அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம் -5-எனக்கு உற்ற செல்வம் இராமானுசன் இத்யாதி ..

பெரிய ஜீயர் உரை –

அவதாரிகை –

இப்படி எம்பெருமானார் உடைய விஷயீகார தார்ட்யத்தை அருளி செய்த அநந்தரம் –அவர் திரு நாமங்களை சொல்லுவோம் -என்று முன்பு உபக்ரமித்த படியே -ஸ்தோத்ரம் பண்ணுவதாக-உத்யோகித்தவர் -அதில் நிரவத்யமாக
செய்கை அரிது ஆகையாலே லாஷணிகர் நிந்திப்பார்களே-என்று நிவ்ருத்ய உன்முகராய்
-மீளவும் தாமே சித்த சமாதானம் பண்ணிக் கொண்டு பிரவ்ருத்தர் ஆகிறார் –

எனக்கு உற்ற செல்வம் இராமானுசன் என்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவன் திரு நாமங்கள் சாற்றும் என் பா
இனக்குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல்விது என்றே -5 –

எனக்கு ஸ்வரூப அனுரூபமான சம்பத்து எம்பெருமானார் என்று இசையாத மநோ தோஷத்தை உடைய மனுஷ்யர் –நிந்தித்தார்கள் ஆகில்
அது ஸ்துதியாம் இத்தனை –அவருடைய நித்ய சித்த கல்யாண குணங்களுக்கு தகுதியான பிரேமத்தை உடையவர்கள் –பக்தி யோடு கூடின
பிரவ்ருத்தியை உடையது -என்று -அவருடைய திருநாமங்களை சொல்லா நின்ற – என்னுடைய-சந்தஸ் சமூஹத்தினுடைய குற்றத்தை காண மாட்டார்கள்-
இயல்வு -பிரவ்ருத்தி /இயல்வு இது என்றது -இயல்வை உடையது என்றபடி
பத்தி ஏய்ந்த வியலிது-என்ற பாடம் ஆன போது-இது பக்தி யோடு கூடிய சொல் என்று கொண்டு-குற்றம் காண கில்லார் என்கை-
பா -சந்தஸ் / இனம் -சமூஹம்
தாழ் இசை துறை விருத்தம் என்று இனத்தின் வகையான கலித் துறை யாகையாலே-பாவினம் என்கிறார் ஆகவுமாம்–

மந்த புத்தி -மாந்தர் / தூஷணம் பூஷணம் -/ஹஸ்தி கீரி நாதன் ஸ்ரீ நிதிம்-தானே வைகுந்தம் தரும் -காய் இலங்கு நெல்லிக் கனி -திரி தங்காகிலும் கரிய கோல திரு உரு காண்பன் /மயங்கி அவர்கள் நல்லது பாரார் -இவர்கள் மயங்கி தீமை பாரார் /

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை

அவதாரிகை
-கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்மை நிர்ஹேதுகமாக விஷயீகரித்தார் என்றுகொண்டாடினார் -இதில் –
அந்த ப்ரீதியாலே ப்ரேரிதராய்க் கொண்டு -அவருடைய குண கீர்த்தனம் பண்ண உத்யோகித்து –
குத்ருஷ்டிகளாய் இருப்பார் இதில் ஏதேனும் ஒரு குற்றத்தை ஆரோபித்து -தூஷித்தார்கள் ஆகில் –
அதுவே எனக்கு பூஷணம் -என்று சொல்லா நின்று கொண்டு –இதன் ரசம் அறிந்தவர்கள்-குணமாக விரும்புவார்கள் -என்கிறார் .

வியாக்யானம்
எனக்குற்ற செல்வம்
அப்ராப்தமாய் அதி தீஷணமாய் அநித்தியமான தனம் போல் அன்றிக்கே –
சரம பர்வமாய் -தத் யாதாத்ம்ய பூதமாய் -அவதாரண பரத்வ பரதிபத்தி பூர்வகமாகவே நிஷ்கர்ஷிக்கப் பட்டதாய் –
எனக்கு ஸ்வரூப ப்ராப்தமாய் இருந்துள்ள சம்பத்து-ஸ்ரீ நிதி -தயா நிதிம்-சர்வ லோக -ஸூ ஹ்ருத்
இராமானுசன் என்று –
தந்தை நல் தாய் தாரம் தனயர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே எதிராசா –என்கிறபடி எம்பெருமானாரே தம் தாமுக்கு மகா நிதி என்று அத்யவசித்து –
தத் அந்ய சம்பத்துக்களை எல்லாம் அசத் கல்பமாக த்ரணீ கரித்து -நாம் அவருடைய குண கீர்த்தனம் ஒன்றுமே
பண்ணக் கடவோம் என்று கணிசித்து இருக்க –
இசைய கில்லா மனக்குற்ற மாந்தர் –
சம்மதிக்க மாட்டாதபடியான மநோ தோஷத்தை உடைய மந்த மதிகள் –
பழிக்கில் –
இவர்கள் குணங்களை அறிய மாட்டாதே -தோஷத்ர்க்குகள் ஆகையால் –
துஸ் தர்க்கங்களாலும் சாஹித்யத்தாலும் குதர்ஷ்டி கல்பமாகிற தோஷங்களையே ஏறிட்டு நிந்தித்தால்-அவர்கள் அஞ்ஞர் ஆகையாலே -மாந்தர் -என்கிறார்
-பழிக்கில் புகழ்
-வ்யாப்தங்களான காம்ய கர்மங்களை-இழந்தார் என்று இறே அவர்கள் பழி சொல்வது -அவை தன்னை ஆராய்ந்தால் -சாதனாந்தரங்களின்
தோஷம் அறியாதவர்கள் சொல்லும் பழி ஆகையாலே அதுவே நமக்கு புகழாம் –
ததீய வைபவத்தை அறியாதவர்கள் சொல்லும் பழி யாகையாலே எனக்கு அதுவே புகழாம் –தூஷணம் பூஷணம் ஆகுமே –
கூரத் ஆழ்வான் -கோயிலுக்குள் செல்லாமல் போன ஐதிகம்-அபாகவதன் புகழ்ந்தால் கொள்ளார்களே –
ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே வுடையனான குருவை அடைந்தக்கால்-மாநிலத்தீர் –
தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -என்றும்
உய்ய நினைவுண்டால் உம் குருக்கள் தம்பதத்தே வையும் அன்பு தன்னை இம் மாநிலத்தீர்
மெய்யுரைக்கேன் பையரவின் மாயன் பரமபதம் உங்களுக்காம் கை இலங்கு நெல்லிக் கனி -என்றும் –
சொல்லப் படும் விஷயத்தில் இறே அவர்கள் பழி சொல்வது .-அதுவே புகழாய்த்தலை கட்டும் -இத்தனை –
அலகை முலை சுவைத்தார்கு அன்பர் அடிக்கன்பர் -திலதமெனத் திரிவார் -தம்மை உலகர் பழி தூற்றில் துதியாகும் –என்றும் சொல்லக் கடவது இறே .
அவன் மன்னிய சீர் தனக்குற்ற அன்பர் –
அவன் -என்ற பிரசித்தரான எம்பெருமானார் –
மன்னிய சீர் -நித்ய சித்தங்களாய்- ஸ்வாபாவிகங்களாய் -ஞான சக்தி தொடக்கமான கல்யாண குணங்கள்
தனக்கு உற்ற அன்பர் -தனக்கு தகுதி யான பிரேமத்தை உடைய ரான மகாத்மாக்கள்
அவன் திருநாமங்கள் சாற்றும் எம் பாவினக் குற்றம் –
அவர் விஷயமான -பக்தி சந்தூஷணம் பண்ண -தத் ப்ரேரிரதனாய் கொண்டு –
அவருடைய திருநாமங்கள் பக்த்ய ரூபேண சமர்பிப்பதாக என்னாலே சொல்லப்பட்ட சந்தஸ்-சமூகத்திலே அவத்யத்தை -அன்றிக்கே –
அவருடைய திரு நாமங்களை சொல்லா நின்றுள்ள -என்னுடைய சப்த சமூகத்திலே குற்றத்தை-என்னவுமாம் –பா-சந்தஸ் இனம்-சமூகம்
காணகில்லார் –
வத்சல ஸ்வபாபர் ஆகையாலே -தோஷ அதர்சிகளாய் போவார்கள் –கில்லார் -சமர்த்தர் அல்லாதவர்
மந்த மதிகள் ஆனவர்கள் -தம்தாமுடைய அறிவு கேட்டாலே இவன் காம்ய கர்மபரித்யாகம் பண்ணினான் என்றும் –
லஷணத்தில் குறைச்சலாக சொன்னான் என்றும் -இப்படியான தோஷங்களை காண கில்லார் -என்றபடி –
அதற்க்கு மூலம் ஏது என்ன –
பக்தி தேய்ந்த இயல்வு இது என்றே
-பக்தியோடு கூடின வ்ர்த்தியை உடையது -என்னவுமாம் –இயல்வு -பிரவர்த்தி –ஏய்தல் -கூடுதல்-

————————————————————————–

அமுது விருந்து –

அவதாரிகை –

எம்பெருமானார் தாமாகவே என்னை அபிமானித்த படியால் -இந்நிலையினின்றும்-நான் நழுவ வழி இல்லை என்றார் கீழே –
இனி -சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று தொடங்கின படியே துதி செய்ய இழிந்தாராய்-
இலக்கணம் வல்லவர்கள் இத் துதியில் குற்றம் குறை கண்டு பழி ப்பார்களே என்று மீண்டு-மறுபடியும் எம்பெருமானாற்கு அன்பர்கள்
-பக்தன் சொன்னது -என்று இதில் குற்றம் குறை காண-இயலாது என்று தேறித் தோத்திரம் செய்ய முற்படுகிறார் –

பத உரை

எனக்கு உற்ற -எனக்கு தக்க
செல்வம் -சம்பத்து
இராமானுசன் என்று -எம்பெருமானார் என்று
இசையகில்லா -ஏற்றுக் கொள்ள மாட்டாத
மனக்குற்றம் -மனத்தின் கண் மாசு உடைய
மாந்தர் -மனிசர்
பழிக்கில் -இகழ்ந்து உரைத்தால்
புகழ் -பாராட்டுரையேயாம்
அவன் -அந்த எம்பெருமானார் இடம்
மன்னிய-பொருந்திய
சீர் தனக்கு -குணங்களுக்கு
உற்ற -தக்க
அன்பர் -அன்புடையவர்கள்
பக்தி ஏய்ந்த -பக்தியோடு பொருந்திய
இயல்வு இது -முயற்சி உடையது
என்று -என்கிற காரணத்தால்
அவன் திரு நாமங்கள் -அந்த எம்பெருமானாருடைய திரு நாமங்களை
சாற்றும் -சொல்லும்
என் பா இனம் குற்றம் -என்னுடைய செய்யுள் திரளின் குற்றங்களை
காணகில்லார் -காண இயலாதவர்கள் ஆவர்

எம்பெருமானார் சம்பந்தம் அற்றவர்கள் இகழுவரேல் அது நமக்கு புகழ் தான் –அந்த சம்பந்தம் உடையவர்களோ இகழார்-
ஆதலின் யான் துதி செய்தல் கூடும் எனபது கருத்து

எனக்குற்ற செல்வம் இராமானுசன் –
இராமானுசரே செல்வம் –யாருக்கு
மாந்தர் அனைவருக்கும் தான் ஒவ் ஒருவனும் இராமானுசன் உடன் தொடர்பு கொண்டு அதற்கு ஏற்ப ஒழுகின்
செல்வமாய் உபயோகப் படுகிறார் இராமானுசர் -செல்வம் எப்படி உலகில் உபயோகப் படுகிறது ?
செல்வமுண்டு எனில் போகும் உயிரும் நிற்கும் -இராமானுசர் சம்பந்தம் உண்டு எனில்
பிறவி துயரால்-நசிக்கும் ஆன்ம தத்துவம் -உயிர் -சத்தை பெற்று தளிர்க்கும் -கையில் உள்ள பெரும் செல்வதை ஒருவன் இழக்க நேரிட்டால்
-அந்நிலையிலே உடனே அவன் உயிரை விட்டு விடுகிறான் –இராமானுசனை அங்கனமே பிரிய நேர்ந்து உயிரை விட்டவர் பலர் ஆவர் –
கணியனூர் சிறியாச்சான் இராமானுசனை சேவிக்க எழுந்து அருளும் போது வழியில்
திருவரங்கத்தில் இருந்து வந்து கொண்டு இருந்த ஒரு வைஷ்ணவர் வாயிலாக எம்பெருமானார் திரு நாட்டுக்கு
எழுந்து அருளின செய்தியைக் கேட்டதும் அப்படியே -எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் -என்று
மூச்சடங்கிப் பொன்னுடம்பு எய்தியதாக கூறும் ஐதிஹ்யம் இங்கு அறிய தக்கது –
இராமானுசனைப் பிரிந்தவர் அனைவரும் உயிர் துரவாமைக்கு ஹேது -அன்பில் உள்ள ஏற்றத் தாழ்வு அன்று -பகவானுடைய சங்கல்பமே என்க
-எம்பெருமானார் தர்சனம் மேலும் தழைக்க-வேண்டும் என்பதற்காக அவர்கள் முடியாதவாறு பகவான் சங்கல்பித்தான் -என்க
-எம்பெருமானார்-திரு நாட்டுக்கு எழுந்து அருளியதை கேட்டு மரம் ஏறி விழுந்து முடிய முயன்ற சிலரை நோக்கி –அனந்தாழ்வான் –
கேட்டும் போகாத உயிர் மரம் ஏறி விழுந்தால் போகாது காண் -என்று-கூறியதாகச் சொல்லப்படும் ஐதிஹ்யத்தில் இவ் உண்மை பொதிந்து கிடக்கிறது –
செல்வம் தான் பயன் ஆவதோடு -பயனைப் பெறுதற்கு சாதனமும் ஆவது போலே-
எம்பெருமானார் தாம் ப்ராப்யர் ஆவதுடன் -பெறத் தக்க பேறாவதுடன் -ப்ராபகமும் -சாதனமுமாய் இருத்தல் பற்றி செல்வகமாக உருவகம் செய்கிறார்
-கூரத் ஆழ்வான் -எனக்கு உற்ற செல்வம் என்று-இராமானுசனைப் பற்றி நிற்கும் பெரும் செல்வர் என்றும் –
தாம் அன்னார் தம் புதல்வர் என்றும் பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறார் பட்டர் தமது சஹஸ்ரநாம பாஷ்யத்திலே –
ஜாதோ லஷ்மண மிச்ர சம்ச்ரயதநாத் ஸ்ரீ வத்ஸ சிஹ்நாத் ருஷே -எனபது அவர் திரு வாக்கு –
ஏனைய செல்வம் கெட்ட அஹங்கார மமகாரங்கள் என்னும் நெருப்பிலே விழுந்து உயிர்-மாய்வதர்க்கும் ஹேதுவாகக் கூடும்
-ஆதலின் அது உற்ற -ஸ்வரூப அனுரூபமான -செல்வமாகாது –
இராமானுச செல்வமோ -அங்கன் உயிர் மாய்வதற்கு ஹேதுவாகாத தோடு உயிர் சத்தை பெற்று-தரித்து நிற்பதற்கும் ஹேதுவாதல் பற்றி
-உற்ற செல்வம் -ஆயிற்று -இச் செல்வமும் அஹங்கார மமகாரங்களை உண்டு பண்ணும் .ஆயின் அவை கெட்டவை அல்ல -நல்லவையே –
சாத்விக அஹங்கார மமகாரங்கள் என்றபடி.இத்தகைய அஹங்காரம் ஆழ்வார்களுக்கும் தோன்றி –
எனக்கு ஆர் நிகர் நீள் நிலத்தே -என்றும் –
என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ விலை -என்றும் -அஹங்கார மமகாரங்கள் பேசுவதைக் காண்கிறோம்
ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் -என்று இவ் அமுதனாரும்
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே -என்று எம்பாரும்-எம்பெருமானார் சம்பந்தத்தால் அஹங்கரிக்கபதை பார்க்கிறோம் –
இங்கும் உற்ற செல்வமாகிய இராமானுசன் சம்பந்தத்தால் தோற்றிய சாத்விக மமகாரம் வெளிப்பட -எனக்கு உற்ற செல்வம் -என்று நயம் சுவை பயப்பது காண்க –
இந்த செல்வத்திற்கு தானும் ஒரு பங்காளி என்கிற மனப் பான்மையில் இல்லாது-முழுதும் தானே துய்ப்பவனாதல் வேண்டும் என்னும் மனப் பாரிப்பு தோன்ற
எனக்கு உற்ற செல்வம் எனப் பட்டது -காண்க –
செல்வம் இராமானுசன் –
பண்டைய இராமானுசன்-லஷ்மணன்-லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -என்று செல்வம்-படைத்தவனாக கூறப் பட்டான்
-இன்றைய இராமானுசனோ செல்வமாகவே கூறப் படுகிறார் –
த்த்ருணீகருத விரிஞ்ச்யாதி நிரந்குச விபூதய –ராமானுஜ பத்தாம் போஜ சமாச்ரயண சாலின -என்று
இராமானுசன் திருவடித் தாமரையை பற்றி விளங்கும் அவர்கள் பிரம்மா முதலியோர்களுடைய எல்லை அற்ற
செல்வங்களை தருணமாக-அலஷ்யமாக – கருதுமவர்கள் ஆவர் -என்றபடி -மற்றை பெரும் செல்வங்களை
எல்லாம் புறக் கணிக்கும் படி அன்றோ இச் செல்வம் இருக்கிறது –
பெரும் செல்வம் நீயே எனக்கு எதிராசா -என்றார் மணவாள மா முனிகளும்

இசைய கில்லா மனக்குற்ற மாந்தர்
உலகில் காணும் செல்வதை அன்றி மற்று ஒன்றை செல்வமாகக் கொள்ளார் அறிவிலா மாந்தர் –
கண்டதை அன்றி புறக்கண்ணால் காணாததை ஏற்கும் திறன் அவர்களுடைய அறிவுக்கு இல்லை –
சாஸ்த்ரத்தை புகட்டி -சாஸ்திர கண்ணால் காணும்படி மற்று ஒரு செல்வதை நிரூபித்து இசைய வைத்தாலும்
அவர்களுடைய மனக்குற்றம் இசைய ஒட்டுகிறது இல்லை –மனத்தில் மாசு உடையார்க்கு சாஸ்திரத்தின்-பொருள் மனத்தில் பதியாது அன்றோ
-ஒரு கால் மனக் குற்றம் சிறிது மாறிச் சாஸ்திரத்தின் பொருளாகிய-எம்பெருமானை செல்வமாக இசையினும் சாஸ்திரத்தின் உள் பொருளாகிய ஆசார்யனை
-இராமானுசனை –செல்வமாக இசையவே மாட்டார்கள் .அதற்க்கு காரணம் அவர்கள் பகவத் பிரசாதத்தால் முழுதும் மனக் குற்றம் நீங்கித்
தூய்மை பெறாமையே -புலமை மட்டும் போதாது -பகவானுடைய அனுக்ரகமும் வேண்டும் –சாஸ்திரத்தின் உள் பொருளை காண்பதற்கு –
உய்யக் கொண்டார் -என்பவர்க்கு உடையவர் பிரபத்தியில் இறங்கும் படி செய்வதற்கு சரம ஸ்லோக அர்த்தத்தை
அருளி செய்த போது -சொன்ன பிரபத்தி விஷயம் நன்றாக இருக்கிறது -ஆயினும் பக்தி நெறியை
விட்டு பிரபத்தி நெறியில் இறங்க எனக்கு விருப்பம் வர வில்லை -என்று அந்த உய்யக் கொண்டார் கூறினாராம் –
அதற்கு உடையவர் -வித்வான் ஆகையாலே இசைந்தாய்-பகவத் பிரசாதம் இல்லாமையாலே ருசி-பிறந்தது இல்லை -என்று அருளி செய்தாராம்
.அது போல சாஸ்திரங்கள் மூலம் எவ்வளவு-இசைவித்தாலும் மனக்குற்ற மாந்தர் இராமானுசனை உற்ற செல்வமாக இசைய கில்லார் என்கிறார் –
எனவே அழியும் செல்வதை தவிர அழிவற்ற செல்வமாக எம்பெருமானை மதிக்காத சம்சாரிகள் ஆயினும் சரி
எம்பெருமானை தவிர எம்பெருமானாரை செல்வமாய் மதிக்காத முதல் நிலையில் -பிரதம பர்வத்தில் –
உள்ள வித்வான்கள் ஆயினும் சரி -மனக்குற்றம் உடையவர்களே -எனபது அமுதனார் திரு உள்ளம் .
பழிக்கில் புகழ்-
சம்சாரிகள் -அறிவிலிகள்-உலகில் கருத்து வேறுபாடு இன்றி எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட-செல்வதை விட்டு எம்பெருமானாரையே
செல்வமாகத் தானே பற்றிக் கொண்டு கவி புனைந்து-உழலு கிறானே -இது என்னமதி ஈனம் என்று பழிப்பர் அன்றோ –
இதுவும் உண்மையில் அமுதனாரைப்- புகழ்ந்ததாகவே முடிகிறது -புகழாவது பண்பு உடையனாய் நல்லோரால் அறியப் படுத்தல் –
எம்பெருமானார் சம்பந்தம் நல்லார் ஏற்கும் உயர்ந்த பண்பு அன்றோ -அது எங்கனம் பழிப்பது ஆகும் –
கண்ணன் குணங்களை சிலர் ஏசினர் -ஆயினும் புகழ் களாகவே அக்குணங்கள் இன்றும் மிளிர்கின்றன –
நாஸ்திகர் -ஸ்வர்க்கம் பெரும் நோக்குடன் வேள்வி புரிவோரைச் சாஸ்திரம் சொல்லுகிறது என்று கண்ணுக்கு தெரியாத ஸ்வர்க்கத்தை
இருப்பதாக நம்பி அரும்பாடு பட்டுப் பெற விழைகின்றனரே என்று-பழிக்கின்றனர் .பயன் கருதி வேள்வி புரிவோர் பயன் கருதாது
சாஸ்திர நெறியில் ஒழுகி பரமனை வழி படும்-உபாசகர்களை இன்புறும் ஸ்வர்க்கத்தை வேண்டாம் என்று விட்டு விட்டு எங்கோ வீட்டு இன்பம் பெறப்
போகிறார்களாமே என்று பழிக்கிறார்கள் -அவர்கள் நினைவில் அவை பழிப்புகள் ஆயினும் -உண்மை நிலையில்-அவை புகழ்சிகள் அன்றோ –
அங்கனம் உபாசகர்கள் எம்பெருமானாரை செல்வமாக பற்றி கவி புனைதலை பழிப் பினும்-அது புகழாகவே முடிகிறது என்க –
அறிவிலிகளோ -வித்வான்களோ -பழிப்பதற்கு ஹேது – விஷயத்தில் உள்ள குற்றம் அன்று –
அவர்கள் மனத்தில் உள்ள குற்றமே எனபது தோன்ற -மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் -என்றார் .
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழாவது போல புகழின் பழித்ததாகும் எனபது அமுதனார் கருத்து –
கவி புனைதலையே அவர்கள் பழிப்பவர் ஆதலின் -இக்கவிகளை அவர்கள் ஆராய மாட்டார்கள் -அதுவே-இந்நூலுக்கு தனி சிறப்பு
-அவர்கள் ஆராய்ந்து குணம் கண்டு புகழினும் அசிஷ்ட பரிக்ரகம் -தகுதி அற்றோர்–புகழாமல் இருப்பது பலிக்காமல் இருப்பதாகும் என்றும்
நம் ஆழ்வார் பெரிய திருவந்தாதியில் -புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் -என்றுஅருளி செய்து இருப்பது இங்கு நினைவு கூறத் தக்கது
-இதனை அடி ஒற்றி பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்திலே-
ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம் -துதிக்கப் பட்டது நிந்திக்க பட்டதாகிறது –நிந்திக்கப் பட்டது துதிக்கப் பட்டதாகிறது -என்றார்.
அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர்-திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாதவர் இவரைப்-போற்றிலது புன்மையே யாம் –
அலகை – பேய் வடிவு கொண்ட பூதனை /போற்றுதல்-துதித்தல்/புன்மை-பழி தூற்றுதல் /என்னும் ஞான சாரப் பாடலும் –
நயாச வித்யைக நிஷ்டாநாம் வைஷ்ணவானாம் மகாத்மானாம்–ப்ராக்ருத அபிஷ்டுதிர் நிந்தா நிந்தா ஸ்துதிரி திஸ்மருதா -என்று
சரணா கதி நெறியையே பற்றி நிற்கும் மகாத்மாக்களான வைஷ்ணவர்களை பாமர மக்கள் துதிப்பது
நிந்தையாகும் -நிந்திப்பது துதிப்பதாக கருதப் படும் -என்னும் ஸ்லோகமும் இக்கருத்துக் கொண்டனவே –
அவன் மன்னிய சீர் தனக்குற்ற அன்பர் –
எம்பெருமானார் இடம் உள்ள குணங்கள் வந்தேறின வல்ல –இயல்பாய் அமைந்தவை என்பார் -மன்னிய சீர் -என்றார்
சீர் பெரியதுமாய் அன்பு சிறியதுமாய் அல்லாது சீருக்கு ஏற்ற பெருமை வாய்ந்தது அன்பு .அன்பு-பக்தி
சீரிய விஷயத்தின் கண் உள்ள அன்பே பக்தி என்க-
அன்பர் என்று பக்தியையே நிரூபகமாகக் கூருகையாலே ஜாதி குலம் முதலியன-பொருள் படுத்த தக்கன வல்ல என்று தோன்றுகிறது
-செல்வம் உடைமைக்கு வர்ண ஆஸ்ரமங்கள்-வேண்டுவன அல்லவே -இராமானுசனாம் செல்வம் உடைமைக்கும் அவை வேண்டுவன அல்ல என்க –
கீழே செல்வம் என்று இராமானுசனைக் கூறி இங்குச் சீர் தனக்கு உற்ற அன்பர் என்கையாலே
பொன்னின் மாற்று உயர்வுக்கு ஏற்ப அதனை விரும்புவது போல சீருக்கு ஏற்ப அன்புருகின்றனர் –
என்னும் கருத்து நயம்பட விளங்குவது காண்க .
பொன்னை இகழ்ந்து புல்லிய விருகங்கள் புல்லுகந்தால் மன்னர் எடுப்பதைப் பொன்னலதே-என்று-வேதாந்த தேசிகன் பணித்த படி
-மனக்குற்ற மாந்தர் என்னும் மிருகங்கள் இராமானுச செல்வதை-இசைகிலாது புல்லிய செல்வமாம் புல்லை யுகந்தாலும்
ஆழ்வான் போன்ற வாசி அறியும் மன்னர்கள் இப் பொன்னையே பேணுகின்றனர் -என்க
அவன் திரு நாமங்கள் சாற்றும் என் பா வினக் குற்றம் காண கில்லார் –
மனக்குற்ற மாந்தர் போல எம்பெருமானார் விஷயமாக கவி புனைதலை அன்பர் பழிக்க-மாட்டார்கள் -கொண்டாடுவார்கள்
-இனி பாக்களிலே இறங்கி குற்றம் காணலாம் -அதுவும்-செய்கிலர் -ஏன் எனில் அவர்கள் பேணும் எம்பெருமானாரின் திரு நாமங்களை இப்பாக்கள் சாற்றுகின்றன –
விஷய கௌரவத்தை -நுதலப்படும் பொருளின் மாண்பை -பார்த்து ஆதரிப்பர் -சொல்லின் தகைமை யில்-நாட்டம் கொள்ளார் என்பது கருத்து –
மாந்தர் மனக் குற்றத்தால் மதி மயங்கி எம்பெருமானார் சீர்மை காண்கிலார் –
அன்பர் மதி மயங்கி அவரைப் பற்றி பாக்களில் உள்ள குற்றங்களை காண்கிலார் .
பாவினம் என்று பாவின் இனமான கலித் துறையை கூறிற்றாகவுமாம்-
பத்தி ஏய்ந்த இயல்விது என்று –
இக் கவி புனைந்தது பக்தியோடு கூடிய செயல் என்ற காரணத்தால் குற்றம் காண கில்லார் என்றபடி –
இயல்விது என்று காண கில்லார் என்று இயைக்க இயல்விது-குறிப்பு வினை முற்று /இயல்விது -இயல்வினை உடையது
இயல்வு -இங்கே கவிபுனைதல்
அன்பர் காண கில்லார்
அன்புடைய ராதலின் காண கில்லார் என்னும் கருத்துடைய அடை கொளியாதலின்-கருத்துடை யடைகொளி-அணியாம்
திரு நாமங்கள் சாற்றும் -என்னும் அடை சொல் திரு நாமங்கள் சாற்றுதலின் குற்றம் காண கில்லார்
என்னும் கருத்துடைய தாதலின் -கருத்துடை யடை மொழி -அணியாம்-இதனைப் பரிகரா லன்காரம் என்பர் வட நூலர் .
அன்புடைமை / திரு நாமங்கள் சாற்றுதல் / பக்தி ஏய்ந்த இயல்வு / –இம் மூன்றும் குற்றம்-காண கில்லாமைக்கு ஹேதுக்களாம்-
புலைமை காட்டத் தீட்டப் பெற்ற கவிகள் ஆயின் அவற்றின் குற்றம் குறைகளை ஆராயலாம்
இவைகளோ பக்தி ரசம் உள்ளடங்காதபடி வெளியே வழிந்த சொற்களால் ஆயவை-
இவற்றில் பக்தியைப் பார்க்க வேணுமே தவிர குற்றம் காண ஒண்ணுமோ என்று அன்பர்-விட்டு விடுவர் என்றதாயிற்று
-பத்தி ஏய்ந்த இயலிது-என்றும் பாடம் உண்டு-அப்பொழுது பக்தியோடு கூடிய சொல் என்று பொருளாம்–

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தால் ஜல்பித்தல்
மனக் குற்றம் உள்ளவர் பழிக்கில் புகழ் ..நைச்ய அனுசந்தானம் பண்ணி கொள்கிறார் .
மனக் குற்ற மாந்தர் என் பிரபந்தம் பழித்தால் அதுவே புகழே போல் தானே
செல்வம் ராமானுசன் என்று ஒத்து கொள்ளாதவர்கள் மன குற்ற மாந்தர்..
10000 பாசுரங்கள் கம்பர் அருளினார் -.பத்தர் பேசினர் பித்தர் பேசினர் பேதையர் பேசினர் -கம்பர்
பக்தர் பேசினாலும் கலக்கம் என்று தான் கொள்ள வேண்டும்
–எனக்கு உற்ற = வேண்டிய செல்வம் ..மாந்தர் பழிக்கில் அதுவே புகழ்.
.அவன் மன்னிய சீர் தனக்கு -குணங்களுக்கு ..உற்ற அன்பர் -தோற்று பக்தி படைத்தவர்..எதிர் தட்டு மனகுற்ற மாந்தர் ..
அவன் திரு நாமங்கள் சாத்தும் என் பா இனம்-கலி துறை குற்றம் காண கில்லார் பத்தி ஏய்ந்த இயல்விது என்றே-ஸ்வாமி பெருமைக்கு நிகராக பாட முடியாது
அவனை விட்டு பிரியாத கல்யாண குணங்களுக்கு தோற்று அடிமை பட்ட அன்பர்கள்-உற்ற அன்பர்– பெருமை உடையோர்கள்
-இவர்கள் அவன் திரு நாமம் சாத்தும் என் பா இனம் -கலி துறை- குற்றம் காண கில்லார்– ஏன் –
பக்தி தேய்ந்த இயல்பு என்பதால்.மட்டும்..இன்னார் குற்றம் சொல்வர்/ இணையார் குற்றம் சொல்ல மாட்டார்..
ஸ்வாமியே உற்ற செல்வம்..செல்வம் இல்லா விடில் உயிர் போகும்– ரூப நாசம் மட்டும் தான்
ஸ்வாமி இல்லா விடில் சொரூப நாசம்.–.விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி..
.சிறிய ஆத்தான் பெரியவர் ஸ்வாமி குமாண்டூர் இளையவல்லி சுவாமியும் அவர்களை முடித்து கொண்டார்களே ஸ்வாமி திரு நாடுக்கு எழுந்து அருளிய பின்பு..
அனந்தாழ்வான் -மரம் ஏறிய ஒருவனை பார்த்து -கேள்வி பட்டதும் உயிர் போக வில்லை
இப் பொழுது விழுந்தால் உயிர் போகாது கால் தான் ஓடியும் என்று அருளிய வார்த்தையை நினைவு கூறுவது
. ஸ்வாமியே பிராப்யம் பிராபகம் -அடைவிக்கும்
இதனால் எனக்கு உற்ற செல்வம்/ லஷ்மணன் லஷ்மி சம்பந்தன் -செல்வம் உடையவன்../லஷ்மண மிஸ்ரர்
-தனம் கூரத் ஆழ்வானுக்கு என்கிறார் பட்டரும் .விஷயீ காரம் சொல்லி திரு நாமங்களை சொல்ல ஆரம்பிக்க –
இது எனக்கு உறும் செல்வன் ஸ்வரூப அனுரூபமான செல்வம் எம்பெருமானார்.
.-பக்தி ஏய்ந்த இயல்வு இது-ஸ்வாபம் /பக்தி ஏய்ந்த இயல் இது –சொல்..

அன்பு பக்தி திருநாமம் என்பதால் குற்றம் ..அவர்கள் சீரை பார்க்க வில்லை இவர்கள் குற்றம் பார்க்கவில்லை
.ப்ரீதியால் தூண்ட பட்டு குண கீர்த்தனம் பண்ண ஆரம்பிக்கிறார்..
குற்றம் சொல்பவர்களின் இகழ்ச்சி பூஷணம் போல கொண்டார் ..
தேசிகன் அருளிய -வைராக்ய பஞ்சகம்-11 தடவை -தனம் தந்தனம் பிரயோஜனம் இல்லை-.கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் வேண்டாம் அநித்தியம்
.அபிந்தனம் அப்பு -எரி பொருளாக நெருப்பு தனஞ்சய தனம் தந்தனம் –அதனால் தான் உற்ற செல்வம் இங்கு என்கிறார்
..சு மனசு சமாராதனம் -நல்ல மனசு படைத்த ஆஸ்ரிதர் ஆனந்தம் கொடுக்கும் -தனஞ்சய விவர்த்தனம் கோபி ஜன பரிவர்த்தனம் -இதுவே தனம்
.தனஞ்சய சந்தன பூஷணன் தனம் -தேர் தட்டுக்கு ஆபரணம் போல
பிரதம பர்வ தனம்…பிதாமகன் தனம் ஹஸ்தி கிரி மேல் இருக்கும் தேவாதி ராஜனே சொத்து
-அஞ்சனாபம் நிர் அபாயம் ..யாதாம்ய பூதமாய் -குரு ரேவ பரம் தனம் -மேம் பட்ட தனம் ..ஏவ காரம் பரம் இதுவே உயர்ந்த தனம்..
.பரம பதத்தில் இருந்த்கு லஷ்மண முனி தனம் என்னை தேடி வந்ததே.-
என்னை ஆள் கொள்ள -அடியாருக்கு ஆள் படுத்த என்று விச்மதீயர் ஆகிறார் இங்கே –
எனக்கு- சப்தம் நமக்கு வைத்து கொள்ளணும் –சாத்விக அகங்காரம் .தலை தூக்கி சொல்கிறார்
-செல்வம் என்றால் எறும்பு கூட தலை தூக்குமே..அபிமான துங்கன்-பெரி ஆழ்வார் அபிமான பங்கமாய் பள்ளி கட்டில் கீழ் – ஆண்டாள்

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் அவரே -எல்லாம் அவன் -ஆழ்வார்
தந்தை நல தாய். தாரம் தனயர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே எதிராசா -மா முனிகள்..
புல்லுக்கு சமம் பிரம- சத்ய லோகமும்-நமக்கு இவரை பெற்ற பின்
குண கீர்தனமே பண்ணி கொண்டு..இசைய கில்லா மன குற்ற மாந்தர்- செல்வம்
பிரதம பர்வ நிஷ்ட்டையர்களையும் சேர்த்து இத்தால் -பகவத் பிரசாதம் இல்லாதவர்கள்..
செல்வ நம்பி வித்வான் இடம் ராமானுஜர் இது போல அருளிய வார்த்தையை நினைவு கூறுவது
. அவன் நினைவு தான் எப் பொழுதும் உண்டு அது காரிய கரம் ஆவது இவன் நினைவு மாறும் பொழுது .-என்கிற ஸ்ரீ சூக்தி நினைவு கொள்ளுவது .
பகவானை சரண் அடைந்தவர்கள் சங்கை கொள்ளலாம்-அடியவர்களை அடைந்தால் மோஷமே ஹேது மட்டுமே -கர்ம பந்தம் இல்லையே
.. குருவை அடைந்தக்கால் –தானே வைகுந்தம் தரும் -மேல் விழுந்து மோஷம் கொடுக்கிறான்– பரம பதம் ..கை இலங்கு நெல்லி கனி
புகழ்வோம் பழிப்போம் புகழோம் இழிவோம் -பெரிய திரு மொழி
ஞான சாகரம்-32- உலகர் பழிக்கில் துதியாம் /மன்னிய சீர்- நித்ய சித்த கல்யாண குணங்கள்
மன்னிய சீர் –எப்படி பட்டது என்று கோடி காட்ட இங்கே –பாஷண்டிகளின் காட்டுக்கு நெருப்பு -சாருவாத மலைக்கு வஜ்ராயுதம்-
புத்தன் இருட்டுக்கு சூர்யன்- ஜைனர் யானைக்கு சிங்கம் -மாயாவாத பாம்புக்கு கருடன்-த்ரி வித சூடாமணி -வேதம் அறிந்தவர்களுக்கு-
ஸ்ரீ ரெங்க ராஜனுக்கு விஜய கொடி -வைபவம்
அடியவர் பாபம் போக்க சக்தி உள்ள ரெங்க ராஜன் சிறை பட வந்தான் உன் ஹிருதயத்தில்-இங்கே இருப்பதால் சர்வ சக்தன் உம் வசம்
…பக்தி தூண்ட சொல்லப்பட்ட பா இனத்தில் குற்றம் காண மாட்டார்கள்
பா– சந்தஸ் இனம்– சேர்க்கை கூடம் /காண கில்லா-கில்லர் சாமர்த்தியம் இல்லாதவர்கள்.
.குணம் பார்க்க தான் தெரியும் குற்றமே குணமாக கொள்பவர் என்பதால் –பக்தி உடன் கூடிய இயல்பு என்பதால்-

——————————————————-

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: