அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-21-நிதியைப் பொழியும் முகில் என்ன -இத்யாதி ..

பெரிய ஜீயர் உரை
இருபத்தொராம் பாட்டு
அவதாரிகை
ஆளவந்தார் உடைய திருவடிகள் ஆகிற ப்ராப்யத்தை பெற்றுடைய எம்பெருமானார்
என்னை ரஷித்து அருளினார் -ஆகையால் ஷூத்ரருடைய வாசல்களிலே நின்று
அவர்கள் ஒவ்தார்யாதிகளைச் சொல்லி ஸ்துதியேன்-என்கிறார் –

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –

வியாக்யானம் –
பரி சுத்த அனுஷ்டான யுக்தரான -எதிகளுக்கு நாதரான -ஆளவந்தார் உடைய
பரஸ்பர சத்ருசமான திருவடிகளாகிற ப்ராப்யத்தை பெற்றுடையராய் இருக்கும்
எம்பெருமானார் என்னை ரஷித்து அருளினார் -ஆன பின்பு நிதியை வர்ஷியா நிற்கும்
மேகம் என்று அவர்களுடைய ஒவ்தார்ய கதனத்துக்கு உறுப்பான ச்தொத்தரங்களை
கற்று லோகத்திலே அஹங்காராதி தூஷிதரான தண்ணியர்கள் உடைய வாசலைப் பற்றி-நின்று -என்னுடைய ரஷண அர்த்தமாக அவர்கள் அவசரம் பார்த்து துவளக் கடவன் அல்லேன் –
தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் -என்கிற இது -ஆளவந்தாருக்கு விசேஷணம் ஆகவுமாம்-
நெறி-ஒழுக்கல்
கதி–அதாவது ப்ராப்யம்–

யதீஸ்வரர் -ஆளவந்தாருக்கும் எம்பெருமானாருக்கும் இயையும் -இல்லாதது சொன்னேனுக்கு இல்லை என்றாய் -மொட்டைத் தலையன் -கதை
என்னை காத்தனன் -நீசனேன் நிறை ஒன்றும் இல்லாத என்னையும் கூட –
இன்பம் பயக்க -திருவாரண் விளை -அன்றோ திருவாய் மொழி அரங்கேற்றப் பட்ட திவ்ய தேசம் -துணைக் கேள்வி

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
இவ்வளவும் -ஆழ்வார்கள் உடையவும் -ஸ்ரீ மன் நாத முனிகள் உடையவும் சம்பந்தத்தை இட்டு –எம்பெருமானார் உடைய வைபவத்தை யருளிச் செய்து கொண்டு வந்து -இதிலே சரம பர்வ நிஷ்டர் எல்லாருக்கும்-ஸ்வாமியான ஆளவந்தார் உடைய திருவடிகளை உபாய உபேகமாக பற்றின -எம்பெருமானார் என்னை ரஷித்து-
அருளின பின்பு -இனி நீசரான மனுஷ்யரை ஸ்துதித்து க்லேசப் பேடன் என்கிறார் –

வியாக்யானம் –
தூய் நெறி சேர் –
சுருதி பத விபரீதஷ் வேளகல்பஸ்ருதவ் சப்ரக்ருதி புருஷயோக ப்ராபகா சோனதத்ய –
என்கிறபடியே அபரிசுத்தமாய் இருக்கிற உபாயாந்தரங்களுக்கும் -பிரபகாந்தர பரித்யாகத்துக்கும் -அஞ்ஞான அசக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது என்றும் -மதிராபிந்து மிஸ்ரமான சாதகும்ப மய கும்ப கத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான உபாயாந்தரம் என்றும் சொல்லப்படுகிற -அவத்யங்கள் ஒன்றும் இன்றிக்கே –
அத்யந்த பாரதந்த்ர்ய ஸ்வரூப அநு ரூபமாய் -அதிலும் -பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான
ஈஸ்வரனை பற்றுகை அன்றிக்கே -மோஷ ஏக ஹேதுவான சதாசார்யனைப் பற்றி -அதிலும் –
அஹங்கார கர்ப்பமான தான் பற்றும் பற்றுகை அன்றிக்கே -கிர்பா மாத்திர பிரசன்னாசார்யரான
ஆள வந்தார் -தம்மாலே பரகதமாக ச்வீகரிக்கப் பட்டது ஆகையாலே -அத்யந்த பரிசுத்தமான
ஆசார்ய அபிமானத்திலே ஒதுங்கி வர்த்திக்கிற -தூய்மை -பரி சுத்தி –நெறி –உபாயம் –
எதிகட்கு
-ஐ ஹிக ஆமுஷ்மிகம் சர்வம் கதி ரஷ்டாஷரப்ப்ரத -என்றும் -மாதா பிதா வுவதயஸ் தனயா விபூதிஸ்
சர்வம் -என்றும் சொல்லுகிறபடியே -ஸ்வா சார்யரான ஆள வந்தாரே தங்களுக்கு ஐ ஹிக ஆமுஷ்யங்கள்
எல்லாம் என்று கொண்டு -மேக பிந்துக்களை ஒழிய மற்று ஒன்றை விரும்பாத சாதகம் போலே –
ததீய விஷயங்களை விரும்பாதபடி -தம் தாமுடைய மனசை நியமித்துப் போகிற –பெரிய நம்பிதிருமலை நம்பி –திருக் கோட்டியூர் நம்பி -திருவரங்கப் பெருமாள் அரையர் -திருமாலை ஆண்டான் -திருக் கச்சி நம்பி –மாறனேர் நம்பி -முதலானவர்களுக்கு -இறைவன் -ஸ்வாமி யானவர் –
யமுனைத் துறைவன் –
யமுனா தீரத்தில் எழுந்து அருளி இருந்த ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு உத்தேச்யராய் –
காட்டு மன்னார் கோயிலிலே எழுந்து அருளி இருந்த சுவாமிகளுடைய திரு நாமத்தை வஹித்த-ஆள வந்தார் உடைய
-இணை யடியாம்
-பாவனத்வ போயத்வங்களாலே பரஸ்பர ச தர்சமான-திருவடிகள் ஆகிற –கதி பெற்று –உபாயத்தை லபித்து-உபாய உபேயங்களாக பற்றி -என்றபடி –
கதி –
கதி -அதாவது ப்ராப்யமும் ப்ராபகமும் -அத்தாலே லோகத்தில் உள்ள பிரபன்ன ஜனங்களுக்கு எல்லாம்-ஸ்வாமி யாய் இருக்கிற
-இராமானுசன்
-எம்பெருமானார் –என்னைக் காத்தனனே -லோகத்தில் ஞாநாதிகரை
ரஷித்தது ஆச்சர்யமாய் இராது -பிரதி கூலனாய் இருக்கிற என்னை -அநு கூலனாக்கி ரஷித்தான் -இது என்ன
அகடிதகடநா சாமர்த்தம் என்று வித்தராகிறார் –தூய் நெறி சேர் யதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன்
இணையடியாம் -கதி பெற்று உடைய -என்கிற இது -எம்பெருமானாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –
இனி
-அவர்க்கு அடியேன் ரஷ்ய பூதனாய் விட்ட பின்பு இனி -மேல் உள்ள காலம் எல்லாம்
-நீசர் தம் வாசல் பற்றி
ய கஞ்சித் புருஷ அதம ரகதிபயக்ராமேச மல்பார்த்தத்தம் -என்கிறபடியே அஹங்கார தூஷிதராய் -நிஹீநராய்
இருக்கிறவர்களுடைய – துரீச்வர த்வார பஹிர்விதர்த்தி காதுராசி காயை ரசிதோய மஞ்சலி -என்கிறபடியே-நரக பிராயமான வாசலை ஆஸ்ரயித்து –
நிதியைப் பொழியும் முகில் என்று –
லோகத்திலே மேகம்ஜலத்தை வர்ஷிக்கும் இத்தனை –
இந்த தாதாவானால் நவ நிதியையும் ஒருக் காலே வர்ஷிக்கும் காள மேகமாய் இருந்தான் என்று –
துதி கற்று
-சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ என் நாவில் இன்கவி யான்
ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -என்கிற தர்ம ஜ்ஞ சமயத்தையும் லன்கித்து வாய் வந்த படி எல்லாம்
ஸ்தோத்ரம் பண்ணி -மற்று ஒருவர் சொன்ன மித்யா ஸ்தோத்ரங்களை அப்யசித்து முன்னே சொன்னேன்-என்னுதல் –
உலகில் –
இப்படி இருந்த உலகில் -இருள் தரும் மா ஞாலத்திலே
-துவள்கின்றிலேன்
-அவர்கள்-உடைய அவசரம் பார்த்து -என்னுடைய ரஷண்த்துக்காக கிலேச படக் கடவேன் அல்லேன் –துவலுகை -வாடுகை –
குரு பாதாம் புஜம் த்யாயேத் குரோர் நாம சதா ஜபேத் குரோர் வார்த்தார்ஸ் சதக யேத் குரோர் அந்ய ந பாலயேத் –
என்கிறபடியே இருக்கக் கடவேன் என்று கருத்து –

————————————————————————–

அமுது உரை
அவதாரிகை
ஆளவந்தார் உடைய திருவடிகளை பெரும்பேறாக உடைய எம்பெருமானார் என்னை ரஷித்து அருளினார் .
ஆகையால் அற்பர்கள் உடைய வாசல்களில் நின்று அவர்கள் உடைய வள்ளன்மை முதலியவற்றைக்
கூறிப் புகழ் பாட மாட்டேன் -என்கிறார் –

பத உரை –
தூய் நெறி சேர் -சுத்தமான ஒழுக்கம் வாய்ந்த
எதிகட்கு -சந்நியாசிகட்கு
இறைவன்-தலைவரான
யமுனைத் துறைவன் -ஆளவந்தார் உடைய
இணை -ஒன்றுக்கு ஓன்று ஒத்த
அடியாம்-திருவடிகள் ஆகிற
கதி -பேற்றை
பெற்று உடைய -அடைந்து அதனை உடையவராய் இருக்கிற
இராமானுசன் -எம்பெருமானார்
என்னைக் காத்தனனே-என்னைக் காப்பாற்றி அருளினார்
இனி -இனிமேல்
நிதியைப் பொழியும் -நவ நிதிகளையும் தாரையாகக் கொட்டும்
முகில் என்று -மேகம் என்று
துதி கற்று -புகழ் பாடப் பயின்று
உலகில் -இவ் உலகத்தில்
நீசர் தம் -அற்பர்கள் உடைய
வாசல் பற்றி –வாசலிலே காத்துக் கிடந்தது
துவள்கின்றிலேன் -துவண்டு வறுமை தோற்ற நிற்கின்றிலேன்-

வியாக்யானம் –
நிதியை ….துவள்கின்றிலேன் இனி –
நீசர் -அதமர்கள்
பணச் செருக்கினால் மற்றவரை மதிக்காதவர்கள்-
அஹம் மமேதி சண்டாள -என்றபடி -அஹங்காரம் சண்டாளனாக கூறப்பட்டது –
அதனுக்கு இடம் தருவாரும் அத்தகையினரே –
மத்பக்தான் ச்ரோத்ரியோ நிந்தத் சத்யச்சண்டாளதாம் வ்ரஜேத் -என்று
வேதம் ஓதியவன் யேன் பக்தர்களை இகழும் பொழுதே சண்டாளன் ஆகி விடுகிறான் -என்றபடி
பணம் படைத்தவர்கள் பக்தர்களையும் மதிக்காது -இகழ்வதனால் உடனே சண்டாளர்கள் ஆகி விடுகிறார்கள் –
அவர்கள் வாசலில் உலகில் தவிர்க்க ஒண்ணாத பசி முதலியவற்றால் துவண்டு சமயம் எதிர்பார்த்து கிடக்கின்றனர் மக்கள்.
அந்த நீசரை மகிழ்விப்பதற்காக தம்மிடம் தகுதி இன்மையால் புகழுரை பாடப்பாடம் கற்று வருகின்றனர் –
மாரி யனைய கை – என்று பச்சை பசும் பொய்களை பேசுகின்றனர் –
நிதியை பொழியும் முகில் -எனபது போன்றவற்றை கற்று வந்து -வாசலில் துளள்கின்றனர் –
அங்கனம் அவர்கள் துவள்வதற்கு காரணம் -தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ளும்
திறன் இல்லாமையும் -காப்பாற்றுவார் வேறு இல்லாமையும் -எனக்குத் தானே காப்பாற்றிக் கொள்ளும் திறன்
இல்லாவிடினும் -எம்பெருமானார் என்னைக் காப்பாற்றி விட்டார் -இனி ஏன் நான் துவள வேண்டும்-என்கிறார் அமுதனார் –
தூய் நெறி சேர் எதிகட் கிறைவன் –
இவ்வடை மொழி யமுனைத் துறைவற்கும் இசையும் -இராமனுசற்கும் இசையும் –நெறி-ஒழுக்கம் -உபாயமுமாம்
ஒழுக்கம் –ஆவது அனுஷ்டானம் -அது சாத்விக த்யாகத்துடன் -பகவான் என்னைக் கொண்டு தன் பணியை
தன் உகப்புக்காக செய்து கொள்கிறான் என்றும் நினைப்புடன் -அனுஷ்டிக்கப் படுதலின் தூயதாயிற்று -என்க –
இனி அஹங்காரக் கலப்பினால் மாசுற்ற மற்ற உபாயங்களை விட்டுத் தூயதான சித்த உபாயத்தின்
எல்லை நிலமான ஆசார்யனையே உபாயமாக கொள்ளலின் தூய் நெறி என்றார் ஆகவுமாம் –
ஆளவந்தார் நாத முநிகளையே உபாயமாகவும்-எம்பெருமானார் ஆளவந்தாரையே உபாயமாகவும் -கொண்டு உள்ளமையின் தூய் நெறி
சேர்ந்தவர்கள் ஆயினர் என்க
யமுனைத் துறைவன் –
ஆளவந்தார் திரு நாமம்
அவருக்கு நாத முனிகள் விருப்பப்படி இத்திருநாமம் சாத்தப்பட்டது என்பர் –
யாமுநேயர் -என்பது வட மொழி திரு நாமம் -பொருள் ஒன்றே –
கதி -பெறப்படுவது -பேறு என்றபடி
குருரேவ பராகதி -என்று குருவையே சிறந்த கதியாக சாஸ்திரம் சொல்லுவதும் காண்க –ஆளவந்தாரை பற்றி எம்பெருமானார் -யத் பதாம் போரு ஹத்யான வித்வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயதோஹம் யாமுநேயம் நமாமிதம் -என்று எவருடைய திருவடித் தாமரையை
உபாயமாக த்யானம் செய்ததனால் பாபம் அனைத்தும் நீங்கப் பெற்றவனாய் ஒரு பொருளாகி
விட்டேனோ -அந்த யமுனைத் துறைவனை வணங்குகிறேன் -என்று அருளிய ஸ்லோகம் இங்கு
அனுசந்திக்க தக்கது நேர் ஆசார்யர் பெரிய நம்பியே ஆயினும் -அவர் தம்மை ஆளவந்தார் உடைய கருவியாகவும் –
ஆ முதல்வன் -என்று முந்துற முன்னம் பெருமாள் கோயிலிலே கடாஷித்த ஆளவந்தாரே நேர் ஆசார்யராகவும்
கருதினதாலும் -அங்கனமே எம்பெருமானாருக்கு –
பெருமாள் மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்து வானோர் வாழத் தண்ட காரண்யத்துக்கு
எழுந்து அருளினது போலே ஆளவந்தாரும் அடியானான அடியேனை உமக்கு வைத்து மேலை வானோர்
வாழத் திரு நாட்டுக்கு எழுந்தி அருளினார் -என்று உபதேசித்த தனால் எம்பெருமானார் யமுனைத் துறைவன் இணை
அடியாம் கதி பெற்று உடையரானார் என்க –
ஆளவந்தாருக்கு மணக்கால் நம்பி நேரே ஆசார்யன் ஆனாலும் தம் ஆசார்யர் திரு உள்ளப்படி
நித்யம் யதீயசரணவ் சரணம் மதீயம் -என்று பரமாச்சார்யார் ஆன நாத முனிகள் திருவடிகளையே
கதியாகவும் பற்றினது -போலே எம்பெருமானாரும் பரமாச்சார்யர் ஆன ஆளவந்தார் இணை அடியாம்-கதியைப் பெற்று உடையரானார் -என்க
இனி யமுனைத் துறைவர் இணை யடி -என்பது ஆளவந்தார் திருவடியான பெரிய நம்பியை
குறிப்பால் உணர்த்துகிறது என்றும் கூறுவர்-இவ் விஷயம் லஷ்மீ நாத -பத்ய வ்யாக்யானத்தில் ஸ்பஷ்டம்என்னைக் காத்தனன்
என்னைக் காக்கும் பொறுப்பைத் தாமே எம்பெருமானார் ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி விட்ட படியால்
நான் என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலைந்து துவள வேண்டியது இல்லை-என்றது ஆயிற்று –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

கால ஷேபம் -பகவத் விஷயம்-கண்ணி நுண் சிறு தாம்பு திரு பல்லாண்டு
/ ஸ்தோத்ரம்- ஸ்தோத்ர ரத்னம், சதுச்லோகி / வேதாந்தம் -உபநிஷத் -தைத்ரியம் சாந்தோகம்
/தரிக்க கடவது –சொல்லாதது கிடைக்க கடவது –ஆச்சர்ய அனுக்ரகம் ஒன்றாலே பெற பெறுவோம்
.முக் கண்ணான் எட்டு கணான் 1000 கண் சேர்ந்து ஆச்சார்யர் கண் சமம் இல்லை
வூன கண்ணாலே பார்த்தாலே போதும் .
துரோணாச்சர்யர் -ஏகலைவன் போல ஆள வந்தார்-ராமானுஜர்- தேசிகன்
./ஓர் ஆண் வழியாய் உபதேசித்தார் முன்னம்
கீதா பாஷ்யம் மங்கள ஸ்லோகம் -..வஸ்து ஆனதே இவரால் தான் ..பிரமத்தை உள்ளது என்று தெரிந்தவன்
சத் -வேதம் அசேஷ கல்மிஷங்கள் அழிக்க பட்டன
இவர் திருவடிகளை -த்யானம் பண்ணின வுடன் தான் வஸ்து ஆனேன் /
/சித்தி த்ரயம் கை விளக்கு கொண்டு வேதார்த்த சங்க்ரஹம் -வேதார்த்ததீபம் போன்றன அருளினார்
/ஸ்தோத்ர ரத்னம் சதுச்லோகி கொண்டு கத்ய த்ரயம் அருளினார்
கீதா சங்க்ரஹம்  கொண்டு கீதா பாஷ்யம் அருளி//குரு நாமம் ஒன்றே சொல்லி கொண்டு இருக்கணும்
திரு தேர் தட்டில் முன் இடமும் குரு பரம்பரையிலும் இடம் பிடித்து கொண்டான் ஆச்சர்ய ஸ்தானம் பெற ..
யானாய் தன்னை தான் பாடி- என் இடத்தில் வியாபித்து கொண்டு–அந்தர்யாமி
– தெனா தெனா என /அசைந்து கேட்கிறான்.
.பரம பதத்தில் அநாதரா அவாக்யா – பகல் விளக்கு பட்டு இருக்கும்.
.கஸ்துரி நாமம் அழகிய பெருமாளாக இருந்தால் இருப்பேன்-இல்லை என்றால் கிழித்து கொண்டு வந்து விடுவேன் -பட்டர்
/சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்வேன் ஆழ்வார் அருளியது போல் -துதி கற்று இருக்க மாட்டேன் -அமுதனார்
.. ஆள வந்தார் உடைய திரு வடிகள் ஆகிற பிராப்யத்தை பெற்று உடைய எம்பெருமானார்-
பெற்று தங்க வைத்து கொண்டாரே ..என்னை ரஷித்து அருளினார்
ஆக்கி ஆழ்வான் -ஆள வந்தார் மூன்று வார்த்தை சம்வாதம்
இருக்கு என்பதை இல்லை .சப்த ஜாலம்
..தாய் மலடி அல்ல /போன்ற சொல்லி ஆள வந்தார் -பெயர் பெற்றார்
யமுனை துறைவன்…ஈஸ்வர பட்டர் .நாத முனிகள் -ஈஸ்வர முனிகள்- யமுனை துறைவன்../ கதி =பிராப்யம் /யமுனை துறைவன் -தூய பெரு நீர் யமுனை துறைவன்
நாத முனிகள் -உய்யக் கொண்டார் மூலமும் பின் மணக்கால் நம்பி மூலமும் -ஆளவந்தாரை கடாஷிக்க –
மணக்கால் நம்பி சொபனத்தில் நாத முனிகள் வந்தார் –வந்து உய்யக் கொண்டாரை மறந்தால் அன்றோ இதை மறவோம்.
. தூது வளை கீரை –கொடுத்துக் கொண்டே வந்துபின்பு நிறுத்த -நிறுத்த எதற்கு கொடுத்தீர்-கேட்டு
–கொடுக்க கொடுத்தேன்-. சகல அர்த்தங்களையும் கொடுத்தார் கீதையும் அருள் கொண்டு ஆடும் அடியவர் இன்புற அருளினான்
-கீதை உண்டே -பிரமாணம் காட்ட -காட்டும்- நாத யாமுன மத்யமாம் -இன்றும் அனுசந்தித்திது கொண்டு இருக்கிறோம்
சொட்டை குலம்-குருகை காவல் அப்பன்-யோக ரகசியம் பெற ஆள வந்தார் வர –
சொட்டை குலம் உள்ளோர் -வந்தார் உண்டோ-அடியேன் நாயந்தே-எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைம் தாமரை கண்ணன்
எட்டிப் பார்ப்பதை அறிந்து கேட்ட கேள்வி -முதுகை அழுத்தி எட்டி எட்டி பார்த்தான் ..திரு மேனி சம்பந்தம் -விட்டு பிரியாத தன்மை-
அவர் யோக சாஸ்திரம் வழங்க ஒரு நாள் குறித்து கொடுக்க -அதை கொண்டு திரும்பினார் பின்பு
நடமினோ -திரு அனந்த புரம்-அருளி செயலில் ஈடுபாடு -நடந்தார் -அங்கு நினைவு வர புஷ்பக விமானம் இல்லாமல் போனோமே
யோக சாஸ்திரம் அதனால் இழந்தோம்
தூய நெறி சேர் எதிகட்கு இறைவன் எமுனை துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடைய ராமானுசன்..
யதிகள் -ஐந்து ஆச்சார்யர்கள் போல்வார் ..யதிகள் -தூய நெறி சேர் ..ஆச்சர்ய நிஷ்ட்டை சரம பர்வ நிஷ்டை
தூய நெறி சேர் யதிகட்கு இறையன் இராமனுசன் என்றும் கொள்ளலாம்.
.-ஆழ்வான் ஆண்டான் போல்வார்கள் யதிகள்
நெறி -ஒழுக்கம் ../தூய நெறி -ஆச்சர்ய நிஷ்ட்டை../உபாயாந்தரங்களை விட்டு -ஞானம் சக்தி இருந்தும் -சொரூப விருத்தம் என்று
-சொல்லினால் சுடுவேன் அது தூய ராமனின் வில்லுக்கு இழுக்கு என்று சீதா பிராட்டி அருளியது போல்
பிராப்தி வேற சக்தி வேற..
கள்-துளி-அகங்காரம்- கலந்தால் கேட்டு விடுமே
பிரார்த்தனா மதி சரணாகதி -அற்று தீரும் பார தந்த்ர்யம் வேண்டும்
அசித் போல் இஷ்ட விநியோகம் அர்க்க்யமாய் இருக்க வேண்டும்
பந்த மோஷம் இரண்டுக்கும் ஈஸ்வரன்– மோஷமே ஹேது ஆச்சார்யர்-தான் பற்றாமல் -கிருபையால் அவரே பற்றும் -கிருபா மாத்ரா பிரசன்னாச்சார்யர்
–பர கதமாக சுவீகரிக்க பட்ட –அத்யந்த பரி சுத்தமே தூய நெறி..யதிகள்-இவ் உலக அவ் உலக இன்பம் எல்லாம் ஆச்சார்யர் எல்லாம் வகுத்த இடமே
-உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் …மேக பிந்துவை ஒன்றையே நோக்கும் சாதக பறவை போல ..
-இணை அடிகள் –தாண்டி-எதிராசன் இன் அருளுக்கு இலக்கு ஆவார்-அனைவரும் ராமானுஜர் திருவடியை காட்டுவார்கள்…பிராப்யம் பிராபகம் இணை அடிகள்
உபாயத்தை லபித்தது .உடைய -வைத்து கொண்டு..அடியாம்-மணக்கால் நம்பியும் சேர்க்கலாம்..
பெரிய நம்பியும்…பரதன் -மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து
வான் நாட்டு வாழ்ச்சிக்கு போனார் நான் பாதுகை
-ராமானுஜர் -பரதன் -சுவாமி என்னை கத்தனனே-என்னை கூட-நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
-பிரதி கூலனாய் இருந்த என்னை அநு கூலன் ஆக்கி /சேராதவனை சேர்த்து /ரஷிக்க பட்டவனாய் ஆன பின்பு…
பக்தர்களை நிந்தித்தால் நீசர் .
-நீசர்கள்-வாசலை பற்றி நின்று –அவர்கள் -வண்டி யில் போகும் பொழுது காலில் விழ -ரஷிக-எப் பொழுது வருவார் என்றுநிற்க வேண்டாமே
சுவாமி எனக்கு ரஷிக்க இருக்கும் பொழுது..நீசர் வாசல் பற்றி துதி பண்ண மாட்டேன் நரகம் வாசல் போல
-பால் வெள்ளம் பனி வெள்ளம் கருணை வெள்ளம் உள்ள இடம் – ஆண்டாள் அருளியதை கற்று தவறாக
இந்த நீசர் இடம் புகழ்ந்து –
.. மேகம் ஜலம் கொடுக்கும் நவ நிதியை ஒரு காலே பொழியும் காள மேகம் போல..என்றும்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான் -கதை போலே
அவர்கள் முன் உறு சொல்லி பின் உறு சொல்வது போல கற்று சொல்லி –.
நிதியை பொழியும் மேகம் -ஜலம் கொட்டாது நிதியை கொட்டுகிறாய் என்று ஸ்தோத்ரம் கற்று….இனி துவள் கின்றிலேன்
இனி-காத்த பின்பு-நவ நிதியை வர்ஷிக்கும் காள மேகம் எம்பெருமான் இருக்க –
இந்த கஷ்டம் இனி எனக்கு இல்லையே –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: