அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-20-ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் -இத்யாதி ..

பெரிய ஜீயர் உரை
இருபதாம் பாட்டு –அவதாரிகை
நாதமுனிகளை தம் திரு உள்ளத்திலே அபிநிவேசித்து அனுபவிக்கும் எம்பெருமானார்
எனக்கு பரம தனம் -என்கிறார்-

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –

சந்தனச் சோலைகளை உடைத்தாய் -தர்சநீயமான திருநகரிக்கு நாத பூதரான ஆழ்வார் உடைய
பரம போக்யமான திருப் பவளத்தில் பிறந்த ஈரப் பாட்டை உடைத்தான திரு வாய் மொழி இன் இசையை
அறிந்தவர்களுக்கு ச்நிக்தராய் இருக்கும் அவர்கள் உடைய குணங்களிலே செறிந்து –
தன் சத்தை பெறா நிற்கும் -ஸ்வபாவத்தை உடையரான நாதா முனிகளை பெரு விடாயர்
மடுவிலே புகுந்து வாரிப் பருகுமா போலே தம் திரு உள்ளத்தாலே அபிநிவிஷ்டராய்க் கொண்டு
அனுபவிக்கும் எம்பெருமானார் எனக்கு அஷயமான நிதி –
ஆரம்-சந்தனம்–

நம் ஆழ்வார் -இசை உணர்ந்தோர் -மதுரகவி ஆழ்வார் -இனியவர் -ஸ்ரீ பராங்குச நம்பி -சீரை பயின்று உய்யும் நாதமுனி
–நெஞ்சால் வாரிப்பருக்கும் ராமானுஜன் -ஐந்து பேர் இங்கும் –
வியாசம் -வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் -சுகர் -ஐந்து பேர் அங்கும் -அது  நிதி இதுவோ மா நிதி  அன்றோ -247 பாசுரம் -தமிழ் கடவுள் அன்றோ அரங்கன் -ஈரத்தமிழ் திருமங்கை ஆழ்வார் -முதல் நாலாயிரம் அத்யாபகர் அன்றோ –திரு அத்யயன உத்சவம் -ஏற்பாடு –
நெஞ்சால் வாரிப் பருகும் -மானஸ அனுபவம் விஞ்சி -கால தத்வம் உடைந்து பெரு நீராக ஆச்சார்யர் கிருபை -பகீரதன் கொணர்ந்த -கங்கை போலே -கண்ணி நுண் திருத் தாம்பு தொடக்கம் மேல் கோட்டையில் -மற்ற தேசங்களில் திருப் பல்லாண்டுபோலே -என் தன் மா நிதி -அமுதூறும் என் நாவுக்கே -போலே -மதிர் மம-நான் கண்ட நல்லது -அர்த்த பரத்வ -தோள் மாறாமல் மா நிதி

————————————————————————-

-பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
தர்சநீயமான திரு நகரிக்கு நிர்வாஹரான நம் ஆழ்வார் உடைய அமிர்தமய திவ்ய ஸூக்தி
ரூபமாய் இருந்துள்ள -திருவாய் மொழியை சார்த்தமாக அப்யசிக்க வல்லார் திறத்திலே -அதி ப்ரவண ராய்
இருக்குமவர்களுடைய -கல்யாண குணங்களிலே சக்தராய் -உஜ்ஜீவிக்கும் ஸ்வபாவத்தை உடையரான
ஸ்ரீமன் நாதமுனிகளை -தம்முடைய மனசாலே அனுபவிக்கும் எம்பெருமானார் அடியேனுக்கு
மகா நிதியாய் இருப்பார் என்கிறார் –

வியாக்யானம் –
ஆரப் பொழில் தென் குருகை –
திருத் தாம்ரபர்ணீ தீர்மாகையாலும் -நீர் வாசியாலும்
நித்ய அபி வர்த்தங்களான சந்தன சோலையாலே சூழப்பட்டு தர்சநீயமான திருக் குருகூருக்கு -ஆரம்-சந்தனம்
பிரான் -சர்வர்க்கும் சேவ்யமாம் படி உபகாரகர் -குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்று ஸ்ரீ மதுரகவி
ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –குருகை பிரான் -திருக் குருகையிலே அவதரித்து -சகல ஜனங்களுக்கும்
திருவாய் மொழி முகத்தாலும் -நாத முனிகளுக்கு சகல அர்த்தங்களையும் -உபதேசித்து சம்ப்ரதாயத்தை நடத்தின படியாலும்-உபகாரகர் -என்றபடி –
அமுதத் திருவாய் ஈரத் தமிழின்
-இப்படிப் பட்ட நம் ஆழ்வாருடைய -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்-மாலைகள் சொன்னேன் -என்கிறபடியே பரம போக்யமாய் கொண்டு –
திருப் பவளத்திலே பிறந்ததே -ஸ்வ நிஷ்டரான-சேதனருடைய சம்சார தாபம் எல்லாம் ஆறும் படியாக ஈரப் பாட்டை உடைத்ததாய் -த்ரமிட பாஷா ரூபமான
திருவாய் மொழி யினுடைய -இசை -கானம் ராகாதி லஷனன்களோடு கூடி –உணர்ந்தோர்கட்கு -அப்யசித்து
பின்னையும் ஆவர்த்தி பண்ணி -அதிலே பூர்ண ஜ்ஞானம் உடையவர்களுக்கு -ஸ்ரீ மன் மதுர கவிகள் -திரு மங்கை ஆழ்வார்-
முதலானவர்களுக்கு -என்றபடி –
இனியவர் –
அவர்களுக்கு அத்யந்தம் பிரிய தமராய் -ஸ்ரீ மன் நாத முனிகளுக்கு -கண்ணி நுண் சிறுத் தாம்பினை
உபதேசித்து அருளின –ஸ்ரீ பராங்குச நம்பி –
இனியர் தம் சீரைப் பயின்று -அவர்களுடைய கல்யாண குணங்களை
சர்வ காலமும் அனுசந்தித்து -அவர் செய்த உபகாரத்தை விஸ்மரியாதே -க்ர்த்கஞராய்க் கொண்டு –
பயிலுதல் -அனுசந்திக்கை -உய்யும் -அவ்வளவாக இவருக்கு உஜ்ஜீவனம் இல்லை -அந்த மதுரகவி ஆழ்வார் உடைய
சம்ப்ராயச்தரான ஸ்ரீ பராங்குச நம்பி உபதேசித்த அநந்தரம் -அவர் பக்கலிலே க்ர்த்கஞராய் போந்த பின்பு -காணும்
இவர் உஜ்ஜீவித்தது –சீலம் கொள் நாத முனியை -இப்படி உஜ்ஜீவனமே ஸ்வபாவமாக உடையரான
ஸ்ரீ மன் நாத முனிகளை-ஸ்ரீ ரங்க நாதருடைய திருநாமத்தைவகித்து -ஆழ்வார் தமக்கு உபதேசித்த
அர்த்தங்களை அடைவே சர்வதா -மனனம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ மன் நாதமுனிகளை -என்றபடி –நெஞ்சால் வாரிப் பருகும் -சமான காலமானால் -காயிகமாகத்
தழுவி -முழுசிப் பரிமாறி அனுபவிப்பார் காணும் -அத்யந்த கால வ்யவதானமாக இருக்கையாலே
அந்த ஸ்ரீ மன் நாதமுனிகளை -நெஞ்சாலே அள்ளிக் கொண்டு பிரி  கதிர் படாதபடி விக்ரக குணங்களோடு
கூட அனுபவிக்கை –பருகுகை -அனுபவிக்கை –
இராமானுசன் -எம்பெருமானார் –
என் தன் மா நிதியே –
லோகத்தார் எல்லாருக்குமாக அவதரித்தார் ஆகிலும் அமுதனாருடைய
அத்யாவசாயம் -தமக்கேயாக அவதரித்தார் என்று காணும் –என் தன் மாநிதி –அடியேனுடைய மகா நிதி –
நவநிதியான தனங்களும் -தைனம்தினய பிரளயத்திலும் அழிவு உண்டு -அப்படி அன்றிக்கே அவற்றைக் காட்டில்
விலஷணமாய் அப்ராக்ருதமான நிதி -என்றபடி –அத்ர பரத்ர சாபி நித்யம் யாதிய சரணவ் சரணம் மதீயம்
என்று அருளிச் செய்தார் இறே ஆள வந்தாரும் .

————————————————————————-

அமுது விருந்து

அவதாரிகை
இதுகாறும் ஆழ்வார்கள் இடம் எம்பெருமானாருக்கு உள்ள ஈடுபாடு பேசப்பட்டது –
இனி ஆசார்யர்கள் இடம் உள்ள ஈடுபாடு பேசப்படுகிறது -யோக முறையில் நேரே சாஷாத்காரம்
பண்ணின -மாறன் இடம் இருந்து -செம் தமிழ் ஆரணத்தை -அடைந்து -அதன் இசையை உணர்ந்தவர்களுக்கு
இனியவர்களின் குணங்களில் பலகால் பயின்று உஜ்ஜீவிக்கும் நாத முனியை ஆர்வத்தோடு நெஞ்சால்
அனுபவிக்கும் எம்பெருமானார் எனக்கு கிடைத்த புதையல் -என்கிறார் –

பத உரை –
ஆரப் பொழில் -சந்தனச் சோலைகள் உடைய
தென் குருகைப் பிரான் -அழகிய திரு நகரிக்குத் தலைவரான நம் ஆழ்வார் உடைய
அமுதம்-மிக்க இனிய
திருவாய்-திரு வாயில் இருந்து வெளி வந்த
ஈரத் தமிழின் -நனைந்து குளிர்ந்து உள்ள திருவாய் மொழி யினுடைய
இசை-இசையை
உணர்ந்தோர்கட்கு -அறிந்தவர்களுக்கு
இனியவர் தம் -பிடித்தவர்கள் உடைய
சீரை -குணங்களை
பயின்று -பழகி
உய்யும் -உஜ்ஜீவிக்கும்
சீலம் கொள் -வைபவம் உடையவரான
நாத முனியை -நாத முனிகளை
நெஞ்சால்-மனத்தால்
வாரி-ஆர்வத்துடன் அள்ளி
பருகும் -அனுபவிக்கும்
இராமானுசன் -எம்பெருமானார்
என் தன் மா நிதி -எனது பெரும் புதையல் ஆவார் –

வியாக்யானம் –
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் –
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் -என்றபடி சோலைகள் சூழ்ந்த திரு நகரி குளிர்ந்த ஊர் –
அதன் கண் உள்ள ஆழ்வாரும் தாபம் தீர்ந்து குளிர்ந்தவர் -தம்மைப் போலே ஊரும் நாடும் உலகமும்
குளிரும்படி செய்யும் பரம உபகாரகர் அவர் –பிரான்-உபகரிப்பவர்
அமுதத் திருவாய் ஈரத் தமிழ்
அமுதம் போல் இனித்து அன்பினால் நனைந்து ஈரமான தமிழ் -திருவாய் மொழி -என்க
-வாய் மொழி என்பதை –வாய் தமிழ் -என்கிறார் –
மனத்தால் நினைந்து -பேசாது வாயினால் மட்டும் பேசிய மொழி யாதலின் -வாய் மொழி -எனப்படுகிறது –
வாய் வெருவின மொழி வாய் மொழி -என்க –
இவள் இராப்பகல் வாய் வெருவி-திரு வாய் மொழி -2 4 5- – – என்னும் இடத்தில் ஈட்டில் –அவதானம் பண்ணி சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாத்யாயராக சொல்லுகிற இத்தனை –
என்று வியாக்யானம் செய்யப்பட்டு இருப்பது இங்கு அனுசந்திக்க தக்கது –
ஈரத் தமிழ் –
ப்ரேமார்த்ரா விஹ்வல கிற புருஷா புராணா த்வாம் துஷ்டுவுர் மத்ரிபோ மதுரைர் வசோபி -என்று
மது சூதனனே -பிரேமத்தினால் நனைந்து நிலை குலைந்த வாக்கு படைத்தவர்களான பண்டைய
ஆழ்வார்கள் இனிய மொழிகளாலே உன்னை துதித்தார்கள்-என்று ஆழ்வான் அருளி செய்ததை
அடி ஒற்றி –அமுதத் திருவாய் ஈரத் தமிழ் -என்றார் –
சம்சார தாபத்தை தணித்தலின் ஈரத் தமிழ் ஆகவுமாம்–
இசை உணர்ந்தோர் –
பாவின் இன் இசை பாடித் திரிவனே -என்று தம்மைக் கூறிக் கொண்ட
மதுர கவி ஆழ்வார் போல்வர் இசை உணர்ந்தவர்கள் என்க –
இனியவர் –பருகும் –
மதுர கவி ஆழ்வாருக்கு இனியவர் -அவர் பரம்பரையில் வந்தவரும் -நாத முனிகளுக்கு
கண்ணி நுண் சிறு தாம்பை உபதேசித்தவருமான பராங்குச நம்பி
அவர் சீர் -அருள் மிக்கு உபதேசித்து அருளின வள்ளன்மை ,ஞான பக்திகள் ,இசை உணர்வு -முதலியன
இசை உணர்ந்தோர்க்கு இனியவர் –சீர் பயின்றதாக கூறுவதால் -இன்னிசை பாடித் திரியும் அவர்
பரம்பரையினரான பராங்குச நம்பி -இசையோடு கண்ணி நுண் சிறு தாம்பை உபதேசித்ததாக தெரிகிறது –
கற்றாரை கற்றாரே காமுறுவர் -என்றபடி -இசை வல்லுனரான நாத முனிகள்-அவ்விசையிலும் ஈடுபட்டு
இனியவர் சீரைப் பயிலா நின்றார் என்க -செய்நன்றி உடன் அதனையே மீண்டும் மீண்டும் பயின்று
உய்வு பெறுகிறாராம் நாத முனிகள்-பராங்குச நம்பி உபதேசத்தாலே அன்றோ
நம் ஆழ்வாரை சாஷாத் கரித்துஅவரை ஆஸ்ரயித்து நாதமுனிகள் உஜ்ஜீவித்தது –
இந்நன்றி யறிவு நாத முனிகளுக்கு ஸ்வபாவமாய் அமைந்தது என்று –சீலம் கொள் நாதமுனி –
என்பதனால் உணர்த்துகின்றார் –
நாத முனி –
ரங்க நாத முனி எனபது இவரது திரு நாமம்-
சத்யா பாமா -என்பதை பாமா -என்று வழங்குவது போலே ரங்கநாத முனி என்பதை நாத முனி –
என்று அருளி செய்கிறார் -நாமைகதேசம் –
நெஞ்சால் வாரிப் பருகும் –
சம காலத்தவர் ஆயின் -கண்ணால் அள்ளிப் பருகி இருப்பார் –
எம்பெருமானார் பிற் காலத்தவர் ஆதலின் நெஞ்சால் நினைந்து நினைந்து அவரை அள்ளிப் பருகுகிறார் -என்றபடி –
பருகுதல் கூறவே -நாத முனிகள் நீராய் உருகினமை பெறப்படும் –
இனியவர் தம் சீரைப் பயின்று நீராய் உருகினார் -நாதமுனிகள்-
அத்தகைய நீரைப் பருகி விடாய் தீர்த்து இன்புறுகிறார் எம்பெருமானார் –
நாத முனிகளை ஆர்வத்துடன் நெஞ்சால் நினைந்து இனிது அனுபவிக்கிறார் எம்பெருமானார் -எனபது கருத்து –
என் தன் மா நிதி –
ஏனைய நிதிகள் போலே அழிவுறாத புதையல் எம்பெருமானார் –
ஆழ்வான் உதவிய ஞானக் கண்ணால் அப் புதையலைக் கண்டு எடுத்து ஆண்டு அனுபவிக்கும் தனது பாக்கியம்
தோற்ற –என் தன் மா நிதி -என்கிறார் –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது ..
திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின்
-இதுவே உஜ்ஜீவிக்க வழி .
ஆரம் பொழில் தென் குருகை. ஹாரம் போல- சந்தன சோலைகளை உடைத்தாய்
.தென்-தர்சநீயமான .
.திரு நகரிக்கு நாத பூதர்.-தென் குருகை பிரான்.
.அமுத திரு வாய்-பரம போக்யமான திரு பவளம்-
..ஈர தமிழ் இன் இசை உணர்ந்தோர்–புது கணிப்பு இன்றும் குறையாமல் இருக்கிறது
பக்தி புஷ்பம் ஆசை அபிநிவேசம் .பூசும் சாந்து என் நெஞ்சமே
இராமனுசன் என் தன மா நிதியே – சீலம் கொள் நாத முனிகள் சம்பந்தம் இட்டு
..சாஸ்திரம் கொடுத்தான் கரண களேபரங்கள் கொடுத்தான்-ஞானமும் கொடுத்தான்
அந் நாள் நீ தந்த ஆகையின் வழி உழன்றோம். .தானே அவதரித்தான்
-மிருகம் இட்டு மிருகம் பிடிக்க ஆழ்வார்களை பிறப்பித்தான்
–தீர்தகரராய் முதல் மூவரும் எங்கும் சென்று பக்தியை பரப்ப –
-திரு மழிசை ..-அடுத்து தானே -திருக்குறுங்குடி நம்பியே தான் ஆழ்வார் என்பரே
.பிராட்டியாரே வகுள மாலை கருடன் ஹம்ச வாகனம் ஆதி சேஷன் திரு புளிய மரம்
— கொசித் கொசித் தாமர பரணி கிருதமாலா – ஸ்ரீ மத் பாகவதத்தில் சுகர் பரிஷத் சூசுப்பிக்க
-திராவிட தேசத்தில்.-நாராயண பக்தியும் உடன் பிறக்கும்
..சேமம் குருகையோ .. பாசுரம் சங்க புலவர்கள் அனைவரும் சேர்ந்து –
மதுரகவி சங்க பலகையில்-கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே .ஏற்றி-
சங்க பலகை காட்டி கொடுத்தது..சேமம் குருகையோ.. பெருமான் உனக்கு..நாமம் பராந்குசமோ நாரணமோ
..ஈ ஆடுவதோ கருடர்க்கு எதிரே இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ. பெருமாள் ..ஒரு சொல் போருமோ உலகில் கவியே.
கலி 42 நாள் திரு அவதாரம்.
முதல் சங்கம் இடை சங்கம் நூல் இன்றும் இல்லை இலக்கணம் அப்புறம் தான் தொல் காப்பியம் அப்புறம் தான்
..ஆதி காவ்யம் இல்லை இருப்பதில் இது பழசு அதனால் தொன்மை
கடை சங்கம் கி மு 9000 ஆண்டு முதல் சங்கம்/5450 -1750 வரை இடை சங்கம் கி பி – 100 ஆண்டு கி பி நடை பட்ட இடை சங்கம் ஆழ்வார் காலம் 3102 கி மு
..திரு வள்ளுவர் – குரு முனிவர் முத் தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழி சேய் என்கிறார்..
இரண்டாவது சங்கத்தில் தான் சங்கை பலகை..கோ செங்கணான் கலி பிறந்து -500-வருஷம் -திருமங்கள் ஆழ்வார் காலத்துடன் ஒத்து போகும்

ஒவையாரும் –ஐம் பொருளும் நாற் பொருளின் முப் பொருளும் அமைத்து பெய்த செம்பொருள்
வூரும் நாடும் உலகமும் தன்னை போல அவன் பெயரையும் தாள்களும் பிதற்ற அருளினார்
உறங்கா புளி-அடியார்கள் திருந்தும் வரை –தர்பாசனார் -உடைய நங்கை திருத் தகப்பனார்  -திருக் கடல் மல்லையில் இருந்தவர் –
ஆதித்ய ராம திவாகர. ..வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு
அச்சுத பாஸ்கரன் வகுள பூஷண பாஸ்கர திவாகரன் -உபநிஷத்தை தமிழ் ஆக்க .-
16 வருஷம் யோக நித்தரை
–பிறந்த நாள் தொடக்கம் ஈர பக்தி திரு துழாய் அங்குரிக்கும் பொழுதே பரி மளிக்கும் போல.
.கொடு உலகம் காட்டேல்- உலகம் பார்க்க வில்லையே -கண் முன்னம் காட்டி கொடுத்ததால் பாடுகிறார்
பொய் நின்ற -மெய் நின்று கேட்டு அருளாய் தொடங்கி
–பட்டோலை கொண்டார் மதுரகவி ஆழ்வார்…நெஞ்சுள்ளே நிறுத்தினான் -காட்சியை அப்படியே காட்டி..
ஆழ்வார் ஒருவரே தெய்வம்
–திரு மங்கை ஆழ்வாரும்-மங்கையர் கோன் ஆறு அங்கம் கூற அவதரித்தார்
– உலகம் ஓர் அளவு திருந்த – . உபதேச பிரதானர் ஆச்சார்யர் சொட்டை குலம் ஸ்ரீ ரெங்க நாத முனி-காட்டு மன்னார் கோவில்..-அவதார ஸ்தலம் –823 -நாத முனிகள் –
-93-திரு நக்ஷத்ரம் இருந்தவர் -976-ஆளவந்தார் –30-வயசுக்குள் ஆக்கி ஆழ்வான்-ஸ்ரீ கீதை உபதேசம் –66-திரு நக்ஷத்ரம் இருந்தார் ஆளவந்தார் -குருகை காவல் அப்பன் -200-வருஷங்கள் இருந்து இருக்க வேண்டும் –25-வயசில் ஸ்ரீ பாஷ்யகாரர் -1017-அவதாரம் என்பதால் -பெருமாள் –12 -திருக் கல்யாணம் –25 -பட்டாபிஷேகம் குறித்தது போலே  -இடைப்பட்ட -3100-காலம் இருண்ட காலம் —1600-வருஷம் முதல் ஆழ்வார் முதல் திருமங்கை ஆழ்வார் வரை அருளிச் செயல்கள் வந்த தேஜஸ் மறைந்து –இதனாலே ஆச்சார்யர்களை பிறப்பித்து அருளினான் –

பராங்குச நம்பி- மதுரகவி வம்சம்..குருகூருக்கு ஏற்றம்.வேத வியாசர் பாகவதத்தில் அருளினார் .
– ஆரா அமுதே –குழலில் மலிய சொன்ன ஓர் ஆயிரத்க்துள் இப் பத்து
–தெற்கு நோக்கி கை தொழுவார்கள் இங்கு நோக்கி…
வீறு பெற்றதது ஆழ்வாரால்
.கருடனே மதுரகவி என்பர்..அவருக்கு வம்சம் உண்டு பராங்குச நம்பியால் 3200 வருஷம் -விடாமல் இருந்த மேன்மை.
…பராங்குச நம்பி இடம் பிரார்த்திக்க ஆயிரமும் அறியோம் பத்தும் அறியோம்..
கண்ணி நுண் சிறு தாம்பு -பத்தி னொன்று தவிர வேறு ஒன்றும் நான் அறியேன்
. அவரே அரண்–ஆழ்வாரை குறித்து 12000 தடவை -உறு சொல்ல தொடங்க.
.ஆழ்வாரும் சு பிரியராக தோன்றி உபதேச முத்தரை உடன்-
ஆயிரம் கேட்டீர் நாலாயிரமும் அருளி/பாவ சுத்தி அர்த்தம் அபிப்ராயம் -உள்ளுறை பொருள்கள் அனைத்தையும் அருளி
திவ்ய மங்கள விக்ரகத்தையும் பாவிஷ்யச்சர்யா -அருள
-உய்ய கொண்டார் மணக்கால் நம்பி
உயிர் பாசுரம் இது -ஆசார்யர் சம்பந்தம் கூறத் தொடங்கும் பாசுரம்
–திரு குருகூர் சம்பந்தம் வேண்டும்..முனிவர் எச்சில் சாப்பிடும் நாய் கதை-மோஷ மண்டலம் போவதை
– நாயோடு பேய்க்கும் இடம்
-அவாகி அநாதர சர்வேஸ்வரன் தென தென என் நாவின் இன் இசை யாருக்கும் கொடுக்கிலேன்
-மாறு உளதோ இம் மண்ணின் மிசையே -மலக்கு நாவுடை ஏற்க்கு
-சடகோபர் அந்தாதி
-பேச நின்ற சிவனுக்கும் பிரமனுக்கும்- பேச தான் நிற்கிறார்கள்.
.வேதம் மட்டும் இருந்து இருந்தால் திவ்ய தேசங்கள் இல்லையே
..உலகோர் உய்ய்வதர்க்கு ..திரு மாற்கு தக்க தெய்வ கவி ஆழ்வார்
..பாவில் சிறந்த -அவரை பாட நானே அதிகாரி-கம்பர்-
நம் பெருமாள் பார்த்து என்னை பாட வைத்தாரே நம் சட கோபரை பாடினீரோ விஞ்சி ஆதாரத்தோடு கேட்டானே
–வேதத்துக்கு முன் செல்வன்..பிரம போல்வார்களின் ஞானத்துக்கு முன் செல்வன் -ஆனால் எங்கள் தென் குருகூர் புனிதன் கவி முன் செல்ல மாட்டான்
மாசி விசாகம் வைகாசி விசாகம் இரண்டு உத்சவங்கள் சிறப்பு இன்றும்
அர்ச்சாவதார திரு மேனி அவதரித்த மாசி விசாகமும் என்றம் தானே நமக்கு
/எங்கள் தென் குரு கூர் புனிதன் –குலத்துக்கே என்பதால் எங்கள் என்கிறார்.
.மீன் நவநீதம கந்தம் போல அன்றி –தாமிரபரணி சம்பந்தம்
கங்கை போல இல்லை கருத்த யமுனை இல்லை.-
தொண்டர்க்கு அமுது உண்ண/
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய சென்சொல்லே
சம்சார தாபம் தணிக்க ஈர பாட்டை உடைத்தாய்
ப்ரேமம் அன்பால் நனைக்க பட்டு அமுத திரு வாய் ஈர தமிழ் இசை உணந்தோர்கட்ச்க்கு
–இரா பகல் வாய் வெருவி நெஞ்சால் நினைத்து பாட வில்லை-பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய்
மனசு நினைந்து வாய் பேசணும்..முதலில் பாடினேன்
-பார்த்தால் இருப்பதை காட்டினாய்..வாய் முதல் அப்பன் –இவரை பாடு வித்த முக்கோட்டை திரு தொலை வில்லி மங்கலம் .
–அதனால் தன் திரு வாய் மொழி/ நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
– மனசால் இல்லை சகாயம் இன்றி/ திரு மால் இரும் சோலை என்றே என்ன -திரு மால் வந்து புகுந்தான் போல்..நினைத்து நினைத்து அவதானம் பண்ணி சொல்ல வில்லை
வாசனையால் பாடுகிறார்…மற்ற தமிழில் வாசி -ஈர தமிழ்
.கவியின் ஒரு பாதத்தின் முன் செல்வானோ..திரு வாய் மொழி அமர்ந்தே கேட் ப்பான் .யாரும் குறுக்கே போக கூடாது
..பரனுக்கே அங்குசம் இட்டார் -பராங்குசன்
.மண் வாசனையே கண்ணன் பக்தி கிட்டும்.
ஆழ்வாருக்கு பத்திமை நூல் வரம்பு இல்லையே.
வியாக்யானம் பண்ண பட்டரே தமக்கு அதிகாரம் இல்லை என்பாராம்
சந்தனை சோலை குருகை பிரான் ..தர்சநீயமான திரு நகரிக்கு-தாமர பரணி நதியாலும் சந்தன சோலைகளால் சூழ பட்டு
..-தாமர பரணி -சம்சாரம் தண்டுவிக்கும்..சந்தன சோலைகள் சூழ்ந்து இருக்கும்..
குளிர்ச்சி-பைம் கமல தண் தெரியல் பட்டார் பிரான்- கண்ணன் மாலை கொதிக்கும்-ஆச்சார்யர் மாலை குளிர்ந்து இருக்கும்
-பொலிந்து நின்ற பிரான் சொல்லிய மகாத்ம்யத்தில் சந்தன சோலை சொல்ல வில்லை.
.பிரம்மாண்ட புராணத்தில் 150 ச்லோககங்கள் உண்டு ஆழ்வார் பற்றி..குருகூர் நம்பி என்று இதனால் தான் மதுர கவி விடாமல் அருளி இருக்கிறார்.
பிரான்– சர்வருக்கும் சேவ்யம் ஆகும் படி உதவி பண்ணி இருக்கிறவர்–குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் -நின்று ஆலும் பொழில்
-அசேதனமும் திரு வாய் மொழி பாடுகிறது..-சாகா சம்பந்தம் இருப்பதால் பாதித்து சாகா -கிளை / சாம வேதம்
..வண்டினம் ஆலும் சோலை மயில் ஆடினதை பாடினது போல்
/இவர் மதுர கவி ஆதலால் மதுர வாக்கியம் கொண்டாடுகிறார் ..
/சோலை கிளி பாடினது போல -கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடும்.
.குருகை பிரான்– அவதரித்து திரு வாய் மொழி அருளிய உபகாரம்-தம் காலத்து உள்ளோர்க்கு /
நாத முனிகளுக்கு கொடுத்து சம்ப்ரதாயம் நிலை நிறுத்திய உபகாரம் /பொலிக பொலிக பாடினாரே கூட இருந்தவர் திருந்தியதால்
திரு மங்கை ஆழ்வாருக்கும்-நாத முனிக்கும் நடுவில்..உள்ள காலம் பற்றி -சொல்ல முடியாத நிலைமை.
450 வருஷம் இடை வெளி நாத முனிகளுக்கும் ராமனுஜருக்கும்
இன்பம் மிகு ஆறாயிரம் தொடங்கி-திரு குருகை பிரான் பிள்ளான் மூலம் -ஐந்து -எஞ்சாமை எதற்கும் இல்லை ..பெருக்கி கொடுத்தவர் சுவாமி ராமானுஜர் .
தாமிர பரணி .நீரை காய்ச்சி –முதலில் வந்ததோ காஷாய -திரு தண்டம்-பற்பம் என திகழும் -கலியும் கெடும் கண்டு கொண்மின்-
-அடுத்த தடவை காய்ச்சி நம் ஆழ்வார் விக்ரகம் ..சேர்த்தி திரு மஞ்சனம் -உடையவர் சந்நிதிக்கு ஆழ்வார் எழுந்து அருளி
…எனக்கே தன்னை தந்த கற்பகம் –உம்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்தரம் —
தம்மையே தமர்க்கு நல்கும் தனி பெரும் பதம் -கம்பர்
ஆர பொழில் சந்தன சோலைகள்.
பிரான்-உபகாரன்..
அமுத திரு வாய் ஈர தமிழ்-பக்தி காமம் இவற்றால் நனைத்து
…ஈரம் என்பதால் தான் வல்லினம் குறைத்து கற்று கத்து என்கிறோம்,.பகவத் ப்ரேமம் ஆழ்ந்தார்கள் சப்தங்களையும் ஆழ்த்தினார்கள்
இசை கூட்டி-நாத முனிகள் இசை கூட்டினார்..பரத நாட்டியம் – பாவம் ராகம் தாளம் .
93 வருஷம் நாத முனிகள் இருந்து இருக்கிறார்- பெற்று பண் கூட்டி –
460 வருஷங்களாக அத்யயன உத்சவம் நடந்து -அப்புறம் நின்று- மீண்டும் நாத முனி காலத்தில் தொடங்கி .இசைப்பா –
அரையர் எல்லோரும் நாத முனி வம்சம்..-யோக ரகசியம்-குருகை காவல் அப்பன் -மூலம் கொடுத்து -1042 ஆளவந்தார் –200 வருஷம் குருகை காவல் அப்பன் இருந்து இருக்கணும்
இசை உணர்ந்தோர் -திருமங்கை ஆழ்வாரும் மதுரகவி -பாவின் இன் இசை பாடி
-இனியவர்-பராங்குச நம்பி- -கல்யாண குணங்களை நினைந்து நன்றி தெரிவித்து கொண்டு
.அதையே உய்யும் சீலம் கொள் நாத முனியை நெஞ்சால் வாரி பருகும் இராமனுசன் என் தன் மா நிதியே ..
ஆளவந்தார்- திரு குமரர் -ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் ..இவர் மூலம் ராமானுஜர் பெற்றார் ..
ஆம் ஆறு அறியும் பிரானே அணி அரங்கத்து
-அவன் சங்கல்பம் மூலம் தான் ஆரா அமுது பதிகமும் கண்ணி நுண் சிறு தாம்பு இரண்டையும் நட மாட்டி.வைத்தான்..
குருகை வைபவம்- பராங்குச நம்பி அங்கேயே இருந்து -3500 வருஷம் ஒரு பரம்பரை இருந்து வந்து இருக்கிறது-
ஆளவந்தார்-ஆ முதல்வன் பெரிய நம்பி திரு கோஷ்டியூர் நம்பி திரு மலை நம்பி திரு மலை ஆண்டான் ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்
நாத முனிகள் சீரை பருகும் ஸ்வாமி ..பெற்றேன் எடுத்தேன் மா நிதியை…
அத்யந்தம் பிரிய தமராய் -ஸ்ரீ பராங்குச நம்பி../சீரை பயின்று -வள்ளன்மை பாடி அனுசந்தித்து
-மறவாமல் செய் நன்றி கொண்டு..–உய்யும் -சீரை அனுசந்தித்தே உய்யும் –மேலை அகத்து ஆழ்வார் கீழை அகத்து ஆழ்வார் -தேவ கானம்
..கல் திரைக்குள் தாயார் இருப்பதை அரையர் தாளம் வைத்தே கண்டு பிடித்தார்
..நெஞ்சால் வாரி பருகும்.. சம காலம் இருந்தால் ஆலிங்கனம் /அனுபவித்தல்-
நீர் பண்டமாக உருகினார் சிஷ்யரின் பெருமை கண்டு –
விபீஷணன் -ராமன்-லோசனாம் -உருக இவன் பருகினானாம்
..வில் இருத்து மெல் இயல் தோள் தோய்ந்தாய் என்னும்
– வீரம் வாய் மேன்மை கண்டு சீதை உருகினாள் அவன் தோய்ந்தான் –
அது போல் எம்பெருமானாரும் நாத முனியை மனசால் பருகினார்
நாத முனியை-அவர் சீரை இல்லை அவரையே – -நெஞ்சால் வாரி பருகும்.
.–வாயால் முடியாது சம காலம் இல்லை-பெரு விடா யர் மடுவில் குதித்து வாரி குடிப்பது போல
. பசியன் சோற்றை கண்டால் போல் மேல் விழுந்து ஆச்சார்யர் இடம்.
.பகவத் விஷயத்தில் பட்டினி- பாலை வனத்தில் சோலை/ கமர் போல காட்டான் தரை நெஞ்சு ஈர நெல் விளைவித்து –
-என் தன் மா நிதியே –ஆழ்வான் மூலம் -பெற்ற -பிரளயத்தில் நவ ரத்னம் அழியும் .விலஷனமான நிதி இது ..நித்ய நிதி..
அவர் மா நிதி –அஷயமான நிதி ..
கொள்ள குறை இலன்…குறையாத நிதி..வாரி பருகும் மா நிதி..

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: