அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-12-இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன்-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை

பன்னிரண்டாம் பாட்டு –அவதாரிகை

திரு மழிசை பிரானுடைய திருவடிகளுக்கு ஆவாசமான திரு உள்ளத்தை உடைய எம்பெருமானாரை-ஆஸ்ரயித்து இருப்பார்க்கு ஒழிய ச்நேஹியாதவர்கட்கே நான் ச்நேஹித்து இருப்பது -என்கிறார்

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது
அடங்கும் இதயத்து இராமானுசன் அம் பொன் பாதம் என்னும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே —12-

பூமி  எங்கும் வ்யாப்தையான குண வத்தா ப்ரதையை உடையரான திரு மழிசைப் பிரான் உடைய-சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் தன்னுள்ளே அடங்கும்படியான-திரு உள்ளத்தை உடையராய் இருக்கிற எம்பெருமானார் உடைய விலஷணமாய் -சர்வ சமாஸ்ரயநீயமான-திருவடிகளை சர்வ காலத்திலும் ஸ்வரூப ப்ராப்தம் என்று நினைத்து வணங்குகை ஆகிற சம்பத்தை உடையராய்-தத்விஷய மனன சீலராய் இருக்கும் அவர்கள் ஒழிய ச்நேஹத்தைப் பண்ணாத த்ருட தர ஜ்ஞான யுக்தர்க்கே அடியேன்-ச்நேஹத்தை பண்ணுவது –

கடம்-கடன் ப்ராப்தம்/ திடம் -த்ருடம்/ கொள்கை -உடைத்தாகை-

உறையில் இடாத ஆழ்வார் -சக்கரத் தாழ்வார் அம்சம் -பக்திசாரர் -சிவனே இவர் விஷ்ணு பக்தியை சோதித்து அளித்த பட்டம் -இடம் கொண்ட கீர்த்தி அன்றோ இவரது –

————————————————————————-

பிள்ளை லோகம்ஜீயர் அருளிய உரை

அவதாரிகை
கீழ் நாலு பாட்டாலும் -ஆழ்வாருடைய சம்பந்தத்தை இட்டு எம்பெருமானாரை அனுபவிக்கும்-பிரகரணம் ஆகையாலே -முதல் ஆழ்வாரோடு சம காலராய் -பேயாழ்வார் உடைய பிரசாதத்தாலே-தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஜ்ஞானரான திரு மழிசை ஆழ்வாருடைய பரஸ்பர சதர்சமான-திருவடிகளை தம்முடைய திரு உள்ளத்தில் நிறுத்திக் கொண்ட எம்பெருமானாருடைய பரம போக்யமான
திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு ஒழிய வேறு ஒருவருக்கு விதேயமாகாத த்ரட அத்யவசாய பரரான-ஜ்ஞாநிகளுக்கு அடியேன் பக்தனாக நின்றேன் -என்கிறார்-.
வியாக்யானம் –
இடம் கொண்ட கீர்த்தி -பூமி எங்கும் வ்யாப்தமான குணவத்தா பிரதையை உடைய   மகாத்ம்யத்தை-சோதிப்பதாக ருத்ரன் -பார்வதி சமேதனாய் கொண்டு வந்து அனேகமாக சம்வாதித்து இவருடைய-பிரபாவத்தைக் கண்டு ஆச்சர்யப் பட்டு போனான் -காஞ்சி நகரத்திலே ஒரு வ்ர்த்த ஸ்திரீ சில நாள்-அனுவர்த்தனம் பண்ணினவாறே -அவளுக்கு யவ்வன  சௌந்தர் யாதிகளைக் கொடுத்தார் என்றும்
அப்படியே இவ் ஆழ்வார் உடைய நகரத்தில் நின்றும் சூத்திர உபத்வ வயாஜேன தஷிண திக்கேற போகத் தொடங்க-அக் காலத்திலேயே அங்கே  பள்ளி கொண்டு அருளின எம்பெருமானும் இவருடன் எழுந்து அருளுவதாக-புறப்பட -அவரும் அதைக் கண்டு -அவ்விடத்திலே தானே இருக்க வேணும் என்று அருளிச் செய்ய
அப்படியே அந்த எம்பெருமானும்  இவர் சொன்னபடி செய்து -சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -என்று-சர்வ லோக பிரசித்தமாக கொண்டு -அதுவே நிரூபகமாம் படி இருந்தான் -என்றும் சோழ மண்டலத்திலே
ஒரு அக்ரஹாரத்திலெ இவர் எழுந்து அருள -வீதியிலே அத்யயனம் பண்ணுகிற சில பிராமணர்கள் -இவரைக் கண்டு அத்தை நிறுத்தி -இவர் புறம்பே சென்றவாறே -அந்த பிராமணருக்கு தரவே தெரியாது போக -இது என்ன ஆச்சர்யம் என்று இவரைப் போய் அழைக்க -இவரும் கருப்பு நெல்லை எடுத்து உகிராலே உரிக்க –
அத்தை கண்ட அந்த பிராமண்ர்களுக்கு மேல் தோன்றிற்று என்றும் -பிரசித்தம் இறே -இவ் அர்த்தங்களை எல்லாம்-அனுசந்தித்து -இடம் கொண்ட கீர்த்தி -என்கிறார் .
இடம் கொண்ட கீர்த்தி -நிற்பதுமோர் வெற்பகத்து –என்கிற பாசுரப்படியே -சர்வ திக்குகளிலும் வ்யாப்யதையான-கீர்த்தியை உடையரான -மழிசை க்கு  இறைவன் -திரு மழிசை என்கிற திவ்ய தேசத்துக்கு ஸ்வாமி யாய் –
அதுவே நிரூபகமாக உடையரான திரு மழிசைப் பிரான் உடைய —இணை அடிப் போதுகள்  –   பரம போக்யமாய் –
பரஸ்பர சதர்சமான திருவடிகளாகிற பத்மங்கள் -போது -பத்மம் –
அடங்கும் இதயத்து -அணுவான மனசிலே மகத்தான அத்திருவடிகள் அடங்கும்படி
அமைத்து கொள்ளுகிற ஹ்ருதய பிரதேசத்தை உடையரான -இராமானுசன் -எம்பெருமானாருடைய –அம் பொற் பாதம் என்றும் -சௌந்தர் யத்துக்கு கொள்கலம் ஆகையாலே -அதி வி லஷணமாய்-ஸ்பர்ஹநீயம் ஆகையாலே  -சர்வருக்கும் சமாஸ்ரயநீயமாய் இருக்கிற திருவடிகளை -சர்வ காலத்திலும் –
கடம் கொண்டு இறைஞ்சும் -நசம்சயச்து தத் பக்த பரிசர்ய ரதாத்மனாம் -என்றும் -குருரேவ பரப்ரம்ம  -என்றும் -நீக்கமில்லா யடியார் தம் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்களுக்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே –
என்றும் சொல்லுகிறபடியே -பிராப்யம் என்று அத்யவசித்து ஆஸ்ரயிக்கும் –கடம் -பிராப்யம்
கொள்கை -அத்யவசிக்கை -திரு முனிவர்க்கன்றி காதல் செய்யா -இப்படிப் பட்ட நிரவதிக சம்பத்தை
உடையராய் கொண்டு -அதில் உபகார ச்ம்ர்தியால் -அத்தையே மனனம் கொண்டு இருக்கிற ஞானாதிகர் –
 த்ரணீ க்ரத விரிஞ்சாதி நிரன்குச விபூதய  ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலின -என்னும்படி-யானவர்களுக்கு ஒழிய மற்று ஒருவருக்கு -சுருதி ஸ்மரதி இதிஹாச புராணங்களிலே -அதி ரகஸ்யமான-சரம பர்வ விஷயத்தில் பண்ணப்படும் ஸ்தோத்ரத்தை பண்ணாத   –
திடம் கொண்ட ஞாநியர்க்கே -த்ரட அத்யாவச்யத்தை கொண்ட ஞாநாதிகற்கே   -திடம் -த்ர்டம் -கொள்கை -உடைத்தாகை
ஒரு நாள் வரையில் அழகிய மணவாளர் வாகனத்துடன் எம்பெருமானார் மடத்தருகே எழுந்து அருள –
எம்பெருமானாரும் திரு வீதி எழுந்து அருளி -அவரை திருவடி தொழுது –மடத்திலே எழுந்து அருள
வடுக நம்பி அவரை திருவடி தொழாதே அங்கே தானே இருக்கையாலே -அத்தை கடாஷித்து -நம் பெருமாளை சேவிக்க ஏன் காணும்  வரவில்லை  -என்ன -அவரும் -தேவரீருடைய பெருமாளை சேவிக்கப் போனால்-அடியேனுடைய பெருமாளுக்கு காய்ச்சின பால் பொங்கிப் போனாலோ -என்றார் -என்று பிரசித்தம் இறே –
கிருமி கண்டன் உபத்ரவத்துக்காக -எம்பெருமானார் மேல் நாட்டுக்கு எழுந்து அருளின பின்பு-ஆழ்வான் அந்த பையலுடைய சதச்சிலே புகுந்து -அங்கு உண்டான குத்ருஷ்டிகளை ஜெயித்து-மீண்டும் கோயிலுக்கு எழுந்து அருளி அங்கு இருக்கிற காலத்தில் -ஒரு நாள் பெரிய பெருமாளை-சேவிக்க கோயிலுக்கு உள்ளே எழுந்து அருள -திருக் கோயில் த்வாரத்திலே இருக்கிற ராஜபடர்-இவரைப் பார்த்து -ராமானுஜர் சம்பந்தம் உடையார் ஒருவரை யாகிலும் கோயிலுக்கு உள்ளே புக விட வேண்டா –
என்ற ராஜ சாசனத்தை சொல்ல -வேறே சிலர் -அப்படியே ஆகிலும் இவர் ஞானாதிகர் உள்ளே புகுர விடும் கோள்-என்ன -இவரும் அவர்களுடைய உக்தி பிரத்யுக்திகளை கேட்டருளி -தம்மை போர வெறுத்து  -உடனே நாலடி-பிறகாலித்து –எம்பெருமானார் சம்பந்தத்துக்கு புறம்பான இந்த ஞானாதிக்யமும் இந்த பகவத் சேவையும்
நமக்கு வேண்டா -என்று அன்று முதலாக கொண்டு -எம்பெருமானார்  திரும்பவும் கோயிலுக்கு எழுந்து-அருளுகிற பர்யந்தமும்  -பெரிய பெருமாளை -திருவடி தொழாதே -இருந்தார் என்றும் பிரசித்தம் இறே –
இப்படிப் பட்ட த்ரட அத்யாவச்ய யுக்தரான ஞானாதிக்கருக்கு என்றபடி –
அடியேன் அன்பு செய்வதுவே -அடியேன் -இப்படி ததீய பர்யந்தம் சேஷ ஏக ஸ்வரூபனான நான் –
அன்பு செய்வதுவே -சிநேகத்துக்கு சக்தனாய் இருப்பது -என்கிறார் –
வாசா யதீந்திர மனசா வபுஷாச யுஷ்மத் பாதார விந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முகாத்யபும்சாம்  பாதானுசிந்தன பரஸ் சததம் பவேயம் -என்று
ஜீயரும் பிரார்த்தித்தார் -இறே
————————————————————————–

அமுது  விருந்து

அவதாரிகை –
திரு மழிசைப் பிரான் திருவடிகளுக்கு உறைவிடமான திரு உள்ளத்தை உடைய
எம்பெருமானாரைப் பற்றும் திருவாளரை ஒழிய மற்றவரை விரும்பாத உறுதிப்பாடு
வாய்ந்த ஞாநியரையே தாம் விரும்புவதாக கூறுகிறார் –
பத உரை –
இடம் கொண்ட -உலகத்தை தனக்கு உள்ளே கொண்ட -அதாவதுஉலகு எங்கும் பரவிய
கீர்த்தி -புகழ் படைத்த
மழிசைக்கு இறைவன் –  திரு மழிசைக்கு தலைவரான திரு மழிசைப் பிரான் உடைய
இணை -ஒன்றுக்கு ஓன்று இணைந்து சேர்த்தி அழகு வாய்ந்த
அடிப்போது -திருவடிகள் ஆகிற மலர்கள்
அடங்கும் -தனக்குள் அடங்கும்படியான
இதயத்து -இதயம் வாய்ந்தவரான
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
அம் பொன் பாதம் -அழகிய பொன் போன்ற திருவடிகளை
என்றும் -எக்காலத்திலும்
கடம் கொண்டு -கடைமையாக நினைத்துக் கொண்டு
இறைஞ்சும் -வழி  படும்
திரு -செல்வம் படைத்த
முனிவருக்கு அன்றி -மறப்பற உள்ளத்தில் உள்ளும் அவர்களுக்கு அல்லாது
காதல் செய்யா -மற்றவர்களுக்கு அன்பு செலுத்தாத
திடம் கொண்ட -திண்மை வாய்ந்த
ஞானியர்க்கே -ஞானம் உள்ளவர்களுக்கே

அடியேன் -அடிமை இன்பம் நுகரும் நான்

அன்பு செய்வது -பக்தி செய்வது
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் –
இடம் -உலகம் -திரு மழிசைப் பிரான் உடைய கீர்த்தி இடம் அடங்கத் தன்னுள் கொண்டு இருக்கும்
படி கொண்ட கீர்த்தி என்பர் மேலும் –
கீர்த்தி வியாபித்து இருப்பது –உலகம் -வியாபிக்க படுவது -கீர்த்தி -பெரிது -உலகம் -சிறிது –
கீர்த்தி யாவது உலகினர் அனைவருக்கும் குணம் உடைமை தெரியும் படியாய் அமைதல் –
மகா விஷ்ணு போன்றது பக்தரான திரு மழிசை பிரான் கீர்த்தியும்
விஷ்ணு வ்யாபிப்பான் -இவர் கீர்த்தியும் எங்கும் உளதாய் இருக்கிறது
இடம் என்று பொதுப்பட சொல்லுகையாலே இவ் உலகினையும் சரி -விண் உலகினையும் சரி –
இவர் கீர்த்தி எல்லா இடங்களையும் தன்னுள் கொண்டமை புலனாகிறது –
காக்கும் இயல்பினன் கண்ண பெருமான் –
உயிர் இனங்கள் காக்கப் படும் இயல்வினவே
ஆதலின் கண்ணனால் அன்றிப் பிறராலும் -ஏன் -தன்னாலுமே -இவ் உயிர் -ஆன்ம தத்துவம் –
காக்கப்பட இயலாது என்னும் தெள்ளிய அறிவு -ஸ்வரூப ஞானம் -திரு மழிசைப் பிரானுக்குப் போலே
வேறு ஒருவருக்கும் ஏற்ப்பட வில்லையாம் -அதனால் இவருக்கு ஒப்பாவார் இவ் உலகில் எவருமே இலர் ஆயினர் –
இனி விண் உலகில் -பரம பதத்தில் -இத்தகைய தெள்ளிய அறிவு படைத்தவர் உளரோ என்று பார்க்கும் அளவில் –
தெளி விசும்பில் உள்ளவர் அத்தகைய தெள்ளிய அறிவு படைத்தது இருந்தாலும் -இருள் தரும் மா ஞாலத்தில்
இருந்து அத்தகைய தெளிவை அவர்கள் பெற்றிலரே -இந்நில உலகில் இருந்தும் அத்தகைய தெளிவு பெற்று விளங்கும்
இவருக்கு அவர்கள் எங்கனம் ஒப்பவராக இயலும் –
இனி உபய விபூதி நாயகனான எம்பெருமான் இவருக்கு ஒப்பாவானோ என்று பார்த்தால்-
அவனை ரஷிப்பவன் வேறு ஒருவன் இல்லாமையின் அவனுக்கு அவனுக்கு இத்தகைய ஸ்வரூப ஞானம்
ஏற்பட வழியே இல்லை யாதலின் அவனும் ஒப்பாகான் –
ஆக இவ் உலகில் உள்ளவர்களும் –
இவ் உலகிலும் விண் உலகிலும் உள்ள எம்பெருமானும்
விண்ணில் உள்ளவர்களும் ஒப்பாகாமையால் -ஒப்பற்ற தெள் அறிவு படைத்த புகழ் இவர்-ஒருவருக்கே -இரண்டு உலகுகளிலும் பரவி ஓங்கி இருக்கிறது -இருக்கவே -என் மதிக்கு –
ஸ்வரூப ஞானத்துக்கு விண் எல்லாம் சேர்ந்தாலும் தக்க விலை யாகுமோ என்று கேட்கிறார் –
திரு மழிசைப் பிரான் -அவரது பாடலில் அவரது பெருமிதத்தை நாம் காண முடிகிறது –
இதோ அவரது பாடல்
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை -நான் முகன்திருவந்தாதி – 5-
எனக்கு ஆவார் -எனக்கு ஒப்பாவார்
தானே தனக்கு அல்லால் -தனக்குத் தானே ஒப்பாவான் அன்றி எனக்கு ஒப்பாகான் என்றபடி –
என் மதி -என்னும் இவருடைய மதியைத் -துய்ய மதி -என்று மணவாள மாமுனிகள் போற்றிப்-புகழுகிறார் உபதேச ரத்ன மாலையிலே –
இதனால் மண்ணகம் விண்ணகம் இரண்டையும் தன்னுள் கொண்டதாக திரு மழிசைப் பிரான்-கீர்த்தி விளங்குகிறதன்றோ  -இதனையே இடம் கொண்ட கீர்த்தி என்கிறார் அமுதனார் –
புகழ் மழிசை ஐயன் -எனபது உபதேச ரத்ன மாலை –
இனி -இடம் கொண்ட கீர்த்தி -விரிவடைந்த கீர்த்தி எனினுமாம்
இவர் சொன்னபடி எம்பெருமான் தான் இருக்கும் இடத்தைக் கொண்டமையால் வந்த கீர்த்தி என்னலுமாம் –
இடம்-இருக்கும் இடம்
மணி வண்ணா நீ கிடக்க வேண்டும் பைந்நாகப் பாய் படுத்துக்கொள் -என்று இவர் சொன்ன படி-திரு வெக்காவில் எம்பெருமான் மீண்டும் இடம் கொண்டு -சொன்ன வண்ணம் செய்த பெருமாள்-என்று
பேர் பெற்று விளங்கும்  ஐதிஹ்யம்  காண்க –
இனி எம்பெருமான் தான் கோயில் கொண்டு உள்ள ஊரகம் பாடகம் திரு வெக்கா என்னும்-தளங்களை விட்டு -இவர் திரு உள்ளத்திலே இடம் கொண்டமையால் வந்த கீர்த்தியை சொல்லலுமாம் –
நின்றதும் -இருந்ததும் -கிடந்ததும் -என் நெஞ்சுளே -திருச் சந்த விருத்தம் -64 -என்றது காண்க
இனி இடம் கொண்ட கீர்த்தியை -மழிசைக்கு   அடை ஆக்கலுமாம் –
உலகும் மழிசை யும் புகழ்க் கோலால் தூக்க உலகு தன்னை வைத்தெடுத்த  பக்கத்தினும்
மழிசையை   வைத்து எடுத்த பக்கமே வலிதான புகழ் உடைமை திரு மழிசைக்கு கூறப்
பட்டதாகிறது – உலகின் மகிமைகளை எல்லாம் தன்னுள் கொண்டது திரு மழிசை -என்க-
மஹீசார ஷேத்ரம் மழிசை எனப்படுகிறது –
இணை அடிப் பொது அடங்கும் இதயம் –
ஒரு சிறிய மலரிலே இரண்டு பெரிய மலர்கள் அடங்குகின்றன –
இதய மலர் சிறிது –இணை அடிப் போதுகள் பெரியன-
அழகிய இரண்டு திருவடிகளையும் இதயத்திலே வைத்து த்யானம் செய்கிறார் எம்பெருமானார் -என்றபடி .
அம பொன் பாதம் –
தங்கப்  பாத்தரத்தை எவர் தீண்டினும் மாசு படாது –
எம்பெருமானார் பாதத்தை எவர் பற்றினாலும் குற்றம் அன்று –
சர்வ சமாஸ்ரயநீயம்-என்ற படி

கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர் –

கடம் கொண்டு -கடைமையாக நினைத்து
தவிர்க்க ஒணாது இயல்பாக நாம் செய்ய வேண்டிய செயல் என்ற எண்ணம் வாய்ந்து -என்றபடி –
இறைஞ்சும் திரு -இறைஞ்சுதலே திரு என்க-
எம்பெருமானாரை இறைஞ்சுதலே செல்வம் என்றது ஆயிற்று –
எம்பெருமானை இறைஞ்சுதலும் செல்வமே யாயினும் -கஜாந்தம் ஐஸ்வர்யம் -என்று
யானையைக் கட்டித் தீனி போடுவதை இறுதியாகக் கொண்டது ஐஸ்வர்யம் -எனபது போலே-ஆசார்யன் அளவும் இறைஞ்சுதல் சென்றால் தான் செல்வம் ஆகும் -என்க –
முனிவர் –
எம்பெருமானாரையே இடை விடாது மனனம் பண்ணும் இயல்பினர் –
எம்பெருமானார் இதயத்திலே மழிசைக்கு இறைவன் இணை அடிப் போதுகளையே
த்யானிப்பது போலே – இத் திருவாளர்கள் இராமானுசன் அம் பொன் பாதத்தையே நினைந்த-வண்ணம் இருக்கின்றனர் -என்க –
காதல் செய்யாத் திடம் கொண்ட கனையார் –
காதல்-அன்பு
திடம்-வட சொல்
த்ருடம்-உறுதிப் பாடு
முனிவர்க்குக் காதல் செய்யும் ஞானியர்க்கு என்றிலர் –
முனிவர் திறத்துக் காதலினும் அல்லாதார் திறத்துக் காதல் செய்யாமையே குறிக்கோளாக-கொண்டமை தோற்றற்கு-மறந்தும் புறம் தொழா மாந்தர் -எனபது போலே இதனையும் கொள்க ..
இக்கருத்தை வெளிப்படுத்துகிறது -திடம் கொண்ட -என்று ஞானத்துக்கு இட்ட ஆடை மொழி –
திரு முனிவர் இடம் உள்ள ஞானம் –
அம்முனிவருக்கு காதல் செய்பவர் இடம் உள்ளது அதனினும் சீரிய த்ருட  ஞானம்  –
முனிவர்க்கு அன்றிக் காதல் செய்யாதவர் இடம் உள்ளது -அதனினும் சிறந்த த்ருட தர ஞானம் என்க –
அடியேன் அன்பு செய்வது
அடியேன் -எல்லை நிலம் பர்யந்தம் அடிமையின் சுவை அறிந்த நான் –
அன்பு செய்வது -பக்தன் ஆவது-செய்வதுவே-குற்றியலுகரம் வகர வுடம்படுமெய் பெற்று வந்தது –
————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தல் –
பக்திசாரர்-தை மகம்-மகி சாரஷேத்ரம்
மழிசைக்கு இறைவன்.. அடி .போது அடங்கும் இதயத்து ராமானுசன்
…கடம்-பிராப்தம் இறைஞ்சும் திரு- இதுவே செல்வம் .
திடம் கொண்ட ஞானியர் ராமானுசர் பக்தர் பக்தர்களுக்கு அன்பு செய்ய -ஆழ்வான் பிள்ளான் பக்தர்களுக்கு .
.-அவர்களுக்கு அடியேன் அன்பு செய்வதுவே
..திடம்- அத்யாவசம் பகவானுக்கு என்று இன்றி அடியவர்களுக்கு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாது திடம் கொண்டவர்
. ஏ காரம்….கீர்த்தி ஜகத்தை மிஞ்சும்…அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே போலே –
-அவா சூழ்ந்து ..தத்வ த்ரயத்தை விட பெரியது
சுவாமி திருவடி கிட்டினால் அனைவரின் அருளும் கிட்டும்
ராமானுஜர் தர்சனம்..கீர்த்தி எங்கும் இடம் கொண்டது..
பூமி பரப்பு அளவும் பரந்து இருக்க –
விபூதி கேட்ட அர்ஜுனன்- ஆதித்யரில் விஷ்ணு. கூட்டம் கூட்டமாக எடுத்து தலைவன் தான் என்கிறான்.
.சார ஷேத்ரம் இது..குணத்தால் ஏற்பட்ட பிரபை
.சேர்த்தி அழகை உடைய திருவடி தாமரைகள்..அடங்கும்-
தனக்குள்ளே அடங்கும் படி திரு உள்ளம் கொண்ட எம்பெருமானார்-அம் பொன்-அங்கு அழகு-இங்கு பொன் யாரும் எடுத்து ஆளலாம் பொன் கிண்டி போல.. .என்றும் கடம் கொண்டு இறைஞ்சும்-சொரூப பிராப்தம் என்று கடமை என்று .துயர் அடி ..தொழுது எழு — இறைஞ்சுகையே திரு ..முனி- மனன சீலர்
…அவர்களுக்கே அன்பு செய்யும் ஞானியர்
… கீர்த்தியை .பரம சிவன் சோதிக்க வந்தார் -திரும்பி பார்க்க வில்லை
..வாழ் நாளை மாற்ற முடியுமா– வூசி பின் நூல் போக விட முடியுமா -கேலிக்கு கேட்க
-நெற்றி கண் கால் கட்டை விரல் கண்ணை திறந்து.-பக்தி சாரர் பெயர் வழங்க பெற்றார்
நம் புவியில் 4700 இருந்தான் வாழியே.
மயிலையில் .பவள காரன்வேணு கோபாலன் கோவில் சந்நிதியில் ஆஸ்தானம்..
சக்கர அம்சம்-பக்தி சாரர்..பேர் பெற்ற கீர்த்தி..
ராஜா யவன பிராயம் சௌந்தர்யம் திரும்ப கணி கண்ணன் -நிழல் பிடித்து இழுத்தார்
யோக மகாத்மயம் நிறைய உண்டு.
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
-இடம் கொண்ட கீர்த்தி இது தான்..
திரு வெஹ்ஹா இடம் கொண்டான்

-பெரும் புலியூர் அடிகள் -வேதம் விட்ட இடம் கருப்பு நெல் கிழித்து போட்டு காட்டினாரே–நீயும் உன் பை நாக பாயை சுருட்டி கொள் ..-கிடந்த நாள் கிடந்த்தி-எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -அர்த்த சயனம்-ஆரா அமுத ஆழ்வார் திரு மழிசை பிரான்–என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ  விலை–என்று இவரே பாடும் படியான கீர்த்தி காக்கும் இயல்பினான் கண்ண பிரான்..-ரஷகன் இவன் தெரிந்தவர் -காக்க பாடுபவனுக்கு தான் ஞானம் நித்யர் ஈஸ்வரன் பக்தர் தெரியாது…ஜகம் அளவும் வ்யாப்த்தம் அடைந்த கீர்த்தி..நின்றதும் இருந்ததும்  இடந்ததும் என் நெஞ்சு உள்ளே -இடம் கொண்ட/ இடம் கொண்ட கீர்த்தி மழிசை க்கு  சேர்த்து.புலவர் தூக்க இது தானே உசர்ந்தது..துய்ய மதி-புகழ் மழிசை அய்யன் மா முனிகள் அருளினாரே..இடம் கொண்ட கீர்த்தி..பக்திசாரர் நிரூபகம் அசாதாரண லஷணம்-இடம் கொண்ட கீர்த்தி மழிசை க்கு  இறைவன்..இணை அடி பொது பத்மம் அடங்கும் இதயம்..-பெரிய மதி- திரு மேனி- திரு வடி களை  மனசுக்குள் அடக்கி-ஆச்சர்ய கடாஷம் -திரு கோஷ்டியூர் நம்பி- அணுவில் மகத்தை அடக்கிய எம்பெருமானாரின் அகடிகதடா சாமர்த்தியம்.. பொன் பாதம் அனைவரும் பற்றும் படி..சொவ்ந்தர்யதுக்கு கொள்  களம் -அதிகாரம் ஆசை பொன் …என்றும்-சர்வ காலத்திலும் .கடமை -கைங்கர்யம். நீக்க மில்லா அடியார் அடியார்..அவர்களுக்கே குடி கொண்டு ஆட செய்யும் -கொண்டு-பிராப்தம் என்று கொண்டு..இறைஞ்சும் -என்கிற செல்வம்..முனிவர்கள்- சுவாமியே நினைந்து கொண்டு…அன்றி இருப்பார்க்கு காதல் செய்யாது.. .சரம பர்வ  நிஷ்ட்டை-திடம் கொண்ட ஞானிக்கு அன்பு செய்து..வடுக நம்பி பால் காய்ச்சி கொண்டு- உம் பெருமாளை நீர் பார்த்துங்கோ என் பெருமாளை நான் பார்க்க வேண்டாமோ.வடுக நம்பி நிலை எனக்கு தா எதிராசா -மா முனிகள் . கிருமிகண்ட சோழன்-பையலை -கூரத் ஆழ்வானை கோவில் போக விடுத்து சுவாமி சம்பந்தம் அற்று போக மறுத்தார்…ஆத்மா குணம் ஆச்சர்ய சம்பந்தத்துக்கு இடை சுவர் என்றால் நம் பெருமாள் சேவை வேண்டாம்–இப் படி பட்ட .ஞானியர்க்கே .அடியேன்  அன்பு செய்வதுவே-இதுவே இவருக்கு சொரூப நிரூபக தர்மம்-.

————————————————————————–
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: