Archive for November, 2012

ஸ்ரீ வசன பூஷணம் அனுபவம்—சூரணை-52- 60 -ஸ்ரீ M.A.V.ஸ்வாமிகள் ..

November 18, 2012
திருமா மகள் தன் சீரருள் ஏற்றமும்
திருமால் திருவடி சேர் வழி நன்மையையும்
பார்த்து வருகிறோம்
சூரணை – 52-
பக்தி தன்னிலே அவஸ்தா பேதம் பிறந்தவாறே
இது தான் குலையக் கடவதாய் இருக்கும்
சூரணை – 53-
தன்னைப் பேணவும் பண்ணும்  தரிக்கவும் பண்ணும்
சூரணை – 54 –
-இந்த ஸ்வபாவ விசேஷங்கள் –
கல்யாண குணங்களிலும்
திருச் சரங்களிலும்
திரு நாமங்களிலும்
திருக் குழல் ஓசையிலும்  காணலாம்
சூரணை – 55-
இது தன்னைப் பார்த்தால் பிதாவுக்குப் புத்திரன்
எழுத்து வாங்குமா போலே இருப்பதொன்று
சூரணை – 56-
இது தனக்கு ஸ்வரூபம்
தன்னைப் பொறாது ஒழிகை
சூரணை -57 –
அங்கம்-தன்னை ஒழிந்தவற்றைப் பொறாது ஒழிகை
சூரணை – 58-
உபாயம் -தன்னைப் பொறுக்கும்
சூரணை -59 –
உபாயாந்தரம் – இரண்டையும் பொறுக்கும்
சூரணை – 60-
இது இரண்டையும் பொறாது

சாதனச்ய கௌரவம் -பார்த்து கொண்டுஇருக்கிறோம்

பெறுவான் முறை –
இரண்டாவது பிரகரணம் –
மூன்று வித -பிரபன்னர் -இரண்டு பிரமாணங்கள் பார்த்தோம் –
பக்தி பாரவச்ய பிரபத்தியே முக்கியம் விசேஷம் –
பிரபத்தி நிஷ்டை குலைந்து பகவத் லாபார்தமாக
ஸுய யத்னத்தில் -நோன்பு நூற்றுதல் மடல் எடுத்தல் –
அவன் வர கொள்ள உபெஷிப்பது -மின்னிடை மடவார் உன்னுடனே கூடன் ஊடும் குருகையூரர்
தளர்வுற்று நீங்க நினை மாறன் –இது எப்படி பொருந்தும் இவற்றுக்கு நிதானம் என்ன –
பக்தி தன்னிலே அவஸ்தா பேதம் பிறந்தவாறே –
இது தான் குலையக் கடவதே இருக்கும் –
அவன் வரவு பார்வு பார்த்து இருக்கும் அளவு அன்றிக்கே –
ஸுய யத்னம் ஷமர் இன்றி அவனே அத்யவசித்து -நிற்காமல்
கண்ணான் சுழலை -மயக்கத்தால் -அதி மாத்திர த்வரை -வழி அல்லா வழி அல்லாகிலும் அவனைபெற
வஸ்து பெருமை உணர்ந்து ஈடுபாடு மிகுந்து -ஆறிஇருக்க முடியாமல் –
என் நான் செய்கேன் -இருப்பு குலைகை
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –கேட்டு மட்டும் இருக்காமல் –
பிரபத்தி நிஷ்டையும் குலைந்த பக்தி அவஸ்தை
தன்னை பேணவும் செய்யும்
தன்னை தரிக்கவும் பண்ணும்
காரை பூணும்  கண்ணாடி காணும் இத்யாதியால் அவன் வரவுக்கு தன்னை அலங்கரித்து கொண்டு இருக்கும் –
திண்ணம் அழுந்த கட்டி -கருமத்தால் -புண்ணை மறைய –
உள் வாய் புற வாய் ஆனால் -காக்கை ஓட்ட போகாதே -சரீரம் –
பட்டர்-அலங்கார பிரியர் – -மண்டபம் அலங்கரிக்க -காட்டி -நம் பெருமாள்
மார்பம் என்பதோர் கோயில் அமைத்து -மாதவன் -பண்டு அன்று பட்டணம் காப்பு –
உன்னுடைய தேகம் நினைப்பால் கூடாது பகவத் கைங்கர்யம் என்றால் பண்ணிக் கொள்ளலாம்
அவன் வரவுக்கு உடலாக அலங்கரித்து கொண்டு –
கால் ஆளும் நிலை அவஸ்தை மாறி –
மடல் எடுக்கை இதற்கும் உப லஷணம்
தரிக்க -அவன் வரக் கொள்ள போகு நம்பி -உபஷித்து தறிக்கவும் பண்ணும்
விட்டு கூட தரிக்க –
தரியேன் இனி உன் சரணம் தந்து சன்மம் களையாயே -நிலை மாறி போகு நம்பி
கழகம் ஏறேல் சொல்லி பக்தி முதிர்ந்த நிலை இவை –
வருகைக்கு உடலாக சில செயலை செய்தல் -மடல் எடுத்தல் –
அனுக்ரகம் செய்யாவிடில் உன்னை –
திருவாலி திருநகரி -நடுவில் மடல் -அனுக்ரகம் மாற்றினால்மடல் வெளி விட்டு விடுவேன் அதி பிரவ்ருத்தி
ஈடு பாட்டின் மிகிதி விஷய வை லஷண்யம் –
பரஸ்பர விருத்த ச்வாபாவங்களை விளைவிக்கும்
 தத் விஷயம் மட்டும் இன்றி -அவன் சம்பந்த விஷயங்களிலும்
திருக்கல்யாண குணங்களிலும் -ஹிம்சை பண்ணுகிறேதே ஈர்கிறதே சொல்வார்கள் கிடைக்காவிடில் –
கோவிந்தன் குணம்  பாடி ஆவி காத்து இருப்பேனே -என்பர்
வல்வினைஎனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய்
திருச்ச்சரம் சரங்கள் ஆண்ட  தண் தாமரைக்கண்ணன் தரிக்க
சரங்களே கொடிதாய்
திரு நாமங்கள் பாடக் கேட்டு மடக் கிளியை கை கூப்பி வணங்கி
கண்ணன் நாமமே குளறி கொன்றீர் பாதகம்
திருக்குழல்  ஓசை -ஒரு நாள் வந்தூத போதராயே
தீன் குழல் ஈருமாலோ –
நான்கையும் -தாரகம் -பாதகம் -சொல்லும் பாசுரங்கள் உண்டே –
நிலா தென்றல் சந்தானம் புஷ்பம் -சம்ச்லேஷ விஸ்லேஷ சமயங்களில் -மாறுமே
தென்றலும் தீயினில் கொடிதாம் –
பாம்போ பாவனா மாருதம் சோக -பெருமாள் வார்த்தை –
பிரணய ரோஷம் உண்டாகி -போகு நம்பி
என்றும் ஒக்க போக்யமாக இருக்கும் இவை கூட
அனுபோக்தாக்கள் இவர்கள் உடைய பிரேம ஸ்வாபக அவஸ்தை
கைங்கர்யமே உயர்ந்த புருஷார்த்தம்
உகந்த விஷயத்தில் சேஷமாய் இருக்கும் இருப்பு சுகமாக காண்கையாலே
வஸ்துவில் சுகமோ துக்கமோ இல்லை
ஏக மேவ -ஸ்ரீ பாஷ்யம் –
பொம்மை குழந்தை -ஆனந்தம் -வயசான பிள்ளை –
வஸ்து ஓன்று தானிவன் தான் மாறி
பால்-விரும்பி குடித்து பித்தம் துப்ப ஜுரம் போனதும் பால் விருப்பம் –
நடுவில் மாறலாமே –
வஸ்து ஸ்வாபம் ஏகமேவ –
ஆழ்வார்கள் பேசித்தே பேசும் ஏக கண்டர்கள்
இரண்டும் ஒருவர் பேச்சு இல்லையானாலும்
பக்தி ஸ்வாப அவஸ்தை காட்டவே
பராஜித ராஷசர் பாசுரம் -சரங்களே கொடிதாக -அடுகின்ற-
ஆழ்வாருக்கும் பாதகமா -ராம விஜயம் தமக்கு -பிடித்த –
ராஷசர் பாவனையில் கலியன் பாட –
தாய் -நாயகிக்கு இல்லை -யசோதை கௌசல்யை தேவகி தசரதன் பாவனை உண்டே
பிராட்டி ஆலிங்கனம் வெற்றி பெற்றால் -அதை சொல்ல வந்த ஆழ்வார்
ராஷசர் பாவனை கொண்டார் -ராம விஜயம் இலக்கை தோற்ற ராஷசர் தன்மை பிறந்து
வியாஜ்யம் இட்டு அனுபவிக்கிறார்
பேணவும் தரிக்கவும் பண்ணும்
அவன் வரும் வரைக்கும் –
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து -இரண்டையும் காட்டும்
ஆக –
பிரபதிக்கு என்று தொடன்கஈவ்வலவாக
பிரபத்தி வைபவம் சொல்லி
விஷய வைபவம் சொல்லி அர்ச்சாவதாரம்
அதிகாரி த்ரிவித
பக்தி பார்வச்ய முக்யத்யையும்
அது தனக்கு ஹேது பூத பக்தி அவஸ்தா பேதம் சொல்லி
அது செய்து விக்கும் அம்சங்களை சொல்லி
அவன் சம்பந்தம் விஷயங்களையும் சொல்லி –
இனி பிரபத்தி சாதனம் இல்லை சொல்ல போகிறார் –
சாதனதயா அனுஷ்டானம் -தர்ம புத்ராதிகள் -தொடங்கி -அனுஷ்டானம் காட்டி –
கர்ம ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்யா அபிமானம்
உபாயங்கள் உடன் சக படியாக பேசுவதாலும்
ஐந்து நிலை -பர ஜீவ உபாயம் -ஒவ் ஒன்றிலும் ஐந்து

திருப்பாவை அர்த்த பஞ்சகம் -ஐந்தும் சொல்லி –

பிரபத்தி வைபவம் சொல்லி
இனி அனுபாயம் உபாயம் இல்லை சொல்ல போகிறார்
பிரபத்தியை உபாயமாக கொண்டால் வரும் அவத்யம்
சூரணை-55 –
 இது தன்னைப் பார்த்தால் பிதா வுக்கு
புத்திரன் எழுத்து வாங்குமா போலே இருப்பது ஓன்று –
நம்பிக்கை இன்றி எழுதி கொடு கேட்பது போல்
மகா விசுவாசம் -முக்கியம் பிரபத்திக்கு –
உபாயம் என்று சொன்னால் –
இதன் ஸ்வரூபத்தை நன்றாக பார்த்தால் –
உத்பாதகன் -உண்டாக்கினவன் -ஹிதம் -தான் அறியாத தசையிலும்
ரஷித்து இருக்கும் பிதா –
அறிந்த தசையில் ரஷிக்க கேட்டால் இரண்டு தலைக்கும் அவத்யம்
சத்தா காரண பூதனாய் -சர்வ தசையில் ரஷகன் அ கார வாச்யன்
ம கார வாச்யன் சம்பந்தம் அவத்யம் =குறை விளைவிக்கும்
ரஷகன் பேரை தன் மார்பில் எழுதி கொள்வது –
ஆனால் இதுக்கு ஸ்வரூபம் தன்மை எது –
சூரணை — 56-
இது தனக்கு ஸ்வரூபம் தன்னை பொறாது ஒழிகை
தன்னை உபாயம் என்று சொன்னால் சகிக்காது
பிரார்த்தனை -நீ உபாயம் ஆவாய் -சொல்வது தான்
வாக்யமே பொய்யாகுமே இதை உபாயம்
தூக்கில் போடணும் துப்பாக்கியால் சுடணும்
ஒரு வார்த்தை சொல்
உண்மை யானால் ஓன்று பொய்யானால் ஓன்று –
நான் தூக்கில் போடா படுவேன் சொன்னானாம் –
உண்மையாய் இருந்தால் -என்னபண்ணுவது விடுதலை பெற்றானாம்
அசாதாராண ஆகாரம்
உபாயம் ஆக வரித்தல் பற்றுதல் சொல்லி –
உபாயவாரண ஆத்மிகை -ஆபாத ப்ரேதீதி-மேல் எழுந்த வாக்கில் பார்த்தால் –
உபாயம் என்று சொல்லவே முடியாது
உபாயம் எம்பெருமான் தானே
சரம ஸ்லோகத்தை இதில் சாங்கமாக விதிக்கையாலே -அங்கம் எல்லாம் உபாயம்தானே
சூரணை – 57-
அங்கம் தன்னை ஒழிந்தவற்றை பொறாது ஒழிகை –
ச்வீகார ரூபம் தன்னை ஒழிய -சேதன பிரவ்ருதிகளை ஒன்றுரையும் சகிக்காமல்
இதனுடைய அங்கம் நிவ்ருத்தி விஷயம் –
சவாசன த்யாகமே அங்கம்-
அனுபாயத்தை தெரிவிக்கிறது -இத்தால் –

பிராபக ஜ்ஞானம் -அர்த்த பஞ்சகத்தில் முக்கியம் –

அவன் அருளைக் கொண்டே அவனை அடைதல் –
பிரபத்தியாவது நீ உபாயம் ஆவாய் -என்று அவனைப் பற்றுதல் –
இத்தாலே பிரபத்தி உபாயம் இல்லையே -ஸ்வரூபம் தப்பு இதை உபாயம் எனபது
நைச்சயம் ஜன்ம சித்தம் -நாயனார் -பிறவியிலே நைச்சயம் இருந்தால் ஸ்ரீ வைஷ்ணத்வம்
ஏறிட்டு கொள்ள வேண்டியது நம் போல்வார் -உபன்யாசம் -கதை
எனக்கு தானுள்ளது உனக்கு யில்லை சொல்வது நைச்சயம் இல்லையே –
த்வே மே உபாய போத –
 சாதனம் பகவத் பிராப்தவ் சகா எவ என்கிற ஸ்திர ஜ்ஞானம் தான் பிரபத்தி –
ஏக சப்தம் -பற்றும் பற்றுதலில் உபாய புத்தி தவிர்க்கிறது -சரம ச்லோகார்த்தம் முமுஷுப்படி
சூரணை- 55–
இது தன்னை பார்த்தால் பிதாவுக்கு புத்திரன்
எழுத்து வாங்குமா போலே இருப்பது ஓன்று –
எழுத்து வாங்குவதாவது  ரஷகன் பேரை தன் மார்பில்
வைத்து கொள்வது -முந்திய வழக்கம் –
இன்று identity caard மாற்றி கொள்வது போல் –
சூரணை -56 –
இது தனக்கு ஸ்வரூபம் தன்னைப் பொறாது ஒழிகை
தன்னை உபாயம் என்று சொன்னால் பொறுக்காது
அடுத்து அங்கம் –
பிரபத்திக்கு ஆநு கூல்யச்ய சங்கல்பம் -பிரதி கூல்யச்ய வர்ஜனம்
கொப்த்ருதவ வரணம் கார்பண்யம் -மகா விசுவாசம்
சூரணை -57 –
அங்கம் -தன்னை ஒழிந்தவற்றை பொறாது ஒழிகை
இவை எல்லாம் அவனை பற்றினால் தானே வருபவை என்பதே கருத்து
எதுவுமே வேண்டியது இல்லை என்பதே அங்கம் –
ஒன்றுமே செய்ய வேண்டாமல் இருப்பதே இதன் அங்கம்
இதை தான் இவையும் சொல்லும் -இவையே தெரிவிக்கும்
ஜோதிஷ்ட ஹோமம் முன் சந்த்யாவதனம் போல்வன செய்ய வேண்டும் –
ஒவ்பாசனம் நித்யம் செய்ய வேண்டியது யோக்யதை பெற முதலில் செய்கிறோம் –
பிரபத்திக்கு அனைத்தையும் விடுவது தான் அங்கம் -சர்வ தர்மான்பரித்யஜ்ய –
சூரணை -58 –
உபாயம் தன்னை பொறுக்கும்
சூரணை – 59-
உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும்
அங்கங்களும் உண்டு உபாயத்வமும் உண்டு இவற்றுக்கு –
சூரணை -60 –
இது இரண்டையும்  பொறாது –
சித்த -தயாராக இருக்கிறார் -சித்தம் -உபாயம்
சாத்யோ உபாயம் – சாதித்து பண்ணி உபாயம் ஆக்குவது –
அவனை பிரார்த்திக்க வேண்டியது ஒன்றே வேண்டியது –
அஷ்டாங்க யோகம் -கர்ம யோகம் -பல செய்து ஞான யோகம் பக்தி யோகம் –
கால விளம்பம் உண்டே-குறை இருந்தால் பலன் கிடைக்காது –
உருதியாகதெரிவிக்க இரண்டையும் பற்றி -அருளுகிறார்
வேறுபாடுகள் –
உபாயம் தன்னை பொறுக்கும்
இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி -பரிகாரம் -இரண்டுக்கும் சுயமே நிர்வாஹகன்
தன்னை உபாயம் என்றால் -பொறுத்து கொள்வான் –
உபாயோ உபேயத்வ-தாது இஹா தத்வம் நகி குணம் பட்டர் -அருளிய பிரமாணம் தன்மையே இது
கிரிஷ்ணம் தர்மம் சனாதனம் –
வேத விதோ விப்ரச்க இப்படி சொல்வார்கள் -அமிர்தம் சாதனம் சாத்தியம் –
தன்னை பொறுக்கும் என்பதால் தன்னை ஒழிந்தவற்றை பொறுக்காது என்பதும் அர்த்தாத் சித்தம்
இந்த சித்தோ உபாயம் சஹாயாந்தரம் நிரபேஷம் –
மற்றவை சஹாயாந்தரம் அபேஷம் உண்டே
ஜோதிஷ்டோ ஹோமம்-அசெற்ற்ஹனம் -பலன்  ஸ்வர்க்கம் பெற -கொடுக்க -நினைவு கொண்டு -அருள –
மீமாம்ஸா -சித்தாந்தம் -யாக யக்ஜ்ம் மற்று நினைந்து -நீரீச்வர மீமாசகன் -அபூர்வம் உண்டாகி
பலன் கொடுத்து விட்டு அழியும் -என்பர்
இந்த சித்தோ உபாயம் சஹாயாந்தரம் சம்சர்க்க அசகமாய் இறே இருப்பது
அநு கூல்ய சங்கல்பம் போன்றவை -பரந்த படியில் –
உபாய அங்கத்வம் போலே –
உண்டாக்கி பெற வேண்டியது இல்லை
நெல்லு குத்தும் பொழுது வியர்வை உண்டாகும் போலே
ஸ்ரீ ரெங்கத்தில்-கொட்டாரம் -நெல் குத்த -மண்டபங்களில் -உரல் வைத்து -நடுவில் –
இடித்து கொண்டே -நெல் அரிசி ஆக்குவது கைங்கர்யம் போல்
ஸ்ரீ ரெங்கத்து உலக்கை போல் ஒழிவு இன்றி வேலை செய்பவர்களை சொல்லுவார்கள் –
உலக்கை கீழே வைக்க கூடாது -அடுத்த பேர் இடம் கொடுத்து போக வேண்டும் –
உமக்கு வியர்வை -நானும் இதை வர வளைத்து வருகிறேன் என்றாராம் போல் -கதையாக சொல்லி
சம்பாவித்த ச்வாபம் ஒழிய பூர்வாங்கமில்லை –
பழகி பழகி நல்ல அனுஷ்டானங்கள் உண்டாகுமே –
இரங்கினால் தன்னடையே வரும் –
16 வயசில் காஞ்சி ஸ்வாமிகள் இவரை சொல்ல சொல்லி -அனுபவம் சொன்னால் தான் வரும்
நீரில் இரங்கி தான் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் –
உபாய அங்கத்வம் அன்றிக்கே அவகாத ச்வாபம்-வியர்வை – போல் சம்பாதித்த  –
அங்கம் வேறே இல்லையே –
உபாயாந்தரம் இரண்டையும்   பொறுக்கும் -சாதனம் சொன்னாலும் பொறுக்கும் அங்கம் உண்டு சொன்னாலும் பொறுக்கும்
உபாயம் =எம்பெருமான்
உபாயாந்தரம்-மற்றவை எல்லாம்
பகவத் விஷயம் -அவன் ஒருவனே
விஷயாந்தரம் போல் –
உபாயமாக சாஸ்திரம் விதித்தது சு பாரதந்த்ர்யா -ஞானம் ரஹீதர்க்கு –
சு யத்ன பரர்களுக்கு மோஷ சாதனா தயா சாஸ்த்ரம்விதித்து -உபாயத்வ பிரதி பத்தி –
அங்கம் சாபெஷி -பிரவ்ருத்தி ரூபா -அதனால் இரண்டையும் சகிகித்து இருக்கும் –
இங்கே செய்வது அங்கம் அங்கு விடுவது அங்கம் –
ஜன்மாத்ரேஷ்சு சகஸ்ரேஷூ -அநந்ய பக்தியால் அடைய படுகிறேன்
ஏகாந்திய ஐ காந்திக்க  பக்தி –
கர்மம் ஞானம் அலங்கரிக்கப் பட்ட பக்தி யோகம் –
கிரிஷ்னே பக்தி பிரஜாயதே பாபங்கள் விலகி -பக்தி வளர்ந்து அடைவது உபாயாந்தரங்கள் –
இது -சித்தோ உபாய வரண ரூபமாய் நிவ்ருத்திசாத்யமாய்
ஸ்வரூப அதிரேகயாய் இருக்கும் பிரபத்தி -இரண்டையும் பொறுக்காது –
மேலே ஐந்து சூத்தரங்களையும் -வேறு படியாக விளக்கி –
பிரபத்தியை உபாயம் என்று கூட சொல்லக் கூடாது -முக்கிய அர்த்தம் –
ஸ்வரூபம் -தன்னை பொறாது ஒழிகை –
வ்யாவ்ருத்தி காட்டி அருளுகிறார் –
அனுபாயம் சாதிக்க இவற்றை அருளிச் செய்கிறார் -உறுதி ஆக்க சித்த சாத்யோ உபாயங்களை
சொல்லி அருளி –
இது இரண்டையும் பொறுக்காது –
ஒன்றுமே வேண்டாமானால் பல சித்திக்கு என்ன வேண்டும் -பதில்
சூரணை -61 –
பலத்துக்கு ஆத்மஜ்ஞானமும்
அப்ரதிஷேதமே வேண்டுவது –
நமது ஸ்வரூப ஞானமும் -விலக்காமையே வேண்டுவது –

பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் .

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவரங்கனும் மா முனிகளும் —

November 17, 2012

திருவரங்க சோலை –
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல்  மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை -திரு மாலை -14
வண்டு -மயில் -மேகம் குயில் பதங்கள் மா முனியையும் -அரங்கனையும்
குறிப்பனவாக அமைந்து உள்ளன –
வண்டினம் முரலும் சோலை-
1-நம் ஆழ்வார் எம்பெருமானை -வண்டாக -தூயிவம் புள்ளுடைத் தெய்வ வண்டு -என்று அருளுகிறார் –
2-மலர்கள் வண்டுகளின் வரவை எதிர்பார்த்து வாசனையை தினம் தோறும் வீசி நிற்கும்
அது போலே ஆழ்வாரும் ஆர்வுற்று இருக்க -அவரினும் முன்னம் பாரித்து தான் அவரை முற்றப் பருகினான் –
3-ஆறு கால்கள் கொண்ட வண்டு -ஷட் பதம் -பகவான் இடத்தில் பக -சப்தம் ஆறு கல்யாண குணங்களைக் குறிக்கும்
ஞானம் -பலம் -ஐஸ்வர்யம் -வீர்யம் -சக்தி -தேஜஸ்

4- லஷ்மீ கல்பல தோத்துங்க ஸ்தனச்தப கசஞ்சல
ஸ்ரீ ரெங்கராஜ  ப்ருங்கோ மே ரமதாம் மாந சாம்புஜே — ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் 1-10-
திருமகளாம் கற்பகக் கொடியின் வாராளும் இளம் கொங்கையாம் பூம் கொத்தில்
சுழன்று வரும் அணி அரங்கன் என்னும் மணி வண்டு அடியேன் உள்ளக் கமலத்து
அமர்ந்து களித்திடுக
மா முனிகள் -வண்டு –
வண்டுகளை வட  மொழியில் -த்விரேப -அதாவது இரண்டு ர எழுத்துக்களை தன பெயரில்
கொண்டுள்ளது -ப்ரமர -என்பது -இது போல் வர வர முனி என்ற பெயரிலும் இரண்டு ரே பம் உள்ளது –
பிரதிவாதி பயங்கரம் அண்ணாவின் வர வர முனி சதகம் –
ராமாநுஜார்ய சரணாம் புஜ சஞ்சரீகம்
ரம்யோ பயந்த்ருயமிநம் சரணம் ப்ரபத்யே — 1- எம்பெருமானார் திருவடித் தாமரைகளில் வண்டு -என்றும் –
மஹ தாஹ்வய பாத பத்மயோ
மஹது த்தம் சித யோர் மது வரதம் — 43- -பேயாழ்வார் திருவடித் தாமரைகளில் வண்டு -என்றும் சடா ராதி ஸ்ரீ மத் வத ந சரஸீ ஜாதமிஹரே
ததீய ஸ்ரீ பாதாம்புஜ மதுகர தஸ்ய வசஸாம் – 53-  நம் ஆழ்வார் திருவடித் தாமரைகளில்  படிந்த வண்டு என்றும் –
தமநுதி நம் யதீந்த்ர பத பங்கஜப் ருங்க வரம்
வர முனி மாஸ்ரயாஸய  விஹாய தத் அந்ய ருசிம் -85 -எம்பெருமானார் திருவடித் தாமரைகளில்
படிந்த வண்டாகிய மா  முனிகளை -நெஞ்சே ஆஸ்ரயி -என்று அருளிச் செய்து இருப்பது
நோக்கத் தக்கது
ஆச்சார்ய ஹிருதயம் -சூரணை -152-
என் பெறுதி என்ன ப்ரமியாதி உள்ளத்து ஊறிய மது வ்ரதமாய் தூமது வாய்கள் கொண்டு
குழல்வாய் வகுளத்தின் ஸாரம்  கிரஹித்து –
வண்டுகள் வகுளம் முதலிய சாரமாம் தேனைப் பருகுதல் இயல்பே –
மா முனிகளும் வகுளாபரணர்  சொல் மாலைகள் சாரம் கிரஹித்து -திருவாய் மொழி நூற்றந்தாதி -அருளி –
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம் -என்று தாமே அருளி செய்துள்ளாரே -மயிலினம்  ஆலும் சோலை –
ப்ரலய  சமய ஸூ ப்தம் ஸ்வம்  சரீரை கதேசம்
வரத  சித சிதாக்யம் ச்வேச்சயா விச்த் ரு ணா ந
கசிதமிவ கலாபம் சித்ர மாதத்ய தூந்வன்
அநு சிகிநி ஸி கீவ க்ரீடசி ஸ்ரீ ஸ மஷம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் – 2-44-
பேரருளா -தோகை விரிக்கின்ற பொறியார்  மஞ்சை பேடை மயில் முன் -அணி மா நடம் பயின்று
ஆடுவது போலே -ஊழி காலத்து உறக்கம் கொண்டவை போல் நின் திரு உடம்பில் ஒரு கூறாய்
ஒன்றி நின்ற -அனைத்தையும் மழுங்காத ஞானத்தினால் -பல்வகை பெரு விறல் உலகமாய்ப் பரப்பி
திருமடந்தை முன்பே நீ விளையாடுதீ –
மயில் தன்  உடலில் அடங்கிய கலாபத்தை விரிப்பது போன்று –மா முனிகளும் தமது திரு உள்ளத்தில்
கிடந்த கலைகளை வியாக்யானம் அருளும் பொழுது விரித்து சிறந்தனர் –
மயில்கள் ஆலித்தல் அழைத்தல் போன்று மா முனிகளும் முகில் வண்ணனைக் கண்ணாரக் கண்டு
கொண்டு ஆட்டமேவி அலந்து அழைத்து அயர்வெய்திய  மெய்யடியார் யாவார் –

கொண்டல் மீதணவும் சோலை  –
சிஞ்சேதி  மஞ்ச ஜனம் இந்தி ரயா தடித்வான்
பூஷா மணித் யுதிபி ரிந்த்ரத  நுர்த தா ந
ஸ்ரீ ரெங்க தாமனி தயாரதச நிர்பரத்வாத்
அத்ரவ் சயாலுரிவ ஸீ தல காள மேக –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – 1-82-
பூ மன்னு  மாது என்னும் மின்னில்  பொலிவதாய் –
இழை பலவற்றில் பதித்த பன் மணிகளின் ஒளி யாகிற ககன  வில் ஓன்று ஏந்தியதாய் –
நல்லருள் என்னும் நீர் நிரம்ப பெற்றமையால் –
திருவரங்க  பெரு நகருள் வரை மேல் –
அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை யணையை  மேவி –
பள்ளி கொள்ளுவதான குளிர்ந்து உறைகின்ற
கார்முகில் அடியேனை யும் நனைத்து அருளுக –
இதனை அடி யொற்றி  திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
காவிரிவாய்ப்  பாம்பணை  மேல் கரு முகில் போல் கண் வளரும் கருணை வள்ளல்
பூ விரியும் துழாய் யரங்கர் பொன்னடியே தஞ்சமென பொருந்தி வாழ்வார்
யாவரினும் இழி குலத்தோர் ஆனாலும் அவர் கண்டீர் இமையா நாட்டத்
தேவரினும் முனிவரினும் சிவன் அயன் என்ற  இருவரினும்  சீரியரே -திருவரங்க கலம்பகம் – 100-

குயிலினம் கூவும் சோலை –
கயல் துளு காவிரி சூழ் அரங்கனை குயில் என்றது நிற ஒற்றுமை ஒன்றினால் அன்று –
குயிலுக்கு வட மொழியில் -வநபிரிய -என்று பெயர் உண்டு –
சோலையில் விருப்புடையது -என்று இதற்குப் பொருள் –
அரங்கனும் வனப் பிரியனே -ஆராமம் சூழ்ந்த அரங்கத்தில் இருப்பதால் –
குயில் மா மரம் ஏறி மிழற்றும் இயல்பு உடைத்தாதலின் -மா -வின் இடத்தில் இதற்கு பெரிய
விருப்பு  உணரப்படும்-அரங்கனோ எனில் -அல்லி  மலர்மகள் போக மயக்குகள் ஆகியும்
நிற்கும் அம்மான் -என்றபடியே -மா -திரு மா மகள் இடம் பேரன்பு உடையவன்

குயில் பஞ்சம ஸ்வரத்தில் இனிமையாக பாட வல்லது
பாரத பஞ்சமோ வேத-என்று மகா பாரதம் புகழ் பெற்றது போலே
ஐந்தாம் மறை  என்னும்படியான ஸ்ரீ ஸூத்திகளை அருளிச் செய்த மா முனிகள் குயிலினை ஒப்பார் –
மேலும் -ஸ்வை ராலாபை ஸூ லபயசி தத் பஞ்சமோபாய தத்தவம் -வரவர முனி சதகம் – 11
எறும்பி அப்பா அருளியது போல் -பஞ்சமோபாயத்தை  உணர்த்தி அருளியவர் –
குயில் பரப்ருதம் -மா முனிகளும் பராபிமானத்தில் -எம்பெருமானார் அபிமானத்தில் ஒதுங்கியவர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யான -அவதாரிகை –

November 17, 2012

ஸ்ரீ ய பதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனாய்-
சர்வ ரஷகனாய் -இருக்கிற சர்வேஸ்வரனை ரஷ்யமாக நினைத்து திரு அவதார
விசேஷங்களுக்கு மங்களா சாசனம் பண்ணினார் திருப் பல்லாண்டிலே-

அந்தியம் போதில் அரி யுருவாகி அரியை அழித்தவனை –பல்லாண்டு பாடுதும் -6- என்றும்
இராக்கதர் வாழ் இலங்கை பாழா ளாகப் படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் – 3- என்றும்
ஸ்ரீ நரசிம்ஹ ப்ராதுர்பாவத்துக்கும் ஸ்ரீ ராமவதாரத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி இருக்கச் செய்தேயும்

மாயப் பொரு படை வாணனை –7- என்றும் ஐந்தலைய – 10 – என்றும் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரதுக்கு பிரசுரமாக
மங்களாசாசனம் பண்ணுகையாலும் –
இவ் வவதாரத்துக்கு ஹேதுவாக -படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்ட – 9-அருளின ஸ்ரீ பெரியபெருமாள்
ஆல  மா மரத்தின் இலை  மேல் ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும்  உண்டான் அரங்கத்து அரவின் அணையான் -என்றும் –
வையம் உண்டு ஆல் இலை மேவு மாயன் மணி நீண் முடிப்பை கொள் நகத்தணையான் பெரிய திரு மொழி – 5-4-2- என்றும்
ஸ்ரீ கோயிலில் நின்றும் திரு மாளிகையில் புகுந்தும்
ஸ்ரீ வட பெரும் கோயிலுடையானாக கண் வளர்ந்து அருளுகையாலும் –

பயின்றது அரங்கம் திருக்கோட்டி -இரண்டாம் திருவந்தாதி – 46-என்று
ஸ்ரீ கோயிலில் நின்றும் தங்கு வேட்டையாக எழுந்து அருளி –
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே உரக மெல்லணை யானாய்க் -பெரியாழ்வார் திருமொழி -4-4-4–  
கண் வளர்ந்து அருளுகையாலும் –
அணி கோட்டியூர் கோன் அபிமான துங்க செல்வனைப் போலே -திருப் பல்லாண்டு -11- இத்யாதிப்படியே இவ் வாழ்வாருக்கு
மங்களா சாசனத்துக்கு சஹகாரியான ஸ்ரீ செல்வ நம்பியோடே ஸ்ரீ திருக் கோட்டியூர் பிரஸ்துதம் ஆகையாலும் –
திருக்  கோட்டியூரானே -பெரிய திருமொழி -9-10-1-என்றும் –
கன்று கொன்று விளங்கனி எறிந்து -பெரிய திருமொழி -9-10-7-இது முதலாக பல இடங்களிலும் –
அவனே இவன் -என்று ஆழ்வார்கள் ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமாக திருக் கோட்டியூரை அருளிச் செய்கையாலும் –

செந்நாள்  தோற்றிச் சிலை குனித்த ஸ்ரீ திரு மதுரையில் -திருப்பல்லாண்டு – காட்டில் -ஸ்ரீ திருக் கோட்டியூர் உத்தேச்யமாகையாலும் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து  வளரச் செய்தேயும் -திருப்பாவை -25-
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் மடிய வஞ்சனையில் வளர்ந்த மணி வண்ணன் -பெரியாழ்வார் திருமொழி -4-3-2- என்று
ஈச்வரத்வம் நடமாடுகையாலும் -குண்டலிதம் -க்வா சித்கம் –

மற்ற அவதாரங்களுக்கு காலமும் நன்றாய் -தாமும் ராஜ குலத்தில் அவதரிக்கையாலும் –
பந்துக்களும் ராஜாக்களுமாய் பலவான்களும் ஆகையாலும் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு காலமும் த்வாபாராந்தமாய் -பந்துக்களும் சாதுக்களான ஆயராய் –
முளைப்பது எல்லாம் தீப்பூண்டுகள் ஆகையாலே
அந்த ஸ்ரீ கிருஷ்ணன் அர்ச்சாவதாரமாய் நின்ற இடத்தில் -அர்ச்சாவதாரம் அர்ச்சக பராதீன
சமஸ்த வ்யாபாரமாய் போருகையாலே -மங்களாசாசனம் மிகவும் வேண்டுவது
அர்ச்சாவதாரத்திலே ஆகையாலும் -சென்னி யோங்கு -5 -4 -அளவும் இவர்க்கு அர்ச்சாவதார
பர்யந்தம்மாக மங்களாசாசனம் நடக்கும் இறே

முதல்பாட்டு –
அவதாரிகை –
ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமான ஸ்ரீ திருக் கோட்டியூரிலே -அர்ச்சாவதார பர்யந்தமாக
மங்களாசாசனம் பண்ணுகிறார் -வண்ண மாடத்தால் –

ஸ்வா பதேசம் –
வண்ணம் இத்யாதி –
வண்ண நன் மணியும் -பெரியாழ்வார் திருமொழி -4-4-3-இத்யாதிப்படியே –
நாநா ரத்னங்களாலே சமைத்து -அழகும் நிறமும் -உடைத்தாகையாலே -தர்சநீயங்களான மாடங்களால்
சூழப் பட்ட ஸ்ரீ திருக் கோட்டியூரிலே

கண்ணன் –
கண்ணில் கூர்மை உடையராய் -நிபுணராய் இருப்பாராலே பரிக்ராஹ்யமான –
தேவகி புத்திர ரத்னம் திருஷ்டி கோசரம் ஆகையாலே -கண்ணன் -என்கிறார்

கேசவன் நம்பி –
அவனுடைய சர்வ காரணத்வத்தையும் -விரோதி நிரசனத்தையும் -தாம்
ஏறிட்டுக் கொள்கையாலே -அவன் போக்யதைக்கு மங்களாசாசனம் பண்ணி -பிரசஸ்த கேசன் –
கல்யாண குண பரிபூர்ணன் -என்கிறார் –

பிறந்தினில் –
இன் இல் பிறந்து -ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பொல்லாங்கு இல்லாத படியாலே
திருவாய்ப்பாடியிலே பிறப்பை இனிய இல்லிலே பிறந்து என்கிறார் –
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே வ்யாவ்ருத்தி சொல்ல மாட்டாரே –
ஆகையாலே சிறைக் கூடத்திலே வ்யாவ்ருத்தி ஸ்ரீ திருவாய்ப்பாடிக்கு உண்டு என்கிறார் –

எண்ணெய் சுண்ணம் இத்யாதி –
எள்ளில் நெய்யையும் மஞ்சள் பொடியையும் ஒருவர்மேல் ஒருவர் தூவி  என்னுதல் –
ஒருத்தருக்கு பிரதியாக ஒருத்தர் தூவி என்னுதல்

கண்ணன் முற்றம்
ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த போதே க்ருக  நிர்வாஹன்  பிள்ளையாக நந்தகோபன் நினைக்கையாலே
கண்ணன் முற்றம்  என்னுதல் –
இடமுடைதான தர்சநீயமான முற்றம் என்னுதல்

கலந்து அளறு ஆயிற்றே –
இவை தம்மிலே சேர்ந்து சேறாயிற்று -என்கிறார் –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஈடு அனுபவம் -சில துளிகள்

November 16, 2012

பீடுடை நான்முகனைப் படைத்தானுக்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு – 6- 6-4 –
சதுர்த்த புவனங்களையும் படைக்க சிருஷ்டிக்க வல்ல சதுர முகன் -பீடு இத்தால் –
பகவத் அபிப்ராயத்தாலே பாண்டவர்களை நாடுடை மன்னவர் -என்கிறார் காணும் –

——————————————————————
தீர்ப்பாரை யாம் இனி –
ஏழ்மை பிறப்புக்கும் சேமம் -இந் நோய்க்கும் ஈதே மருந்து –
இவள் நோய்க்கும் பரிகாரம் அன்றோ –
அதைச் சொல்ல மற்ற ஒன்றை சொல்லுகிறது ஏன் -என்ன
ஆகில் -சம்பார் கைக்குப்  போக வேணுமோ –
வைக்கோல் கொண்டே கட்டி வைப்பது போலே –
அவன் திருவடியே இதற்கும் மருந்து –

—————————————————————————————————–
மணி மாமைக் குறைவில்லா மலர் மாதார் உறை மார்பன்
அணி மானத் தட வரைத் தோள்  அடல் ஆழித் தடக் கையன்
பணி  மானம் பிழையாமே அடியேனைப் பணி  கொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறைவிலமே  – 4- 8- -2 –
பணி =கைங்கர்யம்
மானம்  =அளவு
அதில் ஓர் அளவும் குறையாமே
ஐ திஹ்யம் -கிடாம்பி ஆச்சான் பாகவதர்களுக்கு நீர் பரிமாறும் பொழுது
எம்பருமானார் -நேரே அன்றோ  ஊடோ  பரிமாறுவது -என்று அருள –
ஆச்சான் -பணி  மானம் பிழையாமே அடியேனைப் பணி  கொண்ட -என்றாராம் .

————————————————————————————————————————–

மதுவார் தண் அம் துழாயான
முது வேத முதல்வனுக்கு
எதுவே என் பணி  என்னாது
அதுவே ஆட் செய்யும் ஈதே – – 1-6 2- – –
புரிவதுவும் புகை பூவே என்றது கீழ்
இதில் மதுவார் தண் அம் துழாயான -என்று தொடங்குகிறது –
இது சேரும்படி எங்கனே என்ன –
பூவாகில் மதுவோடு கூடியது அல்லாது இராமையாலே -சேரும் -என்று சொல்லுவர் தமிழர் –
வதுவார் தண் அம் துழாயான -என்ற பாடமான போது -போரச் சேரும்
நாறு நாற்றத்தை உடைய துழாய் என்றுமாம் -இது தமிழர் போரச் சேரும்-
இது போல் சொன்னால் விரோதமிது -பதிகத்திலும் பல மாறுபட்ட
பாட பேதங்களும் தமிழர்கள் பற்றிய குறிப்புக்களும் உண்டு
———————————————————————————————————————
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து – -4 -6 9- –
வேதம் வல்லார்கள் யார் –
சர்வேஸ்வரன் ப்ராப்யமும் ப்ராபகமும் என்ற வேத தாத்பர்யம் கைக் கொண்டவர்களைக் கொண்டு –
———————————————————————————————————–
திருமால் இரும் சோலை மலை என்றேன் -என்ன -10-8-திருவாய் மொழி
ஆழ்வார் எம்பெருமான் சம்வாதம்
இன்று இப்படி சிரசா வஹிக்கிர தேவரீர் -முன்பு அநாதி காலம் இதை கைவிட்டு
இருப்பான் ஏன் –
இனி ரஷகன் அவனுக்கு  நெடுமால் -ரஷ்ய வர்க்கத்தை விட்டு இருந்த இதற்க்கு
சொல்லல் ஆவது ஒன்றும் இல்லையே –பிற்பாடான்  ஆனதுக்கு லஜ்ஜிக்கும்
அதுக்கு மேற்பட -ஆகையாலே சொல்லலாவது மாற்றமும் ஒன்றும் காணாமையாலே
கவிழ்ந்து நின்று காலாலே தரையை கீரினான் –
இதொரு நிர்ஹெதுக விஷயீகாரம் இருக்கும்படியே என்று அதில் ஆயங்கால்
பட்டு ஹ்ருஷ்டராயக் களிக்கிறார் –
——————————————————————————————————-

திருவாய் மொழி -2-3-ஊனில் வாழ்  உயிரே -பதிகம்
முதல் பாட்டிலே -உள்ளத்தை கொண்டாடினார் -நல்லை போ உன்னைப் பெற்று
இரண்டாம் பாட்டிலே -அதையும் இசைவித்த சர்வேஸ்வரனைக் கொண்டாடினார் -என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று
மூன்றாம் பாட்டில் -தன நெஞ்சில் பட்டதொரு உபகாரத்தை சொன்னார் – அடிமைக் கண்
அன்பு செய்வித்து -அறியா மா மாயத்து அடியேனை வித்தையால் -என்று
நான்காம் பாட்டில் -அதற்க்கு பிரத்யு உபகாரமாக ஆத்மா சமர்ப்பணம் பண்ணினார்
எனதாவி தந்து ஒழிந்தேன் –எனதாவியார் யான் ஆர் தந்த நீ கொண்டாக்கினையே –
ஐந்தாம் பாட்டில் -எனக்கு பிரதம சுக்ருதமும்  நீ யானபின்பு -உன் திருவடிகளைக் கிட்டினேன்
என்கிறார் –தனியேன் வாழ் முதலே –உன பாதம் சேர்ந்தேனே
ஆறாம் பாட்டில் -இன்றோ கிட்டிற்று -தேவரீர் எனக்கு விசேஷ கடாஷம் பண்ணின அன்றே
பெற்றேனே என்றார் -அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே -என்று
ஏழாம்  பாட்டில் -அவனுடைய போக்யத்தை அனுசந்தித்து பிரியில் தரியேன் -என்றார்
கன்னலே அமுதே கார்முகிலே -நின்னலால் இலேன் காண்
எட்டாம் பாட்டில் -இப்படி நிரதிசய போக்யனானவனை எளியதோர் விரகாலே லபிக்கப்
பெற்றேநேஎன்கிறார் -சில நாளில் எய்தினேன்
ஒன்பதாம் பாட்டிலே-என்னுடைய சகல கிலேசங்களும் போம்படி அனுபவித்து
களித்தேன் என்கிறார் -செடியார் நோய்கள் கெட படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப்
பருகிக் களித்தேனே -என்கிறார்
பத்தாம் பாட்டிலே -இப்படி அவரை அனுபவித்து கழிப்பார் திரளிலே போய் புகப் பெறுவது
எப்போதோ -என்கிறார் – ஒளிக் கொண்ட சோதி மயமாய் உடன் கூடுவது என்று கொலோ —
அடியார்கள் குழாம் களையே -என்றார்
நிகமத்தில் -இத் திருவாய்மொழியை சபிப்ப்ராயமாக அப்யசித்து -நாலு  நாலும்
நால்வர் இருவர் உள்ளார் கூடி இருந்து அனுபவிக்கப் பாரும் கோள் -என்கிறார் –
அடியீருடன்  கூடி நின்று ஆடுமினே –

இது போல் பல திருவாய் மொழிக்கும் சுருக்கமாக தொகுத்து அருளி இருக்கிறார் .

——————————————————————————————————————-

பத்துடை அடியார்க்கு எளியவன்
பரத்வனை முதலில்  பாடி -அனைத்தையும் விட்டு அவனைப் பற்ற சொல்லி அருளினார்
முடவனான நாம் யானை மேல் ஏறப் போமோ
எளியவனாக நம்மைப் போலே அவதரித்தான் –
நம் போல்வார் தானே என்று எண்ணி விலகி நிற்க
அந்த எளிமையே -எம்பாரே உம்மை இப்படி திகட்டும்படி அனுபவிக்க வைக்கிறதே –
என்று வித்தரானாராம் எம்பெருமானார் –
நீருக்காக தார்மிகர் அமைத்த தடாகத்தில் விழுவாரைப் போலேவும்
விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள் போலவும் –
வேத விளக்கு இறே

வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு இறே

தயரதன் பெற்ற மரகத மணித் தனம் இறே

ஆயர் குலத்து  அணி விளக்கு இறே

எத்திறம் என்று ஆறு மாதம் மோகிக்க வைத்ததே –
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –

—————————————————————————————————————————–
நம்பெருமாள் நம் ஆழ்வார் நம் ஜீயர்
நம் பிள்ளை என்பர் அவரவர் தம் ஏற்றத்தால்
அன்புடையோர் சாற்றும் திருநாமங்கள் தான் என்று
நன் நெஞ்சே எற்றதனைச் சொல்லு நீ இன்று –

தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை
வள்ளல் வடக்குத் திரு வீதிப் பிள்ளை
இந்த நாடறிய மாறன் மறைப் பொருளை
நன்குரைத்து ஈடு முப்பது ஆறாயிரம் –

————————————————————————————-
நம்பிள்ளை திருவடிகளே சரணம் .
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யான சீர்மை -சில எடுத்துக்காட்டுக்கள் ..

November 16, 2012

சிறை இருந்தவள் ஏற்றம் –
தளிர் நிறத்தால் குறைவில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள்  காரணமாகக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி  மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவிலமே —திரு வாய் மொழி –4-8-2-

தூது போனவன் ஏற்றம்
முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால்  மாள முனிந்து அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்காகி பெரு  நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே –பெரிய திருமொழி  –2-2-3-

ஆச்சார்ய ஹிருதயம் –
திருக் குணங்கள் காட்டும் வரிசை
திருவரங்கம் -சொல்லி -திருமலை -ஆழ்வார் திருநகரி
திரு மால் இரும் சோலை -பின்பு அருளியதற்கு காரணம்
பரத்வம்  குணம் சொல்ல வந்த
வண் பெரு வானகம் உய்ய -திருவரங்கம் சூரணை -159
மண்ணோர் விண்ணோர் வைப்பில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம் -சூரணை -160
உறை கோயிலில் பரே  சப்தம் பொலியும் -சூரணை -161
வைஷ்ணவ வாமனத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் -சூரணை  -162
திருக்குறுங்குடி -என்னாதே  வைஷ்ணவ வாமனம் -என்பதற்கு காரணம்
மகா பலி இடம் வாமனன்  தாழ  நின்று இரந்தது  போல் நம்பியும்  எம்பெருமானார் இடம் சிஷ்யனாக இருந்ததால் –
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் -என்று இத் திவ்ய தேச திருவாய் மொழி
பலன் சொல்லித் தலைக் கட்டுவதால் –வைஷ்ணவருடைய வாமன ஷேத்ரம் என்று காட்ட
இங்கு லாவண்யம் பூர்ணம் -சமுதாய சோபான லாவண்யம் -நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த –
என்கையாலே பூரணமாய் இருக்கும் என்கை –
லவணம் -உப்பு உணவில் பயன் படுத்துகையில் முழுமையாய் இருப்பது போல்-
நம்பியின் நிறைந்த சோதி வெள்ளம் -முழுமையாக நிறைந்து இருக்கையாலே – பூர்ணம் என்கிறார் –

நம் பூர்வர்கள் ரகஸ்ய அர்த்தங்களை எங்கு எல்லாம் எடுத்து சொல்ல முடியுமோ
அங்கு எல்லாம் கோடிட்டு காட்டுவர் –
ஈட்டில் நம்பிள்ளை நாலாம் பத்து பிரவேசத்தில் -முதல் மூன்று பத்து  த்வயார்த்தத்தின்
உத்தர வாக்யத்தையும் -அடுத்த மூன்று பத்து பூர்வ வாக்யத்தையும் அனுசந்திப்பதாக காட்டுவர்
முமுஷூ ப்படி -த்வயார்த்தம் -116-சூத்தரத்தில் –
புறம்புண்டான  பற்றுக்களை அடைய வாசனையோடு விடுகையும்
எம்பெருமானே தஞ்சம் என்று பற்றுகையும்

புறம்புண்டான பற்றுக்களை அடைய -சர்வ தர்மான் -என்கிற பதத்தின் அர்த்தத்தையும் –
வாசனையோடு விடுகையும் -பரித்யஜ்ய -என்கிற பதத்தின் அர்த்தத்தையும் –
எம்பெருமானை -மாம்  என்கிற பதத்தின் அர்த்தத்தையும்-
ஏ-என்கிற ஏகாரத்தாலே  ஏகம்  என்கிற பதத்தின் அர்த்தத்தையும்-
தஞ்சம் -சரண பதத்தின் அர்த்தத்தையும்-
பற்றுகை -வ்ரஜ-பதத்தின் அர்த்தத்தையும்-
அடைவே சொல்லுகையாலே -கருத்தை அருளி இட்டு விளக்கிக் காட்டி அருளுகிறார் –

மன்னு குறுங்குடியாய்–பெரியாழ்வார் திரு மொழி –1 -6 -8
-பிரளய த்திலும் அழியாதபடி வர்திக்கிறவனே-
ஸ்ரீ கிருஷ்ணன் திரு மாளிகையை சாகரம் அழித்தால் போல் அழியாமல்-

பொத்த உரல் –  பெரியாழ்வார் திரு மொழி — 1- 10- 7- –
பொத்துண்ட உரல் -நல்ல உரலானால்  நடுவே தேடுவார் உண்டாய் இருக்குமே என்று ஆய்த்து-
பொத்த உரலைத் தேடி இட்டுக் கொண்டது-

ஸ்ரீ பெரியாழ்வார் நான்காம் பத்தில் திருவரங்கம் அனுபவிக்கப் புக
அவதாரிகை மா முனிகள் காட்டும் விதம்
பரத்வாதி குணங்கள் பிரகாசிக்கை –சகலரும் அனுபவிக்கை –
முன் அனுபவித்த திவ்ய தேசங்களுக்கு வேர் பற்று –
சகல லோகங்களுக்கும் அதீனம் –பகலிருக்கை –ஸ்ரீயப்பதித்வம் –
விபவ அவதாரத்தை அனுபவித்த அநந்தரம் -மற்றைய திவ்ய தேசங்களை அனுபவித்த அநந்தரம்
அவற்றுக்கு வேர்ப் பற்றான திருவரங்கத்தை அனுபவித்து –
பரத்வதாதிகளில் உண்டான குணங்கள் —
பரத்வம் -வடிவுடை வானோர் தலைவன்
வ்யூஹம் –கடலிடம் கொண்ட கடல் வண்ணன்
அந்தர்யாமி -கட்கிலீ
விபவம் -காகுத்தா கண்ணனே
அர்ச்சை -திருவரங்கன் –

உபய விபூதி அதீனம் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் –ஆள்கின்ற எம்பெருமான் -நாச்சியார் திரு மொழி -11 -3 –
சகல தேசத்தில் உள்ளாறும் உஜ்ஜீவிக்கை –
வன் பெரு வானகம் உய்ய -அமரர் உய்ய -மண் உய்ய -பெருமாள் திரு மொழி – -1 -10 –
முன்பு அனுபவித்த திவ்ய தேசங்களுக்கு வேர் பற்றான இடம் –
திரு மால் இரும் சோலை –
மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடம் –  நாச்சியார் திரு மொழி- -4 – 1 –
-என்றும் -பொன்னி சூழ் அரங்க நகருள் முனிவனை -பெரிய திரு மொழி – 9- 9- 2- -என்றும்
திருவரங்கன் அவ்விடம் அழகனாக இருக்கிறான் என்றும்
திருக் கோஷ்டியூர் –
பயின்றது அரங்கம் திருக்கோட்டி -இரண்டாம் திருவந்தாதி – – –
தேனார் திருவரங்கம் தென் கோட்டி -மூன்றாம் திருவந்தாதி –
என்று திருவரங்கம் பெருமானே அங்கு அருள் பாலிக்கிறான் -என்றும்
உகந்து அருளின நிலங்களுக்கு எல்லாம் பகல் இருக்கை –
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -சிறிய திருமடல் பாசுரத்தால் அறுதி இட்டு –
சகல தேசத்திலும் ருசி பிறந்தார் எல்லாடும் அனுபவிக்கும்படி –
தென் நாடும் வட  நாடும் தொழ  நின்ற -பெரியாழ்வார் திருமொழி – – 4- 9- 11- –
யாவரும் வந்தடி வணங்க -பெருமாள் திருமொழி – 8- 10-
அனைவருக்கும் ருசி பிறந்து பாடி  தொழுது
ஸ்ரீ ய பதித்வம் –
திருவாளன் இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற -பெரியாழ்வார் திருமொழி – – 4- 9- 10- –
மா முனிகள் இந்த திரு மொழிக்கு அவதாரிகையாக
திருவரங்க மகிமை அருளி -நாம் அனுபவிக்க கொடுத்தருளுகிறார்

மிடறு மிடறு மெழு மெழுத் தோட –வெண்ணெய்  விழுங்கி -பெரியாழ்வார் திருமொழி — -3 -2 -6 – –
ஒதனா பூபாதிகள் அமுது செய்யும் போது குறிக் கொண்டு –
திருப் பவளத்தில்  இட்டு இருக்கும் என்று மெள்ள  மிடற்றுக்கு கீழே இழிச்ச வேணும் இறே
மிடற்றில் அழுத்தாமல் மெழு மெழுத்து உள்ளே ஓடும்படி இறே  இருப்பது –
இலட்டும் சீடை முதலான பணியாரங்களைப் புஜிக்க  வேண்டுமானால்
கல் உண்டோ என்று சோதித்து மெதுவாக கடித்து உண்ண  வேண்டும் –
வெண்ணெய்  ஆகில் வருத்தம் இன்றி மெழு  மெழு  என்று உள்ளே இழியுமே –
கண்ணன் வெண்ணெய்  களவு காண்கையில் திட பதார்த்தம் ஆனால்
அத்தைக்  களவு கண்டு ஓடுகையில் அவசரத்தில் கடித்து முழுங்குவது கடினம்
த்ரவ்ய பதார்த்தமானால் அதைப் பாதுகாப்பாக எடுத்து செல்வது கடினம்
வெண்ணெய்க்கு இவ்விரண்டு தோஷமும் இல்லை -வாயில் அடைத்துக் கொண்டு
செல்லுகையில் பிரயத்தனம் இல்லாமல் முழுங்கி விடலாமே –

ஸ்ரீ வசன பூஷணம் சூரணை – 82-பிராட்டி சக்தியை விட்டாள் -திரௌபதி  லஜ்ஜையை விட்டாள்
சூரணை -81 -பிராட்டிக்கும் திரௌபதி க்கும் வாசி சக்தியும் அசக்தியும் –
பிராட்டி சக்தி  வெளிப்பட்டது எப்போது -ஸீ தோ  பவ -என்று அக்நியை  நியமித்து
திருவடிக்கு இட்ட அக்நியை  தணித்தது அறிவோமே -அதை -தக்தோ பவ -என்று
இலங்கையை எரிக்க விட்டு இருக்கலாமே -திரௌபதி லஜ்ஜையை விட்டது தான்
அரிதான செயல் -எம்பெருமானே வந்து தன்னை ரஷிப்பது தான் ஸ்வரூபம் என்று
அறிந்த பிராட்டி பேரளவு உடையவள் -அப்படி பேரளவு உடையவளாக இல்லாமல் இருந்தும்
பெரும் சபை நடுவே -கண்ணனை விச்வசித்து -லஜ்ஜையை விட்டது மிக  அரிய செயல் –
என்று மா முனிகள் காட்டி அருளுகிறார் –

குலம்  பாழ் படுத்த பெருமான் -பெரியாழ்வார் திருமொழி – -4 -2 -1 –
விபீஷணன் இவர் குலத்தவன் இல்லையே
பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை -ஆண்டாள் –
விபீஷணன் பிரகலாதன் இருவரும் நல்ல அரக்கர்கள்
இலங்கை அரக்கர் குலம்  முறுடு தீர்த்த பிரான் -திருவாய்மொழி – – – –
பெருமாள் கைக் கொண்டு அருளின போதே அந்த ஜன்மம் மாறிப் போந்தது இறே -மா முனிகள் ஸ்ரீ ஸூ க்தி
கொன்று திரியும் அரக்கரை குலம்  பாழ் படுத்து –
ஆதலால் இவ்விடத்தில் சொன்ன அரக்கர் ராவணாதி களும் அவர்களை சேர்ந்தவர்களும் –
ஆதலால் குலம்  பாழ் படுத்து -என்னக் குறை  இல்லை –

பரு வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை
உருவரங்க பொருது அழித்து இவ்வுலகை கண் பெறுத்த  பெருமான் -பெரியாழ்வார் திருமொழி -4 -7 -5 –
இந்த லோகத்தை கண் பெறுவித்தவன் -நிர்வாக வஸ்துவாய்ச் சொல்கிறது –
இத்தால் விரோதியான ராவணனை நிரசித்து -அவனாலே நெருக்குண்ட பிராணிகளை
எல்லாம் ரஷிக்கையாலே -இந்த லோகத்துக்கு தானே ரஷகன் என்னும் இடம் அறிவித்தான் -என்கை-

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் அனுபவம்—சூரணை-40- 51 -ஸ்ரீ M.A.V.ஸ்வாமிகள் ..

November 16, 2012
திரு மாமகள் தன சீர் ஏற்றமும் —மன்னிய இன்பமும் மா கதியும்
குரு வென்னு நிலை பெறும் இன் பொருள் தன்னையும் —
லோகாசார்யயக்ருதே -லோக ஹித வசன பூஷனே
தத்வார்த்த தர்சினோ லோகே தன்நிஷ்டாச்ச ஸூ துர்லப –
சூரணை -38 –
பிரபத்திக்கு அபெஷிதங்களான – சௌலப்ய யாதி கள்
இருட்டறையில் விளக்கு போலே பிரகாசிப்பது இங்கே
பூர்ணம் -கட வல்லி -பூர்ணம் அதக -பூர்ணம் இதம் -அங்கே உள்ளவனும் பூர்ணம்
பூர்ணஸ்ய பூரணத்வம் -பூர்ண ஸ்துதி –
ஆஸ்ரென  சௌகர்ய ஆபாத குணங்கள் -சௌலப்யம் சௌசீல்யம் போன்றவை –
கண்டு பற்றுகை மேன்மை கண்டு அகலாமை நிகரில் புகழாய்
வாத்சல்யம் ஸ்வாமித்வம் -போன்ற நான்கும்
பரத்வத்தில் உண்டு பரம சாம்யாபன்னருக்கு முகம் கொடுக்கும் இடம் அது
இங்கே தான் எடுபடும் -பிரகாசிக்கும் -தண்மைக்கு எல்லை நிலம் நித்ய சம்சாரிகளுக்கு
விஷயம் உள்ள இடத்தில் தான் பிரகாசிக்கும் -கம்பர் -தானம் செய்பவர் அயோத்தியில் இல்லை –
நித்யரே இங்கே வந்து சீல குணம் அனுபவிக்க -என் நாள் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு
ஆஸ்ர்யேன  கார்ய ஆபாத குணங்கள் -அனைத்தும் இங்கே பரி பூர்ணம் –
சூரணை – 39-
பூர்த்தியையும் ஸ்வா தந்த்ர்யத்தையும்
குலைத்துக் கொண்டு தன்னை
அநாதிக்கிரவர்களையும் தான்
ஆதரித்து நிற்கிற இடம்
அனைத்தும் இருந்தாலும் பக்தன் கொடுப்பது அவனுக்கு சந்தோஷம் –
நிரந்குச ஸ்வா தந்த்ர்யம் உள்ளவன் -நமக்கு கட்டுப்பட்டு –
அவாப்த சமஸ்த காமத்வம் -அனைத்தையும் அடைந்த -இவன் இட்டது கொண்டு தான் திருப்தனாக சாபேஷம் –
ஸ்வா தந்த்ர்யம்-ஆவது ஸ்வாதீன ஸ்வரூபம் -அனைத்தும் தன் விருப்பம்
தன்னை ஆராதிக்கிறவன் -ஆஸ்ரித ஆதீன ஸ்வரூப ஸ்திதி யாதிகளை –
சர்வ சக்தன் -தன் இச்சையா மகா தேஜா -பாரதந்த்ர்யம் குறை இல்லையே –
பார்யை இடம் பர்த்தா பாரதந்த்ர்யம் போல் இச்சையால் -ஸ்வரூபத்தால் இல்லை அது போல் –
பும்தேவை பக்த வத்சலன் -ஸ்நானம் பானம் -அடியவர் -ஏழை எதலன் பாசுர பிரவேசம் –
இவனுக்கு வேர்த்து பொழுது-தான் குளித்து – இவனுக்கு பசிக்கும் பொழுது தான் உண்டு –
இவன் காட்டின இடத்தை -தான் வசித்து -அரை போய் பிறை வந்தாலும் இருந்து கொண்டு –
ஜகத் பதி-இவ்வாறு பண்ண  -காரணம் பக்த வத்சலன் –
ஜகத் தாதா அபி சர்வ சக்தன் -அசக்தனாக இருக்க –
அர்ச்சக பராதீன அகில ஆத்மா ஸ்திதி -பட்டர் -அர்சிக்கிரவர்கள் அர்ச்சகர் –
தன் இச்சை  காட்ட -குலைத்து கொண்டு -என்கிறார் –
தான் இப்படி சுலபனாய் நிற்க பெற்றால் -எளிமை கண்டு விலகும் சம்சாரிகள் –
ரஷை ரஷக –பாவம் மாறாடி -ஆக்கிக் கொள்கிறான் –
பூட்டி வைத்தாலும் இசைந்து அசக்தன் போல் இருந்து –
ஞான தசை பிரேம தசை —
கிரந்த சாகிப் கிரந்தம் ஆகிற தேவதை -பகவத் கீதையும் உண்டு என்பர் -வேதமும் உண்டாம் –
பட்டு துணி சுத்தி மண்டபம் -சாமரம் போட்டு கொண்டு -எப்பொழுதும்
வெய்யில் காலம் அச போட்டு குளிர் காலம் சால்வை -warmer போட்டு வைத்து
நமக்கு போல் அவனை நினைத்து -பிரேம தசையில் தட்டு மாறி இருக்கும் –
தனுர் மாசம் வெந்நீர் திரு மஞ்சனம்
அரங்கன் நித்யம் வெந்நீர் திரு மஞ்சனம் ராமானுஜர் திவ்ய ஆக்ஜ்ஜா –
குறட்டு மணியக்காரர் -தொட்டு பார்த்து -சரியாக பாங்காக –
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம் -நம்மைப் போலே நினைத்து ஆராதானம் –
சௌலப்யம் சௌசீல்யம் -விரும்பி விழுகை அன்றிக்கே எளிமை போல் ஹேதுவாக உபெஷிக்கும் சம்சாரிகளையும்
அவர்களையும் விட மாட்டாத ஆர்சாவதாரம்
ஸ்வாமித்வம் அனைவரையும் எதிர்பார்த்து வாத்சல்யம் காட்டி –
அன்றிக்கே –
குணா சதுஷ்டத்தில் சௌலப்யம் என்று  கொண்டு -அதிசயம் –
சர்வ பிரகாரம் –சாபெஷன் பரதந்த்ரன்–வைபவர் இடமும் சுலபனாக –
பரத்வாதிகள் ஐந்திலும் சௌலப்யம் -உண்டாகிலும் -உத்தரோத்தரம் உயர்ந்த -நிலை –
பரத்வம் -அந்தராத்மா -வியூகம்-விபவம் -அர்ச்சை -மேலே மேலே நிலை -பூர்வ பூர்வ நிலை காட்டில் –
பாஞ்சராத்ர வசனம் -இதை விவரிக்க அடுத்த சூரணை
சூரணை -40 –
பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் –
ஆவரண ஜலம் போலே -பரத்வம்
பாற்கடல் போலே -வ்யூஹம்
பெருக்காறு போலே -விபவங்கள்
அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்
பிரசித்தமான சூரணை
பூமிக்கு உள்ள ஜலம்பூ கத ஜாலம் போல் பரத்வம் –
பாராத கடல் பாற்கடல் –
வெள்ளம் எடுத்து ஓடும் பெருக்காறு
மடுக்கள் போல் -தாகம் தணிக்க அர்ச்சை -ஒன்றே உபயோக படும்
தேசாந்தரம் போக வேண்டாமே -பூமியிலே உண்டாய் இருக்க செய்தாலும்
 கொட்டும் குந்தாலி கடப்பாரை மண் வெட்டி –அவசியம் இல்லை drilling  bore well அன்று
சாதனா சப்தகம் -ஹிருதயத்தில் உள்ளவனை -கட்கிலி கண்ணுக்கு விஷயம் இன்றி
அஷ்டாங்க யோக யத்னம் -அப்பால் முதலே நின்ற அளப்பரிய ஆரமுது ஆவரண ஜாலம் –
தூரம் -பாற்கடல் நமக்கு கிட்டே -பூமி  கால் பங்கு -கடல் முக்கால் பங்கு
வெளியில் -உப்பு கரும்பு -கடைசியில் பாற் கடல் ஏழாவது –
தல சத்தான பெருமாள் இரங்கி வந்தானே புண்டரீக மக ரிஷி
நீ கிடக்கும் பண்பை கேட்டேயும் -காண அரிதான வியூகம்
தற்கால உபஜெவனம் பெருக்காறு மண் மீது உழல்வாய் -விபவம்
-மடு-தேச கால -கரண- விக்ரக கிருஷ்டம் இன்றி –
-அதிலே தேங்கின மடு -விபவம் தான் அர்ச்சை-தீர்த்தம் பிரசதித்து போகாமல் –
கோயில்களும் கிரகங்களிலும் என்றும் ஒக்க -கண்ணுக்கு இலக்காம்படி
பின்னானார் வணங்கும் ஜோதி அவதார காலத்துக்கு பின் அசக்தர்கள் இரண்டு அர்த்தம் –
குடிசை திரு மாளிகை மடங்கள் சந்நிதி பண்ணி –
மடுக்கள் போல் பகு வசனம் -அவதார குணங்கள் பரி பூர்ணம் இங்கே –
ஆஸ்ர்யான ருசி பிறந்தார்க்கு  மட்டும் சுலபன் மட்டும் இல்லை
பற்றாவதர்க்கும் ஆசை வளர -புறப்பாடு -ருசி ஜனகன் -உண்டே –
விண் மீது இருப்பாய் -மலை மேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைத்து
நீர் பூ நிலப்பூ மரத்தில் ஒன பூ திரு விருத்தம்
வண்டுகளோ வம்மின் ஆசார்யர்கள் உண்டு கழித்து –
பல பாசுரங்கள் உண்டே

சூரணை -41 –
இது தான் -சாஸ்த்ரன்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரன்களிலே மண்டி விமுகராய் போரும்
சேதனருக்கு வைமுக்யத்தை மாற்றி
ருசியை விளைக்கக் கடவதாய்
ருசி பிறந்தால் உபாயமாய்
உபாய பரிக்ரகம் பண்ணினால்  போக்யமுமாயும் இருக்கும் –
ஹித -சாஸ்திரங்கள் -பகவத் விஷய குணம் உபதேசித்தாலும் –
விஷயாந்த்ரங்கள் தோஷம் சொன்னாலும் -பற்றப் போகாமை –
துர் வாசனா பலம் -உபதேசங்கள்-பலம் இன்றி – பூர்வ பூர்வ வாசனை –
ஜன்மாந்திர சகஸ்ரேஷூ –
போகமே பெருக்கி–மாதரார் கயலில் பட்டு –யாதானும் பற்றி நீங்கும் வ்ரதம்-ஏறிட்டு கொண்டு
பகவத் விஷயம் முகம் வைக்க இசையாதே வர்திக்கை விமுகர்
வைமுக்யத்தை மாற்றி -போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து
மாதரார் -தேவதேவி -கோயில் கைங்கர்யம் கட தீபம் உண்டு -திருவந்திக் காப்பு நடந்து இருந்தது –
காஞ்சி புரம் இன்றும் உண்டு –
குட முறை உண்டு -போதரே -இங்கே வாடா -எங்கடா பார்கிறாய்
என் புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வாய்த்த அழகன் —
வயலில் பட்டு அழுந்துவேனை -சௌந்த்ர்யாதிகளால் சித்த அபஹாரம் –
ருசி பிறந்தால் -ஆர் எனக்கு நின் பாதமே தந்து ஒளிந்தாய் -சம்சார நிவ்ருதிக்கு
போக்கியம் -உபேய சித்திக்கு வேறு தேச விசேஷம் போக வேண்டாதபடி –
கைங்கர்யம் இங்கே கொடுத்து –
அணி அரங்கன் கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாதே
தேனே பாலே கன்னலே அமுதே உபயம்
ஆக பிரபத்திக்கு –
தொகுத்து -மா முனிகள் சாரம் -வழங்கி
குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆக வேணும்
அது உள்ளது அர்ச்சாவதாரம் என்றும்
இவ் விஷயத்தில் அனைத்தும் புஷ்கலங்கள்
விசெஷதித்து சௌலப்யம்
நைரபெஷ்யங்களை அழிய மாறி –
பரத்வாதிகள் ஓர் ஓர் பிரகாரத்தாலே துர்லபம்
இவ்வளவும் அன்றி ருசி ஜனகமாய் உபெயமுமாய் இருப்பான் என்றும் –
உபாய உபேய இரண்டும் தானேயாய் -முக்கிய அர்த்தம் –
 ரகஸ்ய த்ரய சாரம் சித்தோ உபாயம் -தேசிகன் –
புல்லை காட்டி புல்லை இடுவாரைப் போலே –
திரு மேனி காட்டி -அனுபவிக்க –
சு இதர விஷய ஆசை தவிர்த்து –
பிரபத்தி அபெஷித குணம் உஜ்ஜ்வலம் சமஸ்த குண
பிரபன்ன கட கூடஸ்தர் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே –
ஆழி வண்ணா நின் அடி இணை அடைந்தேன் அணி அரங்கத்தம்மானே
பிரகரணத்துக்குள் u பிரகரணம் -சாரம் வழங்கி மா முனிகள் விளக்கி –
தேச கால அதிகாரி பிரகார -அபாவம் -விஷய விசேஷம் தர்சிப்பித்த அநந்தரம்
அதிகாரிகள் மூன்று வகை –
கொஞ்சம் கடின விஷயம் நிதானமாக பின்பு அனுபவிப்போம் –
சூரணை – 42 –
இதில் -பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர்
சூரணை – 43-
அஞ்ஞரும் ஜ்ஞானாதிகரும் பக்தி பரவஸரும் –
சூரணை – 44-
அஞ்ஞானத்தாலே பிரபன்னர் அஸ்மாதாதிகள்
ஜ்ஞாநாதிக்யத்தாலே பிரபன்னர் -பூர்வாசார்யர்கள்
பக்தி பார்வச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –
சூரணை – 45-
இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற
சூரணை – 46-
இம்மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் –
விடாய்-வற்றின ஆற்றில் ஓடித் தீர்த்தம் உண்பார் உண்டோ

சுலபமான அர்ச்சாவதாரம் –
பிரபத்திக்கு -அதிகாரிகள் மூவர் –
ஹேது -வைத்து பார்த்து –
அஞ்ஞர்-ஞானம் இன்றி -நம் போல்வார்
ஞானாதிகர் -ஆச்சார்யர்கள்
பக்தி பாரவச்யத்தால் -ஆழ்வார்கள் -பக்தி விவசர் அவற்றின் வசத்தில் இருப்பவர்கள் –
பகவல் லாபம் அடைய ஞானமே இன்றி -அஞ்ஞர் -அசக்திக்கும் உப லஷணம்-
அச்சு போட நான்கு பிரகரணங்கள்-சரி சமமாக விபாகம் –
ஞானம் சக்தி இல்லாதவர் அஞ்ஞர் என்று காட்ட -இவரே மேலே அருளிய சூரணை காட்டி –
பிராபகாந்தர -சொல்ல அஞ்ஞர் அச்சக்தி இரண்டையும் காட்டி
ஞானாதிகர் -ஞானமும் சக்தியும் உண்டு -அதிகமான ஞானம்
உபாயாந்தரங்கள் ஸ்வரூப விருத்தம் -அவனுக்கே ஆட்பட்டு இட்ட வழக்காய்-அசித் போல்  இருத்தல் –
குழந்தை தாய் பார்த்தே இருப்பது போல்
பகவத் அத்யந்த பரதந்த்ரம் –
பக்தி வசம் -ஒன்றையும் அடைவுகெட அனுஷ்டிக்க முடியாமல்
கால் ஆளும் நெஞ்சு அழியும் -உள்ளமும்  உடலும் உருகி
சிதில அந்த கரணம் உள்ளவர்கள் -ஆழ்வார்கள் –
மூவரும் பிரபத்தி செய்ய –
அஸ்மத்தாதிகள்–நைச்ய பாத்ரம்-வாகாம் அகோச தேசிகர் கூராதிநாத
அகில நைச்ய பாத்ரம் -சமஸ்த நைசயம் அஸ்ய அஹம் -என்னிடம் பரி பூரணமாக உள்ளது மா முனிகள்
சொல்லிக் கொள்ள -அதிலும் நாம் சேர முடியாமல் -இஹா லோக மயி அஸ்தி –
இதர உபாய அனுஷ்டானம் செய்ய ஞானாதிகள் இன்றி -அநந்ய கைதிகளாக பரம் நியாசம்
பொறுப்பை துவமே உபாய பூத மே பவ –பரத்தையும் பொகட்டு-சம்சார பாரம் அவன் இடம் ஒப்படைத்து –
தைல தாராவது போல் பக்தி யோகம் செய்ய ஞானம் இன்றி -இடைவிடாமல் -வேறே நினைவு இன்றி
ப்ரீதி பூர்வக த்யானமே பக்தி செய்ய ஞானமும் இல்லை சக்தியும் இல்லை –
ஞானம் சக்தி இருந்தாலும் –
அஸ்மாத்தாதிகள் தம்மையும் கூட்டி தம்மையும் அருளிச் செய்து கொள்கிறார் -நைச்யத்தாலே –
பூர்வாசார்யர்கள் -ஞானம் பரி பூர்ணம் உண்டே -ஆழ்வார்களால் அருள –
நாத முனிகள் நம் ஆழ்வார் மூலம் பெற்ற படியை -ஞானாதிகர் -மிகுதியாக உடைய ஞானம் –
ஸ்வரூப விருத்த ஞானமும் உண்டே -பிரபத்தி இதனால் செய்ய
ஸ்வரூப யாதாத்ம்ய தர்சனம் உள்ளபடி கண்டு உணர்ந்து –
செய்த்தலை நாற்று போல் அவன் செய்வன செய்து கொள்ள விட்டு –
ரிஷிகள் ஆழ்வார்கள் பரம அணு பர்வதம் போல் –

ஞானம் மட்டும் -மிகுதி ஆசார்யர்கள் ஞானாதிகர் -ஸ்வரூப விருத்தி
இட்ட வழக்கை இருக்க அறிந்தவர்கள் –
ஆழ்வார்கள் பக்தி பார்வச்யம் -நெஞ்சு இடிந்து உகும் –
ஆசார்யர்கள் பக்தி இல்லையா ஆழ்வார்களுக்கு ஞானாதிக்கம் உண்டே

 சூரணை – 45-

இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற
பிரபதன ஹேது -உறைத்து இருப்பது இது ஒன்றே -எல்லாம் இருந்தாலும்
அஞ்ஞானம் ஞானாதிக்யம்  பக்தி பாரவச்யம் மூவருக்கும் உண்டு –
முதல் நிர்வாகம் -குறை இதில் –ஆழ்வார்கள் இடம் லவ தேசம் அஞ்ஞானம் இல்லையே –
சூரிகள் போல் இவர்கள் -திவ்ய சூரிகள் என்பர் –
ஆசார்யர்களை சொல்ல மாட்டோம் –
மயர்வற மதி நலம் இங்கேயே அருளினதால் —
மிகுதி -ஏற்று கொள்ளாமல் -அனுசந்தானம் தான் -ஊற்றம்
நைச்ய அனுசந்தானம் நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன் சொல்லிக் கொள்வார்களே –
அனுசந்தான பரமாக்கி யோஜித்தால் விரோதம் இல்லை –
ஓர் ஒன்றே பிரபதன ஹேதுவாக சொல்லி –
அநந்ய கதிகளாய்-பிரசுரமாய் -இருப்பதாக அனுசந்திக்கையாலே -என்று கொண்டு –
ஸ்வ அனுசந்தானம் உண்டே நைசயம் கூட  -நுணுக்கமான வித்யாசம் –
அஸ்மாதாதிகளுக்கு-அஞ்ஞானம் பொருத்தம்
ஆச்சார்யர்கள் பிராமாணிகர் -பிரமாணம் படி நடந்து -அஞ்ஞானம் சம்சாரத்தில் இருப்பதால் நீங்காது அறிவர்
ஆழ்வார்களுக்கு -சம்சார -சம்பந்தம் இல்லையே -மயர்வற மதி நலம் -அஞ்ஞானம் சவாசனை நிவ்ருத்தி -உண்டே
நைச்சியம் அஹம் அஸ்மி அபராதானாம் ஆலய – அகதி -அகிஞ்சன -நீயே உபாயம்
பிரார்த்தனையே சரணாகதி –
இந்த அஞ்ஞானாதி த்ரயத்துக்கு காரணம் மேலே சொல்கிறார்

சூரணை -46 –

இம் மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும்
மூன்று தத்வம் அசித் சித் ஈஸ்வரன் –
மூன்றையும் மூன்றில் சேர்த்து அருளுகிறார் –
சம்சாரிகள் தேகமே ஆத்மா அசித் பற்றி அஞ்ஞானம்
ஆசார்யர்கள் சித் ஜீவாத்மா தன்மை உள்ளபடி அறிந்து
பரதந்திர ஞானம் வந்து சரணாகதி
ஆழ்வார்கள் எம்பெருமான் திவ்ய மங்கள விக்ரகம் குணம் அறிந்து -பக்தி பாரவச்யம்-
சாதனா அனுஷ்டானங்களில் அஞ்ஞானம் அசக்தி மூலம் –
கர்மம் காரணமாக பெற்ற  சரீரம் தானே –
யாதனா சரீரம் நரகத்தில்
இங்கே ஒரு சரீரம் -மனுஷ்ய மிருக ஸ்தாவர –
அங்கெ அப்ராப்க்ருத சரீரம் -அவனை அனுபவிக்க –
தாரதம்யம் கர்மம் அடிப்படையில் –
சித் ஞானம் உடைய ஆசார்யர்கள் –ஆத்மா ஸ்வரூப யாதாம்ய -தர்சனம் உள்ளவர்கள்
மத்யமபத -ஞானம் உடையவர் –
கரண சைதில்யம் -உள்ள ஆழ்வார்கள் -பக்தி பாரவச்யத்தால் –
கால் ஆளும் -கண் சுழலும் -அடைவு பட அனுஷ்டிக்க மாட்டாமல் -உருகி –
பக்தி விவிருத்தி -காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி –
காதல் -அன்பு வேட்கை அவா -ஆழ்வார் உபயோகித்த சப்தங்கள் பக்தி தான் காட்டும்
பக்தி பாரவச்யம் பகவத் தத்வம் பற்றியே வரும் –
ஓர் ஒன்றே பிரபதன ஹேது
மூன்றும் ஒருவர் இடம் உண்டோ -என்பதற்கு திவ்ய ஸூகதி அருளுகிறார் மேல் –

சூரணை – 47-

என்னான் செய்கேன் என்கிற இடத்தில் இம் மூன்றும் உண்டு
என்னான் நான் செய்கேன் -மூன்றும் உண்டு
யாரே களை கண்
என்னை என் செய்கின்றாய் –
ஆர்த்தி கண்டு இரங்க காணாமையாலே –
தன்னை பெரும் இடத்தில் சில சாதனா அனுஷ்டானம் வேணும் என்று நினைத்து இருக்கிறான்
உபாயாந்தர -அஞ்ஞன் நான் என் செய்கேன் என்கிறார் முதலில்  -என்னான் செய்கேன் –

ஞானம் மயர்வற மதி நலம் கொடுத்தேனே
நீ தந்த ஞானத்தால் ஸ்வரூப பாரதந்த்ர்யம் உணர்ந்து
என் நான் செய்கேன் அடுத்து சொல்லி
சாதனம் அனுஷ்டானம் அப்ராப்தம் என்று இருக்கிற நான் என் செய்கேன் –
ஞான ஆதிக்யமுண்டே
ச்வரூபத்து சேரா விடிலும் உன்னை பெற -எத்தை தின்ன பித்தம் பிடிக்கும்
மடல் எடுத்தல் போல் செய்யலாமே ஞானம் மாதரம் தந்தாய் ஆகில்
பக்தி ரூபாபன்ன ஞானம் -ஆபன்ன =அடைந்த
பக்தியான ரூபத்தால் -பழுத்து கொடுத்தாயே –
ஒன்றையும் அடைவு கெட அனுஷ்டிக்க முடியாமல் –
என் நான் செய்கேன் -மூன்று தடவை அனுசந்தித்து கொள்ளவேண்டும்
அஞ்ஞானம் -ஞானாதிகர் -பக்தி பார்வச்யம்
மூன்றும் உண்டே
சூரணை – 48-
அங்கு ஒன்றைப் பற்றி இருக்கும்
சூரணை – 49-
முக்கியமும்  அதுவே
மூன்றும் இருந்தாலும் -ஊன்றி இருக்கிற பக்தி பார்வச்யத்தாலே பண்ணினார்
பிராப்ய ருசி -பக்தியால் தான்
துடிப்பு உண்டே –
இனி நின்ற நீர்மை இனி யாம் உறாமை முதலிலே பிராத்தித்து
பிரமாணம் காட்டி
சூரணை –50 –
அவித்யாதா ஸ்லோகம்
பட்டர் அருளியது -ஜிதந்தே ஸ்லோகம்
ஆச்சான் பிள்ளை வியாக்யானம்
பெரியவாச்சான் பிள்ளை குமாரர் நாயனார் ஆச்சான் பிள்ளை என்பர்
பிரபத்திக்கு அதிகாரிகள் த்ரிவிதம் பட்டர் அருளி செய்தார் தொடக்கி
அஞ்ஞான் ஆகிறான் தன பாக்கள் ஞான சக்திகள் இல்லாதவன்
சர்வஞ்ஞன் அநந்ய சாத்யன் என்று இருக்கும் பூர்வர்கள்
பக்தி பரவாசன் அடைவு கெட அனுஷ்டிக்க மாட்டாமல்
பிராபகனும் பிராப்யனுமாய் இருப்பவன் மூவருக்கும் சர்வேஸ்வரன்
ஜிதந்தே சௌனக பகவான் வியாக்யானம் செய்கிறார்
பராசர பட்டர் சொன்னதை ஆச்சான் பிள்ளை அருளி –
சானக பகவான் -பட்டர் -ஆசான்பில்லை -பிள்ளை லோகாசார்யர் -காட்டி அருளுகிறார் மா முனிகள்
பிரமாணம் காட்டி –
பகவத் அநந்ய -கதித்வம் -சர்வஞ்ஞன் உள்ளபடி அறிந்தவன் ஞானாதிக்யமா -ஆத்மாவை உள்ளபடி அறிவதா
இரண்டும் வேவேறே இல்லை ஓன்று தான் என்கிறார் –
மூன்றும் மூன்று தத்வம் காட்டுவதற்காக அங்கே காட்டி –
சர்வ சக்தி சர்வஞ்ஞன் உணர்ந்து -அவனுக்கு அடிமை பட்டவன் என்று உணர்ந்து –
இந்த  ஸ்லோகத்தில் ஞானாதிக்யம் பகவத் தத்வம் காட்டி –
சூரணை -51 –
இதம் சரணம் அஞ்ஞானம்
லஷ்மி தந்த்ரம் பாஞ்சராத்ர சம்கிதையில் உள்ளது
இதம் ஆனந்தம் இத்யாதாம் -நிரந்தர ஆசை உடையவர் –
இதம் -சரணாகதி சொல்லி -சம்சாரம் தாண்ட வழி முன்னே சொல்லி இங்கே காட்டி
சம்சார கடலை தாண்ட -சடக்கென அநிஷ்ட நிவ்ருத்தி த்வரை உடையாருக்கு
பக்தி பூமா பரிமாணம் —
பக்தி பாரவச்யம் உபாயாந்தரத்தில் அசக்தி –மேலே – துடிப்பையும் உண்டாக்கி –
விளம்பம் பொறுக்காமல் –
மூன்று வித அதிகாரி பிராட்டியும் காட்டி -பிரமாணம் –
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மங்கை ஆழ்வார் –

November 15, 2012

திரு மங்கை ஆழ்வாரின் வடிவழகில் ஈடுபட்டு மணவாள மா முனிகள் அருளிய

வடிவழகு சூர்ணிகையும் தனிப்பாடல்களும் –

அணைத்த வேலும் -தொழுத கையும் -அழுந்திய திருநாமமும்
ஓம் என்ற வாயும் -உயர்ந்த மூக்கும் -குளிர்ந்த முகமும்
பரந்த விழியும் -பதிந்த நெற்றியு- நெறித்த புருவமும்
சுருண்ட குழலும் -வடிந்த காதும் -அசைந்த காதுகாப்பும்
தாழ்ந்த செவியும்- சரிந்த கழுத்தும் -அகன்ற மார்பும்
திரண்ட தோளும் -நெளித்த முதுகும் -குவிந்த இடையும்
அல்லிக் கயிறும்  -அழுந்திய சீராவும் -தூக்கிய கரும் கோவையும்
தொங்கலும் தனிமாலையும்-தளிரும் மிளிருமாய் நிற்கிற நிலையம்
சாற்றிய திருத் தண்டையும்-சதிரான வீரக் கழலும்
தஞ்சமான தாளிணையும் குந்தியிட்ட கணைக் காலும்
குளிர வைத்த திருவடி மலரும் வாய்த்த மணம் கொல்லையும்
வயலாலி மணவாளனும் வாடினேன் வாடி என்று
வாழ்வித்தருளிய நீலக் கலிகன்றி மருவலர்தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன் மங்கை மன்னனான வடிவே –
உறை கழித்த வாளை யொத்த விழி மடந்தை மாதர் மேல்

உருக வைத்த மனம் ஒழித்து   இவ் வுலகளந்த நம்பி மேல்
குறைய வைத்து மடல் எடுத்த குறையலாளி திரு மணம்
கொல்லை தன்னில்  வழி பறித்த குற்றமற்ற செங்கையான்
மறை உரைத்த மந்திரத்தை மாலுரைக்க அவன் முனே
மடியொடுக்கி மனமடக்கி வாய் புதைத்து ஒன்றலார்
கறை குளித்த வேல் அணைத்து நின்ற விந்த நிலைமை என்
கண்ணை விட்டகன்றிடாது கலியன் ஆணை ஆணையே –
காதும் சொரி முத்தும்  கையும் கதிர்வேலும்
தாது புனை தாளிணையும் தனிச் சிலம்பும்
நீதி புனை தென்னாலி நாடன் திரு வழகைப் போல
என்னாணை ஒப்பார் இல்லையே
வேல் அணைத்த மார்பும் விளங்கு திரு வெட்டு எழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த  வலச்செவியும்
தாளிணைத் தண்டையும் தார்க் கலியன் நன்முகமும்
கண்டு களிக்கும் என்கண்
இதுவோ திருவரசு இதுவோ திரு மணம் கொல்லை
இதுவோ எழில் ஆழி என்னுமூர்
இதுவோ தான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டு எழுத்தும் பறித்த விடம்
ஐயன் அருள்மாரி செய்ய அடி இணைகள் வாழியே
அந்துகிலும் சீராவும் மணி யாரையும் வாழியே
மையிலகு வேல் அணைத்த வண்மை மிகு வாழியே
மாறாமல் அஞ்சலி செய் மலர்க் கரங்கள் வாழியே
செய்ய   கலனுடன் அலங்கல் சேர் மார்பும் வாழியே
திண் புயமும் பணிலம் அன்ன திருக் கழுத்தும் வாழியே
மையல் செய்யும் முக முறுவல் மலர்க்கண்கள் வாழியே
மன்னு முடித் தொப்பாரம் வளையமுடன் வாழியே –
ஸ்ரீ மதாலி ஸ்ரீ நகரீ நாதாய கலி வைரிணே

சதுஷ் கவி ப்ரதானாய பரகாலாய மங்களம்
பத்மா நியுக்த குமுதவல்யா ப்ரியசி கீர்ஷ்யா
ஆராதித விஷ்ணு பக்தைய பரகாலாய மங்களம்
கருணா கர காஞ்சீ ஸ ஸூகந்த புற நாதத
நிவ்ருத்த ராஜபாதாய பரகாலாய மங்களம்
சர்வச்வே விநியுக்தேசபி ராஜோஸ்ர்த்தை ஸ்லோகங்கள்
பூஜி தாச்யூத பக்தைய பரகாலாய மங்களம்
ரங்கேச ராஜ்ஜோஸ்ர்த்தைஸ் சகலார்த்தாப ஹாரிணே
தத் பக்த பூஜநாரத்தம து பரகாலாய மங்களம்
பக்தாராதன ஸூ ப்ரீதாத் ரங்க தாம்ன க்ருபாகராத்
ப்ராப்தாஷ்டாஷர மந்தராய பரகாலாய மங்களம்
ஸௌ வர்ண பாஹ்ய பிம்பேண ரங்கிணோ கோபுராதிகம்
ஷட் கைங்கர்யம் க்ருதவதே பரகாலாய மங்களம்
ரங்காதி திவ்ய தேசான் ஷட் பிரபந்தைர் மநோ ரமை
பக்த்யா ஸ்துவதே பூயாத் பரகாலாய மங்களம் –
கலந்த திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தான் வாழியே
காசினியில் குறையலூர் காவலோன் வாழியே
நலம் திகழ் யாயிரத்து ஒண்பத்து நாலுரைத்தான் வாழியே
நாலைந்துமாறைந்தும்நமக்குரைத்தான் வாழியே
இலங்கு எழு கூற்று இருக்கை யிருமடல் ஈந்தான் வாழியே
இம் மூன்றில் இரு நூற்று இருபத்தேழு ஈந்தான் வாழியே
வலம் திகழ் குமதவல்லி மணவாளன் வாழியே
வாட் கலியன் பரகாலன் மங்கையர் கோன் வாழியே –
திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

அருளிச் செயல் அனுபவம் —

November 15, 2012

நாச்சியார் திருமொழி 1-9-
தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி  செய்து வாழப் பெறா விடில் நான்
அழுது அழுது  அலமந்தம் மா வழங்க ஆற்றவும் அது வுனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவ தோர்  ஒருத்தினை நுகம் கொடு பாய்ந்து உஊட்ட மின்றித் துரந்தால் ஒக்குமே  -1-9-
இங்கே பாற் கடல் இல்லை பார்க்கடல் –
இதை பரிஷை செய்தார்களாம் காஞ்சி சுவாமி குறிப்பிட்டு உள்ளார் –
பார் சூழ்ந்த கடல் பூர்வர் வியாக்யானம் ஸ்பஷ்டமாக குறித்து அருளி உள்ளார்கள்
பெரியாழ்வார்  திருமொழி -4-9-1-
மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ
செரு  வுடைய திசைக்கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடிதன் திருவுருவும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீளம் காற்றாட்ட ஓ  சலிக்கும் ஒளி  அரங்கமே -4-9-1-
பூர்வாசார்யர்கள் மலருகின்ற கண் என்றே அருளியதால் மலர் கண் என்பதே சரியான பாடம்
மலர்க்கண் -மலர் போன்ற கண் -தப்பான பாடம்
கமல பந்துவை -திருவடிக்கு கமலத்தை உபமானமாக சொல்லு
சொல்ல மாட்டேன் பதில் அளித்தாராம்
சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதி திருப்பாதம்
எல்லையில் சீர் இள ஞாயிறு இரண்டு போல் என்னுள்ளவா -என்ற பாசுரமே அவர்கள் கேள்விக்கு பதில் –

————————————————————————————–

வெந்திறல் வீரரில் வீரர் ஒப்பார்

வேதமுரைத்து இமையோர் வணங்கும்
செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும்
தேவர் இவர் கொல் தெரிக்க மாட்டேன்
வந்து குறள்உருவாய் நிமிர்ந்து
மாவலி வேள்வியில் மண்ணளந்த
அந்தணர் போன்று இவரார் கொல் என்ன
அட்ட புயகரத்தேன் என்றாரே  -பெரிய திருமொழி -2 -8 -2 –

இன் கவி பாடும் பரம கவிகளா
 தன் கவி தான் தன்னைப் பாடுவியாது -இன்று
நன்கு வந்து என்னுடனாக்கி என்னால் தன்னை
 வன் கவி பாடும் என் வைகுந்தநாதனே -திருவாய் மொழி -7 -9 -6 –
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான் –யானே
இரும்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் நல்லெண பிரித்து -இரண்டாம் திருவந்தாதி – 74-
நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே -மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை உண்டே என்னொருவர்
தீக்கதிக் கண் செல்லும் திறம் -முதல் திருவந்தாதி -95-
தாமுளரே தம்முள்ள முள்ளுளதே தாமரையின்
பூவுளதே ஏத்தும் பொழுது உண்டே வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது -இரண்டாம் திருவந்தாதி – 21-
நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அம் கையால் தொழுதும் நன் நெஞ்சே -வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறை யும் தண் துழாய்
கண்ணனையே காண்க நம் கண் -மூன்றாம் திருவந்தாதி -8-
———————————————————————————————————-
நின் தனக்கும் குறிப்பாகில் கறக்கலாம் கவியின் பொருள் தானே –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூகதி
– ஸ்வத சர்வஞ்ஞானாய் இறுமாந்து இருந்தால் போதாது -என்னோடு அதிகரிக்கில் அறியலாம் –
ஒரு வசிசிஷடனோடே சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்க கடவ -அவனுக்கு
திருமங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்க தாழ்வோ -ஆயின் அவன் மங்கை மன்னனிடம்கற்றானோ
கற்றிலனோ தெரியாது -கற்க விரும்பியது மட்டும்  நமக்கு தெரிகிறது –
வட வேம்கடவன் எம்பெருமானார் இடம் வட மொழி வேத சாரம் வேதார்த்த சந்க்ரகம்
கேட்டு அறிந்தான் -இன்றும் ஞான முத்தரை உடன் அங்கே சேவை சாதிக்கிறார் –
சங்காழி அழிக்க பெற்றது உலகம் அறிந்ததே –
திருக்குறுங்குடி நம்பி  ஸ்ரீ வைஷ்ணவ நம்பி ஆனதும் பிரசித்தம் இறே
வேதத்தின் உட் பொருள்  நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -மதுரகவிகள்
வேதப்  பொருளே என் வேங்கடவா -பொருள் அவன் -உட் பொருள் -பாகவதர்
அத்ரபரத்ரசாபி நித்யம் யதீ ய சரணவ் சரணம் மதீயம்
ஈன்ற தாய்-ஆழ்வார்
 வளர்ப்புத்தாய் -எம்பெருமானார்
பெருக்கி வாழ்வு அளிக்கும் வள்ளல் -பெரிய ஜீயர்
ஆழ்வார்  எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
பொன்னடியாம் செங்கமலம் -உட் பொருளின் சாரம்
எறும்பி அப்பா -வரவர முனி சதகம் -63 –

ஆத்மாநாத்மபிரமிதி  விரஹாத் பத்யுரத்யந்ததூர
கோரே தாபத்ரி தயகுஹரே கூர்ணமானோ ஜநோசயம்
பாதச்சாயாம் வரவர முனே ப்ராபிதோயத் பிரசாதாத்
தஸ்மை தேயம் ததி ஹகி மிவ ஸ்ரீ நிதே ர் வர்த்ததே தே–
தேஹாத்மா விவேகம் கூட இல்லாதவரும் -எம்பெருமானுக்கு வெகு தூரத்தில் உள்ளவரும் –
கோரமான தாபத் த்ரய படு குழியில் சுழலுகின்றவருமான என்னைப் போன்ற மக்கள்
எவருடைய அனுக்ரஹத்தால் திருவடி நிழலில் செர்க்கப்பட்டனரோ -அத்தகைய
தேவரீருக்கு திருமகள் கேள்வனும் இவ்விஷயத்தில் வழங்கலாம் படி யான வேறு
கைம்மாறு யாது உள்ளது -தனியன் சமர்ப்பிப்பது தவிர வேறு இல்லை எனபது கருத்து –
பதச்சாயா -திருவடி உபாயமும் நிழல் உபேயமும்-பிரத பர்வம் நம் பெருமாள் திருவடி நிழல் –
சரம பர்வம் -மா முனிகள் திருவடி நிழலே –
விஷ்ணு சேஷீ ததீய ஸூ ப குணா நிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் –
மோஷம் ஏக ஹேதுவான ரம்யஜாமாத்ரு முனிவர் -ஜீயர் திருவடிகளே சரணம் –
———————————————————————————————————————————
ஒண் சங்கதை வாளாழியான் ஒருவன் அடியேன் உள்ளானே -திரு வாய் மொழி – 8- 8- 1-

பொய்கை ஆழ்வார் -பாஞ்ச ஜன்யம் அம்சம்-ஒண் சங்கு
பூதத்தாழ்வார் -கதையின் அம்சம் -ஒண் கதை
பேயாழ்வார் -நாந்தகம் அம்சம்  -ஒண் வாள்
திரு மழிசை ஆழ்வார் -திரு வாழி அம்சம் -ஒண் ஆழி
முதல் ஆல்வார்கலோடும் திரு மழிசை ஆழ்வார் உடன் எம்பெருமான் நம் ஆழ்வார் ஹிருதயத்தில்
புகுந்தான் -என்று ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் சுவாமிகள் நிர்வகிப்பாராம் –
————————————————————————————————
                              திருவாய் மொழி                                                                            கண்ணி நுண் சிறுத் தாம்பு
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுது — 2- 5- 4-      நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
                                                                                                                        அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே –
மலைக்கு நாவுடையேற்கு – -6 -4 -9 –                                                  நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே – 6- 10- -10 –                                 மேவினேன்  அவன் பொன்னடி மெய்ம்மையே
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை – -5 -2 -7 –                         தேவு மற்று அறியேன்
பாடி இளைப்பிலம் – 1- 7- 10- –                                                                      பாடித் திரிவனே
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் – 8- 10- 4- –                         திரி தந்தாகிலும்
உரிய தொண்டர் தொண்டர் – 6- 9- 11-                                                            நம்பிக்கு ஆள் உரியனே
தாயாய் தந்தையாய் – 7- 8- 1- –                                                                            அன்னையாய் அத்தனாய்
ஆள்கின்றான் ஆழியான் – 10- 4- 3- –                                                                     என்னை ஆண்டிடும் தன்மையான்
கடியனாய் கஞ்சனைக்கொன்ற பிரான் – 9- 6- 11-                                       தக்க சீர் சடகோபன்
யானே என்தனதே என்று இருந்தேன் – 2- 9- 9- –                                                  நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
எமர் கீழ் மேல் எழு பிறப்பும் மா சதிர் இது பெற்று – 2- 8-1 –                  இன்று தொட்டு எழுமையும்
என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் – -7 -9 -1 – –                       நின்று தன புகழ் ஏத்த அருளினான்
ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்க  – 1- 7- 7- –                                       என்றும் என்னை இகழ்விலன் காண்மின்
மயர்வற மதி நலம் அருளினன் – -1 1-1 –                                              எண்திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே
அருளுடையவன் – 2- 10-11 –                                                              அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கது
பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் -10 -8 -2 –                நிற்கப் பாடி என் நெஞ்சுள்  நிறுத்தினான்
வழு விலா அடிமை செய்ய  வேண்டும் நாம் – 3- 3- 1- –                    ஆட்புக்க காதல் அடிமைப் பயன்
ஆராத காதல் – -2 -1 -11 –                                                                                  ஆட்புக்க காதல்
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை                      பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும்
 கொண்டாய்- 5- 7- 3- –                                                                                           செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய
என் அன்பேயோ  – -10 -10 -7 –                                                                                                தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய்
உலகம் படைத்தான் கவி – 3- 9-10 –                                                                        மதுரகவி
உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும்
தம்மூர் எல்லாம் – 5- 3- 11- –                                                                            நம்புவார் பத்தி வைகுந்தம் காண்மினே
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -எத்திறம்
பிறந்தவாறு
பையவே நிலையம் வந்து                                                                                  கண்ணி நுண் சிறுத் தாம்பு
உரலை நேராக செதுக்கப் போகாது -அப்போதாக கயிற்றை  நெடுக விட போகாது -இனி இவனை விட்டு நெடிய
கயிறு தேடி எடுக்கப் புகில் பின்னை இவன் தான் எட்டான் -காற்றில் கடியனாய் ஓடும் -இனி செய்வது என் –
என்று அவள் தடுமாறிய படியைக் கண்டான் -கட்டுண்ணப் பண்ணிய -சதகரூப ரூபாய -பிறந்து
படைக்க நினைத்த குணத்தை இழக்காமல் இருக்க -கட்டுண்ணப் பண்ணினான் –
கண்ணியார் குறுங்கயிற்றால் கட்டவெட்டேன்று இருந்தான் -பெரியதிருமொழி – 5- 9- 7- –
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் – பெரியதிருமொழி – 11- 5- 9-
தாம் நா சைவ –யதி சக் நோஷி  -சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது –
அவர் உயர்வற உயர்நலம் உடையவன் குணத்தை முதலில் அனுபவித்தார்
அவன் திரு மேனியில் ஸ்பர்சித்ததொரு தாம்பை வர்ணிக்கிறார்
அவருடைய உத்தேச்ய வஸ்து வெளிறாய்  கழிகிறது இறே
கட்டுண்ணப் பண்ணிய -பக்தி உண்டே யாகிலும் அவன் தானே தன்னை அணைத்து
தர வேண்டும்படியாய் -இது பின்னையும் சிறிதாய் இருக்கும் ஆய்த்து-
நாயமாத்மேத்யாதி –யமேவைஷ வ்ருணுதே தேந லப்யஸ் தச்யைஷ ஆத்மா  விவ்ருணுதே
தநூம் ஸ்வாம்–என்றபடி -இந்த பக்தி நெஞ்சில் அந்ய பரதையை  அறுக்கும் இத்தனை –
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தன்னைக் கட்டி -திரு சந்த விருத்தம் –83 –
எட்டு என்று திரு அஷ்டாஷரமாய் -அத்தாலே யாதல் –
இரண்டு என்று வாக்ய த்வயமாதல் -அத்தாலே யாதல் –
வசீகரித்து என்னவுமாம் -அல்லது எட்டும் இரண்டும் அறியாதார்க்கு
கட்டப் போகாதே –
களவிலே தகனேறினபடி -அபிமத ஸித்திக்கு ஓர் அஞ்சலியே சாதனம் என்று அறிந்து
தொழுகையும் -பெருமாள் திரு மொழி – 7- 8- – செய்வான் இறே
பெரு மாயன் -அவாப்த சமஸ்த காமன் -தனக்கு ஒரு குறை உண்டாய் -அது தன்னை
ஷூத்ரரைப் போலே கழவாகிற வழி அல்லா வழி இழிந்து சர்வ சக்தியான தான்
அது தன்னை தலைக் கட்ட மாட்டாதே -வாயது கையதாக அகப்பட்டு  கட்டுண்டு
பையவே நிலையும்-திரு வாய் மொழி – 5- 10- 3- உடம்பு வெளுத்து நின்ற நிலை அளவும் செல்ல நினைக்கிறார் –
என்னப்பனில் -பகவத் சம்பந்தம் அற வார்த்தை சொன்னார் ஆகில் ஆழ்வார் சம்பந்தம்
அற வேணும் இறே -பும்ஸாம்  த்ருஷ்டி சித்த அபஹாரிணம்-என்றபடியே அவ்வருகு
போவாரையும் துவக்க வல்ல விஷயத்தில் துவக்குண்டு சொல்கிறார் –
என்னப்பனில் நண்ணி -இங்கே தோஷ தர்சனம்  காண விரகு இல்லையே –
நல்கி என்னை விடான் நம்பி -திருவாய் மொழி – 1- 10-8 -ஆழ்வார் உத்தேச்யமாக பற்றின
விஷய பூர்த்தி இவர் பற்றின -தென் குருகூர் நம்பி -ஆசார்யர்களை நம்பி என்ன கற்பித்தார்
என்றக்கால் -ஓர் உக்தி  மாத்ரமே  அமையும் இவ் விஷயத்துக்கு
மனோ வாக் காயம் மூன்றும் வேண்டி இருக்கும் பகவத் விஷயத்துக்கு
பூர்த்தி சௌலப்யம் இரண்டாலும் வந்த ஏற்றம்-
——————————————————————————————
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஆழ்வார்கள் உகந்த ஸ்ரீ ராமன் ..

November 15, 2012

ஸ்ரீ ராமன் பாமாலை -ஆழ்வார்கள் உகந்த  ஸ்ரீ ராமன்

..                      முதலாயிரம்
திருப்பல்லாண்டு
– 1-    இராக்கதர் வாழ் இலங்கை பாழ் ஆளாகப் படை பொருதான் -3 –

பெரியாழ்வார் திருமொழி-
– 2-    பரந்திட்டு நின்ற படு கடல் தன்னை -இரந்திட்ட கைமேல் எறி திரை மோதக்
கரந்திட்டு நின்ற கடலை கலங்க சரம் தொட்ட கையான் — 1-6 7- –
– 3-    குரக்கினத்தாலே குரை  கடல் தன்னை நெருக்கி அணை  கட்டி நீணீ ரிலங்கை
அரக்கர்  அவிய  அடு  கணையாலே நெருக்கிய கையான் – – 1-6 8- –

-4-  கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்க கரியும்  பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன் கானடை அங்கண்ணன் — –2-1-8-

– 5-  வல்லாளிலங்கை மலங்க சரம் துரந்த வில்லாளன் – – 2-1 10- –
– 6-  சிலை ஓன்று  இறுத்தான்  -2 -3 -7 –
– 7-   நின்ற மராமரம் சாய்த்தான் –2 -4 -2 –
– 8-  பொற்றிகழ் சித்ரகூடப் பொருப்பினில் உற்ற வடிவிலொரு கண்ணும் கொண்ட
வக்கற்றைக் குழலன் —2 -6 -7 –
– 9-    மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணிமுடி பத்தும் உடன் வீழ
தன்னிகர் ஒன்றில்லா சிலைகால் வளைத்திட்ட மின்னுமுடியன்  –2 -6 -8 –
– 10- தென்னிலங்கை மன்னன் சிரம் தோள்  துணி செய்து
மின்னிலங்கு பூண் விபீடண  நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னலன்காரன் — 2- 6- 9- –
-11 –  கள்ள  வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டான் — – -2 -7 -5
– 12- என்  வில்வலி கண்டு போ  என்று எதிர்வந்தான்
தன் வில்லினோடும்  தவத்தை எதிர்வாங்கி முன் வில் வலித்து
முது பெண் உயிர்  உண்டான் – 3- 9- 2-
-13 – மாற்றுத் தாய் சென்று வனம் போகே  என்றிட
ஈற்றுத்  தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றமிலாத சீதை மணாளன்    – -3 -9 -4

– 14- முடி ஒன்றி மூ வுலகங்களுமாண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடிநிலை ஈந்தான் —3- 9- 6- –
– 15- தார்கிளந்தம் பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொற் கொண்டு போகி
நுடங்கிடை சூர்பணகாவை    செவியோடு மூக்கு அவள் ஆர்க்க அரிந்தான்  — -3- 9- 8-
– 16- காரார்  கடலை அடைதிட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன்முடி ஒன்பதோடு
ஒன்றையும் நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராமுதன் – – 3–9 -10 – –
– 17- செறிந்த மணிமுடிச் சனகன் சிலை இறுத்து  சீதையை கொணர்ந்தது
அறிந்து அரசுகளை கட்ட அரும் தவத்தோன் இடை விளங்க
செறிந்த சிலைகொடு தவத்தை சிதைத்தான்   -3 -10 -1 – –
-18 –  எல்லியம்போது  இனிதிருத்தல் இருந்ததோர் இடவகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கார்க்க விருந்தான் – – -3- 10- 2-
– 19-   கலக்கிய மா மனத்தனளாய் கைகேசி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய்
மன்னவனும் மறாது ஒழிய குலக்குமரா காடுறையப் போ என்று
விடைகொடுப்ப இலக்குமணன் தன்னோடும் அன்கேகினான்   -3- 10- 3- –
-20 –  கூரணிந்த வேல்வலவன்  குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த
தோழமை கொண்டான் – – -3 -10 -4 –
– 21-  கானமருங்  கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து
தேனமரும் பொழில் சாரல் சித்ரகூடத்து இருக்க
பரத நம்பி பணிய நின்றான் — -10 -5 –
– 22-  சித்ரகூடத்து இருப்ப  சிறு காக்கை முலை  தீண்ட அத்திரமே கொண்டு எறிய
அனைத்து உலகும் திரிந்தோடி வித்தகனே யிராமா  ஒ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்தான் –3–10 -6 –
– 23-  பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட -சிலை பிடித்து
எம்பிரான் ஏக பின்னே யங்கு  இலக்குமணன் பிரிய நின்றான்  – – —3 -10 -7 –
– 24-  அடையாளம் மொழிந்த அத்தகு சீர் அயோத்தியர் கோன் — -3- 10- 8- –

25- திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே
வில்லிறுத்தான் — 3- 1- 9-
– 26-  கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண்  முடியன் எதிரில்
பெருமை இராமன் — 4- 1- 1-
– 27 – நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச் சக்கரம்
ஏந்து  பெருமை யிராமன் காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக்
கடும் சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன்
தன்  வேள்வியில் காண நின்றன்   -4 -1 -2
– 28- சிலையால் மராமரம் எய்த தேவன் –தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று
தடவரை கொண்டடைப்ப அலையார் கடற்கரை வீற்று இருந்தான்  –4 -1 -3 –
– 29- அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை குலம் பாழ்
படுத்து குல விளக்காய் நின்ற கோன்   — -4 -2 -1
– 30- வல்லாளன் தோளும்  வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத
மூக்கும் போக்குவித்தான்  -4 -2 -2 –
– 31-  கனங்குழையாள் பொருட்டா கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம்
கழுவேற்றுவித்த  எழில் தோள்  எம்மிராமன் – -4 -3 -7 –
– 32- எரி சிதறும் சரத்தால் இலங்கையனைத் தன்னுடைய வரிசிலை வாயில் பெய்து
வாய்க்கோட்டம் தவிர்ந்துகந்த அரையன் – – 4- 3- 8-
-33 –  தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் சாரதி – – 4- 7- 1-
– 34-  கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தான் – -4 -8 -4 –

–35 –  பெரும் வரங்கள் அவை பற்றி  பிழக்கு உடைய இராவணனை
உருவரங்கப் பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தான் — 4- 8- 5-
– -36 – கீழுலகில் அசுரர்களைக் கிழங்கு இருந்து கிளராமே ஆழி விடுத்தவருடைய
கருவழித்த அழிப்பன்   — 4- 8- 6-
– 37- கொழுப்புடைய செழும்  குருதி கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்
பிழக்கு  உடைய அசுரர்களை பிணம் படுத்த பெருமான் -4 -8 -7
–  38- பருவரங்களவை பற்றி படையாலித்து எழுந்தானை
செருவரங்க பொறாது அழித்த திருவாளன் —4 -8 -10
– 39 – மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ
செரு  உடைய திசைக்கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் -4 -9 1-
– 40- மன்னுடைய விபீடணற்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி
மலர் கண் வைத்தான் –4-9 -2-
திருப்பாவை –
– 41- சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்  -12 –
– 42- பொல்லா அரக்கனைக் கிள்ளி களைந்தான் -13 –
– 43-  சென்று அங்கு தென்னிலங்கை செற்றான்  -24 –
நாச்சியார் திருமொழி –
– 44- கடலை யடைத்து யரக்கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையைப்
பூசலாக்கிய சேவகன்    – -2 -6 –

45- சேது பந்தம் திருத்தினான்  – -2 -7 –
-46 –  சீதை வாய் அமுதுண்டான்  – 2–10
– 47-  வில்லால் இலங்கை அழித்தான்  -3 3
– 48 – இலங்கை அழித்த  பிரான் – – 3 -4 –
– 49 –  மாதலி   தேர்  முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல்
சரிமாரி தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன்  – 3 3
-50- கொல்லை யரக்கியை  மூக்கரிந்திட்ட குமரனார்  – 10- 4-
பெருமாள் திருமொழி

– 51 – சுடர் வாளியால்  நீடு மாமரம் செற்றவன்  – 2 2
-52–முன்னிராமனாய் மாறடர்த்தான்   -2-3-
-53 – மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவன்
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தான்  – 8 -1 –
– 54 -திண்  திறலாள் தாடகை தன் உரமுருவச் சிலை வளைத்தான் – 8-2-
55-  கொங்குமலி  கரும் குழலாள் கௌசலை தன குல மதலை
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகன் தாசரதி  – 8 -3
56 -தயரதன்  தன் மா மதலை மைதிலி தன்  மணவாளன் ஏமரு
வெஞ்சிலை வலவன்   -8 -4-
57- பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆராவன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவன் – 8 -5

58-சுற்றம் எல்லாம் பின் தொடர தொல்  கானம் அடைந்தவன்
அயோத்தி நகர்க்கதிபதி சிற்றவை  தன்  சொல் கொண்ட சீராமன் – 8-6-
59–வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவன்  – 8-7-
60-மலையதனால் அணை  கட்டி மதிள் இலங்கை அழித்தவன்
சிலை வலவன்  சேவகன் சீராமன்  -8 -8
61-தளைய விழு நறும் குஞ்சித் தயரதன் தன் குல மதலை
வளைய ஒரு சிலையதனால் மதிள்  இலங்கை அழித்தவன்
இளையவர் கட்கு அருளுடையான் -8-9-
62-ஏவரி வெஞ் சிலை வலவன் இராகவன்  -8 -10-
63-வன்  தாளிணை  வணங்கி வள  நகரம் தொழுது ஏத்த மன்னனாவான் நின்றான்
அரி இணை மேல் இருந்தானாய் நெடும் கானம் படரப் போக நின்றான் -9-1-
64-இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி மையாவாய களிறு ஒழிந்து
தேர் ஒழிந்து  மா ஒழிந்து வனமே மேவி நெய்வாய வேல் நெடும் கண்
நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக நடந்தான்  – 9- 2-
65-கொல் லணை மேல் வரி நெடும் கண் கௌ சலை தன் குல மதலை
குனி வில்லேந்தும் மல்லணைந்த  வரைத் தோளன் வியன் கான
மரத்தினீ ழல் கல்லணை மேல் கண் துயிலக் கற்ற காகுத்தன் – 9-3-
66-வேய்  போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன்
வில்லைச் செற்றான் – 9-4-
67-பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல்லடிகள் குருதி சோர விரும்பாத
கான் விரும்பி வெயில் உறைப்ப வெம்பசி நொய் கூரப் போனவன் -9-5-
68-பூ மருவி நறும் குஞ்சி புன்சடையாப் புனைந்து பூந்துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஏமரு  தோள் புதல்வன் வனம் சென்றான் – 9-7-
69-70–பொன் பெற்றோர் எழில் வேதப்புதல்வன் முன்னொரு நாள் மழு வாளி சிலை
வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றான் – 9-8-

71-தேனகு மாமலர்க்கூந்தல் கௌ சலையும் சுமத்ரையும் சிந்தை நோவக்
கூனுருவில் கொடும் தொழுத்தை சொற் கேட்ட கொடியவள் தன் சொற் கொண்டு
கானகமே மிக விரும்பி வன நகரைத் துறந்தான் – 9- 10-
72 -ஏரார்ந்த கரு  நெடு மால் இராமன் -9-11-
73-அம் கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும்
விளங்கும் சோதி வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி விண் முழுதும்
உய்யக் கொண்ட வீரன் செங்கண் நெடும் கரு முகில் இராமன் – 10-1-
74-வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி வரு குருதி பொழி தர வன் கணை
ஒன்றேவி மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் -10-2-
75-செவ்வரி நற் கரு நெடும் கண் சீதைக்காகி சினவிடையோன் சிலை இறுத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன்
எவ்வரி  வெஞ்சிலை தடக்கை இராமன்  -10-3-
76 –தொத்தலர் பூஞ் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்து
துறைக் கங்கை தன்னை பக்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து சித்திர கூடத்து இருந்தான் – 10-4-

77-வலி வணக்கு வரை நெடும் தோள் விராதைக் கொன்று வண் தமிழ் மா முனி
கொடுத்த வரி வில் வாங்கி கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி சிலை வணக்கி மான் மரிய  எய்தான் -10-5-
78- தன மருவு வைதேகி பிரியலுற்று தளர் வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன  மருவு கவியரசன் காதல் கொண்டு வாலியைக் கொன்று இலங்கை நகர்
அரக்கர் கோமான் சினமடங்க மாருதியால் சுடுவித்தான் – – 10-6-
79-குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு அவன்
தம்பிக்கு அரசும் ஈந்து திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன்  -10-7-
80- அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய்
தான் முன்கொன்றான் தன்  பெரும் தொல்  கதை கேட்டு மிதிலைச் செல்வி
உலகு உய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் செம் பவளத் திரள் வாய்த் தன்
சரிதை கேட்டான்  -10-8-
81-  செறி தவச் சம்புகன் தன்னை சென்று கொன்று செழு மறையோன் உயிர்  மீட்டு
தவத்தோன் ஈந்த நிறை மணிப்பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னை
தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட திறல்  விளங்கும் இலக்குமனைப்
பிரிந்தான் –10-9-
82-அன்று சராசரங்களை வைகுந்தத்தில் ஏற்றி அடலரவப் பகை ஏறி அசுரர் தம்மை வென்றி
இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வர தன் தாமம் மேவிச்
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் – 10-10-
83–தில்லை திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதி யோடு அமர்ந்தான்
எல்லையில் சீர்த் தயரதன் தன்  மகன் -10-11

திருச் சந்த விருத்தம்
84–குரங்கை யாளுகந்த எந்தை -21-
85-கூனகம் புகத் தெறித்த கொற்ற வில்லை –30-
86-வேலை வேவ வில் வளைத்த வெல்  சினத்த வீரன் –31
87–குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அங்கரங்க வெஞ்சரம் துரந்த வாதி -32
88-மின்னிறத்து எயிற்றரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோன் —-
89-வெற்பு எடுத்து வேலை நீர் வரம்பு கட்டினான்  -39
90–வெற்பு  எடுத்த விஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்தான் –39
91–கொண்டை  கொண்ட கோதை  மீது   தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்ட ரங்கவோட்டி உண் மகிழ்ந்த நாதன் -49
92-வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னோர் நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் –50-
93-  சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன் சிரங்கள்
பத்தறுத்து உதிர்த்த செல்வர்  -51
94-இலைத் தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன் –54-
95-இலங்கை மன்னன் ஐந்தோடு ஐந்து பைந்தலை நிலத்து உகக்
கலங்கவன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரன்  -56
96-மரம் பொதச் சரந்துரந்து வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச்
சரந்துரந்த உம்பராளி யெம்பிரான் -73
97-உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த வேழ் மரங்களும் அடங்க எய்தான்  – 81
98- பண்ணுலாவு மென் மொழிப் படைத் தடம் கணாள் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினான்  -91
99- இரும்பரங்க வெஞ்சரம் துரந்த வில்லிராமன்  -93
100- குன்றினால் துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் -102
101–கடுங்கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து
கூறு செய்த பல் படைத் தடக்கை மாயன்  -104
102-மாறு செய்த வாளரக்கன் நாளுலப்ப அன்றிலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -116

திருமாலை

103-சிலையினால் இலங்கை செற்ற தேவன் -7 –
104-ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்ய
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -11-
திருப் பள்ளி எழுச்சி
105-இலங்கையர் குலத்தை  வாட்டிய  வரி சிலை வானவர் ஏறு மா முனி வேள்வியைக் காத்து
அவபிரதமாட்டிய அடு  திறல் அயோத்தி எம்மரசு -4-

அமலனாதி பிரான்
106-அன்று நேர்ந்த நிசாசரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் -2-
107-சதுரமா மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை  உய்த்தவன்
இரண்டாவதாயிரம் -பெரிய திருமொழி –

108–வாலி மாவலத் தொருவன துடல் கெட வரி சிலை வளைவித்தான் – 1-2-1-
109- கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை யணை கட்டி
இலங்கை மாநகர் பொடி  செய்த அடிகள்  -1-2-2-
110-தானவனாகம் தரணியில் புரள தடஞ்சிலை குனித்த வென் தலைவன் -1-4-1
111-கானிடை வுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன்
ஊனுடை யகலத்து அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த எம்பெருமான்  -1-4-2
112-இலங்கையும் கடலும் அடலருந்  துப்பின் இருநிதிக் கிறைவனும்
அரக்கர் குலங்களும்  கெட முன் கொடுந்தொழில் புரிந்த கொற்றவன் -1-4-3
113-மான் முநின்தொருகால் வரி சிலை வளைத்த மன்னவன்  -1-4-8
114-கலையும்  கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாக சென்றான் மலை கொண்டலை
நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாளரக்கர் தலைவன் தலை பத்து
அறுத்து உகந்தான் -1-5-1
115-கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த
கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரந்துரந்தான் -1-5-2-
116-ஒருகாலிருகால் சிலை வளைய தேராவரக்கர் தேர் வெள்ளம் செற்றான்  -1-5-4-
117-அடுத்து ஆர்ந்து எழுந்தாள் பிலவாய்  விட்டலற அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான் -1-5-5-
118-மராமரம் ஏழும் எய்த  வலத்தினன் -1-8-5
119-கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம்
பிளக்கச் சரம் செல உய்த்தான் -1-10-1-
120-இலங்கைப் பதிக்கன்று இறையாய அரக்கர் குலம் கெட்டு அவர்
மாளக் கொடிப்  புள் தெரித்தான் -1-10-2-

121 -காசையாடை மூடி யோடிக் காதல் செய் தானவனூர் நாசமாக
நம்பவல்ல நம்பி நம்பெருமான் -2-2-1
122 -தையலாள்  மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன்
பொய்யில்லாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று செய்த
வெம்போர்  தன்னிலங்கு ஓர் செஞ்சரத்தால் உருள எய்த எந்தை எம்பெருமான் -2-2-2-
123- முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால்  மாள  முனிந்தான் -2-2-3-
124-சிற்றவை பணியால் முடி துறந்தான் -2-3-1

125-பரதனும் தம்பி சத்ருக்னனனும் இலக்குமனோடு மைதிலியும் இரவு நன்
பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகன் –2-3-7

126- மாலும் கடலார மலைக்குவடிட்டு அணை  கட்டி வரம புருவ மதிசேர்
கோல மதிளாய  இலங்கை கெடப் படைதொட்டு ஒருகால் அமரில் அதிரக்
காலமிது வென்று அயன் வாளியினால் கதிர் நீண்  முடி பத்தும்
அறுத்தமரும்  நீல முகில் வண்ணன்  -2-4-5-
127-கிளர்  பொறிய மறி  திரிய அதனின் பின்னே படர்ந்தான் – 2-5-6
128-தென்னிலங்கை அரக்கர் வேந்தை விலங்கு உண்ண வலங்கை
வாய்ச் சரங்கள் ஆண்டான் -2-5-9-
129-விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல்லியலார் கொண்டாடும்
மல்லகலம் அழல் ஏற வெஞ்சமத்துக் கண்டார் -2-6-4-
130-தடங்கடல் நுடங்கு எயில் இலங்கை வன் குடி
மடங்க வாள் அமர் தொலைத்தான் –2-7-6-
131–குடைதிறல் மன்னவனாய்  ஒரு  கால் குரங்கைப் படையா மலையால்
கடலை யடைத்த வன் எந்தை பிரான் -2-9-8-
132-தாங்கரும் போர் மாலிபட பறவை ஊர்ந்து தராதலத்தோர் குறை
முடித்த தன்மையான் –2-10-4-
135-மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் நீண்  முடி பொடி  செய்த மைந்தன் –3-1-7
136-நெய்  வாய் அழல் அம்பு துரந்து  முந்நீர் துணியப் பணி  கொண்டு
அணி யார்ந்து இலங்கு மையார் மணி வண்ணன் –3-2-6-

137-பைம்கண் விறல் செம்முகத்து வாலி மாளப்  படர் வனத்துக் கவந்தனோடும்
படையார் திண் கை வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் -3-4-6-
138-பொருவில் வலம்  புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றும் அறிந்தன போல
புவிமேல் சிந்தச் செருவில் வலம்  புரி சிலைக்கை மலைத் தோள் வேந்தன் -3-4-7
139-மரம் எய்த மா முனிவன் -3-5-5-
140-அரக்கர் குலப்பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன் –3-7-3-
141-சிறையாரு வணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கும் இரியச் செருவில்
கறையார் நெடு வேலரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் – 3-8-4-
142-கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியை காதொடு
மூக்குடன் அரியக் கதறி அவள் ஓடி தலையில் அம் கைவைத்து
மலை இலங்கு புகச் செய்த தடம் தோளன் –3-9-4-
143-மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன்
முடி ஒருபதும் தோள்  இருபதும் போய் உதிர  தன்  நிகரில் சிலை
வளைத்து அன்று இலங்கை பொடி  செய்த தடம் தோளன் –3-9-5
144 –வாள்  நெடும் கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள்  இருபதும் போய் உதிர தாள் நெடும் திண்  சிலை வளைத்த தயரதன் சேய் –3-10-6-

145- வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண்
சிலை இறுத்த தனிக்காளை –4-1-8
146–கம்பமா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடியவை பத்தும் அம்பினால்
அறுத்து அரசவன் தம்பிக்கு அளித்தவன் –4-2-1-
147-தீ மனத்து அரக்கர் திறல்  அளித்தவனே என்று -சென்று அடைந்தவர் தமக்கு தாய்
மனத்து இரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலை  –4-3-5-
148- மல்லை  மா முந்நீர் அதர்பட மலையால் அணை  செய்து மகிழ்ந்தவன்
கல்லின் மீதியன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டான் – 4-3-6-
149- தான் போலும் என்று எழுந்தான் தரணி யாளன் அது கண்டு தரித்து இருப்பான்
அரக்கர் தங்கள் கோன் போலும் என்று எழுந்தான் குன்றமன்ன இருபது தோள்
உடன் துனித்த ஒருவன்   -4-4-6-
150-இலங்கை வவ்விய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த  வெந்தை  -4-5-2-
151-  கருமகள்  இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன்  மேல் வருமவள்
செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை  – 4-5-5
152-  உருத் தெழு வாலி மார்வில்  ஒரு கணை வுருவ வோட்டி கருத்துடைத் தம்பிக்கு
இன்பக் கதிர்முடி யரசளித்தான்  -4-6-3-

153- முனை முகத்தரக்கன் மாள முடிகள் பத்தறுத்து வீழ்த்து ஆங்கு அனையவற்கு
இளையவற்கே அரசு அளித்து அருளினான்  -4-6-4-
154-  கல்லால் கடலை அணை  கட்டி  உகந்தான் – 4-7-6-
155-  மல்லை  முந்நீர் தட்டிலங்கை கட்டு அழித்த  மாயன்  -4-8-4-
156-  அரக்கர் ஆவி மாள  யன்று ஆழ்கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன்
கோலவில்லி  -4-8-5-
157- அலை கடலை அடைத்திட்டு அரக்கர் தஞ் சிரங்களை வுருட்டினான்  -4-10-2-
158 – காற்றிடை பீளை கரந்தன வரந்தை வுறக் கடலரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த  கோல வில்லி ராமன்  -4-10-6-
159 — மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்தான்   -5-1-3-
160 –  விறல்  வாள்  அரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐந்நான்கும்
துணித்த வல் வில் ராமன்  -5-1-4-

161- ஆறினோடு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம் வேறு வேறு உக
வில்லது வளைத்தவன்   -5-3-7-
162-  விளைத்த வெம்போர் விறல்  வாள்  அரக்கன் நகர் பாழ்  பட வளைத்த
வல் வில் தடக்கையவன் -5-4-4-
163 –  வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால்
முனிந்த அழகன்  -5-4-5-
164 –  மராமரம் ஏழு எய்த வென்றிச் சிலை யாளன்  -5-5-2-
165 -சுரி குழல் கனிவாய் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசைஅரக்கன்
எரி விழித்து  இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறி  கடல் நெறிபட மலையால்
அரி  குலம் பணி  கொண்டு அலை கடல் அடைத்தான் -5-7-7-
166-  இலங்கை மலங்க வன்று அடு  சரம் துரந்தான்  -5-7-8-
167 –  ஏழை ஏதலன்  கீழ் மகன் என்னாது இரங்கி  மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை  மான் மட நோக்கி வுன்  தோழி உம்பி எம்பி என்று உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்றான்  -5-8-1-
168 – வாதமா மகன் மற்கடம் விலங்கு  மற்றோர் சாதி என்று ஒழியாது உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்றான்  -5-8-2-
169 –  விலங்கலால்  கடல் அடைத்து விளங்கிழை பொருட்டு  வில்லால் இலங்கை
மா நகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் -5-9-6-
170 – பிறையின் ஒளி யெயிறிலக முறுகி எதிர் பொருதும் என வந்தவசுரர்
இறைகளவை நெறு நெறு  என வெறியவவர் வயிறழல நின்ற பெருமான் -5-10-4-
171-  மூள வெரி சிந்தி முனி வெய்தி யமர் செய்து மென வந்த வசுரர் தோளும்
அவர் தாளும் முடியோடு பொடியாக நொடியா மள  வெய்தான் -5-10-5-
172 – தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணையாக முன நாள்
வெம்பி எரி கானகம் வுலாவுமவர்  -5-10-6-
173- வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனைச் செற்றான் – 6-3-5-
174- தொன்னீர் இலங்கை மலங்க விலங்கு  எரி ஊட்டினான்  -6-4-6-
175- ஆனைப் புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையை
சாடி இலங்கை செற்றான் – 6-5-3-
176-  விண்ட நிசாசரைத் தோளும் தலையும் துணி வெய்த சுடு வெஞ்சிலை
வாய்ச் சரம் துரந்தான்   -6-7-1-
177- துள்ளா வருமான் விழ வாளி துரந்தான்  -6-7-3-
178 – கல்லார் மதிள்  சூழ் கடி இலங்கைக் காரரக்கன் வல்லாகம் கீழ வரி
வெஞ்சரம் துரந்த வில்லான் -செல்வ  விபீடணற்கு வேறாக நல்லான் -6-8-5-

179- பழி யாரும் விறல் அரக்கன் பரு முடிகளவை சிதற அழலாரும்
சரம்  துரந்தான்  -6-9-2-
180-எறிஞர் அரண் அழியக் கடியார் இலங்கை கடந்த நம்பி  -6-10-1

181-இலங்கைக் கோன்  வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை

விபீடணற்கு நல்லான் -6-10-4-
182 – தென்னிலங்கை  அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வென்கூற்றம்
நடையா உண்ணக் கண்டான்  -6-10-5-

183- கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடலரக்கர் மானம்
அழித்து நின்ற வென்றி யம்மான் -6-10-6-
184-  வில்லேர் நுதல் வேல் நெடும் கண்ணி  வுடன் கல்லார் கடும் கானம்
திரிந்த களிறு – 7-1-5-
185-  சினவில்  செம் கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி –மரம்
ஏழு எய்த மைந்தன் -7-3-1-
186 – ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணன் – 7-3-4-
187 – தழலே  புரை மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்  படச் சூழ் கடல் சிறை வைத்தான் -7-3-9-
188-  மீதோடி வாள்  எயிறு மின்னிலக முன்விலகு முருவினாளைக் காதோடு
கொடி மூக்கன்று உடன் அறுத்த கைத் தலத்தன்   -7-4-3-

189 – தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி  வீழ
போராளும்  சிலையதனால் பொரு  கணைகள் போக்குவித்தான்  -7-4-4-
190 – செம்பொன் மதிள்  சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும்
உம்பர் வாளிக்கு  இலக்காக உதிர்த்த வுரவோன்  -7-5-3-
191 – அடையார் தென்னிலங்கை யழித்தான்  -7-6-3-
192 – பந்தணைந்த மெல்விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை
வேந்தன் அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து
உகந்த வம்மான் -7-8-7-
193- தார்மன்னு  தாசரதி  — வாளரக்கர்  காலன் -8-4-7-
194-  ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த ஆழியான் -8-5-5-
195 – முரியும்  வெண் திரை முது கயம் தீப்பட முழங்கழல் எரி  யம்பின்
வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தன்  -8-5-6-
196-  கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம்
மலங்க வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகள் -8-5-7-
197-  துளங்கா  வரக்கர் துளங்க முன் திண் தோள் நிமிரச் சிலை வளைய
சிறிதே முனிந்த திரு மார்பன் -8-6-1-
198 – பொருந்தா வரக்கர் வெஞ்சமத்து பொன்றவன்று புள்ளூர்ந்து பெரும் தோள் மாலி
தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை யிருந்தோர் தம்மை வுடன் கொண்டு
அங்கு எழிலார் பிலத்துப்புக்கு ஒளிப்பக் கரும் தாள் சிலை கைக்கொண்டான்  -8-6-2-
199 -வல்  இடையாள்  பொருட்டாக மதிள் நீர் இலங்கையர் கோவை அல்லல் செய்து
வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான் வல்லாள் அரக்கர் குலப்பாவை வாட
முனிதன் வேள்வியைக் கல்வி சிலையால் காத்தான் -8-6-3-

200 – மல்லை  முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக் கொல்லை
விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத் தொல்லை
மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக் கல்லால் கடலை எடுத்தான் -8-6-4-
201 – சேம  மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணிந்தான்  -8-6-5-
202- திருந்தா வரக்கர் தென்னிலங்கை செந்தீ வுன்ணச் சிவன்தான் -8-6-6-
203- அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன்
கலை  மா சிலையால் எய்தான் -8-6-7-
204- விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி  எழக் கண்டவர் -8-7-5-
205- வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடி இலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து  செய்த
வெம்போர் நம்பரன் -8-8-7
206-வானுளார வரை வலிமையால் நலியும் மறிகட லிலங்கையார்
கோனைப் பானு நேர் சரத்தால் பனங்கனி போலேப் பருமுடி உதிர
வில் வளைத்தோன் -9-1-7-
207-கலைவுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும்படை எடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்றான் -9-1-10-
208- வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன்   -9-4-5-
209 -தென்னிலங்கை மலங்கச் செற்றவன்  -9-5-10-
210 -சிரமுனைந்து மைந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரமும் கரமும் துணித்த  உரவோன் -9-6-4-
211 -சிலையால் இலங்கை செற்றான் -9-6-10-
212 -சுடு சரமடு சிலைத்துரந்து நீர்மை இலாத தாடகை மாள  நினைந்தவர் -9-8-4-
213 – வணங்கலில் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒருபதும் புரள
அணங்கு எழுந்து அவன்தான் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள்  -9-8-5-
214 – காவலன்  இலங்கைக்கு இறை கலங்க சரம் செல உய்த்து மற்றவன்
ஏவலம்  தவிர்த்தான் -9-10-6-

215-அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன்  -10-2-10-
216- இராவணற்கு காலன் -10-3-3-
217 – மணங்கள்  நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தை புணர்ந்த சிந்தை
புன்மையாளன்  பொன்ற வரி சிலையால் கணங்கள் உண்ண
வாளி  யாண்ட  காவலன் -10-3-4-
218 – கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் நடந்து இலங்கை அல்லல் செய்தான் -10-3-6-
219- கவள  யானை பாய் புரவித் தேரோடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன் தவள மாட நீடயோத்திக்
காவலன் தன்  சிறுவன் – 10-3-8-
220 -ஏ டொத்து ஏ ந்தும் நீளிலை வேலி ராவணனார் ஓடிப் போகா நின்றார் -10-3-9-
221 – தெளியா வரக்கர் திறல் போய் அவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப்
படையா விலங்கல்  புகப் பாய்ச்சி விம்மக் கடலை அடைத்திட்டவன் -10-6-7-
222- நெறித்திட்ட  மென் கூழை நன்நேர் இழை யோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இறுத்திட்ட  வளின்பமன் போடு அணைந்திட்டு இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர்
செறித்திட்டு  இலங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
வறுத்திட்டவன்  -10-6-8-
223 -வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும்  எய்து மலை போல் உருவ த்தோர் இராக்கதி
மூக்கரிந்திட்டவன் -10-6-9-
224 – இலங்கை ஒள்ளெரி  மண்டி வுண்ணப் பணித்த ஊக்கமுடையான் -10-9-1-
225 – அரக்கியராகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனைச்
செருக்கு அழித்து  அமரர் பணிய முன் நின்ற சேவகன் -10-9-6
226 – பெரும்தகைக்கு இரங்கி வாலியை முனைந்த பெருமையான் -10-9-8-
227- அரக்கரை வென்ற வில்லியார்  -11-1-1-
228 – சென்று வார் சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் -11-1-6-
229 -பொருந்து மாமரம் ஏழும் எய்த புனிதனார்  -11-1-6-

230 – இலை மலி பள்ளி எய்தி யிது மாயம் என்ன இனமாய மான்பின் எழில் சேர்
அலை மலி வேல் கண்ணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானையமையாக்
கொலை மலி  வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் -11-4-7-
231 – கொடியோன் இலங்கை பொடியாச் சிலை கெழு  செஞ்சரங்கள்
செல உய்த்த நாங்கள் திருமால் -11-4-10 –
232 – மானமரு மென்னோக்கி வைதேகி இன் துணையாக்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான்   -11-5-1-

திருக் குறும் தாண்டகம்

233- கடி மதிள் இலங்கை செற்ற வேறு –2
234 – முன் பொலா  இராவணன் தன்  முது மதிள்  இலங்கை  வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடி இணை பணிய நின்றான் -15
235-  மாயமான் மாயச் செற்றான் -16

திரு நெடும் தாண்டகம்

236- வில்லிறுத்து  மெல்லியல் தோள் தோய்ந்தான் -13
237 -வென்றசுரர் குலம்  களைந்த  வேந்தன் -16
238- தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன் மலங்கச்
செந்தீ ஒல்கிப் போராளன் -20
239- தென்னிலங்கை அரண் சிதறிய வுணன் மாளச்  சென்றான் -28
240 – அலை கடலைக் கடைந்து அடைத்த வம்மான் குன்றாத வலி யரக்கர் கோனை மாளக்
கொடும் சிலை வாய் சரம் துரந்து  குலம்  களைந்து வென்றான் -29

மூன்றாவது ஆயிரம் -இயற்பா
முதல் திருவந்தாதி
241- சிலையால் மராமரம் ஏழ் செற்றான் -27
242 – பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீண்  முடியைப்
பாதமத்தால் எண்ணினான் -45
243- நுடங்கு இடையை முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன்  விலங்கை வைத்தான் -59
244 – மேலொரு நாள் மான் மாய வெய்தான் -82
இரண்டாம் திருவந்தாதி –
245 -சீதையை மான் பின் போய் அன்று பிரிந்தான் – 15
246 – இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால் சென்று இராவணனைக் கொன்றான் – 25
247 – தென்னிலங்கை  நீறாக வெய்து  அழித்தான் -29
248-அன்று காரோதம் பின்னடைந்தான்  -30
249- தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும் தாள் இரண்டும்
வீழச் சரம் துரந்தான்  -43
மூன்றாம் திருவந்தாதி –
250- இலங்காபுரம் எய்து எரித்தான் -51
251 – எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் எய்தானம் மான் மறியை
ஏந்து இழைக்காய் தென்னிலங்கை கோன் வீழ வெய்தான் -52
253- வாள்  அரக்கன் ஏய்ந்த முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் -77
நான்முகன் திருவந்தாதி –
254- ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேராக் குலை கொண்ட
வீரந்தலையான் இலங்கையை ஈடழித்த கூரம்பன் -8
255- தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க வெய்தான் -28
256- மிகப் புருவம் ஒன்றுக்கு ஒன்றோசனையான் வீழ ஒரு கணை எய்தான் -29
257- தண்டவரக்கன் தலை தாளால் பண்டு எண்ணிப் போம் குமரன் -44
258- கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் -53

மூன்றாவது ஆயிரம் -இயற்பா
முதல் திருவந்தாதி
241- சிலையால் மராமரம் ஏழ் செற்றான் -27
242 – பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீண்  முடியைப்
பாதமத்தால் எண்ணினான் -45
243- நுடங்கு இடையை முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன்  விலங்கை வைத்தான் -59
244 – மேலொரு நாள் மான் மாய வெய்தான் -82
இரண்டாம் திருவந்தாதி –
245 -சீதையை மான் பின் போய் அன்று பிரிந்தான் – 15
246 – இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால் சென்று இராவணனைக் கொன்றான் – 25
247 – தென்னிலங்கை  நீறாக வெய்து  அழித்தான் -29
248-அன்று காரோதம் பின்னடைந்தான்  -30
249- தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும் தாள் இரண்டும்
வீழச் சரம் துரந்தான்  -43
மூன்றாம் திருவந்தாதி –
250- இலங்காபுரம் எய்து எரித்தான் -51
251 – எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் எய்தானம் மான் மறியை
ஏந்து இழைக்காய் தென்னிலங்கை கோன் வீழ வெய்தான் -52
253- வாள்  அரக்கன் ஏய்ந்த முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் -77
நான்முகன் திருவந்தாதி –
254- ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேராக் குலை கொண்ட
வீரந்தலையான் இலங்கையை ஈடழித்த கூரம்பன் -8
255- தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க வெய்தான் -28
256- மிகப் புருவம் ஒன்றுக்கு ஒன்றோசனையான் வீழ ஒரு கணை எய்தான் -29
257- தண்டவரக்கன் தலை தாளால் பண்டு எண்ணிப் போம் குமரன் -44
258- கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் -53

266- சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை மாட்டே துயர்
இழைத்த மாயவன் -66
267- கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன்  -78
திரு எழு கூற்று இருக்கை
268 – ஒருமுறை இரு சுடர் மீதினி லியங்கா மும் மதிள் இலங்கை
இருகால் வளைய ஒரு சிலை ஒன்றிய வீர் எயிற்று அழல் வாய்
வாளியில்  அட்டான் –
சிறிய திரு மடல்
269- இலங்கை பொடி  பொடியா  வீழ்த்தவன்
270- தன்  சீதைக்கு நேராவான் என்ற ஓர் நிசாசரி தான் வந்தாளைக்  கூரார்ந்த வாளால்
கொடி  மூக்கும் காத்து இரண்டும் ஈரா  விடுத்தவட்கு மூத்தோனை வெந்நரகம் சேரா வகையே
சிலை குனித்தான் -செந்துவர் வாய் வாரார் வன முலையாள் வைதேகி காரணமா ஏரார் தடம்
தோள் இராவணனை ஈரைந்து சீரார் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்

பெரிய திருமடல்
271- போர் வேந்தன் தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து பொன்னகரம் பின்னே
புலம்ப வலம்  கொண்டு  மன்னும்  வள நாடு கை விட்டு கொன்னவிலும் வெங்கானத்தூடு
கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த  வெம் பரல் மேல் பஞ்சடியால் வைதேவி
என்று உரைக்கும் அன்ன நடைய வணங்குடன் நடந்த மன்னன் இராமன்
272- வண்ணம் போல் அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி மன்னன் இராவணனை
மாமண்டு வெஞ்சமத்து பொன் முடிகள் பத்தும் புரளச் சரந் துரந்து தென்னுலகம்
ஏற்றுவித்த சேவகன்

273- தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை மன்னன் இராவணன் தன்
நல்  தங்கை வாள் எயிற்றுத் துன்னு சுடு சினத்து சூர்பணகா சோர்வு எய்தி
பொன்னிறம்  கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் தன்னை நயந்தாளை
தான் முனிந்து மூக்கு  அரிந்தான் ,வாய்த்த மலை போலும் தன்னிகர் ஒன்றிலாத
தாடகையை மா முனிக்கா தென்னுலகம்  ஏற்றுவித்த திண்  திறலோன்
நான்காவதாயிரம் –     திருவாய் மொழி –
274- கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தான்  -1-5-5-
275- சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும்  செய்த சிரீ தரன்  -1-5-6-
276 – நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான்  -1-6-7-
277 – மராமரம் எய்த மாயவன் -1-7-6-
278- தீ முற்றத் தென்னிலங்கை யூட்டினான்  -2-1-3-
279- அரக்கியை மூக்கீர்ந்தான் -2-3-6-
280 – குழாம் கொள் பேரரக்கன் குலம் வீய முனிந்தவன் -2-3-11-
281-  அரக்கன் இலங்கை செற்றான் -2-4-3/2-4-4-
282- கிளர் வாழ்வை வேவ  விலங்கை செற்றான்  -2-4-10-
283- தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்தான் -2-5-7-
284- பாறிப் பாறி யசுரர் தம் பல் குழாம் கள் நீறு எழப் பாய் பறவை ஒன்றேறி வீற்று இருந்தான் -2-6-8-
285 – இலங்கை செற்றான் -மராமரம் பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லான் -2-6-9-
286- இலங்கை யரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் -2-9-10-
287- ஏர் கொள் இலங்கை நீறே செய்த நெடுஞ்சுடர் சோதி  -2-7-10-
288 – தென்னிலங்கை எரி  எழச் செற்ற வில்லி -3-6-2-
289 – தயரதற்கு மகன் -3-6-8-
290 – தண் இலங்கைக்கு இறையச் செற்ற நஞ்சன் -3-8-2-
291 – சன்மம் பல பல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில் ஒண்மை உடைய
வுலக்கை  ஒள்  வாள்  தண்டு கொண்டு புள்ளூர்ந்து உலகில் வன்மை வுடைய
வரக்கர் அசுரரை மாளப்  படை பொருத நன்மை வுடையவன் -3-10-1-
292 – கொம்பு போல் சீதை பொருட்டிலங்கை நகர் அம்பெரி  வுய்த்தவர்  -4-2-8-
293-  மதிள்  இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தான் -4-3-1-
294-  கிடந்து நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்து மணம்
கூடியும் கண்ட வாற்றால் தனதே வுலகென நின்றான் -4-5-10-
295- குலம் குலமா அசுரர்களை நீறாகும்படியாக நிருமித்துப் படை தொட்ட மாறாளன் -4-8-1-
296 – தளிர் நிறத்தால் குறைவில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள்  காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் -4-8-5-
297- காயும் கடும் சிலை என்  காகுத்தன் -5-4-3-
298 – கொடியான் இலங்கை செற்றான் -5-6-9-
299 -இலங்கை செற்ற வம்மான் -5-7-3-
300- மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -6-1-10-
301 – மன்னுடை இலங்கை யரண்  காய்ந்த மாயவன் -6-2-1-
302 – காண்  பெரும் தோற்றத்துக் காகுத்த நம்பி -6-6-9-

303- ஆவா வென்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வானாள் மேல்
தீவாய் வாளி பொழிந்த சிலையான் -6-10-4-
304 – புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில்  வலவன்  -6-10-5-
305 – அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் வேர் ஒருங்கறுத்தான்  -7-1-5-
306 -காகுத்தன்
307- பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -7-3-7-
308 – மாறு நிரைத்து  இரைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலை போல் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா நீறு பட இலங்கை செற்ற வப்பன் -7-4-7-
309 – புற்பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்த இராமபிரான் -7-5-1-
310 – நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்தான் – 7-5-2-
311 – ஆளியைக்  காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கரூளை யிட்டன்று இலங்கை கடந்து
பிலம்புக்  கொளிப்ப மீளி யம் புள்ளைக் கடாய் விறல்  மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தான்  -7-6-8-
312 – ஆண்டிறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தை  தடிந்து மீண்டும் அவன் தம்பிக்கே
விரி நீர் இலங்கை யருளி ஆண்டு தன்  சோதி புக்க வமரர் வரி ஏறு –7-6-9-
313 – அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடு படை யவித்த யம்மான் –
314 – செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை வுருக்கெட வாளி பொழிந்த வொருவன் -8-6-2-
315 – புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்கசுரரைப் பொன்றுவித்தான்  -8-9-3-
316 – கணை ஒன்றாலே யேழ் மரமும் எய்த வெங்கார் முகில் -9-1-2

317- காய்ச்சின பறவை ஊர்ந்து பொன் மலையில் மீமிசைக் கார்முகில்போல்

மாசின மாலி மாலிமான் என்று அங்கு அவர்படக் கனன்று முன் நின்ற

              காய்ச்சின வேந்தன் — -9 -2 -6 –
 -318 – கூற்றமாய அசுர குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே – 9- 2- 9-
 – 319- – என் ஆர் உயிர் காகுத்தன் — 9- 5- 6-
— -320 –  பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கழுந்த
                தயரதன் பெற்ற மரகத மணித் தடம் –10 -1 -8 –
                 ஸ்ரீ சீதா ராம ஜெயம்
             ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

ஸ்ரீ கீதா சாரம் -ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் —

November 13, 2012

ஸ்ரீ கீதா சாரம்–

சர்வ உபநிஷதோ காவ உக்தா கோபால நந்தன-பார்த்தோ வத்ஸூ தீ போக்தா துக்தம் கீதாம்ருதம் மவாத் —

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலராம் மெய்ஞ்ஞானமில் —
1-2 3- -தத்வ விவேக –
4- நித்யத்யா நித்யத்வ
5- நியந்த்ருத்வ
6- சௌலப்ய
7- சாம்ய
8-/ – 9- அஹங்கார இந்திரிய தோஷ பல
10 -மன பிரதான்ய
11- கரண நியமன
12- ஸூ கருதி பேத
13- தேவ அஸூர விபாக
14 -விபூதி யோக
15- விஸ்வரூப தர்சன
16 – சாங்க பக்தி
17 –/ 18- – பிரபத்தி
இத்யாதிகளாலே அன்று ஓதிய கீதா சமம் கீதா சாரம் பல பல
பிரமாணங்களாலே உக்தம் –
அஜாயமான பஹூதா விஜாயதே -கர்ம வச்யன் அன்றி கிருபா வச்யனாய் எம்பெருமான்
பல படிகளால் அவதரிக்கிறான்
அஜாயமான பஹூதா என்று வேதமும் -பஹூ நிமே ஜன்மானி -என்று வேத்யனும்
சன்மம் பல பல செய்து -என்று வைதிக அக்ரேசரும் -பகவத் அவதாரம் அஸங்கயேயம் என்று அறுதி இட்டது

ஸ்ரீ பகவத் அவதாரங்களுள் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் பரம பிரதானம் –
மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து –மாதவனே கண்ணுற நிற்கிலும்
காணகில்லா உலகோருக்கு ஒரு சேம வைப்பாகா ஸ்ரீ கீதா சாஸ்த்ரத்தை அருளிச் செய்தது
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தின் தனிச் சிறப்பாகும் –
ஸ்ரீ ராம அவதாரத்தில் -மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் -சக்ருதேவ பிரபந்நாய –அபயம் ததாமி –
இத்யாதி சில வாக்யங்கள் காணக் கிடைத்தவையே யாயினும் –
பரம வேதாந்த சாரார்த்த கர்ப்பிதமானதோர் திவ்ய சாஸ்திரம் -ஸ்ரீ கீதை -அவதரித்தது ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் இறே –

பாரத பஞ்சமோ வேத -என்றும் –
மகத்வாத் பாரவத் வாச்ச மஹா பாரதம் உச்யதே -என்றும்
கோஹ்யந்யோ புவி மைத்ரேய மஹா பாரத க்ருத்பவேத் -என்றும்
விஷய கௌரவத்தாலும் பிரபந்த கௌரவத்தாலும் வக்த்ரு கௌரவத்தாலும் பரம பிரமாணம் ஆகும் ஸ்ரீ பாரதம் –
ஸ்ரீ வேத வியாச பகவான் சம்சாரிகளுக்குக் கொடுத்த ஸ்ரீ மகா பாரதம்
சம்சார விமோசகம் இறே -வங்கக் கடல் கடைந்து அமரர்க்கு அமுத ஈந்தான் ஆயர் கொழுந்து
அது பந்தம் ஆயிற்று -சம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச
உபப் பருஹ்மித வேதாய நமோ வ்யாசாய விஷ்ணவே -என்று
அருளிச் செய்தார் ஸ்ரீ சுருதி பிரகாச பட்டர் இப்படியாய் இறே ஸ்ரீ மஹா பாரத வைபவம் இருப்பது –
அம் மஹா பாரதமே கோது -அசாரம் என்னும்படி ஆய்த்து -ஸ்ரீ கீதை –
வேத பௌருஷம் ஸூக்தம் தர்ம சாஸ்த்ரேஷூ மாநவம்
பாராதே பகவத் கீதா புராணே ஷூ ச வைஷ்ணவம் -என்னக் கடவது இறே –

கீதா ஸூ கீதா கர்தவ்ய கிமன் நயு சாஸ்திர சங்க்ரஹத்திலே
யா ஸ்வயம் பத்ம நாபச்ய முகபத்மாத் விநிஸ் ஸ்ருதா -என்று இத்யாதிகளில் ஸ்ரீ கீதா வைபவம் ஸூ பிரசித்தம் –
ஸ்ரீ நாராயண அவதாரமான ஸ்ரீ வியாசர் தம்முடைய சாரீரகத்திலே -ச்ம்ருதே ச -1 2-6 – – என்றும்
ஸ்மரந்நிச – 4-1 10- – என்றும் ஸ்ரீ கீதையை சம்வாதி பிரமாணமாகக் காட்டி அருளினார் இறே
பார்த்தம் பிரபன்னம் உத்திச்ய சாஸ்த்ர அவதரணம் க்ருதம் என்று ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹத்திலே
ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார் உத்திச்ய -என்றது -வ்யா ஜீ க்ருத்ய -என்றபடி –
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த
நிறை ஞானத்தொரு மூர்த்தி -என்ற ஸ்ரீ ஆழ்வார் திரு வாக்கை ஒற்றி இறே ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தது –

நாட்டார் அன்ன பாநாதிகள் எல்லாவற்றாலும் கார்யம் உடையராய் இருப்பார் –
அறிவு ஒன்றிலும் ஆய்த்து குறைவுபட அறியாதது -சாஸ்த்ரார்த்த ஜ்ஞானம் இல்லாமையே அன்று –
அறிவில்லாமை பற்றி குறைவும் இன்றிக்கே இருக்கும் சம்சாரிகள் படும் அநர்த்தம் கண்டு
ஆற்றாமையாலும் -மிக்க கிருபையாலும் இறே ஸ்ரீ பகவான் ஸ்ரீ கீதோ உபதேசம் பண்ணினான் –
இவன் உபதேசத்துக்கு ஆஸ்ரித வ்யாமோஹமும் ஒரு காரணம் ஆகும்-
அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக –
என்று இறே ஸ்ரீ பிள்ளை உலகாரியன் திருவாக்கு –
மால் என்கோ -என்ற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ சூக்திக்கு ஸ்ரீ நம்பிள்ளை ஈட்டு
ஸ்ரீ ஸூக்திகள் அவசியம் அனுசந்தேயங்கள் —
உபநிஷதம் உதாரம் உத்வமன் பாண்டவார்த்தம்
சரண முபகதான் நச்த் ராயதே சாரங்க தந்வா -என்று இறே தாத்பர்ய சந்த்ரிகா –
ஆக அகல் ஞாலத்தவர் அறிய -கணக்கறு நலத்தனன் -அந்தமில் ஆதி அம் பகவன்
உபதேசித்தது ஸ்ரீ கீதா சாஸ்திரம் -என்றது ஆயிற்று -இனி கீதா பிரமேய சாரத்தை அனுபவிப்போமாக –

ஸ்ரீ கீதையில் இது அசாரம் இது சாரம்
என்று கூற இயலுமா -இயலாது –ஸ்ரீ கீதையே சாரமாகும் –
சார சாஸ்த்ரமான ஸ்ரீ கீதா சாஸ்த்ரத்தில் பல பல சார அர்த்தங்கள் –
அவற்றுள் ஒன்றினை அனுபவிப்போம் ஈங்கு
மாயன் அன்றோதிய வாக்கு -என்று ஸ்ரீ திருமழிசைப் பிரானும்
வார்த்தை யறிபவர் -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும் –
திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை -என்று ஸ்ரீ ஆண்டாளும்
தே து சரமம் வாக்கியம் ஸ்மரன் சாராதே -என்று ஸ்ரீ பராசர பட்டரும் அனுபவித்த வார்த்தையை
ஈங்கு அனுபவிப்போம் -சாரோத்தாரம் -என்று இறே பெரியோர் அனுபவித்து உள்ளார்கள் –

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி மாஸூச –
தர்ம சமஸ்தானம் பண்ணப் பிறந்தவன் தானே இந்த ஸ்லோகத்தில் சர்வ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று -என்கையாலே –சாஷாத் தர்மம் தானே என்கிறது –
பரதத்வமும் பரம ப்ராப்யமுமானவன் ஸ்ரீ மன் நாராயணனே -என்று சகல வைதிக சம்மதம் –
ஆயினும் ஹிதாம்சத்தில் இறே விசாரம் உள்ளது –
கர்மம் ஜ்ஞானம் பக்தி பிரபத்தி -இத்யாதிகளாக தர்மாந்தரங்கள் பலவாறாக சாஸ்திர சம்ப்ரதாய
சித்தங்கள் ஆகையாலே -அதிலே இறே நிஷ்கர்ஷம் தேவைப் படுகிறது -அதனை நிஷ்கர்ஷிக்கும்
ஸ்லோகமே இது –சரம ஸ்லோகம் எனப் படுகிறது -இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி யான
சரம உபாயத்தை அருளிச் செய்கையாலே சரம ஸ்லோகம் என்று இதுக்கு பேராய் இருக்கிறது -என்று
இறே ஸ்ரீ மன் லோக தேசிகன் ஸ்ரீ ஸூக்தி -ரஹஸ்ய தம உபாயத்தை ஸ்ரோதவ்ய சேஷம் இல்லாதபடி
உபதேச பர்யவசானமாக -சரம ஸ்லோகத்தால் -சகல லோக ரஷார்த்தமாக அருளிச் செய்கிறான்

ஸ்ரீ கீதாசார்யன் -என்றபடி -யே ச வேத விதோ விப்ரா யே ச அத்யாத்ம விதோ ஜநா
தேவ தந்தி மஹாத்மானம் க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்றும்
ராமோ விக்ரஹவான் தர்ம -என்று இறே பிரமாண கதி இருப்பது –
ஆழ்வார் திருவாய் மொழியிலே ஸ்ரீ மன் நாராயணனே உபாயம் என்று முதல் பத்தாலும்
அவனே ப்ராப்யன் என்று இரண்டாம் பத்தாலும் –
அவன் திவ்ய மங்கள விசிஷ்டன் என்று மூன்றாம் பத்தாலும் அறுதி இட்டு -மேலே
நான்காம் பத்தான ஒரு பத்தாலே மற்றை பிராப்யங்கள் பிராப்ய ஆபாசங்கள் –உண்மையாக
பிராப்யங்கள் அல்ல -என்று மூதலித்து மேலிட்டு ஆறு பத்துக்களாலே அவனைத் தவிர
மற்றைய உபாயங்கள் ப்ராப்ய ஆபாசங்களே என்று மூதலிக்கிறார் –
ஷட் பி ஸ்வாம் பஞ்சமாத்யை அந்தர கதிதாம் ஆசசஷே முநீந்திர -என்ற சார வாக்கியம் இங்கே அனுசந்தேயம் –
சர்வ தர்மாம்ச சந்த்யஜ்ய சர்வ காமாஞ்ச சாஷரான் -லோக விக்ராந்த சரணவ் சரணம் தே வ்ரஜம் விபோ -என்று
இறே புராண நிஷ்கர்ஷம்

கீதா சரம ஸ்லோகமே கீதாசாரம் -அவனே சாஷாத்தர்மம் என்பதே கீதாசாரார்த்தம்
உன் தன்னைப் பிறவி பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம் -என்று இறே ஸ்ரீ ஆண்டாள் அறுதி இட்டது
சாதனமும் சரண நெறி யன்று என்று இறே -தூதனும் நாதனுமான ஸ்ரீ பார்த்த சாரதி
கீதாசார்யன் அர்ஜுனனுக்கு அறுதி இட்டான் –
சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தத்தில் மாம் -என்று தன்னுடைய சௌலப்யம் வெளி இட்டான்
இது ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகமான குணமாகும் -வ்ரஜ என்று ஆஸ்ரயண விதாகம்
இறே பூர்வார்த்தம் -நம் ஆழ்வாரும் கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ
என்று -திரு வாய் மொழி – 4-1 3- –மாமின் அர்த்தத்தை அருளிச் செய்தார் –
சரம ஸ்லோகத்தில் உத்தரார்த்தத்தில் –அஹம் என்று தன்னுடைய பரத்வத்தை வெளி இட்டான் –
இது ஆச்ரயண கார்ய ஆபாதகமான குணமாகும் -பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி -என்று இறே மேலில் வார்த்தை –
அவனுக்கு எளிமை இல்லையேல் அவனை ஆஸ்ரயிக்க முடியாது
அவனுக்கு மேன்மை இல்லையேல் அவனுக்கு நம் கார்யம்செய்து தலைக் கட்ட இயலாது –
காருணிகன் இறே ஆஸ்ரயநீயன் –சக்தன் இறே கார்யாகரன் -சமர்த்த காருணிக விஷயம் இறே பகவத் விஷயம்

தேர் மன்னர்க்காய் அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும் -தார் மன்னர் தங்கள் தலை மேலான் இறே –
இதிலே பராவர சப்தார்த்தம் —கையும் உழவு கோலும் பிடித்த சிறு வாய்க் கயிறும் –
சேநா தூளித தூசரித மான திருக் குழலும் -தேருக்கு கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற
சாரதியான தான் -என்றான் -மாம் -என்று நித்ய சம்சாரியாய் போந்த இவனை -சரணம் -என்றதே
கொண்டு –நித்ய ஸூரி பரிஷத்துக்கு ஆளாக்கிகிற சர்வ சக்தித்வத்தை -அஹம் -என்று
காட்டுகிறான் -என்பர் நம் பெரியோர் -சேயன் மிகப் பெரியன் அணியன் சிறியன் மாயன் -என்றார்
இறே திரு மழிசைப் பிரானும் –
மாம் -என்ற சௌலப்யமும் -அஹம் -என்ற பரத்வமும் –ஸ்ரீ மத்வத்தாலே
யாகிறது –ஆகையால் –மாம் -என்கிற இடத்தில் ஸ்ரீ மானே கூறப்பட்டான் என்பர் பெரியோர் –
மாதவ பக்தவத்சல -என்றும் -ஸ்ரீ கர்ப பரமேஸ்வர -என்றும் பரத்வ சௌலப்ய நிதானம் ஸ்ரீ மத்வம்
என்று காட்டப்பட்டது –
திரு வுடை அடிகள் –திரு மகளார் தனிக் கேள்வன் -பெருமை உடைய பிரான் -என்று ஸ்வாமித்வமும் –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –
திருவின் மணாளன் என்னுடை சூழல் உளானே -என்று சௌலப்யமும் –
அவற்றின் அடியான ஸ்ரீயபதித்வமும் கூறப்பட்டது இறே –

ஆக -சரம ஸ்லோகத்தில் கூறப்பட்ட பகவான் ஸ்ரீ மன் நாராயணனே –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஆகதோ மதுராம் புரீம் -என்னா நின்றது இறே –
உத்தரார்த்தத்தில் –அஹம் -என்று -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனான தன்னையும் –
த்வா -என்று அறிவு ஒன்றும் இல்லாத இவனையும் நிர்தேசித்தால் –
ஒரு மேட்டுக்கு ஒரு பள்ளம் நேராம் இறே
குண துங்க தயா தவ ரங்க பதே ப்ருச நிம் நமிமம் ஜனம் உந் நமய -என்று அருளிச்
செய்தார் ஸ்ரீ பராசர பட்டர் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்ற பிறகு -மாம் –என்றான் –
அது தர்ம நிவர்த்தக வேஷம் –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்றதற்கு முன்னே
அஹம் என்றான்-இது அதர்ம நிவர்தகமான வேஷம் –
மாம் -என்று இவன் கால் தன் தலையில் படும்படி கூறினான் –
அஹம் -என்று தன் கால் அவன் தலையில் படும்படி கூறுகிறான் –
மாம்-என்று கையும் உழவு கோலுமான வேஷம்
அஹம் -என்று கையும் திருவாழி யாமுமான வேஷம் –
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் இறே –

பாப நிவ்ருத்தியான விரோதி நிவ்ருத்தி சொன்னது இஷ்ட ப்ராப்திக்கும் உப லஷணம் –
என்று சொல்வார்கள்
அநிஷ்டம் தொலைந்தவாறே -சேது பங்த ஸ்ரோத ப்ரஸ்ருதி ந்யாயத்தாலே -இஷ்ட
பிராப்தி தன்னடையேயாம் என்று கூறுவார் -பிரபன்னனுக்கு பாப நிவ்ருத்தியில்
பக்தனைக் காட்டிலும் ஏற்றம் உள்ளது ஆகையால் அது தனித்து கூறப்பட்டது
என்றும் சொல்லுவர் –
பக்தி பிராரப்த வ்யதிரிக்தாக நாசி நீ -பிரபத்தி பிராரப்த ஸ்யாபி நாசி நீ –
என்று இறே சாஸ்திர நிஷ்கர்ஷம் இருப்பது –
முக்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -என்று இவ்வளவில் கூறப்பட்டது –
இதுவே கீதாசாரம் –

—————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத ஸ்ரீ பார்த்த சாரதி திருவடிகளே சரணம் ..
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்