திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-5-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்

திருஉடம்பு வான்சுடர்; செந் தாமரைகண் கைகமலம்;

        திருஇடமே மார்வம்; அயன்இடமே கொப்பூழ்;

        ஒருவுஇடமும் எந்தை பெருமாற்கு அரனேஓ!

        ஒருவுஇடம் ஒன்றுஇன்றி என்னுள்கலந் தானுக்கே.

    பொ – ரை : வெற்றிடம் சிறிதும் இல்லாதபடி என்னுள் கலந்தவனான எந்தை பெருமானுக்கு அழகிய திருமேனி சூரியனைப் போன்று இருக்கின்றது; திருக்கண்கள் செந்தாமரை போன்று இருக்கின்றன; திருமகளுக்கு இருப்பிடம் திருமார்பாகும்; பிரமனுடைய இடம் திரு உந்தித்தாமரையாகும்; ஒழிந்த மற்றை இடம் சிவன் இருக்கும் இடமாகும்.

    வி-கு : வான் சுடர் -சூரியன்; மிக்க ஒளியுமாம். ஒருவுதல்-நீக்குதல். ‘ஒன்று’ என்பது, ‘சிறிது’ என்னும் பொருட்டாய் நின்றது. ஓகாரம், சிறப்புப் பொருளில் வந்தது. கலந்தான் – வினையாலணையும் பெயர்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1தம்மோடே கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி, ‘தன் உடம்பைப் பற்றிப் பிரமன் சிவன் முதலியோர்கள் சத்தையாம்படி இருக்கின்றவன்தான், என் உட்ம்பைப் பற்றித் தன் சத்தையாம்படி இராநின்றான்’ என்கிறார்.

திரு உடம்பு வான் சுடர் – அணைத்த போதை ஸ்பரிச சுகங் கொண்டு அருளிச்செய்கிறார். 2’ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை; விபூதி இல்லை’ என்கிறவர்கள் முன்பே, ஆப்த தமரான இவர், ‘திரு உடம்பு வான் சுடர்’ என்னப்பெறுவதே! ‘ஈஸ்வரனுக்குவிக்ரஹம் இல்லை, குணம் இல்லை’ என்கிறவர்கள் செய்து வைக்க மாட்டாத பாவம் இல்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்?’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.‘ஆயின், இவ்வாழ்வார் அருளிச் செய்யின், அது பிரமாணமோ?’ எனின், மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அன்றோ? 1அவர் அன்றே திருமேனியில் துவக்கு உண்கிறார்? 2‘தனது இச்சையால் மேற்கொள்ளப்பட்ட பல சரீரங்களையுடையவன்’ என்கிறபடியே, தனக்கும் விரும்பத் தக்கதாய் இருப்பது ஆதலானும், 3‘மஹாத்துமாவான திருவடிக்கு என்னால் கொடுக்கப்பட்டது இவ்வாலிங்கனமே; இவ்வாலிங்கனமானது எல்லா வகைச் சொத்தாகவும் உள்ளது’ என்கிறபடியே, தான் மதித்தார்க்குக் கொடுப்பதும் திருமேனியை ஆதலானும் ‘திருஉடம்பு’ என்கிறார். வான்சுடர் – முதலிலே தேஜோ ரூபமான திருமேனி; மிகவும் ஒளி பெற்றது இவருடைய கலவியாலே. புறம்பு ஒளியாய் உள்ளும் மண்பற்றி இருக்கை அன்றி, நெய் திணுங்கினாற்போன்று ஒளிப்பொருளாகவே இருத்தலின்,‘வான் சுடர்’ என்கிறார். 4‘பேரொளியின் கூட்டத்தைப் போன்றவன்’ என்பது விஷ்ணு புராணம். 5இப்படித் திருமேனி பஞ்ச சக்தி மயமாய் இருக்கச் செய்தும், ‘ஆறு குணங்களையுடைய திருமேனி’ என்கிறது குணங்களுக்குப் பிரகாசகம் ஆகையைச் சுட்டியேயாம்.

கண் செம் தாமரை – கடாக்ஷத்தாலே 1வவ்வல் இடப்பெற்றுச் சொல்லுகிற வார்த்தை. கை கமலம் – 2‘மென்மையான திருக்கை’ எனிகிறபடியே, தம்மை அணைத்த கை. ‘இவர், ஒரு கால் சொன்னதைப் பலகால் சொல்லுவான் என்?’ என்னில், முத்துக்கோக்க வல்லவன் முகம்பாறிக் கோத்தவாறே விலை பெறுமாறு போன்று, இவரும் ஒரோமுக பேதத்தாலே மாறிமாறி அனுபவிக்கிறார். திரு இடமே மார்வம் – அக்கையாலே அணைப்பிக்கும் பெரிய பிராட்டி யாருக்கு இருப்பிடம் திருமார்வு. அயன் இடமே கொப்பூழ் பதினான்கு உலகங்களையு படைத்த பிரமன் திருநாபிக்கமலத்தை இருப்பிடமாகக் கொண்டிருப்பான். ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே – என் நாயனான சர்வேஸ்வரனுக்கு நீங்கின இடமும் உருத்திரனுக்கு இருப்பிடமாய்  இருக்கும். ‘ஓரிடம்’ என்னாதே, ‘ஒருவிடம்’என்கிறது, ஒருவுதல் – நீங்குதலாய், நீங்கின இடம் என்றபடி. தாமச தேவதை இருப்பிடம் ஆகையாலே ‘நீங்கின இடம்’ என்று விருப்பு அற்ற வார்த்தை இருக்கிறபடி.

ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கு – என்னோடே வந்து கலக்கிற இடத்தில், நீங்குமிடம் ஒன்றும் இன்றியே வந்து கலந்தான். ‘தனக்கே உரியவரான பெரிய பிராட்டியாரைப் போன்று, பிறர்க்கு உரியவர்களான பிரமனுக்கும் சிவனுக்கும் திருமேனியில் இடங்கொடுத்து வைப்பதே!’ என்று இந்தச் சீல்குணத்தை அனுசந்தித்து,3வித்தராய் இருந்தார் முன்பு; இப்போது தமக்கு உடம்பு கொடுத்தபடி கண்டவாறே ‘அது பரத்துவம்’ என்று தோற்றி, ‘இது என்ன சீலத்தின் மிகுதி! ஓ’ என்பார் ‘ஓ’ என்கிறார்.

5. ‘இப்படித் திருமேனி பேரொளிப் பிழம்பாய் இருப்பத்தற்குக் காரணம் பஞ்ச சக்தி மயமாக
இருத்தல்’ என்பது நம்பிள்ளையின் திருவுள்ளம். ‘அப்படியாயின், ‘ஆறு
குணங்களையுடைய திருமேனி’ என்பது சேரும்படி என்?’ என்னும் வினாவிற்கு
விடையாக, ‘இப்படித் திருமேனி பஞ்ச சக்தி மயமாய்’ என்று தொடங்கும் வாக்கியத்தை
அருளிச்செய்கிறார்.

பஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.
இவ்வுலகம் ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டது போன்று, அவ்வுலகம் பஞ்ச
சக்திகளாலாயது என்பர்.

ஆழ்வார் உடன் கலந்த பின்பு தனக்கு வந்த புகர் -தன உடம்பை பற்றி பிரமாதிகள்  சத்தை பெற

அவன் என் உடம்பை பற்றி சத்தை பெற்றான் –
திரு உடம்பு வான் துடர் -என்னுள் கலந்தான் -ஓடு இடம் பாக்கி இன்றி –
செந்தாமாரை கண்
பாட்டு தோறும்
திரு இடமே மார்பு அயன் இடமே கொப்புள்
அரனுக்கும் ஒரு இடம் -என்னுள் கலந்த பின்பு தேஜஸ்
அணைத்த போதே ஸ்பர்ச சுகம் ஏற்பட -அதனால் வந்த புகர்
பிராட்டி அணைத்த போதை ஸ்பர்ச சுகம் –
திரு இடமே மார்பம் -பெரிய பிராட்டியார் –
திரு மார்பின் போக்கியம் சொல்ல மாட்டாதே திரு வார்த்தை ஒன்றையே ஸ்ரத்தையா -திரு -உயர்ந்த அர்த்தம்
வான் உயர்ந்த சுடர்
நஞ்சீயர் வார்த்தை -அருளிச் செய்வாராம் -வ்யாக்யானத்தின் சிறப்பு -மற்றவர் வார்த்தை குறிப்பிட்டு கெளரவம்
ஈஸ்வரனுக்கு விக்ரகம் இல்லைவிபூதி இல்லை சொல்வார் முன்பே
ஆப்த தமர் தம் திரு வாக்கல்-காட்டி –
கழுத்தை பிடிப்பது போல் –
அப்படி சொல்பவர் பண்ணாத பாபம் இல்லை
தாங்கள் மொட்டை அடித்தது போல் பிர,மதத்துக்கும் மொட்டை அடித்து
அவர்கள் சொன்னதை கேட்காமல் ஆழ்வார் –
அத்வைதத்தில் இருந்த நஞ்சீயர் சொல்லும் வார்த்தை –
திரு இல்லா தேவரை -திரு மழிசை பாக்யத்தில் செங்கண் மால் அடி சேர்ந்தார் வக்கீல் ஜுட்ஜ் ஆனதும் -நானே பார்த்த விஷயம் -எதிரிகளுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தாராம் –

அது போல் நஞ்சீயர் வார்த்தைக்கு ஸ்ரேஷ்டம்
இங்கே சேர்த்தாரே பட்டர் என்ன பாக்கியம் –
ஆழ்வார் தோற்கும் இடம் திரு மேனியில் -இச்சா க்ருகேத அபிமதம் -தன் திரு மேனி தனக்கே ஆனந்தம் –
தான் மதித்தார்க்கு கொடுப்பதும் திரு மேனி தானே
பரிஸ்வங்கோ  ஹனுமதோ -ஆலிங்கனம் உயர்ந்த பரிசு தான் -கொடுப்பான் –
அதை கொண்டாடுகிறார் முதலில் சுடர் இப்பொழுது வான் சுடர்
மிகவும் ஒளி பெற்றது –
புறம்பு ஒளியாய் உள்ளே மண் பற்று இன்றிக்கே
பொம்பை குதிரை சாணியில் முன்பு பண்ணுவாராம்
இங்கு தேஜஸ் தத்வம் நெய் திணின்கினால் போல் இருகி –
தேஜாசாம் ராசி கூட்டம் -பஞ்ச சக்தி மயமாக இருக்க செய்தே -ஷாட் குணிய விக்ரகன்
விக்கிரகங்களுக்கு -குணங்களுக்கு பிரகாசம் –
திரு கண் அதரம் பாரும்
கடாஷத்தால் குளிரப்பட்டு -வவ்வல் இட-வார்த்தை சொல்கிறார் –
அணைத்த கதை -மிதுரனா கரண -ஹரி வம்சம் -கண்டா கர்ண மோஷ பிரதானே
ஒரு கால் சொன்னதை ஒன்பது காலும் சொல்லுவான்
முத்து கோக்குறவன் முகம்  மாற்றி கோத்தவாறே  விலை பெறுமா போல் –
மாற்றி மாற்றி ரசித்து அனுபவிக்கிறார்
கண் கை கமலம் -முக பேதத்தால்
கையாலே அனைப்பிக்கும் பெரிய பிராட்டியார் -புருஷகாரம்
அயனிடமே கொப்பூழ்
திரு நாபி கமலத்தை
ஒருவிடம் -ஓர் இடம் இன்னாதே ஒருவதால் நீங்கின இடம்
நீங்கின இடமும்-ருத்ரன் – தாமச -காட்டுக்கு போய் தீர்த்தம் -நீங்கின இடம்
சர்வேஸ்வரன் நீக்கிய இடமும்   அரனுக்கு
போய் கலவாது என்மே கலந்தான்
ஒரு இடம் இன்றி கலந்தான் ஒ ஆசார்யம்
அநந்ய பரர் அந்ய பரரர் ப்ரமாதிகளுக்கும் கொடுத்தானே என்று வித்தராய் இருந்தார் முன்பு —
எறனை பூவனை பாசுரம்
தமக்கு இடம் கொடுத்த பின்பு பிரமாதிகளுக்கு கொடுத்தது எளிமை எல்லை நிலம் –
மூன்றையும் சேர்த்து இந்த பந்தி அருளுகிறார் –
ஒரு இடம் இன்றி என்னுள் கலந்தான் -ஒ என்று அன்வயம்

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: