திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

தகவுஉடை யவனே! என்னும் ;பின்னும்
மிகவிரும்பும்; பிரான்!என் னும்;எனது
அகஉயிர்க்கு அமுதே!என் னும்;உள்ளம்
உகஉருகி நின்று உள்உளே.

    பொ-ரை : ‘மனமானது நிலை கெடும்படி நீர்ப்பண்டமாக உருகி நின்று, ‘மேலும் மேலும் மேலும் அருள் உடையவனே!’ என்கிறாள்; அதற்கு மேல், மிகுதியாக விரும்புகிறாள்; ‘எனக்கு உதவியினைச் செய்தவனே! என்கிறாள்; ‘என்னிடத்துள்ள ஆத்துமாவிற்கு அமுதே! என்கிறாள்.’

    வி -கு : உள்உளே -மேலும் மேலும். ‘உள்ளே உள்ளே’ என்று உரைத்தலும் ஒன்று. ‘நின்று என்னும்’ என மாற்றுக.

    ஈடு : ஆறாம் பாட்டு. இவள் துன்பத்தினைக் கண்ட திருத்தாய் 1‘அருள் அற்றவர்’ என்றாள்; இவள் அது பொறாமல்

‘தகவுடையவனே’ என்று அதனையே நிரூபகமாகச் சொல்லுகிறாள் என்கிறாள்.

தகவுடையவனே என்னும் – ஐயகோ! 1‘ஆகரத்தில் தகவு மறுக்குமோ? நம் குற்றங்காண்,’ என்கிறாள். இனி, ‘தகவு இல்லை என்றவள் வாயைப் புதைத்தாற்போலே, 2வந்து தோன்றுவதே!’ என்று, அவன் வந்தால் செய்யும் விருப்பத்தைச் செய்கிறாள் எனலுமாம். பின்னும் மிக விரும்பும் – உருவெளிப்பாட்டின் தன்மை இருக்கிறபடி. 3பிரான் என்னும் -‘பெற்ற தாய்க்கு இடம் வையாமல் வந்து தோன்றுவதே! இது என்ன உபகாரந்தான்’ என்கிறாள். எனது அக உயிர்க்கு அமுதே என்னும் – ‘என்னுடைய உள்ளே இருக்கிற ஆத்துமாவுக்கு இனியனானவனே!’ என்கிறாள். இறைவன், நித்தியமான ஆத்துமா அழியாமல் நோக்கும் அமுதமாதலின், ‘அக உயிர்க்கு அமுதே’ என்கிறாள். உள்ளம் உக உருகி நின்று – வடிவம் இல்லாத மனமானது வடிவினை அடைந்து உருகி நீர்ப்பண்டமாய் மங்கிப்போகாநின்றது.  உள்ளம் உருகி நின்று தகவுடையவனே என்னும்; பின்னும் மிக விரும்பும்; பிரான் என்னும்; எனது அக உயிர்க்கு அமுதே என்னும்; இவை, இவள் பேசும் பேச்சைக் கொண்டு நாம் அறிந்தவைகள்; உள் ஓடுகிறது, உள் உளே – 4வாசா மகோசரம். இனி, ‘உள் உளே’ என்பதற்கு, மேலும் மேலும் என்று பொருள் கூறுவாருமுளர். அப்பொருளுக்கு, ‘மேலும் மேலும் உருகி நின்று என்னும்’ எனக்கூட்டுக.

மோகித்து இருந்தாலும் -தகவு உடையவனே நிரூபகம் அதுவே கொண்டவனே

அதை வைத்து சம்போதிக்கிறாள் –
கெடுவாய் –அடி பாவி –
ஆகரத்தில் தகவு மறுக்குமோ -ஆகரத்தில் முத்து -கொள்ள கொள்ள சுரை இன்றி இருக்கும் இடம் ஆகரம்
நம் குற்றம் தான் –சங்கே மத் பாக்ய  சம்சையா -சீதா பிராட்டி வார்த்தை போல்
வந்து தோற்றுவதே -அவள் வாயை அடைப்பது போல் -ஈடுபாடு காரணமாக –
வந்தால் பண்ணும் விருப்பத்தை பண்ணா நிற்கும்
நினைவு முதிர்ச்சி -பாவனா பிரகர்ஷம் –
பின்னும் -வராவிடிலும் -பிரான் -உபகாரகன் -அவள் வைய்யிடம் கொடுக்காமல் தோற்றி –
எனது அக உயிர் க்கு அமுது -உள்ளே உள்ள அமர்த்தம்
நித்ய வஸ்து அழியாமல் காட்டும் -பூண்  கட்டி கொடுக்கும் அமுது
போக தசையில் சொல்வதை எல்லாம் சொல்கிறாள்
உள்ளம் மிக உருகி
ஆத்மா அணு -அமிர்தம் உரு கொண்டு உருகி த்ரவ்யம் போல் ஆனா பின்பு இப்படி
பேச்சை கொண்டு அறிந்த உள் நிலை -வாசா மகொசரம்  –

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: