திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-1–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

இரண்டாம் பத்து

முதல் திருவாய்மொழி – ‘வாயுந்திரை’

முன்னுரை

    ஈடு : ‘ஒருவன் பெறுதற்குரிய பேறுகளுள் மிக உயர்ந்த பேறு இறைவனுக்குச் செய்யப்படும் தொண்டேயாம்,’ என்று அறுதி யிட்டார் முதற்பத்தால்; அவ்வாறு செய்யப்படுந்தொண்டிற்குத் தடைகளாகவுள்ள களைகள் அறுக்கிறார் இந்த இரண்டாம் பத்தால்.

    மேல்1 திருவாய்மொழியில் 2‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்று இறைவனுடைய எளிமையினையும் மேன்மையினையும் வடிவழகினையும் அருளிச்செய்தார். மேல் விழப் பண்ணுகைக்கு இம்மூன்று குணங்களுள் ஓரொன்றே போதியதாம். இங்ஙனம் இருக்க, இறைவனிடத்தில் இம்மூன்று குணங்களும் நிறைந்து குறைவற்று இருக்குமேயாயின், அவனை அநுபவியாதிருக்கப் போகாதன்றே? ஆதலால், ‘அவனை இப்பொழுதே அணைதல் வேண்டும்,’ என்னும் அவாமிக்கு எழுந்தது; நினைத்தவாறு அப்பொழுதே அணையப் பெறாமையாலே பிறந்த பெருந்துன்பத்தை எம்பெருமானோடே கலந்து பிரிந்த ஆற்றாமையாலே நோவுபடுகிறாளாகிய ஒரு பிராட்டி, 1ஆற்றாமை கை கொடுக்க, விளையாடும் பூஞ்சோலைக்குப் புறப்பட்டு, அங்கே வாழ்கின்ற பொருள்களைக் கண்டு அவையுமெல்லாம் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிற பாசுரத்தால் பேசுகிறார்.

    2‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியைக் காட்டிலும் இத்திருவாய்மொழியில் ஆற்றாமை கரைபுரண்டிருக்கும். ‘அதற்குக் காரணம் என்னை?’ எனில், 3‘பெருநிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன்’ என்று அவதாரத்திலே அநுபவிக்கக் கோலிப் பெறாதது ஆகையாலே ‘அது ஒரு காலத்திலே நிகழ்ந்தது நாம் பிற்பாடரானோம்’ என்று ஆறலாம்; இது அவ்வாறு அன்றி, 4‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்று உகந்தருளின நிலத்திலே அநுபவிக்க ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாகையாலே இது கனத்திருக்கும். அவதாரத்தில், பிற்பட்டார்க்கும் இழக்க வேண்டாதபடி முகங்கொடுக்கைக்கு நிற்கின்ற இடங்கள் அன்றோ 5உகந்தருளின நிலங்கள்? மற்றும், ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியில் தூது விடுகைக்குத் தரிப்பு உண்டாயிற்று: இத்திருவாய்மொழியில் அங்குத் தூது விட்ட பொருள்களும் நோவுபடுகின்றனவாக அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிறார். மேலும், அனுபவிக்கிற இவ்வாழ்வாருடைய தன்மையாலும் இத்திருவாய்மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்; ‘யாங்ஙனம்?’ எனின், திருவாய்மொழியிலுள்ள ஆற்றாமை 6‘பத்துடையடியவர்’ என்ற அத்திருவாய்மொழிக்கு முன்பு இறைவனை அநுபவித்துப் பிரிந்த அளவாலுள்ள ஆற்றாமையே; ‘அஞ்சிறைய மடநாரை’க்குப் பின்பு இத்திருவாய்மொழியளவும் அவனுடைய குணங்களை அநுபவித்துப் பிரிந்த பிரிவு ஆகையாலே இத்திரூவாய் மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்; இறைவன் 7பயிலப்பயில இனியவனாய் இருப்பவன் அன்றோ?

 நாரையாகில் வெளுத்திருக்கியும், அன்றிலாகில் வாயலகு நெகிழ்த்தவாறே கதறுகையும், கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிகையும், காற்றாகில் வேறுபாடின்றி எப்பொழுதும் திரிகையும், மேகமாகில் நீராய் இற்று இற்று விழுகையும், சந்திரனாகில் தேய்வது வளர்வதாகையும், இருளாகில் பொருள்களைக் காண ஒண்ணாது தடுக்கையும், கழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவதும் வடிவதுமாகையும், விளக்காகில் இற்று இற்று எரிகையும், இங்ஙனம் இவற்றிற்கு இத்தன்மைகள் எப்பொழுதும் உள்ளவை என்று அறியாமல், இவையெல்லாம் தம்மைப்போன்று இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் வருந்தி, துக்கத்தையுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தையுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டு 1ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று, இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து, ‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்.

    ‘ஆயின், பறவை கடல் முதலான பொருள்கள் இறைவனைப் பிரியின், அப்பிரிவால் அவற்றிற்குத் துன்பம் உளதாமோ?’ எனில், 2‘வாரீர் சக்கரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் கழுத்தளவு தண்ணீரிலிருக்கிற மரங்களும் ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவால் உளதாய சோகத்தால் பீடிக்கப்பட்டனவாகி, அரும்பு போது மலர் இவைகளோடு வாடி உலர்ந்தன,’ என்றும், 3ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவின் வெம்மையால், ஆறுகள் கரையருகும் சென்று கிட்ட ஒண்ணாதபடி வெப்பங்கொண்டு கொதித்தன; வனத்திலுள்ள மரங்களும், சோலையிலுள்ள மரம் செடி கொடிகளும் உலர்ந்த இலைகளையுடையன ஆயின்,’ என்றும் ஸ்ரீராமாயணத்தில் பேசப்படுவது போன்று, அறிவுடைப்பொருள் அறிவில் பொருள் என்னும் வேற்றுமையின்றி எல்லாப் பொருள்களையும் நோவுபடுத்தக்கூடியவன், இவள் பிரிந்த இறைவன் என்க.

ஆக, ஸ்ரீராமபிரான் தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி, முழுமதியினைப் போன்ற திருமுகத்தையுடைய பிராட்டியருகிற்சென்று அவளைப் பார்த்துச் ‘சீதாய்! 1உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா! நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ என்றும், கூறி, ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டாற் போன்று கூப்பிடுகிறார் இங்கு.

    இத்திருவாய்மொழியில், 2இளைய பெருமாளைக்காட்டிலும் இவர்க்கு உண்டான வேறுபாடு சொல்லப்படுகிறது. ‘யாங்ஙனம்?’ என்னில், 3‘மீனுக்குத் தண்ணீரைத் தாரகமாக அறுதியிட்டார் அவர்; இவர், அந்த மீனோடு மீனுக்குத் தாரகமான தண்ணீரோடு தம்மோடு வேற்றுமையற, பகவானுடைய குணங்களே தாரகம் என்றிருக்கிறார் ஆதலால்.

பத்து பத்தின் சாரம் -முன்பு பார்த்தோம் 

2 -7 வரை பதிகம் முடிவில் பாட்டு தோறும் அர்த்தம் சொல்லி .
இரண்டாம் பத்து ஆரம்பம் இதை மீண்டும்
பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார் -முதல் பத்தில் -சுடர் அடி தொழுது ஏழு ஏன் மனனே
இரண்டாம் பத்தால் -அதில் களை அறுத்தார் -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -சொல்லி –
மூன்றாம் பத்தால் -விரோதி கழிந்த கைங்கர்யம் வேஷம்-பாகவத சேஷம் பர்யந்தம் -பயிலும் சுடர் ஒளி –
நான்காம்பத்தால்  -ஒரு நாயகம் ஐஸ்வர்யம் கை வல்யம்விரோதி இவற்றுக்கு என்றார்
ஐந்தாம் பத்தால் களைவாய் -துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -அத்தை போக்குபவனும் அவனே என்றார் –
ஆறாம் பத்தில் –அகலகில்லேன் இரையும் -மிதுனத்தில் சரண்
ஏழாம் பத்தில் –  தத்க்த படம் நியாயம் போலே நண்ணிலா வகையே நலிவான் -சம்சாரம்தொடர
எட்டாம் பத்தில் -நம்முடைய ஆத்மாத்யதீயங்களில் நசை அறாத படி இல்லை என்றார்
-8 -2 -உங்களோடு எங்கள் இடை இல்லை பந்துக்களும் த்யாஜ்யம்
ஒன்பாது பத்தில் ரஷியாது ஒழிவான் என் -நாரயச்ணன் சர்வ சக்தி மான்- ஓர் ஆயிரமாய் -பேராயிரம் கொண்ட பீடு உடையான்
சீலத்தில் கால் தாழ்ந்த மாறன்
பத்தாம் -திரு மோகூர் தங்கி -அர்ச்சிராதி கதியும் காட்டி -அவா அற்று வீடு பெற்றார் -அபெஷித்தைதை அருளி –
தலை கட்டுகிறார்
40 உபன்யாசம் -முதல் பத்துக்கு ஆனது -ஸ்ரீ ய பதி சேர்க்காமல் 60 மணி காலம் ஆனாலும்
பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்பதை அறுதி இட்டார் -சுருக்கமாக சங்கதி -தொடர்பு -முதல் பத்துக்கும் இதற்கும் அருளுவது விசேஷம் இங்கே –
நிர்கேதுக கிருபை முந்திரு வாய் மொழி அருளி –சாத்ம்ய போக பிரத்வம் முன் அனுபவித்த பின்பு -தானே வந்து கிருபை –
ஓர் ஹேது அற தந்தான் –
வாயும் திரை உகளும் -ஆரம்பத்திலே அழுகை –
உடல் இளைத்து வெளுத்து தமக்கு
பார்க்கிறவர்களுக்கும் அப்படி -தம்மைப் போலே -அவனால் நோவு பட்டதாக –
நாரை பார்த்து -இயற்கை ஸ்வாபம் என்று நினைக்காமல்-
இப்படி பாட்டு தோறும் சங்கதி சொல்லி ஈட்டின் அழகு –
மணியை -சௌலப்யம் -முடிந்து ஆளலாம் படி
வானவர் கண்ணன் மேன்மை
தன்னதோர் அணி -அழகன் சௌந்தர்யம்
ஒன்றே போரும் இரே மேல் விழ பன்னுகைக்கு
மூன்றும் குறை இன்றி இருக்க -இவ்விஷயத்தை இப்பொழுதே அனுபவிக்க
பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்தது
நேராக பார்த்து கட்டி தழுவ –
நினைத்த பரி மற்றம் பெறாமையாலே –
அவசாத அதிசயம்-ஆற்றாமை யால் நோவு -படுகிற பிராட்டி நிலையை அடைந்தாள் –
லீலா உத்யானம் போக -தோட்டம் -நடந்து போக சக்தி ஏது ஆற்றமையே கை கொடுக்க போனார்
அங்கே வர்த்திக்கிற பதார்த்தங்களை கண்டு –
அவையும் பகவத் அலாபத்தாலே நோவு படுகிறவனவாக கொண்டு
அவற்றுக்கும் சேர்த்து துக்கப்பட்டு பர துக்கம் தம் துயக்கம்
பிராட்டி தசை -இரண்டாம் தடவை
அம் சிறைய மட நாராய் -ஒப்பு நோக்கி –அருளுகிறார்
அங்கே விட இதுக்கு ஆற்றாமை கரை புரண்டு இருக்க –அங்கே தரித்து தூது விட்டார் -அங்கும் கலக்கம் தான்
பறவைகள் -போகுமா -தூது போய் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டாரே
இங்கே அவற்றை பார்த்து கலக்கம் அதிகம் -ஆனதே எதனால்
அங்கு -பத்துடை அடியவர் -பெரு நிலம் கடந்த நல் அடி போது அயர்த்துவன் தழுவுவன்
பட்டர் நிர்வாகம் பாரித்து -பிள்ளான் தழுவிட்டார் -மானச அனுபவம்
அங்கு விபவ அவதாரத்தில் அனுபவிக்க கோலி
அது ஒரு காலத்தில் பிற்பாடார்  என்று கொஞ்சம் ஆறி இருக்கலாமே –
இங்கு -நம்பியை தென் குறுங்குடி -அர்ச்சை
இழக்க வேண்டாதபடி முகம் கொடுக்கைக்கு நிற்கிற உகந்து அருளின நிலம்
அது பெறாமையாலே கனத்து இருக்கும்
ஆண்டாள் வில்லி புத்தூர் உறைவான் பொன்னடி காண்பதோர் ஆசையினால் – பொரு கயல் கண் இணை கண் துஞ்சா
விபவ அவதாரம் கிடைக்க வில்லை என்றால் நியாயம் அர்ச்சை தான்
இவளும் ஸ்ரீ வில்லிபுத்தூரில்  தானே
நம் போல் இல்லை சேவித்த உடன் திரும்பி
உள்ளே போனால் திரும்பி வர மாட்டாள்
கேசவ நம்பியை கால் பிடித்து -அங்கே இருப்பாளே
செங்கண் மால் தான் கொண்டு போனால் கதற வேண்டியது தான் .
அரவின் அணை துயிலுமா மா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ -என் செய்கேன் உலகத்தீரே -நம்மை கேட்டார்
இறுக்கு வாதம் வந்தால் போலே -இருக்க -மருந்து இவர் இடம் இருக்கும் –
நின்று அனுபவிக்கிறீர்களே– ச்ராங்கை அந்த மருந்து எனக்கும் கொடும் –
பெறாமையாலே -திரு குறுங்குடி சேவையும் கிடைக்க வில்லை ஆழ்வாருக்கு –
மென்னடை அன்னம் பாசுரம் போல் –
ஆடி ஆடி -வருத்தம் அதிகம் ஆகும் -தாய் பாசுரம் –2-3 – ஆழ்வார் அடியார்கள் குழாம் களை உடன் கொடுவது என்று கொலோ
திருஷ்டாந்தம் சொல்லி வஸ்து இழந்தால் –
காசு –பொன்னை –மணியை –இழந்தால் போல் இந்த மூன்றும் இருந்ததாம் –
விபவம் -அர்ச்சை -அடியார் குழாம் -மூன்றுக்கும் இந்த மூன்று திருஷ்டாந்தம் –
தூது விட்டவையும் நோவு படுவதாக அவற்றுக்கும் சேர்ந்து தான் நோவு படுகிறார்
அனுபவிக்க இவர் தம் படியாலும் -ஆற்றாமை கனத்து இருக்கும்
பத்துடை அடியவர்க்கு முன்பு –அரும் பதம் -அர்த்தம் அடியவர்களுக்கு முன்பு -பாகவத சேர்க்கை
இவ்வளவும் வர
அங்கு – பரத்வம் பஜநீயத்வம் சௌலப்யம் மூன்றும் அனுபவித்த
இங்கு -குணங்கள் அதிகம் அனுபவித்து -பிரிந்த பிரிவு
அபராத சகத்வம் சீலம் ஆர்ஜவம்
பயில பயில இனியதாக இருப்பதே இவ் விஷயம் இறே
சதாபிஷேகம் ஸ்வாமி பழகிய பின்பு -பகவத் விஷயம் -காலஷேபம் கேட்க ஆசை –
வேளுக்குடி ஸ்வாமி முன்பு சொல்லி -அவர் ஏற்பாடு –
பழக பழக இனிமை அப்புறம் அறிந்தேன் தந்தை போல்
1986 தை மாசம் எழுந்து அருளின் 6 வருஷம் பழக்கம்  தான் -மாமா -பிள்ளை டே கூப்பிட
பயில பயில -பகவத் விஷயம் ஆழ்வாருக்கு -நமக்கே இருக்குமே இவ்வளவும் கேட்ட பின்பு
சங்கதி இரண்டும் இத்தால் அருளி –
ஸ்வாபம் -வருத்தத்தால்
நாரை வெளுத்து –
அன்றில் -வாய் அகல கதறுதல்-பேடை பிரிந்து
கடல்-எழுத்தும் சொல்லும் பொருளும் அறியாமல் கூப்பிடுகி
காற்று -நில்லவா நிற்காமல் திரியும்
மேகம் நீராய் இற்றிற்று விழுகையும்
சந்தரன் தேய்வது வளருவது
தமஸ் -இருட்டு வஸ்து காட்டாதே கண் இருண்டு
கழி -சமுத்ரம் உப்பும் கழி அலைவாய் முகமாய் ஏறுவது இரங்குவது
விளக்கு இதற்று இற்று ஏறிய கடவது
நியத ஸ்வாபம் என்று அறியாதே -மயர்வற மதி நலம் அருள பெற்று
மதி எல்லாம் உள் கலங்கி முந்திய ஞானமும் நீ கொடுத்த ஞானமும் சேர்ந்து கலங்கி
பர துக்கம்  சகியாமை ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
இளைய பெருமாள் போலே முதலில் சொல்லி நீரை விட்டு பிரிந்த மீன் போல்
பிராட்டியும் நானும் அது போல் -பிரியில் இளம்கோ
இளைய பெருமாள் காட்டில் – ஆழ்வாருக்கு வ்யவிருத்தி
மத்ச்யதுக்கு தாரகம் ஜாலம் அறுதி இட்டார் இளைய பெருமாள்
மத்ஸ்யம் ஜலம் தம்மோடு வாசி அற பகவத் குணம் தாரகம்
ஆற்றாமை மிக்கு –
தூக்கிகள் தம்மோடு சம துக்கம் கொண்டவர்களோடு கட்டி அழுவது போல் –
இத்தால் தரிக்குமா போலே நீ பட்டதோ நான் பட்டதோ கழுதை கட்டி அழுகிறார்
சக்கரவர்த்தி திரு மகன் வனம் -நகரம் கொதிக்க -மரம் செடி கொடிகளும் வருந்த –
ச புஷ்ப அங்குர வேர் முதல் கூட -நதி ஜலமும் கொதிக்க –
அந்த ஸ்லோகம் முழுக்க வியாக்யானம் –
சேதன அசேதன -அனைத்தும் நோவு படும் படி தான் இவர் பிரிவு
இருள் கட்டி அழுதார் -அதனால் –
மனுஷ்யரை பார்த்து அளவில்லை இந்த பதிகத்தில் –
உப்பும் கழி –  காற்று- இருள் -வருந்த -இங்கே –
அபி விருஷாக மரங்களும் கூட -ஜனங்கள் வருந்தினார்கள் சொல்ல வேண்டாமே
சுமந்த்ரன் சொல்லிய வார்த்தை
ஆறுகளோடு சிறு குழிகளோடு குட்டை கூட ராம விரகத்தால் கொதிக்க தப்த குண்டம்
வனம் உப வனம் சிறு காட்டு விறகு அக்னி போல் கொதிக்க
சீதை காணோம் -இலக்குவனை கட்டி பெருமாள் அழுதது போல் -சம துக்கிகள்

அடைய வளைந்தான் அரும் பதம் சுருக்கி ஜீயர் அரும் பதமாக இருக்கும்

 

        வாயும் திரைஉகளும் கானல் மடநாராய்!
ஆயும் அமர்உலகும் துஞ்சிலும்நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மேபோல்
நீயும் திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே?

    பொழிப்புரை : ‘மேலும் மேலும் வந்து பொருந்துகிற அலைகள் தாவுகின்ற கடற்கரைச்சோலையிலுள்ள மடநாராய்! என் தாயும் நித்திய சூரிகளும் தூங்கினாலும், நீ தூங்குகிறாயில்லை; ஆதலால், என்னைப் போன்று நீயும், நோயும் பசலையும் சரீரமெங்கும் பரவும்படி, திருமாலால் நெஞ்சம் கொள்ளப்பட்டாயோ? கூறுக,’ என்கிறான் என்பதாம்.

    விசேடக்குறிப்பு : இப்பாசுரம் ‘தன்னுட் கையாறு எய்திடு கிளவி’ என்ற துறையின்பாற்படும். அதாவது. தனக்கு, நேர்ந்த துன்பத்தை, தன் ஆற்றாமையால் பிறிதொன்றன்மேலிட்டுக் கூறுதல். இவ்வாறு கூறுதற்குப் பயன், களவொழுக்கத்திலே நின்று சிறைப்புறத்தானாய தலைமகன் கேட்பின், வெளிப்படையாக வந்து இவளை மணம் புரிந்து கொள்வான்; தோழி கேட்பின், வெளிப்படையாக வந்து இவளை மணம் புரிந்து கொள்வான்; தோழி கேட்பின், தலைவனுக்குச் சொல்லி விரைவில் மணம் புரிந்துகொள்ளச்செய்வாள்; யாரும் கேளாராயின், தலைவி தானே

சொல்லி ஆற்றினளாம். இதனைக் ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்று கூறுதலுமுண்டு. முதல் ஒன்பது பாசுரங்களும் இத்துறையே எனக் கொள்க. மடம் – கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. ‘நாரை’ என்னும் ஐகார ஈற்றுப் பெயர், விளி ஏற்றலின், ‘நாராய்’ என நின்றது. ஆய் – யாய் என்பதன் மரூஉ. ‘என் தாய்’ என்பது பொருள். ‘யாயும் ஞாயும் யாராகியரோ!’ என்றார் பிறரும். அமருலகு – அமரர் உலகு என்பதன் விகாரம். நோய் – பிரிவாற்றாமையால் மனத்தில் நிகழும் காமநோய்; இது, உடல் மெலிவிற்றுக் காரணம். பயலை – பசலை; காதலன் பிரிவால் தலைவிக்குத் தோன்றுகிற ஒரு நிறவேறுபாடு; இதன் நிறம் பீர்க்கு, கொன்றை இவற்றின் மலர்களின் நிறத்தினைப் போன்றது என்பர். ‘எம்மேபோல்’ தனித்தன்மைப்பன்மை. கோள். – முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

    இத்திருவாய்மொழி, நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்பெறும்.

    ஈடு : முதற்பாட்டு. 1பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத் திலேயாகையாலே, கடற்கரைச் சோலையின்கண் இவள் பிரிவால் வருந்தி இரங்குகின்ற காலத்தில், ஆங்கு இரைதேடுதல் நிமித்தமாகத் தங்கியிருந்த ஒரு நாரை இவள் கண்ணுக்கு இலக்காக, அதன் உடம்பில் வெளுப்பைக் கண்டு, அதுவும் தன்னைப் போன்று பிரிவாற்றாமையாலே வந்த பசலை நிறத்தோடு இருக்கிறதாகக் கொண்டு, ‘பாவியேன் நான் அகப்பட்ட விஷயத்திலே நீயும் அகப்பட்டு நெஞ்சு பறியுண்டாயோ?’ என்கிறாள்.

    வாயும்  திரை உகளும் கானல் மடநாராய் – பெரிய மலை போல வந்து கிட்டுகிற அலைகள் மேலே தாவிப் போகா நின்றாலும் நினைத்தது கைப்புகுமளவும் சலியாமல் கடற்கரைச் சோலையில் தங்கியிருக்கின்ற நாரையே! ‘பகவானைத் தியானிப்பவர்கள் சலியாமல் இருப்பது போன்று சலியாமல் இருக்கிற நாரையே!’ என்கிறாள். அதாவது,2‘அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி அகல்வான் உரிஞ்ச முதுகில், மலைகளை மீது கொண்டு வருமீனை’ மறவாது இருப்பார்க்குப் போலியாய் இராநின்றது, அலைகளை மீதுகொண்டு வருமீனை மறவாதிருக்கின்ற இந்நாரையும் என்றபடி. இனி, ‘மீனைக் குறிக்கோளாகக்

கொண்டு சலியாமல் நிற்கின்ற நாரையே! என்று கொள்ளாது, 1‘சர்வேஸ்வரன் காப்பவன் என்று இருப்பார், 2மூவகைத் துன்பங்களாலும் வருகின்ற இடையூறுகட்கு இடையாதே இருக்குமாறு போன்று, மலைகள் போன்ற அலைகள் மேலே தாவிச் சென்றாலும் அதற்குச் சலியாமல் இருக்கின்ற நாரையே! என்று கோடலும் ஆம். இனி, திரை உகளுதலை மடநாரைக்கு அடைமொழி ஆக்காது, திரை உகளாநின்றுள்ள கானல் (கடற்கரைச் சோலை) என்று, திரை உகளுதலைக் கானலுக்கு அடைமொழியாக்கிக் கூறலும் ஒன்று. 3கிராமணிகள், பிறர்க்குத் துன்பம் செய்துகொண்டே யாகங்களும் பண்ணிப் பவித்திரங்களும் முடிந்திட்டுத் ‘தார்மிகர்’ என்னும்படி திரிவது போன்று, நாரையும். 4நினைத்த பெரிய மீன் கைப்புகுமளவும் சிறிய மீன்கள் வந்தாலும் அவற்றில் விருப்பம் அற்று இருத்தலின், ‘மடநாராய்’என்கிறாள். மடப்பமாவது, பற்றிற்று விடாமை.

    ஆயும் துஞ்சிலும் – என்பிறப்பே பிடித்து உறங்காத தாயும் உறங்கிலும். அமர் உலகும் துஞ்சிலும் – தங்கள் சத்தையே பிடித்து உறங்காத 5நித்திய சூரிகள் உறங்கிலும் நீ துஞ்சாயால் – நீ உறங்குகின்றாய்இல்லை. ‘இவளைப் பெற்ற தாய்க்கு உறக்கம் இன்மைக்குக் காரணம் என்?’ என்னில், முன்னர் இவள் இளமைப் பருவத்தில் ‘இவளுக்குத் தக்கானாய் இருப்பான் ஒருவனைப் பெற்றுக் கொடுத்தோமாக வல்லோமே!’ என்று கண்ணுறங்காது; பின்பு, நாயகனைப் பிரிந்து இவள் நோவுபடுகிறபடியைக் கண்டு கண்ணுறங்காது; 6‘ஒரு கொள் கொம்பிலே கொண்டு போய்ச் சேர்த்து நோக்கில்

நோக்கலாய், இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இராநின்றது; இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையில் காட்டிக்கொடுத்தோமாக வல்லோமே!’ என்று எங்கள் தந்தையார் கவலைக் கடலில் மூழ்கினவர் ஆனார்,’ என்றாள் பிராட்டி. அப்படியே அன்றோ இவளைப் பெற்ற தாயும் கண்ணுறங்காதே படும்படி? இமையோடு இமை கொட்டாதவர்களாய் எப்பொழுதும் இறைவனைப் பார்த்துக்கொண்டேயிருப்பவர்கள் நித்தியசூரிகள் ஆதலின், ‘அமர் உலகும் துஞ்சிலும்’ என்கிறாள்.

    நோயும் பயலைமையும் – மனத்தின் துன்பமும் அத்தாலே வந்த பசலை நிறமும். தன் பக்கலிலே காண்கையாலே அவ்விரண்டும் நாரைக்கும் உண்டு என்றிருக்கிறாள். மீதூர – விஷம் ஏறியது போன்று உடம்பிலே பரக்க. எம்மே போல் – ‘இப்படித் துன்பப் படுகைக்கு நான் ஓருத்தியும் என்று இருந்தேன்; நீயும் என்னைப் போல் ஆவதே! துக்க பரிபவங்களைப் பொறுத்திருக்கையாலும். பற்றிற்று விடாதிருக்கிறபடியாலும், பசலை நிறத்தாலும், என்னைப் போன்று இராநின்றாய்,’ என்றபடி. நீயும் -விரகதாபத்தின் வியசனம் பொறுக்கமாட்டாத மென்மையையுடைய நீயும்.1‘பகைவர்களுடைய பலத்தை ஒழிப்பவரான ஸ்ரீராமபிரான், பாணங்களாலே இலங்கையை அழித்து என்னைப் அழைத்துச்செல்லின், செல்லும் அச்செயல் அவ்விராமபிரானுக்கு ஒத்ததாக இருக்கும்’ என்று கூறி இருந்த பிராட்டியைப் போன்று இருக்க மாட்டாமைக்கு ‘இருவரும் ஒத்தோமோ?’ என்பாள் ‘எம்மேபோல் நீயும்’ என்கிறாள்.

    திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே – ‘நோயும் பசலையும் இருந்தபடி கண்டேனுக்கு, நீயும் நான் அகப்பட்ட துறையிலே அகப்பட்டு நெஞ்சு பறியுண்டாயாகாதே! மைந்தனை மலராள் மணவாளனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்பாள். ‘திருமாலால்’ என்கிறாள். ‘தோற்புரை அன்றியே, மறுபாடுருவ 2வேர்ப்பற்றிலே நோவுபட்டாய் ஆகாதே! என்பாள், ‘நெஞ்சம் கோட்பட்டாயே’ என்கிறாள்.

ஸ்ரீ ய பதி மயர்வற மதி நலம் அருள .-

பிரிந்தார் இரங்குவது நெய்தல் ஆகையாலே -அகத்துறை –
கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல்
கடல் கரை சோலையை பற்ற
அங்கே ஆமிஷா அர்த்தமாக இறை தேடி உரு மீன் வரும் அளவும் ஓடு மீன் ஓட -தபஸ் போல் நிற்க –
உடம்பின் வெளுப்பை கண்டு அதுவும் தம்மைப் போலே பசலை வைவர்ந்யம்
பாவியேன் நீயும் நான் அகப்பட்ட விஷயத்தில் அகப்பட்டாயோ
வாயும் திரை உகளும் கானல் -அலை பெருகும் சமுத்ரம்
ஆயும் -தாயும் தூங்க
அமரர்களும் கூட தூங்க
நீ துஞ்சாயாதால்
நோயும் பயலுமையும் மீதொற எம்மைப் போலே திரு மாலால் நெஞ்சம் கோள் பட்டையோ
வாய்கை -கிட்டுகை– மலை போலே வருகிற திரைகள் அலைகள்
நாரை மேலே போனாலும் நினைத்தது கை புகும் வரை
பகவத் தான பரர் போல் -கொக்குக்கே ஒன்றே மது –
அலை கடல் நீர் குழம்ப அகடாட ஓடி -எம்பெருமானார் மத்ஸ்யம் அவதாரம் -திரு மங்கை ஆழ்வார் பாசுரம்-
வருகின்ற மீனை மறவாது இருக்கும் கொக்கு
நிரந்தரமாக வர்ஷா தாரைகள் -விழுந்தாலும் மலைகள் சலியா நிற்கின்றன
கலங்காமல் இருக்கும் த்யான யோகி போல் –
சர்வேஸ்வரனே ரஷிப்பான் என்று இருப்பவர்கள் – தாப த்ரயங்களால் கலங்க மாட்டார்கள்-
அது போல் நாரை இருக்க -வந்து கிட்டுகிற திரை
யாகம் பண்ணி -பவித்ரமும் முடிந்து தார்மிகர் போல் -கிராமணிகள்  பர ஹிம்சை
சூத்திர அனாதரித்து -வரும் மீன் நினைத்தது கை புகும் வரை அநாதரித்து
மடப்பை -பற்றிற்று விடாது ஒழிகை மடப்பம்  -கிராமணிகளை போல்
ஆயும் என் பிறப்பே பிடித்து உறங்காத தாயும் -உறங்கினாலும்
அமரர் -தங்கள் சத்தையே பிடித்து உறங்காத நித்ய சூரிகள்- உறங்கினாலும்

உண்டோ கண்கள் துஞ்சுதலோ
தாய் -முன்பு எல்லாம் இவளுக்கு சத்ருசனாய் –
பின்பு நாயகன் பிறிவாளோ
பதி சம்யோக சுலபம் வாக -த்ருஷ்ட்வா மே பிதா சிந்தார்ணவ கவலை கடலில் முழுகி கப்பல் கவிழ்ந்தது போல்
சீதை பிராட்டி 6 வயசு
ஒரு உபகனத்தில் கொண்டு போய் -கொடியை கொழு கொம்பில் சேர்க்க வில்லை என்றால் வாடுமே
பதி சம்யோக சுலபம் அர்த்தம் -என்னுடைய ஐயர் ஜனகன் நிலை
அப்படி இறே இவளை பெற்ற தாயாரும்
அநிமிஷராய் சதா தர்சனம் செய்யும் நித்யர்
நோய் -மானச துக்கம் அத்தாலே வந்த
பயலுமை -இவள் இடம் இருப்பதால் இவ்விரண்டும் இவளுக்கு
மீதூர விஷம் ஏறுவது போல பரக்க –
எம்மே போல் -ஒருத்தியுமே கிலசம் என்று இருந்தேன்
துக்க பரிபவங்களை-ஒத்து -இருப்பதாலும்
வர வரும் அளவும் வேறு யாருக்கும் பற்றிற்று விடாமல்
நீயும்
விசனம் பொறுக்க மாட்டாத மென்மையும் நாரைக்கும் உண்டே
தது  தது சத்ர்சம் பவேத் சொல்ல மாட்டாமைக்கு -பிராட்டி வார்த்தை அவன் வந்து ரஷிக்க வேண்டும்
இருக்க மாட்டாதே -தானே வேண்யுக்தம் தற்கொலை செய்ய பார்த்தது துக்கம் –
நானும் ஒரு மிதுனத்தில் அகப்பட்டேன் நீயும் திரு மாலால்
நான் அகப்பட்ட துறையில் நீயம்
நெஞ்சம்தோல் புரையே அன்று வேர் பற்றக நோவு பட்டோம்
உடலை கொடுத்தால் மீட்டு கொள்ளலாம் ஆத்மா வரை நோவு

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: