசேஷத்தாலும் – வாத்சல்ய ஜலதே –
என்கிறபடியே அவன் ஸ்வ ஆஸ்ரிதருடைய குற்றத்தை போக்யமாக கொள்ளும்ஸ்வபாவன் ஆகையாலும் –
இறையும் அகல கில்லேன் -என்று அவனைப் பிரியாதே நித்ய அநபாயினியாய் இருக்கிற பெரிய ப்ராட்டியாருடைய
புருஷகார பலத்தாலும் குற்றத்தை அவளாலே பொறுப்பித்துக் கொள்ள தட்டில்லை – ஓர் அஞ்சலி மாத்ரத்தாலே
நசிக்கக் கடவதான பாவத்தை -சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று கீதாசார்யனும் -ததைவ முஷ்ணாத்யசுபான்ய சேஷதே –
என்று ஆள வந்தாரும் -சர்வ சப்தத்தாலே சேஷ பத்தா சாமாநாதி கரண்யத்வென வந்த பாவத்தை நிர்தேசிக்கையாலே
அந்த சப்தங்களில் புத்தி பூர்வோத்தரகமும் அந்தர்பவிக்கும் இறே – சர்வேஸ்வரன் இவனுடைய குற்றத்தை அபேஷித்தான் ஆகிலும்
அவனுக்கு ஒரு குற்றம் அடையாத படி பிரபன்னனும் சாவதானமாய் இருக்க வேணும் -இப்படிப்பட்ட பிரபாவம்
அவர்கள் பக்கல் உண்டாய் இருக்கையாலே –அத்தை இட்டு அவர்களை அநாதாரியாதே -அவர்கள் எனக்கு
சேஷிகள் என்று அத்யவசிக்க வேணும் என்றது ஆய்த்து -இவ்வளவான பிரதி பத்தி பிறந்தால் இறே
இவனுக்கு ஸ்ரீ வைஷ்ணவர் பக்கலிலே -சஜாதீய பிரதி பத்தி குலைந்தது ஆவது

————————————————————————–

அமுது விருந்து
அவதாரிகை –
எம்பெருமானார் என்னை ஏற்ற பிறகு அவர் குணங்களே எனக்கு தாரகமும் போஷகமும் போக்யமும் ஆயின என்றார் கீழ்-
அவ்வளவோடு அமையாது அவரையே தஞ்சமாக பற்றி -விடாது நிற்கும் பெருமை வாய்ந்தவர்கள்-பற்றுவதற்கு முன்
அவர் பால் இருந்த அறிவுக்குறை இழிபிறப்பு -இழி தொழில் -இவற்றில் ஒவ் ஒன்றுக்குமே நான்
அடிமைப் பட்டு விடுகிறேன் -என்கிறார் –

பத உரை –
என் செய்வினையாம் -நான் செய்து எனக்கு சொந்தமான கர்மங்கள் ஆகிற
மெய்க்குற்றம்-நிலை நிற்கும் தோஷத்தை
நீக்கி-போக்கடித்து
விளங்கிய -பிரகாசித்த
மேகத்தை- மேகம் போன்றவள்ளன்மை வாய்ந்தவரும் –
திக்கு உற்ற -திசை எங்கும் பரவின
கீர்த்தி-புகழ் படைத்த
இராமானுசனை-எம்பெருமானாரை
மேவும் -விட்டுப் பிரியாது பொருந்தி இருக்கும்
நல்லோர் -நல்லவர்கள்
எக்குற்றவாளர் -எந்த குற்றத்தை உடையராகவும்
எது பிறப்பு -எந்த பிறப்பினை உடையராகவும்
ஏது இயல்வு -எந்த நடத்தை உடையராகவும்
நின்றோர்-பற்றுவதற்கு முன்பு இருந்தார்களோ
அக்குற்றம்-அந்த குற்றமும்
அப்பிறப்பு -அந்த பிறப்பும்
அவ்வியல்வே-அந்த நடத்தையும்
நம்மை-ஞான ஜென்மத்தின் சிறப்பை உணர்ந்த நம்மை
ஆட்கொள்ளும் -அடிமைப் படுத்தா நிற்கிறது –

வியாக்யானம் –
என் செய்வினையாம் மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை
வந்த வினை அன்று -நானே பண்ணின வினை என்பார் -செய்வினை-என்றார் –
பிரமஞானிகள் முக்தி அடையும் போது தங்கள் புண்யம் களையும் பாபங்களையும் உதறி செல்வதாகவும் –
புண்யங்கள் அவர்கள் நண்பர்கள் இடம் போய் சேர்வதாகவும் -பாபங்கள் அவர்கள் பகைவர்கள் இடம் போய் சேருவதாகவும் –
சொல்லப்படுகிறது –அங்கனம் வந்த வினைகள் அல்ல -என்னுடைய வினைகள் –நானே செய்தவை அவை எனபது கருத்து –
மெய்க்குற்றம்
உண்மையான தோஷங்கள்-
உண்மை அழியாது நிலை நிற்கும்
என்னுடைய செய்வினைகளாகிய குற்றமும் அழியாது நிலை நிற்பவை –
ப்ராயசித்ததாலோ அனுபவத்தினாலோ போக்கடித்து கொள்ள இயலாதவை –
இனி ஆளவந்தார் போன்ற முன்னவர் சொன்ன நைச்ய அனுசந்தானம் போன்றது -அன்று –
மெய்யாகவே உள்ள குற்றம் என்னலுமாம்-என்று உரைப்பாரும் உளர் –
இனி மெய்க்குற்றம் என்று சரீர சம்பந்தத்தால் வரும் அஹங்கார மமகாரங்கள் ஆகிற குற்றம் என்னலுமாம் –
அப்பொழுது வினையாம்-என்பதற்கு வினையினால் உண்டான -என்று பொருள் கொள்ள வேண்டும் –
என்னால் செய்யப்பட்ட கர்மங்களினால் ஆகிய தேக சம்பந்தத்தால் உண்டான அஹங்காராதி தோஷத்தை
என்றது ஆயிற்று –
நீக்கி விளங்கிய மேகத்தை –
மேகம் எனபது மேகம் போன்ற வண்மை வாய்ந்தவரைக் குறிக்கிறது –
குற்றம் நீக்கியது வள்ளலாகிய எம்பெருமானாருக்கு தாம் பெற்ற பேறாக தோற்றுவதால்
அவர் விளக்கம் எய்துகிறார் என்க-அமுதனாரை குற்றம் அற்றவராக பெற்றோமே
என்று மிக்க உவகையுடன் காணப்படுகிறார் எனபது கருத்து –
மேவும் நல்லோர் –என்னை ஆட்கொள்ளுமே –
மேவுதல்-நிழல் போலே விட்டுப் பிரியாது இருத்தல்-
எம்பெருமானாரை மேவுகையே நலம்
அத்தகைய நலம் வாய்ந்தவர் நல்லோர்
அந் நலத்தினால் அவர் பால் இருந்த குறை -அறிவினாலோ பிறப்பினாலோ -நடத்தையினாலோ-
ஏற்ப்பட்டு இருபினும் அதுவும் நலமாகவே ஆக்கப்பட்டு -என்னை ஆட்கொண்டு விடுகிறது -என்கிறார் –
எக் குற்றவாளர் –
எது பிறப்பு -எது இயல்வு -என்று பிறப்பில் குறையும் நடத்தையில் குறையும் பேசப்படுதலின்
இங்கு கூறப்ப்படும்குற்றம் ஞானத்தில் குறைவைக் குறிப்பதாக கொள்ளல் வேண்டும் –
நல்லார் அல்லார் எம்பெருமானாரை மேவார் -மேவினார் நல்லார் –
நல்லார் ஆயின் அவர்கள் இடம் எங்கனம் குறை இருக்க முடியும் -இருக்க முடியாது தான் –பின்னை அவை அவர்களிடம் எவ்வாறு காணப்பட்டன –
யஜ்ஜாதீயோ யாத்ருசோ யத்ஸ்வபாவ
பாதச்சாயாம் ஆஸ்ரிதோயோ கோபிதஜ் ஜாதியஸ்தாத்ருச சதத் ஸ்வபாவ
ச்லிஷ்யத்யே நம் சூந்தரோ வத் சலத்வாத் -என்று -திருவடி நிழலை ஆசரிக்கும் எவனோ ஒருவன் –
எந்த ஜாதியை சேர்ந்தவனோ -எப்படி பட்டவனோ -என்ன ஸ்வபாவம் உடையவனோ -அந்த
ஜாதியை சேர்ந்தவனாயும் – அப்படிப்பட்டவனாயும் -அந்த ஸ்வபாவத்தை உடையவனாயும் -அமைந்து
சர்வேஸ்வரன் வாத்சல்யத்தால் அவனை அணைத்து கொள்கிறான் -என்று ஆழ்வான்-அருளி செய்தது போலே –
நாம் எவ்வளவு அறிவு கேடராயினும் -இழி குலத்தவராயினும் -நடத்தை கெட்டவராயினும் –
எம்பெருமானாரை மேவி வாழ்வதற்கு உரியவர் ஆகலாம் -அதனுக்கு அவை தடங்கல் ஆக மாட்டாது -என்று
வாத்சல்யத்தால் நம்மை அறிவுறுத்தி -அவ் வழிப் படுத்துவதற்காகவே –
அந் நல்லோர் அறிவு பிறப்பு நடத்தைகளில் இழிவான தன்மைகளை தங்கள் இடம் ஏறிட்டு கொண்டு நம்மை அணைந்து உள்ளனர் –
ஈஸ்வரன் தானே தன் இச்சையால் தாழ விட்டுக் கொள்வது போலே –இவர்களும் தம்மைத் தாழ விட்டுக்
கொண்டு உள்ளனரே அன்றி -கர்மத்தால் இன் நிலைக்கு உட்பட்டவர்கள் அல்லர் என்று அமுதனார் கருதுவதால்-
ஈஸ்வரனுடைய எளிமையினுக்கு அடியார்கள் ஆட்படுவது போலே -இவர்கள் உடைய எளிமையினுக்கும்
அவர் ஆட்படுகின்றார் -என்க
வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ் குலம் புக்க வராஹா கொபாலரைப் போலே -இவரும் நமக்நரை-உயர்த்த தாழ இழிந்தார் –சூரணை -84 – என்று ஆச்சார்ய ஹ்ருதயத்தில் கூறியபடி -யயாதி சாபத்தால்
அரசு உரிமை இழந்து இழிந்த குளமாக கருதப்பட்ட யாதவ குலத்தை கை தூக்கி விடுவதற்காக
கிருஷ்ணன் கோபாலனாக அவதரித்தது போலேயும் –
பிரளய காலத்தில் நீரில் மூழ்கின பூமியை இடந்து மேல் எடுப்பதற்கு கீழ் புகும் கேழலாய் அவன்
அவதரித்தது போலவும் -அஹங்கார ஹேதுவான குலம் தாங்கும் சாதிகளிலே பிறந்து சம்சாரத்தில்
அழுந்தினவர்களை -உயர்த்துவதற்காக -அஹங்காரத்துக்கு இடம் தராத இழி குலத்திலே
இராமானுசனை மேவும் நல்லோர் அவதரித்து உள்ளனர் -இவ் வண்ணமே தன் களவை கூட மறைக்க
அறிய கிலாமையும் -தயிர் வெண்ணெய் முதலிய வற்றை களவாட லாலும் -கோபியரோடு கூடிக்
கூத்தாட லாலும் நடத்தை இல்லாமையும் கண்ணன் காட்டிக் கொள்வது போலே -நல்லோரும் அறியாமையும் நடத்தை
இல்லாமையும் தங்கள் இடம் உள்ளனவாக காட்டிக் கொள்கின்றனர் –
வராஹப் பெருமாள் போன்று மாசுடம்பும் மானமில்லாமையும் வாய்ந்து இந் நல்லோர் தோன்றுகின்றனர் –
இங்கனம் இராமானுசனை மேவும் நல்லோர்கள் இடம் மேவுவதற்கு முன்பு அறிவிலும் பிறப்பிலும் நடத்தையிலும்
காணும் குறைகளை -இறைவனுடைய குறைகளைப் போல கருதி -அமுதனார் -நினைக்கும் தோறும்
ஒவ் ஒன்றுக்கும் ஆட்பட்டு விடுகிறார் என்க –
பாகவதர்களை எந்த வகையிலும் -தன்னை விடக் கீழ்ப் பட்டவர்களாகவோ ஒத்தவர்களாகவோ -கருதுவது
பாகவத அபசாரம் ஆதலின் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆதர்ச பூதரான அமுதனார் -நல்லோருடைய
ஞான ஜன்ம வ்ருத்தங்களை இங்கனம் சீரியனவாக கருதாமல் இருக்க ஒண்ணாது -இப்படி நினையாது ஒழிகையும்
அபசாரம் -என்று தனக்கு பிறப்பாலும் அறிவாலும் நடத்தையாலும் -கீழ்ப் பட்டவர்களாக பாகவதர்களை நினைப்பது
அபசாரம் ஆவது போலே -ஆசார்ய துல்யர் -என்றும்-சம்சாரிகளிலும் தன்னிலும் ஈச்வரனிலும் அதிகர் என்றும் –
நினையாது ஒழிகையும் -அபசாரமாக தழைக்கட்டும் -என்று ஸ்ரீ வசன பூஷண காரர் அருளி செய்து இருப்பது இங்கு
நினைவு உறத் தக்கது –
இனி மேவும் நல்லோர் திறத்து பிறந்த மிக்க ஈடுபாட்டினால் -அவர்களுடைய குற்றம் முதலியன நற்றமாய்
அமுதனாரை ஆள் கொள்கின்றன -என்னலுமாம் –
அன்பு முதிர்த்திடின் குன்றனைய குற்றமும் குணமாக கொள்ளப்படும் அன்றோ –
இனி -நிக்ருஷ்ட -இழி -குலத்தவர்கள் உடைய ஜன்ம ஞான வ்ருத்தங்களை அமுதனார் கருதுவதாக கொள்ளாது –
உத்க்ருஷ்ட -உயர் -குலத்தவர்கள் உடைய ஜன்ம ஞான வ்ருத்தங்களையே கருதுவதாக கொள்ளலுமாம் –
இராமானுசனை மேவும் நல்லோர் -அஹங்காரத்துக்கு ஹேது ஆதலின் -உயர் குடிப்பிறப்பும் –
அறிவுடைமையும் -ஒழுக்கம் உடைமையும் -தள்ளத்தக்கன -அஹங்காரத்துக்கு இடம் தராத இழி குலப்
பிறப்பும் -அறிவின்மையும் -ஒழுக்கம் இன்மையுமே அமையும் என்று கருதுகின்றனர் –இக் கருத்து
உருவாவதற்கு முன்பு குலத்தாலும் -அறிவினாலும் -ஒழுக்கத்தாலும் -நாமே உயர்ந்தவர் என்று இறுமாந்து
இருந்த நிலைமைக்கு இப்பொழுது அவர்கள் எள்கி நிற்கின்றனர் -அஹங்காரத்துக்கு இடம் தந்து நாம்
கீழ்ப்பட்டவர்கள் ஆயினோமே என்று தங்களை அவர்கள் நொந்து -கொள்ளும் நிலை ஒவ் ஒன்றுக்கும் நான்
ஆட் பட்டு விட்டேன் -என்கிறார் அமுதனார் –
அவ் இயலவே -ஏகாரத்தை அக்குற்றமே அப்பிறப்பே என மற்றை இரண்டுடன் கூட்டுக –
இதனால் ஒவ் ஒன்றே ஆள் கொள்ளுவது புலனாம் –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது

அவர் குணங்களே தாரக போஷாக போக்கியம் -உயிர்க்கு உயிர்– தித்திக்கும் என்றார் கீழ்
இதில் அவர் திருவடிகளில் அனந்யார்காராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய பூர்வ அவஸ்த்தைகளில்
ஓர் ஒன்றே என்னை எழுதி கொள்ளா நின்றது என்கிறார் .
. -எட்டு திகிலும் பரவிய கீர்த்தி
என் செய் வினை– அவித்யை ஜன்ம கர்ம
-மெய் குற்றம்-நானே கொள்கலன் ருசி உடன் சம்பாதித்த குற்றம்
நீங்கி விளங்கிய -குற்றம் நீக்கினதால் – வந்த விளக்கம்
-தளிர் புரையும் திருவடி என் தலை மேலே போல ..
அன்று உலகம் எல்லாம்தாவி ..கொண்டவன் இன்று உம்மை விட மாட்டேன் என்று என்னை-.சேவியேன் உன்னை-
என்று இருந்தாலும் கொண்டான் -தொண்டர் அடி பொடி ஆழ்வார்
சிக்கனே செங்கண்மாலே வெளுத்த கண்கள் சிக்கு என பிடித்து கொண்டதால் புது கணிப்பு அடைந்து சிவந்த செங்கண் மால்.
.மேவும் நல்லோர்– மேவினதால் நல்லவர் ஆனார்கள் என்றும் – .நல்லவர் ஆதலால் மேவினார்கள் என்றும் கொள்ளலாம் –அந்யோந்ய ஆச்ரயம்
எக் குற்றவாளர்– ஞானத்தால் குறைத்தாலும் /எது பிறப்பு-தாழ்ந்த குலம்/ எது இயல்பு -அனுஷ்டானம் குறைந்தாலும்
அக் -ஆச்ரயத்துக்கு முன்பு-அவையே ஆட் கொள்ளும்..
அடியார் இல்லை . அடியார்களின் தாழ்ந்த ஞானம் /பிறப்பு/ இயல்பு இவையே உத்தேசம்.
.ராமானுசன் திருவடியை பற்றினால் இவையே நல்லதாக கொள்ளணும்.
என் செய் வினையாம்-
வந்தேறி இல்லை தீ வினைகள் ..என் செய்வினை.
.சுயம் பாகத்தில் வயிறு வளர்த்த தீ வினைகள்.
.மெய் குற்றம் விட்டு பிரிக்க முடியாத
-நீக்கி விளங்கிய மேகத்தை -முற்று உவமை-போன்ற ராமனுசனை.
இது போல் முற்று உவமை ஆழ்வார் -காமர் மானே நோக்கியற்க்கு-முற்று உவமை.
.ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஈஸ்வரனும் ஆசை படுவார்கள் இந்த பத்து பாசுரங்களும் அனுசந்த்தால் ..என்கிறார்
. /மேவும் நல்லோர்-
ஆச்சார்யர் பற்றும் பொழுது மேவு சப்தம்.
பள்ளி கட்டில் ..சங்கம் இருப்பார் போல்/ மேவினேன் அவன் பொன் அடி மெய்ம்மையை
/சாயை போல் பாட வல்லார் தாமும் ..அணுக்கர்களே-.சாயை போல அணுக்கர்கள் பாட வல்லார் நிழல் போல வர்த்திக்கலாம்/
பரதன் கூட சத்ருக்னன் போவது உடைவாள் போவது போல
பத சாயை..அப்ருதக்  சித்தம்-அது போல் பற்ற வேண்டும் -அசித் போன்ற பாரதத்ரியம் வேண்டும்
..எப் பிறப்பு -உயர்ந்த பிறப்பு என்ற நினைவுடன் ஆச்ரயத்தால் அதுவே குற்றம் ..
தாழ்ச்சி ஏறிட்டுக்  கொண்டு நம் போல்வாருக்கு நம்பிக்கை கிடைக்க இந்த நல்லோர்கள்
..நச்சு பொய்கை ஆகாமல் இருக்க ஆழ்வாரை வைத்தால் போல.
அது போல குற்றம் பிறப்பு இயல்வு இருந்தால் கை கொள்வார்
–சிறு மா மனிசர் -தாழ்ச்சி பாராது ஸ்ரீ வைஷ்ணவர் பக்கல் சஜாதிய பிரதி பத்தி குலையும்
..மூட அன்பு பக்தி இருந்தால் -நமக்கு இந்த ச்வாபங்களே நம்மை எழுதி கொள்ளும் ..
அஹங்கார ஹேதுவான ஜன்ம விருத்த ஞானந்தங்களால் உண்டான ஸ்வ நிகர்ஷத்தை அனுசந்தித்து
நின்ற நிலையாய்அவ் வவ ச்வபாவங்களே தம்மை எழுதி கொள்ளா நின்றது என்கிறார்–
இவை பொய் குற்றம்..மணி– கண்ணாடி மேல் அழுக்கு போல ஜகத்தின் குற்றம் பிரதி பலித்தாலும் அவையே நம்மை ஆட் கொள்ளும்
…சரீர குற்றங்கள் தாமரை இலை தண்ணீர் போல நம்மை உத்தரிக்க இவையே ஹேது.
.குற்றம் இருந்து பட்டதால் தான் குற்றங்கள் உள்ள நம்மையும் ஆட் கொள்கிறார்கள்
…பக்தி இருந்தால் மிலேச்சன் ஆக இருந்தால் கொடுமின் கொள்மின் -ஞானமும் பகிர்ந்து கொள்ளலாம்
..கீதை குற்றங்கள் உடன் என்னை ஆச்ரயித்தால் எப்படி பட்ட குற்றவாளியாக இருந்தாலும் சாது என்றான்
திரு வடி பலத்தாலே ஏற்றம்..பயிலும் திரு வுடையார் யாவரேலும்-கோக்கள்-..-ஆழ்வார்..சரண் அடைந்த பின்பு
-புண்யத்துக்கு கூட அஞ்சுபவன் பாபம் பண்ண மாட்டான்
–என் அடியார் அது செய்யார் செய்தாலும் நன்றே செய்த்தார் -குற்றம் குணம் –
பிராட்டி இருப்பதால் அஞ்சலி மாத்ரத்தால் குற்றம் பொசிக்கி கொள்ளலாமே
மேவும் நல்லோர் –சரண் அடைந்த பின்பு- -புண்யத்தின் அஞ்சுபவன் பாவம் செய்ய மாட்டான்
.ஆத்மா சொரூபத்தை பற்றி இருக்கும்..அவன் அனுபவக்க வரும் பொழுது எதிர் விழி  கொடுக்கணும்.
.புண்யத்துக்கு அஞ்சுபவன்- மோஷ விரோதி என்பதால் .பகவத் அனுக்ர ஹேது ..சாஸ்த்ரத்தில் பண்ணு -இரண்டும் இருந்தாலும்..மோஷ விரோதி
பாபம் ..நிகராக ஹேது/ தனடணைக்கும் ஹேது ..சாமான்யர் கூட பயபடுவார்கள்
…இவன் புண்யத்தை பாவம் என்று இருக்கும்.
.மோஷ விரோதி என்பதால்..பகவானோ சம்சாரியின் பாபத்தை புண்யம் என்று இருக்கும்.
. நன்மை என்று பேர் இடலாம்…அவனுக்கு அது கிடையாது.
–இவன் பாபத்தை புண்ணியமாக கொள்வது கிடையாது…இவன் அது செய்யான்-பாபம் செய்ய மாட்டான்.
வாத்சல்யத்தை ஹேதுவாக கொண்டு பாபம் செய்ய மாட்டான்
….பாபம் பண்ண வில்லை ..புண்ணியமாக கொள்ள வேண்டிய அவசியம் இல்லை ..புண்ணியத்துக்கு அஞ்சும் -சாஸ்த்ர ஸித்தமாய் இருந்தாலும் -மோக்ஷ விரோதி என்பதால் பண்ணாதவர் பாபங்கள் செய்ய மாட்டார் –
ஈஸ்வரனுக்கு ஆனந்தம் கொடுத்தாலும் புண்ணியம் செய்யான் -ஆத்மாவுக்கு க்ஷேமம் பார்ப்பான் –
ஈஸ்வரனோ பாபத்தையும் புண்ணியமாக பார்த்து மடி மாங்காய் இட்டு அருளுவான் –
அவனுக்கு அது கிடையாது -இவன் இது செய்யான் –சம்சாரி பாபம் செய்ய மாட்டான் என்றபடி -நல்ல குணம் இருக்கு என்று அறிந்து வாத்சல்யம் உபயோகப் படுத்த மாட்டான் என்றபடி -அதனால் இவன் பாபத்தை புண்ணியமாக கொள்ளுக்காய் -அது -அவனுக்கு கிடையாது -என்கிறார் ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ கத்தி –
பெருமை மட்டும் உண்டு ஒழிய அவனுக்கு அது செய்ய இடம் கொடுக்க மாட்டார்கள் என்றவாறு -சரணா  கதி பண்ணின பின்பு பாபம் ..சரணா  கதி என்ற மதி வந்தவன்
-அத்யவாசாயம் பிறந்தால் கேள்வியே பிறக்காது.-ஆக பூர்வாகம் சரணாகதி பண்ணின பின்பு மாய்ந்த -உத்தரவாதம் செய்யான் -இதனால் அவர்களை சஜாதீய புத்தி கொள்ளக் கூடாது என்று சொன்னபடி –
.பிறப்பாலே வர்ணம்/ நடத்தையால் வர்ணம்..குண கர்ம விபாகம் பிறப்பும் நடத்தையும் மாறி இருக்கிறது இன்று.
.இவன் புண்யத்துக்கு அஞ்சும் படியையும் .குற்றம் நற்றமாக கொள்ளும்.
. பாபம் புண்யம் அற்று நியதனாய்  வர்த்திக்கிறான்
..ஆசை பட்டு போவான் கிடையாது.. பாபம் பண்ணுவானா புண்யம் ஆக கொள்வோம் என்று காத்து இருப்பான்..
செய்ய வேண்டிய அவசியம் இல்லை..குற்றத்தை குணமாக கொள்வது வாத்சல்யம் .
.காணா கண் இட்டு இருப்பது தேசிகர் சம்ப்ரதாயம்…நடக்காதவற்றின் மேல் தான் அபிப்ராய பேதம்..
கைவல்யார்த்தி மூலையில்-விரஜை தாண்டி-தென் கலை / விரஜை தாண்ட வில்லை -தேசிகன்.
. அந்த பக்கம் போனால் சாத்திய பூமி அனுபவ பூமி..//தாண்டினால் சாதனை பண்ணி மோஷம் போக முடியாது.-மோக்ஷத்தில் த்வயம் பூர்வார்த்தம் -ஆனந்தத்துக்கு தான் சொல்லிக் கொள்ள வேண்டும் -சரணம் அடைவது இங்கே தானே -அங்கு அனுபவம் மட்டுமே – இது தான் பேதம்.. அதிகாரியே இல்லை..இருவரும் கைவல்யம் த்யாஜ்யம் என்பர்..18 வித்யாசங்கள் எல்லாம் இப்படி தான்..
கர்ம -தேகம் -அகங்காரம் -காரிய காரண பாவங்கள்.. வினையால் உண்டான ..ஞானத்தில் குறைவு போல..தூரா குழி-நிலை நின்ற தோஷம்
-நோற்ற நோன்பு இலேன் -ஆழ்வார்/ஆளவந்தார் ஆழ்வான் சொல்லியது பொய் ஆன குற்றம்–நைச்ய அனுசந்தானம் இல்லை-
..அனுபவித்தும் பிராய சித்தம் பண்ணி போக முடியாது-செய் வினைகள்
அடிமை கொண்ட பின்போ –அவை எங்கே போயின -.வனோ மரி கடலோ மாருதமோ
– வாசனை உடன் போக்கினார் .-
அத்தாலே ஒளி பெற்றார் ஸ்வாமி -தன் பேறாக நம்மை பற்றியதால்
–வள்ளல் தன்மை..ஏய்ந்த பெரும் கீர்த்தி – திக்குற்றகீர்த்தி…
மேவும் நல்லோர்– பிராப்யம் பிராபகம் என்று .அநந்ய பிரயோஜனராய் அண்டியவர்கள் நல்லோர்
..உன்தாள் பிடித்து போத இசை நீயே ஆழ்வாரே கேட்டாரே
விட்டு பிரியாமல் விலஷணமாய் இருந்த ஆழ்வான் எம்பார் ஆண்டான் போல்வார்-.சிறு மா மனிசர்
…சரீரத்துடன் வியாமோகம் கரை எற்றுபவனுக்கு நால் ஆறும்அறிவித்தார்
-ஞானியை விக்ரகத்தோடு ஆதரிக்கும்-
ராமானுஜரை பற்றிய சரீரத்துடன் ஆசை முதல் அர்த்தம்.
.தாழ்ச்சி உடையவரும் அர்ஹர்  என்று காட்ட .
.சுந்தர பாகு ஸ்தவத்தால் வாத்ஸல்யத்தால் கை கொள்கிறார் என்கிறார் இந்த பாசுரம் போல.
.நமக்கு வாத்சல்யம் சொல்ல வில்லை..குற்றத்தை குணமாக ஈஸ்வரன் மாற்றியதால் அவன் குணங்களின் மேன்மை தெரியும்..
வம்சம் பூமி உத்தாரணம் பண்ண வராக கோபாலர் போல நம்மை தூக்க ஆழ்வார்..கீழ் குலம்புக்கார்
பாசி தூர்த்த ..அது உத்தேசம் அவன் சேஷ்டிதங்கள் உத்தேசம் ..அது போல.
.சஜாதிய புத்தி வர கூடாது என்பதே நோக்கு.. பாகவத அபசாரம் கூடாது..
ஈஸ்வரனை விட ஆசார்யன் விட பாகவதனை மேலானவன் என்று நினைக்கணும்–

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: