அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-3 -பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னை இத்யாதி ..

பெரிய ஜீயர் உரை
ப்ராக்ருதரோட்டை சம்பந்தத்தை நீக்கி எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்கள்-திருவடிகளிலே என்னை சேர்த்த உபகாரத்துக்கு நெஞ்சே உன்னை வணங்கினேன் என்கிறார் –

பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப் பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலத்திப் பொருவரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுசன் முனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்ததற்கே -3-

பேரியல் நெஞ்சே -பெரிய ஸ்வபாவத்தை உடைய – மனசே –
பேய்ப் பிறவிப்பூரியரோடு உள்ள சுற்றம் புலத்தி-ஹேய ஜன்மாக்களாய் அஹங்காராதி தோஷ தூஷிதரானவர்களோடு உண்டான -சம்பத்தை நீக்கி –
பொருவரும் சீர்ஆரியன் செம்மை -உபமான ரஹீதமான குணங்களை உடையராய் –சமதிகத சமஸ்த சாஸ்த்ரராய்-ஆஸ்ரிதருடைய கௌடில்யம் பார்த்துக் கை விடாதே -அவர்களுக்கு ஈடாகத் தம்மை யமைத்துப் பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தரான இராமானுசன் முனிக்கு அன்பு செய்யும்சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்ததற்கே- எம்பெருமானார் விஷயத்திலே-ப்ரேமத்தை பண்ணுகை யாகிற பரம புருஷார்த்தத்தை உடையவர்களுடைய திருவடிகளின்-கீழே என்னை சேர்த்த இந்த மகோ உபகாரத்துக்கு உன்னை வணங்கினேன்
பேய்ப் பிறவி -தீதான பிறவி
பூரியர் -பொல்லாதவர்கள்
பூரி-பொல்லாங்கு
புலத்தல் -நீக்கல்

புண்யாம்சா போக விகாசாயாம் –சாது பரித்ராணாம் –
பாபத்வந்த ஷயாயச -துஷ்ட
ஸ்ரீ மான் -தர்ம சமஸ்தானம் அர்த்தம் கைங்கர்ய ஸ்ரீ மத்வம்/பொருவரும் சீர் ஆரியன் இராமானுசன் -3- மூன்று விசேஷணங்கள் -திருக் கல்யாண குணங்கள் அனுஷ்டானம் ஆர்ஜவம் -மூன்றும்-அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ -என்பதே பொரு வரும் சீர் -ஆரியர் -ஆசார்ய சீலர்

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ்ப்பாட்டில் தம்முடைய நெஞ்சானது எம்பெருமானார் உடைய சீல குணத்தில்ஈடுபட்ட மாத்ரமன்றிக்கே -இப்படி அனுபவிக்க அனுபவிக்க
-அபிநிவேசம் கரை புரண்டு –என்னைக் கொண்டு போய் ததீயர் உடைய திருவடிக் கீழ் சேர்த்தது –இந்த மகா உபகாரத்துக்கு தக்க
சமர்ப்பணம் தம் பக்கல் ஒன்றும் இல்லை என்று நெஞ்சினாருடைய காலில் விழுகிறார் .

வியாக்யானம் –
பேரியல் நெஞ்சே –
பெரிய ஸ்வபாவத்தை உடைய மனசே -முதலில் எம்பெருமானார் உடைய சீல-குணத்திலே இழிந்து அதிலே அத்ய அபிநிவிஷ்டமாய்-
-உன்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக -என்னையும்-ததீய பர்யந்தமாக அத்யவிசிப்பித்த ஸ்வபாவத்தை உடைய -மனசே என்றபடி –
பேய்ப்பிறவி பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி
அசூர வர்க்கத்திலே ஜனித்து -நிஹீநரான மூடரோடே உண்டான சம்பந்தத்தை சவாசநமாகப் போக்கி –
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம் -என்னும்படியே பண்ணுவித்து -என்கிறபடி
பேய்ப்பிறவி -தீதான பிறவி –பூரியர் -பொல்லாதவர்கள் –புலத்தல் -நீக்குதல் -பேய் தனம் பக்தனுக்கு உண்டே -பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தான் போலவும் -வாழும் சோம்பரை யுகத்தி போலும் போலவும் –
பொருவரும் சீர் -உபமான ரஹிதம் ஆகையாலே -ஏவம் பூதம் -என்று நிரூபித்து சொல்ல-அரிதாய் இருக்கிற கல்யாண குணங்களை உடையராய் –
ஆரியன் -சகல சாஸ்திர பாரீணராய்-இவ் விபூதியில் இருந்துள்ள சகல சேதனருக்கும்-
திருவேங்கடமுடையானுக்கும் ஆசார்யனாய்
தன்னாரியனுக்கு -என்று ஆரிய பதத்தை -ஆசார்ய பத சமானார்த்தமாக ஜீயர் பிரயோகித்து அருளினார் இறே
செம்மை -தாம் சங்கல்ப்பித்த படியே அனுஷ்டித்தும் -உபதேசித்தும் -இப்படி கரண த்ரய சாரூப்யத்தை உடையரான
ஞானம் அனுஷ்டானம் நன்கு உடைய -ஆசார்ய லஷணம் மிக்கு இருக்கும் படி –
இராமானுச முனிக்கு -தம் அவதார பிரயோஜனத்தில் எப்போதும் மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற-எம்பெருமானார் விஷயத்தில் –
அன்பு செய்யும் சீரிய பேறுடையார் –
அத்ய அபிநிவிஷ்ட சித்தராய் – அது தானே விலஷணம் என்று அத்யவசித்து இருக்கும் -ஆழ்வான் முதலிய ததீயர் உடைய-அடிக் கீழ் -திருவடிகளின் கீழே
என்னைச் தேர்த்ததற்கே –
என்னுடைய சிரச்சிலே அத் திருவடிகள் பூஷணமாகும் படி –
பூர்வ காலத்தில்-சரம பர்வத்தினுடைய பிரபாவத்தை அறியாதே -இருக்கிற என்னை அமைத்து வைத்தர்க்கே –
தனக்கு நான் உபதேசிக்க வேண்டி இருக்க-தானே எனக்கு புருஷகாரமாய்-
என்னைக் கொண்டு போய் ததீயர் உடைய ஸ்ரீ பாதத்திலே சேர்த்ததற்கு –
இந்த மகா உபகாரத்துக்கு நான் எத்தை பிரத்யு உபகாரமாக பண்ணுவது என்று ஆராய்ந்து பார்த்தால் –
அடி பணிந்தேன் உன்னை -உன்னுடைய திருவடிகளில் ஆஸ்ரயித்தேன் –
உனக்கு நமஸ்காரம் பண்ணினேன் -என்றபடி
பெறப் பேறாக-ஜீயர் பிரார்த்தித்து அருளின ததீய ப்ராவண்யத்தைக் காணும் -இவருக்கு இவருடைய மனச்சு-முதலில் உண்டாக்கிற்று –

————————————————————————–

அமுத உரை —
கீழ்ப் பாட்டில்
எனக்கு கருவியாகிய நெஞ்சு எம்பெருமானாருடைய மிக்க சீலம் என்னும் குணத்தை ஒழிய -வேறு ஒன்றும் சிந்திக்கிறது இல்லை–இந்நிலை எனக்கு வாய்க்க நான் ஒரு உபாயமும் அனுஷ்டிக்க வில்லையே -என்று வியந்தார் -இந்தப் பாட்டில் என் நெஞ்சு எனக்கு உரிய-கருவி இல்லாமல் என்னைத் தனக்கு உரியவனாக -ஆக்கிக் கொண்டு விட்டது –விடவே என்னிடம் பேர் இயல்வு ஒன்றும் இல்லாமல்–சீல குணத்தில் ஆழ்ந்து –அவன் அடியாரார் அளவும் தான் ஈடுபட்டதோடு அமையாமல் -தீய பிறப்பாளரோடு எனக்கு உள்ள உறவை அறுத்து –எம்பெருமானாருக்கு அன்பர்கள் உடைய அடிகளில் என்னை சேர்த்தும் விட்டது -அவ உபகாரத்துக்காக -அந் நெஞ்சினைப் பணிந்தேன் -என்றார்-
பத உரை –
பேர் இயல் நெஞ்சே -பெரும் தன்மை உள்ள நெஞ்சமே
பேய்ப்பிறவி -தீய பிறப்பை உடைய
பூரியரோடு -பொல்லாதவர்களோடு
உள்ள -உண்டான
சுற்றம் -உறவை
புலத்தி -நீக்கி
பொரு அறம் -ஒப்பற்ற
சீர் -குணங்களை உடையவரும்
ஆரியன் -கலைகளை உணர்ந்தவரும்
செம்மை -நேர்மை உடையவருமான
இராமானுச முனிக்கு -எம்பெருமானார் என்னும் முனிவர் திறத்தில்
அன்பு செய்யும் -பக்தி செலுத்தும்
சீரிய -சிறந்த
பேறு உடையார் -பயனை நுகர்வோர்களுடைய
அடிக் கீழ் -திருவடிகளின் கீழே
சேர்த்தற்கு -என்னை சேர்த்த இவ் அரிய பேருதவிக்காக
உன்னை அடி பணிந்தேன் -வணங்கினேன்
இப்பாசுரத்தில் துஷ்ட சஹாவாசத்தை நீக்கி -சிஷ்டர்களோடு சேர்க்கையை பெறுவதற்கு ஏது பாங்கான மனமே என்றது ஆயிற்று –
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-மனமே மனுஷ்யர்கள் உடைய -பந்தத்துக்கும் விடுதலைக்கும் காரணம் -என்பதை இங்கு நினைக
பேரியல் நெஞ்சே –
வள்ளலே -என்று வாரி வழங்குவாரை விளிப்பது போலப் -பேரியல் நெஞ்சே -என்று நன்றி அறிவுடன் விளிக்கிறார்
-மால் இடம் ஈடுபடுதல் நெஞ்சுக்கு இயல்பு –
கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும் மனம் -என்ற பெரியோர் திரு வாக்கு காண்க –
இங்கு திருமாலடியார்கள் இடம் ஈடுபாடு கொண்டமையின் நெஞ்சின் இயல்பு பெரிதாயிற்று –
இனி என் சிற்று இயல்புக்கு எம்பெருமானார் அன்பர்கள் திருவடிக் கீழ் சேர்த்தல் இயையாதாயினும் –
நெஞ்சு தன பெரும் தன்மைக்கு ஏற்ப அந்நிலையை தந்தது -என்னும் கருத்துடன் -பேரியல் நெஞ்சே -என்று -விளித்தார் ஆகவுமாம்–
இங்கு பெறுபவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர் தாம் அறிவார் தம் கொடையின் சீர் -என்னும் -ஔவையார் பாடலை நினைவு கூறுக –
இங்கனம் பெரும்தன்மையினால் வேறுபட்டு வணங்க தக்க முறையில் இருப்பதனால் தனிப்படுத்தி -நெஞ்சே -என்று விளிக்கிறார்
-முன் பாசுரத்தில் போல் என் நெஞ்சே என்று விளிக்கிலர்
அடி பணிந்தேன் உன்னை
தன் நெஞ்சுக்கு உருவம் கொடுத்து அதன் அடிகளில் விழுகிறார் அமுதனார் –வேறு யாரும் இங்கன் அடி பணிந்ததாக தெரிய வில்லை –
நெஞ்சை பலர் கொண்டாடி உள்ளனர் -அடி பணிந்திலர் –அமுதனார் நெஞ்சு தனிப்பட்டது
ஆழ்வார்களுடைய நெஞ்சிலும் அது தனி சிறப்புற்றது –
ஆழ்வார்களுடைய நெஞ்சு அவர்கள் உடைய உபதேசத்துக்கு செவி தாழ்த்தி –வைராக்ய காலத்திலும் -சுடர் அடி தொழும் காலத்திலும் -அனுபவ காலத்திலும் –
அன்னாருக்கு பாங்காய் வாய்ந்து உதவும் -இந்நிலையிலே மகிழ்ச்சி கொண்டு -வாழலாம் மட நெஞ்சமே -என்றும்
நெஞ்சமே நல்லை நல்லை -என்றும் நெஞ்சை கொண்டாடுகின்றனர் –மீமிசை -நெஞ்சகத்துக்கு தூது விட வேண்டிய நிலை –
இனி சில வேளைகளில் அந் நெஞ்சு -நின்னடையேன் அல்லேன் -என்று நீங்கி
இவர்களை விட்டு தான் மட்டும் எம்பெருமான் நாண் மலர்ப்பாதம் அடைவதும் உண்டு –
அடைந்தது மீளாது -இவர்களையே மறந்து விடுவதும் உண்டு –
காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும் வாராதே என்னை மறந்தது தான் -என்னும் -திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ சூக்தி காண்க
இனி கண்ணனோடு கலந்த நெஞ்சத்துக்கு அன்னம் முதலியவற்றைத் தூது விட வேண்டிய-நிலைமை ஏற்படுவதும் உண்டு -தம் நெஞ்சோடு தம்மை சேர்பதற்கு வேறு பொருள்கள் தேவைப் -படுகின்றன -அவர்கட்கு –
அத்தகைய குறை ஒன்றும் இன்றி எம்பெருமானார் அன்பர் அடிக் கீழ் தாள் சேர்த்ததோடு
அமுதனாரையும் அவ்விடத்திலே சேர்த்து வைக்கிறது நெஞ்சு -அப் பேருதவிக்காக நெஞ்சின் அடிகளிலே விழுகிறார் அமுதனார்
-ஆழ்வார்கள் தம் நெஞ்சை மார்பில் அணைத்து கொண்டாடுகிறார்கள் –
இவர் அடிமைப் பட்டு தலை அல்லால் கைம்மாறு இலேன் -என்று அடி பணிகிறார் சேர்த்து வைப்பவர் காலிலே விழுவது முறை அன்றோ –
அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை -என்று சேர்த்து வைக்க புறப்படுவதற்கு முன்பே -வண்டைத் தொழுதார் -திரு மங்கை ஆழ்வார் -இங்கனமே
செங்கால மட நாராய் -நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே -என்று நாரையை-அதனை சேர்ந்தவைகளோடு கால்களை தன தலை மேலே வைக்குமாறு கோருகிறார் நம் ஆழ்வார் – இவ்வாறே
-தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே -என்று குயிலுக்கு-தன்னையே கைம்மாறாக அர்ப்பணம் செய்கிறாள் ஆண்டாள் -முதல்நிலை -பிரதம பர்வம் நிலையில் சேர்த்து-வைக்கப் போகும் பறவைகள் திறத்து அவர்கள் அங்கனம் நடந்து கொண்டால் இறுதி நிலை -சரம பர்வம் நிலையில்
சேர்த்து வைத்த நெஞ்சின் திருவடிகளில் அமுதனார் பணிவதற்கு கேட்க வேணுமோ –
பேய்ப் பிறவிப் பூரியர் –
பகவானுக்கு கூட ஆளாகாத பிறவி பேய்ப் பிறவி என்க –
நிலை நின்ற மகத்தான புருஷார்தமாகிய பகவானை விட்டு -நிலை இல்லாததும் அல்பமுமான உலகு -இன்பத்தை பற்றி நிற்பது பேய்ப் பிறவியின் இலக்கணம் –
அப்பிறவியினர் விடத் தக்கவர் ஆவர் –
ஆகவே பேய்ப் பிறவி யாரோடு உள்ள சுற்றம் புலத்தி என்றாலே போதுமாய் இருக்க –
பூரியர் என்று மேலும் கூறியதற்கு கருத்து என் –என்னில் கூறுதும் –
உலகத்தவர் கண்ணால் காணும் இன்பத்தை ஒழிய வேறே ஓன்று உண்டு என்று பகவத் விஷயத்தை பற்றி விடாப் பிடியாய் -நிற்றலைப் பேய்ப் பிறவி என்பர்
-ஞானிகட்கு உலகத்தவர் பேய்ப் பிறவியர் –
உலகத்தவர்க்கு ஞானியர் பேய்ப் பிறவியர் பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும் -என்றார் குலசேகரப் பெருமாள் –
உலகத்தவர் சொல்லும் பேய்ப் பிறவியை நீக்கல் பொருட்டு மேலும் பூரியர் என்று கூறினார் என்க –
இனி விட்டு ஒழிக்க வேண்டியவரை பற்றிப் பேசுதலானும் ஞானியாகிய அமுதனார் பேச்சாதலானும்-தானே விளங்காதோ -எனின்
-அப் பிறப்பின் கண் உள்ள நோவு மிகுதியை நன்கு புலப் படுத்ததற்கு மேலும்
பூரியர் என்றார் என்க -ஊறி -தோஷம் -அதாவது அஹங்காரம் மமகாரம் முதலிய பொல்லாங்கு –
இனி பூரியரோடு உள்ள சுற்றம் புலத்தி என்றாலே போதுமாய் இருக்க பேய்ப் பிறவிப் பூரியர் என்று -விசேடித்தது ஏன்-என்னில் –
தோஷம் சேர்க்கையால் வந்த தன்று பிறவிக் குணம் –
உபதேசாதிகளால் நீங்காது என்று தோஷத்தின் கொடுமை காட்டுவதற்காக அங்கன் விசேடித்தார் என்க –
இங்கே -ப்ரக்ருதிம் யாந்தி பூதானி நிக்ரஹா கிம் கரிஷ்யதி -உயிர் இனங்கள் தம் ஸ்வபாவத்துக்கு ஏற்ப -நடப்பன –
சாஸ்த்ரத்தால் தடுப்பது என்கண் பயன் பெறும் – என்னும் கீதா வசனம் நினைக தகும் –
நல்லார் தொடர்பினும் பொல்லார் தொடர்பு அறுதல் சிறப்பு உறுதலின் அது முன்னர்க் கூறப் பட்டது –
பூரியரை திருத்த ஒண்ணாத நிலையில் அவர்கள் தொடர்பினை நீக்கி விலக்குவதே நல்லது அன்றோ –
நெருப்பு பற்றிய இடத்தில் அவிக்க ஒண்ணாத போது அதனில் அகப்பட்டோரை அதனின் நின்றும் -விலக்கித் தப்புவிப்பதன்றோ முதல் கடமை –
பொரு அரும் சீர் –
உலகை உய்விப்பதற்கு எம்பெருமானார் இடம் அமைந்த கருணை முதலிய குணங்கள் ஒப்பற்றன -என்கிறார் –
எம்பெருமான் இடம் உள்ள கருணை குதலியன அவன் பால் உள்ள ஸ்வா தந்த்ர்யத்தால் தலை எடுக்காது-அடங்கி நிற்பனவே உள்ளன -பிராட்டியின் இடம் உள்ளவையோ எம்பெருமான் வாயிலாக உய்விப்பவனவாய் உள்ளன –
எம்பெருமானார் இடம் உள்ளவையோ என்றும் தலை தூக்கி நின்று நேரே உய்விப்பனவாய் உள்ளன –
ஆதலின் அவை ஒப்பற்றவை யாயின -உத்தாரக ஆசார்யர் அல்லரோ எம்பெருமானார் –
ஆரியன் இச் சொல்லுக்கு –சமதிகத சர்வ சாஸ்த்ரராய் –சாஸ்திரம் அனைத்தும் நன்கு அறிந்தவராய்–என்று உரை அருளினார் பெரிய ஜீயர்
அதற்க்கு அடி -அநார்ய ஜூஷ்ட மச்வர்க்யம்-என்னும் இடத்தில் கீதா பாஷ்யத்தில்-ஆர்ய பதத்துக்கு வித்வான் -என்று வியாக்யானம் செய்யப் பட்டு இருக்கிறது –
ஆர்ய என்னும் சொல் வித்வான் என்னும் பொருளை எங்கனம் தருகிறது என்பதை-தாத்பர்ய சந்த்ரிகையில் வேதாந்த தேசிகன் –
அதத்த் வேப்யோ தூராத்யாதா புத்தி ஏஷாம் தே ஆர்யா -தத்துவம் அல்லாதவைகளில் நின்றும்-தூர விலகின புத்தி உள்ளவர்கள் ஆர்யர்கள் -என்று விளககித் தந்துள்ளார் –
சாஸ்த்ரங்களில் சொன்ன தத்துவத்தில் ஊன்றி –அல்லாதவற்றில் புத்தியை செலுத்தாத தத்துவ தர்சிகள் ஆர்யர் என்றது ஆயிற்று
செம்மை
நேர்மை –
ஆர்ஜவம் என்பர் வட நூலார் அதாவது-நினைவும் சொல்லும் செயலும் வேறுபட்டு வழி விலகிப் போனால் அவர்களை கை விடாது அவர்கள்
போம் வழியிலே தன்னை அமைத்து அவர்களோடு பரிமாறும் தன்மை ஆகவுமாம் –
நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவார்களைப் போலே தன்னை அவர்களுக்கு ஈடாக-அமைத்து பரிமாறும் -..என்பது நீர் புரை வண்ணன் -என்னும்
ஆழ்வார் ஸ்ரீ சூக்தியை-கருத்தில் கொண்ட ஈடு வியாக்யானம் -அது இங்கு அனுசந்திக்க தக்கது –
பொரு வரும் சீர் என்னும் இடத்தில் செம்மை அடங்குமாயினும் சிறப்பு பற்றி இது-தனித்து கூறப் பட்டதுஎன்று உணர்க
இராமானுச முனிக்கு அன்பு செய்யும் சீரிய பேறு-அன்பு செய்கையே பேறு–அன்பு எம்பெருமான் விஷயத்திலே யாதலின் பேறாம்
எம்பெருமானார் விஷயத்திலான போதோ சீரிய பேறு ஆகிறது என்க —
பேறு உடையார் அடிக் கீழ் என்னை சேர்த்ததற்கு சீரிய பேறு உடையார் ஆழ்வான்
அவர் அடிக் கீழ் சேர்த்தல் -அவரை ஆஸ்ரயிக்கும் படி செய்தல்
இனி பேறு உடையார் என்று இராமானுசன் அடியார் எல்லோரையும் சொன்னலுமாம்-
அடிக் கீழ் சேர்ந்த பேருதவிக்கு பொருத்தமாக நெஞ்சின் அடிக் கீழ் பணிகிறார் அமுதனார் என்க
நம் ஆழ்வார் தம்முடைய முந்துற்ற நெஞ்சை -எம்மோடு நீ கூடி இயற்றுவாய் -என்று -தம்மையும் கூட்டிக் கொண்டு போது வேணும் என்கிறார் –
அமுதனாரோ தம்மைக் கூட்டிக் கொண்டு சரம பர்வத்தின் எல்லையில் சேர்த்து விட்டதாகவே கூறுகிறார் –
பெரிய ஜீயர் யதிராஜ விம்சதியில் –
வாசார்யா தீந்திர -மனவா வபுஷாச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் -பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம் பாதா நுசிந்தன பரஸ் சத்தம் பவேயம் –
யதீந்த்ரரே மனம் வாக்கு உடல் இம் மூன்றினாலும் உம திருவடித் தாமரை இரண்டினையும் -பற்றின குருக்களான கூரத் ஆழ்வான்
திருக் குருகை பிரான் பிள்ளான் முதலிய பூர்வாசார்யர்கள் உடைய திருவடிகளை இடைவிடாது-சிந்திப்பதில் ஈடுபாடு உடையவனாக கடவேன் -என்று அமுதனாற்கு நெஞ்சு தந்த வாய்ப்பினை-எம்பெருமானார் இடமே பிரார்த்திக்கிறார்-

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தால் ஜல்பித்தல் –
தாழ்ந்த நெஞ்சு உயர்ந்த பேர் இயல்பு பெற்றதே என்கிறார் இதில்
– நெஞ்சை தொழுகிறார் மூன்றாவது பாசுரத்தால் -/
முதலில் சிஷ்யனுக்கு உபதேசித்து -குரு சிஷ்ய பாவம்
அடுத்து எதிர் கொண்டு மீது அளிப்ப போல் சிஷ்யரை கண்டு உகந்து
மூன்றாவது தசையில்-இந்த பாசுரத்தில் -வணங்குகிறார்–
-ராமானுச முனிக்கு அன்பு செய்யும் சீரிய பேறு உடையார் -கூரத் ஆழ்வானை–சேர்த்து வைத்த பேர் இயல்வுக்கு-வெற்று அரசு எம்பி  எய்தி வீற்று அரசு எனக்கு அளித்த நெஞ்சு என்றபடி -நெஞ்சு ராமானுஜர் இடம் சேர்ந்து அடியேனை கூரத்   ஆழ்வான் திருவடியில் சேர்த்ததே –
–பேர் இயல்– உயர்ந்த இயல்பு-வள்ளன்மை-இங்கு என் நெஞ்சே -சொல்லாமல் -சம்பந்தம் -கீழே சொல்லவில்லை ஒதுக்கி வைத்து உபதேசம் / இரண்டாவதில் சம்பந்தம் கொண்டாடி -/ மூன்றாவதில் அதன் நிலை உத்க்ருஷ்டம் -கண்ணபுரம் தொழும் பிள்ளை அன்றோ போலே –
-பிரதம பர்வ நிஷ்ட்டை ஆழ்வார்களுக்கு
இங்கு ராமனுஷ முனிக்கு அன்பு செய்யும் சீரிய பேறு உடையார் அடி கீழ் என்னை சேர்த்த தற்கே-என்று சரம பர்வ நிஷ்டை
-பாகவத சமாசம் அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய்-என்று விண்ணப்பம் செய்தார் தொண்டர் அடி பொடி ஆழ்வார்
அடியார்க்கு என்னை ஆட் படுத்திய விமலன் .-திரு பாண் ஆழ்வார் முதலிலே க்ருதக்ஜை அருளி –
ப்ராக்ருதரோட்டை சம்பந்தத்தை நீக்கி எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்கள்-திருவடிகளிலே சேர்த்த உபகாரத்துக்கு நெஞ்சே !உன்னை வணங்கினேன் என்கிறார் .
ஆழ்வான் சம்பந்தம் பெற்ற பேற்றால் அருளுகிறார் .
பேர் இயல்நெஞ்சே -பெரிய ஸ்வாபம் உடைய மனசே
பூரியர் -பொல்லாங்கு புலத்தி -நீக்கி
சீர்- அரும் சேர்- பொரு அரும் சீர்-பொருத்தமான ஒப்பு சொல்ல முடியாத ஆரியர்
-சாஸ்திரங்கள் அறிந்தவர் செம்மை- ஆர்ஜவம் நேர்மை ஆஸ்ரிதரின் கவ்டில்யம் பார்த்து-கை விடாமல் அவர்களுக்கு ஈடாக தம்மை அமைத்து பரிமாறும் ஆர்ஜவ குணம்..
அன்பு செய்யும் சீரிய பேறு-பரம புருஷார்த்தம் -கொண்டவர் – நெஞ்சம் எம்பெருமானாரின் சீலம் அனுபவிக்க அபிநிவேசம்
வெற்று அரசு எய்தி வீட்டு அரசு எனக்கு கொடுத்ததே –வாலி சொன்னால் போல..உயர்ந்த இடம் அளித்தது.
.மனசால் நன்றி-மனசுக்கே நன்றி.. நெஞ்சினாரின் காலில் விழுந்தார்.
.சீல குணத்தில் இழிந்து அன்பால் உன் ஓட்டை சம்பந்தமே காரணமாக -ததீய பர்யந்தமாக சேர்த்தே.
. வண்மை..பேய் பிறவி-தீய பிறவி -அசுர வர்க்கத்தில் பிறந்து -நடத்தையால் நாம் எல்லாம் அசுரர்கள் போல் தானே
..சாஸ்திர படி நடக்காதவர்கள் ..பூரியர் -பொல்லாங்கு /இரண்டும்-மகா ஞானியருக்கும் பேய் சப்தம் உண்டே.
.பக்தி ஆவேசத்தாலே என்பதால் பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை போல.
.வாழும் சோம்பரை உகத்தி போலும் -சப்தம் சேர்த்தல் போல –பேயரே எனக்கு யாவரும் யானும் அவருக்கு பேயரே .
.சம்பந்தம் விலக்கி/பூரியர் மட்டுமே போதும்-பூரி தனம் வந்த விதம் காட்ட ஜன்ம சித்தம் பிறவியிலே வந்த பொல்லாங்கு..
–ஸ்ரீ வத்ச – நித்ய ஸ்ரீ-மண்டோதரி-பரமாத்மா வை -சதுஷ்லோகி மூலம் சொல்ல-
திரு மரு மார்பனை என் சிந்தையில்
–.கூழ் ஆட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவில் ஓட்டோம் –
-வாழ ஆட் பட்டு உள்ளீரேல்- தேட வேண்டுமே
-அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம் .விலக்கியே நல்லத்தில் சேர வேண்டும் –
.புலத்தல்-நீக்குதல் புலர்த்தி-என்றும் சொல்வார்..
ஒப்புமை -சொல்ல முடியாத கல்யாண குணங்கள்
அகிஞ்சன அத்புத அக்லிஷ்டம்–நிரூபித்து சொல்ல முடியாத கல்யாண குணங்கள்
ஆரியன்-சகல சாஸ்த்ர உணர்ந்தவர்..பொரு அரும் சீர் ஆரியன்.
ஜகத்குரு இவர் இடம் தான் இராமனுசன் சப்தம் சேரும்.
பகவான் சப்தம் அவன் இடம் மட்டும் லஷ்மணன் பரதன் சத்ருக்னன்
-பெரிய பிராட்டியாரையும் பெரிய பெருமாளையும் விலக்குகிறார்
-அவனை போல் ஸ்வா தந்த்ர்யம் இல்லை அவள் அவனை எதிர் பார்க்கணும்..
இவருக்கு இந்த குற்றம் இல்லையே
சகல சேதனருக்கும் ஸ்வாமி இவர் தானே
திரு வேங்கடத்தானுக்கும் -ஜகதாச்சர்யன் -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த்தான்
ஆரியன்-ஆசார்யன் ஆரியன்-வித்வான் செம்மை கரண த்ரயம் ஒன்றி-
வேற மருந்து வேண்டாம்- நேர்மை-பொரு அரும் சீர்-தனியாக செம்மை ஆரியன் சொல்ல காரணம் தனி சிறப்பு தோற்ற
.. சாஸ்த்ர அர்த்தம் தெரிந்தும் ,அனுஷ்டித்தும் உபதேசித்தும் நீர் புரை வண்ணன்
-எங்கும் புகும் நீர் போலே -அனைவர் உடன் கூடும் சீலம்.
.முனிக்கு- மனனம் பண்ணி கொண்டு இருக்கிறார்
அக்லிஷ்ட ஞான வைக்ராய ராசேயே –
செம்மை ஆர்ஜவம்
ராமாநுஜாய திவ்ய சரிதை ஆ–ச்சார்யார்
புண்யாம்சா போக விகாசாயாம் –சாது பரித்ராணாம் –
பாபத்வந்த ஷயாயச -துஷ்ட
ஸ்ரீ மான் -தர்ம சமஸ்தானம் அர்த்தம் கைங்கர்ய ஸ்ரீ மத்வம்
மனனம் பண்ணும் முனி -பாப கூட்டங்கள் விலக ராமானுஜ திவாகரன்.
அவதார பிரயோஜனமே அமுதனாரை கூரத் ஆழ்வான் இடம் சேர்பதற்கே
–சீரிய பேறு உடையார் ராமானுஜர் திருவடி சேர்ந்த சீர்மை.
ஆழ்வான் முதலானவர்கள் அடி கீழ் என்னை சேர்த்தற்கே
மனசுக்கு நான் உபதேசிக்க வேண்டி இருக்க தானே புருஷ காரம் பண்ணி சேர்ததற்கு-எத்தை என்று -தேடி பார்த்தால் -ஒன்றும் இல்லை
-கண்டேன் சீதை- என்ற திருவடிக்கு பெருமாள் ஆலிங்கனம் பண்ணி-இரண்டு உயிரை ரட்ஷிததர்க்கு ஒரு உயிர் தானே கொடுக்க முடிந்தது
.அடி பணிந்தேன் உன்னை தலை அல்லால் கைம்மாறு இல்லை-–வருக என்று மட கிளியை கை கூப்பி போல.–
வாக்கும் மனசும் காயமும் ஓன்று சேர்ந்து ராமானுஜர் அடி கீழ் இருத்தும் நன்றிக்கு வணங்குகிறார்
ஆசார்யன் செய்த நன்றிக்கு பிரத் உபகாரம் செய்ய நான்கு விபூதிகளும் இரண்டு பிரமமும் வேண்டுமே —முடியாமல் வணங்குகிறார் இதில்-

————————————————————-

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: