அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம் -மூன்றாம் தனியன் -சொல்லின் தொகை கொண்டு இத்யாதி ..

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வியாக்யானம்

அவதாரிகை

சொல்லின் தொகை கொண்டு-இது அமுதனார் அருளி-செய்ததாதல் -அவர் அபிப்ராயத்தாலே அபிநிவேசம் உடைய ஆஸ்திகர்
அருளி செய்ததாதலாய் இருக்கும்-அபியுக்தர் அருளி செய்தது

சொல்லின் தொகை கொண்டு உனதடிப்போதுக்கு தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என் தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறு சமய
வெல்லும் பரம இராமானுச இது என் விண்ணப்பமே –

வியாக்யானம் –

சொல்லின் தொகை கொண்டு –
இவ்வளவாக சொல்லக் கடவோம் -என்று சங்க்யா நிர்த்தேசம் பண்ணி –
அன்றிக்கே –
சப்த சமூஹகங்களைக் கொண்டு என்னவுமாம் –
உனதடிப்போதுக்கு-
தேவரீருடைய திருவடி தாமரைகளுக்கு
தொண்டு செய்யும் –
வாசிக கைங்கர்யமாக இரும் கவிகளைப் புனையும்
நல்லன்பர் –
நல்லார் பரவும் -60 -என்கிறபடியே அநந்ய பிரயோஜன பக்தி யுகதர்
ஏத்தும் உன் நாமம் எல்லாம்
அந்த பக்தி பாரவச்யத்தாலே ஸ்தோத்ரம் பண்ணும் தேவரீருடைய திரு நாமம் எல்லாம்
என் தன் நாவினுள்ளே –
அந்த திருநாமங்கலையே அனுசந்திக்க வேணும் என்கிற என் தன் நாவின் உள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு –
நள் இருளளவும் பகலும் நான் அழைப்பான் – என்னும்படி திவா ராத்ர விபாகம் அற பொருந்தி இருக்கும் படி-உபகரித்து அருள வேணும்
அறு சமய வெல்லும் பரம –
கூறும் சமயங்கள் ஆறும் குலையும்படி இறே வெல்லுவது -46 -இப்படி வெல்லும் பரம -வெல்லுகிற மேலானவரே ஸ்ரேஷ்டரானவரே
இராமானுச –
நாலு எழுத்தால் நாராயண நாமத்திலும் அதிகமான திரு நாமத்தை உடையவரே
உன் நாமம் எல்லாம் எந்தன் நாவினுள்ளே அல்லும் பகலும் அமரும்படி நல்கு –இது என் விண்ணப்பமே –
இது என் விஜ்ஞாபதம்
தேவரீர் நாலு எழுத்து உடைய திரு நாமம் என்னாவிலே அமரும்படி நல்கி அருள வேணும் -இராமானுசன் என்று இறே முடிய அருளி செய்தது –
சொல்லின் தொகை கொண்டு –
நூற்று எட்டு பாட்டாக சொல்ல வேணும் என்று சொல்லின் தொகையை –
சங்க்யா  நிர்த்தேசத்தை திரு உள்ளத்தில் கொண்டு
உனதடிப்போதுக்கு –
இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -1 – என்றும்
இராமானுசன் அடிப் பூ மன்னவே -105 – என்று இறே
இவர் ராமானுசன் அடிப்போதுக்கு வாசிகமாக தொண்டு செய்தது
இப்படி தொண்டு செய்யும் நல் அன்பர் அமுதனார் இறே
ஏத்தும் உன் நாமம் –
அவர்களால் ஸ்தோத்ரம் பண்ணப் பட்ட தேவரீர் திரு நாமமான நூற்று எட்டுப் பாட்டும்
என் தன் நாவினுள்ளே அல்லும் பகலும் அமரும் படி நல்கு –
இத்தை நிரந்தரம் அனுசந்திக்க வேணும் என்கிற எந்நாவினுள்ளே
திவாராத்ரம் திரு நாமம் அமரும்படி அனுக்ரஹிக்க வேணும்
இது என் விண்ணப்பம்
இதம் மம விஜ்ஞாபனம் -ஸ்தோத்ர ரத்னம் -57 –
அடியேன் செய்யும் விண்ணப்பமே -திரு விருத்தம் -1 –
இது அமுதனார் நிர்வாஹத்தை அனுவதித்து சொன்ன படி

————————————————————————–

அமுத விருந்து–

பொழிப்புரை –

அறு வகைப் பட்ட மதங்களையும் ஜெயிக்கும் பெரியோனே -இராமானுசா
சொற்களால் யாத்த பாசுரங்களின் கண்ணிக்கையே -இவ்வளவு என்று அதாவது நூற்று எட்டு என்று –
நெஞ்சில் கணக்கிட்டு கொண்டு நின் திருவடி தாமரைகளுக்கு -வாசிகமான பணி புரியும் நல்ல அன்பரான
திருவரங்கத் தமுதனார் பரவும் உன் திரு நாமம் எல்லாம் -திரு நாமம் பொதிந்த நூற்று எட்டு பாசுரங்களும் –
என்னுடைய நாவிற்குள்ளே இரவும் பகலும் நிலை நிற்கும் படி அருள் புரிக –

விரிவுரை –

சொல் என்பது  சொல்லினால் ஆகிய யாப்புக்கு ஆகுபெயர்
தொகை -எண்ணிக்கை
கொண்டு -உள் கொண்டு
அடி போதுக்கு தொண்டு -இராமானுசன் சரணாரவிந்தம் -என்று தொடங்கி
இராமானுசன் அடிப்பூ-என்று தலைக் கட்டினமை காண்க –
நல் அன்பர்
அன்பர் -பகவான் இடம் பக்தி புரிபவர்
நல் அன்பர் -ஆசார்யன் இடம் பக்தி புரிபவர்
நாமம் எல்லாம் –
இராமானுசன் என்னும் ஒரு நாமம் தான் அமுதனார் அந்தாதியில் குறிக் கொள்ளப் பட்டு உள்ளமையின்
நாமம் எல்லாம் என்பதற்கு -திரு நாமத்தை முக்கியமாக தன்னகத்து அடக்கிக் கொண்டு உள்ள பாசுரங்கள்
எல்லாம் என்று பொருள் கொள்ள வேண்டும் –
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று அமுதனார் தொடங்குதல் காண்க –
நாவினுள்ளே அமரும்படி நல்கு -தங்கு மனம் நீ எனக்கு தா என்றது போன்றது இவ் வேண்டுகோளும் என்க –
எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கும் வண்ணம் இனிமை வாய்த்து இருத்தலின் அல்லும் பகலும் அமரும்படி நல்கு என்கிறார் –
சொலப் புகில் வாய் அமுதம் பரக்கும் -என்று அமுதனார் அருளியது இங்கு கருத தகும்
அறு சமயம் வெல்லும் பரம
ஆறு மதங்களையும் வாதில் வென்று மேன்மை பெற்றவர் என்றபடி –
கூறும் சமயங்கள் ஆறும் குலையும்படி இராமானுசன் வந்ததாக அமுதனார் கூறியது காண்க –
மதங்கள் ஆறும் அறுகிறவை யாதலின் அறு சமயங்கள் ஆயின போலும்
அவற்றை எளிதில் வென்றார் என்க
இனி நல் அன்பர் எனபது அமுதனாரை மாதரம் அன்றி எல்லா இராமானுசன்
அடியார்களையும் கூறுவதாக உரைப்பதும் உண்டு –
அப்பொழுது சொல்லின் தொகை என்பதற்கு சொற்களின் கூட்டம் என்று பொருள் கொள்க
சொல் -சொல்லினால் ஆகிய ப்ரபந்தம் என்றபடி
தொகை -கூட்டம்
நல்லார் பரவும் துதி நூல்களில் உள்ள இராமானுசனுடைய எல்லா நாமங்களும் நாவினுள்ளே அல்லும் பகலும்
அமரும்படி நல்க வேண்டும் என்றதாயிற்று

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தால் ஜல்பித்தல் –

திரு கால் ஆண்ட பெருமான்– கள்ள சகடம் கால் ஓச்சி–
திருவடி  நம்மை மட்டும் அன்றி அவனையும் ரட்ஷித்து கொடுக்கும்..

ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன்-வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் -ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன்
செம் தமிழ் வேதம் தரிக்கும்-பேராத வுள்ளம் பெற –திரு வாய் மொழி தரிக்க ஸ்வாமி திருப்பாதம் அனந்தாழ்வான் வணங்குகிறார் –
எங்கள் கதியே இராமானுச முனியே-சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த
மறை யாயிரம் அனைத்தும்-தங்கு மனம் நீ எனக்கு தா -பெரிய திரு மொழியும் தங்கு மனமும் ஸ்வாமியே அருள வேண்டும் என்றார் எம்பார் –
அது போலே இங்கும்  அமுதனார் வேண்டிக் கொள்கிறார்-அமரும்படி நல்கு -என்று
-அமுதனாரே அருளிய தனியன்–சொல்லின் தொகை கொண்டு-இவ்வளவாக சொல்ல கடவோம்-
சப்த சமூககங்கள் கூட்டம்-கொண்டு..வாசிகமாய்-
அங்கு -இரும்கவி அழகிய பெரிய
நல் அன்பர்/ நல்லார் பரவும்-60- ராமானுஜர்-அநந்ய பிரயோஜனர் பக்தி யுக்தர் ஏத்தும்.
.மதுரகவி ஆழ்வார் – பாவின் இன் இசை பாடி திரிவனே நம்பி-தென் குருகூர் நம்பி என்னக்கால் அமுதூரும் என் நாவுக்கே.
-நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் யார் என்றால்-உனது அடி போதுக்கு தொண்டு செய்வதால் நல் அன்பர்..
உன் நாமம் எல்லாம்
-பக்தி பாரவச்யத்தாலே ஸ்தோத்ரம் பண்ணும் தேவரீர் உடைய திரு நாமம் எல்லாம்–
பள்ளியில் ஓதி வந்த சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம் -பெரிய திருமொழி -2 3-8 –ஆயிர நாமம் ஒன்றே ஆயிரத்துக்கு சமம்.
.அசுர குழந்தை சொன்னானே ஓன்று சொன்னாலும் ஆயிரம் சமம்.
ஸ்ரீ ராம ராம ராமேதி –சகஸ்ர நாம தத் துல்யம் போலே
அமுதனார்-நானும் நீசன் –ஓன்று -இராமானுச -சொன்னாலும் எல்லாம் போல கொள்ளுவாயே  –
நாவினால் நவிற்று இன்பம் -மனசு சக கார்யம் இன்றிக்கே- கேவலம் நாவால் மட்டுமே  சொன்னாலும்..
அல்லும் பகலும் –நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்–
அமரும் படி-
நிலை நிற்க-பொருந்தி இருக்க
-அறு சமயம் வெல்லும் பரம
–கூறும் சமயங்கள் ஆரும் குலையும் படி
சங்கர பாஸ்கர யாதவ பாச்பத பிரபாகரின் தங்கள் -மதம்-இந்த ஆறும்
ஐந்தை சொல்லி தங்கள் மதம் என்று சொல்லாத அனைத்தையும் சேர்த்து கொள்ள –
அறுத்து -நாக்கை வெல்லுவது இதை விட மிக பெரியது /அமுதனார் வார்த்தை
..நாம் சொல்வது நல் அன்பர் =அமுதனார் அனுவாதம் பண்ணி நாமும் பாட-..உனது அடி போதுக்கு தொண்டு செய்யும்-திருவடி என்றே அருளி
ராமனனுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ
இராமனுசன் அடி பூ மன்னவே./இப்படி தொண்டு செய்யும் நல் அன்பர் அமுதனார் ..
இரவும் பகலும் -அகலாமல் இருக்கும் படி
நினையாத அன்று எனக்கு பட்டினி நாள்/சொரூப நாசம்
இது என் விண்ணப்பம் அடியேன் செய்யும் விண்ணப்பமே போல
இதம் மம விக்ஜ்ஞாபனம் -ஸ்தோத்ர ரத்னம் -57-
தூது விட்டு விட்டு பலனை உடனே கொடுப்பார்.. என்ற நம்பிக்கை.. ஆழ்வார்களுக்கு-சொல்வதே நம் கடமை –அறிவிப்பே அமையும்
மடி பிடித்து கொள்வான் அன்று கொடுக்க வந்தோம் ஆண்டாள் மட்டுமே சொல்ல முடியும்..
அறிவிப்பே அமையும் அருளி விட்டு துடிப்பு  மாறாமல் -இருக்கணும்..
கட்டி பொன் போல அவன்–பணி பொன்போல அவன்நாமம் -இதை சொல்ல யோக்யதை சம்பாதிக்க வேண்டாம் இது தானே கொடுக்கும்..


ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய  பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: