அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம் -அவதாரிகை –

பெரிய ஜீயர் அருளி செய்த உரையின் அவதாரிகை –

1-சகல சாஸ்திர சங்க்ரஹமான திரு மந்த்ரத்தின் உடைய தாத்பர்யமாய் –2-பகவத் அகஸ்மிக க்ருபா லாபத பரிசுத்த ஜ்ஞானரான ஆழ்வார்களுடைய
திவ்ய பிரபந்த சாரார்தமாய் –3-பரம காருணிகரான நம் ஆழ்வார் உடைய  பரி பூர்ண கடாஷ பாத்ர பூதரான ஸ்ரீ மதுரகவிகள் உடைய–
உக்த்யனுஷ்டங்களாலே ப்ரகடிதமாய் -4-ஆழ்வார் தம்மாலே நாத முனிகளுக்கு அருளி செய்யப் பட்டதாய் —
5-அவர் திருவடிகளை ஆஸ்ரயித்த யோக்ய விஷயங்களுக்கு உபதேசித்து அருள —அவர்கள் தாங்களும் அப்படியே உபதேசிக்கையாலே
-உபதேச பரம்பரா ப்ராப்தமாய்-6-அகில சேதனருக்கும் ஸ்வரூப உபாய புருஷார்த்த -யாதாத்ம்ய ரூபேண அவஸ்ய அபேஷிதமாய்-இப்படி ஆறு விசேஷணங்கள் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -என்ற சரம பார்வை நிஷ்டைக்கு –
பரம ரகஸ்யமாய் இருந்துள்ள -சரம பர்வ நிஷ்டா பிரகாரத்தை–எம்பெருமானார்–கேவல கிருபையாலே தம்மை ஆழ்வான் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பித்து-
–தந் முகேன உபதேசித்து அருள கேட்டு —அவ்வர்த்தங்களை யதா தர்சனம் பண்ணி —அனவரதம் எம்பெருமானார் திருவடிகளை சேவித்துக் கொண்டு –
–போரா நின்றுள்ள பிள்ளை அமுதனார்–

அவருடைய திவ்ய குணங்களை தம்முடைய ப்ரேமத்துக்கு போக்கு வீடாக பேசி-அனுபவிக்கும் படியான தசை தமக்கு விளைகையாலும்-
-இவ்வர்த்த ஞானம் அப்பொழுதே -சேதனர்க்கு ஸூக்ரஹமாம் படி பண்ண வேணும் என்கிற பரம கிருபையாலும்-
-தாம் எம்பெருமானாருடைய திவ்ய குணங்களை பிரேம அநு குணமாக பேசுகிற பாசுரங்களாலே —
-தத் பிரபாவத்தை எல்லார்க்கும் பிரகாசிப்பியா நின்று கொண்டு

முன்பு ஆழ்வார் திருவடிகளுக்கு அனந்யார்ஹமான ஸ்ரீ மதுர கவிகள்–ஸ்வ நிஷ்டா கதன ரூபேணவும்  -பர உபதேச ரூபேணவும் உஜ்ஜீவன அர்த்தத்தை-
-லோகத்துக்கு வெளி இட்டு அருளினால் போலே-
-தாமும் ஸ்வ நிஷ்ட கதன ரூபத்தாலும் -பர உபதேசத்தாலும் அவரைப் போலே சங்கரஹேன பத்துப் பாட்டாக அன்றிக்கே பரக்கக் கொண்டு
-ஆசார்ய அபிமான நிஷ்டர்க்கு ஜ்ஞாதவ்யங்களை எல்லாம் இப்ப்ரபந்த முகேன அருளி செய்கிறார் –

எம்பெருமானார் திருவடிகளில் ப்ரேமம் உடையவர்களுக்கு சாவித்திரி போலே இது நித்ய அனுசந்தேய விஷயமாக வேணும் -என்று ஆயிற்று
-பாட்டு தோறும் திரு நாமத்தை வைத்து நூற்று எட்டு பாட்டாக அருளி செய்தது –
ஆகையால் இத்தை பிரபன்ன சாவித்திரி என்று ஆயிற்று நம்முதலிகள் அருளி செய்தது

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர்  அருளிய உரையின் அவதாரிகை –

ஸ்ரீ ய பதியாய் பரம காருணிகனான  சர்வேஸ்வரன்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ சஹாயோ ஜனார்த்தனா -உபாப்யா -பூமிநீளாப்யா-சேவித பரமேஸ்வர –
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ யாச்யார்த்த ஜதகத்பதி ஆஸ்தே விஷ்ணு
ரசிந்த்யாத்மா பக்தைர் பாகவத சஹா -என்கிறபடியே- நித்ய விபூதியிலே -போக உபகரணனாய்  இருந்து
-லீலா விபூதியில் த்ரி குண-பிரகிருதி ச சர்க்கத்தாலே ஜீவ வர்க்கங்களுக்கு -நித்ய சூரிகளைப் போலே -இந்த ஆநந்த ரசத்தை அனுபவித்து
வருகைக்கு யோக்யதை உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஒழிக்க ஒழியாத -நம்மோடு உறவு அறியாத
சராசாரகத்தின்  பெருக்கு சுழியிலே -அகப்பட்டு கரை மரம் சேரப் பெறாதே இருந்ததுக்கு -போர நொந்து
இவர்களுக்கும் அந்த உறவை அறிவித்து – சராசாரகத்தின் நின்றும் உத்தரிப்பிக்க கடவோம் என்று-நினைப்பிட்டு கலி யுக ஆதியிலே
நம் ஆழ்வாரை அவதரிப்பித்து -அவருக்கு மயர்வற மதி நலம் அருள -அவரும் -அந்த சம்யஜ்ஞானத்தாலே சர்வேஸ்வரனுடைய-
ஸ்வரூப ரூப குண விபூதிகளை -தாம் அனுபவித்து -அது உள் அடங்காமே  -எதிர் பொங்கி மீதளிப்ப -அதுக்குப் போக்கு வீடாக திவ்ய பிரபந்தங்களை நிர்மித்தும் –
மதுரகவி ஆழ்வார் தொடக்கமானவர்களுக்கு உபதேசித்து -அதுக்கு சாரமாய் -தத்வ ஹித புருஷார்த்த -யாதாம்ய அவபோதகமாய் -(குஹ்ய உபதேசம் மதுர கவிக்கு மட்டுமே -)
சகல வேத சங்க்ரஹமான-திரு மந்த்ரத்தில் குஹ்ய தமமாக பிரதி பாதிக்கப் பட்ட-சரம உபாயத்தை  மதுர கவி ஆழ்வார் ஒருவருக்கும் உபதேசிக்க –
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -என்றும்
தேவு மற்று அறியேன் -என்றும் -உக்தி அனுஷ்டானங்களாலே பூதரான பின்பு -அந்த அர்த்த விசேஷங்களை யெல்லாம்
தமக்கு பிரசாதிக்க வேணும் என்று-ஸ்ரீ மன் நாத முனிகள் பிரார்த்திக்க -அவருக்கு அர்ச்சாவ்ய அவஸ்தையை அதிகிரமித்து
திருவாய் திறந்து உபதேசிக்க -அவரடியாக வாய்த்து இந்த சம்ப்ரதாயம் வந்தது –

இவ் வர்த்த விசேஷங்களை யெல்லாம் -இருள் தரும் மா ஞாலமான பூ லோகத்திலே –
ஜனங்களுக்கு உபதேசித்து சர்வருக்கும் மோஷத்தை கரதலாமலகம் ஆக்க வேணும் -என்று –
பத்யு கமல வாசிந்யா பிரேரணாத் ப்ர்திவீதலே அஹீனாம் ஈச்வராஸ் சோயமாசீத் ராமானுஜோ முனி -என்கிறபடியே
சர்வேஸ்வரன் திருவனந் தாழ்வானை  ஏவ -அவர் வந்து ஸ்ரீ பெரும் பூதூரிலே அவதரித்து
சகல சாஸ்திர ப்ரவீணராய்  -திருக் கச்சி நம்பி மூலமாக தேவப் பெருமான் அறிவித்த அறிவாலே
தத்வ ஹிதங்களை யெல்லாம் விசதமாக  தெரிந்தும்
பெரிய பெருமாள் கிருபையாலே உபய விபூதி சாம்ராஜ்யத்தை நிர்வஹியும் என்று செங்கோலை- கொடுக்கப் பெற்றதையும்
நாத யாமுநாதி சம்ப்ராதாய பரம்பரா ப்ராப்தமான தத்வ ஹித புருஷார்த்த-தத் யாதாத்ம்ய ஜ்ஞானம் ஆகிற அர்த்த விசேஷத்தை லபித்தும் –
தமக்கு அந்தரங்கரான ஆழ்வான் முதலான முதலிகளுக்கு அவ் அர்த்த விசேஷத்தை-உபதேசித்துக் கொண்டும் வாழுகிற காலத்தில்
திருவரங்கத் தமுதனார் -சகல சாஸ்திர பரி பூரணராய் இருந்தும் -சத் சம்ப்ரதாயம்-தெரியாதிருக்க -எம்பெருமானார் தம்முடைய நிர்துஹேக கிருபையாலே
ஆழ்வானை இட்டு-அவரைத் திருத்துவிக்க -அவரும் ஆழ்வானை ஆஸ்ரயித்து-அவர் காட்டிக் கொடுக்க
எம்பெருமானார் திருவடிகளைக் கண்டு -அதிலே அத்யந்த அபிநிவிஷ்ட சித்தராய் -சர்வதா அனுபவம் பண்ணிக் கொண்டு போந்து –
அவ் அனுபவம் உள் அடங்காதே -பரீவாஹ ரூபேண -கலித்துறை -என்கிற சந்தச்சிலே-அந்தாதியாக-நூற்று எட்டுப் பாட்டாய்-
பாட்டு தோறும் எம்பெருமானார்  திரு நாமத்தை சேர்த்து -பிரபந்தீ கரித்து-போந்தார் ஆகையாலே -இது பிரபன்ன காயத்ரி என்று  அத்யவசிக்கப் பட்டு –
நம் முதலிகள் எல்லாருக்கும் -குரோர் நாம சதாஜபேத் -என்கிறபடியே-நித்யாபிஜப்யமாய் -இருக்கிற தாய்த்து
————————————————————————–

அமுது விருந்து-உரையின் அவதாரிகை –

திருமகள் கேள்வனுக்கு சேதனரை திருத்தி ஆளாக்க தேசிகர் திருமந்த்ரத்தை உபதேசித்து அருளுவர்
-அந்த திருமந்தரம் சாஸ்திரங்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டது —
-சாஸ்த்ரங்களை வரியடைவே முற்றும் கற்று தத்துவ ஞானம் பெற்று விளங்குதல் சால அரிது —
-அரும்பாடு பட்டு பொருள் ஈட்டல் போன்றது அது என்பர் பெரியோர்–தேசிகர் தரும் திருமந்த்ரத்தால் ஏற்படும் தத்துவ ஞானமோ பாடு படாது
எளிதில் பெறலாம் படி அமைந்து உள்ளது -இதனை நல்தாதை சொம் -சொத்து -புதல்வர் தம்மதாவது போன்றது என்பர் பெரியோர்    
–அத்தகைய திரு மந்த்ரம் மூன்று சொற்கள் கொண்டது—முறையே அம் மூன்று சொற்களும்—
எம்பெருமானுக்கே இவ்வான்ம தத்வம் உரியது என்பதையும் —அவ்வெம்பெருமானையே அவ்வன்ம தத்வம் பேறு தரும் உபாயமாக கொண்டது -என்பதையும்
அவ்வுபாயத்தினால் பெறப்படும் பேறாக வான்ம தத்வம் அவ்வெம்பெருமானையே கொண்டது -என்பதனையும்–தன்  சொல்லாற்றலால் உணர்த்தும்
இம்மூன்று நிலைகளும் முறையே
அனந்யார்ஹா சேஷத்வம் /அநந்ய சரணத்வம்/அநந்ய போக்யத்வம் -எனப்படும் –
இம்மூன்று நிலைகளும் சேர்த்து ஆகார த்ரயம் -எனபது உண்டு –
எம்பெருமானுக்கு ஆள்படும் நிலையே தன் ஸ்வரூபம் என்றும்/எம்பெருமானே உபாயம் என்றும்/இன்பம் பயக்கும் எம்பெருமானே புருஷார்த்தம் என்றும் உணர்ந்து
அந்நிலையிலே முதிர்ந்து பண்பட்ட மாண்புடையோர் ஆசார்யன் திறத்து அந்நிலையை மேற் கொள்வர் –
அதாவது –
ஆசார்யனுக்கு ஆள்படுகை தன் ஸ்வரூபம் என்றும்/அவனே உபாயம் என்றும்/அவனே புருஷார்த்தம் என்றும் -கருதி ஒழுகுவர்
இந்நிலை சொல்லாற்றலால் தோற்றாவிடினும் கருத்து பொருளாக -தாத்பர்யார்தமாக -கருத படுகிறது
எம்பெருமான் திறத்தில் கொண்ட ஆகார த்ரயம் முதல் பருவத்தின் நிலை -பிரதம பர்வ நிஷ்டை என்றும்
ஆசார்யன்  திறத்தில் கொண்ட ஆகார த்ரயம் கடை பருவத்தின் நிலை -சரம பர்வ நிஷ்டை -என்றும் கூறப்படும்
ரத்னத்தின் சிறப்பை உணர உணர -அதனை கொடுத்த வள்ளல் இடம் மதிப்பு ஏறுவது போலே
எம்பெருமானது வீறுடைமையை உணர உணர அவனுக்கு ஆளாக்கின ஆசார்யன் திறத்து மதிப்பேறி அவனுக்கு-ஆள்படுதல் இயல்பு தானே –

ஏதும் ஏதம் இன்றி மாதவனால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளி செய்த
திவ்ய பிரபந்தங்கள் எம்பெருமான் புகழ் மலிந்த பாக்களால் அமைந்து இருப்பினும் அவற்றின்
சாரமாக திரண்ட பொருள் சரம பர்வ நிஷ்டையே ஆகும்
நம் ஆழ்வாருடைய பேரருள் நோக்கிற்கு இலக்கான மதுர கவிகள்
சரம பர்வ நிஷ்டியான வேதத்தின் உள் பொருள் தம் நெஞ்சில் நிலை நிற்கும்படி சடகோபன்
பாடினதாக அருளி செய்து இருப்பது இங்கு நினைவு கூரத் தக்கது
அருளி செய்ததற்கு ஏற்ப -தேவு மற்று அறியாது -நம் ஆழ்வாரையே மதுர கவிகள் பற்றி நின்ற
சிஷ்டாசாரமும் இச் சரம பர்வ நிஷ்டைக்கு பிரபல பிரமாணம் ஆகும்
மதுர கவி தோன்ற காட்டும் தொல் வழியே நல் வழிகள் -என்றார் வேதாந்த தேசிகனார்
பின்னர் இச் சரம பர்வ நிஷ்டை நம் ஆழ்வாரால் யோக முறையில் தம்மை சாஷாத் கரித்த
நாதமுனிகளுக்கு உபதேசிக்கப் பட்டு தகுதி வாய்ந்த அவர் சிஷ்ய பரம்பரையினால்
இன்னும் உபதேசிக்கப் பட்டு  வருகிறது –
-இக் சரம பர்வ நிஷ்டை அறிவுடைய மாந்தர் அனைவருக்கும் உள்ளது உள்ளபடியான ஸ்வரூபத்திலும்
உபாயத்திலும் -புருஷார்த்தத்திலும் நிலை நிற்றலாய் இருத்தலின் மிகவும் தேவைப் படுவதாக உள்ளது –
பரம ரஹச்யமான இந்நிலை எம்பெருமானார் தமது இயல்பான கருணையினால் கூரத் ஆழ்வான்
திருவடிகளில் ஆஸ்ரயிக்கும்படி செய்து அவ் ஆழ்வான் மூலமாக தமக்கு உபதேசித்து அருள கேட்டு –
அந்நிலையை உள்ளபடி கண்டு கொண்ட திருவரங்கத் தமுதனார் எம்பெருமானார் திருவடிகளையே
எப்போதும் சேவித்துக் கொண்டு
-அவருடைய கல்யாண குணங்களை தமது பக்திக்கு ஏற்ப அனுபவித்துக் கொண்டு இருந்தார் –
அவ் அனுபவம் உள் அடங்காது வெளிப்பட்ட சொற்கள் இவ் இராமானுச நூற்று அந்தாதி என்னும்-திவ்ய பிரபந்தமாக அமைந்தன –

எம்பெருமானார் திருவருளால் தமக்கு கிடைத்த இந்தப் பரம ரகஸ்யத்தை எல்லோரும்-
எளிதில் அறிந்துஉய்வு  பெற வேணும்  என்னும் கிருபையால் வெளிப்படுத்துகிறார் அமுதனார்
இத் திவ்ய பிரபந்தத்தினால் –
தம்மைப் போலே எம்பெருமானார் குணங்களை நன்கு அனுபவிப்பிக்கும் ரஹச்யத்தை
உணருமாறும் செய்து எல்லாரையும் தம்மையே ஒக்க அருள் செய்கிறார் இத் திவ்ய பிரபந்தத்திலே –
நம் ஆழ்வாருக்கு மதுர கவிகள் போலே எம்பெருமானாருக்கு அமுதனார் அமைந்து உள்ளார் –
இருவரும் ஆசார்யன் திறத்து தங்கள் நிலையை விளக்கியும் பிறர்க்கு உபதேசித்தும்
உய்வுறுத்தும் பொருள்களை உலகிற்கு வெளி இட்டு உதவுகின்றனர் -ஆயினும் மதுர கவிகளைப் போல்
சுருங்க கூறாது அமுதனார் பரக்க கூறிச்  சரம பர்வ நிஷ்டருக்கு அறிய வேண்டியவை அனைத்தும் கூறிப்
பரம உபகாரம் புரிவதை நன்கு உணர்ந்து நாம் நன்றி பாராட்டக் கடமை பட்டு உள்ளோம்
எம்பெருமானார் அடியார்கட்கு நிச்சலும் சாவித்திரி போலே இது அனுசந்திதற்கு உரியதாக வேணும் என்னும்
கருத்துடன் இராமானுசன் என்னும் திரு நாமத்தை அமைத்து இத் திவ்ய ப்ரபந்தம் நூற்று எட்டு பாட்டாக
அருளி செய்யப் பட்டு உள்ளது-
பிரபன்ன சாவித்திரி என்று நம் ஆசார்யர்கள் இதனை அருளி செய்வர்

————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தால் ஜல்பித்தல் –

ஸ்ரீ ய பதியாய்  பதியாய் -ஜீவ வர்க்கங்கள் கரை மரம் சேராமல் இருப்பதை கண்டு நொந்து..வைகுண்டத்தில் நித்ய அனுபவத்தில் இருந்து கொண்டு..ஆனந்தமாக அடியவர் குழாங்கள்  உடன் இருக்க செய்தேயும்
ஆழ்வாரும்  தாமர பரணி இரு பக்கமும்  நெல் கதிர்கள் கண்டு
ஒரு பக்கம் வாழ்ந்தும் அடுத்த பக்கம் சோர்ந்தும் இருப்பதை
-ஸ்ரீ சகாயோ ஜனார்த்தனன் -ஜனி ஹிம்சை -பிறப்பை அறுகிறவன்-ஜகத் பதி-
சொத்தை கடை மரம் சேர்க்க- நித்ய விபூதிக்கு வருகைக்கு யோக்யதை பெற
-நம்மை மறந்து திரிகிறான்- என்று அவன் கோர நொந்து
நல்லோர்கள் ஆழ்வாரையும் ஆச்சார்யர்களையும் அனுப்பி-
இரண்டு நிலையும் அறிந்தவர்கள்-ஒழிக்க ஒழியாத உறவு உணர்த்தி..
-சம்சார சாகரத்தில் உஜ்ஜீவிக்க சங்கல்பித்து..
கலியுக ஆதியில் ஆழ்வாரை அவதாரம்  செய்வித்து
அங்கம் – அங்கி-பாவம் நம் ஆழ்வாரும் மற்ற ஆழ்வார்களும்
–மயர்வற மதி நலம் அருளி-திவ்ய ஆபரண  திவ்ய ஆயுதங்களை ஆவேசிப்பித்தும்
.ஸ்வரூப   ரூப குண விபூதிகளை தாம் அனுபவித்து-
ஒரு நாள் முகத்தில் விளித்தாரை வடி வழகு  படுத்தும்பாடு
-குகன்பரிகரங்கள் குகனை அதி சங்கை பண்ணி பின் செல்ல குகன் இளைய பெருமாளை அதி சங்கை பண்ணி பின் தொடர
-தடாகம் நிரந்து உள் அடங்காமல் எதிர் பொங்கி மீதளிப்பது போல
–அறிய கடவன் என்று ஆசார்யன் சங்கல்பிக்க –
போக்கு வீடாக திவ்ய பிர பந்தங்களை அருளியும்  மதுர கவி ஆழ்வார் தொடக்கமாக உபதேசித்தும் ..
நால் ஆயிரமும் ஆழ்வாரே அருளியது -அங்கம் அங்கி பாவம் ஆழ்வார்கள் அனைவரும்
மந்த்ரம் வேறே  நாமம் வேறே – மூன்று எழுத்துடைய பேரால்-தொண்டர் அடி பொடி ஆழ்வார்
இங்கு திருநாமம்– துவயத்தில் தான் பிராட்டி  சேர்த்தியை  வெளிப்படையாக சேர்க்கிறோம் –

திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் இல்லை என்பதால் திரு நாமம் என்கிறார் ..
மந்திர-திரு மந்த்ரம் சாஸ்திர ருசி பரிகிரிகீதம்
விதி -சரம ச்லோஹம்-
துவயமே -அனுசந்தான ரஹச்யம்-ஆச்சார்யா  ருசி பரிகிரிகீதம் .
-எம்பெருமானார் திருநாமத்தால்.சர்வத்ர விநியோகம் போல,,.. அனைவரும் கொள்ளலாமே –
சரம பர்வ நிஷ்ட்டை –ஆறு விசெஷணம்..உபதேசிக்கிறார் இதில்.
முதல்–.சகல சாஸ்திர சங்கர ஹமான  திரு மந்த்ரத்தின் உடைய தாத் பர்யமாய்
ஓம் எனபது போல் உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய்.
அ கார சம்பந்தத்தால் பெருமை –இதனால் காட்ட பட்ட சரம பர்வ நிஷ்ட்டை
-நம-உள் உறை பொருள்..இரண்டாவது–பகவதாக ஆகச்மிக  க்ருபா லபத பரி சுத்த ஞானரான ஆழ்வார்–வெறிதே அருள் செய்தானே மயர்வற  மதி நலன் அளித்தானே
-ஆழ்வார்கள்  உடைய திவ்ய பிரபந்த   சாரார்தமாய்-ஆச்சார்யர் அவன் தானே இவர்களுக்கு நிர்ஹேது கமாக அருளி…வந்தே கோவிந்த தாதவ்-எம்பாரை அருளி கூரத் ஆழ்வானை வணங்கி -பட்டர்.-.பீதக வாடை பிரானார் பிரம குருவாக வந்து .
.மூன்றாவது- பரம காருணிக்க ரான நம் ஆழ்வார் உடைய பரி பூர்ண கடாஷ பாத்திர பூதரான ஸ்ரீ மதுரகவிகள் உடைய
உக்த்ய அனுஷ்டாங்களாலே பிரகடிதமாய் –பத்து பேரை சிரித்து இருப்பாரே-
உண்ட போது ஒரு வார்த்தை உண்ணாத போது வேறு வார்த்தை இன்றி
..நாலாவது -ஆழ்வார் தம்மாலே நாத முனிகளுக்கு அருளி செய்ய பட்டதாய் –
அவர் திருவடிகளை ஆஸ்ரயித்து யோக்ய விஷயங்களுக்கு உபதேசித்து அருள-பவிஷ்யகார ராமானுஜரை கொடுத்து அருளி இவரே உத்தார ஆச்சாரியார் -என்று அருளி –
–ஐந்தாவது – அவர்கள் தாங்களும் அப்படியே உபதேசிக்கையாலே -உபதேச பரம்பரா ப்ராப்தமாய்
–ஆறாவது – அகில சேதனருக்கும் ஸ்வரூப -அடிமை- உபாய-திருவடிகளே – புருஷார்த்த -திருவடிகளில் கைங்கர்யம்-ஆகிய இவற்றின்
-யாதாத்ம்ய -இவற்றில் ஆழ்ந்த பொருள்-ரூபேண அவச்ய அபேஷிதமாய்–ராமானுஜ பவிஷ்யகார திருமேனியும் சேர்த்து அருள பட்டு .
–ஆச்சார்யர் பக்கல் ஆழ்ந்த பொருள்-
பிரதமம் பல்லவம் மொட்டு போல..
பின்பு புஷ்பிதம் -பாகவதர்கள் பக்கல் மூன்றும்
ஆச்சார்யர் பக்கல் -கனி போல .
.மூன்று படிகளை யாதாம்ய ரூபேண .அவச்ய அபேஷிதம் கனி கொண்டு தானே வயிறு நிரம்பும்..
ஆச்சார்யர் பகவான் திருவடி தானே இங்கு போனால் மூன்று படிகளும் தெரிந்தவன்
இதனால் தன் அடையே பாகவத பகவான் பக்கல் கிட்டும்–பலிதம் தானே சரம பர்வ நிஷ்ட்டை
எம்பெருமானார் கேவல கிருபையாலே தம்மை ஆழ்வான் திருவடிகளிலே ஆச்ரயிப்பித்து
-எல்லோரும் ஸ்வாமி  சிஷ்யன் தானே
-வூமைக்கும் திருவடி நிலைகளை சாத்தி கொக்கு வாயும் படி கண்ணி யுமாக  உய்ய வைத்ததை
-ஆழ்வான் பார்த்து மயங்கி-நாமும் ஊமையாய் போகாமல் இழந்தோமே என்று பணித்தானாம்
பட்டரும் எம்பெருமானார் திருவடி சம்பந்தத்தால்  அனைத்தையும் அறிந்தவர் ஆனார் என்பார் நஞ்சீயர் இடம்
தன் முகேனே -ஆச்சார்யர் -உபதேசித்து அருள கேட்டு ,அவ அர்த்தங்களை யதா தர்சனம் பண்ணி
அநவரதம் எம்பெருமானார் திருவடிகளை சேவித்து கொண்டு போரா நின்று உள்ள பிள்ளை அமுதனார் .
.அவர் உடைய திவ்ய குணங்களை தம் உடைய பிரேமத்துக்கு போக்கு வீடாக பேசி அனுபவிக்க
வேண்டும் படியான தசை தமக்கு விளைக்கை யாலும்
இவ் அர்த்த ஞானம் சேதனர்க்கு ஸூக்ரகமாம்  படி பண்ண வேணும் என்கிற தம் உடைய பரம கிருபையாலும்
..தாம் எம்பெருமானார் உடைய திவ்ய குணங்களை பிரேம அநு குணமாக பேசுகிற பாசுரங்களாலே
தத் பிரபாவத்தை எல்லோருக்கும் பிரகாசிப்பியா நின்று கொண்டு
ஆழ்வார் திருவடிகளுக்கு அனந்யார்ஹரான ஸ்ரீ மதுரகவிகள்-ஸ்வநிஷ்ட கதன ரூபேணவும் பரோபதேச ரூபேணவும் உஜீவனார்த்தத்தை
லோகத்த்க்கு வெளி இட்டால் போல ,தாமும் ஸ்வ நிஷ்ட ஆகதன ரூபத்தாலும்,பரோ உபதேசத்தாலும்,
அவரை போல சங்கரஹேன  பத்து பாட்டாக அன்றிக்கே பரக்க  கொண்டு ,
ஆச்சர்ய அபிமான நிஷ்டருக்கு ஞாதவ்ய அர்த்தங்களை எல்லாம் இப் பிரபந்த முகேன அருளி செய்கிறார்.
.கண்ணையும் கொடுத்து கடலை காட்டினால் போல ..தடாகம் நிறைந்து வெளி வருவது போல
-தரிக்க முடியாமல் வெளி வர ..அடியவரும் இன்பம் பெற..பால் கன்று குட்டிக்கும் நமக்கும் தருவது போல.
.மதுர கவிசொன்ன சொல் வைகுந்தம் பெறுவரே- துணிவர்
-பகவத அனுபவம் மாறி ஆச்சார்யர் அனுபவம் வர துணிவு வேணும்.
.சாவித்திரி  உரு போல பாட்டு தோறும் திரு நாமத்தை வைத்து அருளி செய்தார் ..
-பிர பன்ன சாவித்திரி என்பர் முதலிகள்.
-பிரதம பர்வ நிஷ்ட்டை–அதுக்கு சாரமாக தத்வம் ஹிதம் புருஷார்த்தம்-
யாதாத்ம்யம் -அவ பாதகமாய்- சொல்லுவதாய்-விபரித்து -சகல வேத சங்கரகமான திரு மந்த்ரம்
-குக்ய தமமமாக பிரதி பாலிக்க பட்ட -சரமோ உபாயத்தை மதுர கவி ஆழ்வார் ஒருத்தருக்கு உபதேசிக்க –
மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருள் நிற்க பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -என்று அவர் அருளிய படி
என்  நெஞ்சுள் நிறுத்தினான் –அருளினார் – எங்கள்  என்று -அருள வில்லை
-குக்ய தமத்துக்கு அதிகாரிக்கு மட்டும் தான் அருளுவார்-.தேவு மற்று அறியேன் என்றும்
உக்தி அனுஷ்டானங்களால் பூதர் ஆன பின்பு…நாத முனி பிரார்த்தித்து
கண் நுண் சிறு தாம்பு பிர பந்தத்துக்கு தனியனும் நாத முனி அருளினாரே
-அர்ச்சா சமாதியை குலைத்து கொண்டு..திரு வாய் திறந்து உபதேசிக்க
–இருள் தருமா ஞாலத்தில் அனைவருக்கும் தர தளமாக =உள்ளங்கை நெல்லி கனி  போல
மோஷத்தை தர-ஸ்ரீ ய பதி பத்தி சங்கல்பித்து
-ஆதி சேஷன-ஸ்ரீ பெரும் புதூரில் 1017 மேஷ  ராசி சித்தரை திருவாதிரை சுக்ல பஷம் பஞ்சமி வியாழ கிழமை
கேசவ சோமயாஜுலு காந்திமதி -பிறப்பித்தான்
.பலிஷ்டன்-உபய விபூதியும் தான் இட்ட வழக்காய் ஆக்கிக் கொடுக்கவும்
.பெயர் மட்டும் நாதன்..பிர பன்ன அம்ர்தம்–சகல சாஸ்திர  ப்ரவண ராய்
.திரு கச்சி நம்பி மூலம்  தேவ பெருமாள் ஆறு வார்த்தை அருளி
.தத்வ ஹித புருஷார்த்தங்களை விகசிதமாக தெரிந்தும்
பெரிய பெருமாள் மூலம் செங்கோலை கொடுக்க பெற்றும்–உடையவர்
–-வஸ்து பெற அரங்கன் ஞானம் பெற தேவ பிரான்-
-மூலவர் இடம் திரி தண்டம் இருக்கும் .புறப் பாடு போது உத்சவர் இடம் இருக்கும்
நாத யாமுனாதிகள் மூலம்ஆதி சப்தம்  -பஞ்ச ஆச்சார்யர்களையும்  குறிக்கும்.
-இவர்கள் மூலம் யாதத்மிக ஞானம் பெற்று தம் .அந்தரங்கர் -ஆண்டான்  ஆழ்வான் எம்பார்  போல்வர் மூலம்
–சாஸ்திரமும் –சத் சம்ப்ரதாயம்  தெரியாமல் இருந்தவரை திருத்தி
சத்துகள் இருக்கிற இடம் சத் சம்ப்ரதாயம் -குரு பரம்பரை -பேசிற்றே பேசுவார்
-ஸ்திரமான புத்தி வேண்டும்–மாயா வாதிகளால் கலக்க முடியாமல் -தோஷம் அற்று –

உள்ளம் உரை செயல் ஒருங்க விட்டு –ஆழ்வான்  எம்பெருமானார் திருவடிகளை காட்டி கொடுக்க
அத்யந்த அபிநிவேசம் பிறந்து -பல்லவமான விரலும்..திரு மேனி கண்டு அனுபவத்தில் இழிந்து
..அவ்    அனுபவம் அடங்காமல் கலி துறை சந்தத்தில் அந்தாதி
கட்டளை -பந்தம் -கலி துறை அந்தாதி 108  ராமனுஷ திரு நாமங்களை வைத்து
-பிர பன்ன காயத்ரி அத்யவசிக்க பெற்று
ஆச்சார்யர்  பெருமை பேசி கொண்டே இருக்க
–பிர பந்தம் வந்த க்ரமம்
இத்தால் அருளி தலை கட்டுகிறார்-

———————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: