அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-25-காரேய் கருணை இராமானுசா-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை –
இருபத்தைந்தாம் பாட்டு -அவதாரிகை –
எம்பெருமானார் தம் பக்கல் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து அத்தாலே அவர் திருமுகத்தை-பார்த்து -தேவரீர் உடைய க்ருபா ஸ்வபாவம் இந்த லோகத்தில் யார் தான் அறிவார் என்கிறார் –

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

வியாக்யானம் –
ஜல ஸ்தல விபாகம் பாராதே வர்ஷிக்கும் மேகம் போலே சர்வ விஷயமாக உபகரிக்கும்-கிருபையை உடையவரே –
துக்கத்துக்கு நேரே ஆவாச பூமியே இருப்பானொருவன் நான் –
இப்படி இருக்கிற என்னை தேவரீர் தாமே வந்து ப்ராபித்து அருளின பின்பு தேவரீர் உடைய
கல்யாண குணங்களே ஆத்மாவுக்கு தாரகமாய் -அடியேனுக்கு இன்று ரசியா நின்றது
தேவரீர் உடைய கிருபையின் ஸ்வபாவத்தை இக்கடல் சூழ்ந்த பூமியில் யார் தான் அறிவார் –
காரேய் கருணை -என்றது -கார் ஏய்ந்த கருணை என்றபடி –
ஏய்கை-ஒப்பு–

பாலே போலே சீர் -நீ விட்டாலும் நான் விட்டேன் என்று அன்றோ சிக்கென கொள்வார் ஸ்வாமி -இன்று இங்கே இந்த உடம்போடு தித்திக்கும் -தேசாந்தரம் தேகாந்தரம் காலாந்தரம் வேண்டாமே – நின் அருள் -அவன் அருள் போலே அன்றே -மோக்ஷ ஏக ஹேது-உயிர் பாசுரம் இது – சரண்யத்வம் ஸ்வாமி இடம் வந்த பின்பு  தானே நிறம் பெற்றது -ஸ்வா பாவிகம் அடைந்தது -என்றவாறு –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை
-மேகம் போலே சர்வ விஷயமாக உபகரிக்கும் க்ர்பையை உடைய எம்பெருமானாரே –
சதுஸ் சமுத்திர பரிவேஷ்டிதமான இந்த பூ பிரதேசத்திலே -தேவரீர் உடைய கிருபா ஸ்வபாவத்தை
தெளிந்தவர் யார் -சகல துக்கங்களுக்கும் சாஷாதாகரமான என்னை தேவரீரே எழுந்து அருளி
அங்கீ கரித்த பின்பு -தேவரீர் உடைய கல்யாண குணங்கள் -என்னுடைய பிராணனுக்கு பிராணனாய் –
அடியேனுக்கு ரசியா நின்றது என்று –எம்பெருமானார் திரு முகத்தைப் பார்த்து -நேர் கொடு நேரே-விண்ணப்பம் செய்கிறார் –

வியாக்யானம்
-காரேய் கருணை
-ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷூ கவலாஹகம் போலே –
அனலோசித விசெஷா லோக சரண்யமான – க்ர்பை -சித்தே ததீய சேஷத்வே -சர்வார்த்தாஸ் சம்பவந்திஹி –
என்னக் கடவது இறே -கார் -மேகம்  / ஏய்கை -ஒப்பு -இப்படிப் பட்ட க்ர்பையை உடைய
-இராமானுச -எம்பெருமானாரே –
இக் கடல் இடத்திலே
-சதிஸ் சமுத்திர பரி வேஷ்டிதமான -இந்த -இருள் தரும் மா ஞாலத்திலே –
நின் அருளின் –
பர துக்க அசஹிஷ்ணுத்வ நிராசி கீர்ஷத்வாதி லஷனங்களோடு கூடி இறே கிருபை இருப்பது –
அப்படிப் பட்ட கிருபைக்கு நின் அருளின் என்று ஆஸ்ரிய ப்ராபல்யத்தாலே வந்த வெளிச் செறிப்பு ஸ்வர்ணத்துக்கு பரிமளம் வந்தால் போலே
காணும் -இருப்பது
-தன்மை -இப்படிப் பட்ட கிருபா ஸ்வபாவத்தை –ஆரே அறிபவர் -தெளிந்தவர் தான் யார் –நித்ய விபூதியில் இருந்தவர்கள் ஆகில் -சதா பச்யந்தி -என்றும் -விப்ராச -என்றும் -ஜாக்ர்வாசா -என்றும் –
சார்வஜ்ஞம் உடையவர் ஆகையாலே -அறியக் கேட்டவர்கள் இத்தனை -யாநிசா சர்வ பூதாநாம் தஸ்யா ஜாகர்த்தி சமயமி –
என்னும்படி அஜ்ஞானத்தை விளைப்பிக்கும் பூலோகத்தில் இருந்தவர் தெரிகிலர்-என்றபடி –
அல்லலுக்கு
-கர்ப்ப ஜன்மாத்யவச்தாஸ் துக்கம் அத்யந்த துச்சகம் -என்னும்படியான துக்கங்களுக்கு –நேரே உறைவிடம் நான்
-சாஷாத் ஆவாச பூமியாய் இருப்பான் ஒருவன்நான் – சரீர சம்பந்திகளுக்கு
வந்த துக்கங்கள் எல்லாம் தத் சம்பந்தத்தாலே -எனக்கு ப்ராப்தமானால் சிறிது இலகுவாய் இருக்கும் –
அப்படி அன்றிக்கே சாஷாத் எனக்கு வந்தது ஆகையாலே அவற்றுக்கு எல்லாம் நான் த்ர்டமான ஆஸ்ரயமாய்-இருந்தேன் -என்றபடி –
வந்து நீ -நீ வந்து
-தேவரீர் பர துக்க அசஹிஷ்ணுவாகையாலே -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய
ஆர்த்த த்வனி கேட்டவாறே சர்வேஸ்வரன் அரை குலைய தலை குலைய வந்தால் போலே -பரம பதத்தின் நின்றும்-இவ்வளவாக எழுந்து அருளி –
என்னை -துக்க ஆஸ்ரயமான என்னை –உற்ற பின் -த்வயாபி லப்த்த பகவன் நிதா நீ மனுத்த
மாம்பாத்ரம் இததயாயா -என்றால் போலே அலாப்ய லாபமாக என்னைப் பெற்றபின்பு –
உன் சீரே
-தேவரீர் உடைய கல்யாண குணங்களே – குணா நாமா கரோ மஹார் -என்றால் போலே சீர் என்னும்படியான
வாத்சல்ய சௌசீல்யாதி குணங்களை -உயிர்க்கு உயிராய் -ஆத்மாவுக்கு தாரகமாய் -லோகத்தில் எல்லாருக்கும் தம் தாமுடைய
பிராணன் ஜீவன ஹேதுவாய் இருக்கும் -இங்கு அப்படி அன்றிக்கே இவருடைய பிராணனுக்கு பிராணனாய்-காணும் அவருடைய சீர் இருப்பது –
அடியேற்கு
சேஷ பூதனான எனக்கு –இன்று -இன்று -ரசஹ்யே வாயலப்த்த்வா நந்தீ பவதி -என்றும் சோச்நுதே சர்வான் காமான் சஹா -என்றும் –
சொல்லப்படுகிற பிரம்மத்தின் உடைய கல்யாண குண அமர்த்த அனுபவமும் -அடியார்கள் குழாம் களை
உடன் கூடுவது என்று கொலோ -என்று ததீயர் உடன் கூடிப் பண்ணக் கடவேன் என்று பிராத்தித்தபடி
தலைக் கட்டுவது பரம பதத்திலே யாய் இருக்கும் -அப்படி அன்றிக்கே எனக்கு இந்த பந்த -பத்த -தசையிலே தானே –
தித்திக்குமே –
ரச்யமாய் -ஆனந்த அவஹமாய் இருக்கும் என்று ஆய்த்து -தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித்
தித்தித்தால் போலே ஆய்த்து -என்றபடி -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே – என்னக் கடவது இறே—

————————————————————————–

அமுது விருந்து –
அவதாரிகை
தனக்கு பண்ணின உபகாரத்தை நினைந்து நேரே எம்பெருமானாரை நோக்கி
தேவரீர் உடைய அருளின் திறத்தை இவ் உலகில் யார் தான் அறிவார் என்கிறார் –

பத உரை –
கார் ஏய்-கரு முகிலை ஒத்த
கருணை -கிருபையை உடைய
இராமானுச -எம்பெருமானாரே -நான்
அல்லலுக்கு -துன்பத்திற்கு
நேரே உறைவிடம்-நேரே குடி இருக்கும் இடமாக உள்ளேன்
நீ வந்து -தேவரீராக எழுந்து அருளி
என்னை உற்ற பின் –அல்லலுக்கு உறைவிடமான என்னை அடைந்த தற்குப் பிறகு
உன் சீரே -தேவரீர் உடைய கல்யாண குணங்களே
உயிர்க்கு -என்னுடைய ஆத்மாவுக்கு
உயிராய் -தாரகமாய்
அடியேற்கு-அடியானான எனக்கு
இன்று தித்திக்கும் -இப்பொழுது இனிக்கின்றன
நின் அருளின் தன்மை -தேவரீர் உடைய கிருபையின் ஸ்வபாவத்தை
இக்கடல் இடத்தில் -இந்தக் கடல் சூழ்ந்த உலகத்தில்
யார் அறிபவர் -யார் தான் அறிவார் –

வியாக்யானம்
கார் ஏய் கருணை இராமானுச
நீர் நிலம் என்னும் வேறு பாடு இன்றி எல்லா இடத்திலும் மழை பொழிவது போலத் தம் மீதும்
உலகத்தார் மீதும் வேறுபாடு இன்றிக் கருணை பெருகியது பற்றி –கார் ஏய் கருணை –என்கிறார் –
புலைச் சமயங்களை சாராது -தம்மை சஞ்ச நெஞ்சில் வைத்த தன்னைத் தம்மை உள்ளவாறு
காணுறச் செய்தும் -புலைச் சமயங்களை அவித்தும் -பொய்த் தவத்தில் உழலாது நிலத்தில் உள்ளாரை மெய் ஞ்ஞானம்
நெறியில் புகச் செய்தும் -எல்லோருக்கும் உபகரித்ததை மீண்டும் -அருளின் தன்மையின் பெருமையை
காட்டுவதற்காக அனுவத்தித்த படி –கருணை-அருள்
அருளுடைமையாவது யாதானும் ஓர் உயிர் இடர்படின் -அதற்க்கு தன் உயிர்க்கு உற்ற
துன்பத்தினால் வருந்துமாறு போலே -வருந்தும் ஈரம் உடைமை -எனபது மணக்குடவர் -திருக்குறள்-உரை –
இதனை பர துக்க துக்கித்வம்-அஸஹிதவம்  -என்பர் வட நூலார்
கருணை இராமானுசன்-கருணையை உடைய இராமானுசன்
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை –
செல்வத்துள் செல்வமாகிய அருள் செல்வத்தால் மேம்பட்டவர் எம்பெருமானார் -என்க –
இக்கடல் இடத்தில் –நின் அருளின் தன்மை-
நின் அருளின் தன்மையை இருள் தரும் மா ஞாலமாகிய இக்கடல் சூழ்ந்த நிலப்பரப்பில்
எங்கும் எக்காலத்திலும் அறிபவர் யாருமே இல்லை -என்றபடி -எனவே தெளி விசும்பாகிய
பரம பதத்தில் உள்ள நித்தியரும் முக்தரும் அறிய வல்லார் என்பது கருத்து –
நின் அருளின் தன்மை-
இராமானுசா என்று விளித்து கூறி-நின் -என்று மேலும் -கூறுவதால் அருள் உடைய அவரது
சிறப்பு தோற்றும் –
இறைவனது அருளின் தன்மை அறிவு எளிதாயினும் எம்பெருமானாறது அருளின் தன்மை அறிவு அரிதே –
என்றபடி -இறைவனது அருள் ஸ்வா தந்த்ரியத்தால் தடை படுவதற்கு உரியது –
எம்பெருமானார் அருளோ -தடை ஏதும் இன்றி என்றும் பெருகும் தன்மையது -என்க –
அல்லலுக்கு நேரே உறைவிடம் நான்
அல்லல்-கர்ப்ப வாசம் முதல் மரணம் ஈறாக உள்ள துன்பங்கள் அவற்றிக்கு நேரே உறைவிடம் நான்-
என்னை சார்ந்தர்க்கு நேர்ந்த துன்பங்களை கண்டு நான் படும் அவை யல்ல இவ் அல்லல்கள் –
எனக்கு நேர்ந்து நேரே நான் படும் அவை
ஆதலின் என்னால் பொறுக்க ஒண்ணாதவை -என்பது கருத்து
வந்து நீ என்னை உய்த்த பின் –
இவ் அல்லல்கள் அருளாளும் அவரான தேவரீருக்கு இல்லாவிடினும் -முதலை வாய்ப்பட்டு
கஜேந்த்திரன் துயர் உறும் இடத்துக்கு எம்பெருமான் வந்து அவ் வெம் துயரை தீர்த்து அருளியது போலே
நான் இருந்து அல்லல் உறும் இடத்துக்கு எனக்காக தேவரீர் எழுந்து அருளி என் அல்லலைத் தீர்த்து அருளினீர்
என்கிறார் -கஜேந்த்ரனுக்கு அருளியது அவன் கதறிய காலத்தில் –
எனக்கு எம்பெருமானார் அருளியதோ கதறவும் தெரியாது -அல்லலில் அழுந்திய காலத்தில் –
கஜேந்த்திரன் துயர் உற்றது ஒரு மடுவிலே
நான் அல்லலுள் அழுந்தியது சம்சார சாகரத்திலே
கஜேந்த்திரன் துயரம் தேவர்கள் கணக்கு படி ஆயிரம் ஆண்டுகள்-
என் அல்லல்களோ அநாதி காலம்
ஒரு முதலையின் வாய் பட்டது கஜேந்த்திரன்
நானோ ஐம்புலன்களின் வாய்ப்பட்டேன் –
கஜேந்த்திரன் துயரத்தை விட என் அல்லல்கள் மிகக் கொடியவை –
ஆயினும் தானாக வந்து என் அல்லல்களை தீர்த்து தன் பேறாக என்னை ஏற்று அருளினார்
எம்பெருமானார் என்கிறார் இங்கு –
இருந்தான் கண்டு கொண்டேன் எனது ஏழை நெஞ்சு ஆளும்
திருந்தாத ஒருவரைத் தேய்ந்து அற மன்னிப்
பெரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமாள்
தரும் தான் அருள் இனி யான் அறியேனே – திருவாய் மொழி – 8-7 2- – என்னும்
நம் ஆழ்வார் பாசுரமும் அதன் வியாக்யானமும் காணத் தக்கன –
வந்து நீ என்னை உற்ற பின் -என்னும் இடத்தில்
வந்தமையால்-சௌ லப்யமும்
அல்லல் உள்ள  இடத்தில் வந்தமையால்-வாத்சல்யமும்
என்னை உற்றமையால்-சௌசீல்யமும்-
தன் பேறாக ஹேது எதுவும் இன்றி -என்னை உற்றமையால்-ஸ்வாமித்வமும்
கருணை இராமானுசா -என்றமையால் வருவதற்கு ஹேதுவான கிருபையும் –
எம்பெருமானார் இடம் உள்ளமை தோற்றுகிறது –
உன் சீரே –அடியேற்கு இன்று தித்திக்கும்
கீழ் சொன்ன சௌலப்யம் முதலிய குணங்களும் -பிறந்த தோஷத்தை போக்கி
ஆரோக்யத்தை விளைத்து -பாலை இனிக்க வைப்பது போலே -அல்லலை தீர்த்து அடியானாக்கி
குணங்களை தித்திக்கும் படி செய்த ஞானம் சக்தி முதலிய குணங்களும் எனக்கு இன்று இனிக்கின்றன -என்கிறார் –
உன் சீர் –இறைவனுடைய சீர்கள் அல்ல –
உயிர்க்கு உயிராய் -ஆத்மாவுக்கு உயிராய் –தாரகமாய் -ஜீவனமாய்
இதனால் தாரகமும் போஷகமும் சீரே என்றது ஆயிற்று
தித்திக்கும் என்கையாலே போக்யமும் அதுவே என்றது ஆயிற்று –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம் கண்ணன் -என்றார் நம் ஆழ்வார் –அமுதனார் அவை எல்லாம் எம்பெருமானார் குணங்களே என்கிறார் –
அடியேற்கு
இயல்பான அடிமை இன்பம் உணரப் பெற்ற எனக்கு –
இனி சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு-
என்கையாலே கீழ் கூறிய சௌலப்யாதி குணங்களுக்கு தோற்று -அடிமை யானதும் தோற்றுகிறது –
இன்று –
எங்கோ என்றோ போய் சரீர சம்பந்தம் நீங்கின பிறகு பெரும் பகவத் குணா அனுபவம் அன்று –இங்கேயே இப்பொழுதே இவ் உடலோடேயே ஆசார்ய குணம் அனுபவம் ஆகிற பெரும் பேறு-வாய்க்க பெற்றேன் என்று களிக்கிறார் –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

உயிர் பாசுரம்..சுவாமி திரு முகத்தை பார்த்து தேவரீர் உடைய க்ருபா ஸ்வபாவம் இந்த லோகத்தில் ஆர் தான் அறிவார்..
விளி சொல்லில் அருளிய பாசுரம்.
.நின் அருள்- பகவான் அருள் இல்லை உன் அருள்.
.அறிவு ஓன்று இல்லாத ஆய் குலம் -அல்லலுக்கு நேரே உறை இடம் நாம்
.குறை ஒன்றும் இல்லா கோவிந்தா -நீ வந்து என்னை உய்த்த பின்
-உன் சீரே- மறுபடியும் பெருமான் சீர் இல்லை- உன் சீர்
–உயிர் க்கு உயிர் -அந்தர் ஆத்மா -தாரகம்-உன் சீர் தான்
.பகவான் இல்லை — ஆழ்வார் –ராமானுசன் இல்லை
சீரே –பாட வைத்தது சுவாமியின் கல்யாண குணங்கள் -தித்தித்தது
-நீ வந்து உய்ய கொண்டாய்- நீ ஆகவே வந்து ..நான் வராமல் இருக்கும் பொழுது..அல்லலுக்கு நேரே உறைவு இடம் நான்
..இக் கடல் இடத்தில் யாரே அறிபவர் உன் அருளின் தன்மை–அருள் என்று சொல்ல வில்லை –தன்மையை-
தர்மத்தை தர்மி ஆக்கி பேசுகிறார்
..ஒப்பு -கார் போல ..தேச கால வஸ்து பரி சேதன் பகவான் –
-உயர்வே பரன் படியை- உயர்வு ஏய்ந்து இருக்கிற பரன் படி அங்கு
…கருணையை உடைய ராமானுச!..தாழ்ந்தவனான என்னையே உய்தீரே ..
காட்டு அழகிய சிங்கர் சந்நிதியில் அமுதனார் அருளி கொண்டு வரும் பொழுது
-105 பாசுரத்தில் சுவாமி -25 பாசுரம் அருளும் பொழுது வந்து இருந்தால் எல்லாம் சாத்து பாசுரங்களாக இருக்கும்
சாஷாத்கார தன்மை..காட்டுகிறார் இதில்
சில பாசுரங்கள் தூது விட்டு பின்பு பரகால நாயகி நேராக அவன் இடம் – ஒ மண் அளந்த தாடாளா-அருளியது -போல
–ஜல ஸ்தலம் விபாகம் பாராதே வர்ஷிக்கும் மேகம் போலே
சர்வவிஷயமாக வுபகரிக்கும் கிருபை உடையவரே
சமுத்ரத்தில் பெய்ந்தால்-என்ன பிரயோஜனம்
பகல் விளக்கு போல் வீண் தானே
சாப்பிடவரை மீண்டும் உண்ண சொல்வது போல..
..கருணை- வ்யர்த்தம் காரேய்- ஏ சொல் ஒப்புக்கு தான் உவமை இல் உள்ள சில குணங்கள் தான் எடுத்து கொள்ளணும்.
. சந்தரன் போல என்றால் அழகுக்கு தான் –மற்ற படி அது போல் களங்கம் இல்லை
. ஊழி முதல்வன் .உருவம் போல் மெய் கருத்து .–கருமை தான் காட்டலாம் உள்ளத்தில் உள்ள கருணையை காட்ட முடியாது .
அது போல் இங்கும் -.ஞானத்தை மட்டும் இல்லை கிருபையை–
பட்டர் பிரான் கோதை சொன்ன -பட்டர் வித்வானுக்கு வுபகரித்தார்
.. பல்லாண்டு அருளிய பின்பு நமக்கு பிரான் ஆனார் –
வேதங்கள் ஓதி கிளி அறுத்ததும் ஞானிக்கு பிரான்
..கிருபையை உடைய உடையவர்- உபய விபூதி உடைமை
அந்த உடமை அனைத்துக்கும் கிருபையை செலுத்துகிறார்
நேரே-அல்லலுக்கு -நேரே என்றால் என்ன ?..
பஞ்ச சமாச்ரண்யம் பண்ணி வைத்த அவரே நேரே ஆசார்யர் என்போம்
-சம்சார நிவர்தமாக – பெரிய திரு மந்த்ரத்தை உபதேசித்த நேரே ஆச்சார்யர்
கத்ய த்ரயம் -சம்ரதாயம் -சாஸ்தரத்துக்கு விரோதம் இல்லை
-அது அடிப் படை–வேதார்தம் ஸ்ரீ பாஷ்யம் சாஸ்திரம்-பக்தி யோகம் அனைவருக்கும்
பிரபத்தி பிரபன்னர் கோஷ்டிக்கு மட்டுமே அந்தரங்க உபதேசம்
-சுவாமி குழப்ப மாட்டார்..பல அத்யாயம்-பாகவத அபசாரம் பொறாமை -அங்கும் சுவாமி குறுக்கே அருளினார்
..ஞான அனுஷ்டானம் –குருவை அடைந்தக்கால்
-சிஷ்யனுக்கு அதிகாரம் இல்லை–குருவின் ஞானம் பார்க்க
..ஈஸ்வரன் -மூல புருஷர் பார்த்து தான் பதவியும் பட்டமும்.துரும்பை நறுக்கி ஆசனம் இட்டாலும்
அவர் தான் ஆசார்யன்..அல்லலுக்கு நான் நேரே உறைவிடம்
…மற்ற பேர் -உறவுக்காரர் துக்கம்-
–அவரே விரோதி ஆனால் துக்கம் மாறி இன்பம் மாறும்
-அறுந்து போக வாய்ப்பு உண்டு. அல்லலுக்கு காரணம் நான்…
அபராதானாம் ஆலயம் நான்..துக்காலயம்…தேவரீர் தாமே வந்து ப்ராபித்து அருளின பின்பு
-சொத்தை சுவாமி பெற்று ஆனந்தம். விபீஷணனுக்கு கொடுத்த பின்பு ராமன் ஜுரம் நீங்க பெற்றான்
…கல்யாண குணங்களே ஆத்மாவுக்கு தாரகமாய்
அருளின் தன்மை…மயர்வற மதி நலம் அருளினன்
-நடுவில் ஆழ்வார் பெருமை சொல்லி- தாழ்ந்த தனக்கு- -அருளியதை நினைவு கொண்டு
-உயர்வு சொல்ல-உயர்வற உயர் நலமுடையவன் எவன் அவன் –
இதையே காரணம் -இவ்வளவு தான் இல்லை- அயர்வறும் அமரர்கள் அதி பதி
-என்ன பண்ணனும் துயர் அறு சுடர் அடி தொழுது எழு..
அருள் கொண்டு ..அவன் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
.மதுர கவி ஆழ்வார்..ராமனுஜரின் அருளோ
குளம்பில் தண்ணீர் தேங்கினால் குருவி குடிக்கலாம்
.. வீராணம் ஏரியில் தேங்கினால் அனைவரும் குடிக்கலாம் -நாத முனிகள் சொன்னது
–பர துக்கம் தாங்காத தன்மை..ராமனின் குணம் போல..இஷ்வாகு வம்சத்தோடு  அது..
அருள் உடைமை ஆவது யாதானும் ஓர் உயிர் இடர் பட்டால் தன உயிர் க்கு உற்ற துன்பம் போல வருந்துவது
.. ..துக்கம் போக்கும் சக்தி இருந்து அதை மாற்றுவது தான் அருள்..
தயை அனுகம்பா இரக்கம் வேற கிருபை கருணை -எதிர் பார்க்காமல் உதவுதல்
..தங்கத்துக்கு பரிமளம் வந்தால் போல -நின் அருள்
…ஈஸ்வர அனுக்ரகம் ஸ்வா தந்திரத்தால் தடை படும்
-என் அளவில் வர வில்லை உன் அருள் தானே ஆழ்வான் மூலம் வந்தது ..
வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் மேகங்காள்
மதி தவழ மால் இரும் சோலை..இக் கடல் இடத்தில் யாரே அறிபவர்-
நித்யருக்கு தெரியும்.. அவர்கள் .கேட்டு தான் தெரிந்து கொண்டார்கள்
அவர்களும் உணர்ந்து இல்லை ..அல்லல்-நேரே இருப்பிடம் சரீர சம்பந்தத்தால் குறைவு அல்லல்..
ஈஸ்வரனை விட்டு பிரிந்த அல்லல்- நேரே அல்லல் ..பூர்வர் புண்யம்- அநுக்ரகம் தான்
.ஆத்மா சம்பந்தம் அவனே-
உறைப்பு-திடமாக ஆச்ராயம்..கஜேந்த்ரனுக்கு ஹரி -நாலாவது மனு காலத்தில்- அருளியது போல
பரம பதத்தில் இருந்து சுவாமி எழுந்து அருளி -என்னை-
துக்கத்துக்கு கொள் காலமாக இருந்த என்னை .
.அவராக வந்து -இருந்தான் கண்டு கொண்டு
.பெரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த எம்பெருமான்
-கதற வில்லை நான் இருந்தாலும்-உன் சீரே
.வாட்சல்யாதி கல்யாண குணங்களை -வந்தமை-
சௌலப்யம்..அல்லல்-வாத்சல்யம் என்னை உற்றது –சௌசீல்யம் தான் பேறாக -உற்றது உகந்தது – ஸ்வாமித்வம்
கருணை -கிருபை ..அடியேற்கு- சேஷ பூதன்-இன்று-பரம சாம்யா பத்தி மோஷம்
-அடியார்கள் குழாங்கள் உடன் கூடுவது என்று கொலோ…-இது அங்கு-.இன்று இக் கடல் இடத்தே உன் சீரை -தித்தித்துகுமே..முமுஷுக்கு இல்லை பக்தனுக்கே
ரசமாய் ஆனந்தமாய் இருக்கும்– அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே போல்
அல்லல் தொலைந்தது- சீர் தித்தித்தது-

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: