அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-22-கார்த்திகையானும் கரி முகத்தானும்-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை

இருபத்திரண்டாம் பாட்டு -அவதாரிகை –

முன்பு தன்னோடு எதிரிட்ட தேவ ஜாதி -பின்பு தன் வைபவத்தை அறிந்து ஸ்தோத்ரம் பண்ண –அவர்களுக்காக வாணன் அபராதத்தை பொறுத்த சர்வேஸ்வரனை ஏத்தும் எம்பெருமானார்-எனக்கு ஆபத்து தனம் -என்கிறார் –

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

கிருத்திகா நஷத்திர சம்பந்தத்தாலே கார்த்திகேயன் என்று சொல்லப்படுகிற ஸூப்ரஹ்மண்யனும்
கஜ முகனான கணபதியும் –அவர்களுக்கு சகாயமாய் வந்த அக்னியும் -த்ரி நேத்ர யுக்தமான-வடிவை உடைய ருத்ரனும் -துர்கையும் -ஜ்வரமும்-
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடியங்கி யோடிட -திரு சந்த விருத்தம் -71 – என்கிறபடியே
புறம் காட்டி யோடி -கிருஷ்ண கிருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் -விஷ்ணு புராணம் -5 33-41 – –
என்கிறபடியே சர்வேஸ்வரன் என்று அறிந்த பின்பு -க்ருதகம்- அக்ருதகம் -க்ருதகாக்ருதம் -என்று மூன்று வகைப்
பட்டு இருக்கிற இந்த அண்டத்தை உன்னுடைய திரு நாபீ கமலத்திலே ஜனிப்பித்தவனே -என்று அவனுடைய
ஜகத் காரணத்வ கதனத்தாலே -அவனுக்கும் தங்களுக்கும் உண்டான பித்ரு புத்ர சம்பந்தாதிகளை
ஸூசுப்பித்து நின்று தங்களை ஆஸ்ரயித்த வாணனுடைய ரஷண அர்த்தமாக ஸ்தோத்ரம் பண்ண –
அவர்களுக்காக பாணாசுரனுடைய அபராதத்தை ஷமித்த குணசுத்தியை உடைய சர்வேஸ்வரனை
அந்த குண வித்தராய் கொண்டு -ஏத்துகிற எம்பெருமானார் -எனக்கு ஆபத்துத் துணையாக சேமித்து வைத்த -தனம் ..
போற்றுதல்-புகழ்தல்
வைப்பு -நிஷேபம்–

தோள் பலம் கண்ட பின்பே ஸ்தோத்ரம் பண்ணினான் ருத்ரன் -கிருஷ்ண கிருஷ்ண மா பாஹோ-பிரகலாதன் -விரோசனன் -மஹா பலி -நமுசி -பாணன் -இருவரும் பிள்ளைகள் -நமுசி மஹா பாலி திருக் கோவலூரில் சேவிக்கலாம் –இதுவும் ஒரு பரம்பரை -அவதாரங்களும் இவர்களுக்காக -காமரு சீர் அவுணன் -அன்றோ -நம்மாழ்வார் நாத முனிகள் ஆளவந்தார் -மூவர் திருவடி சம்பந்தம் அருளிச் செய்து -இவர்கள் மண்டி கிடந்த கண்ணன் பற்றி அருளிச் செய்கிறார் -இதில் -அவன் இவன் என்று கூழேன் மின் -நெஞ்சினால் நினைப்பவன் எவன் அர்ச்சை பாடிய உடனே  அன்று தேர் கடாவின  கழல் காண்பது என்று கொல் கண்களே என்பர் -கிருஷ்ண அனுபவமே -நம்மாழ்வார் மூன்றாம் பதிகம் -முதல் இரண்டாலும் கொள்கை நிரதேசித்து அருளின பின்பு -சாஸ்த்ர மரியாதை படி நாராயணனே -என்றார் –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை
-பாணன் என்கிற கோர அசுரன் கோர தபச்சாலே ருத்ரனை வசீகரித்து -அவனைத் தன்
வாசலிலே வைத்துக் கொண்டு இருந்த காலத்தில் -அவன் தன்பெண் பிள்ளையான உஷா நிமித்தமாக
அநிருத்தாழ்வானை நிரோதிக்க -கிருஷ்ணன் இந்த வ்ருத்தாந்தைக் கேட்டு -அவன் மேல் படை எடுத்து வர –
ருத்ரனும் சபரிகரனாய் கொண்டு வந்து எதிரிட்டு -கிருஷ்ணனோடே கோர யுத்தம் பண்ணி -பலாயிதனான பின்பு –
தன்னை உள்ளபடி அறிந்து ஸ்தோத்ரம் பண்ணினவாறே -அப்போது ருத்ரன் முதலான தேவ ஜாதிக்காக –
பாணனுடைய ஆர்த்த அபராதத்தைப் பொறுத்த க்ர்ஷ்ணனை ஸ்துதிக்கும் எம்பெருமானார்
எனக்கு மகா நிஷேப பூதர் -என்கிறார் .

வியாக்யானம் –
கார்த்திகையானும் -இத்யாதி
-பிரகலாதனுடைய பௌத்திரனாய் -மகா பலியினுடைய
புத்ரனான -பாணன் என்கிறமகா அசுரன் கோரமான தபச்சுக்களால் ருத்ரனை பிரசன்னனாக்கி வசீகரித்துக் கொண்டு –
நீ என் வாசலில் இருந்து சகல லோக ஜெயத்தையும் பண்ணித் தர வேண்டும் என்று அர்த்தித்தவாறே -ருத்ரனும் அப்படியே
பார்யா புத்த்ராதி சஹிதனாய் வந்து தலையில் பூ வாடாதபடி உன்னைக் காக்கிறேன் என்று பிரதிக்ஜை பண்ணி
அவனுடைய வாசலிலே இருக்கிற காலத்திலே-அவனுடைய கன்யகையான உஷா ரூப லாவண்யாதிகளால்
அப்ரதிமையாய் இருக்கை யாலே -அவளுக்கு க்ரீடார்த்தமாக ஒரு ஸௌதத்தை பண்ணிக் கொடுக்க – அவளும்
பஹூ பரிசாரிகா ஸ்திரீகளோடே அந்த ஸௌத தத்திலே விஹரியா நின்று கொண்டு -தனக்கு
தகுதியானவர்களைத் தேடும் பருவம் வந்த வாறே -ஒரு மாய பிறவியான தோழியை அழைத்து –
பூ லோகத்தில் இருக்கிற ராஜ குமாரர் எல்லாரையும் -ஒரு சித்ர படத்திலே எழுதிக் கொண்டு வர வேண்டும்
என்று சொல்ல -அவளும் அப்படி எழுதிக் கொண்டு அவள் கையில் கொடுக்க -அவள் எல்லோரையும் பார்த்து
அவர்களிலே த்வாரக நகர வாசியாய் -கிருஷ்ணனுக்கு பேரனாய் -பிரத்யும்னனுடைய குமாரனான அனிருத்தாழ்வானைப்
பார்த்து -அவரையே வரிக்க வேணும் என்னும் அதி வ்யாமோகத்தாலே அந்த தோழியை பிரார்த்திக்க –
அவளும் அசுர ஜாதியில் பிறந்த மாயாவினி யாகையாலே -த்வாரகையில் உள்ள எல்லாரையும் வஞ்சித்து –
அநிருத் தாழ்வானை எடுத்துக் கொண்டு வந்து அந்த ஸௌததத்திலே வைக்க -உஷையும் அநிருத் தாழ்வானும்
அந்யோந்யம் ச வதித்துக் கொண்டு -காந்தர்வ விவாஹத்தாலே ஒருவரை ஒருவர் வரித்து போக பரராய் இருக்க –
பாணனும் அச் செய்தி அறிந்து குடில சித்தனாய் அநிருத் தாழ்வானைப் பிடித்து நிரோதிக்க –
இவ் வ்ருத்தாந்தத்தை கிருஷ்ணன் கேட்டருளி வாணன் மேல் சீறி ச பரிகரனாய் படை எடுத்து வர –
அவன் வாசலில் இருந்த ருத்ரன் எதிரிட்டு தோற்று ஸ்துதி பண்ணினான் என்று -இந்த வ்ர்தாந்த்தங்கள் எல்லாம் –
பாஹவத ஹரிவம்சாதிகளிலே பிரசித்தம் இறே -அந்த கதா முகேன இப்பாட்டை அருளிக் செய்கிறார் –
கார்த்திகையானும் -ருத்ர புத்ரனாய் கிருத்திகா நஷத்ரத்திலே ஜலத்திலே ஜனித்த சண்முகனும்
கரி முகத்தானும் -ருத்ரன் தஷ யாக த்வம்சம் பண்ணின போது அங்கே இருந்தவர்கள் இவனுடைய சிரசை
சேதித்தவாறே -தேவ ஜாதி எல்லாம் திரண்டு வந்து ஒரு ஆனையினுடைய தலையை அறுத்துக் கொண்டு
வந்து -இவன் கழுத்தின் மேலே சேர்க்க -அன்று தொடங்கி கஜானனன் என்ற பேரை வகித்த ருத்ர கணபதியும் –
கனலும் முக்கண் மூர்த்தியும் -லோக சம்ஹாரம் பண்ணுகிற சம்வர்த்த காலாக்னி போலே பிரஜ்வ விதமான
மூன்று கண்களை உடைய நாமத்தாலே விருபாஷன் என்று பேசப்படுகிற ருத்ரனும் -அன்றிக்கே -கனலும் -என்று
அவர்களுக்கு சகாயமான அக்னியை சொல்லவுமாம் –மோடியும் -துர்க்கையும் –வெப்பும் -யுத்த பரிகரமாய்
எதிர்படைக்கு சந்தாபகரமான -ஜ்வராதி தேவதையும் -இத்தனை சாதனங்களுடன் வந்து யுத்தம் பண்ணி –
கிருஷ்ணனுடைய பாண பாதத்துக்கு சஹிக்க மாட்டாதே -முதுகிட்டு -முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி யோடிட –
என்கிறபடியே -விமுகராய் புறம் காட்டி ஓடி -அப்போது அவனுடைய பரத்வத்தை அறிந்து –மூ வுலகும் பூத்தவனேஎன்று -க இதி பிரம்மணோ நாம ஈசோஹம் சர்வதேஹினா – ஆவாந்த வான்சே சம்பூதவ்
தஸ்மாத் கேசவ நாமவான் -என்றும் -ஏதவத் வைவிபுதச்ரே ஷ்டவ் பிரசாத குரோத ஜவ ச்மர்தவ் -ததா தர்சித
பந்தானவ் ஸ்ர்ஷ்டி சம்ஹார காரகவ் -என்றும் வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி யதனுள் கண் வளரும் -என்றும் சொல்லுகிறபடியே
சமஸ்த லோகங்களையும் ஸ்ர்ஷ்டிக்கைக்காக காரண ஜலத்திலே ஒரு பவனான ஆலம் தளரின் மேலே
பள்ளி கொண்டு அவனுடைய திரு நாபீ கமலத்திலே -சதுர் முகன் தொடக்கமான சகல ஜகத்துக்களின்
உடையவும் -உத்பத்தி காரணமாய் இருப்பதொரு தாமரைப் பூவை விகசிப்பித்த ஜகத் காரண பூதன் ஆனவன் -என்று
போற்றிட -தங்களுக்கும் அவனுக்கும் உண்டான பித்ர் புத்ராதி சம்பந்தங்களை சூசிப்பியா நின்று கொண்டு –
ஸ்தோத்ரம் பண்ண –போற்றுதல்-புகழுதல் -கிர்ஷ்ண கிர்ஷ்ண மகா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் –
என்றும் -கிருஷ்னேதி மங்களானாம் யச்யவாசி பிர வர்த்ததே பச்மீபவந்தி ராஜேந்திர மகாபாதக கோடாயா-என்றும்
-க்ர்ஷ்ணா-என்றும் தான் தீர கழியச் செய்த அபராதத்துக்கு பிராயச்சித்தார்தமாக -திரு நாம சங்கீர்த்தனம்
பண்ணுகிறான் காணும் -ப்ராயச்சித்தான்ய சேஷாணி தப கர்மாத்மகாநிவை -யாநி தேஷா மசெஷாணாம்
கிருஷ்ண அனுஸ்மரணம் பரம் -என்னக் கடவது இறே -கிருஷ்ண -என்றும் க்ர்ஷிப்ர்பூவாசகஸ் சப்தோனஸ்
ச நிர்வர்த்தி வாசக -தயோரைக்யம் பரப்ரம்ம க்ர்ஷ்ணா இத்யபிதீயதே -என்னும்படி -உபய விபூத்யாத்மகனாய் –
என்றும் -ஜகச்சச -என்று தத்ரூப மகா ப்ர்திவி யானவனே – என்றும் -மகா பாஹோ -பூர்வ காலத்தில் தேவர்களும்
ரிஷிகளும் -அசுத்தாஸ்தே சமஸ்தாச்து தேவாத்யாம் கர்ம யோக -என்றும் -அவித்யாந்தர்க்க தாஸ் சர்வே -என்றும் –
நமேவிதுஸ் சூரகணா பிரபவன்ன மகர்ஷய – என்றும் சொல்லப்பட்ட பிரக்ரதர் யாகையாலே -ஹரி ஹரர்கள்
இருவருடையவும் -பலாபலங்களை அறிவதற்காக விஸ்வ கர்மாவை அழைத்து -இரண்டு தனுச்சுக்களைப்
பண்ணச் சொல்ல -அவனும் அப்படியே பண்ணிக் கொடுக்க -அவர்கள் அந்த தனுச்சுக்களை எடுத்து இருவர்
கையிலும் கொடுத்து -யுத்தம் பண்ண வேணும் என்று பிரார்த்திக்க -அப்படியே இருவரும் யுத்தம் பண்ணுகிற போது –
விஷ்ணுவுடைய சர வேகத்தை -ருத்ரன் சஹிக்க மாட்டாதே மிகவும் அவசன்னனாய் -ரஜஸ் தமச்சுக்கள் அபி பூதமாய் –
சத்வம் தலை எடுத்தவாறே -அப்போது அவரை -சர்வ ஸ்மாத்பரன் -என்று அறிந்து -ஸ்தோத்ரம் பண்ணினான் -என்று பிரசித்தம் இறே –
அப்படியே இப்போதும் தமோத்ரேகத்தாலே யுத்தம் பண்ணி -அவனாலே அடி பட்டு -பின்பு சத்வம்தலை எடுக்க –
பூர்வ காலத்திலே அபதானத்தை ஸ்மரித்து -அவனுடைய பாஹூ  பலத்தை அறிந்தவன் ஆகையாலே –
மகா பாஹோ என்று சம்போதிக்கிறான் –
ஜானே -இவ்வளவும் தேவரீர் கொடுத்த அதிகாரத்தாலே யுத்தம் பண்ணி -அடி பட்ட பின்பு –
சத்வம் தலை எடுத்து தெளிந்தேன் -சத்வாத் சஞ்சாய தேஜ்ஞ்ஞானம் -என்றது இறே -தெளிந்த படி
எங்கனே என்னில் -த்வாம் புருஷோத்தமம் -என்றும் -வாசுதேவ குமாரராய் -ஆஸ்ரித சுலபனான தேவரீரை –
என்றும் -புருஷோத்தமம் –என்றும் -அதோச்மிலோகேவேதேச பிரதித புருஷோத்தம -யோ மா மேவ மசமூடே
ஜாநாதி புருஷோத்தமம் -என்று தேவரீர் அருளிச் செய்த படி -பரம புருஷன் என்று -இப்போது
தெளிந்தேன் என்று -போற்றிட -இப்படி குணி நிஷ்ட குணாபிதானம் பண்ணி ஸ்துதிக்க –வாணன் பிழை பொறுத்த – இந்த ச்தோத்ரத்தாலே பிரசன்னனாய் அநிருத் தாழ்வானை நிரோதித்து –
மகா அபராதம் பண்ணி நின்ற -வானனுடைய மகா அபராதத்தை ஷமித்த -தீர்த்தனை -ஒருவன்
சில அபராதங்களைப் பண்ணினால் அவை அனுபவ பிராயசித்தங்களாலே போக்க வேணும் -இறே –
இவன் அப்படி அன்றிக்கே -ஒருவரை ஸ்தோத்ர மாத்ரத்தாலே -அவனுடைய பாபங்களை எல்லாம்
பொடி பண்ணின -பாவனனை -பதித பாவனனை-ஏத்தும் -இந்த பிரபாவத்தை இட்டு ஸ்துதிக்கிற –
ஏத்தும் -என்கிற வர்த்தமான நிர்தேசத்தால் -ஸ்ரீ பாஷ்ய கீதா பாஷ்யாதிகளாலே -சர்வ காலத்திலும்-லோகத்தில் அவனுடைய பிரபாவத்தை ச்தாபிக்கிறவர் -என்றபடி -இராமானுசன் -எம்பெருமானார் –
என் தன் சேம வைப்பே -எனக்கு யாவதாத்ம பாவியாய் -உஜ்ஜீவிக்கும்படி -சேமித்து வைத்த ஆபத்து தனம் –
என்றது ஆய்த்து –வைப்பு -நிஷேபம் –

————————————————————————–

அமுது உரை
அவதாரிகை
தன்னை எதிர்த்து போரிட்ட அமரர் மக்கள் இவர்களோடு கூடிய முக் கண்ணன் என்னும் இவர்கள்
தோல்வி அடைந்து தன் வைபவத்தை அறிந்து துதிக்க –அவர்களுக்காக வாணன் அபராதத்தை
பொறுத்த சர்வேஸ்வரனை ஏத்தும் எம்பெருமானார்-எனக்கு சமயத்துக்கு உதவ சேமித்து வைத்த செல்வம்-என்கிறார் .

பத உரை –
கார்திகையானும் -கார்த்திகேயன் என்று சொல்லப்படுகிற சுப்ரமண்யனும்
கரி முகத்தானும் –யானை  முகனான கணபதியும்
கனலும் -அக்னி தேவனும்
முக் கண் மூர்த்தியும் -மூன்று கண்கள் கொண்ட வடிவு படைத்த ருத்னனும்
மோடியும் -காளியும்
வெப்பும் -ஜவர தேவதையும்
முதுகிட்டு -புற முதுகு காட்டி ஓடி
பின்னர்
மூ வுலகும்-மூன்று உலகங்களையும்
பூத்தவனே என்று -உண்டு பண்ணிணவனே என்று
போற்றிட -துதிக்க
அவர்க்காக
வாணன் -பானாசுரனுடைய
பிழை பொறுத்த -குற்றத்தை மன்னித்த
தீர்த்தனை-சுத்தமானவனை
ஏத்தும் -ஸ்தோத்ரம் செய்கிற
இராமானுசன்-எம்பெருமானார் –என் தன் சேம வைப்பு
எனக்கு சேமித்து வாய்த்த செல்வம் ஆவார் –
எம்பெருமானார்க்கு பூர்வாசார்யர்கள் ஆன நாத முனிகள் ஆளவந்தார் இவர்கள் இடம் உள்ள பக்திபேசப்பட்டது-
கீழ் இரண்டு பாசுரங்களாலே -இனி கீழ் கூறிய ஆழ்வார் -நாத முனிகள் -ஆளவந்தார் -இவர்கள்
பர தேவதையாக வழி பட்ட கண்ணன் இடத்தில் -அவருக்கு உள்ள ஈடுபாடு பேசப்படுகிறது –இந்த பாசுரத்தில் –
கண்ணன் கல்லது இல்லையோர் கண்ணே -என்று நம் ஆழ்வார் கண்ணனையே பர தேவதையாக
ஸ்தாபித்தார் -நாத முனிகள் யமுனைக் கரையிலே குடி இருந்து யமுனைத் துறைவனை வழி பட்டும் –
அத திருநாமத்தையே தம் திருப் பேரனாருக்கு சாத்தச் சொல்லியும் -அரசன் தன் பெண்டிரும் தானுமாய்
இவர் யோகத்தில் இருப்பதைக் கண்டு வியந்து மீண்டு போகும் பொழுது -திரு உடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேன் என்னும் -என்றபடி கண்ணனும் கோபியருமாக கருதி -அம்மேதகு மன்னனை பின் தொடர்ந்து –
கண்ணனை தாம் காமுற்று பரதேவதையாய் வழி பட்டதை காட்டி அருளினார் -ஆளவந்தாரும் கண்ணனை –
தனைப்பற்றி அருளிய கீதையை -மணக்கால் நம்பி இடம் இருந்து கேட்டு -அதில் கூறப்படும் பர தேவதையை
தவிர மற்று ஒரு உபாயம் இதனின் மிக்கது இல்லை –அதனை இப்போதே சாஷாத் கரிக்க வேணும் என்று
வேட்கை மீதூர்ந்து -மணக்கால் நம்பி திருவரங்கத்தால்-பெரிய பெருமாளை காட்ட -மழை பெய்தால் ஒக்கும்
கண்ண நீரினொடும் அன்று தொட்டு பிரியாது கீதைப் பொருளாம் அரங்கனை வழி பட்டு -கண்ணன் பால்
உள்ள தன் பரத்வ பிரதிபத்தியை காட்டி அருளினார் –
இவ்விதம் ஆழ்வாரும் ஆச்சார்யர்களும் உகந்த கண்ணனை எம்பெருமானாரும் ஏத்துவதாக -கோருகிறார்
அமுதனார் -கண்ணனது பரத்வம் பாணாசுர யுத்தத்தில் தெளிவாக வெளிப்படுதலின் வாணனது பிழையை
பொருத்து அருளிய தூய்மையை எம்பெருமானார் எத்துவதாக சொல்லுகிறது இந்த பாசுரம் –
கார்திகையானும்
சரவணத்தில் பிறந்த சுப்ரமணியனுக்கு கார்த்திகைப் பெண்கள் பால் கொடுத்த காரணத்தால் கிருத்திகை மன்னனாக
அவன் கூறப்படுகிறான் -கார்த்திகேயன் -எனபது வட மொழி பெயர்
கரி முகத்தானும்
கரி-யானை-வட சொல் –
கார்திகையானும் கரி முகத்தானும் முக் கண் மூர்த்தியினுடைய மக்கள் ஆவர் –
முக் கண் மூர்த்தி –
எரித்து விடுவான் என்னும் அச்சத்தை விளைவிக்கக் கூடிய வடிவு படைத்தவன் -என்றபடி
இத்தகைய திறன் உடைமையே கண்ணனையும் மதிக்காது எதிர்க்கும்படி செய்தது -என்க-
மோடியும் –
இவளை விஷ்ணு புராணம்-கோடரி-என்கிறது
அசுரர்கள் உடைய குல தேவதையாய் -வித்யா ஸ்வரூபமான இவள் வாணன் மீது சக்கரத்தை
கண்ணன் பிரயோகிக்க முற்படும் போது -வாணனை காப்பதற்காக -கண்ணன் எதிரே அரையில் ஆடை இன்றி
நின்றதாகவும் -அதனால் வெட்கி -கண்ணன் கண்களை மூடிக் கொண்டே சக்கரத்தை பிரயோகித்ததாகவும் –
அந்த புராணத்திலே பேசப்படுகிறது -அவ்விடத்துக்கு எங்கள் ஆழ்வான் -அருளிய வ்யாக்யானத்தில் –
கண்ணன் அவளுக்கு -பன்னிரண்டு ஆண்டுகள் என்னிடம் பக்தி செலுத்திய பயன் உன்னை ஒரு கால் பார்த்து
வணங்கின மாத்ரத்திலே நசித்து விடும் -என்றும் -எப்பொழுதும் அரையில் ஆடை அற்றவளாக கடவை -என்றும்
சாபம் இட்டதாக மேற்கோள் காட்டி யுள்ளார் -திரு மழிசை பிரானும்-மோடியோடி லச்சையாய்ச் சாபமெய்தி முக் கணான் –
என்று திருச்சந்த விருத்தத்தில் -53 – சாபமிட்ட செய்தியை அருளி செய்து இருப்பதும் -இங்கு அறிய தக்கது –
அதன் வ்யாக்யானத்தில் -பெரிய வாச்சான் பிள்ளை -சாத்விகர்க்குத் தர்சனமே தொடங்கி லஜ்ஜையாம் படி
இவர்களால் அபரிக்ராஹ்யையான சாபத்தை ப்ராபித்த காளியோடே-என்று அந்த சாபத்தை விளக்கி இருப்பதும் காண்க –
முதுகிட்டு
பாணாசுர னோடு போரிட அவன் நகராகிய சோணித புரத்தை நோக்கி கண்ணன் படை எடுத்து வந்த போது –
தானும் தன் மக்களும் பக்க பலமாக வந்த அக்னி முதலிய தேவர்க்களுமாக முக் கண்ணன் வாணனை காக்க
முற்பட்டு போருக்கு ஆற்றாது -புறம் காட்டி ஓடினான் -என்க –
பிறகு பாணாசுரன் கண்ணனை நேர எதிர்த்து போரிட -அவ்வசுரனுடைய ஆயிரம் தோள்களையும் அறுத்து
அவனைக் கொல்ல கண்ணன் கருதிய போது -முக் கண்ணன் தன்னால் அபயம் அளிக்கப்பட அவனைக்
காக்கும் நோக்குடன் –மூவுலகும் பூத்தவனே -என்று கண்ணனைப் போற்றி -வாணனை கொல்லாது காக்குமாறு
வேண்டினான் -என்க –
வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை –
வாணனுக்கு அபயம் அளித்து -தன்னை எதிர்த்தவன் முக் கண்ணனாய் இருப்பினும் -தற் சமயம்
தன் பிரபாவத்தை உள்ளபடி உணர்ந்து அவன் வேண்டிக் கொண்டமையின் வாணனை கொல்லாது
விட்டதோடு -அவன் பிழையையும் பொறுத்து அருளினான் கண்ணன் -அத்தகைய சுத்தமான குணம்
உடையவன் என்றபடி-இவ்வரலாற்றினை ஹரி வம்சத்திலும் -ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் –
ஸ்ரீ பாகவதத்திலும் விரிவாக காணலாம் -இதன் சுருக்கம் வருமாறு –
பாணாசுரன் பரம சிவ பக்தன்-பரம சிவன் நடமாடும் போது மத்தளம் கொட்டி அவனை மகிழ்வித்தான் –
பரம சிவன் மகிழ்ந்து அவனுக்கு ஆயிரம் கரம் கொடுத்ததோடு -பரிவாரமும் தானுமாக -அவனுக்கு காவலாக
கூடவே இருந்தான் -.தம்பதிகளான பார்வதி பரமேஸ்வரர்கள் இணைந்து விளையாடி மகிழ்வதை
பாணாசுரன் மகள் உஷை கண்டாள் -தானும் இவ்வாறே கணவனைப் பெற்று அவனோடு இன்புற்று வாழ்வதற்கு
ஆசை கொண்டாள்-இதனை அறிந்த பார்வதி -வைகாசி மாதம் வளர் பிறை த்வாதசி அன்று நீ ஒரு கனா காண்பாய் –
அக்கனாவில்உன்னோடு ஒரு ஆடவன் கூடுவான் -அவனே உனக்கு கணவன் ஆவான் -அவனோடு கூடி விளையாடி
நீயும் என்னைப் போல் இன்புறுவாய் -என்று உஷையை நோக்கி கூறினாள்-அவ்வாறே உஷை கனா கண்டாள் –
அவனை தன் தோழி சித்ர லேகை எழுதிக் காட்டிய பல சித்திரங்களுள் ஒன்றினால் அடையாளம் கண்டு கொண்டாள் உஷை-
அவன் த்வாரகையில் உள்ள கண்ணனுடைய பேரனும் -பிரத்யும்னனுடைய புத்திரனுமான அநிருத்தனே -எனபது ஊர்ஜிதம் ஆயிற்று –
அவன் மணமானவன் -அந்தபுரத்திலே உறங்கிக் கொண்டு இருக்கும் போது சித்ர லேகை தன் யோக வித்யையின் பலத்தினால்
யாரும் அறியா வண்ணம் அவனை உஷையின் கன்னி மாடத்தில் கொணர்ந்து அவனை காண்பித்தாள்
அநிருத்தன் உஷையுடன் கூடிக் கழிப்பதை பணி யாட்கள் வாயிலாக ஒருவாறு அணிந்த வாணன்
போராடி இறுதியில் நாக பாசத்தாலே அவனைக் கட்டிப்  போட்டான் -அநிருத்னனைக் காணாது கலைநய
கண்ணன் முதலியோர் நாரதர் மூலம் விஷயம் அறிந்து அநிருத்னனை மீட்பதற்காக சோணித புரத்தை
நோக்கி படை எடுத்து வந்தனர் -நினைத்தும் வந்த கருடன் மீது கண்ணன் எழுந்து அருளினான் –
வந்த படையை சிவ பிரானுடைய ப்ரமத கண்கள் தடுத்தன -அவர்களை சிதற அடித்து நகரை நெருங்கியது கண்ணன் படை –
பின்னர் மூன்று தலைகளும் மூன்று கால்களும் கொண்ட சிவ பிரானை சேர்ந்த ஜவர தேவதை வாணனை
காப்பதற்காக கண்ணனோடு போர் இட்டது -வைஷ்ணவ ஜவர தேவதையால் அது நிராகரிக்கப்பட்டது -பிறகு
அக்னி தேவன் தோற்கடிக்கப் பட்டான் -அசுரப் படை அனைத்தும் -வாணனும் -சிவ பிரானும் -சுப்ரமணியனும்
போருக்கு எழுந்தனர் -கண்ணனுக்கும் பரம சிவனுக்கும் பயங்கரமான போர் மூண்டது -கண்ணன் ஜ்ரும்பகாஸ்த்ரத்தால்
சிவ பிரானை கொட்டாவி விட்டு கொண்டே இருக்க செய்து ஒய்வுறச் செய்தான் – சுப்பிரமணியன் வாகனம் கருடனால்
புண் படுத்தப்பட்டது -பிரத்யும்னனின் பாணங்களால் நோவுற்று கண்ணன் ஹூங்காரத்தாலே சக்தி ஆயுதம்
பயன் அற்று போரினின்றும் விலகி ஓடினான் சுப்பிரமணியன் -அசுரப்படைகளும் சிவ பரிகாரங்களும்
நலிவுற்றன -பின்னர் நந்தி தேரோட்ட கண்ணனோடு போரிட முற்பட்டான் வாணன்
ஐந்நூறு விற்கள் ஏந்தி ஆயிரம் கை படைத்த வாறன் வாணன் -பல பல பாணங்களை எய்து
இறுதியில் கண்ணனை கையில் சக்கரம் எடுக்கும்படி செய்தான் -வாணனை கொல்லும்
கருத்துடன் கண்ணன் கையில் சக்கரம் எடுத்ததும் வாணனை காப்பதற்காக அசுரர்களுடைய
குல தெய்வமும் வித்யா ரூபமுமான கோடரி என்னும் பெயர் வாய்ந்த கௌரியின் சக்தி
அறையில் ஆடை இன்றி கண் எதிரே நின்றாள்-அவள் நின்றதும் கண்ணன் கண்ணை
மூடிக் கொண்டே வாணன் தோள்களை துணிப்பதர்க்காக சக்கரத்தை ஏவினான் -அவன்
தோள்களை அது அறுத்து தள்ளியது -மீண்டும் அவனை நாசப் படுத்துவதற்காக சக்கரத்தை
ஏவ முற்படுவதை கண்டு உமாபதி தன்னால் அபயம் அளிக்கப்பட்ட வாணனை பிராணன் போகாமல் காப்பதற்காக
கண்ணனை போற்றி வேண்டிக் கொண்டான் -கிருஷ்ண கிருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் -என்று
நீண்ட கை படைத்த கிருஷ்ண கிருஷ்ண உன்னைக் புருஷோத்தமனாக அறிகிறேன் -கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத-
எனபது தற்காலப் பாடம் -என்று தொடங்கி நான் அபயம் என்று சொன்ன தை பொய்யாக்காது அருள வேணும் –
என்னிடம் இருந்து வரம்யேற்று செருக்கு கொண்டனன் – பொருது அருள வேண்டும் என்று மன்றாடினான் –
கண்ணன்-உனக்காக பொறுத்தேன் என்று சக்கரத்தை ஏவாது வாணனை உயிரோடு விட்டு விட்டான் –
கருடன் காற்றுப் பட்டதும் அநிருத்தனை கட்டி இருந்த நாகபாசம் விடுபட்டது -அநிருத்னனையும் உஷையையும் மீட்டுக் கொண்டு
கண்ணன் முதலியோர் த்வாரகைக்கு மீண்டும் வந்து சேர்ந்தனர் –
உன்னை புருஷோதமனாக அறிகிறேன் என்றமையால்-அறியாமையால் முன்பு போரிட்டதை சிவ பிரான்
ஒப்புக் கொண்டமை தெரிகிறது -அமுதனார் -இங்கே முதுகிட்டு -போற்றிட -என்னும் சொல் அமைப்பாலே
முதுகிட்டமையால் பிரபாவத்தை அறிந்து -போற்றினதை உய்த்து உணர வைத்தார் –
போற்றிட வாணன் பிழை பொறுத்த -என்றமையின் போற்றின முக் கண்ணனுக்காக வாணன் பிழை
பொறுத்தமை தோற்றுகிறது
மூ வுலகும் பூத்தவனே என்று போற்றிட –
இந்த மூ வுலகு எனபது -பூ லோகம் -ஸ்வர்க்க லோகம்-பாதாள லோகம் என்னும் மூ வுலகைக்
குறிப்பிட வில்லை -எல்லா வுலகும் கண்ணன் படைப்பு ஆதலின் -ஆனவே அணைத்து உலகங்களையும்
அடக்குவதற்காக –கிருதகம்-அகிருதகம் -கிருதகா கிருதகம் –என்னும் மூ வகைப்பட்ட வுலகம் என்று கொள்ள வேணும் –
இந்த அண்டத்தையே -என்றதாயிற்று –
பூத்தவனே –நாபீ கமலத்தை மலரச் செய்வதன் மூலம் பிறப்பிதவனே -என்றபடி –
பூவின் இடம் உள்ள பூத்தலை அதனை உடையான் மேல் ஏற்றி கூறுவது உபசார வழக்கு –நாபீ கமலம் மலருவதே லோக சிருஷ்டி என்றும் அது கூம்புவதே லோக சம்ஹாரம் என்றும்
சொல்லப்படுதலின் -இங்கனம் கூறினார் -இனி பூத்தல் விரிதலாய் உலகு அனைத்தும் தன்னுள்
ஒடுங்க நின்ற இறைவன் விரிவு அடைதலே சிருஷ்டி யாதலின் -இங்கனம் கூறினதாகவுமாம் –
மூ வுலகும் பூத்தவனே -பொறுத்து அருள்க -எனபது சொல் எச்சம் -பிறப்பித்தவன் நீ -பிறந்தவர்கள் நாங்கள் –
ஆகையால் நாம் தந்தையும் மக்களும் ஆகிறோம் -பிதேவ புத்ரச்ய -என்றபடி மகன் திறத்து பிதா பொறுத்துக் கொள்வது
போல பொருத்து அருள வேணும் எனபது கருத்து -வாணன் மன்னிப்பு கோரா விடினும் அவனுக்காக முக் கண்ணன் கோர –
வாணன் பிழை பொறுத்தான் கண்ணன் -இதனால் -அஹமச்ம்ய பராதானாமாலய -நான் குற்றங்களுக்கு கொள்கலம்-என்று
சரண் அடைந்தவருக்கு மாத்திரம் அன்றி -அவர் அபிமானத்தை பெற்றவருக்கும் குற்றங்களை பொறுத்து
அருள் சுரக்கும் பெரும் தன்மை கண்ணன் இடம் துலங்குவது காணலாம் .
கண்ணன் என்னும் தெய்வம் தவிர மற்றைத் தெய்வங்கள் கருணை காட்டினும் ஆபத்து காலத்து உதவகில்லாது
கை விட்டு ஓடி விடுவன -சீறின நிலையிலும் கண்ணனே ஆபத்துக்கு உதவுமவன் என்பதும் இங்கே தெளிதற் பாலது –
தேக பந்துக்களை துறந்து -பற்ற வேண்டியவனான கண்ணனை தன் பெண்ணாகிய உஷைக்காக பகைத்து
போரிடப் புறப்பட்டது -பாணனது பிழையாகும் -மேலும் காதல் மணம் புரிந்து தன் மகள் அநிருத்னனோடு
கூடினதற்கு பிறகு கண்ணனோடு தனக்கு சம்பந்தம் வாய்த்து இருப்பதை பயன்படுத்தி காதல் தம்பதிகளை இணைத்து
கண்ணன் இடம் ஒப்படைத்து பேர் உவகை கொள்ளுமாறு செய்ய வேண்டி இருக்க தன் தோள் வலிமையை
பெரிதும் மதித்து போருக்கு புறப்பட்டு அல்லலுக்கு உள்ளாகியதும் அவன் இடம் உள்ள பிழையாம் –
அனுபவித்தோ அல்லது பிராயச்சித்தம்செய்தோ தீர்க்க வேண்டிய அபராதங்களையும் பகைவர் திறத்தும் போக்கியும் போக்கி அவர்களை
தூயராக்கிய தூய்மையை கருதி -தீர்த்தன் -என்கிறார் –
ஆபத்துக் காலத்திலேயே உதவிய கண்ணனது தூய்மையினை ஏத்தும் எம்பெருமானாரோ எனக்கு
ஆபத்து காலத்தில் உதவுவதற்காக சேமித்து வைத்த செல்வம் என்றார் ஆயிற்று –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது-

ஈஸ்வரனும் குரு பரம்பரையிலும் தேர் தட்டிலும் இருக்கிறான்-ஆச்சர்ய கோஷ்டியில் சேர ஆசை பட்டு..
ஸ்ரீ வைஷ்ணவர் முதலில் நம் ஆழ்வார் தான்
வைஷ்ணவன்-விஷ்ணு பக்தன்-அவனால் முடியாத ஒன்றே இது தானே
வைஷ்ணவி பிராட்டி -ஸ்ரீ வைஷ்ணவி ஆக முடியாதே ஸ்ரீ தேவியால்
பூமா தேவி தானே முதல் ஸ்ரீ வைஷ்ணவி
நீளா தேவி -அடியார்க்கு அடியார் காட்ட -நப்பின்னை என்றே ஆழ்வார்களால் பேசப்பட்ட ஆயர் குல மட மகள் –
அடுத்து குரு பரம்பரையில் – விஷ்வக் சேனர் -இது வரை –விண்ணுளார் .-
.விண்ணுளார் விட சீரியர்..நம் ஆழ்வார்
நம் ஆழ்வார் -நாத முனிகள் ஆள வந்தார் மூவரும் கண்ணன் திருவடிகளில் ஆசை பட்டவர்கள்.
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் தானே ஆழ்வார்
முகில் வண்ணனுக்கே -முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் கண்ணனாக தான் பார்த்தார் அங்கும்
அவன் இவன் என்று கூழேல்மின் –அர்ச்சை சொல்லி.. அன்று தேர் கடாவிய பெருமான் கழல் காண்பது என் கொலோ என்று -விபவம் .
– கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
நம் கண்ணன் கண் அல்லது இல்லை கண்
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே
முதல் பதிகம் நாராயணனே -தத்வம் சொல்லும் பொழுது நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன்
அடுத்து பத்துடை அடியவர்க்கு எளியவன் ..மத்துறு கடை வெண்ணெய் களவினில்
உரவிடை யாப்புண்டு -எத்திறம் என்று முதல் பாசுரம் அருளும் பொழுதே ஆறு மாதம்மோகித்தவர் –
….பெருமை சொல்லி -கோ லோகம் -கிருஷ்ண சாயுஜ்யம் என்பர்
கண்ணன் தான் எல்லாம் என்பார் ..
நாத முனிகள் -அபார பக்தி சிந்தவே பக்தி -சமுத்ரம் போன்ற ஞான பக்தி வைராக்கியம் கொண்டவர்
-ஆழ்வார் வழியே இவரும்-யமுனை துறைவன் மேல் ஈடுபட்டவர்
-ராஜா போவதை திரு உடை மன்னனை காணில் திரு மால் என்பார்-
ஆள வந்தாரும் -கீதை அர்த்தம் கேட்டதும்
– கீதார்தம் சொல்ல பட்ட அர்த்தம் பார்க்க ஆசை கொண்டார் ஆள வந்தார்
திரு மண தூண் நடுவில் கூட்டி -அரங்கனை திரு பாண் ஆழ்வாருக்கு காட்டியது போலே
காட்ட சொல்லி அருளினாரே – மணக்கால் நம்பி
தசரதன் பெருமாளை -வா போ ..வந்து ஒரு கால் கண்டு போ–என்று சொல்லி —25 வயசு தான் தனக்கு என்றார்
பெருமாளும் தேவ குமரன் போல அழகு.-வால்மீகி.- -ரிஷி கரி பூசுகிறார்..
அழகன் கார்திகையான் .-சிருஷ்டிக்க பட்டவன்.தானே இவனும்
கரி முகத்தான்/கனலும் முக் கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும்
. மோடி-இனி ஆடை இன்றி போவது முதல் சாபம் அடுத்து பார்த்த மாதரத்தில் 12 ஆண்டு பண்ணின பக்தி போகும்.
12 வருஷம் பக்தி ஒரு நிமிஷம் போக்கும் சக்தி மோடிக்கு உண்டா -குதர்க்க கேள்வி.
.அந்த சக்தியும் அவன் சாபத்தால் கொடுத்தான் ..ரஜோ குணம் தமோ குணம் இருந்தால் சாபம் கிட்டும்..-
பட்டர் -கருப்பு வேஷ்ட்டி பார்த்து தாயார் ஆண்டாள் ஸ்ரீ பாத தீர்த்தம் வாங்கி கொண்டு பாபம் போக்க
யோக மாயை- வேறு .துர்க்கை- விஷ்ணு துர்க்கை-திரு கோவலூரில் காவல் காக்கும்
வெப்பும்-ஜுராதி தேவதை-
உற்ற நல நோய் இது -சாத்விக ஜுரம்
–.மூவுலகும் பூத்தவனே– கிருத்தகம் –அகிருத்தகம் -கிருதாகிருத்தகம் -ஆகிய மூன்றும்
பிரகிருதி விக்ரதி -மூல பிரகிருதி
கடைசி எதற்கும் காரணம் இல்லை
அசித் தத்தவங்களை 1 –7 –16 இப்படி பிரிப்பார்கள் -அத்துடன் சித்தியும் படைத்தவனே என்று மூ உலகும் பூத்தவனே
பூத்தவனே-திரு நாபி கமலத்திலே ஜநிப்பிதவனே என்று–கேசவ- சிவன் ஜேஷ்ட விஷ்ணு பக்தன்..
இருவர் அவர் முதல்வனாம் –பிரசாத்தால் ஒருவர் கோபத்தால் ஒருவர் பிறக்க
-சிருஷ்டிக்கு சம்காரத்துக்கு
அதனுள் கண் வளரும் முதல்வா
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வா என்று இவர்கள் போற்றிட
பிதா -பித்ரு சம்பந்தம் காட்டி/திரு நாம சங்கீர்த்தனம் பண்ணி கொண்டு
-அஜாமளன் கதை-அறிவோமே –
பாபம் போக திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகிறார்கள்
கிருஷ்ண கிருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் –
பூத்தவனே -வேர் முதல் வித்தாய்
-கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் . ஜகதாகவே உபாதான காரணமாக
.பிரம சரீரம் நீராய் நிலனாய்–போல…நீ தான் புருஷோத்தமன்
…தமஸ் காரணத்தால் யுத்தம் பண்ணி ..மகா பாகோ -பட்டதை நினைவு தடக்கையன்
.சத்வம் -தலை எடுத்து தெளிந்தேன்-இனி அறிந்தேன் ஈசர்க்கும் தெய்வம் ..பரம புருஷன் தெரிந்து கொண்டேன்
.. வாசு தேவன் குமரன் என்று நினைந்து இருந்தேன் .. ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்.
.சேவித்த உடன் சத்யம் தலை எடுத்தது..சரண் அடைந்தால் சம்பந்திகளையும் ரட்ஷிகிறான் . .பாணாசுரனையும்.
வரத்தினில் சிரம் வைத்தான் . பரிய இரணியன் -நகத்துக்கு சரியாக பருத்தவன்..
வரம் கொடுத்தவன் பொய் ஆக்க கூடாது என்று /பிரகலாதன் /தேவர் /வேதம் /மக ரிஷி /தன் வாக்கியம் அனைத்தையும் சத்யம் ஆக்கினான்
..அவர் அவர் விதி வழி அடைய நின்றனர் காக்கும் இயல்பினன் ச்வாபாவிகம் இவனுக்கு -வந்தேறி இல்லை…
சர்வேச்வரவர -விசேஷணம்-அவதாரிகை கீதா பாஷ்யம் பார்த்தால் 700 ஸ்லோக சுருக்கியும் அருளி இருக்கிறான்.
.நேர் செறிந்தான் ..அப்பன் நேர் செறி வாணன்.. நக்க பிரானும் -மோஷம் கொடுக்க முடியாதவன்
–ஓட்டை ஓடத்தில் ஒழுகல் ஓடம் போல மற்றவர்
. .மாற்ற முடியாத கர்ம -சாபம்/ பரிஷித் பாம்பால் கடி பட்டது..
கர்த்தா நான் இல்லை மூன்று வித த்யாகம் .ஐந்து பேர் சேர்ந்து செய்யணும் சிலது நம் கையில்..
உபயாந்தரங்கள் -இவை கர்ம ஞான பக்தி யோகங்கள்
பிரபத்தியோ -ஸ்வாமி காட்டிய வழி
இன்பத்து அரங்கத்து இனிது இரு .தானே வைகுந்தம் தரும்..ஆச்சார்யர் பற்றினால்
அனுபவித்து போக்க வில்லை பிராயசித்ததால் போக வில்லை ..சரணகத சம்பந்தத்தால் மட்டுமே..-பரமசிவனுக்காக வாணனை பொறுத்தவன் நம் ஸ்வாமிக்காக –தானே வைகுந்தம் தரும் –தன்னடையே கிட்டுமே -ஆச்சார்யர்களை பற்றி -சம்பந்த சம்பந்திகள் வரை அருள் கடல் ப்ரவஹிக்குமே –
ஸ்தோத்ர மத்ரத்தாலே போற்றிட பாபம் போக்கும் பதீத பாவனன்
…ராமானுசன் எனக்கு சேம வைப்பே -நம் கண்ணன் கண்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி போல் சுவாமியும் தீர்த்தன் என்கிறார் இங்கு
…என்றும் ரஷிக்க போகிறவர் ராமனுஜன்..யாராலும் கை விட்டவரை சுவாமி காப்பார்..
இந்த குணம் கீதாசார்யன் மூலம் பெற்றார் ஸ்வாமி –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: