அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-9-இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை –

ஒன்பதாம் பாட்டு –
பூதத் ஆழ்வார் திருவடிகளைத் தம் திரு உள்ளத்திலே வைத்து அனுபவிக்கும் எம்பெருமானார்
திவ்ய குணங்களைச் சொல்லும் அவர்கள் -வேதத்தை ரஷித்து-லோகத்திலே பிரதிஷ்டிப்பிக்கும்-அவர்கள் என்கிறார் –

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – 9-

வகுத்த சேஷியான அவனை சாஷாத் கரிக்கைக்கு உப கரணமாக ஹ்ருதயத்தை
பற்றிக் கிடக்கிற அஞ்ஞான அந்தகாரமானது -நசிக்கும்படியாக -அன்பே தகளியா -என்று
தொடங்கி -ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் -என்று பரஞ்ஞானம் ஆகிற பரிபூர்ண தீபத்தை
பிரகாசிப்பித்த ஸ்ரீ பூதத்தார் ஆகிற ஸ்வாமி உடைய திருவடிகளை திரு உள்ளத்திலே
நிரந்தர வாசம் பண்ணும்படியாக வைத்து அனுபவிக்கும் எம்பெருமானாருடைய
கல்யாண குணங்களை ஸ்தோச்சாரணம் பண்ணும் சத்துக்கள் ஆனவர்கள் –
பாஹ்ய குத்ருஷ்டிகளால் ஒழிக்க ஒண்ணாதபடி வேதத்தை ரஷித்து இந்த-லோகத்திலே ஸூப்ரதிஷ்டதமாக வைக்கும் அவர்கள் —

அவிட்டம் பிறந்து தவிட்டு பானை எல்லாம் தங்கம் ஆகுமே –
அகண்ட தீபம் -பத்ரிகாஸ்ரமம் எரிந்து கொண்டே இருக்குமாம் ஆறு மாசங்களும் –தீபாவளி -தொடங்கி அக்ஷய த்ருதியி   வரை அகண்ட தீபம் –
ஞான தரிசன பிராப்தி -ஞானம் த்ரஸ்ட்டும் பிரவேஷ்டும் -அறிகை- அடைதல் -அனுபவம் –
இதயத்து இருள் கெட ஞானம்- உள்ளூர் உள்ளத்தே உறையும் மாலை -விலவறச்  .சிரித்திட்டேனே
cell phone -sim card -charging -jeeva -para -aachchaaryar
பிரகாரி பிரகார -மான் மூக்கு பெரிசாக -எறும்பு இதே உலகம் என்று இருப்பது போலே அவனுக்கு உட்பட்ட பிரபஞ்சத்தில் ஒரு பகுதி என்று உணர வேண்டுமே -அனைத்து உலகும் வாழப் பிறந்த எதிராசர் மா முனி அற்றோ -மறை -வேதமுமும் அருளிச் செயல்களும் பிள்ளான் போல்வாரும் நல்லார்-வேதத்தின் உட் பொருள்-ஸ்ரீ   மதே ராமாநுஜாய நம -என்பதே -வேதார்த்தம் அறுதி இடுவது ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -ஸ்ரீ மத்  ராமானுஜ சரணம் சரணவ்   பிரபத்யே  -ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -என்பதே –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ்ப் பாட்டிலே பொய்கை யாழ்வார் சம்பந்தத்தாலே -சர்வோ நாதரான-எம்பெருமானார் தமக்கு ஸ்வாமி என்று அருளிச் செய்தது -இப்பாட்டிலே
சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரனை காண்கைக்கு சர்வர்க்கும் உபகரணமாய்-இருந்துள்ள ஹ்ருதயம் –
அஞ்ஞான அந்தகாரத்தாலே மோஹித்து போகையாலே -அத்தை நசிப்பதாக பர ஞானம் ஆகிற
பரி பூர்ண தீபத்தை ஏற்றி அருளின -பூதத் ஆழ்வாருடைய திருவடிகளை மனசிலே வைத்துக் கொண்டு
அனுபவிக்கிற எம்பெருமானார் உடைய கல்யாண குணங்களை அனுசந்தித்து –
சத்துக்களானவர்கள் இந்த லோகத்திலே சகல வேதங்களையும் பாஹ்ய குத்ருஷ்டிகளால்
அழிக்க ஒண்ணாதபடி ரஷித்து சூபிரதிஷ்டமாக வைக்க வல்லவர்கள்-என்கிறார் .

வியாக்யானம் –
இறைவனை -சர்வ லோகத்துக்கும் ஸ்வாமியானவனை
காணும் -தர்சனம் பண்ணுகைக்கு உபகரணமான
இதயத்து -ஹ்ருதயத்தை பற்றி கிடக்கிற
இருள் கெட -சர்வேஸ்வரனுக்கு இருப்பிடமான ஹ்ருதய ஸ்தானம் இறே -அவனை அறிய கடவ
ஞானத்துக்கு பிரசரனத்வாரம் -இந்த ஞானத்துக்கு வாரகமாய் -இவர்களுடைய -பூர்வ கர்ம வாசனையாலே
வந்து இருப்பதொரு அஞ்ஞானம் உண்டு –
அது கெட
-யாதாத்ம்ய ஜ்ஞானபாத்யமான அஞ்ஞான அந்தகாரம் வாசனையோடு நசிக்கும்படியாக –
ஞானம் என்னும் நிறை விளக்கு
-பர ஞானம் ஆகிற பரிபூர்ண தீபத்தை-
ஏற்றிய –
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடு திரியா நன்புருகி ஞான சுடர்
விளக்கு ஏற்றினேன் நாரணற்கு -என்று தம்முடைய பக்தியை தகளியாக பண்ணி -அபிநிவேச அதிசயத்தை நெய்யாக்கி
பகவத் அனுபவ ஆனந்தத்தாலே உருகிக் கிடக்கிற மனசை திரியாக்கி -நாராயணனுக்கு பர ஞானம்
ஆகிற பரி பூர்ண தீபத்தை ஏற்றினேன் நான் -என்று தொடங்கி -தாம் இட்டு அருளின
திவ்ய ப்ரபந்தம் ஆகிற பரி பூர்ண தீபத்தை ஏற்றி -சர்வர்க்கும் உபகாரமாகும்படி பிரகாசிப்பித்த
பூதத் திருவடி தாள்கள்
-பூதத் தாழ்வார் என்கிற ஸ்வாமி களுடைய திருவடிகள் –
அம் தமிழால் நற் கலைகள் ஆய்ந்து உரைத்த ஆழ்வார்கள் இவ் உலகு இருள் நீங்க வந்து உதித்த –என்று ஜீயர் அருளிச் செய்தார் இறே –
நெஞ்சத்து உறைய வைத்தாளும்
-தம்முடைய மனசிலே நிரந்தர வாசம் பண்ணும்படியாக வைத்து-சர்வ காலமும் அனுபவித்துக் கொண்டு இருக்கிற
ஆளுகை -எதேஷ்ட விநியோக அர்ஹ்யமாம் படி -விநியோகம் கொள்ளுகை
இராமானுசன் -எம்பெருமானாருடைய
புகழோதும் -கல்யாண குணங்களை சதா உச்சாரணம் பண்ணும்
நல்லோர் –
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று அருளிச் செய்த நம் ஆழ்வார்
அவ் ஆழ்வாருடைய ப்ரசாதத்தாலே லபித்த பவிஷ்யதாசார்யா விக்ரகத்தை -தம்முடைய காலம்
எல்லாம் ஆராய்ந்து கொண்டு போந்த ஸ்ரீ மன் நாத முனிகள் -இவர் அவதரித்த பின்பு இவருடைய
கல்யாண குணங்களை கேட்டு அருளி -வித்தராய் -திருப் புற்றுக்கு கிழக்காக
கரிய மாணிக்க பெருமாள் திரு முன்பு -இவரைக் கடாஷித்து -ஆ முதல்வன் -என்று பிரார்த்தித்து அருளின
ஆளவந்தார் போல்வாரான சத்துக்கள் –
மறையினைக் காத்து –
பிபேத் அல்ப ஸ்ருதாத் வேத -என்று சொல்கிறபடி அல்ப ஸ்ருதரான பாஹ்ய குத்ருஷ்டிகளாலே –கலங்காதபடி வேதத்தை எல்லாம் ரஷித்து –
அவர்கள் தான் யார் என்னில் –
ஸ்ருதியை ஸ்திரம்  ஆக்கின ஆழ்வான் தொடக்கமானவரும்
மறையினை -என்று பொதுவாக சொல்லுகையாலே திராவிட வேதத்துக்கு பிற்காலத்திலே
அல்ப ஸ்ருதரான குத்ருஷ்டிகளாலே அழிவு வாராதபடி -அத்தை வியாக்யானம் பண்ணி யருளின
பிள்ளான் தொடக்கமானாரும் -என்றபடி -அவர்கள் செய்தது அவ்வளவே அன்று காணும் –
இந்த மண்ணகத்தே மன்ன வைப்பரே –
விரோதி பூயிஷ்டமான இந்த மகா ப்ர்த்வியிலேயே -அவ்விரண்டையும் ஸூ பிரதிஷ்டமாம்படி-ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு போந்தார்கள்-என்கிறார் .

————————————————————————–

அமுத விருந்து –
அவதாரிகை –
பூதத்தாழ்வார் திருவடிகளைத் தம் திரு உள்ளத்திலே வைத்து அனுபவிக்கும் எம்பெருமானார் கல்யாண
குணங்களை சொல்லும் அவர்கள் -வேதத்தை காப்பாற்றி நிலை நிறுத்தும் அவர்கள் என்கிறார் –

பத உரை –
இறைவனை-சேஷியான எம்பெருமானை
காணும் -காண்பதற்கு கருவியான
இதயத்து -நெஞ்சத்தின் கண் உள்ள
இருள் -அறியாமை என்னும் இருள்
கெட -ஒழியும்படி
ஞானம் என்னும் -பர -சிறந்த -ஞானம் என்னும்
நிறை விளக்கு -நிறை உற்ற விளக்கை
ஏற்றிய -எரிந்து ஒளிரும்படி செய்த
பூதத் திருவடி -பூதத்தாழ்வார் ஆகிய பெரியவருடைய
தாள்கள்-திருவடிகள்
நெஞ்சத்து -உள்ளத்தில்
உறைய -நிலை நிற்கும் படி
வைத்து -அனுசந்தித்துக் கொண்டு
ஆளும் -அனுபவிக்கிற
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
புகழ்-கல்யாண குணங்களை
ஓதும் -சொல்லிக் கொண்டு இருக்கும்
நல்லோர் -நல்லவர்களை
மறையினை -வேதத்தை
காத்து -காப்பாற்றி
இந்த மண்ணகத்தே -இந்த நில உலகில்
மன்ன -நிலை நிற்கும்படி
வைப்பவர் -வைப்பவர்கள் ஆவர்

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட –
புறக் கண்ணால் காணும் புறப் பொருளைப் பற்றிய -அறியாமையை -மாற்ற விளக்கு எரித்தார் பொய்கை ஆழ்வார் –
நெஞ்சு என்னும் உள் கண்ணால் உள் பொருளாகிய பிரத்யக் தத்துவமான ஜீவான்மையும் பற்றிய இருளை –
அறியாமையை -கெடும்படியாக விளக்கு ஏற்றி வைக்கிறார் பூதத்தாழ்வார் –
சுத்தமான மனத்தால் ஆன்ம தத்துவத்தைக் காணலாம் என்றது உபநிஷதம் –
காணும் இதயம் -காணும் கண் எனபது போலக் காண்பதற்குக் கருவியான இதயம் என்றபடி –
இதயத்து இருள் -இதயத்தின் உள்ள பொருளைப் பற்றிய அறியாமை என்றபடி —
ஏற்றினது நிறை விளக்கு ஆதலின் இருள் மீள வழி இல்லை -என்பார் –கெட -என்றார்
ஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய –
நிறை விளக்கு என்பதற்கு ஏற்ப ஞானம் -அதாவது பர ஞானம் -என்று கொள்க –
பர ஞானம் ஆவது -காணாத ஏக்கம் தீரக் கண்டு இன்புறும் வேட்கை முதிர்ச்சியால் ஏற்படும் சாஷாத் காரம் –
நிறை விளக்கு நேரே பொருள்களை தெளியக் காட்டுவது போலப் பர ஞானமும் –ஜீவ பரமான்ம தத்துவங்களை
நேரே தெளியக் காட்டுகின்றது என்க-
ஆன்மாவைப் பற்றிய அறியாமையை ஒழித்த பர ஞானம் கதிரவன் போலப் புலனாம் பொருளை
முழுதும் உள்ளபடி காட்டுகிறது -என்னும்பொருள் கொண்ட
-ஜ்ஞானே நது ததஜ்ஞானம் ஏஷாம் நாசித மாத்மன-தேஷாமாதித் யாவத் ஞானம் பிரகாசயதி தத்பரம் -என்னும் கீதா ஸ்லோகம் இங்கு நினைவுக்கு வருகிறது –
பர ஞானம் ஆவது சுருக்கம் இன்றி ஞானம் விரிந்து கிடத்தலால் பொருளைக் காட்டுவதில்-அளவு படாமை -என்பது கீதா பாஷ்ய சந்த்ரிகை –
ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் -என்னும் பூதத்தாழ்வார் திரு வாக்கை -ஞானம் என்னும் நிறை
விளக்கு ஏற்றிய -என்று அமுதனார் பொருளோடு அச் சொல்லாலே பொன்னே போல் போற்றிக் கையாளுகிறார் –
சுடர் விளக்கு -என்பதை –நிறை விளக்கு -என்கிறார் –
விளக்கு ஏற்றுதல்-இரண்டாம் திருவந்தாதி திவ்ய ப்ரபந்தம் அருளி செய்தல் –
திருவடி–
பெரியோர்களைத் திருவடிகள் என்று மதிப்பு தோன்றக் கூருவதுமரபு –
வட மொழியிலும் தந்தையை -தாதபாதா-என்றும்
குருவை-ஆசார்யபாதர் -என்றும் வழங்குவது உண்டு –
திரு மங்கை ஆழ்வார் -உம் தம் அடிகள் முனிவர் – என்று யசோதை கண்ணனைப் பார்த்து
பேசும் பொது தந்தையாகிய நந்த கோபரை -அடிகள் -என்று குறிப்பிடுவதாக காட்டி உள்ளார் –
உங்கள் முதலியார் சீறுவர் கிடீர் – என்பது அத் திருமொழிக்கு பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –
நம் ஆழ்வார் -மலர் மகள் விரும்பும் நமரும் பெறலடிகள் -என்று எம்பெருமானை குறிப்பிடுகிறார் –
அடிகள்-ஸ்வாமிகள் என்பது வியாக்யானம் –
உயர்வு பன்மையில் வரும் இச் சொல் ஒருமையிலும்வருவது உண்டு –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்று நம் ஆழ்வாரும்
திருவடி தன் நாமம் மறந்தும் – என்று திரு மழிசைப் பிரானும் -ஒருமையில் வழங்கியது போல்-அமுதனாரும் -பூதத் திருவடி -என்கிறார்
ஆழ்வார் என்பதும் அடிகள் என்பதும் ஒரே பொருள் கொண்டவை என்பது அமுதனார் கருத்து –
பூதம் -என்னும் சொல்லுக்கு பிரம ஞானம் பெற்று சத்தை -உண்மையில் இருத்தல்-பெற்றது என்பது பொருள் –
பிரம ஞானம் இல்லாதவன் இருந்தும் இல்லாதவனாகிறான் என்றும் –
பிரம ஞானம் உள்ளவன் உண்மையில் இருப்பவன் ஆகிறான் -என்றும்-வேதம் ஓதுவது இங்கு அறியத் தக்கது –
பிரம ஞானி யானவன் தனக்கு ஒரு பயனை இனி பெற வேண்டாதவனாயினும்
உலகம் புனிதம் அடைவதற்காக நாடு எங்கும் சஞ்சரித்துக் கொண்டு இருப்பான் –
அங்கனம் சஞ்சரிக்கும் அவர்களைப் பூதங்கள் -என்னும் சொல்லாலே வழங்குவது பண்டைய மரபு –
விஷ்ணோர் பூதா நிலோ கா நாம்பாவ நாய சரந்திஹி -என்று விஷ்ணுவின் பூதங்கள் உலகங்களை
புனிதம் ஆக்குவதற்கு சஞ்சரிக்கிறார்கள் அன்றோ -என்று பாகவத்திலும் –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி யாடி யூழி தரக் கண்டோம் –என்றும்
மாதவன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே -என்றும்
இவ்வாறே திருவாய் மொழியிலும் வழங்கி உள்ளமை காணத் தக்கது –
இம்முறையில் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்தமையின் பூதம் என்னும் பெயர் ஆழ்வாருக்கு
வழங்கல் ஆயிற்று -இறைவனை -பிரமம்-என்று மிக பெருமை தோற்ற வழங்குவது போலே
பூதம் -என்று நபும்சக லிங்கத்தில் வழங்கலாயினர் –
முதல் ஆழ்வார்கள் மூவரும் நாடு எங்கும் நடமாடிக் கொண்டு இருந்தவர்களே ஆயினும்
ஒருவர் பொய்கையார் -என்றும்
மற்று ஒருவர் பேயார் என்றும்
அவதரித்த இடத்தை பொறுத்தும் பக்தி பரவசத்தை பொறுத்தும் முறையே பேர் பெற்று விட்டமையால்
இடைப் பட்ட இவருக்கே சஞ்சரித்தலால் வரும் -பூதம் -என்னும் பெயர் உரித்தாயிற்று என்க –
மேலும் உலகு அனைத்தும் தான் அலைந்து புனிதம் ஆக்குவதோடு அமையாது –
பிறரையும் அங்கன் திருத்திப் புனிதம் ஆக்கும்படி உபதேசிப்பவர் இந்த ஆழ்வாரே –
ஆதல் பற்றியும் -பூதத்தார் -என்னும் பெயர் இவருக்கே பரவல் ஆயிற்று என்க –
பண்டிப் பெரும் பதியை யாக்கிப் பழி பாவம்–கொண்டு இங்கு வாழ்வாரைக் கூறாதே -எண் திசையும்
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்-தீர்த்தகர ராமின் திரிந்து -என்பது இவரது உபதேசம் –
அறிவிலிகளே -வரும் பொருள்களை எல்லாம் ஏற்கும் பெரு நகரைப் போலத்
தம் வயிற்றைப் பெருக்கிப் பழிக்கும் பாவத்துக்கும் இடமாகி வாழும் சுய நலக்காரர்களை
புகழ்ந்து உழலாமல் -த்ரி விக்கிரம அவதாரத்தில் திசை எட்டும் முட்டும்படி விம்மி வளர்ந்த
நான்கு தோள்கள் படைத்த எம்பெருமான் திரு நாமங்களை ஓதிக் கொண்டே உலகு எங்கும்-திரிந்து புனிதம் ஆக்குகங்கள் -என்பது இப்பாசுரத்தின் பொருள் –
தீர்த்தக்காரர் -சுத்தமாக்குகிறவர்
திரிந்து தீர்த்த கரர் ஆமின் -திரிவதனால் உங்கள் பாத தூளி பட்டுப் புனிதம் ஆகும்படி செய்யுங்கள் -என்பது கருத்து –
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவார்கள் உழக்கிய பாத தூளி படுதலால் இவ் உலகம் பாக்கியம் செய்ததே -என்று
பெரியாழ்வார் திரு மொழி – 4-4 6– என்பதும் காண்க –
இந்த உபதேசப் பாசுரத்தில் -பேர்த்தகரம் நான்குடையான் பேரோதித் திரிந்து தீர்த்த கரர் ஆமின் -என்னும்
சொல் தொடர் மிகவும் சுவை உடைத்து –
திசை அளப்பான் எண் திசையும் பேர்த்தகரம் நான்குடையான் திரு மேனி சம்பந்தத்தால் உலகம் தூயதா கிலது –
அதனை அவன் பேரோதித் திரிந்து அவனினும் பெரியோர்களாகிய நீங்கள் உங்கள் பாத தூளியினால்
புனிதம் ஆக்குங்கள் -என்று பாகவதர்களின் சிறப்பை உணர்த்திச் சுவை தருவதுதைத் துய்த்து இன்புறுக –
தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்து ஆளும் –
தானும் திரிந்து -பிறரையும் திரியச் சொன்ன பூதத்தாழ்வார் திருவடிகள் எம்பெருமானார்
நெஞ்சத்தில் பெற முடியாதபடி உறைந்தன –அங்கனம் உறையும் படி அன்புடன் பேணி
வைத்துக் கொண்டார் எம்பெருமானார் -ஆழ்வார் உபதேசத்துக்கு செவி சாய்த்து திரிந்து
தீர்த்த காரராக எம்பெருமானார் முற்படவே –ஆழ்வார் திருவடிகள் தமக்கு பணி இன்மையின்-அவர் நெஞ்சகத்திலேயே உறைந்து விட்டன –அவற்றை அங்கனம் உறையும்படி ஆழ்வார்
சொல் படி நடக்கும் எம்பெருமானார் தம் நெஞ்சத்தில் வைத்து ஆளுகிறாராம் –ஆளுதல்-அனுபவித்தல் –
இதனால் திருவடிகளின் போக்யதை புலன் ஆகிறது -மறவாமல் ஆழ்வார் திருவடிகளை இனிது-அனுசந்தித்துக் கொள்கிறார் எம்பெருமானார் -என்றபடி
புகழோதும் –வைப்பவரே –
ஆழ்வார் சொல் படி நடந்து அவர் ஏற்றிய நிறை விளக்கினால் உலகத்தார் உடைய இதயத்து இருள்-கெடும்படி செய்தலின் அக இருளை நீக்கும் லோக குரு ஆகிறார் எம்பெருமானார்
பாடித் திரிவனே -என்றபடி அவர் புகழை ஓதுகின்றனர் -திருந்தின நல்லோர் –
அவர்கள் வேதத்தை பாதுகாத்து நிலை பெறச் செய்கிறார்களாம்
வேதத்தின் பொருளாகிய இறைவனினும் அதன் உள் பொருளாம் ஆசார்யனை மிக விரும்பி-புகழ் பாடுதலின் -பிறர் வேதத்துக்கு கூறும் அவப் பொருள்களைப் களைந்து அதனைப்-பாது காத்தவர்கள் ஆகிறார்கள் நல்லோர் —
அவர்கள் தங்களை சார்ந்தவர்களையும் உள் பொருளைப் பற்றி நிற்கும்படி செய்து வருதலின்
அந்த வேதத்தை காத்ததோடு அமையாமல் -நிலை நிற்கவும் செய்கிறார்கள் -என்றபடி –
-இவ் இருள் தரும் மா ஞாலத்தில் இது செயற்கு அறிய செயல் என்பது தோன்ற -இந்த மண்ணகத்தே -என்றார் –
முழுமை வாய்ந்த ஆசார்யர் எம்பெருமானாரே –
ஆதலின் அவரே வேதத்தின் உள் பொருள் –
அவரைப் பற்றி நிற்றலே வேத மார்க்கம் என்றும்
மற்றவர்களை அங்கனம் பற்றி நிற்க செய்தாலே வேத மார்க்கத்தை பிரதிஷ்ட்டாபனம் செய்தல் -நிலை நிறுத்துதல் –
என்றும் சம்ப்ரதாயம் வல்லோர் கருதுகின்றனர் –
ஆகையால் ஸ்ரீ மத் வேத மார்க்க பிரதிஷ்டாப நாசாரியர் என்று எம்பெருமானார் சம்பந்தம் உடைய
ஆசார்ர்யர்களை இன்றும் உலகில் வழங்கி வருகிறார்கள் –
இதனையே அமுதனார் -நல்லோர் மறையினைக் காத்து மன்ன வைப்பவர் -என்பதனால்
அருளி செய்கிறார் என்பது உணரத் தக்கது-

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தல்

நிறை விளக்கு -பர ஞானம்
..பூத திருவடி -ஆழ்வார்
அவர் தாள்கள் நினத்து உறைய வைத்து
ஆளும் அனுபவிக்கும் இராமனுசன் புகழ் ஓதும் நல்லோர்கள்- ஆழ்வார் தொடக்கம் மா முனி வரை.
.வேத சங்கை நீக்கி மனத்து அகத்தே மன்ன வைப்பரே . வேதத்தை .ரஷித்து .
.வகுத்த சேஷி-இறைவன்.
.காணும் -சாஷாத் கரிக்கைக்கு -தர்சன -பர ஞானம்.
ஞான தர்சன பிராப்தி அவஸ்தை பர பக்தி பர ஞான பரம பக்தி
அறிந்து கண்டு அடைதல் /உபகரணமான ஹ்ருதயத்தை பற்றி கிடக்கிற அஞ்ஞான அந்த காரம் ஆனது நசிக்கும் படியாக
–பரிபூர்ண தீபத்தை பிரகாசிப்பித்த –தான் கண்டதுடன் நிற்க வில்லை நமக்கு காட்டினார்.-பேரென் என்று உறைய வைத்தார்
-ஆளும் -அனுபவித்து
-புகழ் -கல்யாண குணங்களை
-ஓதும்-சதா உச்சாரணம் பண்ணும்
…பாக்ய குதிர்ஷ்டிகளால் அழிக்க ஒண்ணாத படி ரஷித்து –
வேதத்தின் பொருள் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே –ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்-வேதாந்தம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலே என்று -தொடங்கி-ஆச்சார்யா அபிமானம் தான் பிரதமம் ஸ்வரூபத்தை பல்லவிதம் ஆக்கும்
பின்பு புஷ்பிதம் ஆக்கும் -அநந்தரம் பல பர்யந்தம் ஆக்கும் -என்று ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ சுக்தி முடிக்குமே -அது போலே
சர்வ ஸ்வாமி-இறைவன்..-இருள் கெட -ஸ்மிர்த்தி நினைவு மறத்தல்
அவன் ஆதீனம்..ஊற்று வாயில் இருக்கிறானே..
குகா பிரதிஷ்டா -ஜீவாத்மாவும் பரமாத்மாவும்.
வேதம் ஓதுவதால்….பிரகரண துவாரமே ஹ்ருதயம்..-அறிந்தவன் மோஷம் அடைந்தவன் ஆகிறான்.
இறைவனை காணும் இதயம்..பூர்வ கர்ம வாசனையால் வந்த அஞ்ஞானம் மூடி கொள்கிறது ஞானத்துக்கு விகாசம் இன்றி தடுப்பதால்.
.மோஹிக்கிறார்கள்-அதை கெடுக்க -ஞான தீபத்தால் தமசை அகற்றி –
நிறை விளக்கு ஏற்றிய ..மணிக்கு ஒளி வூட்ட முடியாது
..கிணறு வெட்டினால் ஜலம் உருவாக்க முடியாது ..புகுத்த முடியாது .இருக்கிற ஜலம் உபயோகிக்கலாம்
அஞ்ஞானம் விலக தானே ஞானம் பிரகாசிக்கும்..
பக்தி-தகளி
ஆர்வம்-நெய்-அபிநிவேசம் –
உருகின மனசை- திரி.-அபிநிவேசம் -பக்தி மட்டும் போதாதே -உருகின நெஞ்சும் வேண்டுமே
.நாரணர்க்கு ஏத்தினார்..
பூதம்-பெரிய- பிரமம் போல-அடிகள் என்றே ஆழ்வாரை சொல்லி –
– உன் தம் அடிகள்
முனிவர் /மலர் மகள் விரும்பும் அடிகள்/
திருவடி நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் -போலே
மாதவன் பூதங்கள்மலிய புகுந்து – ..விஷ்ணுர் பூதங்கள் பாவனம் பண்ண சுத்தி திரிகின்றன
-எங்கும் தீர்தகராய் திரிந்து
–நாதனை நரசிங்கனை ஏற்றி தொழுவார் உளற்றிய – திரிந்து ..முதல் மூவரும் தீர்த்த காரர்கள் .. .பாத தூளி படுதலால் இந்த லோகம் பாக்யம் செய்ததே –
உலகு அளந்த திருவடிகள் போலே இவர்கள் திருவடிகள் –
இருள் நீங்க வந்து உதித்த ஆழ்வார்கள் .
.உறைய -திரிந்து உபதேசம் பண்ண- இனி வியாபாரம் இல்லை என்று இருந்தாராம்
..ஆழ்வார்களை கண்ணன் எழுப்ப அவன் தூங்க ஆண்டாள் அவனை எழுப்புகிறாள்..
-கிடந்து உமிழ்ந்து அளந்து ….பார் என்னும் மடந்தை மால் செய்யும் மால் -அனுபவிகிறானே அது போல..இது தானே ஆளுகை-இஷ்ட விநியோகம் கொள்ளுகை -அனுபவிக்கை என்றபடி-
புகழ் ஓதும் நல்லோர்- –கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று அருளி செய்த ஆழ்வார் போல்வார்
-காலம் எல்லாம் ஆராய்ந்து கொண்டு போந்த -ஆராதித்து இல்லை முற் பட்டவர் என்பதால்-
-அவதரித்த பின்பு கல்யாண குணங்களை கேட்டு அருளி கரிய மாணிக்க பெருமாள் சன்னதியில்
ஆம் முதல்வன் என்று கடாஷித்த ஆளவந்தார் போல்வார் –
ரெங்கநாதன் -உடையவர் பட்டம் சாத்தியது போல அர்ச்சா ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ரெங்க ராஜனும்
சீட்டு எழுதி கொடுத்த மோர் காரிக்கு மோஷம் கொடுத்த திரு வேங்கடத்தானும்
யஞ்ச மூர்த்தியை வாதத்தில் ஸ்வாமி வெல்ல தேவ பிரான் உதவிய விருத்தாந்தம்
ஆல வட்டம் சாதித்த திரு கச்சி நம்பிகளுக்கும் நீர் வீசினீர் நான் பேசினேன் -சரியாக போனது –
ஸ்வாமி திரு முடி சம்பந்தத்தால் மோஷம் செல்லலாம் என்று சாதித்த தேவாதி ராஜன்
பிள்ளை மடியில் இருந்து எதிராஜ சம்பத் குமரன் பெயரை வைத்து கொண்டு –
அழகர் சிஷ்யர்களை கூப்பிட பெரிய நம்பி வர்க்கம் வராமல் இருக்க
தசரதன் ராமனை தன் பிள்ளை போல நினைத்தீரோ.என்று அருளிய திரு மால் இரும் சோலை அழகரும்
.கிடாம்பி ஆச்சான்– ஆள வந்தார் ஸ்தோத்ர ரத்னத்தில் அசக்தன் அநாதன்- நைச்ய பாவனை அனுசந்திக்க அழகர்
ஸ்வாமி அவதாரத்துக்கு பின்பு யாரும் அநாதன் இல்லை -நாதனாக அவர் இருக்கிறபடியால் -என்றாரே .
திரு குறுங்குடி ..நம்பி தானே சிஷ்யன் வைஷ்ணவ நம்பி என்று பெயர் பெற ஆசை கொண்டானே
இப்படி பட்டோர் நல்லோர் –
வீராணம் ஏரி -ஜகமே வாழ்ந்து போம்-ஆராய்ந்தார் நாத முனிகள்..
-ஆளவந்தாரும் -தானும் கடாஷித்து ஐந்து ஆச்சார்யர் மூலம்-அடைவே அனைத்தும் வழங்கி
பெரிய நம்பி– ஸ்வாமி கோஷ்டியில் வருவதை கண்டு சேவிக்க -ஆளவந்தார் என்று நினைத்து சேவிக்க
ஆச்சார்யர் திரு உள்ளம் உகக்க செய்வதே கர்த்தவ்யம்..
திரு கோஷ்டியூர் நம்பியும் -உகந்து எம்பெருமானார் என்ற திரு நாமம் சாத்தி –
ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையரும் கொள்ளை கொண்டு போக வந்த கண்ணனே நீர்-இப்படி நல்லோர் பட்டியல் நீண்டு கொண்டே போகும்
-திரு மாலை ஆண்டான் -ஆழ்வான் ஆண்டான் பிள்ளான் ஆழ்வான்-போல்வாரும்
ராமானுஜர் திருவடிகளே உபாயம் /பட்டரும் சாதித்தார் நம்ஜீயருக்கு
..வேதம் காத்த நல்லோர்கள்..-ஆழ்வான் தொடக்கம் –
வேதம் -நாதன் தேடி அலைய-மறையினை காத்தார்.ஆழ்வான் ஸ்ரீ சூக்திகள் வதத்துக்கு மங்கள சூத்திரம் போலே –
.வியாக்யானம் அருளிய பிள்ளான்– போல்வாரும்
மறை என்பதால் திவ்ய பிரபந்தம் ரஷித்தார்-காத்து –மன்ன வைப்பவர் இந்த மண்ணகத்தே ..
-இருள் தரும் மா ஞாலத்திலே .நான்முகன் பெற்ற நாட்டுளே நற் பாலுக்கு உய்த்தனன்
உய்தனன் இங்கேயே பண்ணினானே..
புகழ் ஓதும் நல்லோர் இருந்ததால் .வேத மார்க்க பிரதிஷ்டாபனாச்சர்யர் என்று பட்டம் இத்தால் வந்தது

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: