அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம் -நான்காம் தனியன் -இனி என் குறை நமக்கு இத்யாதி ..

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வியாக்யானம்

அவதாரிகை

இனி என்குறை நமக்கு எம்பெருமானார் திரு நாமத்தால் –
சகல வேத சாரமான சாவித்ரியின் சாரமாய் -பிரபன்ன காயத்ரியாம்படி -நூற்று எட்டு பாட்டிலும்
இராமானுசன் -என்னும் திருநாமத்தை அருளி செய்து உபகரிக்கையாலே
திருஷ்டாந்த த்ருஷ்டங்கள் இரண்டிலும் ஒரு குறைகளும் இல்லை என்று பெற்ற லாபத்தை பேசுகிறது
சோமாசி யாண்டான் அருளி செய்தது –

இனி என் குறை நமக்கு எம்பெருமானார் திரு நாமத்தால்
முனி தந்த நூற்று எட்டு சாவித்திரி என்னும் நுண் பொருளைக்
கலி தந்த செஞ்சொல் கலித்துறை யந்தாதி பாடித் தந்தான்
புனிதன் திருவரங்கத் தமுதாகிய புண்ணியனே —

வியாக்யானம்
இனி என் குறை நமக்கு –
ஒன்றும் குறை இல்லை –
த்ருஷ்டத்தில் -சொல்லப் புகில் வாய் அமுதம் பறக்கும் இராமானுசன் என்று சொல்லுமின் – -43 –
அமுதன் வாயிலே இரே அமுதம் உண்டாவது –
ஹ்ருத்யான் யம்ருத கல்பானி மன ப்ரக்லாதனானிச -ஆரண்ய காண்டம் 16-37 – –
தாமே வேஷ்வாகு நாதஸ்ய பரதச்யகதாம் குரு -ஆரண்ய காண்டம் 16-39 –
இவரும் இராமானுசன் இறே
ஆகையாலே திருஷ்ட சுகம் உண்டு
மோஷ ஏக ஹேதுவாகையாலே அதருஷ்ட சுகமும் உண்டு –
அத்தாலே இனி என் குறை என்கிறது –

எம்பெருமானார் திரு நாமத்தால் –
இராமானுசர் திருநாமம் -என்று இறே அருளி செய்தது -அந்த திரு நாமத்தினாலே –
நம் பெருமானான நாராயணன் நாமத்துக்கு ஒரு குறை உண்டு –
பந்தத்துக்கும் மோஷத்துக்கும் ஹேதுவாகை –
எம்பெருமானார் இராமானுசன் என்னும் திரு நாமம் மோஷத்துக்கே ஹேது வாகையாலே-அக்குறையும் இல்லை –
ஏவம் வித வை லஷண்யத்தை உடைய திரு நாமத்தினாலே பாடித் தந்தான் என்கிறது-

முனி தந்த –
தச்யாத்யா நாந்தச்த்தச்ய -என்றும்
முனிமாப் பிரம முதல் வித்தாய் -திருவாய் மொழி – 8-10 7- -என்றும்
முனியே -திருவாய் மொழி – 10-10 1- -என்றும் இறே-சிருஷ்டி உன்முகனான சர்வேஸ்வரனை சொல்லுவது –
அப்படி பட்ட சர்வேஸ்வரன் பிரம்மாவை சிருஷ்டித்து –
வேத ப்ரதா நத பூர்வம் காயத்ரீம் வேத மாதரம் -என்னும்படியான-காயத்ரியையும் பிரணவ பூர்வமாக உபதேசித்தான் –
அது அஷ்டோத்தர சதமாயிற்றே உச்சரித்து போருவது -அப்படியே அனுசந்திக்கும்படி –

அதன் நுண் பொருளை-சூஷ்ம அர்த்தத்தை
அந்த காயத்திரிக்கும் மாதாவாய் இறே பிரணவம் இருப்பது –
அதில் அகாரத்தாலே எம்பெருமானையும் –உகாரத்தாலே பிராட்டியையும் –மகாரத்தாலே தச் சேஷ பூதனான சேதனையும் இறே சொல்லுவது –
மகார ஸ்துதயோர்தாச-என்றும்-அக்ரத-இத்யாதியாலே
அகார உகார மகார்த்தங்கள் சப்தார்த்த ச்வாரசயங்களோடே கூடி இறே இருப்பது –இவரும் இராமானுசன் இறே
ஒமித் யாத்மா நம் யுஞ்ஜீத-என்ற சப்த ஸ்வா ரசித்தால் சேதன பிரதானத்வம் உண்டு இறே பிரணவத்துக்கு –
அது இறே நுண் பொருள் ஆவது –இராமானுசன் என்று இறே பாட்டுத் தோறும் பதஸ்த்தமாய் இருப்பது –
உவ்வானவர் இறே உடையவர்-தன் நாமத்திலும் ததீய நாமம் இறே அவன் தனக்கு இஷ்டமாய் இருப்பது –
இனித்தான்-தத் சவிதுர்வரேண்யம்-காயத்ரி -என்று ஆதித்ய மண்டல அந்தர் வர்தியான நாராயணனை இறே-அங்கு பிரதி பாதிக்கிறது –
ய ஏ ஷோந்தராதித்யே ஹிரண்மய புருஷோத்ருச்யதே –சயச்சாயம் புருஷே யச்சா சாவாதித்யே ச ஏக -என்கிறபடியே
அவை தன்னோடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் மனம் இறே-அத்தாலே சிவந்தாயிற்று இவர் வடிவு இருப்பது –
இவரும் ராமானுஜ திவாகர் இறே
ஆழ்வான் அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –
கடல் அளவாய–சுடர் ஒளி யாலே அவ்விருளைத் துரந்தது –
இப்படி யாயிற்று சாவித்திரி என்னும் நுண் பொருளை பாடித் தந்தது-
சகல வேத சங்கரஹமான திரு மந்த்ரத்தின் தாத்பர்யம் இறே ததீய சேஷத்வம்
நின் திரு எட்டு எழுத்தும் கற்று -நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -பெரிய திரு மொழி – 8-10-3 –
நுண் பொருளைப் பாடித் தந்த பிரகாரம் சொல்லுகிறது -கலி தந்த செஞ்சொல் –இத்யாதியால்
கலி தருகையாவது -மிடுக்கை தருகை-அன்றிக்கே ஆரவாரம் ஆதல் /அபூர்வம் ஆதல்
இப்படி கலியை தந்த -சப்த சக்தியை தந்த –செஞ்சொல்
செவ்விய சொல் –
செவிக்கு இனிய செஞ்சொல் -திரு வாய் மொழி -10 6-1 – -என்னக் கடவது இறே
கலித் துறை அந்தாதி பாடித் தந்தான் –கலித் துறை என்கிறது பாவிலே ஆயிற்று பாடித் தந்தது –
செஞ்சொல் கலித் துறை –ஸ்ராவ்யமான கலித் துறையிலே ஆயிற்று அந்தாதி பாடித் தந்தது
அந்தாதிப் பாட்டு அடி எடுத்து சுலபமாய் இறே இருப்பது-
பாடித் தந்தான்
அனுபவ பரீவாஹமாக பாடிப் பின்புள்ளார்க்கும் உபகரித்தார் –
புனிதன் –பரிசுத்தன்-பாடித் தந்த சுத்தி
போற்றும் புனிதனைப் போற்றுமவர் இறே – 56-
திருவரங்கதமுதாகிய புண்ணியனே
திருவரங்கத் தமுதனார் ஆகிற தார்மிகன்-இராமானுசன் மிக்க புண்ணியன் -91 –
திருவரங்கத் அமுதாகிய புண்ணியன் எம்பெருமானார் திரு நாமத்தால் கலித்துறை
அந்தாதி பாடித் தந்தான் -இனி ஏன் குறை நமக்கு என்று க்ரியை
அஷ்டோத்தர சஹஸ்ரம் வாசத மஷ்ட சமாஹித-லஷ்மணச்ய மனுர்ஜப்ய முமுஷூ பிரதந்த்ரிதை -என்றும்
யோஜபெல் லஷ்மணமனும் நித்ய மேகாந்த சம்ஸ்த்தித-முச்யதே சர்வ பாபேப்ய விஷ்ணு லோகம் சகச்சதி -என்றும் இறே
அகஸ்த்ய சம்ஹிதையில் பிராமண ப்ரஸத்யம் இருப்பது
இவரும் லஷ்மண முனி என்று சொல்லப்படும் ராமானுஜன் இறே

————————————————————————–

அமுத விருந்து –
பொழிப்புரை
முனிவனாகிய சர்வேஸ்வரன்
பிரமனுக்கு கொடுத்து அருளிய நூற்று எட்டு தடவை உரு எண்ணும் சாவித்திரி என்கிற நுண்ணிய
பொருளை -புனிதனாம் திருவரங்கத் தமுதனாராகிய புண்ணியன் -கனி போன்று இனிய செவ்விய சொல்லினால்
ஆகிய கலித் துறையில் யாக -இராமானுட நூற்று அந்தாதியை அவர் திருநாமத்தால் பாடித் தந்தான்- –இனி நமக்கு என்ன குறைவு

விரிவுரை –
இனி –குறை –
அமுதனார் பாடித் தந்த இராமானுச நூற்று அந்தாதியைப் பெற்று அனுசந்திக்கும் நமக்கு
இனி யாதொரு குறையும் இல்லையாம் -சொலப் புகில் வாய் அமுதம் பரக்கும்
இராமானுச நாமத்தை சொல்லி அமுது உண்டு களித்து இருப்போர்க்கு இம்பர் ஒரு குறையும் இல்லை –
அந்நாமம் முக்திக்கே ஹேதுவாதலின் உம்பரும் ஒரு குறை இல்லை
தேவதாயா குரோச்சாபி மந்த்ரச்யாபி பிரகீர்த்தநாத்-ஐ ஹிகாமுஷ்மிகீ சித்தி தவிஜ ச்யாச்தே ந சம்சய -என்று
தேவதை குரு மந்த்ரம் இவற்றை சங்கீர்த்தனம் செய்வதால்-இம்மை மறுமை பயன் உண்டு ஐயம் இல்லை -என்றபடி –
இருமையும் குறை இல்லாமை ஆதலுமாம் –
எம்பெருமானார் திரு நாமத்தால் –
குரோர் நாம சதா ஜபேத் -என்றபடி ஜெபிக்குமாறு அந்தாதியில் இணைத்த திருநாமம்-இராமானுச நாமமே-என்க
இத்தனியன் அருளி செய்தவர் சோமாசி ஆண்டான் –
அவருக்கு எம்பருமானார் என்னும் திரு நாமத்தில் மிக்க ஈடுபாடு உண்டு –
இதனை சோமாசி ஆண்டான் எம்பெருமானார் என்றால் திரு நாமம் நிறம் பெறுமா போலேயும் –
என்று ஈட்டில்-திருவாய்மொழி 6-5 7-அருளினதால் அறியலாம் -ஆதலின் அவர்
இராமானுச நாமத்தால் என்னாது எம்பெருமானார் திரு நாமத்தால் என்கிறார் –
திரு நாமத்தால் எனபது திருப் பேரால் என்று இருப்பின் கலித்துறைக்கு இசையும் என்பர் –முனி -மனனம் செய்பவன் -இங்கு மனனம் ஜகத் ஸ்ருஷ்டி செய்யும் சங்கல்பம் –
அத்தகைய சங்கல்பம் உடையனான பரமாத்மாவை சொல்லுகிறது-
முனி என்னும் சொல் முனியே நான்முகனே முக் கண் அப்பா -என்னும் நம் ஆழ்வார் திருவாய் மொழி -காண்க
தந்த
பரமன் பிரமனைப் படைத்ததும் முதலில் வேதத்தை அவனுக்கு தந்தான் –
மற்றவனும் (பிரமனும் )முன்னம் படைத்தனன் நான்மறைகள் -பெரிய திருமடல் ஸ்ரீ சூக்தி –
படைத்தனன் -பணம் படைத்தனன் எனபது போலே – பெற்றனன் எனபது பொருள் –
அந்த வேதத்தை தருவதற்கு முன்னர் பிரணவத்தோடு கூடிய வேத மாதாவான-காயத்ரியை முதன் முதலில் தந்தானாம் பரமன் .
நூற்று எட்டு சாவித்திரி
ஜெபத்தில் நூற்று எட்டை உடைய சாவித்திரி -என்க -நூற்று எட்டு தடவை ஜெபிக்கும்-சாவித்திரி என்றபடி –
என்னும் நுண் பொருளை
பொருளையும் அதனைக் கூறும் சாவித்ரியையும் ஒன்றாக கூறியது உபசார வழக்கு –சாவித்திரி யினால் கூறப்படும் நுண்ணிய பொருளை என்றபடி
நுண் பொருள்
சூஷ்மார்த்தம்
வெவ்வேறு பொருளை கூறும் வேதம் அனைத்துக்கும் சூஷ்மார்தம் காயத்ரியினால்-கூறப்படும் பரமாத்மா –
அந்த பரமாத்மாவை இராமானுசன் என்னும் திரு நாமத்தோடு சேர்த்து தமிழில் கலித் துறை அந்தாதியால்
அமைந்த
நூற்று எட்டு தடவை ஜெபிக்கும் சாவித்ரியை நமக்குத் தந்தார் அமுதனார் –
சாவித்ரியைப் பரமன் பிரமன் ஒருவனுக்குத் தான் தந்தான்-அமுதனார் அதனை நம் அனைவருக்கும் தந்துள்ளார் –
பரமன் தந்த சாவித்திரி பரமாத்மா என்னும் நுண் பொருளை மட்டும் புலப்படியது பிரமனுக்கு
அமுதனார் தந்ததோ அந்த நுண் பொருளை இராமானுசன் என்னும் தாத்பரிய உள் பொருளோடு-சேர்த்து நமக்கு புலப்படுத்தி விட்டது
-காயத்ரியின் பொருள் பரமாத்மா-காயத்ரியின் உள் பொருள் அப்பரமாத்வைக் காட்டித் தரும் ஆசார்யன் ஆகிய இராமானுசன்-என்றது ஆயிற்று –
கனி தந்த -உவம உறுப்பு -கனி போன்ற என்றபடி-கலி தந்த என்று எதுகை இல்லாத பாடம் கொண்டு பொருள் அருளி செய்து உள்ளார்-பிள்ளை லோகம் ஜீயர்
செஞ்சொல் –பண்புத் தொகை -செம்மையான சொல் என்று விரிக்க –
செம்மை-உள்ளம் உரை செயல் மூன்று கரணங்களும் ஓன்று பட்டு இருத்தல் –
சொல்லும் சொல் சிந்திக்கும் செய்கைக்கும் ஏற்புடைத்தாய் இருத்தல் என்றது ஆயிற்று –
செஞ்சொல் என்பதற்கு ஈட்டிலும்-திருவாய் மொழி -10 6-11 –இவ்வாறு வியாக்யானம் செய்து இருப்பது அறியத்தக்கது –
மூன்று கரணங்களும் ஓன்று பட்டு அனுசந்திக்கும் ப்ரபந்தம் இராமானுச நூற்று அந்தாதி என்றதாயிற்று –
மறை பயந்த பண்பன் பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும்-சாவித்ரியினால் பயன் இல்லை –
சிந்தையும் சொல்லும் செயலும் ஓன்று பட்டு அனுசந்திக்கும் அந்தாதி சாவித்திரியோ ஒரு காலும்-பயன் அற்றதாகாது என்க –
கனி தந்த செஞ்சொல் -செவிக்கு இனிய செஞ்சொல் எனபது போன்று உள்ளது
புனிதன் புண்ணியன் -போற்றும் புனிதனோடும் மிக்க புண்ணிய னோடும் அமுதனார்-சாம்யாபத்தி பெற்றபடி –
இத்தனியன் திரு நாராயண புரத்தில் மட்டும் அனுசந்திக்கப் படுகிறது-

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தால் ஜல்பித்தல் –
ராம -அ காரம் அனுஜம் ம காரம்.–கல்யாண குணங்கள் சொல்ல ராம –அழகு நாராயண சப்தத்தில்
நேராக இல்லை ரம்யதி ராம .-அது போலே இவரும் காஷாய சோபி
பற்பம் என திகழ் பைம் கழலும் தண் பல்லவமே விரலும் –எப்பொழுதும் எதிராசன் வடிவு அழகு
என் இதயத்து உளதால் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் யெல்லை எனக்கு என்பாரே -எம்பார்
வேத சார உபநிஷத் சார தர அநுவாகசார தமம் – நாராயண காயத்ரி..-திரு மந்த்ரம் –
புத்தியை தூண்டுபவனுக்கு நமஸ்காரம்..
-சவித்ரு மண்டல மத்திய வர்தியில்– உள்ள ஒண் தாமரையாள் கேள்வன ஒருவனையே நோக்கும் உணர்வு..–வைதிக முறை –
எங்கள் மாதவன் –அண்ணல் ராமானுஜ திவாகரன் தோன்றிய அப் பொழுதே நாராயணற்கு ஆள் ஆயினரே
..கை வளையும் மேகலையும் காணேன்-ஐஸ்வர்யமும் கைவல்யமும் – கண்டேன் கன மகர குளை இரண்டும் நான்கு தோளும் –
த்ருஷ்டமும் அத்ர்ஷ்டம் ஆயிற்று அதிர்ஷ்டம் த்ருஷ்டம் ஆயிற்று
அங்கு நாமி பலம்–சுக்ரீவன் பெருமாளை பற்றியது
இங்கு நாம பலம் –தொண்டர் அடி பொடி ஆழ்வார் திரு நாமம் பற்றிய பலம் -அழகிய வியாக்யான வார்த்தை….
கண்ணி நுண் சிறு தாம்பு 11 பாசுரங்கள்
11 பாசுரங்கள் போதும் ஆழ்வாரை அடைந்தேன் என்று சொல்ல
4000-பாசுரங்களும் கூட வேண்டும் அவனை அனுபவித்து கிடைக்கலாம் என்று சொல்ல.
.அது போல 108 இங்கு –சாவித்ரியின் சாரமான பிர பன்ன காயத்ரி. -இது என்பதால் –
இத்தால் திருஷ்ட அதருஷ்ட இரண்டிலும் ஒரு குறைகள் இல்லை.
சொல்ல புகில் வாய் அமுதம் பரக்கும் இராமனுசன் என்று சொல்லுமின் -என்று அமுதனாரே பின்பு அருளுகிறார்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே போல.
.அமுதன் வாயில் இறே அமுதம் உண்டாவது.இங்கு
ஆயிரம் தோளால் அமுதம் கடைந்தானே-உங்கள் அமுதம் பெற என் அமுதம் தானா கிடைத்தது..
–திருஷ்ட சுகம் உண்டு..நவ ரத்னம் பிறந்தது இராமனுசன் அமுதம்..நக கிரந்தங்களை நமக்கு அருளி –
மோஷகஹேது-அதனால் தான் -இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே..
–அதருஷ்ட சுகமும் உண்டு..பந்தத்துக்கும் ஹேதுவாகை நாராயண நாம குறை
…எம்பெருமானார் -சரம ஸ்லாக அர்த்தத்தை வெளி இட்டு அருளியதாலே எம்பெருமானார் பெயர் பெற்றார்..உபதேசம் பண்ணின பின்பு..
-இதனால் தான் மா முனிகள் வ்யாக்யானத்தில்– வெளி இட்டு எம்பெருமானார் ஆனார் என்று குறிப்பிடுகிறார்
திரு கோஷ்டியூர் நம்பி சாத்திய திரு நாமம் இறே இது
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா-பட்டாபிஷேகம் பண்ணி கொண்டவனே –
அன்று யோக்யதை இருக்கா என்று பார்த்தா ரஷித்தாய்-உங்களில் ஒருவன்..
ஒத்து கொள்ள வேணும் என்று அருளினாயே – அந்த புண்ணியம் எங்கள் உடன் இருக்கிறது– நீ மறந்தாய் என்றாள் ஆண்டாள்..
மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே -நடுவில் உள்ளதை கீழும் மேலும் சேர்த்து அர்த்தம் கொள்ளுவது போல இங்கும்..
இனி என் குறை நமக்கு எம்பெருமானார் திரு நாமத்தால் என்றும்
எம்பெருமானார் திரு நாமத்தால் முனி தந்த நூற்று எட்டு சாவித்திரி எண்ணும் நுண் பொருளை –இல்லை எனக்கு எதிர் -எம்பார் –
முனி தந்த—நாராயணன் அருளிய-முநியே நான் முகனே முக்கண் அப்பா
முனி மா பிரம முதல் வித்தாய்
மனன சீலன் முனி..–ஸ்ருஷ்ட்டி உன்முகன்
–பிரம்மாவை சிருஷ்டித்து வேத பிரதான பூர்வம் காயத்ரீம் வேத மாதரம்–பிரணவ பூர்வமாக உபதேசித்தான்.
.108 அனுசந்திப்பது போல..அதில் நுண் பொருள் பிரணவம்.
.ராமன் அ கார அர்த்தம் பிராட்டி உ கார அர்த்தம் ம காரம் லஷ்மணன் நடந்தால் போல
சப்த அர்த்த கடக சுவாரஸ்யங்கள் இருப்பது-உபய பிரதானம் என்றவாறு -சப்தத்தால் பரமாத்மாவுக்கு அர்த்த ஸ்வாரஸ்யத்தால் ஜீவாத்மாவுக்கு -பிரதானம் -கடக ஸ்வாரஸ்யம் உகாரம் பிராட்டி புருஷகாரம் வேண்டுமே
இஷ்வாக நாதச்ய பரதச்ய கதாம் குரு-ஹ்ருத்யான் அம்ருத கல்பாநிமான ப்ரகுலாதனானிச–இவரும் இராமனுசன் இறே..
.பரதனை பற்றி பேசினால் இனிக்கும் பெருமாளுக்கு -அவனை நாதனாக நினைத்து வாலி இடமும் அவன் காரியமாக காட்டுக்கு வந்தேன் என்றாரே -.அர்த்த ச்வாஸ்ரச்யம் லஷ்மணன் போல இவரும்.
உ ஆனவரே உடையவர் பிராட்டிக்கு சாம்யம்..இருவர் திருவடிகளையும் காட்டி கொடுப்பவர் ஆச்சார்யர்.
.அவ்வானவருக்கு ம வானவர் அடிமை என்று உ வானவர் சொல்லி கொடுப்பார்
ஆமது கண்ணனின் காமம்..தன் நாமத்திலும் ததீய நாமம் இறே அவன் தனக்கு இஷ்டமாய் இருப்பது .
.தத்சவிதுர்வரேண்யம்-ஆதித்ய மண்டல வர்தியான நாராயணனை சொல்லி
பின்பு அவை தன்னோடும் வந்து இருப்பிடம் மாயன் இராமனுசன் அமுதனார் மனம் இறே -அத்தாலே சிவந்த தாயிற்று இவர் வடிவு இருப்பது
அரவிந்த பாவை காந்தி வீச சிவப்பு..ராமானுஜ திவாகரன் …கடல் அளவாய சுடர் ஒளி யாலே அவ் இருளை துரந்தது.-கோவிந்தா -பட்டாபிஷேகம் -பண்ணிக் கொண்டாயே -அஹம் வோ பாந்தவோ ஜாத சொன்னாயே –கர்மாதி யோகம் உண்டா கேட்கலாமோ -உனக்கு நினைவு படுத்துகிறேன் –அதே போலே இங்கு எம்பெருமானார் –.எம்பெருமானார் சொல்லி மோக்ஷ பிரதனும் இவரே அதிருஷ்ட பலமும் கிட்டும் என்று காட்ட –
திரு மந்த்ரத்தின் தாத் பர்யம் இறே ததீய சேஷத்வம்..நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை பெரிய திரு மொழி 8-10-3-
திரு தொலை வல்லி மங்கலம் என்ற திரு பெயரை ஆழ்வார் சொல்ல நாம் ரசிப்பது போல
எம்பெருமானார் என்று சோமாசி ஆண்டான் அருளுவதால் ரசிக்கும்-
அப்பொழுதான் தான் நிறம் பெரும் ..இது போல் தானே ஸ்ரீ பட்டர்-வாயாலே அழகிய மணவாளன் என்பதும்
திரு மங்கை ஆழ்வார் -திரு கண்ண புரம் என்பதும்
திரு வேங்கடம் என்று -அனந்தாழ்வான் சொல்வதும்
திரு மழிசை ஆழ்வார் -ஆரா அமுதன் சொல்வதும் போல.

கனி தந்த கலி தந்த என்று இரண்டு பாட பேதங்கள்
கலி தருகை -மிடுக்கை தருகை/ஆரவாரம் ஆதல் /அபூர்வம் ஆதல்..செஞ்சொல்– கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்.
–முக் கரணங்களும் சேர்ந்து போகும் இதை சொன்னால்-
.புனிதன் -பரி சுத்தன் ..பாடி தந்த சுத்தி போற்றும் புனிதனை போற்றும் அவர் இறே–புனிதனை பாடிய இவரும் புனிதன்-
-.கண்ணனை பாட ஆழ்வார் ஆழ்வாரை பாட மதுரகவி ஆழ்வாரையும் ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வாரையும் போலே
இராமனுசன் மிக புண்ணியனே .
கனி தந்த -கலி தந்த -எதுகைக்காக ..கனி போன்ற செஞ்சொல் என்றும் கொள்ளலாம் .
கலி துறை பா இனம் ..பாசுரம் ஏ காரத்தில் முடியும்..கண் நுண் சிறு தாம்பிலும் ஏ காரத்தில் முடியும்-பாகவத பிர பாவம் நிச்சய புத்தி உண்டு..
அந்தாதி அடி எடுத்து சுலபம்..பாடி தந்தான்-அனுபவம் வாய் வெளியே வெளி வந்து பின்பு உள்ளாருக்கும்
–புனிதன் புண்ணியன்-தார்மிகன் இராமனுசன் மிக்க புண்ணியனே  -91-
இரண்டும் சொல்லி…அசுத்தம் போக்கி கொடுக்கும்.காம குரோதங்களும் போக்கும்..
எம்பெருமானார் திரு நாமத்தால் கலி துறை அந்தாதி பாடி தந்த-திரு அரங்கத்து அமுதாகிய புண்யன் இனி என் குறை நமக்கு -கரியை..புனிதன் புண்ணியன் அமுதனை பாடிய புனிதன் புண்ணியன் அமுதனார் -அதிகிருதா அதிகாரம் இல்லை  சர்வருக்கு நாமம் – -நாமங்கள் உடைய நம்பி –மூன்று எழுத்துடைய பேரால் / மந்த்ரம் –நாமம் –பேர்- மூன்று நிலைகள் -இதுவே போதுமே அந்த ஏமாளி நம்மை ரஷிக்க –


ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: