அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம் -இரண்டாம் தனியன் –நயம் தரு பேரின்பம் எல்லாம் இத்யாதி ..

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வியாக்யானம்

—அவதாரிகை –

நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது என்று –ப்ராப்ய ஆபாசங்கள் ஹேயம் என்று புத்தி பண்ணி -தம் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள் விஷயமாக
சம்சார ஜெயத்தை பண்ணித் தரும் அத்தாலே -அந்த யசசை உடைய எம்பெருமானார் திருவடிகளில் உத்துங்க குணத்தை உடைய
திருவரங்கத்து அமுதனார் தம்முடைய நிரவதிக பக்தியினாலே பணிக்கும் நூற்றந்தாதியை ஓத சம்மதி என்று மனசை அர்த்திக்கிறதாய் இருக்கிறது –

நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது என்று நண்ணினார் பால்
சயம் தரு கீர்த்தி இராமானுசமுனி தாள் இணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத் தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை யந்தாதி யோத விசை நெஞ்சமே –

வியாக்யானம்

நயம் தரு பேரின்பம் எல்லாம்
விஷயங்களால் வரும் நிரவதிக சுகங்கள் எல்லாம்
நயம் -விஷயம்
நாணாமை நள்ளேன் நயம் -முதல் திருவந்தாதி – -63 -என்கிற இடத்துக்கு விஷயங்களை என்று இறே வியாக்யானம் பண்ணி அருளிற்று
-அஞ்ஞர் அபிப்ப்ராயத்தால் சிற்றின்பத்தை பேரின்பம் என்கிறது –
பழுது என்று
அவற்றை ஹேயம் என்று விசாரித்து விட்டு-நண்ணினார் பால்–ஆஸ்ரயித்தவர்கள் விஷயத்தில்
சயம் தரு கீர்த்தி இராமானுசன்–அவர்களுக்கு சம்சார ஜெயத்தை பண்ணித் தருகிற எம்பெருமானார் –
இப்படி ஆசாபாசங்களை விட்டு ஆஸ்ரயித்தவர்கள் ஆழ்வானும் அமுதனாரும் ஆயிற்று –
இராமாநுஜார்ய விஷயீக்ருதம்-வரத ராஜ ஸ்தவம் –
அக்காதலால் அளற்ற முந்தி மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று -இராமானுச நூற்றந்தாதி – 42-என்றார்கள் இறே
காமாதி தோஷ ஹர மாத்ம பதாச்ரிதாநாம் ராமானுஜம் யதி பதிம் -யதி ராஜ விம்சதி – 1
மதநக நைர்நக் லிச்யந்தேய தீஸ்வர சம்ச்ரயா -யதிராஜ சப்தத்தி -என்னக் கடவது இறே
இது வாயிற்று சயம் தருகிறது
சயப் புகழார் -திரு வாய் மொழி -3 1-11 – என்னுமா போலே
இராமானுஜ முனி தாள் இணை மேல்
இப்படி ஆஸ்ரித ஜன ஜய ப்ரதரனான ராமானுஜ முனி சரணத்வய விஷயங்களிலே
வாசிக கைங்கர்யமாக செய்த பிரபந்தத்தை அப்யசிக்க சம்மதி என்று ஸௌமனச்யமுன்டாம்படி மனசை அர்த்திக்கிறது –
இராமானுசன் உன் சரணார விந்தம் -1 –
இராமானுசன் தன் இணை அடி -50 –
இராமானுசன் அடிப் பூ மன்னவே -105 –
என்று இறே ஆதி மத்ய அவசானம் அங்க்ரித்வய விஷயமாய் இருப்பதாயிற்று இப் பிரபந்தம் தான்
அன்றிக்கே
நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது இன்றி நண்ணி நம் பால் சயம் தரு கீர்த்தி இராமானுச முனி -என்று இத் தனியன் அருளி செய்தவர் அபிப்ராயமாகவுமாம்-
அதாவது –
நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது இன்றி நண்ணி நம் பால் –
நன்மையைப் பண்ணுமதான நிரதிசய சுகங்கள் எல்லாம்-பழுது இன்றி -சங்கோசமின்றிக்கே
நண்ணி நம் பால் –
தந்தை நல் தாய் தாரம் தனயர் பெரும் செல்வம் என்று எனக்கு நீயே எதிராசா -ஆர்த்தி பிரபந்தம் – 3 -என்கிறபடியே –
சர்வ சுகங்களும் அவரே என்று ஆச்ரயித்த நம்முடைய விஷயமாக என்று இங்கனேயும் -யோஜிக்கவுமாம்-
அன்றிக்கே
நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது என்று
ததிதரங்களை த்ருணவத் கரித்து
நண்ணி -நாராயணனை நண்ணினவருமாய் என்று எம்பெருமானாருக்கு விசேஷணம் ஆகவுமாம்-
நன் பால் -நல்ல ஸ்வபாவத்தாலே
பர சம்ருத்தியே பேறான ஸ்வபாவத்தாலே
சயம் தரு கீர்த்தி இராமானுசன்தான் நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது இன்றி நண்ணின
மாதரம் அன்றிக்கே தம்மை ஆஸ்ரயித்தவர்களும் -நரகத்தை நகு நெஞ்சே -திரு வாய் மொழி -10 6-5 – –
என்கிறபடியே சம்சாரத்தை வெல்ல வல்லராம்படி பண்ணி -அத்தாலே வந்த யசசை வுடையவர் என்றாகவுமாம் –

த்ருணீ கருத விரிஞ்சாதி நிரந்குச விபூதய-இராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலின -என்னக் கடவது இறே –

————————————————————————–

அமுத விருந்து –

பொழிப்புரை

நெஞ்சமே தம்மைக் கிட்டினவர்கள் திறத்துப் புலன்கள் தருகின்ற பெரிய இன்பம் வீணே என்று உபதேசித்த காரணத்தால் அவற்றில்
நெஞ்சு செலுத்தாதபடி செய்து -அவர்களுக்கு வெற்றியினைத் தரும் புகழ் வாய்ந்த இராமானுசனுடைய இரு திருவடிகள் விஷயமாக –
சிறந்த குணம் உள்ளவரான திரு வரங்கத் தமுதனார் மென்மேலும் பெருகும் பக்தியினால் சொல்லும் கலித்துறை யினால் ஆகிய
அந்தாதியான இராமானுச நூற்றந்தாதியை ஓதுவதற்கு சம்மதிப்பாயாக-

விளக்க உரை

நயம் –

நண்ணாமை நள்ளேன் நயம் -என்னும் இடத்தில் போலே இங்கு  சப்தாதி விஷயங்களை சொல்லுகிறது
அவை தருமின்பம் அல்ப சாரமே யாயினும் விபரீத இலக்கணையால் பேரின்பம் என்றார் -இகழ்ச்சி குறிப்பு
தனித் தனியே நுகரும் இன்பம் அனைத்தும் சேரினும் பயன் இல்லை -எல்லாம் வீணே என்றபடி -நயங்கள் தரும் இன்பம் எல்லாம் வீண்-
அரங்கன் தரும் இன்பமே பயனாவது எனபது கருத்து-என்று -என்று உபதேசிக்கும் காரணத்தால் இராமானுச முனி தன்னை அண்டினவர்களை
உபதேசித்தால் உலகியல் இன்பத்தில் ஈடுபடாது வீறுடன்விளங்க செய்து புகழ் பெறுகிறார் என்றபடி –
இங்கனம் உபதேசத்தால் சப்தாதி விஷயங்களில் நின்றும்வேறுபடுத்தி வீறுபட விளங்கும்படி அமுதனாரை இராமானுச முனி செய்ததாக
ஆயிழையார் கொங்கை தங்கும் அக்க்லாதல் அளற்ற அழுந்தி மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று –
அவ்வமுதனாரே அருளி செய்து இருப்பது இங்கே நினைவுறத் தக்கது –

நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது என்று விட்டு நண்ணினார் பால் -என்று கூட்டிப் பொருள் கூறுவாரும் உண்டு –
அங்கன் பொருள் கூறுபவரே -ஆயிழையார்-என்று மேற்கோள் காட்டுவது பொருந்துமா எனபது சிந்திக்க தக்கது –
காதல் அளற்றில் அழுந்தும் காலத்து தம்மை இராமானுசன் காத்ததாக கூறினாரும் அன்றி அதனை விட்டு நண்ணின பின் காத்ததாக கூற வில்லையே –
ஏனையோர் போல் அன்றி சரம பர்வத்தில் ஊன்றி நிற்றலுக்கு உறுப்பான நற்குணம் என்பார் -உயர்ந்த குணம் -என்கிறார்
அமுது -அமுதனார்
பகவத் விஷயத்துக்கே ஆள் பற்றாத இவ்வுலகில் ஆசார்யன் திறத்தில் ஆள் பட்டு அவன் துதியை ஓதுவதற்கு இசைத்தல் மிக அரிது ஆதலின்
ஓத இசை -என்று நெஞ்சை வேண்டிக் கொள்கிறார் -இவ் வேண்டுகோளை கேட்பார் பிறர் எவரும் கிடையாமையின் தன் நெஞ்சையே வேண்டிக் கொள்கிறார் என்க-

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தால் ஜல்பித்தல் –

கலி துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே– கலி தொகை -யாப்பு இலக்கணம்.திரு விருத்தம் போல.-திரு விருத்தம் கலி தொகை
16 / எழுத்துக்கள் நேர் அசையில் தொடங்கினால் -நிறை அசையில் தொடங்கினால் -17-எழுத்துக்கள் -இராமானுச நூற்றந்தாதி –
சொல் இசை அந்தாதி /பொருள் இசை அந்தாதி இரண்டு வகை உண்டே –
நயம் -விஷயாந்தரம்-பழுது என்றி -தோஷ தரிசனம்- பேர் இன்பம் -அனுபவிப்பான் அபிப்ராயத்தால்-பழுது இன்றி -பாட பேதம்
..சயம் -வெற்றி தரும்-ராமனுஷ முனி தாள் இணை மேல் -கீர்த்தி -ஓதும் அந்தாதி
-யார்- அன்பால் இயம்பும்-திருவரங்கத்து அமுதால்- உயர்ந்த குணம் கூடியவர்-இந்திரிய ஜெயம் கொடுக்க கூடிய –
காமம் குரோதம்-அவித்யை என்கிற -தாய்க்கு பிறந்த இரட்டை குழந்தைகள் போலே –
ஆசை ஏற்பட்டு கிடைக்காமல் கோபம் பிறக்கும்..
மூன்று த்யாகதோடு-கர்த்துருத்வ த்யாகம்-மம த்யாகம் பல த்யாகம்–ஆகிய மூன்றுடன் கர்ம யோகம் செய்ய
விட வேண்டிய மூன்றும் வந்தால் மேல் சொன்ன மூன்றும் -பக்தி ஞானம் வைராக்கியம் தானே வரும்..
வைஷ்ணவனாக வளர இவை வேணும்..அனுஷ்டானம் முக்கியம்..கிரியா- வெளி அடையாளம் மட்டும் போதாது
….உபதேசம் செய்ய கண்ணன் அவதாரம் -ராமனாக அவதரித்து அனுஷ்டித்து காட்டியதை –
ஸ்வாமி-அறிவிலா மனிசர்காக திருவடிகள் காட்டி காம குரோதம் போக்க
..சத்வ குணம் வளர ஆச்சார்யர் திருவடி சம்பந்தம் வேணும்..
உக்தியாலும்-உபதேசத்தாலும்- அனுஷ்டானங்களாலும் காம குரோதங்களை தொலைக்க சுவாமி உதவினார்..
முதலி ஆண்டானை ஸ்ரீ பாத தீர்த்தம் கொடுக்க சொல்லி திரு நாராயண புரத்தில் பலரையும் திருத்தினாரே..
தீர்த்தம் வாங்கும் முறையில் தாமே கடைசியில் வாங்கி கொண்டு காண்பித்தாரே.
அனுஷ்டானத்தில் காம குரோதங்களை நீக்கினார்.
இசை நெஞ்சே
என்றும் தொழுது எழு மனனே -முதலில் நெஞ்சை இழுத்து அப்யாசம் பண்ணி மெது மெதுவே ஏறணும்
–எதி பதிம் பிரணமாமி மூர்த்தனா–தோஷம் என்று புத்தி பண்ணி சம்சாரம் விலக கொடுக்கும்
கீர்த்தி-உயர்ந்த குணம்-உத்துங்க குணம்-உடைய அமுதனார்
கொள்ள குறை வில்லாத நிரவதிக -பக்தி-பணி என்று நெஞ்சை அர்த்திகிறார்
நயம்-விஷயம் -நாணாமை நள்ளேன் நயம் -முதல் திரு அந்தாதி -63
வெட்கம் இருப்பதால் –பெண் உடை போட்டு இருக்கிற ஆணை ஆசை பட்டு வெட்கம் படுவது போல.
-சிற்றின்பம் -அக்ஜர் அபிப்ராயத்தாலே.
தீண்ட தகாதவை இவை.. ஒதுக்கி வைக்கணும் இவற்றை..சரீரம் அநித்தியம் மாறும்
அஞ்ஞானம் உண்டு- ஓட்ட கூடாது..தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல இருக்கணும்..
–நன்றாக விசாரித்து விட்டு- விவேகித்து..பின்பு விடனும்.
நண்ணினார் பால்-ஆஸ்ரயிக்கிறவர் பேரில்..ஜெயம் பண்ணி கொடுப்பார்..ஆழ்வானும் அமுதனாரும் போல –
அக் காதல் அளறில் அழுந்தி மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் -43
காமாதி தோஷம் தரம் ஆத்மா பதா ஆஸ்ரிதாநாம் ராமனுஜம் யதி பதிம்–யதிராஜ விம்சதி -1-
யத்தனம் பண்ணுபவர் யதி -ஹேயங்களை போர்க்க யத்தனம்-
ர- என்று ஆரம்பிக்கும் அனைத்திலும் பயம் மாரீசனுக்கு –இங்கு ராமாநுஜம் முடித்தே தீருவர்..அர்ஜுனனுக்கு உபதேசம் மட்டும் பண்ணி கண்ணன் -ஸ்வாமி அனுஷ்ட்டித்து காட்டி அருளினார் –
சய புகழார் -திருவாய் மொழி 3-1-11 என்னுமா போலே..
வாசிகமாய் அங்கு அடிமை செய்தான்-மூன்று வித கைங்கர்யமும் பண்ணனும்.
இராமனுசன் தன் இணை அடி இராமனுசன் சரணாரவிந்தம்- இராமனுசன் அடி பூ மன்னவே
மத்திய ஆதி இறுதியில் அடி இணை விஷயம்
அடி பிடித்த சம்ப்ரதாயம் தானே நமது இராமானுச சம்ப்ரதாயம்
இவரோ மாறன் அடி பணிந்து உய்ந்தவர்
மாறனும் அலர் மேல் மங்கை உறை மார்பன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தவர்
இவர் தமக்கையோ பரமனடி பாடி தொடங்கி-அடி போற்றி -என்றும்
-பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் -என்றாள் இறே
நண்ணினர் பால் -என்பதை நண்ணி நம் பால் -சங்கோசம் இன்றி –பழுதின்றிபேர் இன்பம் அவரே என்று உணர்ந்து
-தந்தை நல தாய் தாரம் தனயர் பெரும் செல்வம் என்று எனக்கு நீயே எதிராசா-ஆர்த்தி பிரபந்தம் -3-என்கிற படியே..
நண்ணி நல் பால் காருண்யத்தாலே–எம்பெருமானார் நண்ணி இருக்கிறார்
தம்மை ஆச்ரயிதவர்களும் நரகத்தை நகு நெஞ்சே திரு வாய் மொழி 10-6-5- என்கிற படி
சம்சாரத்தை வெல்ல வல்லராம் படி பண்ணி அத்தாலே வந்த யசசை உடையவர்
இத்தால் உபக்ரமத்தில் தம்மை நெஞ்சை இசைவிக்கிறார்
ஆழ்வாரும் உபக்ரமத்தில் -தொழுது எழு என் மனனே –என்று அருளினாரே -அது போலே .

—————————————————–

ஸ்ரீ  கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: