அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-14-கதிக்குப் பதறி வெம்கானமும் கல்லும் கடலும் – இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை

பதினான்காம் பாட்டு –அவதாரிகை
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் உடைய திவ்ய சூக்தியை பாடுமவர்களை ஏத்தும் எம்பெருமானார்
என்னைப் பிரியாமையாலே -புருஷார்த்த லாபத்துக்கு துச்சக சாதனங்களை அனுஷ்டிக்கும்
ஸ்வபாவம் போகப் பெற்றேன் -என்கிறார் –

கதிக்குப் பதறி வெம்கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை ஆற்றேன் கொல்லி காவகன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமானுசனைச் சொர்விலனே -14 –

ஸ்ரீ குலசேகரப்பெருமாள் ரத்னங்களைப் பதித்தால் போல் சாஸ்திர சொற்களை பதித்த கவிகளை –
ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாடா நின்றுள்ள வைபவத்தை உடையவர்களுடைய திருவடிகளையே
யேத்துமவராய் – பாகவத விஷய பிரேமத்துக்கு தமக்கு மேற்பட்டார் இல்லாத படி இருக்கும்
எம்பெருமானார் என்னை விட்டு நீங்கு கிறிலர்-
ஆதலால் ப்ராப்ய லாபத்தை பற்ற த்வரித்து
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் -மூன்றாம் திருவந்தாதி – 75-
என்கிறபடியே அத்யுஷ்ணமான காட்டோடு மலையோடு கடலோடு வாசி யற-எல்லா இடத்திலும் –
சர்வ அவயவங்களும் ஒக்க நின்று -கொதிக்கும் படியாக தபச்சுக்களைப் பண்ணும் ஸ்வபாவம் போகப் பெற்றேன் –
அன்றிக்கே –
வெம்கானமும் கல்லும் கடலும் எல்லாம் கொதிக்க தவம் செய்யும் கொள்கை -என்றதுக்கு
இவனுடைய தப க்ரௌர்யத்தைக் கண்டு -அவை தானும் நின்று பரிதபிக்க -அவ்வவ ஸ்தலங்களிலே
தபசு பண்ணா நிற்கும் ஸ்வபாவம் என்றும் சொல்லுவார்கள் –
கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி –என்றதற்கு -ஸ்ரீ குலசேகர பெருமாள் அனுபவ
பரீவாஹா ரூபமான ச்வோக்திகளை ரத்னங்களைப் பதித்து வைத்தால் போலே நிறைத்து  வைத்ததாய்-
சாஸ்திர ரூபமாய் இருந்துள்ள கவிகள் என்னவுமாம் –
கொள்கை -ஸ்வபாவம் / சோர்வு -பிரிவு /சோர்விலன் -என்றது பிரிவு இலன் என்றபடி –(சோர்வை   இல்லமாக கொண்டவன் என்று கொள்ளக் கூடாதே என்று இத்தையும் பரம காருண்யத்தால் காட்டி அருளுகிறார் )

மாஸூசா -போகும் இடம் பெருமையும் பார்த்து பார்த்தும் -நாம் செய்த பாபங்களை பார்த்தும் -நம் இயலாமை கண்டும் தவிப்போமே -அந்தக துக்கம் போக்க –
நீர் நம்மை விட்டாலும் நான் உன்னை விட்டேன் -சோர்விலன் –
இவையும் கொதிக்கும் கடும் தவத்தால் -தவம் செய்தவர்களும் கொதிக்க –
பாடும் பெரியவர் -நாத முனிகள் -பிள்ளான் போல்வார் – என்றுமாம் –
தேட்டரும் திறல் –அடியார் ஈட்டங்கள் -அரங்கன் முற்றம் சேறு செய்யும் தொண்டர்களே பாடும் பெரியவர்-உபாயத்தில் கண் வைக்காமல் -உபேயம் புத்தி பண்ணி கைங்கர்ய நிஷ்டராகவே இருக்க சரம தசையில் உபதேசித்து அருளினார் எம்பெருமானார்-அநந்யார்ஹம் திடமாக அருளிச் செய்த ஆழ்வார் அன்றோ –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
இவ் எம்பெருமானார் தம்முடைய பூர்வ அவதாரத்திலே -தாம் ஈடுபட்ட சக்கரவர்த்தி திரு மகன் –
விஷயத்திலே அதி வ்யாமுக்த்தரான -ஸ்ரீ குலசேகர பெருமாள் -சூத்ரே மணி கதா இவ -என்னும்படி
முகம் அறிந்தவர் -மாணிக்கங்களை கோக்குமா போலே -சாஸ்திரம் சொல்லைக் களை பறித்து –
தம்முடைய திவ்ய சூக்திகளாலே நிர்மித்த திவ்ய பிரபந்தங்களை -அனுசந்திக்கும் பெரியோர்களுடைய
திருவடிகளை ஸ்துதிக்கும் -எம்பெருமானார் என்னை விட மாட்டார் -ஆன பின்பு புருஷார்த்த லாபத்துக்காக –
துஸ் சககங்களான சாதனாந்தரங்களை அனுஷ்டிக்கும் ஸ்வபாவம் போகப் பெற்றேன் -என்கிறார் .-

வியாக்யானம் –
கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி
கொல்லி நகர் என்று சொல்லப் படுகிற-திரு வஞ்சிக் களத்துக்கு ரஷகரான -ஸ்ரீ குலசேகர பெருமாள் -சாஸ்திர சொல்லுக்களினுடைய
தாத்பர்ய விஷய பூதங்களாய் இருக்கிற பகவத் ஸ்வரூப-ரூப குண விபூதிகளையும் -தத்வ ஹித புருஷார்த்தங்களையும்
-முத்துக்களையும் ரத்னங்களையும்-முகம் அறிந்து கோக்கும் விரகரைப் போலே -விசதமாக தத் தத் ஸ்தானங்களிலே சேர்த்து
இருளிரியச் சுடர் மணிகள் -என்று தொடங்கி–நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவார் –
என்னும் அளவாக -திவ்ய பிரபந்த ரூபேண அருளிச் செய்த -போக்யமான கவிகளை –
காவலன்-
ரஷகன் –
பாடும்பெரியவர் பாதங்களே –
தம் தாமுடைய ப்ரீதிக்கு போக்குவீடாய்-பாடா நின்றுள்ள வைபவத்தை உடையரான -நாத முனிகள் -ஆள வந்தார் -பெரிய நம்பி –
திருமலை நம்பி -திருக் கோட்டியூர் நம்பி -திருவரங்கப் பெருமாள் அரையர் -திருமாலை ஆண்டான் –முதலான ஞானாதிகருடைய திருவடிகளையே
-துதிக்கும் பரமன்
-குரு பாதம் புஜாம் த்யாயேத்-குரோர் நாம சதா ஜபேத் -குரோர் வ்ர்த்தாஸ் சகதயேத் குரோர் அந்ய நபாலயேத்-அர்ச்சநீயஸ்
சவந்த்யஸ் கீரத்த நீயஸ் ச சர்வதா -என்கிறபடியே சதா ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு -போந்து –
அந்த பாகவத நிஷ்டைக்கு மேற்பட்டார் இல்லை என்னும்படி உத்க்ரிஷ்டரான –
யவரேலும் என்னை யாளும் பரமர் -என்றும் -நம்மை அளிக்கும் பிராக்கள் -என்றும் -மயர்வற மதிநலம் அருளப்
பெற்றவரும் அப்படியே அருளிச் செய்தார் இறே –
இராமானுசன் என்னை சோர்விலனே –
இராமானுசன் -எம்பெருமானார் -என்னை -பரகத ச்வீகாரமாக அங்கீ கரிக்க பட்ட –சோர்விலன்-இனி விட மாட்டார் –
சோர்வு -பிரிவு சோர்விலன் -என்றது பிரிகிறிலன்-என்றபடி -ஆன பின்பு -பிராப்யத்திலே த்வரித்து –
ப்ராபகாந்தரன்களிலே கண் வைக்கும் ஸ்வபாவத்தை தவிர்ந்தேன் -என்கிறார் .-பிராபகாந்தர
பரித்யாகத்துக்கும் -அஞ்ஞான அசக்திகள் அன்று –ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது –ப்ராபகாந்தரம் அஞ்ஞருக்கு உபாயம் – ஞானிகளுக்கு அபயம் -என்னக் கடவது இறே
கதிக்கு பதறி –
பரம புருஷார்த்தத்துக்கு த்வரித்து –
வெம் கானமும் கல்லும் கடலும்
-பொருப்பிடையே நின்றும்-புனல் குளித்தும்
-ஐந்து நெருப்பிடையே நிற்கவும் வேண்டா -என்றும் -ஊன் வாட வுண்ணாது உயர் காவலிட்டு
உடலில் பிரியா புலனைந்தும் நொந்து -தாம் வாட வாட தவம் செய்ய வேண்டா -என்றும் -காயோடு நீடு கனி
வுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா -என்றும் சொல்லுகிறபடியே –
அதி க்ரூரமான காடுகளிலே இருந்தும் பர்வதாக்ரன்களிலே வசித்தும்
சீதளமான தீர்த்தங்களிலே அவகாஹித்தும் -பஞ்சாக்னி மத்யத்தில் நின்றும்
எல்லாம் கொதிக்கத் தவம் செய்யும் -எல்லா அவயவங்களும் ஒக்க பரிதபித்து-க்லேசிக்கும்படியாக தபச்சுக்களை பண்ணும் –
கொள்கை அற்றேன்
-ஸ்வபாவம் போகப்-பெற்றேன் –கொள்கை -ஸ்வபாவம் –
அன்றிக்கே -வெம் கானமும் –கொள்கை அற்றேன் -என்றது –
எதாத்த்ரிஷ்டி மவஷ்டப்ய நஷ்டாத்மா நோல்ப புத்திய ப்ரபவத்வுக்ர கர்மணா
ஷயாய ஜகதோ ஹீத காமமாஸ்ரித்யு துஷ்ப்பூரம் டம்பமா நம தான் வித மோஹாந்தர்
ஹீத்வா சத்க்ரஹான் ப்ரவர்த்தந்தே சூசிவ்ரதா-என்று கீதையிலும் –
பஹூபிகாரணை ர்த்தேவோ விச்வாமித்ரோ மகா முனி -லோபிதக்கோபி தச்சைத
பசாசாபிவர்த்ததே– நஹ்யச்திவ்ரஜி ந கிஞ்சித் தர்ச்யதே சூஷ்ம மப்யதா -நதீயதே
யதித்வச்ய மனசோய தபீப்சிதம் -விநாசயே தத்ரை லோக்ய தபஸா ச சராசரம் –
வ்யாகுலஸ் சதிசஸ் சர்வ நாசா கிஞ்சித் பிரகாசதே –சாகர ஷூபிதாஸ் சர்வே விசீர்யந்தேச சர்வத –
பிரகம்பதேச பிரத்வீ வாயுர்வாதி ப்ர்சாகுலா — பாஸ்கரோ நிஷ்ப்ரபஸ் சைவ மகர்ஷேஸ் தஸ்ய தேஜஸா –என்று ஸ்ரீ ராமாயணத்திலும் –
தஸ்ய தூமஸ் சமுத்பன்ன தூமோக்நிசத போமய-திர்ய கூர்த்தவ மதோலோகோ நதபத் விஷ்வ கீரித –
திவிச்த்தாது -நசக்துவன் –என்று பாகவதத்திலும் -சொல்லுகிறபடியே -இப்படி ப்ராப்யாந்தரங்களுக்காக
தபச்சுக்களை பண்ணி –லோகத்துக்கு எல்லாம் ஷோபத்தை பண்ணும் ஸ்வபாவம்
போகப் பெற்றேன் -என்கிறார் -என்னவுமாம் –

————————————————————————–

அமுத விருந்து –

அவதாரிகை –
ஸ்ரீ குலசேகர பெருமாள் உடைய கவிகளை பாடும் அவர்களை ஏத்தும் எம்பெருமானார்
என்னை கை விட மாட்டார் -ஆகையாலே இனி பேறு பெற வேண்டி தவம் செய்யும் கொள்கை
இல்லாதவன் ஆயினேன் -என்கிறார்

பத உரை –
கொல்லி காவலன் -ஸ்ரீ குலசேகர பெருமாள்
கலைச் சொல் -சாஸ்திர சொற்களை
பதிக்கும் -பதிய வைத்து இருக்கும்
கவி -கவிகளை
பாடும் -பாடுகிற
பெரியவர் -பெருமை உடையவர் களுடைய
பாதங்களே -திருவடிகளையே
துதிக்கும் -ஸ்தோத்திரம் செய்யும்
பரமன் -தன்னிலும் மேற்பட்டவர் வேறு எவரும் இல்லாத
இராமானுசன் -எம்பெருமானார்
என்னை சோர்விலன் -என்னைக் கை விட்டு விட மாட்டார்
கதிக்கு -ஆகையால்-பேற்றுக்கு
பதறி -ஆத்திரப்பட்டு
வெம் கானமும் -வெம்மை வாய்ந்த காட்டிலும்
கல்லும் -மலைகளிலும்
கடலும் -சமுத்ரத்திலும்
எல்லாம் -எல்லா இடமும்
கொதிக்க -கொதிக்கும் படியாக
தவம் செய்யும் -தவம் புரியும்
கொள்கை ஆற்றேன் -கொள்கை இல்லாதவனாயினேன் –

வியாக்யானம் –
கதிக்கு பதறி கொள்கை ஆற்றேன் –
பேற்றை எவ் வழி யினாலாவது பெற்று விட வேண்டும் -என்று ஆத்திரப்பட்டு -மிகக் கொடிய
தவம் செய்ய எக்ல்காலத்திலும் நான் முயல மாட்டேன் -என்றபடி –
தவம் செய்யுமவர்கள் -கானகத்திலும் -மலைகளிலும் -கடல்களிலும் இருந்து –
வரும் துயரத்தை பொருள் படுத்தாமல் -தவத்தில் நிலை நிற்பர்கள்-
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் -மூன்றாம் திருவந்தாதி – 76-
என்று பேய் ஆழ்வார் தவம் செய்யும் இடங்களை கூறுவது காண்க –
வெம் கானம் -வெம்மையான கானம் -பண்புத் தொகை
கல்-மலை
கல்லும் கனை கடலும் -பெரிய திருவந்தாதி – 68-
கல் எடுத்து -திரு நெடும் தாண்டகம் – 13– என்று
முறையே நம் ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் அருளி உள்ளமை காண்க –
நைமிசாரண்யம் முதலிய கானகங்களிலும்
திருமலை முதலிய பர்வதங்களிலும்
கடலிலும் பலர் தவம் புரிந்து உள்ளமை புராணங்களில் காணலாம் –
ப்ராசீன பர்ஹீஷ் -என்பவருடைய புதல்வர்களாகிய ப்ரசெதசர் -பதின்மர் பதினாயிரம் ஆண்டுகள்
கடலுக்குள் இருந்து தவம் புரிந்து கடவுளைக் கண்டதாக ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம் – 4- அத்யாயம் – 30 –
கூறுகிறது –
கடல் என்பது உப லஷணமாய் நீர் நிலைகளையும் குறிக்கும் –
ஸௌ பரி நீருக்குள் நெடும் காலம் தவம் புரிந்ததாக புராணம் கூறுகிறது
எல்லாம் கொதிக்க
தவம் புரிவோர் உடலில் உறுப்புக்கள் அனைத்தும் கொதிக்கும்படியாக -என்றபடி
இனி –வெம் கானமும் கல்லும் கடலும் -இவை அனைத்தும் தவம் தணலின் வெம்மை தாங்காது
கொதிக்கும்படியாக -என்று உரைப்பதும் உண்டு –
ஹிரண்ய கசிபு தவம் செய்யும் போது –
தஸ்ய மூர்த்த்ன ச்சமுபந்த ச்தூமோக்நிச்த போமய திர்யக் ஊர்த்த்வ மதோலோகான்
அதபத் விஷ்வகீரித க ஷூபுர்நத்யுதன்வந்த சத்வீபாத் ரிச்ச்சால பூ நிபேதுஸ் சக்ர ஹாச்தாரா
ஜஜ்வளுச்ச திசோதச -பாகவதம் – 7-9 49-என்று
அந்த ஹிரண்ய கசிபுவினுடைய தலையிலிருந்து தவத்தின் வடிவமான புகையோடு
நெருப்பு உண்டாயிற்று -அது இடையிலும் மேலும் கீழும் உள்ள உலகங்களை நாலு புறங்களிலும்
பரவித் தபிக்கும்படி செய்தது -ஆறுகளும் கடல்களும் கலங்கின -தீவுகள் மலைகளுடன் கூடிய
பூமி நடுங்கியது -கிரகங்களுடன் கூடிய நஷத்ரங்கள் விழுந்தன -திசைகள் பத்தும் தீப் பற்றியவைகளாய்
ஜ்வலித்தன – என்றபடி உலகம் நிலை கொள்ளாது தவித்தமை காண்க –
கொள்கை -ஸ்வபாவம் என்பது ஜீயர் உரை
கொல்லி காவலன்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் -என்று அவரே கூறிக் கொள்வது காண்க –
கூடல் என்னும் பாண்டிய நாட்டு தலை நகர் ஆகிய மதுரையும் -கோழி என்னும் சோழ நாட்டு தலை நகராகிய
உறையூரும் -வென்றி கைப்பற்றியவையே யாதலின் சொந்தத் தலை நகராகிய கொல்லி நகரை-மட்டுமே கூறினார் அமுதனார்
கொல்லி என்பது -கொல்லி மலை சூழ்ந்த நாடு என்பர் சிலர்
இங்கே கூடல் கோழி என்னும் நகரங்களோடு ஒரு கோவையாக கூறலின்
-கொல்லி -என்பது நகரமே என்று உணர்க -கொல்லிக் கண்ணன் -என்று புலவர் ஒருவர்
பேர் பெற்று உள்ளார் –ஆதலின் அது நகரமே -என்க
சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே-
கலை -சாஸ்திரம்
கலை சொல் பதிக்கும் கவி என்று கூட்டுக
சாஸ்திர சொற்களை அமைத்து திரு மொழி அருளிசெய்த்து உள்ளாராம் குலசேகர பெருமாள் –
திருக் கண்ண புரத்தில் உள்ளவர் பேசும் வார்த்தைகளிலே சாஸ்திரங்கள் இலங்கும் என்கிறார்
திருமங்கை ஆழ்வார் –கலை இலங்கு மொழி யாளர் -8 1-1 – -என்பது அவர் திரு மொழி
கட்புலன் ஆகாதவைகளான பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களை சாஸ்திரங்கள்
நமக்கு தெரிவிப்பது போலே -அவர்கள் பேசும் வார்த்தைகளும் நமக்கு அவற்றை உணர்த்து வனவாய்
இருத்தலின் –கலை இலங்கு மொழி யாளர் –என்றார் ஆழ்வார் -அங்கனமே குலசேகர பெருமாள்
திவ்ய பிரபந்தத்திலும் சொற்கள் சாஸ்திரம் போலே அவற்றை அறியுமாறு செய்தலின்
கலை சொல் என்று வருணிக்கிறார் அமுதனார் –இடம் அறிந்து ரத்னங்களை பதிப்பது போலத் தக்கவாறு
பெருமாள் திரு மொழியில் சொற்கள் பதிக்கப் பட்டு உள்ளன
பதிக்கும் என்பதால் சொல்லை ரத்னமாகவும் -கவியை ஆரமாகவும் -உருவகம் செய்தமை போதரும் –
ஏக தேச உருவகம் ஹாரத்தில் ரத்னங்கள் போலத் தமிழ் மாலையில் சொற்கள் பதிக்கப் பட்டு உள்ளன –
குலசேகரன் சொல்லினின் தமிழ் மாலை –2 – 10–என்பது பெருமாள் திருமொழி
-இதனால் சொற்களின் சேர்க்கை அழகு கருதப் படுகிறது -பதங்கள் -சொற்களின் இணைப்பை சய்யை-என்பர்
வட நூலார் –
இனி கலைச் சொல் என்று கொண்டு கூட்டாது இருந்தபடியே கலை என்பதைக் கவிக்கு அடையாக்கிப்
பொருள் கூறலுமாம் –கலையாகிய கவி என்று இரு பெயரொட்டுப் பண்புத் தொகை
-சாஸ்த்ரமான பெருமாள் திரு மொழி -என்றபடி – இதனால் கொல்லி காவலன் தனது அனுபவம்
உள் அடங்காது -வெளிப்படும் தன சொற்களை ரத்னங்களைப் பதித்து வைத்தால் போன்று அழகு
பட இணையக் கொத்து வைத்த சாஸ்திர ரூபமான கவி -என்றதாயிற்று –
பாடும் பெரியவர் –
பெருமாள் திருமொழியை அனுசந்திக்கும் போது-கவி இன்பத்துடன் அது தரும் இறை உணர்வின்
இன்பமும் -சேர்ந்து பேரின்பக் கடலில் திளைத்துப் பாடத் தொடங்குகிறார்கள் ரசிகர்கள் –அவர்களைப் பாடும் பெரியவர் -என்கிறார் அமுதனார் –
இனி -இன்னிசையில் மேவிச் சொல்லிய இன் தமிழ் — 6-10 – என்றபடி இன்னிசை மேவியதாலின்
பாடுகின்றனர் என்னலுமாம் -பாடுவதே பெருமை என்க –
பாதங்களே துதிக்கும் பரமன்
குலசேகரப் பெருமாள் அடியிலும் இடையிலும் முடிவிலும் முறையே
பொன்னி வருடும் அடியையும்-1-11
முடி மேல் மாலடியையும் –7 11- –
அரசு அமர்ந்தான் அடியையும் – 10-7 -சொல்லி
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவதையே முதலிலும் இறுதியிலும் பலனாக அமைத்து துதிக்கிறார் –
அடித் துதியான கலைகவியாம் சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர்க்கு தொண்டர் தொண்டரான
எம்பெருமானாரோ அவர்கள் பாதங்களையே துதிக்கிறார் -அதனால் தொண்டர்கள் திறத்துக் கொண்ட
ஈடுபாட்டில் தமக்கு மேற் பட்டார் எவருமே இல்லாத நிலையை எய்தினமையின்
எம்பெருமானாரை பரமன் -என்கிறார் – பரமன் -தனக்கு மேற் பட்டவர் இல்லாதவன்
என்னைச் சோர்விலன் –
என்னை -தானே அபிமானித்து ஏற்ற என்னை
நானாகப் பற்றினால் அன்றோ விட்டுப் பிரிய இடம் உண்டாகும் எனபது கருது –
சோர்வு -பிரிவு

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தல்

கொல்லி காவலன் சொல்-கௌஸ்துபம் அம்சம் -புனர்வசு நட்ஷத்ரம் திரு அவதாரம்
கூடல் நாயகன் -பாண்டிய தேசம் வென்றவர் திரு வஞ்சி களம்-திரு அவதார ஸ்தலம்
. கொல்லி -நகரம் கோழி கோன் சோழ தேசம் வென்றவர் /கொல்லி கோடல் கோழி இவை நகரம்
கொல்லி காவலன் -திரு வஞ்சி களத்துக்கு காவலன் கோழியும் கூடலும்– ஒரு வார்த்தை இருந்தாலும் திவ்ய தேசம் தான் –
ராமன் இடம் மண்டி இருந்தார் -ராமன் துக்கம் தன் துக்கம் என்று இருந்தவர்
எம்பெருமானார் பூர்வ அவதாரத்திலே ஈடு பட்ட சக்கரவர்த்தி திரு மகன் விஷயத்தில் -ஈடு பட்ட குலேசேகர பெருமாள்.
நம் சம்பிரதாயத்தில் பெருமாள்=சக்கரவர்த்தி திரு மகன்
பெரிய பெருமாள் ஸ்ரீ ரெங்கத்தில் மூலவர்
நம் பெருமாள் -உத்சவர்
இதனால் இவரும் பெருமாள் -பெயரை பெற்றார் .-அதனால் பெருமாள் திரு மொழி .
-தினமும் திரு அரங்க யாத்ரை -மெய்ப்பாடு –
கலை பதிக்கும்– கவி பாடும்-சமஸ்க்ருத வேதம் ரத்னம் பொதிந்த ஹாரம் பெருமாள் திரு மொழி
..செண்பகம் மீன் ஏதானும் ஆக திருவேம்கட திருமலை சம்பந்தம் வேண்டி அருளினார் –
..பெரியவர்- -பரமன்- அடியவருக்கு- பெரியவர் பாதங்களை துதிப்பதில் இவர் போன்ற யாரும் இல்லை.
. சுந்தர தோள் உடையான் பரம சுவாமி மூல மூர்த்தி.திரு மால் இரும் சோலை –
.அபரமன்-மேம் பட்டவன் அல்லன். அப ரமன்-ராம தேவி விட்டு இருப்பவன் திரு இல்லா தேவர்..
– கதிக்கு பிராப்யம் பதறி –
-சரீரம் கொதிக்க -ஊன் வாட உயிர் காவல் இட்டு.
.-உபாயாந்தரங்களை பற்ற வேண்டாம்..
வெம் கானமும் கல்லும் கடலும் -எல்லாம்-கொதிக்க தவம் செய்யும்/
அவயவங்கள் எல்லாம் கொதிக்க-இவன் உடைய தப க்ரவ்யத்தை கண்டு அவை தானும் நின்று பரிதபிக்க –
/எல்லா இடங்களும் கொதிக்க தவம் செய்யும் கொள்கை ஆற்றேன்-
ச்வாபம் முன்பு இருந்தது–இன்று விட்டேன்
காடு எரியும் கடல் கொந்தளிக்கும் மலையும் கொதிக்கும் படி பண்ணும் தவம் செய்ய வேண்டாம்
-ரஜோ தமோ குணா வியாபாரம் .. சாத்விக குணமே வேணும்.
.துருவன் தபஸ் பண்ண -காலை தூக்கதேவர்கள் போய் சொல்ல ஹிரண்யன் தபஸ் பண்ணுவது போல
விசவா மித்ரர் தபஸ்-லோகத்துக்கு சோபம் உண்டாகும் -மோஷ ஆனந்த்துக்கும் பண்ண மாட்டேன் ..
சர்வேஸ்வரனை கூட பிடிக்க வேண்டாம்.. சுவாமியே பற்றியதால்-
சோர்விலன்– நீக்கம் அற இருக்கிறார் இதனால்
இராமனுசன் என்னை சோர்விலனே-பிரியாமல் அவர் இருக்கிறார்
.–ஞானத்தாலே பக்தியால் மோஷம் -இவை அற்ற -எனையும் பார்த்து என் இயல்பையும் பார்த்து –
-அறிவு ஓன்று இல்லா ஆய் குலம்என்னில்– உன்னையும் பார்த்து -குறை ஒன்றும் இல்லா கோவிந்தா நீ இருக்க என்றாளே ஆண்டாள்
…உண்மை நம்பிக்கை வேணும்
.சரம பரம நிஷ்ட்டை=-புரு ஷார்த லாபத்துக்கு – -துச் சகம் சாதனங்களை அனுஷ்டிக்க வேண்டாம்
….பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பு இடையே நிற்கவும் வேண்டாம்
..ரத்னம் -கலை சொல்..பதித்தார்..சாஸ்திர சொல்களை.ப்ரீதிக்கு போக்கு வீடாக பெருமாள் திரு மொழி அநு சந்திக்கும் பெரியவர்
….சோர்வு- பிரிவு சோர்விலன்- பிரிவு இலன். சோர்வை இல்லமாக கொண்டவன்-
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் -போல பற்றை இல்லமாக கொண்டவன் /பற்று இல்லாதவன் இரண்டு அர்த்தம்..
.சூத்திர மணி கணாம் இவ-நூலும் மணியும் போல கீதை /உண்டியும் பாவும் ஒத்து கிடக்கும் அது போல இல்லை–
..நூல் ஓன்று மணிகள் நிறைய கண்ணுக்கு தெரியாத நூல் போல இருக்கிறான்..
மணிகளை நூல் தானே தாங்கும்…நாராயணனே -சூத்ரே நமக்கே- பன்மைகள்- மணி கணாம்
ஏகமேவ -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -நாராயணனே
நமக்கே -நாமோ பலர் –
-அது போல சாஸ்திர சொல் தெரியும் படி பெருமாள் திரு மொழி-
இது தான் நூல்- தெளியாத மறை நூல்கள் தெளிகின்றோம் அருளி செயல்களால்-வேதாந்த தேசிகன்
பல சூத்திர வாக்யங்களுக்கு ஒரு பிர பந்தம்..
இது கொண்டு சூத்திர வாக்யங்களை ஒருங்க விட்டார் ஸ்ரீ பாஷ்யகாரர்
–ஆன பின்பு சாதனாந்தரங்களுக்கு போக வேண்டாம்
-தத்வ ஹித புருஷார்த்தங்களை -அனுபவம்
-சொரூபம் -ரூபம்-குணம்-விபவம்- போன்ற ரத்னங்களை அரங்கன் இடம் ஆரம்பித்து நாரணன் இடம்முடித்தார்
-பெரியோர் நாதமுனிகள் தொடக்கமாக –ஞானாதிகர்கள் -சிறு மாமனிசராய்-பாடும் பெரிவர்கள்
– இன் இசை கூட்டி -மேவி சொல்லிய இன் கவி
பொன்னி வருடும் அடி-முதலில் சொல்லி
..முடி மால் அடி -7 பத்தில் அருளி
அரசு அமர்ந்தான் அடி -10 பத்தில் -குருவின் திரு வடிகளை த்யானம் -நாமம் சொல்லி –
அர்ச்சனம் வந்தனம் கீர்த்தனம் பண்ணி- பாகவத நிஷ்ட்டை-அதில் -எவரேலும் அவர் கண்டீர் எங்கள்ஆளும் பரமரே -ஆழ்வார்போலே
.மாறன் அடி பணிந்து உய்ந்த சுவாமி-பர கத ச்வீகாரமாக கொண்ட -ஆழ்வானை இட்டு அமுதனாரை கொண்டாரே
-உபயாந்தரம்-தவம்-கொள்கை அற்றது பரித்யாகம்- முடிய வில்லை என்று இல்லை ஏற்ப்பு உடையது இல்லை
சொரூபம் திருவடி பற்றி நிற்பது தானே
அக்ஜருக்கு இவை உபாயம் — ஞானிகளுக்கு இவை அபாயம்
..பேறு தப்பாது என்று இருக்கையும் –பேற்றுக்கு துவரிக்கையும் தானே வேண்டும்
–நஞ்சீயர்-அனந்தாழ்வான் வார்த்தை பரி மாற்றம்
-பட்டர் கைங்கர்யம் தடை வந்தால் காஷாயம் களைந்து திரி தண்டம் வுடைப்பேன் என்றாரே நஞ்சீயர்
ஆசார்யர் அபிமானமே உத்தாரகம் -ஆசார்யர் கைங்கர்யமே காலஷேபம் என்று இருக்க வேண்டும்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: