அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-24-மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
இருபத்து நாலாம் பாட்டு -அவதாரிகை
ஒப்பார் இலாத உறு வினையேன் -என்றீர் -இப்படி இருக்கிற உமக்கு இவ்விஷயத்தை
முப்போதும் வாழ்த்துகை கூடின படி என் -என்ன -தாம் முன்பு நின்ற நிலையையும் –
இன்று தமக்கு இவ் உத்கர்ஷம் வந்த வழியையும் சொல்லுகிறார் –

மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

தேன் கூட்டை ஈ மொய்த்தால் போலே -ஆத்மாவை மொய்த்து கொண்டு இருப்பதாய் –
அனுபவ விநாச்யம் ஆதல் –பிராயச்சித்த விநாச்யம் ஆதல் -செய்யாத அதி க்ரூரமான கர்மத்தாலே அநேக சரீரங்கள்
தோறும் ஜராவதியாக வசித்து -அத்தாலே அவசன்னனாய் விட்டேன் -அநாதியான காலம் எல்லாம் –
அவைதிகங்கள் ஆகையாலே அயதா பூதங்களாய் இருக்கிற விஷய விரக்தி பரஹிம்சா நிவ்ருத்தி
சத்குரு சேவாதிகள் ஆன தபச்சுக்களை நோகிக் கொண்டு போரும் நீச சமயங்கள் பூமியிலே விளக்கு
பிணம் போலே நசிக்கும் படியாக நிரசித்த யதாஞான யுக்தரான எம்பெருமானார் ஆகிற பரம உதாரரை
தம்முடைய ஒவ்தார்யத்தாலே காட்டக் கண்டு -இன்று உத்க்ருஷ்டன் ஆனேன் –
மொய்த்த வெம் தீ வினையார் பல்லுடல்-என்று பாடம் ஆன போது-
திரண்ட க்ரூர கர்மங்களாலே நிறைந்துள்ள அநேக தேஹங்கள் என்க –
மொய்த்தல்-திரளுதல்
கைத்தல்-கடிதல்
கார் தன்னை -என்றது முற்று உவமை–

அழுக்கு போக்க -அலமந்து உள்ள எனக்கு -கார் மழை பொழிய -என்ன குறை எனக்கு -கொண்டல் அனைய வண்மை -கூர்த் ஆழ்வான் மூலம் ஒரு பாட்டம் கருணை மழை –இரா மு -இரா பி -வாசி உண்டே முன்னும் பின்னும் –நானே நாநா வித நரகம் புகும் பாபங்கள் பண்ணினேன் –எய்த்து ஓழிந்தேன்-உன் அடி இணை அடைந்தேன் -திருவடி ஸ்வாமியே கூரத் தாழ்வான் மூலம் -காட்டக் கண்டு-உயர்ந்தேன்–பிறவியே நீக்கப் பெற்றேன் – ஸ்தோத்ரம் பண்ணும் அதிகாரம் பெற்றேன் -என்கிறார் -இதில் -கண்டேன் இன்றே உயர்ந்தேன் -காண்கை தானே  உயர்வாய் -தொழுகையே எழுவது போலே –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை
கீழ்ப் பாட்டிலே மகா ப்ராபவரான எம்பெருமானாரை -என்னுடைய வஞ்சகமான மனசிலே –
வைத்து ஸ்துதியா நின்றேன் -என்று நிர்வேதப் பட்டார் -இப்பாட்டிலே -இப்படிப்பட்ட உமக்கு ஸ்தோத்ரம்
பண்ணுகைக்கு தான் அதிகாரம் உண்டோ என்ன -தேன் கூண்டை ஈ மொய்த்து கிடைக்குமா போலே –
ஆத்மாவை சுற்றிக் கொண்டு இருக்கிற கோரமான பாப கர்மங்களாலே -அநாதி காலம் தொடங்கி-
நாநாவித தேக பரிகிரகம் பண்ணி -கர்ப்ப ஜன்மாத்ய வஸ்த்தா சப்தகத்தாலே -இவ்வளவும் நசித்துப் போந்தேன் –
சாஸ்திர விஹிதமான தபச்சுகளை பண்ணும் -நீச சமய நிஷ்டர் எல்லாம் – பக்நராம்படி ஸ்ரீ பாஷ்யாதிகளைப் பண்ணும்
யதார்த்த ஜ்ஞானத்தை உடையரான எம்பெருமானார் என்னுடைய காள மேகமானார் – அவரைக் கண்டு உத்கர்ஷ்டன் ஆனேன் –
ஆகையால் ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் -என்கிறார் .

வியாக்யானம்-
மொய்த்த
அநாதி காலமே தொடங்கி என்னாலே பண்ணப்பட்ட பாபங்கள் எல்லாம்
என்னாத்மாவை மொய்த்துக் கிடக்குமே .மொய்த்தல் -திரளுதல் -தண்ட காரண்யத்தில் சக்ரவர்த்தி
திருமகனை -கர தூஷணாதி  பதினாலாயிரம் ராஷசர்கள் மொசிந்தால் போலே காணும் இவரை மொசிந்த படி –
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ -என்று
க்லேசிக்கும்படி சூழ்ந்து கொண்டு இருக்கிற
-வெம் –
அநு கூலமாகவும் அநு பயமாகவும் மொசிந்தால் -ஒருபடியாக சஹிக்கலாம் -அப்படி அன்றிக்கே அதி குரூரமான -தீ வினையால்-புண்ய பாபங்கள் இரண்டும்
அன்று நான் செய்தது -எல்லாம் பாபமே யாய்த்து -அன்றிக்கே -சிறிது புண்யங்கள் உண்டாகிலும் -அதுவும்
ப்ராப்தி பிரதிபந்தகமாய் தலைக் கட்டுகையாலே -இவர் அபிப்ராயத்தாலே தீ வினையாம் இறே –
அதபாதாக பீதஸ்த்வம் -என்று புண்யங்கள் எல்லாம் பாதக சப்தத்தாலே சொல்லப்பட்டது இறே –
ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலும் -அப்படியே –அநக -என்கிற இராமாயண ஸ்லோக பதத்துக்கு ததீய
பர்யந்தம் அன்றிக்கே -இருக்கிற ராம பக்தியும் -அகம் என்னும் அத்தை ஈட்டுக் காரரும் அருளிச் செய்தார் இறே –
மொய்த்த வெம் தீ வினையால்
-ராவண பவனத்தில் பிராட்டியை சுற்றிலும் வளைத்துக் கொண்டு
தஹ பச -என்று கோர பாஷணங்களைப் பண்ணும் ஏகாஷி ஏக கர்ணி-முதலான ராஷச ஸ்திரீகளைப் போலே
சூழ்ந்து கொண்டு தபன ஹேதுக்களான என்னுடைய பாபங்களாலே தப்தனானான் என்றபடி –
பல்லுடல் தோறும் –
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான நாநா வித சரீரங்கள் தோறும் –சரீர சம்பந்தம் அடியாக இறே
பாபங்களைப் பண்ணுவது –மூத்து -அவ்வவ சரீரன்களிலே ஜராவதியாக வசித்து -இது கர்ப்ப வாச ஜன்மாதிகளுக்கு
உப லஷணம் -வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவர் ஏலும் பாதியும் உறங்கிப் போகும் நின்றதிப் பதினையாண்டு
பேதை பாலகன் அதாகும் பிணிபசி மூப்பு துன்பம் -என்று மயர்வற மதி நலம் அருளப் பெற்றவரும் அருளிச் செய்தார் இறே –
கர்ப்ப ஜன்மாத்ய வஸ்தாஷூ துக்க மத்யந்த துச்சகம் -ந கிஞ்சித் கணன் நித்ய – சராமிந்தீரிய கோசர -ஏவ விஷய த்ர்ஷ்ணா –
வசகச்ய ஜராமம தத் போக கர்ணா நாஞ்ச சைதில்யம் குருதேப்ர்சம் -என்று அபி யுக்தரும் சொன்னார்கள் இறே –
ஸ்ரீ பராசர பிரம்ம ரிஷியும் ஜரயயை அனுவித்து சொல்லி இருக்கிறார் இறே –
அதனால் எய்ந்து ஒழிந்தேன் –
அததே ஹாவாசா நேசதுக்ன முத்க்ராந்தி சம்பவம் -கர்ச்ச்ரென தேஹான் நிஷ்க்ராந்தி –
யாம்ய கிங்கரர் தர்சனம் -யாதானா தேக சம்பந்தம் யாம்ய பாசைச கர்ஷனம் -உக்ர மார்க்க தத் க்லேசம் -யமச்ய புரித ஸ்த்திதிம் –
தன்னி யோக வசாயா தயாத நாச சகஸ்ரசா -ச்ருத்வாசம்ர்த்வாசதூயேஹம் தத்ப்ரேவேச பயாகுல – புனஸ் சகர்ப்ப ஜென்மாதி
ப்ரேவேசம் கர்ம நிர்மிதம் -முஹூர் விசிந்தய மச் சித்தம் கபதேஜல சந்த்ரவத் -என்று அபி யுக்தரும் சொன்னார்கள் இறே –
முன நாள்கள் எல்லாம்
-இது அநாதி காலமே தொடங்கி -இவ்வளவான காலம் எல்லாம் -ஜன்ம ஜரா மரணாதிகளை
உடையனாய்க் கொண்டு -அவசன்னாய் விட்டேன் என்ற படி
-இன்று –இப்போது -பொய்த்தவம் -சாஸ்திர விஹிதமான தபசு –
ராவண சந்யாசனம்-காலநேமி ஜபம் போலே –
போற்றும் –
அசாஸ்த்ரா விஹிதம் கோரம் தப்யந்தே தபோ ஜனா -யஜந்தே நாம யஜ்ஞைச
தம்பே நாவிதிபூர் வகம் -கர்சயச்சசசரீராணி-பூதக்ராமமசெதனம் – மாஞ்சை வாந்தஸ் சரீரச்த
தான்வித்யா சூரநிச்சயான் -என்கிறபடி -அசா ஸ்த்ரீயங்களாய் -அயதா பூதங்களான -விஷய விரக்தி –
பரஹிம்சா நிவர்த்தி -குரு சேவாதிகளான-தபச்சுக்களை ஆசரித்துக் கொண்டு போரும் —இவர்கள் தான் வெளிக்கு செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் -போலே காணும் இருப்பது –
புலச் சமயங்கள்
நீச சமயங்கள் -சைவ -மாயாவாத -சாக்தேய -காணாபத்ய – சார்வாக -பௌததாதி சமயங்கள் –
நிலத்தவிய -பூ லோகத்தில் பஸ்மாம் படி -சமிதோதய சங்கராதி கர்வ -காதாதர தாகாதா நாம் -இத்யாதிகளிலே -சொல்லுகிறபடியே –
அவை எல்லாம் இந்த பூ லோகத்தில் அவியும்படி
-யஜ்ஜ மூர்த்தி யாதவ பிரகாசன் -முதலானோரை
சிஷித்து -அநு கூலராகப் பண்ணியும் -திரு நாராயண புரத்தில் பௌத்தரை நிரசித்தும் -அவற்றை பஸ்மாசாத்தாம் படி
பண்ணி அருளினார் என்று -சர்வ லோக பிரசித்தம் இறே -கைத்த -ஸ்ரீ பாஷ்ய கீதா பாஷ்ய வேதார்த்த சங்க்ரஹாதிகளை
அருளிச் செய்து -வியாக்யானம் பண்ணி அருளின –அன்றிக்கே –கைத்தல் -அவற்றை விளக்கு பிணம் போலே
நசிக்கும்படியாக நிரசித்த -என்னவுமாம்
-மெய் ஞானத்து -யதா வஸ்த்தித தத்வ விஷயிக ஜ்ஞான யுக்தரான –
இராமானுசன் -எம்பெருமானார் -என்னும் கார் தன்னையே –
இவராகிற மேகத்தை -வேத மார்க்க பிரதிஷ்டாபனம்பண்ணி
சர்வ லோகத்தையும் ரஷித்தது ஒரு ஔதார்யமாக நினைத்திலர் – ஆர்த்த அபராதியான காகாசுரனை சக்கரவர்த்தி திருமகன்
ரஷித்தால் போலே -அப்படிப் பட்ட தம்மையும் ரஷித்து அருளின படியால் -ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும்
வர்ஷூகவலாகம் போலே இருந்தார் என்று ஸ்லாக்கிக்கிறார் –கார் தன்னையே -என்றது முற்று உவமை –
கண்டு -இப்படிப் பட்ட பரமோதாரரைக் கண்டு கோயிலிலே சேவித்து -ஆழ்வான் புருஷகாரமாக ஆஸ்ரயித்து –
என்றபடி -அவர் விஷயீ கரித்த பின்பு –உயர்ந்தேன் – உத்க்ரிஷ்டனானேனே -என்றது ஆய்த்து –
அத்தாலே ஸ்தோத்ரம் பண்ணத் தொடங்கினேன் என்று கருத்து –

————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
இப்பாரில் ஒப்பார் இல்லாத மா பாவியாய் முன்னர் கீழ்ப் பாட்டு இருப்பினும்
இன்று உயர்ந்தவராய் எம்பெருமானாரை முப்போதும் வாழ்த்துதல் எங்கனம் உமக்கு
வாய்ந்தது என்ன -தமது முன்னைய நிலையையும் -இவ் உயர்வு வந்த வழியையும் –அருளி செய்கிறார் –

பத உரை
முனை நாள்கள் எல்லாம் -அநாதியான காலம் எல்லாம்
மொய்த்த -ஆன்ம தத்துவத்தை மொய்த்துக் கொண்டு இருக்கிற
வெம் தீ வினையால்-கொடிய பாபத்தால்
பல் உடல் தோறும் -பல வகைப்பட்ட சரீரம் தோறும்
மூத்து -முதுமை அடைந்து
அதனால்-அக்காரணத்தால்
எய்த்து ஒழிந்தேன் -களைத்து போய் விட்டேன்
பொய் தவம் போற்றும் -பொய்யான தவங்களை ஆதரிக்கும்
புலைச் சமயங்கள்-நீச மாதங்கள்
நிலத்து -உலகத்தில்
அவிய -அணைந்து போக
கைத்த -வெறுத்து தள்ளின
மெய் ஞானத்து -உண்மை அறிவு உடையரான
இராமானுசன் என்னும் -எம்பெருமானார் என்கிற
கார் தன்னை -மேகம் போன்ற வண்மை உடையவரை
கண்டு -சேவித்து
இன்று -இப்பொழுது
உயர்ந்தேன் -மேன்மை பெற்றேன்

வியாக்யானம்
நன் அநாதி காலம் சம்சாரத்திலேயே உழன்று -நெஞ்சத்தில் சப்தாதி விஷயங்களுக்கே இடம் கொடுத்து –
வஞ்சகனாகவே இருந்தேன் -அந்நிலையிலே எம்பெருமானாரை வைப்பாய வான் பொருளாக
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவதாக நடித்தேன் -நெஞ்சில் வைத்ததும் -வாழ்த்தியதும் –
பொய்யே யாயினும் எம்பெருமானார் தன் வண்மையினால் தன்னை உள்ளபடி காட்டி
இந்நிலையை உண்மை நிலை யாக்கி விட்டார் -அவர் காட்டக் கண்ட நான் இப்பொழுது உயர்ந்தவனாகி
விட்டேன் -என்கிறார் அமுதனார் இப்பாசுரத்தில் –
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி மெய்யே பெற்று ஒழிந்தேன் -திருவாய் மொழி – 5-1 1- –
என்னும் நம் ஆழ்வார் ஸ்ரீ சூக்தியை இதனோடு ஒப்பிடுக –
மொய்த்த வெம்தீ வினையால்
தேன் கூட்டில் ஈக்கள் மொய்த்து கொண்டு இருப்பது போலே -ஆன்ம தத்துவத்தை தீ வினைகள்
மொய்த்து கொண்டு உள்ளன –தீ வினைகள்-புண்யமும் பாபமும் –இரண்டும் முறையே இன்பத்தையும் துன்பத்தையும் தந்து –
பேர் இன்பத்துக்கு இடைஞ்சலாய் இருத்தலின் தீ வினைகள் ஆயின -தீமை பயப்பது தீ வினை –
ஸ்வர்க்க சுகம் முதலிய சிற்று இன்பமும் துன்பமும் பேர் இன்பத்தைப் பற்றத் தீ யவையே என்க-
அனுபவத்தாலோ பிராயசித்தத்தாலோ தொலைந்து ஒளியாதபடி எண்ணிறந்து நிறைந்து உள்ளமை பற்றித் தீ வினைகள்
வெவ்வியவைகள் ஆயின –
பல் உடல் தோறும் முத்து –
தீ வினைகள் பல திறத்தன -ஆதலின் அவை யடியாக வரும் உடல்களும் பல வகைப்பட்டன –
அத்தகைய உடல்கள் பலவற்றிலும் -ஒவ்வொரு உடலிலும் முதுமைப் பருவம் முடிய இருந்து பட்ட
கஷ்டங்கள் கணக்கற்றன -முதுமையை சொன்னது மரணத்திற்கு முந்திய நிலையாய் இருத்தல் பற்றி என்க –
இதனால் கர்ப்ப வாசம் முதல் எல்லா நிலைகளிலும் துன்புற்று உழன்றமை தோற்றுகிறது-பிறந்ததும்
இறந்தால் எல்லா நிலைகளிலும் படும் துன்பங்களை அனுபவிப்பதற்கு வழியில்லையே –அதனால் எய்த்து ஒழிந்தேன் முனை நாள்கள் எல்லாம்
சரீரத்தில் உண்டாகும் -கர்ப்ப-ஜன்ம பால்ய யவ்வன ஜரா மரண நரக அவஸ்தைகள் எனப்படும் –
அவஸ்தா சப்தகத்திலும் -ஏழு நிலைகளிலும் -அநாதி காலமாக துன்புற்று உழன்றமையால்
களைப்பு அடைந்து விட்டேன் என்கிறார்
இது காறும் தமது முன்னைய நிலையை கூறினார் –
இனி மேலுள்ள பகுதியால் இன்றைய நிலையை கூறுகிறார் –
இன்று கண்டு உயர்ந்தேன் –
கண்டு –எம்பெருமானார் தம்மைக் காட்டக் கண்டு –
மேல் கார் தன்னையே -என்று மேகம் நீர் நிலம் என்று பாராது மழை பொழிவது போலே
எம்பெருமானார் தகுதி பாராது தம் வண்மையினால் -தமக்கு உபகரிப்பதை கூறுவதால் -இவர் கண்டமை
அவர் காட்டி உபகரித்ததாகும் என்று கூறல் வேண்டும் -அடை மொழி இடாதே இராமானுசனை என்றோ
அடை மொழி இட்டு காரனைய இராமானுசனை என்றோ கூறாது -இராமானுசன் என்னும் கார் தன்னையே -என்று
மேக மாகவே வருணிப்பது இவ் உபகாரத்தின் முக்கிய தன்மையை அமுதனார் கருத்தில் கொண்டு உள்ளார்
என்று நமக்கு புலப்படுகிறது –வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய் – 27- என்று மேலே இதனை
வெளிப்படையாக இவரே கூறுவதும் காண்க –
பொய்த்தவம் –கார் தன்னையே —
வேதம் அபௌருஷேயம் ஆதலின் அது உண்மை அல்லது கூறாது –
அதனை பிரமாணமாய் ஏற்காத நூல்கள் கூறுவன உண்மைக்கு புறம்பானவை- பொய்யானவை
அத்தகைய பௌத்த ஜைனாதி நூல்கள் உண்மையானவைகளை கூறாத பொய் நூல்களாம் –
அங்கனமே வேதப்பொருளை உள்ளவாறு காண்கிலாத குத்ருஷ்டி நூல்களும் பொய் நூல்களே யாம் –
அவற்றில் கூறப்படும் தவங்கள் மெய்யானவை என்று மயங்கி -அதன்படி ஒழுகுவோர் பயன் அடையாது
பாழாகி விடுகின்றனர் –பொய் நூலை மெய் நூல் என்றோதி மாண்டு -பெரிய திரு மொழி – 2-5 5-என்றார்
திருமங்கை மன்னனும் தவமாவது சாஸ்திர நெறிப்படி தன்னை வருத்தப்படுத்தி கொள்ளுகை –
வைராக்கியம் அகிம்சை சத்குருசேவை முதலியன தவங்கள் ஆம் -ஆயின் அவை வேத நெறியில் வகுகப்படாது
பொய் நூல்களால் புகட்டப்பட்டவை ஆதலின் பொய்த் தவங்கள் ஆம் –
கண்ணன் மீதான காதல் அடியாக விளையாத தலானும் –
கண்ணன் உகப்புக்கு என்று கருதாத ததலானும் –
கண்ணனைக் காட்டித் தருபவனான குரு விஷயமாக ஆகாத தாதலானும் –முறையே
வைராக்யமும் -அஹிம்சையும் -சத்குருசேவையும்–உண்மை தவங்கள் ஆகா –
அத்தகைய தவங்களை போற்றும் சமயங்கள் புலை சமயங்கள் என்று இகழுகிறார் அமுதனார் –
புலை சமயம்-நீச சமயம்
நீச சமயங்கள் மாண்டன –என்பர் மேலும் –
புலை அறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் -திரு மாலை-7 – என்னும் தொண்டர் அடி பொடி ஆழ்வார்
ஸ்ரீ சூக்தி நினைவுறத் தகும் -அதனை பெரியவாச்சான் பிள்ளை -இவை நீச தர்சனம் ஆன படி எங்கனே என்னில் –
ஈஸ்வர விபூதியில் ஒருவனை ஹிம்சித்தாரை சொல்லுகிற பாபங்களுக்கு அவதி இல்லை -ஈஸ்வரனையும் –
ஈஸ்வர விபூதியையும் -அஞ்ஞா நாசியாலே -அறியாமை என்னும் வாளாலே -அழிக்கப் பார்க்கிறவர்கள் இறே-
என்று வ்யாக்யானத்தில் விளக்கி இருப்பது இங்கு அறிய தக்கது -அஹிம்சையை விரதமாக கூறும் சமயங்கள்
வீணாக கீழ் கூறியபடி -பொய் விரதத்தை கை கொண்டு ஒழுகும் படி செய்து -பல ஏமாந்த மாந்தரை
ஹிம்சிப்பதனால் -புலை சமயங்கள் ஆயின -எந்த ஜீவனுக்கும் ஹிம்சை செய்யக் கூடாது என்று கூறும்
ஜைனர்கள் -தங்கள் கூற்றுக்கு முரண்பாடாக கேசத்தை பிடுங்கிக் கொண்டு தங்களுக்கே ஹிம்சை செய்து –
கொள்வதனால்-அவர்கள் சமயம் புலை சமயம் ஆகிறது என்க -வேதனை செய்கை வெறும் மறமென்று
விளம்பி வைத்தே மாதவம் என்று மயிர் பறிப்பார் -பரம பத பங்கம்-வேதனை செய்கை-ஹிம்சிக்கை
வெறும் மறம் -வீணான செயல்-என்று வேதாந்த தேசிகன் இங்கனமே பரிஹசிப்பதையும் காண்க –
ஜைனர்கள் -கேசொல்லுஞ்ஜனம் -தலை மயிரை பிடுங்கி விடுதல்-என்னும் விரத்தை கை கொண்டு
முக்தி பெறலாம் என்று சொல்லுகின்றனர் –
இங்கனம் பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்களை இந்நிலத்தில் நிற்பதற்கு இடம் இன்றி அழிந்து போம் படி
தம் மெய் ஞ்ஞானத்தால் கடிந்து மக்களை மறை நெறியிலே உய்த்து வாழ்வித்து அருளினார் எம்பெருமானார் என்க –
மெய் ஞ்ஞானம் ஆவது தத்துவத்தை உள்ளபடியே அறிதல் –
புலைச் சமயங்களை பற்றி பொய்த் தவங்களை ஏற்று நிற்பாரையே அச் சமயங்களை யவித்து மெய்ஞ்ஞ்ன நெறியாகிய
தமது நெறியிலே உய்த்து உபகரிப்பவர் –
அங்கன் அல்லாது
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் தன்னை வாழ்த்துபவனாக நடிக்கும் என்னை -உள்ளபடி தன்னைக் காட்டி
மெய்யே நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்தும்படி -உபகரித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை
என்னும் கருத்துடன் புலைச் சமயங்கள் நிலத்து அவிய கைத்த மெய் ஞ்ஞானத்தராக அமுதனார் அவரைக் கூறினார் என்க
கார் தன்னையே இன்று கண்டு உய்ந்தேன் என்று கூட்டி முடிக்க –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

வள எழ உலகுக்கு முன் ஆழ்வார் பின் ஆழ்வார்
கேசவன் தமருக்கு முன் ஆழ்வார் பின் ஆழ்வார்
திருப்பு முனைகள் இவை
பெருமை பார்த்து அகலுகையும் எளியவன் என்றுமேல் விழுவதையும் போல
அகன்று முன் இப் பொழுது தைரியம் ஆக அருளுகிறார் இப்பாசுரத்தை
மேகம் கண்டார்-மேட்டை வெட்டி பள்ளம் போட்டுநிரப்பிய பின்பு – -ராஜா பாட்டை போல் -இள அரசர் போல
-முன் நிலை சொல்லி முதலில் —நிறைய ஜன்மாக்கள்- சூழ்ந்து உள்ள வெப்பம் போன்ற பெரிய வினைகள் -தளர்ந்து போனார்
தேன் கூட்டை ஈ மொய்த்தால் போல ஆத்மாவை மொய்த்து கொண்டு இருப்பதாய் .
..கர தூஷணாதிகர்கள் 14000 பேர் ராமனை மொய்த்தால் போல.
அனுபவ வினாச்யம் ஆதல் பிராய சித்த வினாச்யம் ஆதல் செய்யாத அதி குரூரமான கர்மம்
-வெந்தீ வினையால் —அநேக சரீரங்கள் -ஜராவதியாக வசித்து –மூத்து –
அநாதிகாலம் -முன நாள்கள் எல்லாம்
மொய்த்த தீ வினைபல் உடல் பல வகை பட்ட-
-தேவ ஸ்தாவர ஜங்கம/கற்ப ஜன்ம பால்ய யௌவனம் ஜரா மூப்பு மரணம் நரகம் -போன்ற துக்க சுழல்
.இன்று கண்டு உயர்ந்தார்..
பொய்யான தவங்களை போற்றும் நீசமான மதங்கள்-நிலத்து அவிய
-கைத்த -நிரசித்த -வெட்டி விட்ட -உண்மையான தத்வ ஞானி ராமனுசனை கண்டு இன்று உயர்ந்தேன் என்கிறார்..
இனி ராமானுசர் சம்பந்தத்தால் பிறவி இல்லை
கண்டு உயர்ந்தார் ஆழ்வான் காட்டிய அன்று . அவர் காட்ட கண்டு- அதன் மூலம்
– இனி அறிந்தேன் ஈசர்க்கும் அவர்க்கும்..உயர்ந்ததால் அவர் திருநாமம் பாட புகுந்தேன்
..ஸ்தோத்ரம் பண்ண உயர்ந்தேன்
..இனி நைசயம் பாவத்தால் விலகினால் அவர் பலம் குறைந்தது என்று ஆகும்..
அ வஸ்து–இன்று வஸ்து ஆன படியால்..
எம்பாரை பலர் எம்பெருமானார் முன்பே கொண்டாட ஆம் என்றார்
அவரது திருவடி ஏற்றம் குறைக்க கூடாது என்கிற காரணத்தால்
முதல்வா நின் நாமம் கற்ற ஆவலிப்பு –பற்றினது முதல்வன் என்ற பலம்
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் .-எதிராசன் வடிவு அழகு கண்ட படியால்-
இன்று கண்டு உயர்ந்தார்.. கண்டேன் இன்றே உயர்ந்தேன். காண்கையே உயர்வு.
. துயர் அடி தொழுது எழு– தொழுகையே எழுவது .
.போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –கொடுப்பதே புனிதம் .கொடுக்கும் அன்றே புனிதம்
…உண்ட மிச்சம் -.சேஷ்டா பிரதா .பிதா பர்தா .ஆச்சார்யர் பாகவதர் உத்தமர் போனகம் மட்டும் கொள்ளலாம்
.மேகம் மேடு பள்ளம் பார்க்காது பொழியும்
…இதனால் ஒப்பார் இலாத உறு வினையேன் என்று இருந்தும் முப்போதும் வாழ்த்துகை இதனால்
…மொய்த்த -ஆத்மாவின் உயர்வும் -வினைகளின் தாழ்வையும் இத்தால் சொல்கிறார்
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்று இன்பம்
பாவியேனை பல நீ காட்டி படுப்பாயோ..
அகத்த நீ வைத்த மாய வல் வினை நன்கு அறிவேன்
தீ வினை- எல்லாம் பாபம். சிறிது புண்யம் இருந்தாலும்-அதுவும் விலக்கு தானே
பகவானை அடைய பிரதி பந்தகம் என்பதால் விலக்கு
தனக்கு தான் தேடும் நன்மை தீமை போல விலக்க தகும்
விஷ்ணு தர்மம் -புண்யமும் தான் விலக்க தக்கது..
ராம பக்தி கூட விலக்கு சத்ருக்னனுக்கு -பரதனுக்கு கைங்கர்யம் செய்ய தடை சுவர் என்பதால்
சீதையை-700 ராஷசிகள் சூழ்ந்து -தக பாச -வெட்டவும் கொளுத்தவும் பேசும் வெந்தீ வினைகள்
..சரீரம் பாபம் சரீரம்-சுழல் போலே மாறி மாறி வருமே
..வேத நூல் பிராயம் நூறு.-.பேதை பாலகன் அது ஆகும்..
மாதரார் கயல் கண் வலையுள் பட்டு-மணி வண்ணன் வாசு தேவன் வலை
..இவனோ வலை யுள் பட்டு /வலையில் இல்லை -வலை -உள்/ பட்டு/
அழுந்து -வருத்தம் கூட தெரியாமல் இருக்க -அரங்கனோ
போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து
தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே..ஆத்மா -பனி மேகம் -ஜலம் -நெல் -புருஷன்-
கர்ப்பம்-வெப்பம் கர்ப்பத்திலே ஆரம்பம் தாய் சாப்பிடும் பொழுதே ..தலை கீழ் விழுகிறான் .
.நினைத்து நினைத்து நடுங்குகிறான்
–புல சமயங்கள்-பொய் தவம் போற்றும்-வேதம் ஒத்து கொள்ளாதா
-ஈஸ்வரன் ஆனந்தத்துக்கு இல்லாத அவைதிக பொய் தவம்-
விஷய விரக்தி /பர ஹிம்சா நிவ்ருத்தி -சத் குரு சேவாதிகள்
—நாஸ்திகம் பரப்பும் குரு சேவை .
.மெய்ஞானம் -தத்தவத்தை உள்ள படி அறிந்த இராமனுசன்-கண்டு- காட்ட கண்டு-ஒவ்தார்யம்
-பாட மாட்டேன் என்று விலகிய இவரையும் முப் பொழுதும் பாட வைத்ததால்
-பொய் தவம்-சாஸ்திர விருத்த- ராவண சன்யாசம் கால நேமி ஜபம் -போல
..கோரம் தபஸ்.டம்பத்துக்கு பண்ணுவது .
-தேவ அசுர விபாவம் -நடு சோகம் அர்ஜுனனுக்கு இதில்
…கண்ணனின் ஆசையால் வந்த விஷய விரக்தி வேணும்
. புல சமயங்கள் சைவ மாயாவாதம் கணாபாதம் மாருவாத
..பாஸ்கர யாதவ சாருவாகன் பவ்தன் /கொள்கையும் மதத்தையும் முடித்தார்.
புல அறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் முடித்தார்
-சப்த பந்தி வாதம்-சூன்ய வாதம் யக்ஜா மூர்த்தி யாதவ பிரகாசர் திருத்தி பணி கொண்டார்
-ஸ்ரீ பாஷ்யம் அருளி புல சமயத்தை நிலத்து அவிய வைத்தார்…
இப்படி புற சமயம் நசிகியது பெரிசு இல்லையாம் .-
தன்னை உய்யக் கொண்டதே -என்கிறார் –
…கார் தன்னையே -முற்று உவமை தாவி வையம் கொண்ட தடம் தாமரை போல்
அவரால் உசந்து போனேன்.
வஞ்ச நெஞ்சு இன்று உயர்ந்தேன்..அதையே காரனம
-பொய்யே கைமை சொல்லி மெய்யே பெற்று ஒழிந்தேன்-ஆழ்வார். ஆச்சார்யா தர்சனத்தால்..மாறும்.. .
.. அருள் என்னும் ஒள் வாள் உருவி
மெய்ஞானத்து -உள்ளத்தை உள்ள படி தெரிந்து
…காகாசுரனை -ஆர்த்தர அபராதி- ரஷித்து அருளியது போல
இவரை -கோவிலிலே கடாஷித்து -குண பிரவாகம் இருக்கும் இடத்தில்– காட்ட கண்டேன் -இன்றே உயர்ந்தேன் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: