அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம் -2-கள்ளார் பொழில் தென் அரங்கன் இத்யாதி ..

பெரிய ஜீயருரை

என்னுடைய நெஞ்சானது எம்பெருமானாருடைய சீல குணம் ஒழிய-வேறு ஒன்றை நினையாதபடி யாயிற்று-–இது எனக்கு சித்தித்த பெரு விரகு ஒன்றும் அறிகிலேன் என்கிறார் –

கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத வன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே – 2-

மது மிக்க பொழிலை உடைத்தாய் –தென்--தர்சநீயமாய் இருந்துள்ள கோயிலிலே –கண் வளர்ந்து அருளுகையாலே –
அத் தேச சம்பந்தத்தை இட்டுத் தம்மை நிரூபிக்கலாம் படி இருக்கிற பெரிய பெருமாளுடைய விகாசாதிகளால் தாமரை போலே
போக்யமான திருவடிகளைத் தங்கள் மனசிலே ஒரு காலும் வையாதே –
சாஸ்திர வச்யமான ஜன்மத்திலே பிறந்து வைத்து நிர் பாக்யராய் இருக்கும் அவர்களை விட்டு அகன்று
திருக் குறையலூரை திரு அவதார ஸ்தலமாக உடையவராய் -திவ்ய பிரபந்த நிர்மாண முகத்தாலே லோக உபகரகாரகரான
திரு மங்கை ஆழ்வாரை உடைய திருவடிகளின் கீழ் விண்டு நீங்காத சிநேகத்தை உடையராய் இருந்துள்ள
எம்பெருமானார் உடைய நிரவதிகமான சீல குணத்தை ஒழிய என்னுடைய நெஞ்சானது-வேறு ஒன்றையும் சிந்திக்கிறது இல்லை –
விள்ளுதல்-நீங்குதல் / இயல்வு -விரகு-

குறை இல்லாத திரு மங்கை ஆழ்வார் என்றுமாம் –பாடியவாளன் துறை -குஹ்யதே ரங்க ராஜ்ஜிய தினே தினே -அரங்கம் என்றால் நரகமே புல் எழுந்து ஒழியுமே -நின்னோடும் ஐவரானோம் -பெருமாள் சீலம் –அரசு ஈந்தார் பெருமாள் இவரோ ஸ்ரீ வைகுந்தம் அருளி – மிக்க சீலம் -ஊமைக்கும் அருளி -திருமால் இரும்சோலை என்றேன் என்னே –நெஞ்சு நிறைய பேரேன் என்று புகுந்தான் -சொல்லுவோம் என்ற உறுதியால் இவருக்கு பேறு

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை

அவதாரிகை
கீழில் பாட்டில் -நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று தம்முடைய மனசோடு கூடி உபதேசித்த வாறே-மனசானது அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் பட்டு -அநந்ய சிந்தயந்தோமாம் -என்கிறபடியே-அவர் திருவடிகளை அனுபவித்துக் கொண்டு -தத் வ்யதிரிக்தமானவற்றை விரும்பாதே இருந்தது –இது என்ன ஆச்சர்யம் -என்கிறார் .

வியாக்யானம்
கள்ளார் பொழில் –
மது இருந்து ஒழுகின மா மலர் எல்லாம் -கொழும் கொடி முல்லையின் கொழு மலர் அணவிக் கூர்ந்தது –
குணதிசை மாருதும் இதுவோ -எழுந்தன மலர் அணைப் பள்ளி கொண்ட அன்னம் ஈர் பனி நனைந்த –
தமிரும் சிறகு உதறி -பைம்பொழில் கமுகின் மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது-மாருதம் இதுவோ -என்றும்
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் -என்றும்
பூகி கண்ட த்வய சசரசஸ் நிக்த நிரோபகண்ட ஆவிர் மோதாஸ் திமிதச குநா நுதி தப்ரம்மகோஷாம்-என்றும் சொல்லுகிறபடி
-மதுச்யந்தியான புஷ்ப விசேஷங்களால் வ்யாப்தங்களான உத்யானங்களாலே சூழப்பட்ட
தென்னரங்கன் –
அத்தாலே தர்சநீயமான திருவரங்கமே தனக்கு நிரூபகமாம்படி நித்ய வாசம் பண்ணுகிற ஸ்வாமி உடைய திருப்பதி – என்றபடி –
இவ்விடத்துக்கு இது முக்யமான திரு நாமம் -காணும் –
கமலப்பதங்கள்
கமலப்பதம் -தீர்த்த வாசகமாய் -பாவனமான -என்னுதல்-சம்சார தாபதப்தனுடைய ஸ்ரமஹரமான -என்னுதல் –
பாத கமலம் -என்னாதே முந்துற முன்னம் கமலம் என்றது -சர்வேஸ்வரன் திருவடிகளை சேவிக்கும் போது
பாவநத்வாதிகளுக்கு முன்பே போக்யதையைக் கண்டு முற்றூட்டாக அனுபவித்தவர் ஆகையாலே –
நெஞ்சில் கொள்ளா மனிசரை –
விசித்ரா தேக சம்பந்தி ரீச்வராய நிவேதிதும் பூர்வமே வக்ர்தா பிரம்மன் ஹஸ்த பாதாதி சாயுதா -என்கிறபடியே
அலாப்யலாபமாக பகவச் சரண கமல பரச் சரணத்திற்கு இட்டு பிறந்த மனுஷ்ய தேகத்தை பெற்றும் –
திருவடிகளை நெஞ்சில் கொள்ளாதே இருக்கிற -கர்ப்ப நிர்பாக்யர் கோஷ்டியில் -நின்றும்
நீங்கி
அகன்று – சர்வரும் ஸ்லாகிக்கும்படி -பாஹ்ய குத்ருஷ்டிகளை பராஜிதமாக பண்ணுவித்து குறையல் பிரான் –திருக் குறையலூரில் அவதரித்து
-திவ்ய பிரபந்த நிர்மாணத் தாலும் -திரு அத்யயனத்துக்கு-ஏகாதசியிலே திரு நாள் நடப்பித்த படியாலும் –
அவ்விடத்திலே பெருமாளுக்கு அரணாக திரு மதிளை-நிர்மாணம் பண்ணி வைத்த படியாலும் -ருத்ர பஷபாதிகளான குத்ருஷ்டிகளுடன் தர்க்கித்து
அவர்களை-ஜெயித்து -அவர்களாலே பழிக்கப் பட்ட திவ்ய தேசங்களை நிர்வஹித்த படியாலும் -இப்படிகளாலே-உபகாரகரான திரு மங்கை ஆழ்வார் உடைய –
இவ்விடத்திலே இன்னும் ஒரு யோஜனையும் உண்டு –
குறையல் பிரான் -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்கிறபடியே ஹேய பிரத்யநீகனான கோவிந்தன் –
கோவர்த்த நோதாரணம் இந்திரன் கோவிந்த பட்டாபிஷேகம் பண்ணினவாறே பண்ணின போது –
கோப கோபி ஜனங்களை ரஷித்த உபகாரகன் -அந்த அவதாரத்திலே பூதனா சகட யமளார்ஜுன வரிஷ்ட
ப்ரலம்ப தேனுக காளிய கேசி குவலயாபீட சாணூர கம்சாதிகளை நிரசித்து -ஸ்வ ஆஸ்ரிதர்களான
பாண்டவர்களுக்கு தூத்ய சாரத்யங்களை பண்ணி -தத்வ உபதேசம் பண்ணியும் பண்ணியும் -இப்படி
நிகில மனுஜ மநோ நயன ஹாரி திவ்ய செஷ்டிதங்களை பண்ணின உபகாரகன் –
இதில் சரம ஸ்லோகத்தை உபதேசிக்கை உபகாரங்களில் பிரதானம்
இப்படி ஒரு அர்த்த விசேஷம் தோன்றினாலும் நம் ஆசார்யர்கள் திரு மங்கை மன்னன் விஷயமாக
அருளிச் செய்கையாலே –பேசிற்றே பேசுகையே அவர்களுக்கு ஏற்றம் என்று முதல் சொன்ன-பொருளே சங்கதமாக கடவது
அடிக்கீழ்
திரு மங்கை ஆழ்வார் உடைய திருவடிகளின் கீழே –
விள்ளாத அன்பன் –
இவ் ஆழ்வார் பிரதம பர்வ நிஷ்டர் ஆகையாலே -அணி பொழில் திருவரங்கத்து அம்மானை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பர்
-இவ் எம்பெருமானார் சரம பர்வத்தில் ஊற்றமுடையவர் ஆகையாலே அவ் ஆழ்வாருடைய-திருவடிகளிலே -ஒருக்காலும் விடாதே சக்தமான பக்தியை உடையராய் இருப்பர் .
விள்ளுதல் -நீங்குதல் –அன்பு -பக்தி –
இராமானுசன்
பூர்வ அவதாரத்திலே ராம அனுவர்த்தனம் பண்ணின வாசனை இப்போதும் அநுவர்த்திக்கையாலே
இதுக்கு சரம பர்வமான இதிலே ஈடுபட்டார் காணும் –
மிக்க சீலமல்லால் –
தாம் மகானுபவராய் இருந்து வைத்தும் -என்போலாம் மந்த மதிகளோடே -புரையறக் கலந்து
பரிமாறின சீல குணம் ஒன்றிலே ஈடுபட்டு -அது ஒழிய வேறு ஒன்றிலும் போக மாட்டாது
உள்ளுதல் -சிந்தித்தல்
என் நெஞ்சு
என் மனசு -என்னாலே உபதேசிக்கப் பட்ட நெஞ்சு
ஓன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே
என்ன ஆசார்யம்-இப்படி ப்ரவணனாய் ஆகுகைக்கு விரகு ஒன்றும் அறிகிலேன்
எனக்கு –
பகு ஜன்மங்கள் தன்னில் தபோ ஜ்ஞான சமாதிகளை பண்ண வேண்டி இருக்க -அங்கன் இன்றிக்கே
சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று அத்யாவாஸ்யம் மாத்ரம் பண்ணின படி –எனக்கு –
உற்ற -சித்தித்த
பேர் இயல்வே -சமஸ்த உபாயங்களை காட்டிலும் -பெரியதாய் விலஷணமான உபாய விசேஷம் –
ஓன்று அறியேன் –
எத்தாலே இந்த சொல் சேர்த்தி லபித்தது –நான் ஒன்றும் அறிகிலேன் –
முந்துற்ற நெஞ்சே -நீ அறிந்தே ஆகில் சொல்லிக் காண்-
நிர்ஹேதுகமாக சித்தித்த ஒன்றாய் ஆய்த்து-இயல்வு -விரகு –

————————————————————————–

அமுது விருந்து

.அவதாரிகை –

நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்றதும் என்நெஞ்சு எம்பெருமானாரது பழகும் தன்மையில்-மூழ்கி -சீல குணத்தில் ஈடுபட்டு
வேறு ஒன்றையும் நினைக்க கில்லாததாயிற்று –இச் சீரிய நிலை எய்துதற்கு-காரணம் ஏதும் தெரிய வில்லை என்கிறார் –

பத உரை –

கள் ஆர் -தேன் நிறைந்த
பொழில் -தோட்டங்களை உடைய
அரங்கன் -திரு வரங்கத்து எம்பெருமானுடைய
கமலப் பதங்கள் -தாமரை போன்ற திருவடிகளை
நெஞ்சில் -தம் உள்ளத்தில்
கொள்ளா -வைத்துக் கொள்ளா த -நினையாத
மனிசரை -மாந்தரை
நீங்கி -விட்டு விலகி
குறையல்-திருக் குறையலூர் என்னும் ஊரின் கண் அவதரிதவராய்
பிரான்-உபகாரம் புரிபவரான திரு மங்கை ஆழ்வார் உடைய
அடிக் கீழ் -திருவடிகளின் கீழே
விள்ளாத -விட்டு நீங்காத
அன்பன் -பக்தியை உடையரான
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
மிக்க -மிகுந்த
சீலமல்லால்-சீல குணத்தை தவிர
என் நெஞ்சு -எனது மனம்
உள்ளாது -வேறு ஒன்றை நினையாது
எனக்கு உற்ற -எனக்கு நேர்ந்த
பேர் இயல்வு -பெரிய சாதனம் -வழி -எது
ஓன்று-ஒன்றையும்
அறியேன் -தெரிந்து கொள்ள முடியாதவனாய் இருக்கிறேன்

விரிவுரை

முந்தின பாசுரத்தில் எம்பெருமானாருக்கு சிறப்பாக நம் ஆழ்வார் திருவடி சம்பந்தமும்
பல கலைகள் வல்ல நல்லவர்கள் சேர்க்கையும் சிறப்பாக பேசப்பட்டன –
இப்பாசுரத்தில் திருமங்கை ஆழ்வார் திருவடி சம்பந்தமும்-கல்லாத அல்லவர்கள் சேர்க்கை இல்லாமையும் பேசப்படுகின்றன –
முக்கியத் தன்மைபற்றி தமிழில் நான் மறைகளும் -ஆறங்கங்களும் முறையே அருளி செய்த-நம் ஆழ்வாரும் திரு மங்கை ஆழ்வாரும் முதன் முதலில் பேசப் படுகின்றனர் —
பின்னர் இவர்கள் உள்பட எல்லா ஆழ்வார்கள் உடையவும் சம்பந்தம் பேசப்படுகிறது –
ஆயின் அங்குத் தலைமை பற்றிக் கடைசியில் திருமங்கை ஆழ்வாரும்-அவர்க்கு பிறகு நம் ஆழ்வாரும் பேசப் படுகின்றனர்
பின்னர் மீண்டும் மீண்டும் நம் ஆழ்வார் உடைய திவ்ய பிரபந்தங்களிலும்
ஒருகால் திரு மங்கை ஆழ்வாருடைய பாடல்களிலும் எம்பெருமானாருக்கு உள்ள
ஈடுபாடும் புலமையும் போற்றப் படுகின்றன –

கள்ளார் பொழில்
திருவரங்கத்தில் உள்ள பொழில் களில் தேன் மிக்கு உள்ளது –கள் -தேன்
இத்தால் மிக இன்பம் பயப்ப என்றபடி -பொழில் விடை ஆற்றுவது என்றபடி
தேமருவு பொழில் -என்னும் திரு மங்கை மன்னன் திரு வாக்கு இங்கே நோக்குதற்கு உரியது –
வண்டு- தேன் உண்டு பொழிலில் மதம் கொண்டு உலாவுவது போலே
பிராட்டி யாகிற தேனை உண்டு அரங்கன் என்னும் தெய்வ வண்டு இப் பொழிலில்
மதம் கொண்டு உலாவி விளையாடுகிறது என்க –
நித்யம் த்வன் மதுபான மத்த மதுப-என்று பிராட்டியை தேனாக பட்டர் ஸ்ரீ குண ரத்ன கோசத்தில்-உருவகம் செய்து இருப்பதை நினைவு கூறக -அடியார்கட்கு போக்யதை மிகுந்து விடாய் தீர்க்கும்-பரம பதம் போன்றது அரங்கனுக்கு இப் பொழில் என்று உணர்க –

தென் அரங்கன் –
தென் -அழகு -பொழில் உடைத்தான அரங்கம் என்க –அரங்கன் -என்றது வேம்கடவன் என்பது போன்றது -திருப்பதியை முன்னிட்டே-குறிப்பிடும்படி-அதனை அபிமாநித்தல் பற்றி இங்கனம் குறிப்பிட்டார் -என்க –
விண்ணும் மண்ணும உடைமை-பற்றி உபய விபூதிகளும் உடையான் என்பதை பார்க்கிலும் -தென் அரங்கம் உடையான் என்பது-அவனுக்கு ஏற்றமாய் இருக்கிறது –

கமலப் பதங்கள் –
செவ்வி மணம் குளிர்ச்சி மலர்ச்சி-இவைகளால் தாமரை போன்றன திருவடிகள்
அரங்கன் -பதங்கள்- என்கையாலே ப்ராப்தமுமாய் / கமலப் பதங்கள் -என்கையாலே ப்ராப்யமுமான திருவடிகள் -என்றபடி
நெஞ்சில் கொள்ளா மனிசரை –
தங்கள் இதய தாமரையிலே -திருவடித் தாமரையை சேர்த்து வைத்து கொளாத மனிசர்களை –
மலரை மலரோடு சேர்த்து வைப்பது அன்றோ முறை –
ஹ்ருத் யபேஷயாது மனுஷ்யாதி காரத்வாத் -என்றபடி -தங்கள் இதயத்தில் கட்டை விரல்-அளவில் எழுந்து அருளி உள்ள பரமாத்வான அரங்கனை நினைந்து-ரெங்க யாத்ரை தினே தினே –
-அவன் திருவடிகளை அங்கனம் சேர்த்து வைத்து ரசித்து வாழ்வதற்கு உரிய மானிடராய்-பிறந்தும் -மானிடப் பிறவி யந்தோ மதிக்கிலர் -என்றபடி
அதனை மதிக்க தெரியாது-வீண் ஆக்குகிறார்களே என்னும் கழிவிரக்கம் தோற்றுகிறது –மனிசர் என்னும் சொல்லிலே இவ்விடத்தில்
-ந்ருதேக மாத்யம் ப்ரதி லப்ய துர லபம் ப்லவம் சூகல்யம் குரு கர்ண தாரம்-மயா நுகூலே ந நபஸ்வதேரித :புமான் பவாப்திம் ந தரேத்ச ஆத்மஹா –
எவன் முதன்மை வாய்ந்ததும் -கிடைத்தற்கு அரியதும் -திறமை வாய்ந்ததும் -குருவை
ஒடக்காரனாகக் கொண்டதுமான மானிட உடலாகிய ஓடத்தை பெற்று அனுகூலமாய் இருக்கும்-நான் -ஈஸ்வரன் -ஆகிற காற்றினாலே தூண்டப் பட்டவனாய் சம்சாரக் கடலை தாண்ட வில்லையோ-அவன் தற்கொலை செய்து கொண்டவன் ஆவான் -என்னும் ஸ்லோகம் நினைக்க தகும் –
ஆயாச ஸ்மரனே கோச்ய -என்றபடி கமலப் பதங்களை நெஞ்சில் கொள்வதில் என்ன ச்ரமம் –போக்யங்களும் உரியனவுமான பதங்களை நெஞ்சில் கொள்ளாது இருக்கின்றனரே -என்னும்-கருத்துடன் -கமலப் பதங்கள் நெஞ்சில் கொள்ளா -என்கிறார்
வசந்தே வசந்தே -என்றபடி ஜ்யோதிர் யாகத்தை வசந்த காலம் தோறும் செய்வது போன்ற தன்றே –பல கால் நெஞ்சில் கொள்ள வேண்டாமே -ஒரு கால் கொண்டாலே போதுமே -அதுவும் இல்லையே-என்னும் கருத்துடன் -நெஞ்சில் கொள்ளா -என்கிறார் -இனித்தல் பற்றி மீண்டும் மீண்டும் நினைத்தால்-தொடருமாயினும் பலித்தற்கு ஒரு காலே அமையும் -என்க
சக்ருத் ச்ம்ருதோபி கோவிந்த ந்ருனாம் ஜன்ம சதைச்சிதம் பாபராசிம் தஹத்யாக தூலராசிமி வாநல –கோவிந்தன் ஒரு கால் நினைக்கப் பட்டாலும் சேதனர் நூறு பிறவிகளில் சேர்த்த பாபக்-குவியலை நெருப்பு பஞ்சு குவியலைப் போலே
உடனே கொளுத்தி விடுகிறான் -என்னும் பிரமாணம் காண்க

நீங்கி –
விட்டு விலகி-நெடும் தகையை நினையாதார் நீசர் ஆதலின் விலகினார் -என்க
வரம் ஹூதவ ஹ்ஜ்வாலா பஞ்சராந்தர் வ்யவச்த்திதீ-ந ஸௌரி சிந்தா விமுக ஜன சம்வாச வைசசம் –
கொழுந்து விட்டு எரியும் நெருப்புக் கூண்டுக்குள் இருப்பது நல்லது –
கண்ணன் பால் சிந்தனையை செலுத்தாத மனிசரோடு வாசம் செய்யும் கொடுமை நல்லது அன்று –என்றபடி எம்பெருமான் இடம் நெஞ்சு செலுத்தாதவர் பக்கல் இருப்பது தாங்க ஒணா வெப்பம்-விளைத்தலின் விலகினார் -என்க
பன்னரும் கொடு மனப்பாவி பாடிரேன்-என்று பரதன் இராமன் பால் பரிவு நீங்கிக் கொடிய-மனம் படைத்த பெற்ற தாயான கைகேயியின் பக்கல் இருக்க மாட்டாது –
துன்னரும் துயர் கெடத் தூய கோசலை பொன்னடி தொழப் போனதாகக் கம்பன்-கூறியது நினைவிற்கு வருகிறது –

குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பன்
பரதன் கைகேயியை நீங்கிக் கோசலை பொன்னடி தொழுதது போலே-எம்பெருமானாரும் அரங்கன் கமலப் பதங்களை நெஞ்சில் கொள்ளா மனிசரை நீங்கிக்
குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பை செலுத்தினார் -என்க
குறையல்-திருமங்கைஆழ்வார் திரு அவதார ஸ்தலம்
பிரான் –உபகரிப்பவர் என்று ஆசார்யர்கள் வியாக்யானம் செய்கின்றனர் –
பிரமாணமான நம் ஆழ்வார் உடைய நான்மறைக்கும் அரணாக தம் திவ்ய பிரபந்தங்கள் ஆகிற ஆறு-அங்கங்களை அமைத்தும் -பிரமேயனான தென் அரங்கனுக்கு அரணாக திரு மதிள்-அமைத்தும் காத்துத் திரு மங்கை மன்னன் உலகிற்கு பேர் உபகாரம் புரிந்து இருப்பது-இங்கு உணரத் தக்கது –
விள்ளாத -நீங்காத -இனி விண்டு போகாத -அதாவது முழுமையான -எனவுமாம்-
பரி பூரணமான என்றபடி-
குறைகள் இல்லாத ஆழ்வார் -திவ்யதேசங்கள் விடாமல் -நான்கு கவிகள் -மதிள் கைங்கர்யம்
-வாள் வீசி படித்துறை -நம்போல்வாருக்கும் -உஜ்ஜீவிக்க அருளிய பிரான் –
அன்பு -பக்தி
அடிக் கீழ் விள்ளாத அன்பு -அடிகளின் கீழே அகப்பட்டும் விண்டு போகாத பக்தி
இராமானுசன்
இராம பிரானுக்கும் குறையல் பிரானுக்கும் தென் அரங்கன் கமலப் பதங்கள்
கீழ் விள்ளாத அன்பு -ராமானுசனுக்கோ-லஷ்மண னுக்கோ -இராம பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு –
இவ் இராமானுசக்கோ குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு-
திருநகரியில் இன்றும் திருமங்கை ஆழ்வார் அடிக்கீழ் எம்பெருமானாரை சேவிக்கிறோமே

மிக்க சீலம் –
உயர்ந்தோர் தாழ்ந்தோர் இடம் வேற்றுமை ஏதும் இன்றி கலந்து பழகும் பழக்கம் சீலம் -எனப்படும் –
மிக்க உயர்ந்த இராமானுசன் மிக்க தாழ்ந்த என்னிடம் நெருங்கிப் பழகுவது மிக்க சீலம் அன்றோ –என்கிறார் அமுதனார் –
மத்த பிரத்யவர கச்சித் நாஸ்தி சுக்ரீவ சந்நிதவ் -என்னை விடக்-கீழ்ப்பட்டவன் ஒருவன் சுக்ரீவன் இடத்தில் இல்லை -என்று-ஆஞ்சநேயன் சொல்வது போலே-சொல்லுகிறார் அமுதனார் –
பெருமாளுக்கு சீலம் -அவன் தம்பிக்கு அரசு இந்த -இவரோ மாக வைகுந்தம் அருளிய மிக்க சீலம் அன்றோ –

ஓன்று
இச் சொல் முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் கொள்ளலாம்படி அமைந்து உள்ளது –
மிக்க சீலம் அல்லால் ஓன்று உள்ளாது என்றும் கூட்டிப் பொருள் கொள்க
சீலம் அல்லால் மற்று ஒன்றை என் நெஞ்சு உள்ளாது
சீல குணம் ஒன்றிலுமே என் நெஞ்சு ஈடுபட்டு உள்ளது என்றது ஆயிற்று
என் நெஞ்சு உள்ளாது
உள்ளுதல் -சிந்தித்தல்
உள்ளுதலுக்கு எனக்கு கருவியாய் அமைந்த நெஞ்சு தானாகவே என்னை எதிர்பாராது சீல குணம்
ஒன்றை ஒழிய வேறு ஒன்றையும் சிந்திக்கிறது இல்லை -என்றபடி -கருவியை கர்தாவாக்கிச் சொல்கிறார் –
ஓன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வு –
எனக்கு உற்ற -இந்நிலை எனக்கு கிட்டின
பேர் இயல்வு -பெரிய உபகாரம்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன நெஞ்சு நிறைய பேரேன் என்று புகுந்தான் -இங்கே-சொல்லுவோம் என்ற யுக்தி மாத்திரத்துக்கே பெற்றார் அமுதனார்
ஓன்று -ஒன்றும்
உபாயம் ஒன்றும்
சீலம் அல்லால் வேறு ஓன்று உள்ளாமை எனக்குக் கிட்டின வழி ஒன்றும் அறியேன்
நான் கைக் கொண்ட வழி ஒன்றும் இல்லை என்றபடி –வரவாறு ஓன்று இல்லை வாழ்வு இனிது என்றது ஆயிற்று-எம்பெருமானாரே தம் சீல குணத்தினால் என் நெஞ்சைக் கட்டுப் படுத்தினார் என்பது கருத்து

————————————————————————–அடியேன் கேள்வி ஞானத்தால் ஜல்பித்தல் –

இரண்டாவது பாசுரத்தால் நெஞ்சு சேர்ந்ததே என்று உகந்து பாசுரம் அருளுகிறார் –
நெஞ்சாகிய  சிஷ்யனை உபதேசம் செய்தார் முதலில் முதலில்-நெஞ்சு இவர் பிராரத்த பின்பு திரு நாமம் சொல்ல –
தொழுது ஆடி-வண் த்வாராபதி மன்னனை சப்தம் கேட்டு -ஆடியது போலே –
அடுத்து – ஏற்ற கலங்கள் போல-சிஷ்யன் மேன்மேலும் அர்த்தங்கள் வர்ஷிக்க ஆனந்த படும் குரு போலே-ஆனந்தித்து -ஆழங்கால் படுகிறார் இதில்-
தொழுது எழு–தூது விடலாம்-நெஞ்சமே நல்லை நல்லை உன்னை பெற்றால்–மாதா பிதாக்கள் சொல் படி கேட்ட பிள்ளையை மடியில் வைத்து கொண்டாடுகிறார்-நித்ய யுக்த –கூடவே இருக்க விரும்பும் பக்தன் -ஸ்ரீ  கீதையில் இங்கு -விள்ளாத அன்பன் –
.நல்லை நல்லை இரட்டித்து. சொல்லி .நெஞ்சு பகவான் இடம் சேர்ந்தது–என் நெஞ்சினாறும் அங்கு ஒழிந்தார்- இனி யாரை கொண்டு உசாகோ
— நின் இடையேன் அல்ல என்று நீங்க….காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சம்-
கடல் கொண்ட வஸ்து திரும்பாதே..ராமன் பின் தசரதன் கண் போனதே
-காம்பீரத்தில் கடல் ஒப்பன் கடல் போன வஸ்து வாராது…கை விட்ட நெஞ்சுக்கு தூது விட–ஆழ்வார்கள் சேவிக்க விலை நெஞ்சை..பட்ஷி காலில் விழுந்தார் அரு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை..
நல்ல மீன் கவர்ந்து உண்ண தருவேன்-என்கிறார்
என் தலை மேல் கேளுமினோ தத்துவனை வர கூவினால்-தலை அல்லல் கைம்மாறு இல்லை ..-குயில் . கடகர்கள் -கை விட்ட வர்கள் காலில் விழவில்லை .
.அமுதனார் நெஞ்சு -உபதேசம் பெற்ற நன்றியால் கடகர் –சேர்த்து வைத்தால் -என் நெஞ்சு- பேர் இயல் நெஞ்சே-இங்கு நெஞ்சுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை.
.முதலில் நெஞ்சு ஒதுக்கி வைத்து உபதேசம்-அங்கே  நெஞ்சே சொல்லுவோம் என்றார் என் நெஞ்சே சொல்லவில்லையே-அடுத்து ராமானுஜர் திருவடி சேர்ந்ததால் என் நெஞ்சு.என்று சொந்தம் கொண்டாடுகிறார் இதில் –
இதில் என்னையும் . கண்ண புரம் கை தொழும் பிள்ளையை -வாழ்த்திய பரகால நாயகி அன்னை போலே-நீராட போதுவீர் -கிருஷ்ண சம்பந்தம் -உயர்வுடன் பேசுவார்கள்
முதலில் நீங்கியே பற்ற வேண்டும் என்பது-ஆழ்வாரும் வீடு மின் முற்றவும்–வீடு செய்து உம் உயிர்-வீடு உடையானிடை- வீடு செய்ம்மினே -என்றார்
தென் அரங்கன் -குறையல் பிரான் -திவ்ய தேசம் கொண்டே கொண்டாட்டம்
கொள்ளா மனிசரை நீங்கி -ராமானுசன் சீலம் அல்லால் உள்ளாத தன் நெஞ்சால் மகிழ்ந்து-இந்த  பெற்ற பேறு எதனால் -என்று அறியாமல் -விதி வாய்க்கின்று காப்பார் யார் -என்று-அருளும் ஆழ்வார் போலே எனக்கு உற்ற பேர் இயலவே என்கிறார் அமுதனார் இங்கு –

——————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: