திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

 இரக்க  மனத்தொடு எரிஅணை
அரக்கும் மெழுகும்ஒக் கும்இவள்;
இரக்கம் எழீர்;இதற்கு என்செய்கேன்,
அரக்கன் இலங்கைசெற் றீருக்கே?

    பொ – ரை : இவள் இரக்கம் பொருந்திய மனத்தால் நெருப்பினைச் சேர்ந்த அரக்கினையும் மெழுகினையும் ஒப்பாள்; நீர் இரக்கம் உடையீர் ஆகின்றிலீர்; இது நிமித்தமாக, இரவாணனுடைய இலங்கையை அழித்த உமக்கு எதனைச் செய்வேன்?

    வி – கு : ‘அரக்கன் இலங்கை செற்றீருக்கு’ என்ற தொடர், ‘உம்மைப் பிரிந்து வருந்தின பிராட்டியின்பொருட்டு இலங்கையை அழித்து அவள் துன்பத்தினை நீக்கினீர்; பிரிந்து வருந்துகிற இவளுடைய துன்பத்தை நீக்குதற்கு இப்பொழுது இரக்கமும் கொள்கின்றிலீர்’ என்ற கருத்தை உட்கொண்டது. மனத்தொடு – ஒடு உருபு, கருவிப் பொருளில் வந்தது. அணை அரக்கு – வினைத்தொகை. எழீர் – எதிர்மறை முற்று. செற்றீர் – பெயர்.

ஈடு :  மூன்றாம்பாட்டு. ‘இன்று இச்செயல் செய்யக்கடவதாக நினைத்த நீர், அன்று, 1‘உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்த’ லாகிய அச்செயலை எதற்காகச் செய்தீர்?’ என்கிறாள்.

இரக்க மனத்தொடு இவள் – இரங்கின நெஞ்சையுடைய இவள். இரக்கம் – நெஞ்சில் நெகிழ்ச்சி. 2அன்றி, ஈடுபாடு என்றும், ஈரிப்பு என்றும் பொருள் கூறலுமாம். எரி அணை அரக்கும் மெழுகும் ஒக்கும் – எரியை அணைந்த அரக்கும் மெழுகும் போலே உருகா நின்றாள். அரக்கும் மெழுகும் என்னும் இவற்றை நெஞ்சுக்கு ஒன்றும், இவள்தனக்கு ஒன்றுமாகக் கொண்டு பொருள் கூறுவர் பிள்ளை திருநறையூர் அரையர். நெஞ்சும் இவள்தனக்குக் 3கையடைப்பு ஆகையாலே இவள்தனக்கே இரண்டையும் அடை ஆக்கி அருளிச் செய்வர் பட்டர். 4‘சக்தியில் விஷ்ணுவைப் போன்றவர்; பார்க்கத் தகும் தன்மையில் சந்திரனைப் போன்றவர்’ என்கிறபடியே, பல பொருள்களையும் இவளுடைய படிக்கித் திருஷ்டாந்தமாகக் கூறக் கூடியவாறு இவள்தன் நிலை இருக்கிறது என்றபடி. 5அரக்கும் மெழுகும், நெருப்பிற்குள் புகில் கரிந்து போம்; கடக்க இருக்கில் வலிக்கும்; அதனைச் சார்ந்து நின்றுழி உருகும்; அது போன்று,4முடிந்து பிழைக்கவும் பெறாமல், தரித்திருக்கவும் பெறாமல், நோவு படும்படி செய்கின்றீரே!’ என்பாள், ‘எரிஅணை அரக்கும் மெழுகும்’ என்கிறாள். இவள் நிலை இது.

இரக்கம் எழீர் -‘நீரும் இவளைப் போன்று உருகவேண்டும் என்று வளைக்கிறோமோ? நொந்தார் பக்கல் செய்யும் அருளும் செய்கிலீர். இரக்க மனத்தையுடையள் ஆகாநின்றாள் இவள்; நீர் இரக்கம் எழுகின்றிலீர்; நீர் இரங்காவிட்டால் உம்முடைய நெஞ்சைப் போன்று இருப்பது ஒரு நெஞ்சை இவளுக்குக் கொடுத்தல் ஆகாதோ!’ என்கிறாள். இதற்கு என்செய்கேன் – உம்முடைய இரக்கம் ஒழிய ஏதேனும் வேறு உபாயத்தால் பெறத்தக்கதோ இப்பேறு? இனி, உம்மை இரங்கும்படி செய்யவோ? அன்றி, இவளை இரங்காமற் செய்யவோ? யாது  செய்வேன்?’ என்பாள், ‘என் செய்கேன்?’என்கிறாள் எனலுமாம். அரக்கன் இலங்கை செற்றீருக்கு -‘ஒரு காதலிக்கு உதவினவன் நமக்கு உதவானோ?’ என்று ஈடுபடாநின்றான். 1புழுக்குறித்தது எழுத்தானாற்போலே ஒன்று வாய்த்ததைக் கொண்டு 2‘அது அந்யார்த்தம்’ என்று இராமல் நோவுபடாநின்றாள்’ என்கிறாள். ‘உமக்கு இரக்கம் இன்றியே ஒழிந்தால், 3இவள் இரங்குவது ஒரு செயலைச் செய்து வைக்க வேண்டுமோ?’ என்பது உட்கோள்.

கடல்வழி விடநிசி சரர்பொடி படிரு கண்சீறி
வடகயி லையில்எழு விடைதழு வியதும றந்தாரோ
அடல்அரவு அமளியில் அறிதுயில் அமரும்அ ரங்கேசர்
இடர்கெட வருகிலர் முருகலர் துளவும்இ ரங்காரே.”

(திருவரங்கக்கலம்பகம)

என்ற அருமைப்பாசுரம் இவ்வியாக்கியானத்தோடு படித்து இன்புறத் தகும்.

அந்யார்த்தம் – வேறொன்றற்காகச் செய்யப்பட்டது; அல்லது, பிறருக்காகச்
செய்யப்பட்டது, இவ்விடத்து,

‘உன்னைமீட் பான்பொருட்டு உவரி தூர்த்துஒளிர்
மின்னைமீட் டுறுபடை யரக்கர் வேரறப்
பின்னைமீட் டுறுபகை கடந்திலேன்; பிழை
என்னைமீட் பான்பொருட்டு இலங்கை எய்தினேன்’

(கம்பரா. மீட். 63)

‘சீதையைக் குறித்த தேயோ தேவரைத் தீமை செய்த
பேதையைக் கொல்வன் என்று பேணிய விரதப் பெற்றி
வேதியர் அபய மென்றார்க்கு அன்றுநான் விரித்துச் சொன்ன
காதையைக் குறித்து நின்ற அவ்வுரை கடக்க லாமோ?’

(கம்பரா. விபீட. 118

அன்று உண்ணாது உறங்காது ஒலி கடலை -ஊடருத்து செய்தது எதற்கு
இரக்கம்  மனத்தோடு -எரி அணை -அரக்கும் மெழுகும்  போலே
இரக்கம் -நெஞ்சில் நெகிழ்ச்சி ஆதல் -ஈடுபாடு /ஈர்க்கப்பட்டு
கார்பண்யம் -அங்கம் -தீன தசை
பிள்ளை திரு நறையூர் அரையர் -அரக்கும் மெழுகும் -நெஞ்சு சரீரம் ஓன்று நிர்வாகம்
நெஞ்சு இவளுக்கு அடங்கின வஸ்து இரண்டும் இவளே பட்டர் நிர்வாகம்
அரக்கு கொஞ்சம் தாமசித்து உருகும் வெவ்வேற நிலை இவளுக்கு
விஷ்ணு நா  சதுசோ வீரே ஸ்லோகம் -பார்வைக்கு  சந்தரன் -கால அக்னி நெருப்பு- பொறுமை பூமி போல் -ராமன்
அக்னிக்கு உள்ளே புகில் கருகியும்
முடிந்து பிழைக்கும் பெறாமல் தரித்து நிற்கவும் முடியாமல்
உருக்கிகிரீரே -இரக்கம் இல்லை நீருமுருக வேண்டாம்
நொந்தார் பக்கல்  கிருபை பண்ணா வில்லையே
நீர் இரங்கா விட்டால் உம்மை போல் கடின நெஞ்சையே கொடுத்து இருக்கலாமா
உம் இரக்கம் ஒன்றே சாதனம் -இதற்க்கு யான் என் செய்கேன்
உபாயான்தரம் கொண்டு அடைய முடியாத வஸ்து நீர்
உம்மை இரக்க பண்ணவோ இவளை இறங்காமல் பண்ணவோ
உமக்கு இரக்கம் ஓன்று இல்லை என்றால் இவளுக்கு இரக்கம் செய்ய- இலங்கை அழித்தீர்
திண்ணைக்கு தேள் கொட்ட தீர்த்த நெறி போல்
ஓன்று வாய்த்தது கொண்டு -அது அன்யார்த்தம் -பிறர்க்கு செய்த செயல் நினைக்காமல் நோவு பட
-புழு குறித்தது எழுத்து ஆம் போலே –
உமக்கு இவள் தோற்று உருகுகிறாள் –

 

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: