திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

உள்உள்ஆவி உலர்ந்து உலர்ந்து, என
வள்ளலே! கண்ணனே! என்னும்;பின்னும்
வெள்ளநீர்க் கிடந்தாய்! என்னும்; என
கள்வி தான்பட்ட வஞ்சனையே?

    பொ – ரை : உள்ளே இருக்கிற உயிரானது சருகாக உலர்ந்து, எனக்கு உதவியைச் செய்தவனே! கண்ணனே!’ என்று கூப்பிடுகின்றாள்.

அதற்குமேல், ‘திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருளுகிறவனே!’ என்கிறாள்; ஆதலால், என்னுடைய கள்வியானவள் பட்டவைகள் வஞ்சனையேயாகும்.

    வி-கு : ‘உலர்ந்து என்னும்’ என்க. என வள்ளல், என கள்வி என்பன; ஒருமை – பன்மை மயக்கம். என – அகரம் ஆறனுருபு. கள்வி – பெண்பாற்பெயர். ‘எற்பெறத் தவஞ்செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே? நற்பொறை நெஞ்சின் இல்லாக் கள்வியை நச்சி என்றாள்’என்றார் கம்பர். தன் மனத்தின் நிகழ்ச்சிகளைத் தாயும் அறியாதவாறு மறைக்கின்றாளாதலின், ‘கள்வி’ என்கிறாள். பட்ட வினையாலணையும் பெயர். எச்சமெனக் கோடலுமாம்.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘தன் நெஞ்சில் ஓடுகின்றவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கும் இயல்புடைய இவள், வாய் விட்டுக் கூப்பிடும் படி இவளை வஞ்சித்தான்’ என்கிறாள்.

உள்உள் ஆவி உலர்ந்து – உள்ளே இருக்கும் மனத்திற்குத் தாரகமான ஆத்துமா சருகாய் வருகிறபடி. 2‘இவ்வாத்துமா வெட்ட முடியாதவன், கொளுத்த முடியாதவன், நனைக்க முடியாதவன், உலர்த்த முடியாதவன்’ என்று சொல்லப்படுகிற இத்தன்மையும் போயிற்று என்கிறாள். ‘ஆயின், உடல் உலர்ந்த பின்பு அன்றோ ஆவி உலர்தல் வேண்டும்?’ எனின், 3பாவபந்தம் அடியாக வருகிற நோயாகையாலே அகவாயே பிடித்து வெந்துகொண்டு வருமாயிற்று. என வள்ளலே கண்ணனே என்னும் – விடாயர் கற்பூரத்திரள் வாயில் இடுமாறு போன்று, இவ்வளவான துன்பத்திற்கு இடையில் வந்து உன்னை எனக்குக் கையாளாகத் தருமவனே என்னாநின்றாள். பின்னும் – அதற்குமேலே. வெள்ளம் நீர்க் கிடந்தாய் என்னும் -‘என்விடாய்க்கு உதவத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தருளிற்றே’ என்னும். 4‘தாபத்தாலே பீடிக்கப்பட்டவன் தண்ணீரில் சயனித்திருக்கிற நாராயணனை நினைக்கக் கடவன்’ என்பது விஷ்ணு தர்மம்.

இக்கிடை, இவளுக்கு ஒரு படுக்கையிலே சாய்ந்தாற்போலே இருக்கிறதுகாணும். என கள்வி – தன் மனத்தில் ஒடுகிறது பிறர் அறியாத படி மறைத்துப் பரிமாறக்கூடிய இவள் படும் பாடே இது! தான் பட்ட – 1‘கருமை பொருந்திய திருக்கண்களையுடைய சீதையைப் பிரிந்து நான் ஒருபோதும் ஒரு நொடிப்பொழுதும் பிழையேன்,’ என்கிற தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே! வஞ்சனையே – பகலை இரவு ஆக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்ற கூறிப் பின்னர் எடுத்தும் செய்த செயல் போலே, இவளை வஞ்சித்தீர் இத்தனை.  அளவு படைக்குப் பெரும்படை தோற்பது வஞ்சனையால் அன்றோ?

தன்- நெஞ்சில் ஓடுகிறது பிறர் அறியாமல் -மடப்பம் ச்வாபம் –
வாய் விட்டு கூப்பிடும் படி வஞ்சித்தான்
வள்ளலே –கண்ணனே -வெள்ள நீர் கடந்தாய் —
கல்வி தான் பட்ட வஞ்சனையே
உள்ளுள் ஆவி உலர்ந்து உலர்ந்து –
உள்ளே மனச அதுக்கும் தாரகம் ஆத்மா சருகு போல்
அசொஷ்யம் -உலற்ற முடியாது -அதாக்யோயம் எரிக்க முடியாது
பாவ பந்தம் -அகவாயை வெந்து  –
தாகம் விடையார் -பச்சை கற்பூரம்  வாயில் வைத்து கொண்டது போல் திரு நாமம் –
வள்ளலே -இவ்வளவு ஆர்த்தியில் -தன்னை கொடுக்கிறவன்
கொடுத்த இடம் கண்ணனே -கையாளாக
அதுக்கு மேலே விடாயுக்கு -வெள்ள நீர் –
இருட்டில் பயம் நரசிம்கன் -தாபத்தால் வெந்து போனால் ஜல சாயி
கருட வாகனம் வீர்யம் விஷம் பயம் – ஸ்ரீ விஷ்ணு தர்மம் ஸ்லோகம் –
மிக அதிகமான எடுத்துக்காட்டு –
இக் கிடை இவளுக்கு ஒரு படுக்கையிலே சாய்ந்தால் போல் -ஒரே படுக்கையில் சேர்ந்து
இருப்பதாக நினைந்து
என கள்வி -தன் ஹிருதயத்தில் ஓடுவது பிறர் அறியாமல் –
ந ஜீவியம் ஷணம் அபி -அவன் பட வேண்டியது -அவள் பட -இப்படி வஞ்சனை படுகிறாள்
அவிக்ருதனாய் -கல் உழி மங்கன் -உழு வைத்து அடித்தாலும் மங்காமல் -விகாரம் இன்றி
வஞ்சனை -கிர்த்ரமம் -அளவு படைக்கு பெரும்படை தோற்றது வஞ்சனையால் தான் –
இவள் பெரும்படை -அழகி -அவன் இடம் அளவு படை -அவனுக்கு தோற்றது வஞ்சனையால்
பகலை இரவாக்கியும் ஆயுதம் எடேன் சொல்லி ஆயுதம் எடுத்ததும் –
சிகண்டி –பீஷ்மர் –அஸ்வத்தாமா –
குறை இல்லை அதர்மம் ஜெயிக்க பண்ணினதால் –
அடியவர் ரஷிக்க– ராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ண அவதாரத்தில் பொய்யும் தஞ்சம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: