அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம் -முதல் தனியன்-முன்னை வினை அகல இத்யாதி -..

தனியன் வியாக்யானம்

பிள்ளை லோகம் ஜீயர் அருளி செய்தது –

அவதாரிகை –
பிராசீன கர்ம நிவ்ருத்யர்தமாக -அபிஜாதரான அமுதனார் திருவடிகளை சிரோ பூஷணமாகத் தரித்தேன் (–மூங்கில்  வம்சம் கொண்டாடுவது ஏழு ஆள் காலும் பழிப்பு இல்லாமல் அடிமை செய்யும் குலம் -)
ஆகையால் கர்ம பல அனுபவம் பண்ணுவிக்கும் யமாதிகளுக்கு என்னோடு என்ன ப்ராப்தி உண்டு என்கிறது-(அவர்களுக்கு எனக்கும் சம்பந்தம் இல்லை சொல்லாமல் -தேவதாந்தரங்கள்  என்னிடம் நடக்க வேண்டிய முறை -கூரத் ஆழ்வான் சொன்னால் போலே -)

மூன்று தனியன்கள்..நாலும் உண்டு என்பர் –
வேத பிரான் பட்டர் அருளிய முதல் தனியன்-

முன்னை வினை அகல மூங்கில் குடி அமுதன்
பொன் அம் கழல் போது இரண்டும் என் உடைய
சென்னிக்கு அணியாக சேர்த்தினேன் தென் புலத்தார்க்கு
என்னுக்கு கட வுடையேன் யான்….

தென் புலத்தார்க்கு- யம பட்டர்கள் உள்ள இடம்—

வியாக்யானம்

முன்னை வினை அகல –
முன்னருளும் ஆரியனால் -என்றார் இறே வாதி கேசரி அழகிய மணவாள சீயரும் –
அப்படியே அநாதி கால ஆர்ஜித கர்மங்கள் அகன்று போக- பாவம் எல்லாம் அகன்று-என்னை விட்டு போக -(ராமானுஜர் பற்றி பாடிய புண்ணியம் போக வேண்டாமே )-அது எத்தாலே என்ன-
அமுதன் கால் தலைப் பட்டதாலே என்கிறது –(தலைப்பட்டார் ஒருப்பட்டார் ஆரம்பித்தார் -என்றவாறும் -அமுதன் -எந்த அமுதன் சொல்ல வில்லை –கழல் கமலம் திருவடி சொல்லாமல் கால் -என்றது -கால் என்று நான் மதித்தாலும் என்னை ஆள் கொண்டதே
ஒரு கால் திருமங்கை ஆழ்வார் சொன்னது சம்சாரிகள் அபிப்ராயத்தாலே )
மூங்கில் குடி அமுதன் -இத்யாதி –
மூங்கில் குடி யாவது -வேயர் தங்கள் குலம்-பெரியாழ்வார் திருமொழி 5-4 10- – – என்னுமா போலே-(ஆறு அல் வழக்குகளும் இல்லாத குடி அன்றோ )
இவருக்கு மூங்கில் குடி ஆயிற்று -அக்குடியில் அவதரித்த அமுதனார் உடைய
பொன் அம் கமலப் போது இரண்டும் –
ஸ்ப்ருஹநீயமாய் -அழகியதாய்- இருக்கிற திருவடித் தாமரைப் பூ இரண்டையும்
-(திருப்பாதம் கமலப் பாதம் போலே -பாவானத்வம் போக்யத்வம் )
என்னுடைய சென்னிக்கு அணியாக சேர்த்தினேன்-
அவருடைய சென்னிக்கு அணி ராமானுசன் அடிப் பூ –
உனதடிப்போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி -(ராமானுச நூற்றந்தாதி( -100 – )-என்னுடைய சென்னிக்கு அணி இவையாயிற்று-(செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே- குலசேகர பெருமாள் )
சென்னிக்கு அணியாக சேர்த்தினேன்
தலைக்கு அலங்காரமாக சேர்த்தேன் -செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -திருவாய் மொழி -2 9-1 – –அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று
அங்கு பிரார்த்தனை –இங்கு க்ருதார்த்தை -அத்தால்
தென் புலத்தார்க்கு
எமபுர வாசிகளான யம கிங்கரர்களுக்கு-
என்னக் கடவுடையேன் –
இனி எதுக்காகா கர்ம பல அனுபவத்துக்கு கடவேன் –
கர்ம ஷயம் பிறந்தவாறே பல அனுபவம் இல்லை இறே –
ஆகையால் கர்ம பல அனுபவம் பண்ணுவிப்பார்க்கு கர்த்தவ்யம் இல்லை
-பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைக்கையாலே-( பெரியாழ்வார் திருமொழி -5 2-8 – )
தென் புலக்கொன் பொறி ஒற்றி வைத்த விலச்சினை மாற்றித்-தூதுவரோடி ஒளித்தார் -( பெரியாழ்வார் திருமொழி – 5-2 2- )–அத்தாலே
என்னக் கடவுடையேன் -என்கிறது –
என் பெய் வினை தென் புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின் (ராமானுச நூற்றந்தாதி -34 –)-என்னக் கடவது இறே –
யான் –
பொன் அம் கழல் கமலப் போது இரண்டும் என்னுடைய சென்னிக்கு அணியாக சேர்த்த யான் என்றபடி-(கீழ் என் -என்று நீசத்தன்மை சொல்லி இங்கு யான் -சாத்விக அஹங்காரத்தால் தலை நிமிர்த்து அருளிச் செய்கிறார் )
என்னுக் கடவுடையேன்
என்னுக்கு என்கிற குகரம் கடைக் குறைத்தலாய் இருக்கிறது
கடவுடையேன் –
எதுக்காக ப்ராப்தி உடையேன் என்றபடி-
அம்ருததுக்கும் விஷத்துக்கும் சேர்த்தி இல்லாதாப் போலே –
திருவரங்கத் தமுதனார் திருவடிகளில் சம்பந்தம் உடையாருக்கும் தென் புலக்கோன் அடியாருக்கும்-என்ன சேர்த்தி உண்டு
அரங்க மா நகர் உளானே -நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் -நமன் தமர் தலைகள் மீதே -நாவலிட்டு-உழி தருகின்றோம் ( திருமாலை -1 – )என்றும்
அரங்கம் என்று அழைப்பராகில் பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் ஒழிந்து ஒழியும் அன்றே ( திருமாலை -13 – )என்றும்
ந சஜ்ஞா நஸ்ய சங்கோசம் ந சைவயமகோசரம் தஸ்மாத் அரங்கம் மகா புண்யம் கோன சேவேத புத்திமான் -என்றும்
ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி -என்றும் சொல்லக் கடவது இறே-

————————————————————————–

அமுத விருந்து

பொழிப்புரை –
மூங்கில் குலத்தினராகிய அமுதனாருடைய விரும்பத்தக்க அழகிய
திருவடித் தாமரை இரண்டையும் என்னுடைய தலைக்கு அலங்காரமாக சூட்டிக் கொண்டேன் .
அதனால் பண்டைய கன்மங்கள் தொலைய -நான் எதற்காக தென் திசைக் கண் உள்ள நமன்
முதலானோர்க்கு கடமை பட்டவனாக வேண்டும்-

விரி உரை —
முன்னை வினை
புண்ணிய பாப ரூபமான பிராசீன கர்மம்
அகலுதல் -விலகுதல்
மூங்கில் குடி -வேயர் தங்கள் குலம் என்று பெரியாழ்வார் கூறிக் கொண்டது போல் அமுதனாரும்-தம் குலத்தை மூங்கில் குடி என்பாராம் –
அமுதன் -அமுதனார்
இவர் பெரிய கோயில் நம்பி எனப்படுவர் -இவர் வாக்கின் இனிமையை நுகர்ந்து-எம்பெருமானார் சூட்டியது இத்திருநாமம் -என்பர்
பொன் -பொன் போல் விரும்பத் தக்கது என்றபடி
போதிரண்டும் சென்னிக்கு அணியாக சேர்த்தது அவற்றின் மீதுள்ள பேராவல் பற்றி என்க –
சென்னிக்கு அணியாக சூட்டிக் கொண்டதன் பயனாக முன்னை வினை அகன்றது –
அகலவே கன்மங்களை பயனை நுகர்விக்கும் தென் புலத்தார்க்கும் எனக்கும்-யாதொரு தொடர்பும் இல்லை என்றபடி –
என்னக் கடவுடையேன் -என்னுக்கு கடவுடையேன் என்பதன் சிதைவு
என்னுக்கு -எதற்கு -என்னுக்கு இன்னம் பெருக்கின்றதே -என்பதும் நினைக –
தென் புலத்தார்
தென் புலமாவது தெற்கில் உள்ள நிலம் -அது யமனுக்கு சொந்தமானது
தென் புலக்கோன் என்ற பெரியாழ்வார் – 5-2 2- – ஸ்ரீ சூக்தி காண்க
தென் புலத்தில் உள்ளார் -யமனும் யமனை சார்ந்த தூதுவரும் என்க –
அடியேனுடை சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான்-இது சிக்கெனப் பெற்றேன் –பெரிய திரு மொழி -7 3-3 – -என்பதும் காண்க –
இனி தென் புலத்தார் எனபது பித்ருக்களை கூறுவதாக கொள்ளலுமாம்
தென் புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் -என்னும் குறள் காண்க –
அக்குறளுக்கு பரிமேல் அழகர் -பித்ரராவார் படைப்பு காலத்து அயனால்
படைக்கப் பட்டதோர் கடவுள் சாதி -அவர்க்கு இடம் தென் திசை ஆதலின் தென் புலத்தார் -என்றார் –
என்று உரைத்து இருப்பது ஈண்டு உணரத் தக்கது
அஞ்ஞான்று பிதுரர்களுக்கும் நமக்கும் கர்மத்தால் தொடர்பு ஏற்பட்டு -பிரஜைகளால் நாம் அவர்க்கு-கடன் தீர்க்க கடமை பட்டு இருக்கிறோம்
-அமுதனார் கழல் கமலப் போது இரண்டும்-சென்னிக்கு அணியாக சேர்த்ததும் முன்னை வினைகள் அகன்றன –
அகலவே பித்ருக்களோடு ஏற்பட்ட தொடர்பும் தொலைந்தது
-ஆக பிரஜையால் அவர்களுக்கு கடன் தீர்க்கும் கடமை எவ்வாறு ஏற்படும் என்றதாயிற்று –
நாயம் ருனீச ராஜன் -என்று பாகவதம் பாகவதனுக்கு கடன் இல்லை என்று உரைத்து இருப்பது கவனிக்க தக்கது –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தால் ஜல்பித்தல் –

என்னுக்கு கட வுடையேன் யான்….
சம்பந்தம் பிராப்திஇல்லை.-என்கிறார் இத்தால்
அமுதனார் திருவடி சம்பந்தம் கிட்டியதும் தன்னடையே இந்த கர்ம சம்பந்தம் விட்டுபோமே –
மால் பால் மனம் வைக்க மங்கையர் தோள் கை விட்டு -போலே
மானசீக வியாபாரமே -காயிக வியாபாரத்தை விலக்குமே-
ஐயப் பாடு அறுத்து தோன்றும் அரங்கன் – என்றார் தொண்டர் அடி பொடி ஆழ்வார்
அந்த திரு அரங்கன் இல்லை திரு அரங்கத்து அமுதனார் என்கிறார் வேத பிரான் பட்டர் இங்கே
அரங்கத்து அமுதத்தையும் ஆரா அமுதனையும் ஆழ்வார்கள் பாட திரு அரங்க தமுதனாரை இவர் அருளுகிறார்.
தண் சேறை எம்பெருமான் தொழுவார் தாள் தொழுவார் திருவடிகள் என் தலை மீதுவே
ஏழ் ஆள் காலம் அடிமை செய்யும் வம்சமே சிறப்பு–நமன் தமரால் ஆராய பட மாட்டார்.
நமக்கு இந்த தனியன் சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே இதன் பலன் கிட்டியது .

முன்னை வினை –
அநாதி கால ஆர்ஜித கர்மங்கள் சேர்த்து வைத்த கர்மங்கள்..
–இச் ஆலே நீயும் வேண்டாம் நானும் வேண்டாம் தன்னாலே போகும் -கீதாசார்யன் அருளியது போலே –
அமுதன் கால் தலை பட்டதாலே -ஆயிற்று..
கழல் கமலம் -கால் என்றது நம் நினைவாலே –திருவடி என்று சொல்ல கூட தெரியாது நமக்கு–
ஒண் மதியில்.. ஒரு கால்– அங்கும் திரு மங்கை ஆழ்வார் அருளியது போல
எந்த அமுதன்- ஆரா அமுதன் இல்லை. மூங்கில் குடி அமுதன்..வேயர் தங்கள் குலத்து உதித்த விஷ்ணு சித்தன் போல

இந்த குலங்களுக்கு என்ன அப்படி பெருமை –
– அல் வழக்கு ஒன்றும் இல்லா — கூடாத சம்பந்தம் ஆறும் இல்லாத-எந்த ஆறும் –
1-ஆத்மா -ஸ்வ தந்த்ரன்..என்கிற நினைவும்
2-தேக ஆத்மா அபிமானம்..கொண்டும்
3-அந்ய சேஷத்வம் .-இருந்தும்
4-உபாய சம்பந்தம்-கொண்டும்
5-ஆபாச பந்துகள் அபோக்ய பதார்த்தங்களை போக்யமாக நினைத்தல்
6-நமது போக்யமாக கொள்ளாமல் -படியாய் கிடந்தது அவன் பவள வாய் பார்த்து மகிழ்தல்
இது போன்ற ஆறு அல் வழக்கும் இல்லாத குடி தானே மூங்கில் குடியும் வேயர் தங்கள் குடியும்
-நானும் உனக்கு பழ அடியேன்….பழிப்பிலோம்
–மதி தவழ குடுமி மால் இரும் சோலை..-திரு மலை சம்பந்தம் என்ற உயர்த்தி மேகத்துக்கு —
அது போல மூங்கில் குடி குல பெருமை..
இவர் தம் குலம் கொண்டாடிக் கொள்ளலாமா
குல பெருமை– இயம் சீதா மம சுதா -குடி பிறப்பை- மம கரித்தாரே –
ஜனகன் கூட மமகாரங்கள் அனைத்தும் தவிர்த்து இருந்தாலும் –
கைங்கர்ய ஸ்ரீ உள்ள குலம்.-என்பதால்
-பெரிய பிராட்டியார் கைங்கர்யமும் -எம்பெருமானார் கூரத் ஆழ்வானுக்கும் கைங்கர்யம் செய்து வந்த பெருமையும் உண்டே –
காதல் அன்பு வேட்கை அவா -பக்தி- உடன் கைங்கர்யம் செய்து வந்த ஏற்றம் கிங்கரர்–

அம் பொன் கழல் –
பொன்னை போல தாமரை போல அழகிய திருவடிகள்
மண்டோதரி இரண்டையும் சொன்னாள்..ஸ்ப்ருஹநீயமாய் -பெரு மதிப்பு -அழகியதாய் –
திரு கமல பாதம் வந்து என் கண்ணினுள் ஒக்கின்றதே போல .
பாவனத்வமும் போக்யதமும் தோன்ற அம் பொன் கழல்
பொன்னுலகம் ஆளீரோ புவனி எல்லாம் ஆளீரோ போல் -பொன் என்பதால் அந்தமில் பேரின்பம் உள்ள
வைகுண்ட மா நகரமும் இங்கே இட்டுமே- அமுதனார் திருவடி சம்பந்தம் கிட்டியதுமே –
எங்கோ தேசாந்தரமோ காலாந்தரமோ தேகாந்தரமோ –வேண்டாமே –
என் உடைய –
எப்படி பட்ட என் -அசக்தன் நீசன்-
அவர் உடைய சென்னிக்கு அணி ராமனுசனின் அடி பூ–ராமானுஜ நூற்றந்தாதி-105…
என் உடைய சென்னிக்கு அணி இவை ஆயிற்று..தலைக்கு அலங்காரமாக சேர்த்தேன்
–தொண்டர் சேவடி சேறு என் சென்னிக்கு அணி குலேசேகரர் அருளியது போலே –
செம் மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -திரு வாய் மொழி 2-6-1-
பிரார்த்தனை அங்கு
இங்கு க்ருதார்த்தை. சேர்ந்ததற்கு நன்றி.. இன்பம் எய்தினேன் போல-மதுரகவி ஆழ்வாருக்கும் கிடைத்தது..
தென் புலத்தார்க்கு-.என்னுக்கு கட வுடையேன் யான்….
கர்ம பல அனுபவம் பண்ணு விப்பார்க்கு கர்த்தவ்யம் இல்லை..
நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை..
பீதக வாடை பிரானார் பிரம குருவாகி வந்து-ஆச்சர்யாக- என் சென்னித் திடரில்-பாத இலச்சினை வைக்கையாலே—பெரி ஆழ்வார் திரு மொழி 5-2-8
–தென் புலகோன் பொறி ஒற்றி வைத்த விலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார்.பெரி ஆழ்வார் திரு மொழி 5-2-2.
தென் புலத்தார்க்கு என்னை சேர் கொடான் பெரிய திரு மொழி7-3-3-என்னுக் கடவுடையேன் யான்..இவரே – இங்கு யான்-
முன்பு நீசனான என் -என்றவர்
இப்பொழுது யான் -ஆனது யாராலே -நெஞ்சு நிமிர்ந்து – போது இரண்டும்-அணியாக சேர்த்த யான்-
அமுததுகும் விஷத்துக்கும் சேர்த்தி இல்லாத போலே..
அமுதனார் திருவடி பற்றிய வர்க்கும் தென் புல கோன் அடியார்க்கும் என்ன சேர்த்தி.
அரங்க மா ககர் உளானே ..நின் நாமம் கற்ற ஆவலிப்பு உடைமை கண்டாய்–
நமன் தமர் தலைகள் மீதே நாவல் இட்டு உழி தருகின்றோம் -திரு மாலை 1..
தலைகள் என்று இந்த பாசுரத்தை கற்ற அனைவரையும் தம்முடன் சேர்த்து கொண்டு அருளுகிறார்
நடப்பதால் –நாம பலம் இங்கு ..சுக்ரீவன் நாமி பலத்தால் அங்கு வாலி இடம் நெஞ்சு நிமிர்த்து சொன்னான்.
மந்திரம்- மந்திரத்தால் வாழலாம்– அதிகாரம் எதுவும் வேண்டாம் என்று –
அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில் -ஸ்தோத்ரம் பண்ண வேண்டாம் அழைத்தால் போதும்
ஆகில்-நெடு மரம் கரை சேர்ந்தால் போல் ஆகில்– பொறி இல் வாழ்
-இந்த்ரியங்கள் வாழ்- நரகம் எல்லாம் புல் ஒழிந்து ஒழியும் அன்றே -திரு மாலை பாசுரம் போல்
மூன்று எழுத்துடைய பேரால்– -நம் முயற்சியை இறக்கினார் இதில்-மந்த்ரம் -நாமம் -பேர் -இறக்கி –
ஸ்தோத்ரம் செய்ய வேண்டாம் -பெயரை சொன்னாலே போதுமே
….ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி -போலே
காம குரோத வினைகள் நீக்க ஸ்வாமி திருவடிகளை பற்றவேண்டும் –

ஸ்ரீ மாதவான்க்ரி ஜல ஜத்வய நித்ய சேவா–பிரேமா விலாசய பராங்குச பாத பக்தம்
காமாதி தோஷ ஹர மாதமா பதாஸ்ரிதாம்–ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா -போலே
அமுது உண்பாய் நஞ்சு உண்பாய்-கும்ப கர்ணன் வார்த்தை-விபீஷணன் இடம்–கம்பர் ..
அது போல தென் புலத்தாருக்கு பிராப்தி இல்லை என்றார் இதில்..


ஸ்ரீ  கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: