ஐந்தாந்திருவாய்மொழி – ‘அந்தாமத்தன்பு’
முன்னுரை
1‘கேஐந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது; முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’2என்றதனைப் போன்றது ஒன்றாம், மேல் ‘ஆடிஆடி’ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார்க்குப் பிறந்த துக்கம்;3அத்துக்கம் எல்லாம் ஆறும்படியாக, 4‘சேனை முதலியாரால் கொடுக்கப்பட்ட கைலாகை ஏற்றுக் கொள்ளாமலும்’ என இவ்வாறாகக் கூறியுள்ளபடியே, மிகுந்த விரைவோடே ஆயுதங்களையும் ஆபரணங்களையும் முறைபிறழத் தரித்துக் கொண்டு, மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப்புக்கு, யானையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து எடுத்துக்கொண்டு கரையிலே ஏறி, ‘திருவாழியாலே முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே, குழந்தையின் வாயில் முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது போன்று, பெரிய பிராட்டியாரும் தானுமாக, 5இரண்டுக்கும் நலிவு வாராமல் திருஆழியாலே விடுவித்துச் சாத்தியருளின திருப்பரியட்டத்தின் தலையைச் சுருட்டித் தன் வாயிலே வைத்து அவ்யானையின் புண் வாயை வேதுகொண்டு திருக்கையாலே குளிரத் தீண்டிக்கொண்டு நின்றாற்போலே, இவ்வாழ்வாரும் 6’வலங்கொள் புள் உயர்த்தாய்’என்று கூப்பிட்ட துக்க ஒலியானது செவிப்பட, ‘அழகிதாக நாம் உலகத்தைப் பாதுகாத்தோம்! நாம் ஆரானோம்!’ என்று, பிற்பட்டதனால் உண்டாகும் 1நாணத்தாலும் பயத்தாலும் கலங்கினவனாய், தன்னுடைய 2சொரூப ரூப குணங்கள் ஒப்பனை, திவ்ய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி, இவை எல்லாவற்றோடும் வந்து கலந்து அத்தாலே மகிழ்ந்தவனாய், தான் செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து முடித்தவனாய் இருக்கிற இருப்பை அனுபவித்து, அவ்வனுபவத்தால் உண்டான மகிழ்ச்சியின் மிகுதியால் தாம் பெற்ற பேற்றைப் பேசி அனுபவிக்கிறார்.
அந்தாமத்து அன்புசெய்துஎன் ஆவிசேர் அம்மானுக்கு
அந்தாமம் வாழ்முடிசங்கு ஆழிநூல் ஆரம்உள;
செந்தாம ரைத்தடங்கண்; செங்கனிவாய் செங்கமலம்;
செந்தா மரை3அடிகள்; செம்பொன் திருஉடம்பே..
பொ – ரை : ‘அழகிய பரமபதத்தில் உள்ள நித்தியசூரிகளிடத்தில் செய்யும் அன்பினை என்னிடத்திற்செய்து, என் உயிரோடு கலந்த அம்மானுக்கு, அழகிய மாலையானது வாழ்கிற திருமுடி, சங்கு, சக்கரம், பூணூல், முத்துமாலை முதலிய மாலைகள் ஆகிய இவை எல்லாம் உள்ளன; கண்கள் செந்தாமரைமலர்கள் மலர்ந்திருக்கின்ற தடாகம் போன்று உள்ளன; செந்நிறம் வாய்ந்த திருவாயானது, செங்கமலமாய் இருக்கின்றது; திருவடிகளும் செந்தாமரையாய் இருக்கின்றன; திருமேனி சிறந்த பொன்னாகவே இருக்கிறது’, என்பதாம்.
வி-கு : தாமம் – இடம்; இங்கே பரமபத்தினைக் குறித்தது. ‘தண் தாமம் செய்து’ என்றார் முன்னும் (1. 8 : 7.) ‘செய்து சேர்ந்த அம்மான்’ என்க, தாமம் – மாலை. சேர் அம்மான், வாழ்முடி – நிகழ்கால வினைத்தொகைகள்.
இத்திருவாய்மொழி, நாற்சீரடி நான்காய் வருதலின் தரவுகொச்சகக்கலிப்பா எனப்படும்.
ஈடு : 1‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே வந்து கலந்தான் என்கிறார்.
அம் தாமத்து அன்பு செய்து – 2அழகிய தாமத்திலே செய்யக் கூடிய சினேகத்தை என் பக்கலிலே செய்து. இனி, இதனை ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று, இடவாகு பெயராகக் கொண்டு, ‘பரம்பதத்திலுள்ளார் பகலிலே செய்யக்கூடிய சினேகத்தை என் பக்கலிலே செய்து’ என்று பொருள் கூறலுமாம். இதனால், 3‘ஒரு விபூதியில் உள்ளார் பக்கலிலே செய்யக் கூடிய சினேகத்தை என் ஒருவன் பக்கலிலே செய்தான்’ என்கிறார்; 4‘முற்றவும் நின்றனன்’ என்று, முன்னர்த் தாமே அருளிச்செய்தார் அன்றோ? என் – அவன் மேல் விழத் தாம் 5இறாய்த்தமை தோன்றுகிறது. இவர், முன் நிலையினை நினைந்து இறாய்நின்றார்; அதுவே காரணமாக அவன் மேல் விழாநின்றான். கமர் பிளந்து இடத்திலே நீர் பாய்ச்சுவாரைப் போன்று. 6‘உள்உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ என்கிற ஆவியிலே வந்து சேர்கின்றான் ஆதலின், ‘என் ஆவி’ என்கிறார். ‘விடாயர் மடுவிலே சேருமாறு போன்று வந்து சேர்கின்றான்’ என்பார், ‘சேர்’ என்கிறார். ‘இப்படி மேல் விழுகைக்குக் காரணம் என்?’ என்னில், ‘அம்மான் ஆகையாலே’ என்கிறார் மேல்: அம்மானுக்கு – நித்திய விபூதியில் உள்ளாரைப் போன்று 7லீலா விபூதியில் உள்ளார்க்கும் வந்து முகங்காட்ட வேண்டும் சம்பந்தத்தை உடையவனுக்கு.வகுத்த ஸ்வாமி ஆகையாலே ‘அம் தாமத்துஅன்பு செய்தான், என் ஆவிசேர்ந்தான்’ என்றபடி, 1இனி, இவரைப் பெற்ற பின்னரே அவன் சர்வேஸ்வரனானான் என்பார், ‘அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான்’ என்கிறார் எனலுமாம்.
அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள – இதற்கு, 1‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைபட்டபடியே, நித்தியசூரிகளோடே வந்து கலந்தான்,’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் அருளிச்செய்வர். ‘ஆயின், அவர்களை 2‘ஆழி நூல் ஆரம்’ என்று சொல்லுவது என்?’ என்னில், ஞானவான்களாய் இருக்கச்செய்தே, பாரதந்திரிய சித்திக்காகத் தங்களை இங்ஙனம் அமைத்துக்கொள்கிறார்கள் இத்தனையே. இனி, இதற்கு எம்பெருமானார், இவரோடு கலப்பதற்கு முன்பு இறைவனைப் போன்றே இவையும் ஒளி இழந்தவையாய்ச் சத்தை அற்ற பொருளுக்குச் சமமாய், இவரோடு கலந்த பின்பு ஒளிப்பொருளாகிச் சத்தை பெற்ற படையைச் சொல்லுகிறது’ என்று பொருள் அருளிச்செய்வர். ‘ஆயின், இறைவன் ஒளியிழந்தால் இவையும் ஒளியிழக்க வேண்டுமோ?’ எனின், கற்பகத்தரு வாடினால் அதில் பூவும் தளிரும் வாடுவன அன்றோ? அம் தாமம் வாழ் முடி – அழகிய மாலையானது முடியிலே சூடப்பட்டதனால் வாழத் தொடங்கிற்று. இனி, ‘வாண்முடி’ என்பது பாடமாயின், ‘எல்லை அற்ற ஒளி உருவமான முடி’ என்று பொருள் கூறுக. அம் தாமம் சங்கு – ஒளி உருவமான திருஆழி. நூல் – திருப்பூணூல். ஆரம் – திரு ஆரம். உள – உள்ளவைகள் ஆயின. இவற்றைக் கூறியது நித்தியசூரிகட்கு உபலக்ஷணம். இனி, ‘நித்தியரான இவர்கள் 3உளராகையாவது என்?’ என்னில்,4‘அந்த ஸ்ரீமந்நாராயணன் தனியராக மகிழ்ச்சி அடைந்திலர்’ என்கிறபடியே,
இவரோடு கலப்பதற்கு முன்னர் அந்த மோக்ஷ உலகமும் இல்லை யாய்த் தோன்றுகையாலே என்க.1
செந்தாமரைத்தடம் கண் – துன்பமெல்லாம் தீர இவரைப் பார்த்துக்கொண்டு நிற்கிற நிலை. இவரோடே கலந்த பின்பு ஆயிற்றுத் திருக்கண்கள் செவ்வி பெற்றதும், மலர்ச்சி பெற்றதும். 2‘ஒரே தன்மையையுடையனவற்றுக்கு எல்லாம் இப்படி ஒரு விகாரம் பிறக்கின்றதே! ஆயின், இது, 3தன் சொரூபத்துக்கு ஒத்த திவ்விய மங்கள விக்கிரகத்தை உடையவன்’ என்ற புராணவாக்கியத்தோடு முரணாகாதோ?’ எனின், அங்குக் கர்மம் அடியாக வரும் விகாரம் இல்லை என்கிற இத்தனையேயாம். செம் கனி வாய் செம் கமலம் – நூற்றுக் கணக்கான உபசார வார்த்தைகளைச் சொல்லுகிற திரு அதரம் இருக்கிறபடி. சிவந்து கனிந்த அதரமானது, சிவந்த கமலம் போலே இராநின்றது. செந்தாமரை அடிகள் – நோக்குக்கும் புன்முறுவலுக்கும் தோற்று விழும் திருவடிகள். செம்பொன் திரு உடம்பே – திருவடிகளிலே விழுந்து அனுபவிக்கும் திருமேனி; இவரோடு கலந்த பின்பு திருமேனியில் பிறந்த புகர்தான் 4‘ஓட வைத்த பொன்னின் நிறத்தையுடையவன் இறைவன்’ என்னும்படி ஆயிற்று.
ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘அந்தாமம் வாழ்முடி சங்காழி நூல் ஆரமுளவாய்க்
கொண்டு, அந்தாமத்து அன்பு செய்து என் ஆவிசேர் அம்மான்’ என்ற சொற்களைக்
கூட்டியும், எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி
சேர்ந்த பின்னர், அந்தாமம் வாழ்முடி சங்காழி நூலாரமுளவாய், அம்மானும்
ஆனவனுக்குச் செந்தாமரைத்தடம் கண்’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள் கொள்க.
வாட்டமில்வாமணன் -என்றதால் கலந்தான் அறிகிறோம்
கல்வியால் வந்த ஆனந்தம் -அடியார்களோடு கலந்தான் -ஆழ்வார் ஆசைப் பட்ட படியே
கஜேந்திரன் –தரையில் பலம் -முதலை ஆகர்ஷதே ஜலம் -போன்ற விசனம் ஆழ்வாருக்க்ம்
ஆறும் படியாக வந்தான் –அவசரமாக -ஆயுதம் ஆபரணம் அகரமாக பெரிய த்வரை உடன் –
சமுபதி -சேனை முதலியார் கைலாகு கொடுக்க -மனிபாதுகை சாதிகக் கொள்ளாமல் -கிமிகுலம் கிம் ஜித
அந்த புரம் துக்க -வாகனம் பர்சிஷ்கரியம் -ஆரோகத -துடிப்பு -பகவத த்வரைக்கு நமஸ்காரம் -பட்டர் –
வேகம் போக வில்லை -மந்தம் -உம்காரம் -சப்தித்தி ஆச்பாலனம் -அடித்து – அங்க்ரி பிரக்ரிதி -மூன்றும் செய்து விரட்டி –
காந்தி தசை -அது போல் -ஓடி வந்தான் -அரை குலைய தலை குலைய -ஓடி வந்தான் -அரையில் வஸ்த்ரம் -குடுமி அவிளும்படி –
உள்ளே போய் புக்கு ஆனை யை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து கொண்டு வந்து -கரையிலே ஏறி –
சென்று நின்று ஆழி தொட்டானை -பிரஜையையின் வாயில் முலை கொடுப்பது போல் -இரண்டுக்கும் நலிவி வாராத படி –
வாய்க்குள் கால் எவ்வளவு அறிந்து பின்பு -கிரந்தியை சிகிசிப்பிக்குமா போலே -குழந்த்தை கட்டி அமுக்குவது போல்
பெரிய பிராட்டியாரும் தானுமாக -இரண்டுக்கும் நலிவு வாராமே –திரு ஆளியாலே விடுவித்து -முதலை வாயில் -சம்சாரத்தில் இருந்து -இரண்டும்
சாத்தி அருளின திரு பரியவட்டம்தலையை சுருட்டி —திரு பவளத்தில் வைத்து ஊதி –திரு புண் வாயை – வெது கொண்டு
திருக் கையாலே ஸ்பர்சித்து சிகிச்சை –
சமாஸ்ரையான வத்சலன் -ஆழ்வான் அருளி செய்த வசனம் -பாதம் சிசிருசை –
அழகியதான ஜகத் வியாபாரம் பண்ணினோம் -லஜ்ஜை உடன் -யார் ஆனோம் -பிறபாட்டுக்கு லஜ்ஜனாய் –
லஜ்ஜா பயங்களுடன் -கலங்கி -சேர்த்தி உடன் -ஸ்வரூப ரூபா குணங்கள் ஒப்பனை திவ்ய ஆயுதங்கள்
கலந்து கிருத கிருத்யனாய் -அப்படி பட்ட அவனுக்கு வந்த சந்தோஷம் ஹர்ஷா பிரகர்ஷம் கண்டு
தான் பெற்ற பேற்றை பேசி அனுபவிக்கிறார்
அடியார்கள் குழாம் களை –உடன்கூடுவது என்று கொலோ -இவர் ஆசைப் பட்ட படியே -அவன் வந்தான் –
இரண்டு நிர்வாகம் –
அம் தாமத்து அன்பு செய்து -அழகிய இருப்பிடம் -அங்கு காட்டும் பிரிதியை ஆழ்வார் இடம் காட்டி
ஆவி சேர் அம்மான் -அம் தாம வாள் முடி -சங்கு ஆழி நூல் ஹாரம் -உள்ளன –
செந்தாமரை தசம் கண் –வாய் -அடிகள் -செம் பொன் திரு உடம்பு
அழகிய தாமதத்தில் -சிநேகம் ஆழ்வார் இடம்
தாமம் ஸ்தானமாய் -மாலையாய் -மஞ்சா க்ரோசந்தி போல்நித்ய முக்தர் அனைவர் பக்கல் சிநேகம் -இவர் இடம் காட்டி
ஆகு பெயர் -விபூதியில் உள்ளார் பக்கம் காட்டும் சிநேகம் கிடீர் தம் ஒருவர் பக்கல்
பற்றிலன் ஈசன்மும் முற்றவும் நின்றனன் -பட்டர் நிர்வாகம் அங்கெ
என் ஆவி -அதுவும் -என்னுடைய -நீசன்
தான் இறாய்தமை அவன்மேல் விழ -தோற்றுகிறது
பூர்வ வ்ருத்தாந்தம் அனுசந்தித்து இறாயா நின்றார்
அதுவே ஹெதுவாகா -மேல் விழ –
கமர் பிளந்த இடத்தில் நீர் பாய்ச்சுவர் போல்
உள்ளுள் ஆவி உலர்ந்து இருந்ததே
அந்த ஆவி சேர் அம்மான் –
சேர் -சேர்ந்த வான் அவன் -ஆசை போலே அவனுக்கு விடாயர் மடிவில் சேர்ந்தது போல்
ஆழ்வார் கிடைப்பாரா -வெல்ல குளத்திலே இருவரும் ஆனோம் பிள்ளை பெருமாள் ஐயங்கார் பாசுரம்
அம்மானுக்கு -வகுத்த சுவாமி ஆகையால் மேல் விழுந்தான்
இரண்டு விபூதிக்கும்முகம் காட்ட பிராப்தி உள்ள அம்மான்
சர்வ ஸ்மாத் பரன் -இவரை பெற்ற பின்பு ஆயத்து அவன் சர்வேஸ்வரன் ஆனான் –
கலக்கும் பொழுது -அடியார் குழாம் -ஆசை பட்ட படி நித்ய சூரிகள் உடன் வந்தான்
திரு மாலை ஆண்டான் -நூல் ஹாரம் -சேர்த்து சொல்லலாமா -அடியார்கள் –
சின் மாராக இருந்தாலும் பாரதந்த்ராயம் -ருசியால் மாற்றி கொள்வார்கள்
-சத்வ பிரசுரம் கொண்ட வை தான் கோபுரம் மண்டபம் அனைத்தும் -கைங்கர்யம் செய்ய நூலாக ஹாரமாக அமைத்து கொள்வார்
நாதனை நரசிங்கனை –பருகும் நீரும் உடுக்கும் கூரையும் பாபம் செய்தன -அபிமான ஜீவன் உண்டே அதற்கும் –
எம்பெருமானார் -நிர்வாகம் -வாள் ஒளி-வாழுகிற முடி -வாள் முடி -ஒளி உடைய வாழுகின்ற
அவையும் ஒளி குன்றி இருக்க ஆழ்வார் உடன் சம்ச்லேஷித்த பின்பு
அவனோடு ஒக்க இவையும் ஒவ்ஜ்வலமாய் -வாட்டமாக -ஆசாத் சமம்
இப்பொழுது உஜ்ஜ்வலமாய் சத்தும் பெற்றனவாம் முடி சூடி வாழத தொடங்கிற்றாம்
கல்பகம் வாடினால் தளிரும் பூவும் வாடுமே
தேஜோ ரூபமான -அம் தாம –
நித்ய சூரிகள் அனைவருக்கும் உப லஷணம்
உள -நித்யர் உளராவது எப்பொழுது – -அவனுக்கு வாட்டம் தீந்த பின்பு தான் உள
ஜனஸ்தானம் -பிராட்டி -பர்த்தாரம் பரிஷ்ஜச்வஜே -பிராட்டி –சத்ரு ஹந்தாரம் ராமம் த்ருஷ்ட்வா –
பபுவா ஹ்ருஷ்டா வைதேஹி -பபுவா ஆனாள் இருந்தாள் -தான் உளள் ஆனாள் -வீர வாசி அறியும் குலம்-விதேக ராஜ புத்ரி –
விபீஷணன் -கிருத கிருத்யா – சதா ராம – முன்பு ராமராக இல்லை சதா ஏவ ராம -இத பூர்வம் அராம -பிரமமோத-
ச ஏகா ந ரமேத–ஏகாக்கி நாராயண ஆஸீத் ந பரமா -ந நஷத்ரணி –போல்
துயாஸ ரக நந்தன -பரத சத்ருக்னன் கூட சேர்ந்த பொழுது தான்
குகன் -சேர்ந்த பின்பு தாள் இளைய பெருமாள் சேர்த்தி உளது போல் ஆனதாம்
தேஜஸ் கரமாக அவை வந்தன -ஆள வந்தார் -இந்த அர்த்தம் சொல்லி
ஆர்த்தி தீர கடாஷித்த செம் தாமரை தடம் கண்
செவ்வி பெற்று விகாசம் பெற்றன –
சதா ஏக ரூப ரூபாய -மாறு பாடு விகாரம் -கர்மமடியாக வருகிற விகாரம் இல்லை -திரு உள்ளம்
செம் கனி வாய் செங்கமலம் -சாடு சதங்கள்சொல்லுகிற திரு அதரம் –
செந்தாமரை அடிக்கள் -ஓசை இன்பத்துக்காக இரட்டிக்கும் –
அமலன் ஆதிப்பிரான் -திருத்தி காட்டி -சுவாமி
சங்கம் காலம் -சங்கக் காலம் இல்லை சங்க காலம் -சங்கப்பலகை –
பதம் சமஸ்க்ர்தம் ஒரு பதம் தமிழ் இரட்டிப்பு கூடாது –
சிருக்கால் சிறுகால் ஒருமா தெய்வாம் மாத் தெய்வம்
சிறு சோறும் மணலும் -பல காட்டி -நிறைய இடங்கள் -இப்படியும் அப்படியும் வரும்
நோக்கு ஸ்மிதம் -கண் அதரம் சொல்லி -தோற்று விழ திருவடிகள் –
செம் பொன் திரு உடம்பு -ருக்மாபம் -தங்கம் போல் -ஆகர்ஷகம் பிரகாசமாய் –
ஹிரண்ய மஸ்ரு-மீசை -ஹிரண்ய கேச – -சர்வ ஏக ஸ்வர்ண்ய-
புகார் உண்டாய்த்தாம் –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.