Archive for September, 2012

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-10-6–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

September 28, 2012

நீயும் நானும்இந் நேர்நிற்கில் மேல்மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே! சொன்னேன்
தாயுந் தந்தையு மாய்இவ் வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே.

பொ-ரை : தாய்தந்தையர்களைப் போன்று பரிவுள்ளவனாய் இவ்வுலகத்தில் வந்து அவதரிக்கின்றவனாய் நீலமணி போன்ற நிறத்தையுடையவனாய் உள்ள என் தமப்பன், வணங்கு என்று கூறுதற்குத் தகுதியாகவுள்ள நீயும் வணங்கச்சொல்லுகிற நானும் ஓர் எண்தானும் இன்றி நிற்றலாகிய இம்முறையில் நின்றால,் மேல் வருகின்ற காலத்தில் ஒரு வித நோயினையும் நம்மைச் சாரச் செய்யான்; நெஞ்சமே, சொன்னேன்.

வி-கு : ‘நாம் இந்நேர் நிற்குல் எந்தைமேல் ஓர் நோயும் சார் கொடான்,’ எனக் கூட்டி முடிக்க.

ஈடு : ஆறாம் பாட்டு. 2‘இப்படிச் சுலபன் ஆனவன் நம்மை விடான் அன்றே?’ என்ன, ‘நம் தாழ்மையை நினைத்து அகலா தொழியில் நம்மை ஒரு நாளும் விடான்’ என்று திருவுள்ளத்துக்கு அருளிச்செய்கிறார்.

நீயும் நானும் – அந்தப் புள்ளின்பின் போன நீயும், உன்னைத் துணையாகவுடைய நானும். இந்நேர் நிற்கில் – பலத்தை அனுபவம் பண்ண இருக்கிற நாம் இப்படி விலக்காதே இருக்கில். இனி, இதற்கு 3‘நான் ஒருவர்க்கும் உரியவன் அல்லேன்’ என்னும் மாறுபட்ட எண்ணம் இன்றிக்கே ஒழியில் என்று கூறலுமாம். மேல்

மற்று ஓர் நோயும் சார்கொடான் – 1நிஷித்த அநுஷ்டானம் பண்ணி அகல விடுதல், தன்னை ஒழியப் பிரயோஜனத்தைக் கொண்டு அகல விடுதல், அயோக்கியதாநுசந்தானம்பண்ணி அகல விடுதல், வேறொரு சாதனத்தை மேற்கொள்ளச் செய்து அகலவிடுதல், முன்பு பண்ணின பாவத்தின் பலத்தை அனுபவம் பண்ண அகல விடுதல் செய்ய விட்டுக்கொடான்.

நெஞ்சமே சொன்னேன் – 2‘திருக்கோட்டியூர் நம்பியைப் போலே, பகவத் விஷயம் பிறர் அறியலாகாது என்று போலேகாணும்’ இவர் இருப்பது. உபதேசித்துவிட்டு 3‘இந்தக் கீதையின் பொருள் தவமில்லாதவனுக்கு ஒருபோதும் சொல்லத் தக்கது அன்று,’ என்றவனைப் போன்று படுகிறார். ‘ஏன்? முதல் முன்னம் அதிகாரி சோதனை செய்து உபதேசித்தால் ஆகாதோ?’ எனின், திரௌபதி குழல் விரித்துக் கிடக்கிற படியைப் பார்த்து, செய்வது காணாமல் சொல்லிக்கொண்டு நின்றான்; பின்னர், பொருளின் கனத்தைப் பார்த்து, ‘கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டோம்’ என்று 4‘பதண் பதண்’ என்றான் என்க. இனி, இதற்கு நெஞ்சே, சீரிய பொருளைச் சொன்னேன்; ஆதலால், உபதேசத்திற் குறை இல்லை; இனி, இதனை நினையாதார் இழக்குமித்தனை என்கிறார் எனலுமாம், இனி, தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் மணிவண்ணனாய் எந்தையான ஈசன், நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்று ஓர் நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன், 5‘சத்யம் சத்யம்’ என்கிறபடியே, இது மெய் என்கிறார் என்றலும் ஒன்று.

  தாயும் தந்தையும் ஆய் – தாய் தந்தையர்களைப்போன்று அன்புள்ளவனாய். இவ்வுலகினில் வாயும் ஈசன் – அவர்கள் அளவு அன்றிக்கே, குழந்தை கிணற்றில் விழுந்தால் ஒக்கக்குதிக்கும் தாயைப் போலே, சம்சாரத்திலே ஒக்க விழுந்து எடுக்குமவன். ‘அடையத்தக்கவன் ஆகையாலே ‘இங்கு வந்து அவதரிக்கிறான்’ என்பார். ‘ஈசன்’ என்கிறார். இனி, ‘இங்கு வந்து அவதரித்து ஈர் அரசு தவிர்க்கையாலே ‘ஈசன்’ ஆனான்’ எனலுமாம். மணிவண்ணன் எந்தையே-தன் வடிவழகைக் காட்டி இவரை முறையிலே நிறுத்தினான். சிற்றின்பங்களில் விருப்புள்ளவர் ஆகாதபடி இவரை மீட்டு நன்னெறியில் நிறுத்துவதற்கு இறைவனுடைய வடிவழகு காரணமாய் இருந்ததாதலின், அதனை ‘மணிவண்ணன்’ என்ற சொல்லாற் குறித்தும், தன் சேஷித்துவத்தைக் காட்டி இவருடைய சேஷத்துவத்தை நிலை நிறுத்தினவன் ஆதலின், அவனை‘எந்தையே’ என்ற சொல்லாற்குறித்தும் தெரிவிக்கிறார்.

சுலபன் விடான் இறே
நம் அயோக்யதை அனுசந்தித்து அகலா விடில் விடான்
துஞ்சும் போதும் விடாதே தொடர் கண்டாய் முன் சொல்லியும்
நீயும்நானும் இந்த நேரான பாதை-விலக்காமை
ஒரு நோயும் -நைச்ய அனுசந்தானம்
திரு மேனி அழகு -சம்பந்தம் ஸ்வாமி இதனால் விடான்
அப்புள்ளின் பின் போன நீயும் -முன்புற்ற நெஞ்சும் -தனி நெஞ்சம் -நீயும் –
நானும் உன்னை பரிகாரமாக கொண்ட நானும்
பல அனுபவம் செய்ய நாம்– ந நமேயம் –பிரதி கூல்யம் இன்றி இருந்தால்  போதுமே
மேல் மற்று ஓர் நோயும் சார் கொடான்
விட்டு வைக்க மாட்டான்
நோய் -பல வகை
-நிஷித்த அனுஷ்டானம் பாகவத அபசாரம் போல்வன
நிஷிதம் தான் நாலு வகை பட்டு இருக்கும் –
தன்னை ஒழிய பிரயோஜனந்தம் கொண்டு அகல விடுதல்-
அல் வழக்கு போலே
அயோக்ய அனுசந்தானம் கொடு அகல விடுதல்
வேறு ஒரு சாதனா பரிக்ரகம் செய்து அகல விடுதல்
முன்பு பண்ணின பாப பலம் மூலம் அகல விடுதல் –
நெஞ்சே –
நாம் இருப்பது பிராரப்த கர்ம பலம் தான்– பண்ணுவது இல்லை எப்படி சொல்லலாம் –
ஆர்த்த பிரபன்னனுக்கு அதிலும்  விடுவிக்க –
உடனே மோஷம் யாரும் வர மாட்டார்களே -மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
நெஞ்சமே சொன்னேன்
பிறர் அறியலாகாது திரு கோஷ்டியூர் நம்பி போல்
அதிகாரம் இல்லாதவர் அறிய கூடாது –
நாலாறும் அறியும் இடங்களிலும் திரு கோஷ்டியூர் நம்பி
வைரம் தொங்கி விட்டு யாரும் பார்க்க விடமாட்டார்களே
விஷய சீர்மை குறித்து -18 தடவை அதிகாரி சோதித்து –
எம்பெருமானார் யாருக்கும் கிடைக்காமால் அதிகாரி துர்லப்யம் குறித்து வெளி இட்டார்
ஏகாந்தமாக அனுபவித்து
திரு கோஷ்டியூர் நம்பி பிரபாவம் யாரும் அறியாமல் அங்கெ -திரு குருகை பிரான் என்ற பெயராம்
நமஸ்காரம் செய்து விழுந்து எழுந்து இருந்து 12 4 நாச்சியார் திரு மொழி வியாக்யானம்
இதம் தி நாதபச்க்யாயா -கண்ணன் துடித்தான்
சொன்னேன் -படுகிறார்
தர்வ்பதி  குழல் விரித்து இருப்பதை கண்டுசொல்லி அல்லேல் விடேன் என்று சொன்னானே
கைப்பட்ட மாணிக்கத்தை கடலில் போட்டால் போல பதன் பதன் -துடித்தான் –
துர்மே முட்டாளே கண்ணனே பின்பு சொன்னான் அர்ஜுனனை
ஓர் எண் தானும் வந்து கலப்பான் என்பதைசொன்னேனே -அடித்து கொள்கிறார் –
பிறர் அறியலாகாது-திரு கோஷ்டியூர் கீதாசார்யன் போலே -சொல்லி விட்டு துடிக்கிறார்
உய்யக்கொண்டாருக்கு உடையவர் அருளிய வார்த்தை போல் -பிரபத்தி -ஈஸ்வர கடாஷம் இன்றி –
முமுஷுபடி சூத்திரம் -பக்தி யோக நிஷ்டர் ஆகையாலே
வித்வான் என்பதால் அர்த்தத்துக்கு இசைந்தீர் பாஹ்ய ஹீனர் ஆனதால் இழந்தீர்
தாயும் தந்தை போல் பரிவனாய்
அவ்வளவும்  இன்றிக்கே –
இவ்விலகினில் – வாயும் ஈசன் -ஒக்க விழுந்து -வாயும் ஈசன் விபவ அவதாரம்
ஹேது என் என்னில் ஈசன் பிராப்தன்
இங்கு வந்து அவதரித்து ஈரசு தவிர்க்கையால்
ஒரு உறையில் இரண்டு வாள்  கூடாதே

 

நானே எஜமானன் நீ இல்லை
மணி வண்ணன் வடிவு அழகை காட்டு விஷயாந்தர ப்ராவண்யம் தவிர்ந்து
எந்தை சேஷி -சேஷ பாவம்
தாயும்தந்தையுமாய்
சத்யம் சத்யம் வியாசர்  வார்த்தை போல் வேதம் -கேசவன்-

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-10-5–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

September 28, 2012

கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்றுஓர்
எண்தானும் இன்றி யேவந்து இயலுமாறு
உண்டானை உலகுஏ ழும்ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே.

பொ-ரை : மனமே, காரியங்கள் வந்து பலிக்குங்காலத்தில் நமது நினைவு சிறிதும் இல்லாதிருப்பினும், தாமாகவே பலித்ததனை இப்பொழுது பார்த்தாய் அன்றோ? பெருவெள்ளத்தால் அழியப் புக்க காலத்தில் அழியாதவாறு ஏழுலகங்களையும் உண்டு காப்பாற்றியவனை’ ஏழுலகங்களையும் ஒப்பற்ற மூன்று அடிகளாலே அளந்து தனக்கு உரித்தாக்கிக்கொண்டவனை நீயும் கண்டு கொண்டாய்.

வி-கு : வாய்க்கின்று-வாய்க்குமிடத்து. இயலுதல் – பலித்தல், ‘உலகேழும்’ என்பதனைத் தாப்பிசைப் பொருள்கோளாக முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் கொள்க. ‘ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும், எனையாளும் ஈசன் செயல்,’ என்பது ஈண்டு ஒப்பு நோக்குக.

ஈடு : ஐந்தாம் பாட்டு. மேல், ‘எண்ணிலும் வரும்’ என்ற எண்தானும் மிகையாம்படி கண்டாயே!’ என்று அவன் படியை நெஞ்சுக்கு 1மூதலிக்கிறார்.

கண்டாயே நெஞ்சே-நான் சொன்னபடியே பலத்தோடே நிறைவு பெற்றபடியைக் கண்டாயே. நெஞ்சே – ஞானம் செல்லுதற்கு வழியாகவுள்ள உனக்குச் சொல்ல வேண்டா அன்றே? கருமங்கள் வாய்க்கின்று – காரியங்கள் பலிக்குமிடத்தில். ஓர் எண்தானும் இன்றியே வந்து இயலுமாறு கண்டாயே – ‘எண்ணிலும் வரும்’ என்றுதான் மிகையாம்படி வந்து பலித்துக்கொண்டு நிற்கிறபடி கண்டாயே. இதனால், பகவானுடைய பிரபாவம் சொல்லுவார் சொல்லும் அளவு அன்றுகாண் என்பது பெறுதும். இத்தலையில் எண் இன்றிக்கே இருக்கப் பலிக்கும் என்னுமிடத்துக்கு உதாரணம் காட்டுகிறார் மேல் : உலகு ஏழும் உண்டானை – பிரளயம் கொண்ட உலகத்துக்கு ‘இறைவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்குவான்’ என்னும் நினைவு உண்டோ? உலகு ஏழும் ஓர் மூன்று அடி கொண்டானை – இறைவன் உலகத்தை முழுதும் அளக்கிற போது ‘நம் தலையிலே திருவடியை வைக்கப்புகாநின்றான்’ என்னும் நினைவு உண்டோ? இதற்கு உதாரணம் தேடிப் போக வேண்டுமோ ஒன்று?கண்டுகொண்டனை நீயும் – விலக்குகைக்குப் பரிகாரமுடைய நீயும் அன்றோ கண்டுகொண்டாய்? பிரளயத்தில் அகப்பட்ட உலகத்திற்குத் தடுப்பதற்கு வழி இல்லை; உலகத்தை அளக்கிற காலத்தில் அறிந்து தடுப்பதற்கு அங்குச் சமயம் இல்லை; அறிந்தால் விலக்கி இருப்பார்கள் அன்றே? 1அசங்கிதமாக வருகையாலே பேசாதிருந்தார்கள் இத்தனை, அவ்வாறு அன்றி விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார், ‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.

அடுத்து எண் தானும் மிகையாம் படி–அதுவும் மிகை ஆனது கண்டாயே நெஞ்சுக்கு மூதலிக்கிறார் இதில் –

கருமங்கள் வாய்க்கின்ற காலத்திலேயே பலிக்கும் இடத்தில் -என்னவும் வேண்டாத படி
வந்த இடம் உண்டோ
பிரளய காலத்தில்
அளந்த பொழுதும்
இரண்டு பொழுதும் ரஷித்தானே யாரும் எண்ணாமல்
நீயே பார்த்தாயே
பலத்துடன் வ்யாப்தம் -சேருவதே பலம்
ஞான பிரசார த்வாரம் நெஞ்சு உனக்கு நான் சொல்ல வேண்டாமே –
நெஞ்சு சககாரமின்றி பார்த்தது பார்த்தது போல் இல்லை -உன் மூலம் தான் பார்க்கிறேன்
கார்யங்கள் பலிக்கும் இடத்தில்
வாய்க்கின்று -கில்லேன் கின்று -போல சப்தங்கள் ஆழ்வார் பிரயோகம்
வாய்க்கின்ற காலத்தில்
மலையாள பாஷை வாசனை –
வாய்க்கின்ற இன்று சுருங்கி
ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
பகவத் பிரபாவம் சொல்லும் அளவு இல்லை காண்
சொல்லுவார் சொல்லுமளவு மட்டும் இல்லை
பேசுவர் அவ்வளவுதான் -அவ்வளவாக ஆக்கிக் கொள்வான்

 

சர்வேஸ்வர ஈஸ்வர கிருஷ்ணா எதி பண்டிதர் -சொல்பம் தான் உக்தம்
ஸ்துதி கொஞ்சம் தான் சக்திக்கு தக்க –
சொவ்லாப்யத்தில்   காட்டுகிறார் இங்கே –
பலிக்கும் இடத்துக்கு உதாரணம் காட்டுகிறார் அபதானங்கள் மேல்
யாரும் நினைக்காமல் பிரார்த்திக்காமல் -பிரளயம் -காலத்தில்
வயற்றில் வைத்து நோக்கி
உலகு ஏழும் இரண்டு இடத்திலும் சேர்த்து கொண்டு அளந்ததும்-
நம் தலை மேல் வைக்க பிரார்த்திக்காமல்-
அபேஷா நிரபேஷமாக– ஆபத்தே செப்பேடாக
மகா பலியால் வந்த இடரை போக்க
தேவர்கள் பிரார்த்திக்க –இந்திரன் இழந்த ராஜ்ஜியம் தான் கேட்டான்
அந்த வ்யாஜ்யத்தில் தானே திருவடி வைத்தான்
கண்டு கொண்டனை
பணம் கிணறு எதற்கு தூறு எடுக்க வேண்டும்
விலக்குகைக்கு பரிகிரகம் பிரகிருதி சம்பந்தம்
தடுக்க கரண களேபரங்கள் இல்லையே பிரளய ஆபத்தில்
இந்திரியங்களும் சரீரமும் இல்லையே -சூஷ்ம நிலை
அந்த விலக்காமை ஒன்றால் –
உலகு அளந்த -அவசரம் இடம் இல்லை -அவசரமாக அளந்தான் –
திடீர் என்று வளர்ந்து தலையில் வைக்க அசந்கிதமாக திடீர் என்று வந்ததால் –
த்ருஷ்டாந்தமிரண்டிலும் பிரதி கூலிகைக்கு பரிகரம் இல்லை
விலக்குகைக்கு பரிகாரம் உள்ள நெஞ்சே நீயம் கண்டு கொண்டாயே –
நீயே போரும் -வேறு திருஷ்டாந்தம் வேண்டாமே –
அங்கு அத்வேஷம் உண்டே –
உனக்கு அனுக்ரகம் செய்தானே மதி நலம் மயர்வற அருளி –

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-10-4–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

September 27, 2012

நெஞ்ச மே! நல்லை நல்லைஉன் னைப்பெற்றால்
என்செய் யோம்இனி என்ன குறைவினம்
மைந்த னைமல ராள்மண வாளனைத்
துஞ்சும் போதும்வி டாது தொடர்கண்டாய்.

பொ-ரை : மனமே, நல்ல தன்மையையுடையை, நல்ல தன்மையையுடையை! உன்னைத் துணையாகப் பெற்றால் எந்தக் காரியத்தைத்தான் செய்யமாட்டோம்? இனிமேல் என்ன குறைவினையுடையோம்; எப்பொழுதும் மாறாத இளமைப்பருவத்தையுடையவனை திருமகள் கணவனை நான் பிரிகின்ற காலத்தும் நீ விடாது அவனைத் தொடர்வாயாக.

வி-கு : இத்திருப்பாசுரம் இன எதுகையாய் அமைந்தது. நல்லை நல்லை – அடுக்குத்தொடர் ; மகிழ்வின்கண் வந்தது. ‘குறை என்பது முடிக்கப்படுங்கால் முடிக்கப்படும் பொருள்,’ என்பர் புறநானூற்று உரையாசிரியர். ‘குறை – இன்றியமையாப்பொருள்; அது, ‘பயக்குறையில்லைத் தாம் வாழுநாளே’ என்பதனாலும் அறிக,’ என்பர் பரிமேலழகர் (குறள், 612). துஞ்சுதல் – பிரிதல்.

ஈடு : நான்காம் பாட்டு. 1தாம் கூறிய போதே மேல் விழுந்து தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடி, ‘என் தாழ்மையை நினைந்து நான் பிரிகின்ற காலத்திலும் நீ’ விடாதே கொள் என்கிறார்.

நெஞ்சமே நல்லை நல்லை – சொன்ன காரியத்தைச் சடக்கெனச் செய்த நல்ல புத்திரர்களை மடியிலே வைத்துக்கொண்டாடும் தாய் தந்தையர்களைப் போன்று, இவரும் நெஞ்சை 2மார்விலே அணைத்துக் கொண்டாடுகிறார்.3‘என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவரிடை நீர், இன்னம் சொல்லீரோ?’ என்கிறபடியே, இவர்தாம் இறைவன் பக்கல் தூது விடுமாறு போன்று, நெஞ்சாகிய தனக்கும் தூது விடும்படி இவர்தம்மை விட்டு இறைவன் பக்கலிலே நிற்க வல்ல நெஞ்சு ஆகையாலே ‘நல்லை நல்லை’ என அடுக்குத் தொடரால் கூறுகின்றார், கேட்ட நெஞ்சு, ‘என்னை இப்படிக் கொண்டாடுதல் என்?’ என்ன, ‘உன்னைப் பெற்றால் என் செய்யோம்? நீ என்னோடு ஒரு மிடறான பின்பு, நமக்குச் செய்ய முடியாதது உண்டோ?’ என்றபடி. ‘ஆயின், பலம் கைப்புகுந்ததோ?’ எனின், ‘பலன் தருகைக்கு இறைவன் உளன்; விலக்காமைக்கு நீ உண்டு;இனிச் செய்ய முடியாதது உண்டோ? இனி என்ன குறைவினம் – 1‘உன்னைப் பெற்றால் என் செய்யோம்?’ என்று சாத்தியாமிசம் உண்டாகச் சொன்ன இடம் தப்பச் சொன்னோம்; உன் பக்கல் விலக்காமையே பற்றாசாக அவன் காரியம் செய்வானாக இருந்தால் சாத்தியாமிசந்தான் உண்டோ? அதாவது, அவன் உபாயம் நித்தியமாய் ஒருவருடைய விருப்பத்தை எதிர் பாராததாய் இருக்குமாயின், நாம் செய்யக்கூடிய காரியந்தான் யாது?’ என்றபடியாம்.

‘அங்ஙனம் ஆயின், நான் செய்ய வேண்டுவது யாது?’ என்ன, ‘செய்ய வேண்டுவது உண்டு,’ என்கிறார்; தான் அவனைக் கிட்டும் போது, 2‘வளவேழ் உலகு’ தலை எடுத்து அகலப் பார்ப்பது ஒன்று உண்டு; நீ அப்பொழுது அவனை விடாதேகொள்’ என்கிறார்; மைந்தனை – நித்திய யௌவன சுபாவனை. 3கெடுவாய், இவ்விஷயத்தைச் சிலரால் விடப்போமோ? மலராள் மணவாளனை – பெரிய பிராட்டியார் 4‘அகலகில்லேன் இறையும்’ என்னும் விஷயத்தையன்றோ நான் உன்னை ‘விடாதே கொள்’ என்கிறேன்? துஞ்சும் போதும்-தாழ்ந்தவன் என்று அகலும் போதும். ‘துஞ்சுதல்’ என்பது, பிரிதல் என்னும் பொருளைக் காட்டுமோ?’ எனின். பிரிதல் என்பது இறத்தலுக்குப் பரியாயம்; ஆதலின், காட்டும் என்க. 5‘உம்மைப் பிரிந்தாலே ஒரு முகூர்த்தகாலமும் பிழைத்திரேன்’, என்ற இளைய பெருமாளைப் போன்றவர் அன்றோ இவரும்? விடாது தொடர் கண்டாய் – நீ அவனை விடாதே தொடரப் பார். ஆக, இவ்வேப்பங்குடி நீரை அன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்லுகிறேன்? பிராட்டி ‘அகலகில்லேன் இறையும்’ என்கிற விஷயத்தையன்றோ உன்னை நான் அனுபவிக்கச் சொல்லுகிறேன்? ஆதலால், நான் அவனை அகன்று முடியும் அன்றும் நீ விடாதே அவனைத் தொடருவதற்குப் பார்,’ என்கிறார் என்பதாம்.

1. ‘நெஞ்சமே, நல்லை நல்லை’ என்றதனை நோக்கி, ‘நெஞ்சைக் கொண்டாடி’
என்கிறார். ‘துஞ்சும்போதும் விடாது தொடர்’ என்றதனை நோக்கி, ‘நான்
பிரிகிற காலத்திலும் விடாதே கொள்’ என்கிறார்.

2. நெஞ்சு இருப்பது மார்பிலேயாகையாலே ‘மார்விலேயணைத்து’ என்கிறார்.

3. திருவிருத்தம், 30. இவ்விடத்து.

‘ஆரி ருக்கிலுமென் நெஞ்ச மல்லதொரு வஞ்ச மற்றதுணை இல்லையென்று
ஆத ரத்திவனொடு தூது விட்டபிழை யாரி டத்துரைசெய் தாறுவேன்?
சீரி ருக்குமறை முடிவு தேடரிய திருவ ரங்கரைவ ணங்கியே
திருத்து ழாய்தரில்வி ரும்பி யேகொடு திரும்பி யேவருதல் இன்றியே
வாரி ருக்குமுலை மலர்ம டந்தையுறை மார்பி லேபெரிய தோளிலே
மயங்கி யின்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே’

என்ற திவ்விய கவியின் திருதாக்கு ஒப்பு நோக்கல் தகும், (திருவரங்கக்
கலம்பகம், 24)

தாம் சொன்னவரே மேல் விழுந்து தொழ
விஸ்லேஷ சமயத்திலும் நீ விடாதே கொள்
நைச்ய அனுசந்தானம் செய்து விலகினாலும் விடாதே கொள்
நல்லை -நல்லவன் முன்னிலை வார்த்தை –
சடக்கு என சொன்ன  சத் புத்ரர்களை மடியில் வைத்து கொண்டாடும் மாதா பிதா போல் –
மடியிலே -பருவம் அது போல் இருந்தால் தான்
மார்பில் அனைத்து கொண்டாடுகிறார்
திரு மார்பில் கை வைத்து திரு காஞ்சி சேவை ஆழ்வார் இன்றும்
நல்லை நல்லை -வீப்சை
இவர் தான் அவர் பக்கல் தூது விடுமா போலே -நெஞ்சுக்கே தூது விட வேண்டுமே
நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்
அப்புள்ளின் பின்  போன தனி நெஞ்சமே
இவரை விட்டு அவன் பக்கல் நிற்க வல்ல நெஞ்சு
அதனால் கொண்டாடுகிறார்
முன்புற்ற நெஞ்சே –
முயற்சி சுமந்து எழுந்து -ஆழ்வாருக்கு முன்னே
மீ மிசை மென் மேலும் -நல்லை நல்லை
ச்லாக்கிக்கிறது என் -என்ன விஷயம் நெஞ்சு கேட்டதாம்
உன்னை பெற்றார் என் செய்வோம்
ஒரு மிடறு போல் ஆன பின்பு -செய்ய முடியாதது உண்டோ –
நெஞ்சு ஒத்தபின்பு முடியாதது உண்டு
பலன் தருகைக்கு அவன் இருக்க
விலக்காமை நீ இருக்க
உன்னைப் பெற்றால் செய்ய முடியாதது உண்டோ
இனி என்ன குறைவினோம் அதிகபட்ட வார்த்தை யா இது
அவன் கார்யம் செய்வான் -இருக்க சத்யாம்சம்  தான் உண்டோ
சாதனம் அனுஷ்டித்தில் வரை இந்த வார்த்தை  கொண்டு போகும் என்பதால் –
என் செய்தோம் சொல்லி இருக்க இப்படி சொன்னோமே
தானே முகம் காட்ட அவன் சித்தமாய் இருக்க
நம் விஷயத்தில் சொல்லி இருக்க கொடாது தப்பை சொன்னோம்
செய்ய வேண்டியது ஒன்றும் இல்லாததால்
நித்ய நிரபேஷம் சித்த உபாயம் இருக்க சாத்திய அம்சம் உண்டோ
பின்னை கிருத்திய அம்சம் என் –
மைந்தனை மலராள் மணவாளன்
மிடுக்கு -கிட்ட கொள்ள புக
வள எழ உலகு தலை எடுக்க -நைச்ய அனுசந்தானம் பண்ணி விலகினாலும்
அகலப் பார்ப்பது ஓன்று உண்டு விடாதே
மைந்தன் -இந்த விஷயம் இனிமை அழகு மிடுக்கு
மேலே மலராள் மணவாளனை
பெரிய பிராட்டியார் அகலகில்லேன் இறையும்-என்று சொல்லிக் கொள்ளும் விஷயத்தை
 உன்னை விடாதே  என்று கெஞ்ச வேண்டி இருக்கிறது
துஞ்சும் போதும் அகன்ற பொழுதும் விடாதே
பிராணன் போகும் சமயம் இல்லை
அயோக்யன் என்று அகலும் போதும்
விச்லேஷம் விநாச பர்யந்தம் தானே ஆழ்வாருக்கு
பிரிந்தால் சாவு கூடினால் வாழ்வு
முகூர்தமபி ஜீவித சீதை
நீரை விட்டு பிரிந்த மீன் போல்
இது தான் துஞ்சுதல்
அகன்று முடியும் அன்றும் விடாது தொடரு –
மைந்தனை
இவ் வேப்பம் நீரை அன்றோ உன்னை குடிக்க சொல்கிறேன்
இனிமை வஸ்துவை
கரும்பு தின்ன கூலி பால் குடிக்க கால் பிடிக்க
எதிர் மறையா வார்த்தை
அனுபவிக்க கெஞ்ச வேண்டுமா –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-10-3–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

September 27, 2012

எம்பி ரானைஎந் தைதந்தை தந்தைக்குந்
தம்பி ரானைத்தண் தாமரைக் கண்ணனைக்
கொம்பு அராவுநுண் நேரிடை மார்பனை
எம்பி ரானைத் தொழாய்மட நெஞ்சமே!

பொ-ரை : எனக்கு உபகாரத்தைச் செய்தவனை, என் குடிக்கெல்லாம் உபகாரத்தைச் செய்தவனை, குளிர்ந்த செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனை, பூங்கொம்பையும் பாம்பையும் போன்ற நுட்பமான மெல்லிய இடையையுடைய திருமகளைத் திருமார்பில் உடையவனை, எம்பிரானை, மடமையையுடைய மனமே! வணங்குவாய்.

வி-கு : ‘கொம்பராவு’ என்பது, உம்மைத்தொகை, ‘நேரிடை’ என்பது, அன்மொழித்தொகை. ‘மடம்’ என்பது, கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை.

ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘இறைவன் சொரூபம் இருந்தபடி கண்டாயே! நீயும் 2உன் சொரூபத்துக்குச் சேர நிற்கப்பாராய்’ என்கிறார்.

எம்பிரானை-மேல் பாசுரத்திற்கூறிய அவன் நீர்மையை நினைத்து ‘என் நாயன் ஆனவனை’ என்கிறார், எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை – தம்மளவிலேயாய் 3அடியற்று இருக்கையன்றியே, தம் குடிக்கு நாயகன் ஆனவனை என்கிறார். இவர் இப்படித் துதித்தவாறே, 4பிரயோஜநாந்தரபரருடைய பாசுரத்துக்கும் 5அநந்யப் பிரயோஜனருடைய பாசுரத்துக்கும் வேற்றுமை அறியுமவன் ஆதலின், ‘இப்படித் துதிக்கிறவர் யாவர்?’ என்று குளிர நோக்கினான். ‘தண் தாமரைக் கண்ணனை’ என்கிறார். ‘ஆயின், 6‘என்னை வைக்கின்றவர்களையும், வெறுக்கின்றவர்களையும். கொடிய தன்மை

களை யுடையவர்களையும், தூய்மை அற்றவர்களையும், மனிதர்களுள் தாழ்ந்தவர்களையும் நான் சம்சாரத்தில் தள்ளுகிறேன்,’ என்னுமவன் இப்படிக் குளிர நோக்குகைக்குக் காரணம் என்?’ என்று பார்த்தார்; குளிர் நோக்கும்படி செய்கின்றவர் அருகே இருக்கக் கண்டார்; கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை – கொம்பு போலவும் பாம்புபோலவும் இருப்பதாய், அது தானும் நுண்ணியதாய் இருந்துள்ள இடையையுடைய பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலேயுடையவனை என்கிறார். அரவு என்பது அராவு என வந்தது, நீட்டல் விகாரம்; 1‘நச்சராவணை’ என்பது போன்று, இனி, கொம்பராவு இடை என்பதற்குக் ‘கொம்பை லகூகரியாநின்றுள்ள என்று பொருள் கூறலுமாம். எம்பிரானை – அச்சேர்த்திக்கு ஒருகால் ‘எம்பிரானை’ என்கிறார். தொழாய் – தொழப்படும் பொருள் – ஒரு மிதுனமாய் ஆயிற்று இருப்பது. மடநெஞ்சமே – ‘தொழுதுஎழு’ என்னலாம்படி பாங்கான நெஞ்சு ஆதலின் ‘மட நெஞ்சமே’ என்கிறார். மடம் – பவ்யம்; உரிமை.

கண்டாயே அவன் ஸ்வரூபம் இருந்த படி
நீயும் உன் ஸ்வரூபத்துக்கு சேர நிற்க பாராய் –விலக்காமை கொள்
நீர்மை அனுசந்தித்து -அவன் தான் ஸ்வாமி
எந்தை தந்தை தம்பிரான் –எங்கள் குடிக்கு நாயகன் -நாயன்
நாயனே நயினா அப்பா கூப்பிடுவார்கள்
கேசவன் தமருக்கு பின் தனி இல்லை இவர் 21 தலை முறை
அது போல் குடிக்கும் நாயகன்
மூலம் இல்லாமல் இல்லை -நன்றாக படிந்து
எற்றினவாறே
பிரயோஜனாந்தர பரர்
அநந்ய பிரயோஜனந்தர பரர்
வாசி அறிந்து குளிர கடாஷித்தான்
நோக்கின கண்களை பாடுகிறார் –
அசுர  ஸ்வபாவம் உள்ளவரை -ஷிபாமி
கீதை -அசுர யோனியில் பிறக்க வைப்பவன் -கோபம் இன்றி
குளிர பார்க்கும் காரணம்
அருகே கடாஷிக்க
கொம்பு அராவு நுண் ஏர் இடை மார்பில் உடையவன்
இடை -வர்ணிக்க கொம்பு அரவு போல்
நுண்மை
கொம்பு வஞ்சிக்கொம்பு கொடி இடையாள் –
அது தானும் நுண்ணியதாக
அரவு எனபது அராவு நீட்டி கிடக்கிறது
நச்சா ராவணை நச்சு அரவணை திரு சந்த விருத்தம்
நீட்டல் விகாரம்
கொம்பை அரிக்கிற கொம்பை காட்டிலும் நுண்ணிய இடை
எம்பிரானை சேர்த்திக்கு ஒரு கால்மீண்டும் எம்பிரான் என்கிறார்
முன்பு தனக்கு செய்த உபகாரத்துக்கு
இங்கு சேர்த்திக்கு
தொழாய் -தொழப்படும் விஷயம் மிதுனமாக உள்ளதே –
தொழுது எழு -சொல்ல பாங்கான நெஞ்சு அன்றோ நீ –

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-10-2–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

September 27, 2012

கண்ணுள் ளேநிற்கும் காதன்மை யால்தொழில்
எண்ணி லும்வரும் என்இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்
விண்ணு மாய்விரி யும்எம்பி ரானையே.

பொ-ரை : பூமியும் தண்ணீரும் நெருப்பும் சிறந்த காற்றும் ஆகாயமும் ஆகிய இவற்றின் உருவமாக விரிகின்ற எம்பிரான், பரம பத்தியோடு வணங்கினால் வணங்குகிறவர்களுடைய கண்களிலேயே நிற்பான்; ஒன்று இரண்டு என்பன முதலாக எண்ணுமிடத்தும் வருவான்; இறைவன் தன்மை இதுவான பின்னர், நாம் அவனிடத்தில் இரந்து வேண்டும் குறை யாது உளது?

வி-கு : ‘நிற்கும், வரும்’ என்பன, செய்யுமென் முற்றுகள். எம்பிரானை என்பது ‘எம்பிரான்’ என்னும் பொருட்டு; வேற்றுமை மயக்கம்.

ஈடு : இரண்டாம் பாட்டு. ‘பரமபத்திக்கும் 1பரிகணனைக்கும் ஒக்க முகங்காட்டுவான்’ என்கிறார்.

காதன்மையால் தொழில் கண்ணுளே நிற்கும் – பரம பத்தியுடையவர்களாகித் தொழுதால், அவர்கள் கண் வட்டத்துக்கு அவ்வருகு போகமாட்டாதே நிற்பான். தன்னை ஒழியச் செல்லாமையையுடையராய்க்கொண்டு தொழுதால், தானும் அவர்களை ஒழியச் செல்லாமையையுடையனாய் அவர்கள் கண் வட்டத்தினின்றும் கால் வாங்க மாட்டாமல் நிற்பான் என்பார், ‘கண்ணுள்ளே, என ஏகாரங் கொடுத்து ஓதுகிறார். எண்ணிலும் வரும் 1‘கடம்’ படம், ஈஸ்வரன்’ என்றால், ‘நம்மை ‘இல்லை’ என்னாமல், இவற்றோடு ஒக்க எண்ணினான் அன்றே?’ என்று வரும். அன்றிக்கே, ‘இருபத்து நான்காவது தத்துவம்-அசித்து, இருபத்தைந்தாவது தத்துவம்-ஆத்துமா, இருபத்தாறாவது தத்துவம் ஈஸ்வரன்’ என்றால், ‘நம்முடைய உண்மையையும் இவற்றைப்போன்று இசைந்தான் அன்றே?’ என்று வந்து முகங்காட்டுவான் என்று கூறலுமாம். அன்றிக்கே, ‘இருபத்துநான்கு, இருபத்தைந்து, இருபத்தாறு’ என்று எண்ணினால், ‘இருபத்தாறு யானே’ என்று வருவான் என்று பொருள் கூறலும் ஒன்று. 2அன்றிக்கே, நம்முடைய எண்ணை மிஞ்சி வரும் என்று கோடலுமாம். வந்தால் நிற்குமது இல்லை; இவன் ‘போ’ என்ற போதும் அதற்கும் தகுதியாக வரும் என்பார் ‘வரும்’ என்கிறார்.

என் இனி வேண்டுவம்-‘பரமபத்திக்கும் எண்ணுதற்கும் ஒக்க முகங்காட்டுவானான பின்னர் எனக்கு ஒரு குறை உண்டோ?’ என்கிறார். ‘இறைவன், இவ்வாத்துமாப்பக்கல் வெறுப்பின்மைக்குக் காலம் பார்த்திருந்து முகங்காட்டுவானான பின்பு, இவனுக்கு நன்மை தரும் காரியங்களில் இவன் செய்ய வேண்டுவது ஒன்று உண்டோ?’ என்றபடி. இப்படி இருக்கிற பகவானுடைய சொரூபத்தைப் புத்தி பண்ணுகையே, இவன் பிரபந்தன் ஆகையாவது. இறைவன், தன்னுடைய சொரூபத்தை உபதேசித்து, 3‘உன்னால் வரும் இழவுக்கு அஞ்சவேண்டா ‘மாசுச:’ என்றது போன்று, இவரும் இறைவனுடைய சொரூபத்தை நினைந்து, ‘என் இனி வேண்டுவம்?’ என்கிறார். இவற்றால், வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது, அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.

வேல்வெட்டிநம்பியார், ‘நம்பிள்ளையைப் பார்த்துப் ‘பெருமாள் கடலைச் சரணம் புகுகிற காலத்தில் கிழக்கு இருத்தல் முதலிய சிலநியமங்களோடே சரணம் புக்கார்; ஆதலின், இப்பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ?’ என்று கேட்க, 1‘அரசரான இராகவர் கடலைச் சரணம் அடையத் தக்கவர்’ என்று பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீவிபீஷணாழ்வான்; அவன் தான் பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்று இல்லை; ‘ஆக, இத்தால், சொல்லிற்றாயிற்று என்?’ என்னில், ‘பெருமாள் இக்ஷவாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே, சில நியமங்களோடே சரணம் புக்கார்; ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்; ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா, அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா; ஆகையாலே, சர்வாதிகாரம் இவ்வுபாயம்’, என்று அருளிச்செய்தார். பகவானுடைய பிரபாவத்தை அறிந்த நன்ஞானமுடையார்க்கு ‘இதுவே பொருள்’ என்று தோன்றும்: ‘கேவலம் கிரியாமாத்திரத்துக்கே பலத்தைக்கொடுக்கும் ஆற்றலுள்ளது’ என்று இருப்பார்க்கு ‘இப்பொருள் பொருத்தம் அன்று’ என்று தோன்றும்.

மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணும் ஆய் விரியும் எம்பிரானை-‘காரணமான ஐம்பெரும்பூதங்கட்கும் உள்ளீடாய் 2நான் பலவாக விரிகிறேன்’ என்கிறபடியே, தன் மலர்த்தியே ஆகும்படி இருக்கிற உபகாரகன். காற்று எல்லாவற்றையும் தரிக்கச்செய்வது ஆதலின், ‘நல்வாயு’ என்கிறார். ‘நான் பல பொருள்களாக விரிகின்றேன்,’ என்பது சுருதியாதலின், ‘விரியும்’ என்கிறார். எம்பிரான்-கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில், எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்?’ 3‘தன்னை ஒழிந்த எல்லாப் பொருள்களும் தன் சங்கல்பத்தைப்பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன், தன் பக்கல் ஆசை சிறிதுடையார் சங்கல்பத்தைப் பற்றித் தான் உளனாம்படி இருப்பானான பின்பு, இவ்வாத்துமாவிற்கு ஒரு குறையுண்டோ?’ என்கிறார்.

பரம பக்தி -அனுக்ரகம் செய்பவனுக்கு செய்யும் கிருபை
எண்ணுபவனுக்கு கூட அதை செய்பவன் ஒக்க முகம் காட்டுகிறான் -என்கிறார் இதில்
அத்வேஷம் முதலாக -பரம பக்திபரயந்தம்

பர கணைக்கும் நடுவில் ஒக்க முகம் காட்டும்
ப்ரீதி உடன் சேவிக்க -கண் வட்டத்தில் வரும்-என்னிலும் வரும் இனி என்ன வேண்டும்
இப்படி இருக்கிறவன் -விரிபவன் பஞ்ச பூதங்கள்
எம்பிரானை –
கண் வட்டத்துக்கு அவ்வருகு போகாமல்
காதன்மை -மிக காதல் -பரம பக்தி
தானும் அவர்கள் ஒழிய  செல்லாமை -நாம் அப்படி இருந்தால்
ஞானிகள் -சதுர்வித பகவத் சேஷைகதை -உயிர் ஒவ் ஒருவருக்கு —
எண்ணிலும் வரும் கடம் படம் ஈஸ்வரன் என்றால்  -இல்லை சொல்ல சொன்னாலும் வருகிறான்
நம்முடைய உண்மையையும் இவற்றோற்றோடு பாடு இசைந்தான் இரே என்று முகம் காட்டும்
வரும் -நிற்கும் அது இல்லை போ என்று போதும் –
வந்தால் தான் போக முடியும்
நம்முடிய எண்ணத்தையும் மிஞ்சி வரும் –
எண்ணம் இல்லாவிடிலும் வரும் –
21 22 ..இப்படி 26 நானே வரும் என்று வரும்-25 ஆத்மா 24 அசித் வகைகள் என்பதால் -மூன்று தத்துவம் தான்
அசித் வகைகள் 24 என்று கொள்ள வேண்டும் -பக்கம் no 199 சொன்னாலும் yes saar சொல்லும் மாணவன் போல்

பரி கணைக்கும் வரும் –
என் இனி வேண்டுவோம் -இப்படி ஒக்க முகம் காட்டுபவன் ஆன பின்பு
அப்றேதேஷிதம் மூஞ்சி திருப்பாமல் இருந்தால் போதும்
இப்படி இருக்கிற பகவத் ஸ்வரூபத்தை நெஞ்சில் நினைப்பதே
அவன் நம் ஸ்வரூபத்தை அனுசந்தித்து மா சுச சொல்லியது போல்
உன்னால் வரும் இழவுக்கு அஞ்சாதே -சரண் ஆடை
அவனே தன ஸ்வரூபம் தெரிவித்து
நாமும் அவன் ஸ்வரூபத்தை அனுசந்தித்து இவரே மா சுச சொல்லி என் இனி வேண்டுவோம் சொல்லி கொள்கிறார்
அவனை பெற ஒன்றுமே வேண்டாம்
எந்த தகுதி இல்லாமையே விலக்காமை அப்ரேதேஷம் ஒன்றே வேண்டும்
ஐ திஹ்யம்
பெரிய திரு மொழி  ஆரம்பத்திலும் இதை சொல்லி –
வேல் வெட்டி நம்பியாருக்கு நம் பிள்ளை
பாஞ்சராத்ரம் கெட்டி காரர்
ஓலை எழுதி அனுப்ப -உடனே சங்கை தீர அவர் வெளி இடம் போய் இருக்க உடனேபதில் கேட்டு
முமுஷுப்படி -சூத்ரம் உண்டு
நம் பிள்ளை கிழக்கே முக்காதம் ஆற்றில் எழுந்து அருளி இருக்க செய்தே –
யோக்யதை தேட வேண்டாம் -இருந்த படியே அமையும் –
ஒரு திரு கார்த்திகையிலே -புறம்பே சிலரை கேட்டால் எளியன் என்று இருப்பார்கள் வித்வான் என்று நினைத்து கொண்டு இருக்க
பரிகரிக்க வல்லாரும் இல்லை
சொல்லி ஆள் கொடுத்து வர காட்டினார்
அது என் என்னில் –
பெருமாள் -கடலை சரணம் புகும் இடத்தில் -தர்பான் ஆச்ரீய ராகவா அஞ்சலி பிரான் முகம் க்ருத்வா
மூன்று நாள் உபவாசம் -இருந்தாரே -பிரான் முகத்வாதி நியமங்கள் செய்தாரே –
இவ் உபாயம் இதர சாதனங்கள் போலே சில நியமங்கள் உடன் செய்ய வேண்டுமா -என்று கேட்டாராம்
சரணாகதிக்கு தேச கால அதிகாரி பிரகார நியமங்கள் இல்லை
பெருமாள்-விபீஷணன் சொன்னதும் -சமுத்ரம் தாண்ட
ஹனுமான் வாயு புத்திரன் தேவ யோனி
பெருமாள் மனுஷ்ய சக்தி மீறி எதையும் செய்யாத
கிருஷ்ணன் பரத்வம் கொஞ்சம் கூட காட்டி ஆழி எடுத்து
ஜடாயு மோஷம் கட்டம் சங்கை பரத்வம்
நம் பிள்ளை சமாதானம்
மனுஷ்ய சக்தி சத்யேன லோகன் ஜயதி -சொல்லி –
சத்யம்தவராமல் இருந்ததால் மோஷ லோகமும்பெருமால் கை வசம்
தாண்டி போக கூடாது பாலம் இருந்தால் நடந்து போகலாம்
தாண்டி போக கூடாது சாஸ்திரம்
சமுத்ரம் தாண்டுவது விதேய தேசம் போவது தப்பு சாஸ்திரம்
அனந்தாழ்வான் சோழ வந்தான் போக -திரு கோளூர் விட்டு இங்கே என்ன செய்கிறாய்
கழுதை மேய்த்து ஜீவிக்க மாட்டிலையோ -கேட்டாராம்
சக்கரவர்த்தி திரு மகன் இந்த சாஸ்திரம் பார்த்து தண்ட வில்லை –
அன்று ஈன்ற கன்று வாத்சல்யம் விபீஷணன் இடம் கேட்க சொல்லி
சரணாகதி செய்ய சொல்ல –
சர்வ லோக சரண்யன் என்று முன்பு சொல்லிய வாயால்
அவனுக்கு அது கை கண்ட மருந்து என்பதால்
எருது கெடுத்தாருக்கும் ஏழே கடுக்காய்
கிராம வைத்தியன்
ஆரூடதுக்கு வந்தான்
பிரசவம் -ஈனா பெண்ணுக்கும் ஏழே கடுக்காய்
-ராஜாவே -படை எடுக்கவும் ஏழே கடுக்காய்
அப்பா எழுதிய ஓலை இருக்க
சைன்யம் அனைவரும் கடுக்காய் கொடுக்க -ராஜாவும்
இவனுக்கு கை கண்ட மருந்து
பாஞ்சராத்ர -ந ஜாதி ந குலம் -நம்பியார் பூஜை செய்யும் நம்பூதிரி போல்
சமன்வயப்படுத்தி –
கடலில் முழுக்கு இட்டு வந்தான் இல்லை நேராக திருவடியில் விழுந்தானே –
ஆக இத்தால் சொல்லிற்று-
ராஜச ஜாதி நின்ற நிலையில்
இஷ்வாகு ஜாதி -ஆச்சார்யா பிரதானம்
பட்டாபிஷேகம் கையில்  மான் கொம்பு வைத்து சொரிய –
சீதை மேல் பட்டது போல் இருந்தாலும் குளிப்பார்
யோக்யனுக்கு அயோக்யதை சம்பாதிக்க வேண்டாம்
அயோக்யனுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டாம்
பஞ்ச சம்ஸ்காரம் உபநயனம் ஆன பின்பு -பிராமண குலத்தில் பிறந்து –
ஸ்திரீகள் பாகவதர்களும் உப நயனம் யோக்யதை இல்லாதவனுக்கு –
அது போல் சரணாகதி –
அனுஷ்டானங்கள் உடன் வந்தி இல்லை நியமம் சரணா கதிக்கு இல்லை
பண்ணும் அதிகாரி பொறுத்து தான் –
வார்த்தா மாலா -அதிகாரி விஷயத்தில் மாறலாமா –
வெறும் புடவை தோயாமல் கெடும் -நூல் வஸ்த்ரம் தோய்த்த பின் சுத்தம்
பட்டுப்புடைவை -தோய்க்க கெடும் –
தோய்த்த பட்டு ஆசாரம் இல்லை -அது போல் -வ்யக்தி அதிகாரி நியமம் இங்கும்
சர்வாதிகாரம் பிரபத்தி
தகுதி ஒன்றும்சம்பாதிக்க வேண்டாமே –
என் இனி வேண்டுவம் –
ஆரைக் கேட்புதோம் என்று கூசி இருக்க –
இங்கே அரும் பதம் -சேவித்து பெற்றார் –ஆள் விட்டு கேட்டது அங்கு
பகவத் பிரபாவம் ஞானம் உடையாருக்கு அர்த்தம் பரி பூர்ணம்
கிரியா ஒன்றால் -தான் வரும் என்று நினைத்து இருப்பவர்கள் -பல பிரதானம் -பொருந்தாது என்று தோற்றி இருக்கும்
அதி வாதம்– எண்ணினால் வருவான் என்பார்
சாஸ்த்ரிகள் சாரஞ்ஞர் இரண்டு வகை ஆச்சார்யா ஹிருதயம்
தெப்ப கை கொண்டு சாச்த்ரஞ்ஞர்
 விட்டத்தில் இருப்பாரை போலே -இரண்டு கை விட்டு சர்வஞ்ஞர்
சாஸ்திரம் அவலம்பித்து அனுஷ்டானத்தில் புத்தி
சார்வ  ஞானம் எம்பெருமான்  ஒருவனே உபாயம் –

 

மண்ணும் நீரும் எரியும் நல் வாயும் விண்ணும்
காரணமான பூத பஞ்சகதுக்கும் உள்ளீடாய்
நல் வாயு -தரிப்பதை பற்ற அடைமொழி
விரியும் பகுச்யாம் என்று தன பேராக செய்யும் உபகாரகன் பிரான்
கண்ணுள்ளே நிற்கும் –
தன் சங்கல்பத்தை பற்றி உளவாக  அனைத்தும் உள்ளவன்
ஆசா லேசம் உள்ளவர் இடம் -அவர் சங்கல்பத்தை பற்றி தான் உளன் ஆவான்
என் இனி வேண்டுவோம் -ஸ்ருது யுடன் என்..இனி வேண்டுவோம்
பிராட்டி புன் சிரிப்பு அர்த்தம் தேசிகன்
நீ தாயார் வாசு தேவன் பிதா
தயையால் -பிறந்து இருக்கிறேன் –
தத்தக -ஆசார்யர் உபதேசம் பரிசனம் அடிமை ஆக்கி -அற்று தீர்ந்தவன் உணர வாய்த்த பின்பு
கிம் தே பூயக பிரியம்  -இன்னும் என்ன வேண்டும் சிரிக்கிறாயா-
என் இனி வேண்டும் -ஆழ்வார் அருளியது போல் அங்கும் –
எம்பிரான்- எனக்கு உபகாரகன்
எம்பிரானை -அப்படி பட்டவன்
அவனை தொழுதால்-வரும் 24000 படி

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-10-1–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

September 26, 2012

பத்தாந்திருவாய்மொழி – ‘பொருமாநீள்’

முன்னுரை

    மேல் திருவாய்மொழியில், தமது எல்லா அவயவங்களிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை நினைத்து இன்புறுகின்றார் என்று மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச்செய்வர் முன்புள்ள பெரியோர்கள். 1இங்கு, மேல் எல்லா உறுப்புகளிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை அநுசந்தித்துப் பட்டர்அருளிச்செய்வதோர் ஏற்றம் உண்டு. அதாவது, மேல் திருவாய்மொழியில் ‘உச்சியுள்ளே நிற்கும்’ என்று அன்றே அருளிச் செய்தார்? பேற்றில் இனி, ‘இதற்கு அவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது 2ஒன்றும் இன்று; இனி, இதனுடைய பிரிவின்மையைச் செய்து கொடுக்கையே உள்ளது; பேறு கனத்து இருந்தது இது வந்த வழி என்னை?’ என்று ஆராய்ந்தார்;3இப்பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில் இல்லாது இருந்தது; ‘ஏன இல்லையோ?’ எனின், இத்தலையில் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும், வெறுப்பின்மை எதிர் முகமாதல் என்னும் இவையே உள்ளனவாம்; இவற்றைத் தாம் பெற்ற பேற்றிற்கு ஒரு சாதனமாகச் சொல்லப்போகா; ‘என்னை?’ எனில், இத்தலையில் பரமபத்தி அளவாகப் பிறந்தாலும்பேற்றின் கனத்துக்கு இதனை ஒரு சாதனமாகச் சொல்லுதற்கு இல்லையே; என் போல!’ எனில், ஒருவன் ஓர் எலுமிச்சம் பழம் கொடுத்து இராச்சியத்தைப் பெற்றால் அதற்கு அது விலையாய் இராதே; மற்றும், சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத்தலையால் ஒரு காரணத்தை நிரூபிப்பதற்கும் இல்லையே? 1‘வரலாறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால்’ என்னும் படியன்றே இருப்பது? மற்றும், இவனை முதலிலே படைக்கிற போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்லவழி போக வேண்டும்’ என்று உறுப்புகளைக் கொடுத்துவிடுகையாலே, இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்; இனி, புத்தி முதலான எல்லாப் பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே, வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரமபத்தி முடிவாகப் பிறப்பிப்பான் ஒருவனும் இறைவனேயாவன்; ஆதலால், ‘நித்தியசூரிகள் பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான், அவன் திருவருள் இருக்கும்படி என்?’ என்று, மேல் திருவாய்மொழியில் தலைமுடிவாகப் பிறந்த சேர்க்கையாலாய சுவையை நினைத்து இன்புறுகிறார் என்பது.

1. மேல் திருப்பதிகத்தில், ‘ஆழ்வார், தம்முடைய எல்லா அவயவங்களிலும்
இறைவன் சேர்ந்த சேர்க்கையை நினைத்து இன்புறுகிறார்’ என்ற கருத்தில்,
முன்புள்ள பெரியோர்களுடைய திருவுள்ளத்தைப் பட்டர் அடி
ஒற்றினாராயினும், ‘இறைவன், ஒருவிதக் காரணமும் பற்றாத திருவருளால்
தம்முடைய எல்லா அவயவங்களிலும் சேர்ந்த சேர்க்கையை நினைத்து
இன்புறுகிறார்’ என்று பட்டர் அருளிச்செய்யும் அழகு அறிஞர் கண்டு
மகிழ்தற்குரியது. மேல் திருப்பதிகத்தில் பிறந்த ‘சர்வாங்க சம்ஸ்லேஷத்துக்கு
ஏதுவாக, இத்திருப்பதிகத்தில் ஏதாவது ஒன்றைக் கூறியது உண்டோ?’ என்று
ஆராய்ந்து பார்த்து, காணாமையாலே பட்டர் இங்ஙனம் அருளிச்செய்கிறார்.

2. ‘ஒன்றும் இன்று’ என்பது என்? பரமபதத்தில் கொண்டுபோய் அனுபவிக்கிறது
ஏற்றம் அன்றோ?’ என்ன, ‘அன்று’ என்கிறார் ‘இனி, இதனுடைய
பிரிவின்மையைச் செய்து கொடுக்கையே உள்ளது’ என்பதனாலே. ஆதலால்
பேறு கனத்திருந்தது என்று கூட்டுக.

3. ‘இப்பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில்
இல்லாதிருந்தது’ என்ற வாக்கியத்தை, ‘அங்ஙனமிருந்தும், நித்தியசூரிகள்
பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான்’ என மேல்
வரும் வாக்கியத்தோடே கூட்டுக.

கீழில் சர்வாங்க சம்ச்லேஷம் அனுபவித்து -நிர்விருத்தர் ஆகிறார் -சந்தோஷம் படுகிறார்

முன்பு உள்ள முதலிகள் நிர்வகிக்கும் படி -பட்டர் தம் வைபவம் எல்லாம் காட்டும் திருவாய் மொழி –
நிர் கேதுகமாக தானே வந்து கலந்தானே என்ன ஆசார்யம் -சர்வாங்க சம்ச்லேஷம் நிதானம் சேர்த்து கொண்டாடுகிறார் -பட்டர்
உச்சி உள்ளே நிற்கும் என்றே கீழ் சொல்லிற்று -வேறே என்ன வேண்டும் -உள்ளே -வந்து விட்டு விடாமல்
நிரந்தர ஸ்தானம் – பேற்றில் இதற்க்கு அவ்வருகே  ஏற்றம் கொடுக்க ஒன்றும் இல்லை
இதனுடைய அவிச்செதம் இடையூறு செய்யாமல் இருந்தால் போதும்
வெளியே போக சொல்லாமல் இருந்தாலே போதும் –
பேறு கனத்து இருக்கிறது இது வந்த வழி என்ன என்று ஆராய்ந்தார் –
பேற்றின் கணத்துக்கு ஈடாக நன்மை சாதனம் தம் தலையில் ஒன்றுமில்லையே
அத்வேஷம் ஆதல் ஆபிமுக்கியம் ஆதல் தான் உண்டு
துவேஷம் இன்றி -திரு முகம் திருப்பாமல் –அத்தை சாதனமாக சொல்லப் போறாதே –
உபாய லாகவம்-பல்குத்வம் -அல்பம்
உபேய கெளரவம்-பார்த்து
இத்தலையில் பரம பக்தி பர்யந்தம் ஏற்பட்டாலும் பேற்றின் கனத்துக்கு இதை சாதனம் ஆக்க முடியாது  –
எலுமிச்சம் பிள்ளை கொடுத்து ராஜ்ஜியம் பெற்றால் அது விலை சாதனம் ஆகாதே
ராஜா உடைய ப்ரீதி தானே காரணம்
அது போல் அவன் கிருபை தான் காரணம் –
நிர் கேதுக கிருபை பிரபாவம்
இத்தலையால்- ஓர் அடி நிரூபிகலாய் இராதே அவன் -அடியாக வரும் பேற்றுக்கு
வரவாறு ஓன்று இல்லை வாழ்வு இனித்தால் -பெருய திரு வந்தாதி
சிருஷ்டிக்கும் பொழுது கரண களேபரங்கள் கொடுத்து
நல்ல வழியில் போக –தீய வழி தப்பி -உபகரணங்கள் –
இவன் தலையால் வரும் நன்மைக்கும் அடி அவன் தானே
புத்யாதி அனைத்தைக்கும் அவன் தானே நிர்வாகன் –
அத்வேஷம் தொடக்கமாக -பரி கணனை -மத்யம் எண்ணிலும் வரும் -பரம பக்தி முடிவாக –
காரணம் தானே -பிறப்பிப்பான் -அவன் தானே –
இழவுக்கு அடி கர்மம் -பேற்றுக்கு அடி கிருபை -ஸ்ரீ வசன பூஷணம்
பரதன் சரணா கதி 14 வருஷம் பின்பு பலித்தது
திரு உள்ளம் இன்றி போனால் தள்ளிப் போகும் –
திரு உள்ளம் தான் பேற்றுக்கு அடி –
இழவுக்கு அடி -இஷ்டம் இல்லை கர்மம் காரணத்தால்
விபரீத பிரவ்ருத்தன் சாஸ்திரம் -மீறி -பண்ணுவதற்கு வருத்தம் கூட தெரிவிக்காமல் -இருக்க
இழவுக்கு அடி கர்ம
நித்ய சூரிகள் பேற்றை -அநாதி காலம் சம்சாரித்து போந்த நமக்கு -எம்பெருமான் தந்தான்
விஷஈகாரம் இருந்த படி ஏன்
தலை மண்டை இட்டு உன்மச்தகமாக சம்ச்லேஷ ரசத்தை அனுபவித்த சந்தோஷம் –
இங்கு நிர் கேதுக கிருபை உடன் சேர்த்து மேலும் சந்தோஷம் அடைகிறார் –
பட்டர் நிர்வாகம் காரணத்துடன் மேலே சந்தோஷம்
திரள அர்த்தம் முதல் பாடு நிதான பாட்டு இந்த திருவாய் மொழிக்கு

பொருமா நீள்படை ஆழிசங் கத்தொடு
திருமா நீள்கழல் ஏழுல கும்தொழ
ஒருமா ணிக்குற ளாகி நிமிர்ந்தஅக்
கருமா ணிக்கம்என் கண்ணுள தாகுமே.

பொ-ரை : பகைவர்களோடு போர் செய்கின்ற பெருமை பொருந்திய நீண்ட ஆயுதங்களான சக்கரம் சங்கு என்னும் இவற்றோடு, செல்வத்தைத் தருகின்ற பூஜிக்கத் தக்க நீண்ட திருவடிகளை ஏழுலகத்துள்ளாரும் தொழுது வணங்கும்படி, ஒப்பற்ற பிரமசரிய நிலையையுடைய குட்டையனாகி, பின் வளர்ந்த அந்தக் கரிய மாணிக்கம் போன்ற இறைவன் என் கண்களில் இருக்கின்றவன் ஆனான்.

வி-கு : ‘ஆழி சங்கத்தோடு கழலைத்தொழ ஆகி நிமிர்ந்த அக்கரு மாணிக்கம்’ எனக் கூட்டுக. ‘நீள்படை, நீள்கழல்’ என்பன வினைத்தொகைகள். மாணி – பிரமசாரி. மாணிக்கம் என்பது சொல்லால் அஃறிணையாதலின், உளதாகும் என அஃறிணை முடிபு கொடுத்து ஓதினார். ‘என் கண்’ என்பதில், கண் என்பது பெயர்ச்சொல். ஏழாம் வேற்றுமை யுருபாகக் கொள்ளினும் அமையும்.

இத்திருவாய்மொழி, துள்ளல் ஓசையில் வழுவி, நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்பெறும்.

ஈடு : முதற்பாட்டு. இத்திருவாய்மொழியில் அருளிச்செய்கிற பொருள்களை எல்லாம் தொகுத்து அருளிச்செய்கிறார். இப்பாசுரத்தில், மகாபலி, தன் வரவை நினையாதே இருக்க, அவன் பக்கலிலே இரப்பாளனாய்ச் சென்று தன்னுடைமையைத் தனது ஆக்கியது போன்று, நான் நினைவு இன்றிக்கே இருக்கத் தானே வந்து தன் வடிவழகை என் கண்ணுக்கு இலக்கு ஆக்கினான் என்று அவன் தன்மையை நினைந்து இனியர் ஆகிறார்.

பொரு – இத்தால், திரு உலகு அளந்தருளுகிற போது, திவ்விய ஆயுதங்கள் நமுசி முதலாயினார்கள் மேலே பொருதபடியைச் சொல்லுகிறார். இனி, திவ்விய ஆயுதங்கள் தாம் ஒருவரை ஒருவர் ஐயங்கொண்டு பொருகிறபடியைச் சொல்லுகிறார் என்று கோடலுமாம். ஆயின், நமுசி முதலாயினார்களோடே பொரும் என்ற பொருள் பொருந்துவதாம்;1‘இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரிகான்று, அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-விடங்காலும், தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான், பூவார் அடிநிமிர்த்த போது’ என்றார் பூதத்தாழ்வாரும். திவ்விய ஆயுதங்கள் தம்மில் தாம் பொருதல்என்ற போது – 1அஸ்தான பயசங்கையாலே ஒருவரை ஒருவர் ஐயங்கொண்டு பொருகிறார்கள் என்றபடி. 2‘ஸ்ரீராகவனைச் சரணமாக அடைந்தேன்’ என்ற விபீஷணனை அன்றே ‘கொல்லுங்கள்’ என்றார்கள்? 3‘ஸ்ரீபரதனைக் கொல்லுவதில் பாவத்தை நான் பார்க்கின்றேன் இல்லை’ என்றார் இளைய பெருமாள். மா – அவற்றின் வடிவின் பெருமையைச் சொல்லுகிறது. அன்றி, அடியார்கள் திறத்தில் இறைவனைக்காட்டிலும் அவர்களுக்கு உண்டான பக்ஷபாதத்தைச் சொல்லுகிறது என்று கோடலுமாம். ஆக, இதனால், 4‘விஷ்ணுவை வழிபட்டு வணங்குகிற உயிர்களை, ஒன்றாலும் தடுக்கப்படாதவைகளான சக்கரம் முதலிய ஆயுதங்கள் எல்லா ஆபத்துகளினின்றும் காப்பாற்றுகின்றன’ என்கிறபடியே,5சர்வேஸ்வரன் எதிரியானாலும் அவன் கையிலே காட்டிக்கொடாமல் நோக்கும் பெருமையைச் சொல்லுகிறது.

நீள் படை ஆழி சங்கத்தோடு – நீள் படையான ஆழி சங்கத்தோடே கூட. ‘ஆயிரங்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக்கொள்ளும்’ என்னுமாறு, படைகள் சர்வேஸ்வரன் அதிகரித்த காரியத்திலே அவன் தன்னிலும் முற்பட்டு இருப்பவை ஆதலின் ‘நீள்படை’ என்கிறார். திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ – செல்வத்திற்கு அறிகுறியானவையும், சிரமேற்கொள்ளத் தக்கவையும், ஆசை சிறிது உடையார் இருந்த இடம் எல்லையாக வளர்வனவும் ஆன திருவடிகளை ஒரு சாதந அனுஷ்டானம் பண்ணாதாரும் தொழும்படியாக. 6‘நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்று ஆசைப்பட்டுக் கிடக்கும் திருவடியையன்றே ஆசைஇல்லாதார் தலைகளிலும் வைத்தான் என்பார், ‘ஏழ்உலகும் தொழ’ என்கிறார். ஒரு – இவன் தானே இவ்வடிவை இன்னம் ஒருகால் கொள்ள வேண்டும் என்னிலும் வாயாதபடி இரண்டாவது இல்லாத தாய் இருக்கை மாணி-திருமகள் கேள்வன் என்று தோன்றாதபடி இரப்பிலே தழும்பு ஏறுகை. குறளாகி-கோடியைக் காணியாக்கியது போன்று, பெரிய வடிவைக் கண்ணாலே முகக்கலாம்படி சுருக்கின படி. நிமிர்ந்த-அடியிலே நீர் வார்த்துக் கொடுத்தவாறே நிமிர்ந்த படி. வாசுதேவ தரு ஆதலின் ‘நிமிர்ந்த’ என்கிறார், நிமிர்ந்த அக்கருமாணிக்கம் – நெய்தற்காடு அலர்ந்தாற்போலே ஆகாயம் முழுதையும் தன் வடிவழகாலே பாரித்தபடி. மயர்வற மதிநலம் அருளப்பெற்ற தம்மாலும் அளவிட்டு அறிய முடியாது இருத்தலின்‘அக்கருமாணிக்கம்’ என்று சுட்டுகிறார். என்கண் உளதாகும்-ஏழ் உலகத்துள்ளார் வாசி அறிந்திலர்; அவ்வாசி அறியுமவராகையாலே ‘என் கண் உளதாகும்’ என்கிறார். கண் என்று இடமாம், என்னிடத்தாகும் என்னவுமாம். மாணிக்கம் என்கையாலே, ‘உளதாகும்’ என்கிறார்.

1. இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இடத்திருக்கையில் ஸ்ரீபாஞ்சஜன்யமானது
அப்போது அப்போது பிறந்த வெற்றியை நினைத்து ஆரவாரித்தது; எரி
கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி – அங்ஙனம் ஆர்ப்பதற்கு
அவசரமின்றிக்கே, திருவாழி, நெருப்பை உமிழ்ந்து பகைவர்களை ‘வாய், வாய்’
என்று ஒடுங்கப்பண்ணியது; விடங்காலுந் தீவாய் அரவணை-
திருவனந்தாழ்வான் பகைவர்கள் மேலே கிடந்த இடத்தே கிடந்து
நெருப்பை உமிழ்ந்தான்; அவன், ஆங்கு ஆரவாரமது கேட்டு அழலுமிழும்
பூங்கார் அரவணை’யாவன் அன்றே? அப்பரமபதத்திலும் இப்படிச்
செய்யுமவன், பகைவர்கள் நிறைந்திருக்கும் இத்தேசத்தில் இப்படிச்
செய்யச்சொல்ல வேண்டுமோ? ஆங்கு ஆரவாரமாவது, “அஹமந்நம்
அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாத: அஹமந்நாத: அஹமந்நாத:” என்னும்
ஆரவாரம். அஹமந்நம்-நான் பகவானுக்கு இனியன்; அஹமந்நாத: – நான்
பகவானாகிற இன்பத்தை அனுபவிக்கிறவன். (தைத்திரீய உபநிடதம், பிரு. 10.)
‘அங்கே அது கேட்டு அப்படிப் படுகின்றவர்கள் இத்தேசத்தில் இது
கண்டால் சொல்ல வேண்டுமோ?’ என்றபடி. ‘இவர்கள் இப்படி
அலமருகைக்கு அடி என்?’ என்னில், அரவணைமேல் தோன்றல்
திசையளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது-திருவனந்தாழ்வானைப்
படுக்கையாகவுடைய சர்வேஸ்வரன் காடும் ஓடையும் அளக்கைக்காகப்
புஷ்பஹாஸ சுகுமாரமான திருவடிகளை நிமிர்த்த போது, எல்லாம்
படவேண்டாவோ அவன் இப்படி வியாபாரியாநின்றால்?’
(இரண்டாந்திருவந். 71.)

நினைவு இன்றி இருக்க மகா பலி எதிர் பார்க்காமல்
வடிவு அழகை
தன் உடைமை  தான் யாசித்து பெற்றான்
ஆழ்வார் ஓட -இசைவித்து தன் தாள் இணை கீழ் வைக்கும் அம்மான்
தானே வந்து வடிவு அழகை காட்டு இனியர் ஆகிறார் -தான் ஒரு நினைவு இன்றிக்கே இருக்க –
இனி நின்ற நீர்மை இனி உறாமை யாசித்தாரா -பிறர்தித்தாரா –
பேற்றின் கனத்தை பார்த்தால் இது எல்லாம் சாதனமே இல்லை
லாட்டரி சீட்டு வாங்கி -வாங்காதவனுக்கு கிடக்காதே -அது போல்
அத்வேஷம் ஆபி முக்கியம் பரம பக்தி வரை பேற்றுக்கு ஈடாகாது
அக்கரு மாணிக்கம்-வடிவு அழகை காட்டி –
பொரு மா -நீள் படை -திவ்ய ஆயுதங்கள்
எழ உலகம் தொழும் படி
ஒரு மாணி குறளாகி நிமிர்ந்த
ஆயுதங்கள் பொரு –
திரு உலகு அளந்த போது நமுசி போல்வார் இடம் பொருததை சொல்கிறது
முன்னைய வண்ணமே -மன்னு நமுசியை  வானில் சுழற்றிய
ஒருவர ஒருவர் அதி சங்கை பண்ணி போருகின்றனவாம்
இடம் கை -வலம் புரி நின்று ஆர்ப்ப -நம் பிள்ளை வியாக்யானம்
தொனிக்க -எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி
விஷம் உமிழ்ந்து -தோன்றல்-அரவு ஆணை மேல்
திசை அளப்பான் பூவர் அடி நிமிர்த்த போது திசைகள் எல்லாம் அளப்ப போத
ஆங்கு ஆராவாரமது கேட்டு
நின்று ஆர்ப்ப அப்பொழுது அப்பொழுது
விஜயம்தோறும்
ஒவ் ஒரு உலகம் அளக்கும் பொழுது
நீள் படை போரும்
எரி கான்று -நெருப்பை உமிழ்ந்து விரோதிகளை வாய் வாய் என்று ஒடுங்க பண்ணிற்று
விடம் காலும் தீ வாய் அரவணை
கிடந்த இடத்தே கிடந்தது
ஸ்ரீராப்தி -இருந்த இடத்தில்
நெருப்பை உமிழ்ந்தான்
விரோதி பூயிஷ்டமான இத் தேசத்தில் -அவன் இப்படி செய்ய சொல்ல வேணுமோ
அங்கே உள் பட செய்வான்
ஆங்கு ஆராவரம் அது கேட்டு -சாம கானம் கோஷம்
அஹம் அன்னம் அஹம் அன்னம் –அஸ்தானே பய சங்கை -விரோதிகள் நுழையவே முடியாதே
ஞானம் சங்கோசம் ஏற்படாத இடம் பிரமை கூட  வராதே -அங்கே சத்வமே -நிலவும்
விஷய வைலஷ்ணயம் அடியாக -வந்தது –
விடம் காலும்-தீவாய் அரவணை
ஆங்கு தேசம் அது ஆரவாரமும் அது -சாம கானம் வேதானாம் சாம வேதோ அஸ்மி –
சங்கை வர கூடாத இடம் -நித்ய முக்தர் கோஷம் இனிமை தான்
பரிவு பொங்குவதை காட்ட
அங்கே அது  கேட்டு அப்படி படுகிறவர்கள்
இங்கே இது கண்டு இப்படி -பட  சொல்ல வேணுமோ –
அலமருக்கைக்கு அடி என்
அரவணை மேல் தோன்றல் -மென்மை
காடும் ஓடையும் அளக்க புஷ்பகாச சுகுமார திருவடியைநிமிர்த்த போது எல்லாம் பட வேண்டாவோ
பூவார் அடி –
பொன் தகட்டில் மாணிக்கம் போல் அரவணையில் படிந்த கரு மாணிக்கம்
பொரும் மா நீள் படை –
தன்னில் தான் பொருது -அஸ்தானே பய சங்கையில் ஒருவர் ஒருவரை பொருது
இளைய  பெருமாள் குக பெருமாள் குக பெருமாள் பரிகிரகம் -அதி சங்கை செய்தது போல் –
ஒரு நாள் முகத்தில் பட்டவரை வடிவு அழகு படுத்தும் பாடு -அங்கே
ராகவன் சரணம் கதா -வந்த விபீஷணன் வத்யதாம் கொல்ல தக்கவன்
பெருமாளுக்கு  என்ன செய்வானோ பயம் -சுக்ரீவன்
பரதச்ய வதே தோஷம்- ந பஸ்யாமி -இளைய பெருமாள் பரதன் மேல் சங்கை -கைகேயியை நல்லவள் ஆக்கி விடுவான்
பயப்பட வேண்டாத இடத்தில் பயம்
மா –
அவற்றில் வடிவில் பெருமை
ஆஸ்ரித விஷயத்தில் அவனில் இவற்றுக்கு உள்ள பஷ பாதம் -குணங்களில் பெருமை
விஷ்ணுதர்மம் -க்ரிஷ்ணச்யபிரியாமல் ரஷ்யந்தி -சகல ஆபத்தில் இருந்தும் -விஷ்ணுவை உபதேசிதவனை
சர்வேஸ்வரன் எதிரி  யானாலும் காக்கும் –
ஆகை இறே -மெல்ல மெல்ல பின் தொடர்ந்தது சென்றது –
சரணாகதி ஆவாரோ என்ற நப்பாசையால் காக்காசுரனை
துர்வாசர் -அம்பரீஷன் தீர்த்தம் சுவீகரித்து -சபிக்க -அம்பரீஷன் காலில் விழ

கழுத்தை அறுக்க போனாலும் –
பிராட்டி புருஷகாரம் வளையம்
எம்பெருமானே ஏவிய அஸ்தரமும் மெல்லே சரணாகதி ஆவாரோ என்கிற நப்பாசை
ஆகையிலே சரணாகதி செய்ய முடிந்தது பின்
பொரு மா நீள் படை
மகத்தை
நீள் படை -ஆயிரம் காதம் பறக்கும் கருடன் குட்டி பிறந்த உடனே ௫௦௦ காதம் பறக்கும்
அவனிலும் மூர் பட்டு இருக்கை
ஆயுதங்களும் அவன் கூட வளர்ந்ததே உலகு அளந்த பொழுது
ஒக்க வளரும் -ஆழி எழ சங்கும் வில்லும் எழ
உலகம் கொண்ட வாறே
அப்படி வளர்ந்த
கதா புனா ஆசை படும் திருவடி கொண்டு
துத்வத் சரணாம் புஜம் -ஆசை படைத்தார் அனைவர் தலையிலும் வைத்து
திரு -ஐஸ்வர்யா சூசகம்
சங்கு சக்கரம் பொறித்த
மா பரம பூஜ்யம் ஆனா திருவடி
நீள் கழல் ஆசா லேசம் உள்ளார் மேல் தீண்டும் திருவடி
திரு கமல பாதம் வந்து என் கண்ணுள்ளே ஒக்கின்றதே
என் அளவு  வந்து
குண திசை பாதம் நீட்டி -என் அளவும் மண்டங்குடி வரை நீண்டது -கிழக்கே தான் திருவடி –
உத்தர சிரத்தர அடையவளஞ்சான் கொடஉண்டே
வர நீட்டிய திருவடி
ஏழு உலகும் தொழ சாதனா அனுஷ்டானம் பண்ணாதவரும் தொழும் படி
ஒரு ஒப்பற்ற -இந்த வடிவை இவனே கொளல முடியாத படி
மாணி  குறள் வாமன பிரமச்சாரி
கொண்ட கோல குறள் உருவாய் முன்
ஸ்ரீய\ பதி மான் தொலை போத்தி கொண்டு -அவள் கடாஷம் விழாமல்
இறப்பிலே தழும்பு எறுகை
குறளாகி -கோடியை காணி ஆக்கினது போல் –
பெரிய வடிவை கண்ணாலே முகக்கும் படி  சுருக்கி –
அடியிலே நீர் வார்த்த  கொடுத்த வாறே நிமிர்ந்தான்
வாசு தேவ தரு இறே –
சம்சார நிழல் கொடுக்கும் மரம்
நெய்தல் கடு அலர்ந்தால் போல் ஆகாச அவகாசம் வரை வடிவு அழகு பரப்பின படி
அக்கரு மாணிக்கம்
 அ- அந்த மயர்வற மதி நலம் அருளினவனாலும் பரிசெதிக்க ஒண்ணாத படி
என்கண் உளதாகுமே
என் கண் -என்னிடம் உளதாகும்
கரு மாணிக்கம் என்பதால் கண்ணில்  கரு விழி

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-9-10–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

September 25, 2012

 நெற்றியுள் நின்றுஎனை ஆளும்
நிரைமலர்ப் பாதங்கள் சூடிக்
கற்றைத் துழாய்முடிக் கோலக்
கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறைஅணிந் தானும்
நான்முக னும்மிந் திரனும்
மற்றை அமரரும் எல்லாம்
வந்துஎனது உச்சியு ளானே.

பொ-ரை : ஒரு கலையுடன் கூடின பிறைச்சந்திரனை அணிந்திருக்கின்ற சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் மற்றும் இருக்கின்றதேவர்கள் எல்லோரும், எனது நெற்றியிலே நிலைபெற்று என்னை அடிமைகொள்ளுகின்ற மலர்போன்ற இரண்டு திருவடிகளையும் தங்கள் தங்கள் தலைகளின்மீது அணிந்துகொண்டு, தொகுதியான திருத்துழாய் மாலையினைத் தரித்த திருமுடியையுடைய அழகிய கண்ணபிரானை வணங்குவார்கள்; அவர்கள் அவ்வாறு வணங்கிக்கொண்டிருக்க, அக்கண்ணபிரான் வந்து எனது உச்சியிலே புகுந்தான்.

வி-கு : ‘ஆளும்’ என்ற எச்சத்தைப் ‘பாதங்கள்’ என்னும் பெயருடனும், ‘சூடி’ என்னும் எச்சத்தைத் ‘தொழுவார்’ என்னும் வினையுடனும் முடிக்க. தொழுவார், முற்று.

ஈடு : பத்தாம் பாட்டு. ‘பிரமன் முதலான தேவர்கள் தன்னைப் பெறுகைக்குக் காலம் பார்த்துத் தடுமாறும்படி இருக்கிறவன் தான் 1என்னைப் பெறுகைக்குக் காலம் பார்த்து வந்து என் உச்சியுள் ஆனான்,’ என்கிறார்.

நெற்றியுள் நின்று எனை ஆளும் – நெற்றியுள் நின்று என்னை அடிமை கொள்ளுகின்ற. நிரை மலர்ப்பாதங்கள் சூடி – மலரை நிரைத்தாற்போன்று இருக்கின்ற திருவடிகளைத் தலைகளிலே சூடி. கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார் – செவ்வி பெற்றுத் தழைக்கிற திருத்துழாயோடே கூடின திருமுடியையுடையவனாய்க் காட்சிக்கு இனிய வடிவையுமுடைய உபகாரத்தைச் செய்கின்றவனான கிருஷ்ணனைத் தொழுகின்றவர்கள். ஒரு வாடல் மாலையைக் கொண்டு வந்து திருமுடியிலே வைத்தாலும், திருக்குழலின் சம்பந்தத்தால் செவ்வி பெற்றுத் தழையாநிற்குமாதலின் ‘கற்றைத் துழாய் முடி’ என்கிறார். கற்றை – தழைத்தல். 2‘தழைக்குந் துழாய்’ என வருமாறுங்காண்க. ஒற்றைப்பிறை அணிந்தானும் – ஒரு கலையோடு கூடிய சந்திரனைச் சடையிலே தரித்துச் சுகத்தில் மிகுந்தவனாய் இருக்கிற சிவபெருமானும். நான் முகனும்-அவனுக்குத் தந்தையான பிரமனும். இந்திரனும்-தேவர்களை3மெய்க்காட்டுக் கொண்டிருக்கிற இந்திரனும். மற்றை அமரரும்எல்லாம் – மற்றும் உண்டான தேவர்களும் எல்லாம். எனது உச்சியுளான்-தேவர்கள் தன்னைப் பெறுகைக்கு இப்படித் தடுமாறாநிற்க, என்னைப் பெறுகைக்கு அவற்றை எல்லாம் தான் பட்டு வந்து, என் உச்சியிலுள்ளவன் ஆகின்றான். இராசாக்கள் அந்தப்புரத்தில் ஒரு கட்டினின்றும் மற்றைக்கட்டு ஏறப்போகாநிற்க, அந்தரங்கர் நடுவே முகங்காட்டித் தம் காரியங்கொண்டு போமாறு போன்று, இறைவன் இவர் திருநெற்றியினின்றும் திருமுடி ஏறப் போகாநின்றால் பிரமன் முதலான தேவர்கள் நடுவே முகங்காட்டித் தங்கள் காரியம் கொண்டு போவர் ஆதலின், ‘அமரரும் எல்லாம் தொழாநிற்க வந்து எனது உச்சியுளான்’ என்கிறார்.

அவசர ப்ரேதீஷரையாய் பிரமாதிகள் இருக்க
என்னை பெருகைக்கு -காத்து இருந்து -உச்சி உளானே
நெறியுள் நின்று என்னை அடிமை கொள்கிற
என்னை ஆளுகின்ற திருவடிகள்
திரு மண் காப்பை காட்டும்
பாதங்கள்-தொழுவார் –
கற்றை துழாய் -திரு குழலின் ச்பர்சத்தால் தலைக்கும் திரு துழாய்
கோல அழகு தர்சநீயம்
உபகாரன் கிரிஷ்ணனை தொழுவார்
சந்தரனை தலையிலே சரித்து -சும்மாட்டில் வைத்து கொண்டு
சுக பிரதானன் –
தேவர்களை மேய்க்காட்டு கொண்டு இருக்கிற இந்த்ரன் மெய்யை காட்டு எல்லாரும் போந்தாரோ
மற்ற அமரர் வந்து
தடுமாறா நிற்க
அது எல்லாம் என்னை பெற தான் தடுமாறி
ராஜாக்கள் அந்த புரத்தில்-ஒரு கட்டில் தண்டு வேறு கட்டில் போகா நிற்க நடுவே  -நடுவே அந்தரங்க முகம் காட்ட
தம் கார்யம்  கொள்வது போலே
இவன் ஆழ்வார் திரு நெற்றியில் இருந்து திருக் கண் போகும் பொழுது  திரு முகம்
ப்ரமாதிகள்வந்து தங்கள் கார்யம் கொள்வர்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-9-9–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

September 25, 2012

1கமலக் கண்ணன்என் கண்ணின் உள்ளான்
காண்பன் அவன்கண்க ளாலே
அமலங்க ளாக விழிக்கும்
ஐம்புல னும்மவன் மூர்த்தி
கமலத்து அயன்நம்பி தன்னைக்
கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகம்
ஆக்கிஎன் நெற்றி யுளானே.

    பொ-ரை : செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய இறைவன் என் கண்களுக்கு விஷயமானான். யானும் அவனைக் காண்கின்றேன். நான் குற்றமற்றவன் ஆகும்படி அவன் தன் திருக்கண்களாலே நோக்குகிறான். ஐம்பொறிகளும் சரீரத்தைப் போன்று அவனுக்கு அடிமையாகிவிட்டன. தாமரைமலரில் வீற்றிருப்பவனும் எல்லாக் குணங்களும் நிறைந்தவனும் ஆன பிரமனைச் சிவபெருமானோடு படைத்து, பின், குற்றம் அற்ற ஏனைய தேவர்களோடு உலகங்களையும் படைத்த இறைவன், இப்பொழுது என் நெற்றியில் தங்கி இருக்கின்றவன் ஆனான்.

வி-கு : விழிக்கும் – செய்யுள் என் முற்று. ‘தோற்றி’ என்னும் எச்சத்தை ‘ஆக்கி’ என்னும் வினைப்பெயருடன் முடிக்க. ஆக்கி என்பது, ‘நூற்றுவரைக்கொல்லி, சேர்ந்தாரைக்கொல்லி’ என்பன போன்று வந்த வினைப்பெயர். ஆக்கி – உண்டாக்கினவன்.

ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘கண்ணிலே நின்ற நிலை பொறுத்தவாறே என் நெற்றியிலே வந்து நில்லாநின்றான்,’ என்கிறார்.

கமலக்கண்ணன் என் கண்ணின் உள்ளான் – புண்டரீகாக்ஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான். 1‘இறைவன் கண்ணுக்குப் புலப்படுமவன் அல்லன்,’ என்னும் மரியாதை குலைந்தது. ‘அவன் அவ்வடிவை உம்முடைய கண்ணுக்கு விஷயமாக்கினான் ஆகில், நீர் பின்னைச் செய்வது என்?’ என்னில், காண்பன் – நானும் கண்டு அனுபவியாநின்றேன். ‘உலகத்திற்கே வேறுபட்ட இறைவனை நீர் கண்டு அனுபவிக்க வல்லீரானபடி எங்ஙனே?’ எனின், அவன் கண்களாலே அமலங்காக விழிக்கும் – அவன் தன் திருக்கண்களாலே என் குற்றம் எல்லாம் கழிந்து நான் காண வல்லேனாம்படி குளிர நோக்குகின்றான். ‘ஆயினும், காண்கைக்குத் தடைகளாக இந்திரியங்கள் என்பன சில உளவே? அவை செய்வன என்?’ என்ன, ஐம்புலனும் அவன் மூர்த்தி – காட்சிக்குத் தடைகளான ஐம்பொறிகளும் அவன் இட்ட வழக்காம்படி அவனுக்குச் சரீரத்தைப் போன்று உரிமைப்பட்டு அங்கேயே1படை அற்றன, கமலத்து அயன் நம்பிதன்னைக் கண்ணுதலானொடும் தோற்றி அமலம் தெய்வத்தோடு உலகம் ஆக்கி-திருநாபிக் கமலத்தில் நேரே பிறந்து, எல்லாரிலும் வேறுபட்ட பிறவியையுடையவனாய், தனக்கு இப்பால் உள்ளவற்றைப் படைக்குமிடத்தில் சர்வேஸ்வரனைக் கேள்வி கொள்ள வேண்டாதபடி ஞானம் நிறைந்த நான்முகனை நெற்றிக்கண்ணனான சிவபெருமானோடு உண்டாக்கி, அவ்வளவில் முடிவு பெறாமல், சத்துவகுணம் மிக்குள்ள தேவர்களோடே உலகங்களை உண்டாக்கினவன். ‘நெய்யுண்ணி’ என்னுமாறு போன்று ‘ஆக்கி’ என்றது, ‘ஆக்குந் தன்மையன்’ என்றபடி. என் நெற்றியுளான் – 2கர்மங்களுக்குத் தகுதியாக உலகத்தை உண்டாக்கிவிட்டான்.3‘பிரயோஜனத்தில் விருப்பம் இல்லாமல் என் நெற்றியில் புகுந்து நின்றான்’ என்பார், ‘நெற்றியுளானே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகின்றார்.

 

கண்ணில் நின்று -சாத்மின்ற வாறே நெற்றிக்கு -வந்தான் –
காண்பான்-அவன் கண்களால் அமலங்களாக தோஷம் போக்க கடாஷிக்கும்
ஐம் புலன்களும் அவனில் ஈடு பட்டு
கமலத்து அயன் பரமன் உடன் -உலகம் ஆக்கி -ஆகியவன் –
மரம் ஏறி தேங்காய் பறித்தான் -மரம் ஏறுகிறவன் -தொழிலை உடையவன் –வினையால் அணையும் பெயர் –
மரம் ஏறித் தேங்காய் பறித்தான் -வினை எச்சம்
கோதை சொன்ன தமிழ் -சங்க பாடல்
கோதை சொன்ன  மாலை -நாயனார் =மாலை கட்ட போன இடத்தில் கிடைத்த பெண்ணுக்கு கோதை
சீதா கலப்பை நுனி
மாலை கட்டின மாலை
மாலைக் கட்டின மாலை திரு மாலை கட்டி போட்டாள் –
பிரதமா விபத்தியில் க் வராது
ஒரு க் இல் அர்த்தம் மாறும்
அப்படி பட்டவன் என் நெற்றியில் உள்ளான்
புண்டரீகாட்ஷன் என் கண்ணுக்கு
சஷிஷா பார்க்க முடியாது வேதாந்தம்மரியாதை குலைய
காண்பான் கண்டு அனுபவியா நின்றேன்
வல்லீர் ஆன படி எங்கனே
அவன் கண்களாலே பார்த்தேன்
அமலங்களாக விளிக்கும் –தோஷம் போக்க கடாஷித்தாலே –
காண வல்லேனம் படி குளிர கடாஷிக்க
பிரதி பந்தங்கள் இந்த்ரியங்கள் உண்டே என்ன -அது என்ன ஆகும்
ஐம்புலன்களும் அவன் மூர்த்தி அவன் சரீரம் -அந்தர்யாமி –
அவன் இட்ட வழக்காம் படி உடலை போலே விதயம்
அங்கே படை அற்றன கூடின
ஜகத் ஸ்ருஷ்டினவன்
கண் நுதலான் ருத்ரன் –
கமலத்து அயன் பிரமன்-அவயவதானே பிறந்து -நேராக சிருஷ்டித்து –
அமலத் தெய்வத்தோடு உலகம் ஆக்கி
முனிவரை இடுக்கியும் -ரிஷிகள் கொண்டு சாஸ்திரம் -இடுக்கி ஆக இவர்களை கொண்டு
முந்நீர் வண்ணனாய் வெளி இட்டது திரு மந்த்ரம் -உசந்தது –
பிரமனை தானே உண்டாக்கி -நம்பி -விசாதீயமான ஜன்மம் நம்பி
பூரணன் -சிருஷ்டி உண்டாக்கும் இடத்தில் நிரபேஷன் –
தோற்றி -அமலத் தெய்வத்தோடு உலகம் ஆக்கி
ஆக்கும் ஸ்வாபம்
கர்ம அனுகுணமாக ஜகம் சிருஷ்டித்து
பிரயோஜனம் எதிர் பார்க்காமல் நெற்றியில் வந்தான் –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-9-8–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

September 25, 2012

நாவினுள் நின்று மலரும்
ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே
அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியல் நால்தடந் தோளன்
பொருபடை ஆழிசங்கு ஏந்தும்
காவிநன் மேனிக் கமலக்
கண்ணன்என் கண்ணி னுளானே.

பொ-ரை : நாவின் நுனியினின்றும் உண்டாகின்ற ஞானத்தைத் தருகின்ற எல்லாக் கலைகளுக்கும் உயிரும் உடலும் தானே யாவன்; அக்கலைகளை அழிக்கின்றவனும் அவற்றை அழியாமல் காக்கின்றவனும் தானேயாவன்; பூவின் தன்மையினையுடைய நான்கு திருத்தோள்களையுடையவன்; போர் செய்கின்ற ஆயுதங்களாகிய சக்கரத்தையும் சங்கையும் தரித்திருக்கின்ற நீலோற்பலம் போன்ற நிறம் பொருந்திய திருமேனியினையும் தாமரை போன்ற திருக்கண்களையுமுடையவன் ஆன எம்பெருமான் என் கண்ணிலே தங்கியிருக்கிறான்.

வி-கு : ஈண்டு ‘ஆவி’ என்றது, சொற்களால் அறியப்படும் பொருள்களை; ‘யாக்கை’ என்றது, சொற்களை. நால் – நான்கு.

ஈடு : எட்டாம் பாட்டு. 1‘எல்லாக் கலைகளாலும் அறியப் படுகின்ற சர்வேஸ்வரன், பிரமாணங்களாலே காணக்கூடிய வடிவை என் கண்ணுக்கு விஷயமாக்கினான்,’ என்கிறார்.

 நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்-நாவின் நுனியில் மலர்கின்ற ஞானத்திற்குக் கருவியான கலை விசேடங்களுக்கு எல்லாம். ஆவியும் ஆக்கையும் தானே – ‘இப்பொருளை இச்சொல் காட்டக்கடவது’ என்று நியமித்துவிட்டவன் அவன் என்றவாறு. ஆக, சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள சம்பந்தம் அவன் இட்ட வழக்கு என்றபடி. அழிப்போடு அளிப்பவன் தானே – சிற்றறிவினர்களான இம்மக்களுடைய நினைவின் குற்றங்களாலும், எழுதுங்காலத்து உண்டாகும் குற்றங்களாலும், பாடபேதங்களாலும், கலைகள் உருமாயும் அளவில் அழித்தும், விரும்புகிற காலத்தில் உண்டாக்கியும் செல்கின்றவன் தானே. இனி, இதற்கு, 1‘மற்றை அழித்தல் அளித்தல்களை அருளிச்செய்கிறார்’ என்று பொருள் கூறுவாரும் உளர். பூ இயல் நால் தடம் தோளன் – 2பூவால் அல்லது சொல்லாதபடி சுகுமாரமாய், கற்பகத்தரு பணைத்தாற்போன்று நான்காய், சுற்றுடைத்தாய் இருக்கிற திருத்தோள்களையுடையவன். இனி, ‘பூ இயல் தோள்’ என்பதற்குப் ‘பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தோள்’ என்று பொருள் கூறலுமாம். பொரு படை ஆழி சங்கு ஏந்தும்-பணைத்துப் பூத்த கற்பகத்தருப்போலேயாயிற்று, போருக்குக் கருவிகளான திவ்விய ஆயுதங்களைத் தரித்தால் இருக்கும்படி. போர் செய்வதற்குக் கருவிகளாய் இருத்தலின், ‘பொருபடை’ என்கிறார். காவி நல்மேனி-அவ்வாயுதங்களாலே விரோதியைப் போக்கி அனுபவிப்பிக்கும் வடிவழகு. காவி, வடிவழகிற்கு உவமானமாக நேர் நில்லாமையாலே ‘நன்மேனி’ என்கிறார். கமலக்கண்ணன் என் கண்ணினுளானே – திருமேனியின் அழகாகிய பெருவெள்ளத்திலே ஒரு சுழி போன்று திருக்கண்கள் இருத்தலின் ‘நன்மேனிக் கமலக் கண்ணன்’ என்கிறார். வெளிப்பொருள்களை நுகர்ந்து போந்த இவருடைய கண்களுக்கு இறைவன் தன்னை விஷயமாக்கினான் ஆதலின், ‘என் கண்ணினுளான்’ என்கிறார். இவர் கண் வட்டம் ஒழியப் புறம்பே போனால் 3கண்வட்டக்கள்ளனாம் ஆதலின், ‘கண்ணினுளானே’ என ஏகாரங்கொடுத்து ஓதுகின்றார்.

 

சகல வித்யா வேத்யனான சர்வேஸ்வரன் – வதம் ஒன்றாலே தெரிவிக்க
பிரமாணங்களால் காண கூடியவன் கண்ணுக்கு விஷயம் ஆனான்
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகள் -சாஸ்திரம் -வெளிப்பட –
ஆச்சார்யா உச்சாரண அணு உச்சாரணம் – மூலம் -எழுதா கிளவி –
வித்யாஸ்தானம் அனைத்துக்கும் நாக்கு வேண்டுமே –
ஆவி ஆக்கை பிராணன் சரீரம் இரண்டும் தானே
அழிப்போடு அளிப்பும் அவனே
பூவியல் தோள் உடையவன்
பொரு படை சங்கு ஆழி எந்துபவன்
காவி புஷ்பம் போல் திரு மேனி காயாம்பூ போல்
கமல கண்ணன்
ஜிஹ்வா அகரத்தில் விகசியா நின்று உள்ள வித்யா அனைத்துக்கும்
ஆவி அர்த்தம் ஆக்கை சப்தம் -இட்ட வழக்கு
இவ்வர்த்தத்தை இந்த சப்தம்  என்று நியமித்தான் அவன் –
சப்த அர்த்த சம்பந்தம் அவன் இட்ட வழக்கு ஆனது
அழிப்போடு அளிப்பவன் தானே
இரண்டுமா என்றல்-
-மந்த மதிகளான சேதனர் -பிரதி தோஷம் ஈடு பாடு இன்றி -இருக்க –
எழுதும் தோஷம் வேற உண்டே –
ஓலை சுவடி -300 வருஷம் -1000 வருஷம் இருக்காது என்கிறார்கள்
உரு மாற -மூல சுவடிகள் கிடைக்காமல் –
படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்
சரஸ்வதி பண்டாரம் யோகி பார்த்த சாரதி ஐயங்கார் ஈடு அச்சு முன்பு போட்டார் பிரதி கிடைக்க வில்லை
வித்வான்களை வைத்தே அச்சு போட்டாராம் –
போதன கால விஸ்மித-கௌசல்யா சுப்ரஜா –
கோவிந்த ராஜர் –
பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் அடி ஒற்றி –
அழகான திரு முக மண்டலம் பார்த்ததும் இவனை பெற்றவளும் –
என்ன நோன்பு நோற்றாள் கொலோ -உன்ன புக்கு வாயை மறபபாரைப் போலே தனி ஸ்லோக வியாக்யானம் –
எழுப்ப நினைத்த ரிஷி இவனை மறந்து பெற்றவளை –
போஜன காலே விஸ்மிர்த்த முகம் -மறந்து விட்ட முகம் இருக்க வேண்டும்
எழுப்பும் காலம் தானே போதன
விஸ்மித
இப்படி மாற்றி அச்சு போட்டு
காஞ்சி ஸ்வாமி காட்டி திருத்திய இடம்
சென்றால் குடையாம் -ஓலை சுவடி பார்த்து எழுதும் பொழுது நிறைய திண்டாடினாராம் வேம்கட கிருஷ்ணன் சுவாமிகள்
இத்தை முடிதல் கடத்தல் -இற்றை முடிதல் இருக்க வேண்டும் –
யானும் ஏத்தி -எல்லாரும் ஏத்தினாலும் –முசுகு வால் எடுத்தால் போலே இருக்கும் இறே
முசுகு வால் நீளமாக இருக்கும் குரங்கு கூச்சல் போல் இருக்கும்
முசுகு இல்லை முசு தான்
காண எங்கும் முசுவும் பட
குவால் சந்தோஷம்
முசு குவால்  எடுத்தால் போல் குரங்கு சந்தோஷம்-அர்த்தம் –
லேகா பிரமாதம் -எழுத்து பிழைகள் –
எம்பெருமானே முடிவு அழிப்போடு -முடித்தல் செய்கிறான்
பாட பேதம் வேற வரும் தப்பான அர்த்தம்
உரு மாறும் பொழுது சம்கரிக்கும் –
அளிப்போடு-ஸ்ருஷ்டித்தும் வெளிப்படுத்தியும் –
தத்வ விவேகம் -பிள்ளை லோகாசார்யர் -அடையார் லைப்ரரி கண்டு -தத்வ த்ரயம் –
மா முனிகள் பிரமாணம் காட்டி -அச்சு போட்ட வருஷம் 800 திரு நஷத்ரம்
அபேஷித்த சமயம் வெளி இட்டும்
நான்கு ஓலை சுவடி பார்த்து வெளி கொண்டு வர வைக்கும் சக்தி கொடுத்து
நம்பிள்ளை -கரையானுக்கு இறை ஆக்கி -அழித்தார்-கால ஷேப முறை தப்ப ,கூடாது –
ஈடு கத்து -ஆரு கை மாறி மா முனிகள்
இயற்பா நம்பிள்ளை வியாக்யானம் -கிடைத்தது -விச்தரமாக –
அளிப்போடு அழிப்பவன் –
ஆவியும் ஆக்கியும் தானே
அளிப்போடு அழிப்பவன்
கிரந்தம் மட்டும் இன்றி லோக சிருஷ்டி சம்காரம் என்பாரும் உண்டு
கல்பக மரம்  பூத்து குலுங்குவது   போல் தோள் கள்
பூ போன்ற மென்மை –
பூவால் அளந்க்ருதம்
பொரு படை -கிளைகள் போல் தோள்கள் பூ போலே திவ்ய ஆயுதங்கள்
யுத்த சாதனங்கள்
காவி நன் மேனி -ஆயுதங்கலல்விரோதி போக்கி வடிவு அழகு அனுபவிக்க
காவி -உபமானம் ஒட்டாமல் நன் மேனி என்கிறார்
கமலக் கண்ணன்
கண் வட்ட கள்ளன் -கண் வட்டம் இன்றி புறம்பே போனால்
நாணய சாலையில் நாணயம் திருடுபவன் கண் வட்ட கள்வன்
சிநேகித்தான் சொல்லை மறந்தால் கண் வட்டம் போக வெட்கி –
கிருத்ரம பணம் போட்டவன்
தங்க சாலை -மின்ட் அங்கு இருந்தது –
பெரு வெள்ளத்தில் ஒரு சுழி போலே கமலக் கண்ணன்
பிரக்ருத விஷயமனுபவித்த கண்ணில் உள்ளானே

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-9-7–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

September 25, 2012

 தோளிணை மேலும்நன் மார்பின்
மேலும் சுடர்முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த
தண்அம் துழாயுடை அம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான்
கிளரும் சுடர்ஒளி மூர்த்தி
நாளணைந்து ஒன்றும் அகலான்
என்னுடை நாவி னுளானே.

 பொ-ரை : இரண்டு தோள்களிலும் சிறந்த மார்பிலும் ஒலியையுடைய திருமுடியிலும் இரண்டு திருவடிகளிலும் அணிந்திருக்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயினையுடைய தலைவன். தனக்கு உவமையாகப் பொருந்தத் தக்க பொருள் ஒன்றும் இல்லாதவன், மிக்க ஒளி பொருந்திய வடிவினையுடையவன், எப்பொழுதும் என்னைச் சேர்ந்து சிறிதும் அகலாதவன் ஆன எம்பெருமான் என் நாவினுள் இருக்கின்றவன் ஆனான்.

வி-கு : ‘மேல்’ என்பது ஏழனுருபு கேள் என்பது கேழ் என்றதன் விகாரம். கேழ்-ஒப்பு; ‘ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா’ (கம்பராமா.) என்றவிடத்து, ‘கேழ்’ இப்பொருட்டாதல் காண்க.

ஈடு : ஏழாம் பாட்டு. ‘நான் உகந்தபடியே அலங்கரித்துக் கொண்டு வந்து என் நாவிலே கலந்தான்’ என்கிறார். ‘ஆயின், இவர் உகந்தபடியே இறைவன் வருதற்குக் காரணம் யாது?’ எனின், தம்மால் காதலிக்கப்பட்டவர் இருக்கும் இடத்திற்குச் செல்லும் ஆடவர்கள், அவர்கள் விரும்புகிறவாறே பூசிப்புலர்த்தித் தம்மை அலங்கரித்துக்கொண்டு போமாறு போன்று, ஆழ்வார் இருக்கும் இடத்திற்குச் செல்லும் இறைவனும் ஆழ்வார் விரும்பிய வாறே திருத்துழாயால் தன்னை அலங்கரித்துக்கொண்டு சென்றான். இவர் உகப்பதும் திருத்துழாயே, அவன் கொடுப்பதும் திருத்துழாயே அன்றோ?1‘புள்ஊர்தி கள் ஊரும் துழாய்க் கொயல்வாய் மலர் மேல் மனத்’ தையுடையராய் இருப்பர். ‘எங்ஙனம்?’ எனின், திருத்தாயார் கூறும் போதும் 2‘வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர்’ என்பர். இவள் தானும் 3‘விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்’, 4‘கண்ணன் கழல்துழாய் பொன்செய் பூண்மென் முலைக்கு என்று மெலியும்’, இறைவனும், 5‘தன் மன்னு நீள்கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்’ என்கிறபடியே, இவளுக்கு அன்றி நல்கான்.தோள் இணை மேலும் – ‘அன்பினால் கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்’ என்கிறபடியே, அணைக்க விரும்புகிற திருத்தோள்களிலும், நன்மார்பின்மேலும் – அணைப்பிக்குமவள் இருக்கிற திருமார்பிலும். சுடர் முடி மேலும் – அணைத்துக்கொண்டு நின்று மேல் நோக்கிப் பார்த்தவாறே தன்னுடைய தலைமைக்குப் பிரகாசமாயிருக்கிற திருமுடியிலும். தாள் இணைமேலும் புனைந்த தண் அம் துழாயுடை அம்மான் தன்னுடைய இறைமையை நிலை நிறுத்துகின்ற திருவடிகளிலும் சாத்தின திருத்துழாயினையுடைய சர்வேஸ்வரன். இனி, இவ்வடிகட்குப் பட்டர் மிக அழகாகவும் ரசோக்தியாகவும் விசேடப்பொருள் அருளிச்செய்வர்; அப்பொருள் வருமாறு: வீரராய் இருப்பார் முற்பட ஆயுதத்திற்கு இடுவார்கள்; அப்படியே திருத்தோள்களுக்கு இட்டான். காதலர்களாய் இருப்பவர்கள் அன்புக்குரிய காதலிக்கு இடுவார்கள்; அப்படியே பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கும் 2கோயில் கட்டணத்துக்குக் கொடுத்தான்; ஆயுதத்திற்கும் காதலுக்கு உரியவர்களுக்கும் இட்டால், பின்னைத் தாம் தாம் அணிந்துகொள்ளுவார்கள் இத்தனையன்றோ? ஆதலின், தான் சூடினான்; சேஷம் பின்னர் அடியார் அன்றோ கைக்கொள்ளுவார்? ஆகையால், திருவடிகளுக்குச் சாத்தினான்; ஆபத்துக்குத் துணை செய்வார் அடியார் அன்றோ? தளர்ந்தும் முரிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயப் பொருவார் அடியாரே அன்றோ? ‘ஆயின், நம்முடைய ஆபத்துக்கு ஒழிய இறைவனுடைய ஆபத்துக்கும் திருவடி துணையாமோ?’ எனின், நம்முடைய ஆபத்துகளுக்குத் திருவடிகளே துணையாயினாற்போலே காணும் அவனுடைய ஆபத்துகளுக்கும் திருவடிகளே துணையாயினபடி.

கேள் இணை ஒன்றும் இலாதான் – கேள் என்ற இதனைக் ‘கேழ்’ என்றாக்கி, அதாவது, ஒப்பாய், இணை என்றும் ஒப்பாய், திரளவும் தனித்தனியும் ஒப்பு இல்லாதவன் என்றபடி. இனி, ‘கேள்’ என்று உறவாய், சேர்ந்த ஒப்பு இல்லாதவன் என்று கோடலும் ஆம். கிளரும் சுடர் ஒளி மூர்த்தி-ஆற்றுப் பெருக்குப் போன்று மேன்மேல் எனக் கிளராநிற்பதாய் எல்லை அற்ற ஒளி உருவமான திவ்விய மங்கள விக்கிரகத்தையுடையவன். ‘சுடர், ஒளி’ என்பன ஒரு பொருட்சொற்கள். ‘மிக்க ஒளி’ என்றபடி. இனி, ஒளி என்பதற்குப் பேரழகு என்று பொருள் கூறலுமாம். மேற்சொன்ன ஒப்பனையும் மிகை என்று கூறலாம்படியான வடிவையுடையவன் ஆதலின் ‘மூர்த்தி’ என்கிறார். நாள் அணைந்து ஒன்றும் அகலான் – நாள்தோறும் வந்து கிட்டுமத்தனை அல்லது கால்வாங்க மாட்டுகின்றிலன். என்னுடை நாவினுளான் – என்னுடைய துதிக்கு விஷயமானான். இனி இதற்கு ‘வாக்கில் இருந்துகொண்டு வாக்கின் உள் இருக்கிறான்,’ என்கிற படியே, ‘வாக்கு இந்திரியத்துக்கு அந்தர்யாமியாய் உள்ளவன்’ என்று கூறலும் ஒன்று.

1. திருவிருத்தம். 24.

2. திருவாய். 2. 4 : 5.

3. திருவாய். 2. 4 : 9. இப்பாசுரம் தாயார் கூற்றேயாயினும், ‘என்னும்’ என்று
மகள் ஆசைப்படுவதாகக் கூறுவதால் மகள் கூற்று என்னக்குறையின்று.

4. திருவாய். 4. 2. : 10. இப்பாசுரமும் அத்தன்மையதேயாம். இத்துணையும் இவர்
விரும்புவது திருத்துழாயே என்பதற்குக் காட்டிய மேற்கோள்கள்.

5. திருவாய். 6. 8 : 6. இது, ‘இறைவன் கொடுப்பதும் திருத்துழாயே’ என்பதற்கு
எடுத்துக்காட்டு.

நன் உகந்த படி அலங்கரித்து கொண்டு வந்து நாவிலே வந்தான்
திருத் துழாய் மாலை சமர்பித்து கொண்டு -ஆழ்வார் உகந்த படி அலங்கரித்து கொண்டு நன்றாக -நாவிலே கலந்தான்

தோள் இணை மார்பி சுடர் முடி தாள் இணை மேலும் துழாய்
ஒப்பு இல்லாதவன் –
மூர்த்தி கிளரும் சுடர் ஒளி தேஜஸ்
அணைந்து அகலாமல் -அபிமத விஷயத்துக்கு போவார் பூசி புலர்த்தி போவது போல்
இவர் உகப்பதும் அதுவே அவன் கொடுப்பதும் அதுவே திரு துழாய்
புள்ளூர்த்தி -திரு துழாய்
வண்டு துவளும் தண் அம்  துழாய்
கண்ணன் துழாய் ஆக மேலயும்
நமக்கு அன்றி நல்கான்
அணிந்து கொண்டு இருப்பது அடியார்களுக்கு கொடுக்க தான்
அணைக்க விரும்பும் தோள் இனையிலும் சாத்தி கொண்டு
பரம பதம் ஆலிங்கனம் –
மார்பின் மேலும் -அனைப்பிக்கும் அவள் இருக்கும் மார்பு
சுடர் முடி -மேல் நோக்கி பார்த்தால் சேஷி திரு அபிஷேகம்
தாள்- சேஷித்வம் சித்திப்பிக்கிற திருவடிகள்
வீரராய் இருப்பார் முற்பட ஆயுதம் இட்டு
அநந்தரம் அபிமத விஷயம் இடுவார் பெரிய பிராட்டியார் கோயில் கட்டணம்
பின்னை தான் தான் விநியோகம் செய்து கொள்ளும் முடி மேல் சாத்தி கொண்டு
மீது சேஷம் அடியாரே கை கொள்வார் அடியில் சாத்தி கொண்டான்
ஆபத்துக்கு உதவுபவர் அடியார் இறே-
தளர்ந்தும் முறிந்தும் -திருக்கால் ஆண்ட பெருமான் –
திருவடி ஆபத்து -நமக்கும் அவனுக்கும் திருவடிகளே துணை –
24000 படி
பற்றாசு பிராட்டி
வகுத்த விஷயம் சர்வாதிக லஷணம் திரு அபிஷேகம்
தோற்கும் திருவடிகள்
தாழ் இணை மேல் புனைந்த த ண் அம் துழாய் நமக்கே நல்குவான்
தோள் உபய காரர் பெற்று
திரு மார்பு தர்ம கர்த்தா பெற்று
திரு முடி -அர்ச்சகருக்கு பெற்று
தாள் இணை துழாய் நமக்கு அன்றி நல்கான் –
கேள் -கேழ் இணை ஒன்றும் இல்தான்
ஒப்பான் -இரண்டுமே -சொல்லி -தனித்தனியாகவும் திரலகாவும் ஒப்பு இல்லை
அவயவங்களுக்கும் -ஆபரனங்களுக்கும் –
கூட்டமாக வந்தாலும் ஒப்பு இல்லை -கேள் உறவாய்
சேர்ந்த ஒப்பு இல்லாதவன்
கிளரும் சுடர் ஒளி ஆற்று பெருக்கு போல்
மேலே மேலே
சுடர் ஒளி மிக்க ஒளி மீமிசை -போல் மூர்த்தி –
பேர் அழகு
ஒப்பனை எல்லாம் மிகை போன்ற வடிவு
நாள் அணைந்து   கிட்டுவான் அல்லது கால் வாங்க மாட்டான்
என்னுடைய சுருதி விஷயம் ஆனான் நாவில் உளான்
நாக்கிலே -உட்கார்ந்து வாக் இந்திரியதுக்கு விஷயம் அந்தர்யாமி ஆனான் –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.