திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-10-9–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

நம்பி யைத்தென் குறுங்குடி நின்றஅச்
செம்பொ னேதிக ழும்திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதிஅம் சோதியை
எம்பி ரானைஎன் சொல்லிம றப்பனோ.

பொ-ரை : அழகிய திருக்குறுங்குடி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை, அந்தச் செம்பொன் போன்று விளங்குகிற அழகிய திருமேனியையுடையவனை, பரமபதத்தில் எழுந்தருளியிருக்கின்ற நித்தியசூரிகளுடைய தொழில்கட்கெல்லாம் காரணனான பரஞ்சோதியை, எனக்கு உதவியைச் செய்தவனை நான் என்ன காரணத்தைக் கூறி மறப்பேன்?

வி-கு : ‘‘நம்பி’ என்பது, ‘நமக்கு இன்னார்’ என்னும் பொருள்பட வருகின்ற சொல்’ என்பர் சேனாவரையர். (தொ. சொ. 163.) மூர்த்தி – வடிவத்தையுடையவன். உம்பர் – மேலிடம். ‘மறப்பனோ’ என்பதில் உள்ள ஓகாரம் எதிர்மறை.

ஈடு : ஒன்பதாம் பாட்டு 2‘நீர்தாம் இங்ஙனே கிடந்து வருந்திஉழலாமல், இறைவனை மறந்து சம்சாரிகளைப்போன்று உண்டு

உடுத்துத் திரியமாட்டீரோ?’ என்ன, ‘நான் எத்தைச் சொல்லி அவனை மறப்பது?’ என்கிறார்.

நம்பியை – நற்குணங்கள் எல்லாம் நிறைந்தவனை. தென்குறுங்குடி நின்ற – கலங்காப்பெருநகரத்தைக் கலவிருக்கையாகவுடையவன், அத்தை விட்டு என்னைப் பற்றத் திருக்குறுங்குடியிலே காலத்தை எதிர் நோக்கிக்கொண்டு நிலையியற் பொருள்போன்று நின்றவன். பரமபதத்தில் குணங்களுக்குச் 1சத்பாவமே உள்ளது ஆதலானும், குணங்கள் நிறம் பெற்று நிறைவுடன் விளங்குதல் இங்கே ஆதலானும், ‘குறுங்குடி நின்ற நம்பியை’என்கிறார். இதனால், ‘குணங்களில் குறைவுள்ளவன், தூரத்திலேயுள்ளவன் என்று நினைத்து, நான் மறக்க வேண்டுமே,’ என்பதனைத் தெரிவித்தபடி. அச்செம்பொனே திகழும் திருமூர்த்தியை – உபமானம் அற்றதாய், 2ஓட்டு அற்ற செம்பொன் போன்று எல்லை அற்ற ஒளி உருவமாய், வாக்கு மனங்களால் அளவிட்டு அறிய முடியாத திவ்விய மங்கள விக்கிரகத்தையுடையவனை. இதனால் ‘வடிவழகிலே குறையுண்டாய்த் தான் மறக்கவோ?’ என்பதனைத் தெரிவித்தபடி.

உம்பர் வானவர் ஆதி அம் சோதியை – உண்டாக்கப்பட்ட இங்கேயுள்ள தேவர்களைப் போன்று அன்றி, மேலான நித்திய சூரிகளுடைய சத்து முதலானவற்றிற்கும் தானே கடவனாய், அவர்களுக்கு அனுபவிக்கத் தகுந்த திவ்விய மங்கள விக்கிரகத்தை உடையவனை. இத்தால்: அவ்வழகை அனுபவிக்க இட்டுப் பிறந்த நித்தியசூரிகளைச் சொன்னபடி. எம்பிரானை-அவர்கள் அனுபவிக்கும் 3படியை எனக்கு உபகரித்தவனை. என் சொல்லி மறப்பனோ – எத்தைச் சொல்லி மறப்பேன்? 4அபூர்ணன் என்று மறக்கவோ? தூரத்திலே உள்ளவன் என்று மறக்கவோ? வடிவழகு இல்லை என்று மறக்கவோ? மேன்மை இல்லை என்று மறக்கவோ? எனக்கு உபகாரகன் அலன் என்று மறக்கவோ? எத்தைச் சொல்லி மறப்பேன்? என்றபடி.

நீர் கிடந்துபட நில்லாதே சம்சாரிகள் போல் உண்டு உடுத்து இருக்கலாகாதோ
மறந்து விட்டு -தொலை காட்சி தொல்லை காட்சி பல உண்டே
எம்பெருமானை எப்படி மறப்பேன்
நம்பியை –
தென் குரும்குடி நின்ற
என் சொல்லி மறப்பேனே –
கல்யாண குண பரி பூரணன்
இங்கே தான் பூர்த்தி அங்கு வேலை இல்லை –
பூர்த்தி உள்ளதும் அர்ச்சையிலே
கலங்கா பெரு நகர் விட்டு –கரை கண்டோர் கலவிருக்கை கொலு இருக்கை –
என்னை பற்ற அவசர ப்ரதீஷனாய் ஸ்தாவர பிரதிஷ்டியாக நிற்கிறவன்
குணத்தில் குறை உண்டாதல்
தூரஸ்தன் என்றாலும் மறக்கலாம்
அச் செம் பொன்னே திகழும் திரு மூர்த்தி-
ஒப்பற்ற நிரவதிக தேஜஸ் -வாக் மனசால் பரிசெதிக்க ஒண்ணாத திருமேனி
வடி வழகு குறை இருந்தால் மறக்கலாம்
உம்பர் வானவர் -நித்ய சூரிகள் –
ஆக்கரான இவ்வுலகில் வானவர் போல் இன்றி -தேவர்கள் போல் இல்லை
நித்யர் மேலான -அவர்கள் சத்தாதிகளுக்கும் தானே கடவனாய்–ஆதி சப்தம்
அம் சோதி -அனுபவிக்க  திவ்ய திருமேனி உண்டே அங்கும்
எம்பிரான் -அவர்கள் அனுபவிக்கும் அப்படியை– திருமேனியை காட்டி
என் சொல்லி மறப்பேன்
அப்பூர்ணன் என்றோ
அசந்நிகிதன் என்றோ
வடிவு அழகு இல்லையோ
மேன்மை இல்லை என்று மறக்கவோ
உபகாரகன் இல்லை என்று மறக்கவோ

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: