அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-1 -பூ மன்னு மாது இத்யாதி —

பெரிய ஜீயர் அருளி செய்த உரை

முதல் பாசுரம்

தம் திரு உள்ளத்தை குறித்து -எம்பெருமானார் உடைய திருவடிகளை நாம் பொருந்தி
வாழும் படியாக அவருடைய திரு நாமங்களை சொல்லுவோம் வா -என்கிறார்

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

பத்மேஸ்த்திதாம்-ஸ்ரீ ஸூ -என்கிறபடியே தாமரைப் பூவை இருப்பிடமாக வுடைய பெரிய பிராட்டியார்
இந்த போக்யதையைக் கண்ட பின்பு அதை யுபேஷித்து-இறையும் அகலகில்லேன் – திருவாய் மொழி -6 10-10 – -என்று
நித்ய வாசம் பண்ணும் திரு மார்பை வுடையவனுடைய கல்யாண குணங்களால் சம்ருத்தமாய்-இருந்துள்ள திரு வாய் மொழியிலே –
கவியமுதம் நுகர்ச்சி யுறுமோ முழுதும் -திருவாய் மொழி -8-10 5- -என்னும்படி திரு உள்ளத்தில்
ஊற்றத்தை  உடையரான ஆழ்வார் உடைய திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தவராய் –
அநேக சாஸ்த்ரங்களை அதிகரிக்க செய்தேயும்  -தத்வ ஹித புருஷார்த்த நிர்ணயம் பண்ண-அறியாதே ஒன்றிலும் ஒரு நிலை அற்று இருக்கும் அவர்கள் –
அவற்றின் உடைய யாதாம்ய வேத நத்தாலே ஸூ ப்ரதிஷ்டிதராம்படியாக வந்து அவதரித்த-எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை -இதுவே ப்ராப்யம் –
என்று அறிந்த நாம்-பொருந்தி வாழும்படியாக நெஞ்சே அவருடைய திரு நாமங்களை பேசுவோம்
தாம் மன்ன என்றது தாங்களே வந்து ஆஸ்ரயிக்கும் படி என்றுமாம்
நாம் -என்றது அநாதி காலம் இதர விஷயங்களின் கால் கடையில் துவண்ட நாம் என்னவுமாம்
மன்னுதல் -பொருந்த்தமும் நிலைப்பாடும் –

வந்த -ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ பெரும்பூதூர் -வந்த -அங்கு நின்றும் ஸ்ரீ ரெங்கம் வந்த -வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட -உய்ய ஒரே வழி உடையவர் திருவடி -இது கொண்டு ஸூ த்ர வாக்கியங்களை ஒருங்க விடுவார் -உயர்வற -வீடு -ஸ்ரீ பாஷ்யம் 21 பாசுரங்கள்-ச குணம் விக்ரஹ விசிஷ்டன் -பேத ஏவ தர்சனம் -சரீரா சரீர பாவம் நியாந்தா -சர்வ வ்யாபி -ஸூ ஆராதனம் போக்யன் -தன் பேறாக – -சார்வே -இறுதி 60 பாசுரங்கள் -அகில புவன –ஸ்ரீ நிவாஸே-அசேஷ சித்அசித் சேஷ ஸாயினே -மாறன் பொன்னடி -ராமானுஜர் –நாதமுனிகள் /மதுரகவி போல்வாரை பணிந்து உயந்த ராமானுஜர் -நீர் விட்டாலும் நான் விடேன் -மன்ன–வந்த /அபயம் சர்வ பூதேப்யம் விரதம் -ராமர் கோஷ்ட்டி -ராமானுஜர் கோஷ்ட்டி -நான் உம்மையும் கூட்டிப் போவேன் –ஆசை உடையார்க்கு எல்லாம்-நாம் -பற்றியது நான் -வாழ்வது நாம் –

பூ -மங்கள -சப்த அர்த்த சக்தி இங்கு -திருச்சந்த விருத்தம் பூ சப்த மாத்திரம் -பா மன்னு மாறன் -ஆழ்வார் தாமே ஊற்றம் உடையராய் -தன் சீர் யான் கற்று மொழி பாட்டோடும் கவி அமுதம் நுகர்ச்சி யுறுமோ முழுதுமே –என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் –
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -என்றும் அருளிச் செய்தார் இ றே

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

பிள்ளை அமுதனார் -தமக்கு ஆசார்ய பிரசாதத்தாலே -லப்தமாய் –மந்திர ரத்ன கண்ட த்வயார்த்த யாதாத்ம்ய ஜ்ஞான ரூபமாய் –
பரம ரகஸ்யமாய் இருந்துள்ள -அர்த்த விசேஷங்களை -ஏகஸ் ஸ்வா து ந புஞ் ஜீத -என்கிறபடியே கிண்ணத்தில் இழிவார்க்கு -துணை தேட்டமாமாப் போலே
எம்பெருமானருடைய கல்யாண குண சாகரத்திலே -இழிவதுக்கு துணைத் தேட்டமாய் –உபய விபூதியிலும் ஆராய்ந்தால்
நித்ய விபூதியில் உள்ள நித்ய சூரிகளும்  முக்தரும் -சதா பஸ்யந்தி -என்கிறபடியே -பரத்வத்தை முற்றூட்டாக அனுபவித்து -சாம கானம் பண்ணிக் கொண்டு களித்து
நோபஜன ஸ்மரன் நித சரீரம் -என்கிறபடியே -லீலா விபூதியிலே -கண் வையாதே-இருந்தார்கள் ஆகையாலும்
லீலா விபூதியில் உள்ள சம்சாரி ஜனங்கள் ப்ராக்ர்தத்வேன அஜ்ஞ்ஞர் ஆகையாலே
நந்தத்த்யுதித ஆதித்ய  நந்தன் த்யச்தமி தேரவவ் -என்றும்-
உண்டியே உடையே உகந்தோடும் இம் மண்டலம் -என்றும்
சொல்லுகிறபடியே உண்டு உடுத்து -புறமே புறமே யாடி -என்கிறபடி
லீலா விபூதியிலே -ஸௌரி சிந்தா விமுகராய் -விஷயாந்தரந்களிலே மண்டி இருக்கையாலும்
எம்பெருமானார் சம்பந்தம் உடைய ஜ்ஞாநாதிகர் எல்லாரும் -பாலே போல் சீர் -என்கிறபடியே
பரம போக்யமான அவருடைய கல்யாண குணங்களை -அனுபவித்து -காலாழும் நெஞ்சழியும்
இத்யாதிப் படியே அவ் அனுபவத்தில் ஆழம்கால் பட்டு -குமிழ் நீருண்டு நின்றார்கள் ஆகையாலும்
இந் நால்வரும்  துணை யாகாது ஒழிகை யாலே
தம்முடைய சுக துக்கங்களுக்கு எப்போதும் பொதுவாய் இருக்கிற   தம் மனசே துணையாக வேண்டும் என்று
திரு உள்ளம் பற்றி -அது தன்னையே சம்போதித்து சொல்லுகிறார் .

பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
பத்மேஸ்திதாம் -என்றும் -மலர் மேல் மங்கை என்றும் -அரவிந்த வாசிநீ-என்றும்
சொல்லுகிறபடியே -ஸௌ கந்த ஸௌ குமார்யங்களாலே -அத்யந்த போக்யமான தாமரைப் பூவின்
பரிமளம் தானே ஒரு வடிவு கொண்டாப் போலே -அதிலே அவதரித்த பெரிய பிராட்டியார்
ஸ்வயம் பத்மினி -என்கிற பேரை உடையளாய் -அவ்வீட்டின் போக்யதையாலே அத்தை விட மாட்டாதே
இருப்பிடமாக அதிலே இருந்து -அதுவே நிரூபகமாக சொல்லப் பட்ட பின்பு
சாஷான் மன்மத மன்மதமான -நாராயணன் தனக்கு பத்நியாக பரிணயித்து பரிஷ்வங்கம் பண்ணவே
அவன் திரு மார்பை அனுபவித்து -அந்த போக்யதையிலே ஈடு பட்டு நின்ற பின்பு -தாமரைப் பூவின்
போக்யதையும் அருவருத்து -ஒருக்காலும்  அத்தை ஸ்மரியாதே இறையும் அகலகில்லேன் -என்று
நித்ய வாசம் பண்ணப் படுகிற திருமார்வை உடையனான சர்வேஸ்வரனுடைய
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -என்று விசேஷ்ய பூதனான சர்வேஸ்வரனுடைய
நாம நிர்த்தேசம் பண்ணாதே -அமுதனார் விசேஷண பூதையான பெரிய பிராட்டியாரை
மாத்ரமே அருளிச் செய்தது -அகஸ்த்யப்ராதா – என்றால் போலே இருக்கிறது காணும்
அப்படியே இறே ச்ருதி ஸ்ம்ருதிகளிலும் -ச்ரத்தயா தேவோ தேவத்வமச்னுதே -என்றும்
அப்ரமேயஹிதத்தேஜோ யச்யாசாஜன காத்மஜா -என்றும் இவளை இட்டே அவனுடைய
அதிசயம் சொல்லப்படுகிறது -பிதுச்சத குண மாதா கௌரவேணா த்ரிச்யதே -என்று-பர்த்தாவுக்கு இப்படியே பிரபத்தி வுண்டாக வேண்டி இருக்கும் இறே

புகழ் மலிந்த பா-
உயர்வற உயர் நலம் உடையவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை-படர் பொருள் முழுவதும் ஆய் அவை அவை தொறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரன் -நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென -என்றும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று-நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும்
உலகமுண்ட பெருவாயா வுலப்பில் கீர்த்தி யம்மானே –என்றும்
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ-புணரேய் நின்ற  மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -என்றும்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண்ணுர்வில்-நீலார் கண்டத்தம்மானும்  நிறை நான்முகனும் இந்திரனும் -என்றும்
செந்தாமரைக்கண் செங்கனிவாய் நால் தோள் எந்தாய் எனது உயிரே -என்றும்
முனியே நான்முகனே முக்கண் அப்பா -என்றும்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ-சூழ்ந்து அதனில் பெரிய பர  நன் மலர் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ -என்றுதலைக் கட்டுகையாலே
உயர்வற -என்று தொடங்கி-உயர்ந்தே -என்னும் அளவும் -ஆதி மத்திய அவசானங்களிலே-ஒருபடிப்பட்ட கல்யாண குணங்களால் ஏற்பட்ட-பா
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை உள்ளபடி விசததமா வனுபவிக்க வனுபவிக்க-அது உள்ளடங்காமே – பக்தி பலாத்காரத்தாலே வந்ததானாலும் –
பாதபத்தோஷ ரசமச்தன் த்ரீலய சமன்வித -என்னுமாபோலே-நிர்ஹேதுக பகவத் விஷயீகாரத்தாலே-சர்வ லஷனோபேதமாய்-
கவியமுதம் -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் -தாமே ஸ்லாக்கிக்கும்படியான திருவாய் மொழியிலே
மன்னு
சர்வதா நிச்சலராய் இருந்துள்ள
மாறன்
அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன்-குழல் மலிய சொன்ன ஓர் ஆயிரம் இறே –
மாறன்
இது வாய்த்து பிரதம உபாதானமான திரு நாமம்
விநாசாய சதுஷ்க்ர்தாம் -என்னுமா போலே பாஹ்ய குத்ர்ஷ்டிகளை சிஷித்து
அவர்களுடைய  சம்சார நாசகர் ஆனவர்
மாறன்
அஞ்ஞானத்துக்கு மாரகர்
அன்றிக்கே
சாஷான் மன்மத மன்மத -என்கிறவனும் பிச்சேறி ஊமத்தங்காய்  தின்றவனைப் போலே
மின்னிடை மடவாரில் வ்யாமுக்தனாம் படி பண்ண வல்லதாய் பெண் பிள்ளைத் தனத்தையும்
ஊனில் வாழ் உயிரிலே ஒரு நீராக கலந்து வ்யாமுக்தனாம்படி பண்ண வல்ல ஜ்ஞாநாதிக்யத்தை-வுடையவர் ஆகையாலே -மாறன் -என்னவுமாம்
இப்படிப் பட்ட ஆழ்வாருடைய
அடி
ஆழ்வார் பர்யந்தம் அல்ல இவர் தம்முடைய ச்வாமித்வ அத்யாவசயம்
ஆக -தமக்கு நிருபாதிக ஸ்வாமி யானவன் -என்னுதல்
தம்மை வசீகரிக்கைக்கு மூலமானவன் என்னுதல் -இப்படிப் பட்ட திருவடிகளை
பணிந்து
ஆஸ்ரயித்து -ஸ்ரீ மத் தத்தங்கரி உகளம் ப்ரணமாமி மூர்த்த்னா -என்று ஆளவந்தார் அருளிச் செய்தது
அடியிலே இப்படி அருளிச் செய்கையாலே -இப் ப்ரபந்தம் சரம பர்வ நிஷ்டர் விஷயம் என்று  தோற்றுகிறது
உய்ந்தவன் -உஜ்ஜீவித்தவன்
இவருக்கு உஜ்ஜீவனம் அன்ன பாநாதிகளாலே அன்று காணும் .-ஆழ்வார் தம்முடைய திருவடிகளை-இவருக்கு படியாக விட்டுப் போந்தார் இறே
-அவ் ஆழ்வார் திருவடிகளைப் பணிந்த பின்பு இவர் அவை தன்னையே-அனுபவித்து போந்தார்
-ஆழ்வாருக்கும் இவர்க்கும் கால விப்ரக்ர்ஷ்டமானாலும் -முதலிலே ஆழ்வார் நாதமுனிகளுக்கு-உபதேசம் பண்ணும் போது -இவரை த்யானம் பண்ணி
-யஸ்வாப  காலே கருணா கரஸ் சந்  பவிஷ்யதாசார்யா வர ஸ்யரூபம்-சந்தர் சயாமாச மகானுபாவ தகாரி சூனு சரணம் பிரபத்யே -என்கிறபடியே
இவருடைய பவிஷ்யதாசார்யா விக்ரகத்தை ஸ்வப்ன முகேன நாதமுனிகளுக்கு கொடுத்திட்ட படியை
அபிமானித்து -பரகத ச்வீகாரத்தாலே  அவருக்கு ஆசார்யர் ஆகையாலே இவரும் அவ் ஆழ்வார் திருவடிகளைப் பற்றி
அவர் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்று
அத்யவசித்த பகவத் பிரபாவத்தை -ஸ்ரீ பாஷ்ய முகேன பிரகாசிப்பித்தது -வேங்கடாசல யாதவாசல ஸ்தலங்களை
குத்ருஷ்டி குஹ நாமுகேனி பதத பர பிரமண   சுரக்ரஹா விசஷனே   ஜயதி லஷ்மனோயமுனி-என்கிறபடியே
நிர்வகித்து -சகல திவ்ய தேசங்களையும் திருத்தி -இதுவே உஜ்ஜீவனமாய் இருக்கிறவர் -என்றபடி .
பல் கலையோர்
சகல சாஸ்திர பாரீணரான-கூரேச குருகேச கோவிந்த தாசரதி முதலான முதலிகளும் –
பிரத்யவச்தானம் பண்ணி – பிரசங்கித்த பின்பு -எம்பெருமானார் தம்முடைய விஷயீகாரத்தாலே
தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஞானத்தைப் பெற்ற -யாதவ பிரகாச யஜ்ஜமூர்த்யாதிகளும்
தாம்மன்ன
யதாவஸ்த்தித ஞானத்தினாலே சூப்ரதிஷ்டராம் படி .
மன்னுதல் -பொருத்தமும்  -நிலைப்பாடும்
வந்த
பரம பதத்தினின்றும் சர்வேஸ்வரன் உடைய நியமனத்தாலே எழுந்து அருளின
இராமானுசன்
இவர் சக்கரவர்த்தி திரு மகனை அனுசரித்து ஜனித்தார் காணும் -.அவன் -அபயம் சர்வ பூதேப்யோ
ததாம்யே தத் வ்ரதம் மம -என்று சர்வர்க்கும் அபாயப் பிரதானம் பண்ணினாப் போலே -இவரும்
மோஷ உபாயமான மந்த்ரத்தை பூரிதானம் பண்ணினார் இறே -இப்படிப் பட்ட எம்பெருமானார் உடைய
சரணாரவிந்தம்
அரவிந்தம் என்கிற மன்மத பானம் போலே தம்மை மோஹிப்பித்தவை யாகையாலே -சரணங்களுக்கு
அரவிந்தத்தைப் போலியாக சொல்கிறார் .-ஆஸ்ரிதற்கு பாவனத்வ போக்யதைகளாலே -ஏக ரூபமாய் இருக்கையாலே
ஏக வசன பிரயோகம் பண்ணுகிறார்
மன்னி
ஆஸ்ரயித்து -நிச்சலமாக -த்ரட அத்யாவச்யத்தை பண்ணி நாம் வாழ
நான் ஒருத்தனுமே ஆஸ்ரயிக்க -என்னுடைய சம்பந்தி சம்பந்திகள் எல்லாம்
உஜ்ஜீவிக்கும்படியாக
வாழ
ஸ்ரீ மதே ராமானுஜாய நாம -என்றபடி
நெஞ்சே
ஒரு மகா நிதி லாபத்தால் அந்தரங்கராய் இருப்பார்க்கு சொல்லுவார் லவ்கிகர்
அப்படியே தனக்கு அந்தரங்கமான மனசை சேவித்து தாம்பெற்ற பேற்றை சொல்லுவதாக சம்போதிக்கிறார்
சொல்லுவோம் அவன் நாமங்களே
நாம் இருவரும் கூடி அவன் திரு நாமங்களை சொல்லுவோம் –வாசா தர்ம மவாப்நுஹி-என்கிறார்
ஒரு உக்தி மாத்ரத்திலே பிராப்ய ப்ராபகங்கள் இரண்டும் -தர்ம பூதமான சரணார விந்தத்திலே
அத்திருநாமம் தானே நம்மைச் சேர்க்கும் -ரச்யமான பதார்த்தம் லபித்தால் –   .அன்யோன்யம்
ரசித்து கொண்டு அனுபவிக்கக் கடவோம் -என்றபடி
அவன் நாமங்களே
தேவு மற்று அறியேன் -என்று அநந்ய பரராய் கொண்டு அவருடைய திரு நாமங்களைச் சொல்லுவோம்
த்ரிவித  கரணங்களால் இல்லையாகிலும் -நாம சங்கீர்த்தனம் மாத்ரமே அமையும்
குரோர் நாம சதா ஜபேத் -என்னக் கடவது இறே
நெஞ்சே சொல்லுவோம் -என்றது தமக்கு உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்து  சேதன சமாதியாக சொல்லுகிறார் –
நசேத் ராமானுஜேத் ஏஷா  சதுரா சதுரஷரீ- காமஹச்தா ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த  மாத்ர்சா -என்றான் இறே ஆழ்வான்
வேதம் ஒரு நான்கினுள் உள் பொதிந்த மெய்ப் பொருளும் -கோதில் மனு முதல் கூறுவதும் -தீதில் சரணாகதி தந்த தன் இறைவன் தாளே
-அரணாகும் என்னும் அது -என்று-அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்தார் இறே
பூ மகள் கோன் தென்னரங்கன் பூம் கழற்கு பாதுகமாய்-தாம் மகிழும்  செல்வச் சடகோபர் தேமலர்தாட்கு  ஏய்ந்து
இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை வாய்ந்து எனது-நெஞ்சமே வாழ் -என்று இறே ஜீயரும் அருளிச் செய்தது –

————————————————————————–

அமுது விருந்து –

அவதாரிகை

எம்பெருமானார் திருவடிகளில் பொருந்தி நல் வாழ்வு பெறும்படி அவர் திரு நாமங்களை சொல்லுவோம் வா-என்று அமுதனார் தம் திரு உள்ளத்தை குறித்து அருளி செய்கிறார்

பத -உரை

பூ -தாமரைப் பூவிலே
மன்னு -தங்கிக் குடி இருக்கும்
மாது -பெண்மணியானபெரிய பிராட்டியார்
பொருந்திய -பொருந்தி வாழும்படியான அழகு படைத்த
மார்பன் -மார்பை உடையவன் ஆகிய ஸ்ரீ நிவாசனுடைய
புகழ்-புகழைத் தக்க நல் குணங்கள்
மலிந்த -நிறைந்த
பா -பாடல் ஆகிய திரு வாய் மொழியிலே
மன்னு -ஊற்றம் உள்ள
மாறன் -நம் ஆழ்வார் உடைய
அடி -திருவடிகளை
பணிந்து -பற்றி
உய்ந்தவன் -உய்வு பெற்றவரும்
பல் கலையோர் -பல கலை யும் -சாஸ்திரங்களையும் -கற்றவர்கள்
தாம் மன்ன -தாமாக சாஸ்த்ரங்களின் உண்மைப் பொருள்களில் நிலை நிற்கும் படி
வந்த -அவதாரம் செய்த
இராமானுசன் -எம்பெருமானாருடைய
சரணார விந்தம் -திருவடித் தாமரைகளை
நாம் மன்னி -நாம் பொருந்தி
வாழ -வாழும்படி
நெஞ்சே -மனமே
அவன் நாமங்கள் -அந்த எம்பெருமானருடைய திரு நாமங்களை
சொல்லுவோம் -பேசுவோம்

விழிப்புரை

இது காப்பு செய்யுள் -பூ என்று மங்கள சொல்லை முன்னர் வைத்து தொடங்குகிறது

பூ
பூ என்பது பொதுச் சொல்லாயினும் -தேவு என்பது திருமாலைக் குறிப்பது போலத்
தாமரை மலரைக் குறிக்கிறது -அம்மலரிலே மன்னி இருக்கும் மாது திரு மகள் என்க –
தாமரை வகையில் செந்தாமரையையே இங்குக் கருதுதல் வேண்டும் –
கருதவே வெண் தாமரையில் உள்ள கலை மகளிலும் வேறுபாடு காணலாம் –
தாமரையாள் என்னும் பெயர் திரு மகளுக்கே காரண இடுகுறிப் பெயராய் அமைந்து இருத்தல்
இங்கு உணரத் தக்கது-பத்மத்தில் இருப்பவள் என்று ஸ்ரீ ஸூக்தம் ஓதுவதும் காண்க

பொருந்திய மார்பன் –
பெண்டிர்க்கு புக்ககம் புகுந்த பின்னர் பிறந்தகம் பொருந்தாது அன்றோ –
பிராட்டிக்கும் புக்ககமாகிய மார்பகம் புகுந்த பின்னர் பிறந்தகமாகிய பூ பொருந்தாது ஆயிற்று –
பொருந்துதல் -கால் பாவி நிற்றல் –
மாதுக்கு புக்ககமே சொந்தமாய் பொருந்தி நிற்கும் இடம்
பிறந்தகமோ புக்ககம் புகும் அளவும் ஒதுங்கி தங்கும் இடமே என்பது தோன்ற –பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -என்னும் அழகு காண்க –
இங்கு -புக்கில மைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு -என்னும்-குறள் நோக்க தக்கது
-துச்சு-ஒதுக்கு -உடம்புகளில் ஒதுங்கி இருந்தே போந்த ஆன்மாவிற்கு என்றும்
புகுந்து இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்தது இல்லை போலும் என்பது இக் குறளின் பொருளாகும் –
இக் குறளின் உரையில் பரி மேல் அழகர் -வாதம் முதலிய வற்றின் இல்லாகிய உடம்பு என்றும்
அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும் வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பிலும்
நிலை பெறாது வருதலால் -துச்சில் இருந்த -என்றார் -என்றும்
பின் புறப்படாது புக்கே விடும் இல் -மீட்சஈல்லாத முக்தி -அமைந்ததாயின் பிறர் இதற்குள்
ஒதுக்கி இரார்  என்பதாம் -என்றும் உரைத்து ஈண்டு உணர்தல் பாலது –
பிறந்தகமாம் சம்சாரத்தை விட்டு பின் புறப்படாது புக்கே விடும் ஜீவான்மா மீண்டும்
சம்சாரத்துக்கு திரும்பாதது போலே –பிராட்டியும் பிறந்தகத்தை விட்டு மார்பகம் புக்கவள்-மீண்டும் தாமரைக்கு திரும்பாள் -என்க
பனி மலராள் வந்து இருக்கும் மார்பன் -என்றார் திரு மங்கை ஆழ்வார்
தாமரைப் பூவை பிறந்தகமாக உடைய பெரிய பிராட்டியார் அப் பூ நெருஞ்சிக் காடோபாதியாய்
திரு மார்பிலே வந்து இருக்கிற வைபவத்தை உடையவன் -என்பது அவ்விடத்தில் வியாக்யானம் .
விட்டுப் போகும் பூப் போன்றதன்று இருக்கும் மார்வு-அகலகில்லேன் என்று அன்றோ அவள் மார்பில் உறைவது
மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்-என்றபடி தன திருவடிக்கு நெருஞ்சி முள் போன்ற மலரை விட்டவள்
எந்த குற்றம் அற்றதும் எல்லா நலமும் வாய்ந்ததுமான மார்பகத்தை விட வழி இல்லை யன்றோ –
இனி பூவின் பரிமளமே வடிவு எடுத்தது போன்ற பிராட்டிக்குப் பூவும் வன்மை வாய்ந்து பொருந்தாது ஆயிற்று –
மார்போ -மெல்லியதாய் -இடமுடைத்தாய் -இயைந்து பொருந்துவதாயிற்று என்னும் கருத்துப் பட-பொருந்திய மார்பன் -என்றதுமாம்
-பொலிந்து இருண்ட கார் வானிலே மின்னே போல்-மார்பில் திரு இருந்தது பொருந்தி உள்ளது என்க
-விஷ்ணோர் தேக அநுரூபாம் வை கரோத் யேஷாகத் மனஸ்தநூம்
இந்த பிராட்டி எம்பெருமான் திரு மேனிக்கு ஏற்ப தன திருமேனியை அமைத்து கொள்கிறாள் -என்றபடி -திரு மார்புக்கு ஏற்பப்-பிராட்டியின் திருமேனி அமைந்து பொருந்தி உள்ளது என்க –

புகழ் –
புகழப் படும் குணங்கள்

புகழ் மலிந்த பா
-திருவாய் மொழி-சீர் தொடை யாயிரம் -என்றது காண்க
உயர் நலம் உடையவன் என்று குண அனுபவத்திலே இழிந்து-ஈறில வண் புகழ் -என்று முதலிலும்
உலப்பில் கீர்த்தி -என்று இடையிலும் -சுடர் ஞான இன்பம் -என்று முடிவிலும்-திருவாய் மொழியில் புகழ் -குணம் மலிந்து இருத்தல் காண்க –
மேலும் இவர் மா மலராள் புணர்ந்த பொன் மார்பனையும் அவனைப் பிரதிபாதிப்பதாகத்-திருவாய் மொழியையும் -உணர்ந்த மெய்ஞ்ஞானியர் -என்னும்
பாசுரத்தில் ப்ரஸ்தாவம் செய்து இருப்பது-இங்கே அறியத் தக்கது –
மைய கண்ணாள் அலர் மேலுறைவாள் உறை மார்பினன்-செய்ய கோலம் தடம் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி  உள்ளப் பெற்றேன் -என்றபடி பூ மன்னி மாது-பொருந்திய புகழ் மலிந்த பா திருவாய் மொழி -என்க –
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் ஆனவனை ஆயிற்றுக் கவி பாடிற்று -என்று அவ்விடத்து ஈட்டு ஸ்ரீ சூக்தி

பா மன்னு மாறன்
கவிதை பாடுவதில் மனம் பொருந்தி ஈடு பட்ட மாறன்-
சோதி வெள்ளத்து இன்புறுதல் ஆகிய வீட்டு இன்பமும் -மொழி பட்டோடும் கவியமுதம்
நுகர்தல் ஆகிய பாட்டின்பதுக்கு ஈடாகாது என்று நம் ஆழ்வாரே திருவாய் மலர்ந்து இருப்பது
கொண்டு திருவாய் மொழி பாடுவதில் அவருக்கு உள்ள ஈடுபாடு புலன் ஆகிறது

மாறன்
இது நம் ஆழ்வாருடைய குடிப் பெயர் –
இனி தாய்ப்பாலுண்டு வளராது கண்ணன் அனுபவத்தாலேயே வாழ்ந்து உலக நிலைக்கு-மாறுபட்டு இருந்தமை பற்றி வந்த திரு நாமம் ஆகலுமாம்-
மற்ற மதத்தவராகிய யானைகளை அடக்கும் மாவாட்டி போன்றவர் என்ற பொருள் கொண்ட
பராங்குசர் -என்ற வட மொழித் திருநாமதுக்கு ஏற்ப மாறன்  என்னலுமாம்
பிற மதத்தவருக்கு மாறு பட்டு நிற்றலின் மாறன் என்று பேர் பெற்றார் -என்க

அடி பணிந்து உய்ந்தவன் –
மாறனோ -மாறன் -மால் + தன் சுடர் அடி தொழுது உய்ந்தவர்
எம்பெருமானாரோ -மாறன் -ஆழ்வார் -அடி பணிந்து உய்ந்தவர்
கண்ணனையே உண்ணும் சோறாக கொண்டு உய்ந்தவர் மாறன்
மாறனையே தாரகமான உணவாக கொண்டுய்ந்தவர் எம்பெருமானார் –
இதனால் உய்யும் வழி ஆழ்வார் திருவடி சம்பந்தமே என்பதை உலகிற்கு உணர்த்தியவர்-எம்பெருமானார் -என்க
-மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்பதை மணவாள மா முனிகள்-பராங்குச பாத பக்தம் –என்று வட மொழியில் மொழி பெயர்த்தார்
பராங்குச பாதத்தை பக்தம் -உணவு -ஆக கொண்டவர் என்னும் போருக்கும் அவ்வட மொழி-தொடரில் தோன்றுவது காண்க –
நம் ஆழ்வார் உள்ள இடமே போம் வழியாய் யமைந்தது -எம்பெருமான் உள்ள இடம்-கல்லும் முள்ளுமான வழி என்னும் கருத்து பட
வைணவன் ஒருவன் சொல்வதாக-திரு விருத்தத்தில் புனத்தயலே வழி போகும்  அருவினையேன் -என்னும் இடத்து
ஆழ்வார் உய்த்து உணர வைத்த பொருளை எம்பெருமானார் கைக் கொண்டு உய்வு பெற்றார் என்க –
எம்பெருமானாருடைய அறிவாற்றல்களிலும் ஆழ்வார் சம்பந்தமே சிறப்பாய் இருத்தலின்-அது முன்னர்க் கூறப் பட்டது-

பல் கலையோர் ..இராமானுசன் –
கலை -சாஸ்திரம்
பல்கலையோர் -சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்று அறிந்தவர்கள் –
ஆயினும் அவர்கள் சாஸ்திரங்கள் எல்லாவற்றாலும் திரண்ட பொருள்களை கண்டு-முடிவு கட்டி அதன் படி நிற்க வல்லவர் அல்லர் ஆயினர்
-எம்பெருமானார் அவர்களுக்கு-தம் உபதேசத்தாலும் நடத்தையாலும் சாஸ்திரங்கள் முடிபினைக் காட்டி அதன்படி அவர்களை-நிற்க செய்வதற்காக அவதரித்ததாக அருளி செய்கிறார் அமுதனார் –

வந்த –
அவதரித்த என்றபடி
எம்பெருமானார் அவதார புருஷர் என்பது -மேலும் பல இடங்களில் சொல்லப்  படுகிறது அமுதனாராலே –
மன்ன
-நிற்க
சாஸ்த்ரங்களின் படி நடக்க என்றபடி -இவ்வெச்சம் வந்த என்பதனோடு முடிந்தது –
நாம் யார் –நமக்கு உரிய பேறு எது –அதனைப் பெரும் வழி யாது –என்னும் மூன்று
விஷயங்களே சாஸ்திரங்கள் அனைத்திலும் நாம் முடிபு கட்ட வேண்டியவை என்பர் ஆன்றோர்
இம்மூன்றுமே தத்வ ஹித புருஷார்த்தங்கள் எனப் படுகின்றன –
ஸ்வ ஞானம் பிராபக ஞானம் ப்ராப்யஞானம் முமுஷூபி ஞான த்ரய முபாதேயம் ஏததந்யந் ந கிஞ்சன
தன்னை பற்றிய அறிவும் -தனக்கு ஏற்ற வழியை பற்றிய அறிவும் -அவ் வழியால் பெரும் பேறு பற்றிய அறிவுமே
மோஷத்தில் விருப்பம் உடையவர்களால் கைக் கொள்ளத் தக்கன -வேறு ஒன்றும் இன்று -என்பது-ஆன்றோர் வாக்கு
எம்பெருமானுக்கே உரியேன் நான் என்னும் உணர்வு தத்வ ஞானம் என்னப்படும்
எனக்கு ஏற்ற வழி -நிர பேஷமான – கூட்டு எதையும் எதிர் பாராத -சித்தோ உபாயமான எம்பெருமானே என்னும்-உணர்வு ஹித ஞானம் எனப்படும்
அத்தைகைய வழி யால் பெறப்படும் பேறு அனுபவித்தற்கு உரிய நல் குணம் வாய்ந்த எம்பெருமானே-என்னும் உணர்வு புருஷார்த்த ஞானம் எனப்படும்
இத்தகைய தத்வ ஹித புருஷார்த்த ஞானம் முதிர்ந்த நிலையில்
எம்பெருமானைப்பாடும் ஆழ்வாருக்கே உரியேன் நான் என்று தத்வ ஞானம் முழு வடிவம் பெரும் –
எனக்கு ஏற்புடைய வழி -ஸ்வா தந்த்ர்யம் –கைவிட்டால் கேட்பார் அற்ற னில்லை -என்னும் குற்றம் அற-மிக அருள் வாய்ந்த ஆழ்வாரே என்று ஹித ஞானம் முழுமை பெரும்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே -என்றபடி பெரும் பேறு ஆழ்வாரே எனபது புருஷார்த்த ஞானத்தின்-முழுமையாம் -முழுமை வாய்ந்த இம் மூவகைப் பட்ட உணர்வு -தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஞானம் என்று-உரைக்கப் படுகிறது- எம்பெருமானார் உகந்தது இதுவே -இதனை உபதேசித்தும் -உய்ய மாறனடி பணிந்து காட்டியும் –
கற்று அறிந்தும் ஐயம் நீங்கி ஒரு முடிபு காண கில்லாதாரை இந்நிலையில் நிலை நிறுத்துவதற்காக-எம்பெருமானார் அவதரித்ததாக கூறுகிறார் அமுதனார் –
இராமானுசன் தந்த ஞானத்திலே தத்துவ நூல்-கூழற்றது-என்பர் மேலும் -கூழ் =ஐயம் –
இத்தால் -சாஸ்த்ரங்களை திரட்டி புகட்டி தானும் நடந்து காட்டி -மற்றவரையும் அவ்வாறே நடக்கும்படி-செய்பவராக எம்பெருமானாரை நம் முன்னே கொணர்ந்து அவர் இடம் உள்ள ஆசார்யனாய் இருக்கும் தன்மையை-அமுதனார் காட்டி அருளினார் ஆயிற்று –
ஆசிநோதிஹி சாஸ்த்ரார்த்தாந்ஆசாரே சத்தாபயத்தபி ஸ்வ யமாசரதே யஸ்மாத் தமாசார்யம் ப்ரசஷதே-எவன் சாஸ்திர அர்த்தங்களை-திரட்டுகிறானோ அதன் படி நடக்க செய்கிறானோ தானும் அனுட்டிகிறானோ அந்த காரணத்தினால்
அவனை ஆச்சார்யனாக சொல்லுகிறார்கள் -என்று ஆச்சார்யா லஷனம் கூறப் படுகிறது காண்க –

இனி தாம் மன்ன
தாமாகவே வந்து பொருந்தும் படி -அதாவது -ஆஸ்ரயிகும்படி என்னலுமாம்
மன்ன -பொருந்த
இராமானுசன்
ராமானுஜம் லஷ்மண பூர்வ ஜம்ஸ -என்றபடி லஷ்மணனுக்குஇராமானுசன் எனபது ஒரு திரு நாமம்-
அந்த லஷ்மணனுடைய திரு அவதாரம் ஆதலின் எம்பெருமானாருக்கும் அதுவே திரு நாமம் ஆயிற்று
லஷ்மணனுக்கு ராமனிடம் உள்ள ஈடுபாடு தோன்ற ராமானுசன் என்ற பேர் ஏற்பட்டது –
எம்பெருமானாருக்கு அபிநவ தசாவதாரத்தில் ராமனாக கருதப் படுகிற பராங்குசன் இடம் உள்ள-ஈடுபாடு தோன்ற இவருக்கும் -ராமானுசன் -என்ற பேர் ஏற்பட்டது என்க-
இந் நயம் தோன்ற -மாறன் அடி பணிந்து உய்ந்தவன் இராமானுசன் -என்றது காண்க –
மணவாள மா முனிகளும் இதனை அடி ஒற்றி -பராங்குச பாத பக்தம் ராமானுஜம் -என்றார் யதிராஜ விம்சதியிலே –
தமிழில் -இளைய ஆழ்வார் -என்னும் திரு நாமமும் இக் கருத்துக் கொண்டதே –
சரணாரவிந்தம் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும் –
சரணாம் புஜ த்வயம் மதிய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி –என்றும்
திருவடித் தாமரை இரண்டும் என் தலையை அலங்கரிக்கப் போகிறது -என்றும் சொல்லுகிற படியே-சூடி அனுபவிக்கத் தக்கதாய் இருத்தலின் சரணார விந்தம் என்றார்
நாம்
திருவடித் தாமரைகளே சூடி அனுபவிக்கத் தக்கவை என்று அவற்றைப் பெரும் பேறாக-
ப்ராப்யமாக -புரிந்து கொண்ட நாம் -என்றபடி -ஆழ்வார் திருவடிகளைக் காட்டிக் கொடுத்த-ஆசார்யராகிய எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யம் என்று புரிந்து கொண்ட நாம் என்றது ஆயிற்று –
இனி நெடும்காலம் உலகு இயலிலே துவண்ட நாம் -என்றபடி யுமாம் –
இது பேற்றின் கனத்தை பார்த்து தம் இகழ்வு தோன்ற சொன்னபடி யாகிறது –

மன்னி வாழ –
ஆஸ்ரயித்து வாழும்படியாக என்றபடி –
ஆஸ்ரயித்து என்னும் இடத்து மன்னி -என்றார் –
பயன் பெற்றவாறே விடுகை அன்றிக்கே என்றும் பற்று விடாது பொருந்தி நிற்றல் தோற்றற்கு-வேறு பயனைக் கருதாதவனாய் -அநந்ய பிரயோஜனனாய்-ஆஸ்ரயித்து என்றபடி –மன்னியதற்க்கு பிறகு வாழ்வு என்றோ வருவது அன்று –
இரண்டும் ஒன்றாய் இணைந்தவையே என்பது தோன்ற -மன்னி வாழ -என்று இரண்டு சொற்களும்-இணைந்து நிற்கும் அழகு காண்க –

நெஞ்சே –
முதல்-இள -நிலை ஆகிய பகவானைப் பற்றி நிற்பதற்கே ஆள் அற்று இருக்கும் இந் நிலத்தில்-முதிர் நிலையாகிய எம்பெருமானாரை பற்றி நிற்றற்கு இசைந்துள்ள நெஞ்சு -மற்றதொரு துணை-இல்லை என்று அதனைக் கூட்டிக் கொள்கிறார் –
நெஞ்சே சொல்லுவோம்
மனப் பூர்வமாகச் சொல்ல வேணும் என்கிறார் –சாதனமாக உரு எண்ணுவோம் அல்லோம்-குண அனுபவ ரூபமாகப் பேசுவோம் என்பது கருத்து –
அவன் நாமங்களே
அபிநவ தசாவதாரத்தில் ராமனாக கருதப்படும் மாறன் இடம் பேர் அன்பு பூண்டு
அடி பணிந்தமையானும் -பலர் தம்மை சரண் அடையும்படி ராமனை அனுசரித்து
சரண்யராய் தோன்றின படியானும் வந்த -இராமானுசன் -என்பது போன்ற திருநாமங்களால்-அவருடைய குணங்களையும் செயல்களையும் நினைந்து நினைந்து நெஞ்சாரப் பேசுவோம் -என்றபடி –

இங்கு ஒரு விஷயம் முக்கியமாக கொள்ளத் தக்கது –
சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ அவன் நாமங்கள் சொல்லுவோம் -என்ற சொற்களின் அமைப்பை நோக்கும் போது –
நாமங்கள் சொல்வது -வாழ்வாகிய எம்பெருமானார் திருவடிகளை அடைதற்கு சாதனமாக தோற்றுகிறது –
அங்கனமே சிலர் எம்பெருமானுடைய சரணாரவிந்த ப்ராப்திக்கு சாதனம் அவருடைய திரு நாம சங்கீர்தனமேயாம் -என்று-வரை உறைந்தும் உள்ளனர் -ஆயின் அது ஏற்புடைத்தன்று –எம்பெருமானார் திருவடிகளை அடைதற்கு அத்திருவடிகள் தவிர வேறு ஒன்றும் சாதனமாக மாட்டாது-என்னும் துணிவு உடையவர் அன்றோ அமுதனார் –
பேறு ஓன்று மற்றும் இல்லை நின் சரண் அன்றி –அப் பேறு அளித்தற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி -என்று மேலே – -45 இவர் தாமே-அருளி செய்து இருப்பது கவனித்தற்கு உரியது -ஆக எம்பெருமானார் திரு நாமங்களை சொல்வது-சாதனமாக மாட்டாது -போக ரூபமானது என்பது உணரத் தக்கது –

நெஞ்சே சொலுவோம் அவன் நாமங்களே
இராமானுச நூற்று அந்தாதியை அனுசந்திக்க இசைந்த நெஞ்சைக் கூட்டிக் கொண்ட படி –இராமானுச நாமம் ஒன்றுமே பாட்டுத் தோறும் சொல்லப் பட்டு இருப்பினும் -நாமங்கள்
என்று பன்மையில் கூறியது நிர் வசன பேதத்தாலே -ஒரு நாமம் பலவாய் தோற்றுதல் பற்றி என்க –
ஓர் ஆயிரமாய் உலகு அளிக்கும் பேர் -என்றது காண்க –
எம்பெருமான் திரு நாமங்களில் -நாராயணன் என்னும் திரு நாமம் போன்றது
எம்பெருமானார் திரு நாமங்களிலோ -ராமானுஜன் -என்னும் திரு நாமம் -என்க —
இனி நாமங்கள் என்பது இப்ப்ரபந்தத்தில் உள்ள பாசுரங்களை கூறலுமாம் –
நாமங்கள் குணங்களையும் செயல்களையும் கூறுவது போலே -பாசுரங்கள்
அவைகளை கூறுதலின் பாசுரங்கள் நாமங்கள் எனப்பட்டன -என்க —
திருவாய் மொழி ஆயிரம் பாசுரங்களையும் -நாமங்கள் ஆயிரம் -5 8-11 – – என்றார் நம் ஆழ்வார் –அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டி தாதிகளுக்கு பிரதிபாதகமான ஆயிரத்திலும் –என்பது அவ்விடத்து வியாக்யான ஸ்ரீ சூக்தி-

இந்த பாசுரத்தில் -பூமன்னு மாது பொருந்திய மார்பன் -என்பதனால்-அலர்மேல் மங்கை உறை மார்பா -என்பதும் –புகழ்-என்பதனால்-நிகரில் புகழாய் -என்று தொடக்கி கூறப்படும் குணங்களும் தோற்றுகையாலே –திருவாய் மொழி திருவேம்கடம் உடையானை பற்றியது என்பது அமுதனார் திரு உள்ளம் என்று தோற்றுகிறது –
த்வய விவரணம் திருவாய் மொழி என்று கூறும் ஆசார்யர்களுக்கும் இதுவே திரு உள்ளமாய் இருக்கலாம்-
முதல் மூன்று பத்துக்கள் த்வய மந்த்ரத்தின் பிற் பகுதியை விவரிகின்றன -என்றும்
அடுத்த மூன்று பத்துக்கள் அம்மந்த்ரத்தின் மூர் பகுதியை விவரிக்கின்றன என்றும்
மேல் உள்ள மூன்று பத்துக்கள் முறையே-உபாயத்துக்கு உறுப்பான குணத்தையும் –நசை அற்றமையையும்
எம்பெருமானோடு நமக்கு இயல்பாக உண்டான தொடர்பையும் -சொல்லுகின்றன என்றும்
இறுதிப் பத்து வீடு பெற்றமையைக் கூறுகிறது என்றும் விளக்குகின்றனர் ஆசார்யர்கள் –மந்த்ரத்தில் பிற் பகுதியில் ஸ்ரீ மானான நாராயண னுக்கு எல்லா அடிமையும் செய்ய வேணும் என்கிறது –அதனையே திரு வேம்கடத்தில் திரு வேம்கடம் உடையானுக்கு -வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் –என்கிறார் நம் ஆழ்வார்
மந்த்ரத்தின் முற் பகுதி ஸ்ரீ மானான நாராயண னுடைய திருவடிகளை தஞ்சமாக பற்றுகிறேன் -என்கிறது –அதனையே -அலர்மேல் மங்கை உறை மார்பா உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்கிறார் நம் ஆழ்வார் –இதனால் மந்த்ரத்தில் ஸ்ரீ மன் நாராயணன் என்பது அர்ச்சாவதார எம்பெருனாகிய திரு வேம்கடம் உடையானையே-என்பது நம் ஆழ்வார் திரு உள்ளம் என்பது தெளிவு –
பூ மன்னு மாது–என்பதால் ஸ்ரீ சப்தமும்
பொருந்திய -என்பதால் நித்ய யோகத்தையும் -காட்டும் -மதுப் ப்ரத்யயமும்-
புகழ் மலிந்த என்பதால் குணம் உடைமை கூறும் நாராயண சப்தமும் –
மார்பன் -என்பதால் திரு மேனிக்கு உப லஷணமான சரண சப்தமும் –
பணிந்து -என்பதால்-சரணம் பிரபத்யே -என்னும் சப்தங்களும் –
உய்ந்தவன் -என்பதால் பிற் பகுதியில் கூறும் பயனும் தோன்ற அமுதனார் சொற்களை-அமைத்து உள்ளமை காண்க –சரம பர்வ ப்ரபந்தம் என்பது தோன்ற எம்பெருமானை அடி பணிவதாக கூறாது-எம்பெருமான் பாவில் மன்னும் மாறன் அடி பணிந்ததாக அமுதனார் அருளிய-நயம் வியந்து இன்புறத் தக்கது
-மந்த்ரத்தின் தாத்பர்யம் தோன்ற-மாறன் அடி பணிந்து –என்றார் அமுதனார் -என்க –
இனி திருவாய் மொழியை -அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்றபட்டர் நிர்வாகத்தின் படி -அமுதனாரும் கருதுவதாக கொள்ளலுமாம் –
தொடக்கத்தில் பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -என்று பொதுப்பட அருளி செய்ததற்கு ஏற்ப முடிவில்-தென் அரங்கன் அணியாக மன்னும் பங்கய மா மலர்ப்பாவை -என்று சிறப்பித்து காட்டுதல் காண்க –
என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடை யாவியே -என்று நம் ஆழ்வாரும்
தென் திருவரங்கம் கோயில் கொண்டானை திருவாய் மலர்ந்து இருப்பது ஈண்டு அறிய தக்கது –முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை யாயிரத்து இப்பத்தும் வல்லார் -என்னும் இடத்து –பெரிய பெருமாள் திருவடிகளிலே திருவாய் மொழி ஆயிரமும் சொல்லிற்று -திரு மோகூர்க்கு ஈத்த பத்து –
திரு வேம்கடதுக்கு இவை பத்து -என்று பிரித்துக் கொடுத்த இத்தனை —பெருமாள் திருப் பலகையில்-அமுது படியில் மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்க்கும் அளந்து கொடுக்குமா போலே என்று -பிள்ளை-அருளி செய்வர் -என்று ரச கனமாக அமைந்த ஈடு வியாக்கியானம் இங்கு அனுசந்தித்து இன்புறத் தக்கது –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தால் ஜல்பித்தல்

பூ மன்னு மாது-
மாது  பொருந்திய மார்பன்-
மார்பன் புகழ் மலிந்த பா-
பா மன்னும் மாறன்-
மாறன் அடி பணிந்து உய்ந்தவன்-
நாம் மன்னி வாழ -நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே-
–பல் கலையோர் தாம் மன்ன வந்த இராமனுசன் சரணார  விந்தம் நாம் மன்னி-பொருந்தி இருத்தலே வாழ்தல்

வாழ-
சுடர் அடி தொழுது எழு-போலே – தொழுகையே வாழ்வு –
இவரோ -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ..பவிஷ்ய ஆச்சர்ய விக்ரகம் காட்டி கொடுத்தாரே
..ஆழ்வார் பாவில் மன்னி கிடக்கிறார் .இயைந்து கிடக்கிறார் இன்றும் சேவிக்க
..திருவாய் மொழி  ஸ்ரீ ராமாயணம் இருக்கும் வரை .ஸ்ரீ வைஷ்ணவம் வாழும்.-என்றானே சோழ மன்னன் இளவல் –

மார்பன் புகழை வைத்து கொண்டு இருக்கும் பா
யார் அந்த மார்பன் ? மாது பொருந்திய மார்பன்
–பெயரை சொல்லாமலே– இவளாலே ஏற்றம் என்பதால் –
.எங்கு இருந்து வந்தாள்  ? பூ மன்னு மாது ..ஸ்ரீ தேவி
பேரும் இல்லை ..மாறன் இடத்தில் தான் பெயர்
-பா என்றாலே திரு வாய் மொழி
கோயில் என்றால் ஸ்ரீ ரெங்கம் –
ஜெயந்தி  என்றால்  கிருஷ்ண ஜெயந்தி
ஸ்வாமி என்றால் எம்பெருமானார்  போலே -ஜகத் பிரசித்தம் பூ–கமலம் தானே ..
மாது- ஸ்ரீ தேவி தான்.
மார்பன் ஸ்ரீமன் நாராயணன் தானே
பா வேதமோ பாட முடியாது –அனைவராலும் அத்யயனம் பண்ண முடியாதது
திருவாய் மொழிக்கு அப்படி குறை ஒன்றும் இல்லையே
ஏற்கும் பெரும் புகழ் மலக்கு நா உடை ஏற்க்கு–மாறன்
= மால்+ தன அடி –பணிந்து உய்ந்தவன் ..
ஆழ்வார் பாதுகைக்கு மதுர கவி சாதித்தல் என்றே எங்கும் –ஆழ்வார் திருநகரில் மட்டும் ஸ்ரீ ராமானுஜன்
ராமானுஜர் – பாதுகை தாசரதி முதலி ஆண்டான் எங்கும் திரு மலையில் மட்டும் அனந்தாழ்வான் ..
மாறனில் மிக்குமோர் தேவு உளதே –மால் தனில் என்கிறார் ஆழ்வாரே .மதுர கவியோ தேவு மற்று ஓர் இல்லேன் என்றார்
.பூவிலே பிராட்டி மன்னி கிடக்க
அவள் மன்னியது மார்பில்
அதை பா பாட /பாவில் ஆழ்வார் மன்னி இருக்க / அவர் திருவடியில் மன்னி ராமனுஜன்..
..நெஞ்சை வா / தொழுது எழு மனனேபோல -நெஞ்சே சொல்லுவோம் நாமங்களே
…ஆழ்வான் மூலம் திருந்த –தமக்கு ஆச்சர்ய பிரசாததாலே பெற்ற மந்திர ரத்னம்-துவயம்
-பூர்வ கண்டம் உத்தர கண்டம் -யாதாத்ம ஞான ரூபமாய் –உள் உரை பொருள் –
ஸ்ரீமத் ராமனுஜய சரணவ் சரணம் பிர பதயே ஸ்ரீமதே ராமானுஜாய நம
-ஆர்த்தி பிர பந்தம் உத்தர கண்டம்-வாழி எதிராஜா –
யதிராஜ விம்சதி.-பூர்வ கண்டம்.. பிராப்ய பிரபககங்கள் ராமானுஜர் திருவடிகளே
..சப்தத்தையே மறைக்கும் படியான ரகசியம்..அதற்குள் ரகசியம்.
.குக்ய தமம் இனியது தனி அருந்தேல்-
அவருக்கு போன வியாதி நமக்கும் போக வாரி கொடுக்க வந்தார் ..கை கரவேல் -கை திருப்பி விடாமல்
சமுத்திர நீரை வாரி வழங்க பிரார்த்திக்கிறாள் ஆண்டாள் –கிண்ணகத்தில்-வெள்ளம்-இழிதல் – துணை தேட்டத்தில்-
எம்பெருமானாரின் கல்யாண குண சாகரத்தில் இழிய துணை வேண்டுமே -நீர் ஆட போதுவீர் போதுமினோ
-செஞ்சொல் கவிகாள் உயிர் கத்து ஆட செய்மின் -ஆழ்வார் எச்சரிக்கிறார் -பட்டு அனுபவித்த அனுபவம்
கல்யாண குண கடல் -ஏரி-இவரை காத்த ராமன்-முத்து மாணிக்கம் இழிய
-அமுதனார் உபய விபூதி யிலும்  ஆராய்ந்து
நித்யர்முக்தர்கள்  பரத்வத்தை சாம கானம் பண்ணி கிடக்க- லீலா விபூதியில்  அவன் மேல் கண் வைக்காமல் கிடக்க .
.சம்சாரி ஜனங்களை  பிரகிருதி  மறைக்க
ஸ்தோத்ர பங்கபிரகிருதி நியாயம்- -அணை  திறந்தால் ஓடும் அருவி போல .
-உண்டியே உடையே உகந்து ஓடி–சூர்யன் உதிக்கும் பொழுதும் அஸ்தமிக்கும் பொழுதும் ஆனந்தம் அடைந்து
.கூவி கொள்ளும்  காலம் இன்னும் குருகாதோ என்று இருக்காமல் -இருக்க
தஷினாயணம் போய் -உடையவர் ஆனந்தம்-குருகும் காலம் குறைந்தது என்று–சௌரி சிந்தையராய் விஷயாந்த்ரங்களை பற்றி–நிற்கும் சம்சாரிகள்
எம்பெருமானார்  திருத்த எண்ணி -அடியவர்களை ஞானாதிகர் -74 சிம்காசானாதிபதிகளை நியமிக்க
-எல்லோரும் பரம போக்கியம் பாலே போல் சீர்-கல்யாண குணங்களில் ஈடுபட்டு –
அப்படியே ஆழ்வான் பக்கல் பெற்ற ஞானத்தினால் தளும்பிய அமுதனார்
—கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழன்று-குமிழ் நீர் உண்டு-ஆழ்ந்து அனுபவிக்க
–கூவும் குரல் விழவில்லை..துணை யாரும் இன்றி  தன் சுகம் துக்கத்துக்கும் பொதுவாக இருக்கும் மனசை விளித்து
–பூ -பத்மேச்திதாம் தாமரை இருப்பிடம் ஆக கொண்ட தாயார் அத்தை  உபேஷித்து
-பிறந்தகம் விட்டு-இறையும்  அகலகில்லேன் என்று -பொருந்தி வாசம் பண்ணிகிறாள்.
பூ மன்னு பொருந்திய -மன்னு என்று சொல்ல வில்லை..பூ மன்னு-உபேஷித்ததால் -போனாள் அன்றோ -உதறினது தெரிந்ததே மன்னு என்றதை –
சங்கை வரும் என்று பொருந்திய -என்கிறார்
.புகழ் -மலிந்த -நலம் உடையவன் என்று ஆரம்பித்து 1000 கல்யாண குணங்கள் காட்டி யது ஒரே  பா- திரு வாய் மொழி-தானே-
கவி அமுதும் நுகர்ச்சி -மன்னினார்-ஆழ்வார் உடை- பா பொருந்து-சொல்ல வில்லை-இனிமேல் மன்னு சொல்லலாம் கிளம்ப மாட்டார்-
-நந்த கோபன் குமரன் பெயரை /நந்த கோபாலன் பெயரை சொல்லி ஆற்ற படைத்தான் மகனே-
மாமனார் பெயரை மூன்று தரம் சொல்லிய  பின்பு. ஆண்டாள் .இங்கு சொல்லாமல் விட்டது.-குற்றம் உணர்ந்து தானே –
.-ஆழ்வார் அடியை பணிந்து உஜ்ஜீவிதவர் -நம் ஸ்வாமி
பார்த்தே வளர்க்கும் மீன் போலே –தாய் ஆழ்வார் -சேய் ஸ்வாமி
.பல் கலையார்-சாஸ்திரங்கள் கற்று -அர்த்தம் புரியாமல்- தம் மன்ன வந்த ராமானுஜர்-
நாட்டிய நீச சமயங்கள் மாண்டன -/மன்ன வந்த -சுபிரதிஷ்டை போல
..நாம்-இனிமேல் பிராப்யமாக   அறிந்து கொண்டு//முன்பு பல் கலையோர் தாம்- தாமே வந்தார்கள்..பொருந்தி வாழும்படி நெஞ்சே ..நிலையாக
-இளையவர்க்கு அளித்த மௌலியை விபீஷணனும் பிரார்த்தித்தால் போல
கொக்குவாயும் படு கண்ணியம் போல பொருந்தி இருக்க ..நெஞ்சை கூட்டிக் கொள்கிறார்
மலர் மேல் மங்கை -ஸ்வயம் பத்மினி பத்ம நிவாசினி-பூ-கமல-பொதுவாக சொன்னாலும் கமலத்தையே குறிக்கும்
அரவிந்த நிவாசினி..பத்மே ஸ்திதாம்-அசையாமல் ஸ்திரமாக இருகிறவள். ஸ்ரீ ஸூ க்தம்.… பத்மே ஸ்திதாம் பத்ம வரணாம் ஒளி/வேத ஒலி யுடையவள்..ஹிரண்ய பிரகாராம் -பெருமை தோற்றம்––ஆர்த்ராம்-கருணையால் நனைந்து இருக்கிறாள்
.அசித் சித் ஈஸ்வரன் மூவருக்கும் ஒளி கொடுப்பவள்.. வேரி மாறாத பூவில் இருப்பாள்…பரிமளம் தானே வடிவு கொண்டவள்..
அவ் வீட்டின் போக்யத்தையால் அதை ஸ்வரூப  நிரூபக மாக அரவிந்த நிவாசினி என்று சொல்ல  பட்ட பின்பு
ரெங்க நாதன் அரங்க நகர் அப்பன்  என்றே சொல்லுமா போல-அழகிய மணவாளன் என்று சொல்லாமல் /
பகவான் திரு மார்பை அனுபவித்து போக்யதையில் ஈடு பட்டு நின்ற பின்பு
…இதை .அருவருத்து  மீண்டும் அத்தை ஒரு காலும் நினையாமல்.
/இறையும் அகலகில்லேன் -என்று பொருந்தி
அலர் மேல் மங்கை உறை மார்ப -பெருமானுக்கும்மாது  ஸ்வரூப நிரூபக -தர்மம்
விசேஷ பூதன்-நாமம் –அகஸ்ய பிராதா போலும் –மாமான் மகளே  போலும்
தேனும் பாலும் கன்னலும்  அமுதும்  ஒத்து என்னுள் கலந்தான் பெயர் போல கலந்ததே தனக்கு தர்மமாக கொண்டவன் /
/ஸ்ரதையா அ- தேவக தேவச்தும் அச்துதே –தேவன் தன்மை அவளால் பெறுகிறான் –
–அநு  ரூபம் விஷ்ணுவுக்கு இவள்- அப்ரமேயம் சீதா ராமன்
–தாயில் சிறந்த கோவில் இல்லை தந்தை சொல் மிக மந்த்ரம் இல்லை
மாத்ரு தேவோ பவ என்பதிலும் -மாதா முதலில் சொன்னது போல.
.மாதாவால் தான் அவனுக்கு பெருமை .
.மார்பன் புகழ் மலிந்த பா -குண –பட்டியல் தருகிறார் -ஆயிரம் பாசுரங்களிலும் ஆயிரம் குணங்கள் -அருளுகிறார்  ஆழ்வார்
உயர்வற உயர்நலம் உடையவன்-குண விசிஷ்டன்
/அயர்வறும் அமரர்கள் அதிபதி-வுபய விபூதிநாதன்  /உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்
-அந்தர்யமித்வமும் வ்யாபகத்வம்  உளன் சுடர் மிகு சுருதியுள்
-வேதத்தால் அறிய கூடியவன் ..
/நீர் தொறும் பரந்துளன் – பரந்த  அண்டம் இது என
தாரகம் -உத்தரம்-மண்டபம் போல இல்லை-சொரூப வ்யாகத்வமும் உண்டு
-ஆத்மா ச்வாபத்தாலே தான் வ்யாப்தி .மேலே அவனுக்கு ./நியமன சக்தி யும் உண்டு
ஒன்றும் தேவும் … யாதும் இல்லா அன்று –உயிர் படைத்தான்
கரந்து உமிழ்ந்து அளந்து  இடந்து  கண்டும் தெளிய கில்லீர்
/உலகம் உண்ட பெருவாயா- அண்ட   சராசரம் -விழுங்கி -அவைகள் தங்களை  ரஷிக்க அபேஷிக்காமல் இருந்தாலும்-ஸ்வாமி -சொத்தை காப்பது போலே தானே விழுங்கி  ரஷித்தான்
உலப்பிலா கீர்த்தி –சொற் பணி  செய் ஆயிரம் –பல்லாயிரம் குணங்களை அருளிய தமிழ் வேதம் -பா
இதிகாசம் அர்த்தம் சொல்ல  பணி செய்யும் ஆழ்வார் திரு வாக்கில் புறப்பட
புணரா நின்ற மரம்.–நடுவே போன முதல்வாவோ  வீர சௌர்ய பராக்ரமங்கள் /
நோலாது  ஆற்றேன் நிறை நான்முகனும் இந்த்ரனும் -ந்யாமகன் சர்வர்க்கும்
செந்தாமரை கண்ணா -சௌந்தர்யம்  /முனியே நான் முகனே -சர்வ சரீரி
பாழ்-பிரக்ருதியே சரீரம் ஜோதி நீ -ஆத்மாவும் விட்டு பிரியாது இல்லதும் உள்ளத்து அல்லது அவன் உரு
-உயர்ந்தே என்னும் அளவும் ஆதி மத்திய அவதானம் வரை/ஒருபடி பட்ட -புகழை-கல்யாண குணங்களை – விடாமல் அருளிய
திரு வாய் மொழிதானே பா –என்னும் போது சொல்லால் குறிக்கப்படும்

ஸ்வாமி யும் ஸ்ரீ பாஷ்யம் இதையே கொண்டு சூத்தர வாக்யங்களை ஒருங்க விட்டார்

-சுடர் மிகு சுருதியுள் உளன்..இருப்பதாலே சுடர் மிக்கதா
.வேதிக  சமதகம்-வேததாலேயே அறிய படுகிறவன் –
/அனுபவிக்க உள் அடங்காமல் வந்தும் பகவத் கிருபையால் சகல லஷணங்களை கொண்டு…
/பக்தி பலாத்காரத்தாலே வந்தவை ..
புகழ்  மலிந்த பா -கவி அமுதம்
.தொண்டர்க்கு அமுது போல தானே புகழும் படி..
பா மன்னு மாறன்– – தாயான ஆழ்வார் அநுக்ரக லேசத்தாலே
சேயான  எம்பெருமானாரை  வளர்த்தார்-மீன் தன்  கண்ணாலே  குட்டிகளை வளர்ப்பது போல.
.அடி பணிந்து உயந்தவன்-உஜ்ஜீவித்தவர்
பல் கலையோர் -ஞானம் பெற மன்னினார்கள் ..
-தாம் இவர்கள்-தாமாகவே வந்தனர்..
சரணார விந்தம்  நாம் மன்னி வாழ
இதுவே பிராப்யம் என்று அறிந்த நாம்-அநாதி காலம் எங்கோ இருந்த நாம் -பொருந்தி வாழும் படியாக நெஞ்சே அவர் திரு நாமம் சொல்ல வேணும்.
சுவாமி-ஆழ்வார்- மார்பு- தாயார்-பெருமாள் சேர-இது போலே
யதிராஜ  விம்சதி முதல் ஸ்லோகம் ஸ்ரீ மாதவான்க்ரி-பெரிய பிராட்டியார் சம்பந்தத்துடன்
மிதுன – திருவடிகள்   ஜல துவைய நித்ய சேவா பிரேமா ஆவிலேசைய பராங்குசர் -பாத பக்த்யம்
ராமனுஜம் –மாறன் அடி பணிந்து உய்ந்தவர்-காமாதி தோஷ விலகும்
உஜ்ஜீவனம் அபிப்ராயம் மாறும்-புருஷார்தங்களோ பல  உண்டே
சம்சாரிகளுக்கு அன்ன பானம் /முக்தர்களுக்கு மோஷசாம்ராஜ்யம்/ராமானுஜருக்கு ஆழ்வார் தம் திருவடிகளை இவருக்கு என்றே விட்டு போனாராம்
..தொடர்பு-அவை தன்னையே  அனுபவித்து போனார்.
-கால விளம்பம் உண்டு .பிடிக்கும் படி ஆழ்வார் பிரமாணத்துடன் இவரை த்யானம் பண்ணி
பவிஷ்யத் ஆச்சர்ய விக்ரகம் கொடுத்தார்
-பரகத ச்வீகாரம்- வாரி கொண்டு என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றும் பருகினான் போல
.. ராமானுஜர் பெரிய நம்பி —மூலம் தானே பற்றனும்–ஆழ்வாராகவே ச்வீகாரம் பண்ணி கொண்டார்.
.பகவத் பிரபாவத்தை ஸ்ரீ பாஷ்யம் முகம் பிரகாசித்து
–திவ்ய தேசங்கள் தோரும் தானும் கைங்கர்யம் பண்ணினார்
–ஆழ்வார் நினைத்ததை மனோ  ரதம் ஈடு ஏற்றி கொடுத்தார்
-இதுவே உஜ்ஜீவனம் .
.பல் கலையோர் -சாஸ்திரம் கற்றவர் சங்கை தீர்க்க தாம் மன்ன வந்த ராமானுஜர்..
.நன்மையால் மிக நான் மறையாளர்கள்  கூரேச குருகேசர்-
திரு குருகை பிரான் பிள்ளான்-அபிமான புத்திரன் -ஆராயிர  படி முதலில் அருளிய பெருமை
– , கோவிந்தன், தாசரதி-முதலி ஆண்டான்  போன்ற முதலிகளும்-சங்கை இல்லை இவர்களுக்கு
-மற்றும் யாதவ பிரகாசர்-யதிகள் இருக்கும் படி நூல் அருளி இருக்கிறார்
,யக்ஜ மூர்த்தி  போல்வார்-அருளாள பெருமாள் எம்பெருமானார்– தம் நித்ய திரு ஆராதனா   கர்மம் கொடுத்து அருளினார்
காரேய் கருணை ராமானுஜா! ..போல்வார்/திரு மழிசை ஆழ்வாரை பேய் ஆழ்வார்  திருத்தியதை போல்
எம்பார்-உள்ளம்கை கொணர்ந்த  நாயனார் -திரு மலை நம்பி திருத்தி -–இங்கு வந்தவர்கள் சாஸ்திர வாக்கியம் காட்டி மீண்ட சரித்ரம் இல்லை
/இனி திருவடி நிலை விட்டு அகலாமல் ஸூ பிரத்கிஷ்டராக  மன்னி  இருந்தார்கள்
.அசைக்க முடியாத ஞானம்
..சமுத்ரம்  போல பகவத் பக்தி சிந்தவே- ஆளவந்தார் -தாண்ட முடியாது
ஆழம் காண முடியாது கலக்க முடியாது /பொருந்தி நிலைத்து இருக்கும்படியான ஞானம்
./வந்த
-பகவத் சங்கல்பத்தால் வந்த -ராமன் தம்பி போல
-பெரியோர் சொல் படி கேட்டு தர்மம் நிலை நிறுத்த .
.அபயம் சர்வ பூபேப்யோ போல ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள்–மோஷ தானம் வாரி கொடுத்தார்.
.சரணார விந்தம் -அரவிந்தம் -மன்மத பானம் போல தன்னை  மோகிப்பித்தலால் –
பாவனத்வம் போக்கியம்  ஏக ரூபமாய் இருக்கையாலே சரணார விந்தம்
-ஒருமையில்-/மாதவான்க்ரி -இரண்டு பராங்குச  பாத பக்தம் -ஓன்று-போல.
.மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு ..மருந்தும் விருந்தும் ஒன்றே
.ஆசார்யன் திருவடிகளில் சங்கை இல்லை..மோஷம் ஒன்றுக்கே ஹேது
பகவான் திருவடிகளோ பந்தத்துக்கும் மோஷதுக்கும் ஹேது
மன்னி -ஆச்ரயித்து -திட அத்யாவசயம் பண்ணி -வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே
சொல்லுவாய் சொல்லுவேன் நான் மன்னி வாழ – இல்லை-பகு வசன பிரயோஜனம்
-ஜகத் அடங்கிலும் சேர வேண்டும் என்ற பரம காருண்யத்தால்-சொல்லுவோம் என்கிறார் –
ஜகதாசார்யர் என்பதால்.கூப்பிட்டாலும் நாம் போக வில்லை என்றாலும் நம்மை விட மனம் இன்று கூப்பிடுகிறார்–
இனியது தனி அருந்தேல் -காருண்யத்தால்  –நெஞ்சே- அந்தரங்கமாக சொல்லுகிறார்
மகா நிதி லாபத்தால் -தங்க புதையல் உள்ளதை சொல்வது போல
-பெற்ற பேற்றை -மறவாமல் சொல்லுவோம் –அவன்-நாமங்களே
–வாயால் சொன்னால் போதும்/
நிறைய நாமங்கள் உண்டு../நாராயணன் நாமம் இல்லை அவன் நாமங்கள் என்கிறார்.
.ஏவ காரத்தால் மற்றவற்றை விலக்குகிறார்.
.பிரபத்யே -பற்றுதல் மனசா வாசா காயிக-ஞானான் மோஷம் -கத்யர்தா புத்யர்தா-நினைவு தான் முக்கியம்
-மற்றவை அங்கம். ஆச்சர்யரை பற்ற சொல்வதே போதும்–.
யுக்தி மாத்ரத்தாலே -நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் போல–மனஸ் சேராமல் நாவினால் மட்டுமே சொன்னால் போதும்
நெஞ்சே சொல்லுவோம்-நித்யர் முக்தர் சம்சாரி ஆழ்ந்த பக்தர் இல்லை –
அன்யோன்ய ரசனை -போயதயந்த பரஸ்பரம்  போலே சொல்லவும் கேட்கவும் இனிமை என்பதால்
-தேவு மற்றும் அறியேன் –
ஏவ காரம்  ராமானுஜருக்கு -11 திருநாமங்கள் -1-இளைய ஆழ்வார் முதலில்/
ஸ்ரீ பெரும் புதூர் ஆதி கேசவ பெருமாள்  சாத்திய திரு நாமம் -2–பூத புரீசர் /
/நம் பெருமாள் -3–உடையவர் /
தேவ பெருமாள் -4–எதி ராஜர்
/திருவேங்கடம் உடையான்–-5-தேசிகேந்த்ரன்
ஐந்து ஆச்சார்யர்கள்  ஐந்து நாமங்கள்
சாரதா தேவி-6- ஸ்ரீ பாஷ்ய காரர்
பெரிய நம்பி -7-ராமானுஜர்–தாஸ நாமம்
திரு கோஷ்ட்டி   நம்பி-8- எம்பெருமானார்
பெரிய திருமலை நம்பி -9–கோவில் அண்ணன் /
திரு மாலை ஆண்டான்-10- சட  கோபன் பொன் அடி  /
ஆழ்வார்  திரு அரங்க பெருமாள் அரையர் -11–லஷ்மண முனி
ஆக 11 திரு நாமங்கள் –யதீந்த்ரர்  மற்றும் பல .இருந்தும் ராமானுச .நாம சங்கீர்த்தனமே அமையும்.
.நெஞ்சு-அசித் .சேர்த்து சொல்லுவோம் -சேதன சமாதியாலே ஒப்பு-உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்து -ஆழ்வாரும் நெஞ்சை கூட்டி கொள்வார்.
.ஆழ்வானும்-ஜந்து   என்று தன்னை சொல்லி  கொண்டு ஸ்வாமியால்  அசத்- சத் ஆகி – காமம் கொண்டு-யோக்யதை இல்லை ஹா ஹந்த !..அருளாள பெருமாள் எம்பெருமானார்

வேதம் ஒரு நான்கின் உள் பொதிந்த மெய் பொருள்-தீதில் சரணாகதி தந்த  இறைவன் தாள்–மா முனியும் ஆர்த்தி பிர பந்தம்-

பூ மகள் கோன்  தென் அரங்கன் பாதுகமாய்-தாம் மகிழும் செல்வ சடகோபர் ஏய்ந்து–  வாய்ந்து என் நெஞ்சமே வாழ–சொல்வது போல..

பூ மன்னு- ஸ்ரீ
மன்/பொருந்திய -மன்னு
நாராயண -புகழ் மலிந்த
சரணவ் -மார்பன்-திருமேனிக்கு உபலஷணம்
பணிந்து உய்ந்தவன் சரணம் பிரபத்யே ..
நாமம் சொல்வதே புருஷார்த்தம் இது கொண்டு வேற தேட்டம் வேண்டாமே


ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: