திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

இவள்இராப் பகல்வாய் வெரீஇத்தன
குவளைஒண் கண்ணநீர் கொண்டாள்; வண்டு
திவளும்தண் அம்துழாய் கொடீர்; எனத்
தவள வண்ணர் தகவுகளே.

    பொ – ரை : இவள் இரவும் பகலும் வாயால் பிதற்றிக்கொண்டு தன்னுடைய கருங்குவளை போன்று கண்களில் நீரினைக் கொண்டாள்; வண்டு படிந்து ஒளி விடுகின்ற குளிர்ந்த அழகிய திருமார்வில்  இருக்கின்ற திருத்துழாய் மாலையினைக் கொடுக்கின்றீர் இலீர்; ஆதலால், தூய்மையான பரிசுத்தத்தையுடையவரே! உம்முடைய தகவுகள்தாம் என்னே!

    வி-கு : ‘வெரீஇ’ என்பது, சொல்லிசையளபெடை. தன – அகரம் ஆறனுருபு. காண்: சாதியொருமை. கண்ண – அகரம் சாரியை. ‘என’ என்பது, ‘என்ன’ என்ற சொல்லின் விகாரம். ‘என்ன போதித்தும்

என்ன?’ என்பது தாயுமானவர் பாடல். தவளம் – வெண்மை; அது ஈண்டுத் தூய்மைக்கு ஆயிற்று. வண்ணம் – தன்மை. இதனை ‘இயற்சொல்’ என்பர் நச்சினார்க்கினியர்.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. இவள் இப்படித் துக்கப்படுகின்ற இடத்திலும் வரக் காணாமையாலே, 1‘அருள் அற்றவர்’ என்கிறாள்.

இவள் இராப்பகல் வாய் வெரீஇ – 2‘ஆடவர் திலகனான ஸ்ரீராம்பிரான் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராக இருக்கிறார்; ஒருகால் உறங்கினராயினும், ‘சீதா’ என்கிற மதுரமான வார்த்தையினைச் சொல்லிக் கொண்டு விழித்துக் கொள்ளுகிறார்’ என்கிறபடியே, ‘வாய் வெருவுவான் அவனாக இருக்க, இவள் வாய் வெருவுகின்றாளே!’ என்கிறாள். ‘இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனால் 3‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி இத்திருப்பாசுரம் முடிய இவர் பாடிக்கொண்டு வந்தன எல்லாம் வாய் வெருவின இத்தனையே என்பதும், அவதானம் பண்ணி அருளிச்செய்கின்றார் அல்லர் என்பதும் போதரும். ‘அவதானம் பண்ணாமல் அருளிச்செய்தல் கூடுமோ?’ எனின், வாசனையே உபாத்தியாயராகச் சொல்லிக் கொண்டுவரச் சொல்லுகிறார் இத்தனை.

தன குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் – தன்னுடைய வாய குவளைப்பூப் போலே இருக்கிற அழகிய கண்களிலே நீரைக் கொண்டாள். ‘ஆனந்தக் கண்ணீர் பெருக்கு எடுக்கக்கூடிய கண்களில் துக்கக் கண்ணீர் பெருக்கு எடுத்து ஓடுகின்றதே!’ என்பாள், ‘குவளை ஒண்கண்ண நீர் கொண்டாள்’ என்றும், ‘இக்கண்ணுக்குஇலக்கானார் கண்ணிலே காணக்கூடிய கண்ணீரைத் தன் கண்ணிலே கொண்டாள்’ என்பாள், ‘தன் கண் நீர் கொண்டாள்’ என்றும் கூறுகின்றாள். ‘அதற்கு நம்மைச் செய்யச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘வண்டு திவளும் தண் அம் துழாய் கொடீர்’ என்கிறாள்; அதாவது, ‘விரஹ வெம்மையால் வாடின இவள் மார்வில் மாலையை வாங்கி, உம்முடைய மார்வில் செவ்வி மாறாத மாலையைக் கொடுக்கின்றிலீர்‘ என்றபடி. ‘அவ்வன்டுகளுக்கு என்ன கண்ணீரைக் கண்டு கொடுக்கிறீர்?’ என்பாள், ‘வண்டு திவளும் துழாய்’ என்கிறாள். திவளுகை – படிதல், அசைதல், ஒளி விடுதல். தவள வண்ணர் தகவுகள் என1 ‘சுத்த சுவபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயின?’ என்று எம்பார் அருளிச் செய்வர். ‘உம்மைப் போலே நாலு சிஷ்டர்கள் அமையும் அபலைகள் குடிகெட’ என்று பட்டர்அருளிச்செய்வர்.

நிர்தயம் -தயை இல்லை தாயார் சொல்ல

தகவு உடையவன் -மகள் அடுத்து
சேர்த்து -ஸ்ரீ வசன பூஷனத்தில் இந்த இரண்டையும் காட்டுவர்
கிலேசிக்க கிடக்கிலும் -வாராமை -தாயவத்தை இருந்த படி என் –

குவளை மலர் போன்ற கண் -திரு துழாய் கொடுத்தாலே போதுமே
தவள வண்ணர் சுத்தம் -ச்வாபர் -தகவுகளே
இரா பகல் வாய் வஐவி
சீதா மதுரா வாணி வாய் வேறுவி பெருமாள் -அத்தலை இத்தலை
ராமமா சததம் அநித்ரை
நித்தரை உடன் கால ஷேபம் செய்யும் ஐ ச்வர்யம்  உள்ளவர் இப்பொழுது தூங்காமல் – பிராட்டி மட்டுமே நினைவு கொண்டு
அபிமத விச்லேஷத்தில் இங்கனம் இருக்கும் நரோத்தமர் புருஷோத்தமத்வம் இதில்
அந்த துடிப்பு எல்லாம் இவள் இடம்
பொய் நின்ற ஞானம்தொடங்கி இது வரை இரா பகல் வாய் வெருவினது தான் பாசுரங்கள்
வாய் பிதற்றி– -அவதானம் பண்ணி சொன்னது இல்லை –வாசனையே உபாத்யாயராக
அவாவில் அந்தாதி -அவா -ஆசை -உந்த பட்டு அருளிச் seytha –
அவா உபாத்யாயராக நடந்த ஆயிரம் -அது நடத்த இவர் அருளியது –
இவரது மைத்ரேயர் -முன்னுரு சொல்ல பின்னுரு சொன்னார் -பராசரர் -மைத்ரேயர் கேட்க சொன்னது போல்
ஆசை தூண்ட -சிஷ்யர் போல் -இரா பகல் வாய் வெருவி-
தான தன்னுடைய குவளை ஒண் கண் – நீலோத்பலம் -கருமை நிறைந்த விழி —
ஆனந்தாறு பிரவக்கிக்க கடவ -சோக கண்
இக் கண்ணுக்கு இலக்கானவர் பட வேண்டிய அவஸ்தை இவள் பட்டு கொண்டு
நம்மை செய்ய சொல்லுகிறது என்ன
விரக -மாலை வாட -அதை வாங்கி கொண்டு உம் செவ்வி மாறாத பசும் துவளம் மாலை கொடும்
வண்டு துவளும்-தண் அம் துழாய் –சூட்டை தணிக்கும் குணம் உண்டு –
வண்டுக்கு கொடுத்தீர் -என்ன கண்ணா நீரைக் கண்டு கொடுத்தீர்
படிந்து -அசைந்து ஒளி விடுகை -துவளுகை –
என தவள வண்ணர் -சுத்த ச்வாபவம் உள்ள உம் தகவுகள் எங்கே போனது -எம்பார் நிர்வாகம்
பட்டர் -உம்மை போல் நாலு சிஷ்யர் அமைந்தால் போல் -அபலைகள் குடி  கெடுக்க -சுரத்தை வைத்து -அர்த்தம்
சுத்த ச்பாவம் இல்லாதவர் –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: