அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-23-வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர்-இத்யாதி

பெரிய ஜீயர் அருளிய உரை

இருபத்து மூன்றாம் பாட்டு -அவதாரிகை
நிர்தோஷரான பிரேம யுக்தர் பரம தனமாக தங்கள் நெஞ்சிலே வைத்து கொண்டு இருக்கும்-விஷயத்தை பாபிஷ்டனான நான் ஹேயமான மனசிலே வைத்து ஏத்தா நின்றேன் -இது-அவ்விஷயத்தின் உடைய குணத்துக்கு என்னாகும் என்கிறார் –

வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –

வியாக்யானம் –
வைத்த மா நிதி -திருவாய் மொழி – 5-8 11- – – என்னுமா போலே ஆபத் ரஷகமாக வைக்கப்பட்ட
அஷயமான தனம் என்று -நிர்தோஷராய் பிரேம யுக்தராய் இருக்கும் அவர்கள் -சீரிய நிதிகளை செப்புக்குள்ளே
வைப்பாரைப் போலே -மனச்சுக்குள்ளே -திவாராத்ரா விபாகம் அற சர்வ காலத்திலும் -வைக்கும் விஷயமான
எம்பெருமானாரை -மகா ப்ருதிவியில் பாபம் பண்ணினவர்களில் இவனைப் போல் ஒரு பாபிகள்
இல்லை என்னும்படி பாபிஷ்டனாய் இருக்கிற நான் நிச்ச்நேஹனாய் இருக்க ச்நேஹிகளைப் போலே பாவித்து -உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் –
திருவாய் மொழி -5 1-9 – – என்கிறபடியே சர்வஞ்ஞனையும் மருட்ட வற்றான க்ருத்ரிம யுக்தமான
மனசிலே வைத்து -த்ரி சந்த்யமும் ஏத்தா நின்றேன் -இது அவருடைய ச்லாக்யமான புகழுக்கு என்னாய் விளையுமோ –
வான்-பெருமை
நல்லன்பர் -என்கிற இடத்தில் -நன்மை அன்புக்கு விசேஷணமாய்-அநந்ய பிரயோஜநதையா விலஷண-பத்தி என்னவுமாம் –மொய்-அழகு–

எனக்கு எய்ப்பினில் வாய்ப்பு அன்றோ நீ -திருமங்கை  ஆழ்வார் -ஓ  ஓ என்று கதற – மாசூணாது என்று பதில் வந்ததாம் -ஆழ்வாருக்கு -அது போலே அமுதனாருக்கும் –

————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
பூர்வாசார்யர்கள் எல்லாரும் –வைத்த நிதி -என்னுமா போலே -தங்களுக்கு
ஆபத்து ரஷகமாக வைக்கப் பட்ட -அஷய பரம தனம் -என்று கொண்டு -தங்களுடைய
திரு உள்ளத்திலே சர்வ காலமும் வைக்கும் விஷயமான எம்பெருமானாரை -அதி பாபிஷ்டனான-என்னுடைய மனசிலே வைத்துக் கொண்டு அவருடைய கல்யாண குணங்களை ஸ்துதிக்கத் தொடங்கினேன்-
மகா பிரபாவம் உடைய அவருடைய கல்யாண குணங்களுக்கு இது என்னாய் விளையுமோ-என்று பரிதபிக்கிறார் .

வியாக்யானம் –
வைப்பாய வான் பொருள் என்று
-சேமித்த மகா தனம் என்று -நிஷேபித்து வைத்த-பரம தனம் என்று -விஷ்ணுஸ் சேஷி ததீய சுப குண நிலயோ விக்ரஹஸ் ஸ்ரீ சடாரிஸ் ஸ்ரீ மான் ராமாநுஜார்ய
பதே கமல யுகம் பாதிரம் யம்ததீயம் -என்று சொல்லப்படுகிற பத கமலத்தை –தனம் மதீயம் -என்று
அருளி செய்கையாலே -அப்படி பட்ட எம்பெருமானாரை பரம தனமாக நிரூபித்து என்றபடி –
குருரேவ பரம்தனம் -என்னக் கடவது இறே -இப்படி யாவதாத்ம பாவி உஜ்ஜீவன ஹேதுவான பரம தனம்-என்று அத்யவசித்து இருக்கிற .
நல்லன்பர் –
ஜ்ஞாநாதிகராய்-அவர் திருவடிகளில் ப்ரீதி யுக்தர் ஆனவர்கள் –நல்லன்பர் என்கிற
இடத்தில் –நன்மை அன்புக்கு விசேஷணமாய் – அநந்ய பிரயோஜநதயா -விலஷணையான
பக்தியை உடையவர் என்னவுமாம் -அவர்கள் ஆகிறார் –ஆழ்வான் பிள்ளான் எம்பார் ஆண்டான்-பிள்ளை உறங்கா வல்லி தாசர் -முதலானவர்கள் –மனத்தகத்தே -வான்பொருள் என்றுவான் என்று விபு வாசகமாய் –
குரு ரேவா பரம் பிரம்ம -என்று சொல்லப்பட்ட மகா தனம் என்று கொண்டு -அத்தை வெளிச் செறிப்பாக
வைத்தால் சாதகமாய் இருக்கும் என்று அறியாதபடி நிரவயவமான மனச்சினுள்ளே –
நல்லன்பர் மனத்தகத்தே -ஸ்தோத்ர ரத்னம் இயம் நியச்தம் ஆசார்யஸ்து திசம்புடே -என்று-அநர்கமான ரத்னம் கிடைத்தால் செப்பிலே வைத்துக் கொண்டு இருப்பாரைப் போலே -இந்த லோக விலஷணமான மகா தனத்தை தங்களுடைய நெஞ்சின் உள்ளே
எப்போதும் வைக்கும் -பூத பவிஷ்யத் வர்த்தமான காலத்திலும் வைக்கும் .பூத காலத்தில் -நம் ஆழ்வார்
கலியும் கெடும் கண்டு கொண்மின் -பொலிக பொலிக பொலிக -என்று இவரை மங்களா சாசனம் பண்ணி நிற்கையாலும் –
ஆள வந்தார் இவருடைய பிரபாவத்தை கேட்டருளி பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளி -கரிய மணிக்கப்
பெருமாள் சன்னதியில் இருந்து இவரை மங்களா சாசனம் பண்ணினார் ஆகையாலும் –ஸ்ரீ மன் நாதமுனிகள்
ஆழ்வார் சம்ப்ராயத்தாலே இவருடைய விக்ரகத்தைப் பெற்று -சர்வ காலமும் ஆராதித்துப் போந்தார் ஆகையாலும்
நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் -என்னத்  தட்டில்லை இறே-
வைக்கும் -சேர்த்து வைக்கும் -ஜங்கம ஸ்ரீ விமான நிஹ்ர்தயானி மநீஷிணாம்-என்ன  கடவது இறே .
கிரணங்களால் தப்தனாய்க் கொண்டு -ரவி மண்டலத்திலே வர்த்தித்தும் -காடும் மேடுமான பர்வதாக்ரத்திலே
ஜடாதாரணம் பண்ணி நின்றும் -ஜல தத்வத்திலே சர்வதா வசித்தும் -இப்படி சாதனா அனுஷ்டானம் பண்ணி
சர்வேஸ்வரனுக்கு ஞானிகளுடைய ஹ்ரதய கமல வாசம் சாத்தியம் என்று பிரசித்தமாக சொல்லுகையாலே
இது பகவத் பரமானாலும் -யஸ்ய தேவ பராபக்திர் யதா தேவ ததா குரவ் -என்றும் –தேவ மிவாசார்ய முபாசீத -என்றும் –
தேவ வத்ச்யா பரஸ்ய -என்றும் -சொல்லுகையாலே இருவரும் ஒக்கும் இறே –
இராமானுசனை -எம்பெருமானாரை –
இரு நிலத்தில் -அதி விஸ்தைர்யான இந்த பூமியிலே
-ஒப்பார் இல்லாத -என்னைப் போல் பாபிஷ்டன் ஆகிலும்
கிடைப்பானோ என்று ஆராய்ந்தால் -எனக்கு துல்யமான பாபிஷ்டர் இந்த லோகத்தில் கிடையாமையாலே –
சத்ர்சர் இல்லாத –ஒப்பார் -சதர்சர் –அருவினையேன் -பிராய சித்தாதிகளால் நிவர்திப்பிக்க அரியதாய் –
அவசியம் அனுபோக்தவ்யம் கிர்தம் கர்மசுபாசுபம் -என்கிறபடி அனுபவ ஏகைக நாச்யமான பாபத்தைப் பண்ணின நான் –
நத்விராணி க்ர்தான்ய நேன நிரையர் நாலம்புன கல்பிதை பாபா நாமிதி மத்க்ர்தே தததிகான் கர்த்தும் ப்ரவர்த்தேத் வி தேப்யோப் யப்யதிகாரி தான்ய ஹமபி சூத்திர கரோமி ஷனாத் -என்றும் -அஹமசம்ய பராதசக்ரவர்த்தி -என்றும்-
துரிதம் சகலச்ய ஜந்தோ தாவச் சதத் தத்தி கஞ்சம மாஸ்தி சத்யம் -என்றும் -பூர்வைஸ் ஸ்வ நைச்ய மனுசம்ஹித
மார்ய வர்யைர் மாமேவ வீஷ்ய மகாதாம் நாதாதச்த் தேஷாம் –நைசயம் த்விதம் சடரிபோம மசத்ய மேவமத்தம்
பரோநம லி நோய தா ஆவிரச்தி -என்றும் சொல்லுகிறபடியே அத்யந்த பாபிஷ்டனான என்னுடைய –வஞ்ச நெஞ்சில் வைத்து -நான் அப்படி யானாலும் என் மனசு நிர்மூலமோ – என்னோட்டை சம்பந்தம் பெற்றதாகையாலோ
எனக்கு முன்னே பாப கர்மங்களிலே பிரவர்த்திக்கும் ஆய்த்து-பந்தாயா விஷயாசங்கி -என்னும் படியாய்
பாஹ்ய விஷய ப்ரவணமாய் -எல்லாரையும் மோஷம் போகக் கடவதாய் -சர்வஞ்ஞாரான தேவரீரும் கூட
நல்லவன் என்று திரு உள்ளத்திலே கொண்டாடும்படியான -வஞ்சனத்தை உடைய மனசிலே வைத்து
-வர்த்யாபசுர்நாவபுஸ் த்வஹா மீத்ர்சொபி சுத்யாதி சித்த நிகிலாத்மா குணாஸ் ரயோயம்
இத்யாதரேன க்ர்திநோபி மிதப்ரவக்து மத்யாபி வஞ்சன பரோத்ர யதீந்திர வர்த்தே – என்று-ஜீயரும் அனுசந்தித்தார் இறே
-முப்போதும் வாழ்த்துவன் -சர்வ காலத்திலும் –
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே -அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே -என்றும்
எதிராசன் வாழி எதிராசன் வாழி -என்று கொண்டு மங்களா சாசனம் பண்ணினாரே ஜீயரும் –
சக்ரத் ப்ர்ஷ்டனுக்கு பிராயச் சித்தம் லகுவாய் இருக்கும் -அப்படி இன்றிக்கே இதுவே யாத்ரையாக
இந்த அக்ர்த்யத்தை பண்ணா நின்றேன் –என்னாம் இது அவன் மொய் புகழக்கே– அவன் -அநந்தம் ப்ரதமம் ரூபம் –
த்வதீயம் லஷ்மணஸ்ததா -பலபத்ரஸ் த்ரீயஸ்து-கலவ் ராமானுஜ ச்ம்ர்தா-என்று பிரம்ம நாரதீயத்திலும் –
சேஷாவா சைன்யநாதொவா ஸ்ரீ பதிர் வேத்தி சாத்விகை -விதர்க்யாய மகா ப்ராஜ்ஜை யதிராஜாய மங்களம் – என்று
அபியுக்தராலும் -பிரதிபாதிக்கப்பட்ட அப்ரதிம பிரபாவரான எம்பெருமானார் உடைய -மொய் புகழ்க்கு -அதி
ச்லாக்யமான ப்ரபாபத்துக்கு –மொய் -அழகு -அன்றிக்கே அசந்க்யேயமான ப்ரபாவத்துக்கு என்னுதல் –
இது என்னாம் -இது என்னாய் விடுமோ
-இப்படிப் பட்ட மங்களாசாசனம் பண்ணுகிற இது -அவருடைய வைபவத்துக்கு
என்னாய் தலைக் கட்டுமோ -என்றபடி -நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் –
புனைந்த கண்ண நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் -நினைந்த எல்லாப் பொருள் கட்கும் வித்தாய் முதலில்
சிதையாமே -மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே -என்றால் போலே தலைக் கட்டுகையாலே
எத்தனை சாகாசம் பண்ணுகிறேன் என்று அநு தபிக்கிறார் -திகசுசிமவி நீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம் பரம புருஷயோ
ஹம்யோகிவர்யா க்ரகண்யை –விதிசிவச நாகாத்யைர் த்த்யாது மத்யந்த தூரம் தவ பரிஜன பாவம் காமயே காமவ்ர்த்தா –
என்று ஆள வந்தாரும் இப்படியே அனுசந்தித்து அருளினார் இறே –

————————————————————————–

அமுது உரை

அவதாரிகை –
நல்ல அன்பர்கள் சிறந்த செல்வமாக தங்கள் நெஞ்சிலே வைத்து கொண்டு இருக்கும் எம்பெருமானாரை-மிக்க பாவியான நான் குற்றம் உள்ள நெஞ்சிலே வைத்து எப்போதும் ஏத்தா நின்றேன் -இது அவரது சீரிய-கீர்த்திக்கு என்னவாய் முடியுமோ -என்கிறார் –

பத உரை –
வைப்பு ஆய -ஆபத்துக்கு உதவும் பொருட்டு வைக்கப் பட்டதான
வான் பொருள் என்று -சிறந்த செல்வம் என்று
நல் அன்பர் -நல்லவர்களான பக்தர்கள்
மனத்தகத்தே -நெஞ்சுக்கு உள்ளே –
எப்போதும் -எல்லாக் காலத்திலும்
வைக்கும் -வைத்துக் கொண்டு இருக்கிற
இராமானுசனை -எம்பெருமானாரை
இரு நிலத்தில்-பெரிய பூமியில்
ஒப்பார் இலாத -ஒத்தவர்கள் இல்லாத
உறு வினையேன் -பெரும் பாவியான நான்
வஞ்ச நெஞ்சில் -ஏமாற்றுகிற நெஞ்சகத்திலே -வைத்து -வைத்து கொண்டு –
முப்போதும் -மூன்று வேளைகளிலும்
வாழ்த்துவன் -வாழ்த்துகின்றேன்
இது அவன் மொய் புகழுக்கு -இது அவருடைய சீரிய கீர்த்திக்கு
என் ஆம்-என்ன ஆகுமோ –

வியாக்யானம் –
தான் சேம வைப்பாக கொண்ட எம்பெருமானாரை -ஆண்டான் ஆழ்வான் போல்வார்கள் —தங்கள் நெஞ்சில் குறைவுறாத நிதியாக வைத்து பேணுவது கண்டு -நல்லன்பர்கள் பேணும் சீர்மை வாய்ந்த இந்த நிதியை போலி அன்பனாகிய இவ் ஒப்பற்ற பாவியேன் நெஞ்சில் வைத்து ஏத்துவதனால் அந்நிதியின் சீர்மை சிதைந்து விடலாகாதே என்று வருந்துகிறார் அமுதனார் –
இங்கனம் தங்களை தாழ்ந்தவர்களாக நினைப்பதும் கூறுவதும் -நைச்ய அனுசந்தானம் –பெரியோர்கள் மரபு -அன்பு நிலையில் மேல் விழுந்து -துய்த்து இன்புற்றுப் பேசுவதும்
அறிவு நிலையில் தன் தாழ்வு தோன்றி இகழ்வாய தொண்டனேனாகிய என்னால் குறை
நேர்ந்து விடலாகாதே என்று பிற்காலிப்பதும் தவிர்க்க ஒண்ணாதவை என்க-
வைப்பாய –இராமானுசனை –
மது சூதனையே ஆழ்வார் வைத்த மா நிதியாக கொள்வது போலே –
நல்லன்பர் எம்பெருமானாரையே வைப்பாய வான் பொருளாக கொள்கின்றனர் என்க —
எனக்கு எய்ப்பினில் வைப்பினை -பெரிய திரு மொழி – 7-10 4- – -என்றபடி கைம்முதல் இல்லாத
காலத்து நிதி பயன்பட்டு காப்பது போலே -தம்மைக் காப்பாற்றிக் கொள்ள சாதனம் எதுவும் இல்லாத
நிலையில் -தம்மை காப்பாற்றும் எம்பெருமானாரே -சித்த சாதனமாய் பயன்படுதலின் -அவரையே
வைப்பாய பொருளாக கொள்கின்றனர் –நல்லன்பர் -என்று உணர்க -வைப்பாய பொருள் பயன் பட
பயன் பட -குறைந்து கொண்டே போம் -எம்பெருமானாராகிய வைப்பு பொருளோ -அங்கன் குறைவுறாது –
என்பார் -வான் பொருள்-என்றார் –
நல்லன்பர்
என்னைப் போல வஞ்ச நெஞ்சர் அல்லர் இவ்வன்பர் -குற்றம் அற்றவர் -என்றபடி –
இனி நல்லதான அன்பை உடையவர் என்னலுமாம் –
அன்புக்கு நன்மையாவது -வேறு பயன் ஒன்றும் கருதாமை
மனத்தகத்தே வைக்கும் –
அருமை தெரிந்து அன்பு பூண்டவர் ஆதலின் -சீரிய பொருளை செப்பிலே வைப்பது போலே
உள்ளே வைத்து பேணுகின்றனர் -என்க
எப்போதும் வைக்கும் –
அல்லும் பகலும் என்றபடி-
எக்காலத்திலும் வெளியே வைக்கத் தக்க பொருள் அன்றே இது –
எப்போதும் -அகிஞ்சனராகிய நம்மைக் காப்பவர் எம்பெருமானாரே என்று
ப்ரீதி உடன் இடைவிடாது நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்-எனபது கருத்து –
இரு நிலத்தில் ஒப்பார் இலாத உறு வினையேன் –
இப்பூமி பரப்பு அடங்கலும் தேடினும் எனக்கு இணையான பாபியை காண இயலாது –
அத்தகைய மகா பாபி நான் என்றபடி –
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் –
வஞ்சிப்பது பிறரை மாத்ரம் அன்று -எம்பெருமானாரையே வஞ்சிக்க வல்லது என் நெஞ்சு என்கிறார் –
நல்லதும் தீயதும் பகுத்தறியும் பண்பு வாய்ந்த பேர் அறிவாளராய் இருந்தாலும் -அவ் எம்பெருமானாரையே
ஏமாற்றுக்கு உட்படும்படி பகட்டுவது என் நெஞ்சு -உண்மையிலே அன்பு அற்று இருந்தும் அது அன்பார்ந்ததுபோலே
தன்னைக் காட்டும் –உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் -திருவாய் மொழி – 5-1 3- – என்னும்-நம் ஆழ்வார் திரு வாக்கை இங்கு நினைவு கூறுக –
தூய மனத்தகத்தே -எப்போதும் வைக்கும் பொருளை -வஞ்ச நெஞ்சில் வைத்து மாசு படுத்தி
விட்டேனே -என்று இரங்குகிறார் -எப்போதும் அவர்கள் த்யானம் பண்ணுகிறார்கள்-நானோ காலை-மத்யானம் மாலை மூன்று வேளைகளிலும் த்யானம் செய்பவன் போலே நடிக்கின்றேன் –
அவர்கள் பிறர் அறியாது அடக்கமாக த்யானம் செய்வார்கள்-நானோ மூன்று வேளைகளிலும் வாழ்த்துவதன் மூலம்
அதனை டம்பமாய் வெளிப்படுத்தி கொள்கிறேன் –
என்னாம் இது அவன் மொய்ப் புகழக்கே
என் இழி தகைமை எல்லோருக்கும் தெரியும் ஆதலின் -நல்லன்பர் போலே நானும் நெஞ்சில் வைத்துக் கொள்ளின்
இழிவுடையார்ர் இடத்தும் இருப்பவர் தனா எம்பெருமானார் என்கிற எண்ணம் ஏற்படும் ஆதலின் அவருடைய-அழகிய புகழுக்கு இழுக்கு உண்டாகி விடுமோ -என்று அஞ்சுகிறார் –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது
.நீசனும் ஸ்தோத்ரம் சொல்வது போல் சொன்னேனே -என்ன ஆகுமோ..பயந்து-அருளுகிறார் இதில்
நைச்ய அனுசந்தானம்
அன்பும் ஞானமும் மாறாடுகிறது-மாறி மாறி வருமே ஆழ்வாருக்கும் – அமுதனாருக்கு அது போல்
.தேனும் பாலும் கன்னலும் அமுதமும் போல் .எல்லாம் கலந்து ஒழிந்தோம் என்பர் ..அனுபவம் பிரேம தசையில்
வள ஏழ் உலகின் முதலாய -..அருவினையேன் ..எந்தாய் என்பேன் –நினைந்து நைந்தே –உன் பெருமை மா சூணாதோ -என்பர்
வைகுந்தா மணி வண்ணா -நைச்சயம் பாவித்து விலகுவாரோ என்று கலங்கிய அவனுக்கு
உன்னை சிக்கென பிடித்து கொண்டேன் -மாசுசா என்பர் ஆழ்வாரும்
.-பக்தர் பேசவும் பித்தர் பேசவும் பேதையர் பேசவும்.-கம்பர்
.சிறிய திரு மடலில் கண்ணனை அழிக்க பேசி பெரிய திரு மடலில் அவன் அரசை அழிக்க முயன்றார்..
இரு நிலத்திலும்–நீசரில் -எனக்கு – ஒப்பார் இல்லாதவன் – -அரு வினையேன் வஞ்ச நெஞ்சு
வான் பொருளை வைத்தேன் –
நல் அன்பர் மனத்து அகத்தே – .அன்பு -நல்ல அன்பு.. அன்புடையாரின் நல்ல மனம்.
.ஆழ்வான் ஆண்டான் எம்பார் போல்வார்கள் எம்பெருமானாருக்கு நிதி-
இங்கோ வஞ்ச நெஞ்சு –வஸ்துவோ வான் பொருள்..
லஷ்மணனை தூக்க முடிய வில்லை -ராவணனால் -பரதன் தம்பியை தூக்கமுடிய வில்லை
பரதன் ஜேஷ்ட ராம பக்தன் .ராமனுஜத்வ என்பதால் இல்லை பரதனால் தான் என்கிறார் அங்கே
லகுச்தம் குரங்கு என்றார்.வால்மீகி.கபெகே. சப்தம் –குரங்கு..அது வஞ்ச நெஞ்சு.. மனத்தில் தான் வித்யாசம்
..ராமானுஜர் நம் நெஞ்சிலும் ஒளி வீசுகிறார் ஆழ்வான் மனசிலும் ஒளி வீசுகிறார்..
ஆள வந்தாரும் நைச்ய பாவம் அநு சந்தித்தாரே அது போல..மா முனிகளும் இது போல் அருளி
.நம் பெருமாளை ஏமாற்றி ஈடு சொல்லி தனியனும் பெற்று-ஏமாற்றி கொண்டு இருக்கிறேன்
நீ உட்கார்ந்த ஆச்சர்ய பீடத்தில் அமர்ந்து யதீந்திர ப்ரவணர் பெயர் வேற
பொய் இல்லாத மா முனி என்ற பெயர் வேற பெற்றேன்
..எதிராசர் வாழி வழி எதிராசன் என்று வாழ்த்துவர்
..இதுவே யாத்ரையாக பண்ணி கொண்டு இருந்தேன் .
..அவன் மொய் புகழ்–ஆதி சேஷன் லஷ்மணன் நம்பி மூத்த பிரான் -முன்பு யுகங்களில் -கலியில் ஸ்வாமி
பூதூரில் வந்து உதிர்த்த புண்யனோ
ஆழ்வாரோ
தூது நடந்த நெடுமாலோ-
ஆய் சுவாமிகள் திரு நாராயண புரத்தில் மா முனி பார்த்து கேட்டது போலே
-யாதவ குலத்தை தூக்க கீழ் குலம் புகுந்த வராஹா கோபாலர் போலே –
-ராமனுஜன்-பலராமன் தம்பி/ராமானுஜரோ பாஹ்ய குத்ருஷிகள் பர மதங்களை வீழ்த்தி –
யாதவ பிரகாசர அடக்கி/அபி யுக்தராலும் நிகர் சொல்ல பட முடியாத பெருமை -அந்த பார்த்த சாரதி போல
புன்னு படல் திறந்து புக்கு-கண்ணன் வெண்ணெய் திருட போவான்
–திறந்த கதவு வழியே போக தெரிய வில்லை மூடி தாள் இட்டு அடி வழியே புகுந்து திருடுவானாம் ..
அப்படி குழந்தை தனத்தில் மெய்ப்பாடு காட்டி –
சாந்தீபன் பிள்ளையை மீட்டி-வைதிகர் பிள்ளைகளை உயிர் உடன் கொணர்ந்து –
பரிஷித் பிழைபித்து -பல பல பரத்வம் காட்டி –அது போல் ஸ்வாமியும்
..அப்ரதிமை இல்லை…வான் புகழ் –வைத்து நான் முப்போதும் ஏத்துவேன்.. அவர்கள் எப்பொழுதும் எத்துவார்கள்..
நான் பெயரை எதிர் பார்த்து ஏமாற்ற–ராமானுஜர் பக்தர் நான் -என்ற பெயர் வர –வஞ்ச நெஞ்சு..
பரம தனமாக வைத்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள்
வைத்த மா நிதி -ஆபத் ரஷகமாக -வான் பெருமை -வைப்பே பெருமை அஷயமான தனம்.
நிர் தோஷராய்-நல் அன்பர்-.நல்ல அமரரும் உண்டு .கல் மாரி பொழியும் பொழுது தீய அமரர்.
சத்வ குணம் எப்பொழுதாவது தான் தலை எடுக்கும்
.பிரயோஜனாந்தரர்கள் அவர்கள்
இவர்கள் அப்படி இல்லை அநந்ய பிரயோஜனர்கள் நல் அன்பர்
…சீரிய நிதிகளை செப்புக்குள் வைப்பாரை போல மனசுக்குள் வைத்து பாதுகாப்பவர்கள்
திவாராத்ரா விபாகம் அற சர்வ காலத்திலும் ..வைக்கும் விஷயம்
..இரு நிலம் -மகா பிருத்வியில் என்னை போல் நீசத்தனத்தில் ..ஒப்பார் இலாத அருவினையேன் .
.நிஸ் சிநேகிதனே இருக்கிற நானும் ஸ்தோத்ரம் செய்தேனே
மித்ர பாவேன -நீர் பூத்த நெருப்பு போல அமித்திரன்..உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம்-என்கிற படி
சர்வஜ்ஜைனையும் கூட ஏமாற்ற வல்ல வன் நெஞ்சம் வஞ்ச நெஞ்சு- எனக்கு முன்னே பாபம் செய்யும் மனசு.
.கண்ட இடத்தில் ஆசை வைத்து சர்வேச்வரனும் ஏமாந்து போக்கும் படி.
.தெரிஞ்சவன் இடம் தெரியாது என்று சொல்லி தெரியாதவன் இடம் தெரிந்தவன் என்று சொல்லி ஏமாற்றி
.. மெய்யே பெற்று ஒழிந்தேன் பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி…
.ஞானம் இன்றி பசு போல நரன் உடம்பு இருகால் மாடு –கும்குமம் சுமந்த கழுதை யோபாதி…
.உனக்கு அடியவன் என்று நினைந்து சுருதி தெரிந்தவன் என்று உசந்தவர்கள் அனைவரும் போற்றுகிறார்கள்
நல் அன்பு– அன்புக்கு விசேஷணம் அநந்ய பிரயோஜனம் ..மொய் -அழகு ..பிரயத்தனம் பட்டு பெற்ற புகழ் இல்லை
….வைத்த -வைத்த மா நிதி ..அஷய குறையாத பெருமை சித்தோ உபாயம்..தனம் மதியம் த்வ பாத பங்கஜம்- பரம தனம் இது தானே
நல் அன்பர். ஞானாதிகராய் -கனிந்து பிரேமம் மதி நலம் -அவர்கள் ஆகிறார்
ஆழ்வான் ஆண்டான் பிள்ளான் பிள்ளை உறங்கா வல்லி தாசர் போல்வார்
வான் விபு வாககமாய் பரந்து விரிந்து மிக பெரியவர்- விபுவாய் -நம் சிறிய மனசில் எப்படி வைக்க
–ராமனுஜரின் -அகடிதகடா சாமர்த்தியத்தில் நம்பிக்கை கொண்ட நல் அன்பர்.யோக நீதி நண்ணுவார்களின் சிந்தையில்வருவாரே-
ஆழ்வார் பொலிக பொலிக பொலிக -அருளி -பவிஷ்யகாராசார்யர் – இராமனுசன் சதுர வேத மங்கலம் –
ஆளவந்தார் கரிய மாணிக்க பெருமாள் சந்நிதியில் -ஆ முதல்வன் -என்று விஷயீகரித்தாரே
நாத முனிகள் ஆழ்வார் பிரசாதத்தால் பெற்ற பவிஷ்யகாராசார்யர் விக்ரகம் இன்றும் நாம் சேவிக்க பெறுகிறோமே
. தன ஸ்வரூபத்தை செவிடனுக்கும் மூக்கு அருந்தவனுக்கும் காட்டி உஜ்ஜீவித்தாரே.அப்பேர் பட்ட புகழ்…எண்ணில் அடங்காத புகழ்
வஞ்ச நெஞ்சு வைத்தது த்யானத்துக்கு அவர்களுக்கு நானோ ஏத்தி ஏமாற்ற..பாவனத்வம் இல்லை ..தயை இல்லை ..விநயம் இல்லை ..வெட்கமும் இல்லை ..இருந்தும் பெரியோர் கேட்ட உன் திருவடி தாமரையை கேட்டேன்..நல்லது ஒன்றும் இல்லை யோக்யதை இல்லை நைச்ய அனுசந்தான பாசுரம்-

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: