திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

இலங்கைசெற் றவனே! என்னும்; பின்னும்
வலங்கொள்புள் உயர்த்தாய்: என்னும்; உள்ளம்
மலங்கவெவ் வுயிர்க்கும்; கண்ணீர்மிகக்
கலங்கிக் கைதொழும் நின்றுஇவளே.

    பொ – ரை : இவள், ‘இலங்கையினை அழித்தவனே!’ என்கிறாள்; அதற்குமேல், ‘வெற்றியைக் கொண்ட கருடப்பறவையினைக் கொடியாக உயர்த்தியவனே!’ என்கிறாள்; மனமானது கலங்கும்படி நெருப்பினைப் போன்று பெருமூச்சு எறிகின்றாள்; கண்களில் நீர் மிகும்படி நின்று அறிவு கலங்கிக் கைதொழுகின்றாள்.

    வி-கு : ‘என்னும், என்னும், உயிர்க்கும், தொழும்’ என்பன, ‘செய்யுள்’ என் முற்றுகள். ‘நின்று கைதொழும்’ என மாற்றுக.

    ஈடு : நான்காம் பாட்டு. ‘‘அரக்கன் இலங்கை செற்றீர்’ என்கிற இது எப்பொழுதும் உள்ளது ஒரு செயல் அன்றுகாண், எப்பொழுதாயினும் ஒரு கால விசேடத்திலே நிகழ்வதுகாண்’ என்றாள் திருத்தாய்; அது பொறுக்க மாட்டாமே, அதுதன்னையே சொல்லுகிறாள்.

இலங்கை செற்றவனே என்னும் -எனக்குப் பாண்டே உதவி உபகரித்தவனே!’ என்னாநின்றான். முன்பு தனக்கு உதவினவன் இப்பொழுது தனக்கு உதவாது ஒழித்தாற்போலே கூப்பிடுகிறாள். 1‘மலை எடுத்தல், கடல் அடைத்தல், அம்பு ஏற்றல் செய்ய வேண்டுமோ? என் பக்கல்  வரும்போது என்ன தடை உண்டு?’ என்கிறாள் எனலுமாம். திருத்தாய், இவள் விடுக்கைக்குச் சொன்னது தானே இவளுக்குப் பற்றுகைக்கு உடலாய்விட்டது. பின்னும் – அதற்குமேல். வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் – ‘மிடுக்கையடைய புள்ளாலே தாங்கப்பட்டவனே! என்கிறாள். ‘விடாயர் இருந்த இடத்தே 2சாய்கரகம் போலே உயர வைத்துக்கொண்டு வந்து காட்டும் பரிகரத்தையுடையவனே!’ என்கிறாள் என்றபடி. அன்றி, ‘மிடுக்கையுடைய புள்ளைக் கொடியாக உடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் – கொண்டு வருவதற்குப் பரிகரம் இருந்தும் வரக்காணாமையாலே மனமானது வேர்பறியும்படி நெடுமூச்சு எறியாநிற்கும். 1‘கழுத்தளவு நீரில் இருக்கிற தளிர்களை யுடைய மரங்களைத் தனது மூச்சுக் காற்றினால் கொளுத்துகின்றவள் போல இருக்கிற சீதை’ என்றார் ஸ்ரீவால்மீகி பகவான். 2தண்ணீர் மிக – நெடுமூச்சாகப் புறப்பட்டு, புறப்படாதது கண்ணீராய்ப் புறப்படா நின்றது. கலங்கிக் கைதொழும் – 3தெளிந்திருந்து தொழுமது இல்லை அன்றே காதலி? இவளே – 4அவன் தொழும்படியான வேண்டற்பாடுடைய தான் தொழாநின்றாள்.

நியத ஸ்வாபம் இல்லை அரக்கன் இலங்கை செற்றது –
காதா சித்தம் –வார்த்தை கேட்டு பொறுக்க மாட்டாமல் மகள் -வார்த்தை –
வார்த்தை பேச முடியாமல் கை தொழும்-
எனக்கு பண்டே உபகரித்தவன் -முன்பு உதவினவன்
கடலை கடைய வேண்டாம் மலை எடுக்க வேண்டாமே அம்பு ஏற்க வேண்டாமே
பிரபந்தகம் ஒன்றும் இல்லையே
தாயார் விடுகைக்கு சொன்னதே பற்றுக்கைக்கு காரணம் மகளுக்கு
விடாய் இருந்த இடத்தில் சாய் கரகம் போல்
புள் உயர்த்தாய் -உயர வைத்து கொண்டு வந்து காட்டும்
மேல் இருப்பது ஆனந்தம் -திருஷ்டாந்தம் –
புள்ளை கொடியாக -கொண்டவன்
கொண்டு வருக்கைக்கு பீகரம் உண்டே -வரக் காணாமையாலே
மனச தத்வம் வேருடன் பிடிங்கி நெடு மூச்சு
சர்வ வ்ருஷான் பல்லவ  தாரின தகந்தி மிவ நிச்வாசம் –சீதா பிராட்டி
நெடு மூச்ச்சாக புறப்பட்டது – மீதி கண்ணீராக வடிய
கலங்கி கை தொழும்
தெளிவில் தொழுகை
தேறும் கை கூப்பும் கலந்கும்கை கூப்பும்
இவளே -அவன் தொழும்படி இருக்கும் -அவன் பட வேண்டி இருக்க -பெருமாள் பட்ட துக்கம் அதிகம்
உஊர்த்வம் மாசாத்து ஜீவிதம் -சிரஞ்சீவி வைதேகி -ஷணம் அபி நான் –
பெருமாள் இழந்தது பிராட்டி யாகையால் காசை மணி இழவு ஒத்து இல்லையே –

 

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: