திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-10-6–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

நீயும் நானும்இந் நேர்நிற்கில் மேல்மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே! சொன்னேன்
தாயுந் தந்தையு மாய்இவ் வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே.

பொ-ரை : தாய்தந்தையர்களைப் போன்று பரிவுள்ளவனாய் இவ்வுலகத்தில் வந்து அவதரிக்கின்றவனாய் நீலமணி போன்ற நிறத்தையுடையவனாய் உள்ள என் தமப்பன், வணங்கு என்று கூறுதற்குத் தகுதியாகவுள்ள நீயும் வணங்கச்சொல்லுகிற நானும் ஓர் எண்தானும் இன்றி நிற்றலாகிய இம்முறையில் நின்றால,் மேல் வருகின்ற காலத்தில் ஒரு வித நோயினையும் நம்மைச் சாரச் செய்யான்; நெஞ்சமே, சொன்னேன்.

வி-கு : ‘நாம் இந்நேர் நிற்குல் எந்தைமேல் ஓர் நோயும் சார் கொடான்,’ எனக் கூட்டி முடிக்க.

ஈடு : ஆறாம் பாட்டு. 2‘இப்படிச் சுலபன் ஆனவன் நம்மை விடான் அன்றே?’ என்ன, ‘நம் தாழ்மையை நினைத்து அகலா தொழியில் நம்மை ஒரு நாளும் விடான்’ என்று திருவுள்ளத்துக்கு அருளிச்செய்கிறார்.

நீயும் நானும் – அந்தப் புள்ளின்பின் போன நீயும், உன்னைத் துணையாகவுடைய நானும். இந்நேர் நிற்கில் – பலத்தை அனுபவம் பண்ண இருக்கிற நாம் இப்படி விலக்காதே இருக்கில். இனி, இதற்கு 3‘நான் ஒருவர்க்கும் உரியவன் அல்லேன்’ என்னும் மாறுபட்ட எண்ணம் இன்றிக்கே ஒழியில் என்று கூறலுமாம். மேல்

மற்று ஓர் நோயும் சார்கொடான் – 1நிஷித்த அநுஷ்டானம் பண்ணி அகல விடுதல், தன்னை ஒழியப் பிரயோஜனத்தைக் கொண்டு அகல விடுதல், அயோக்கியதாநுசந்தானம்பண்ணி அகல விடுதல், வேறொரு சாதனத்தை மேற்கொள்ளச் செய்து அகலவிடுதல், முன்பு பண்ணின பாவத்தின் பலத்தை அனுபவம் பண்ண அகல விடுதல் செய்ய விட்டுக்கொடான்.

நெஞ்சமே சொன்னேன் – 2‘திருக்கோட்டியூர் நம்பியைப் போலே, பகவத் விஷயம் பிறர் அறியலாகாது என்று போலேகாணும்’ இவர் இருப்பது. உபதேசித்துவிட்டு 3‘இந்தக் கீதையின் பொருள் தவமில்லாதவனுக்கு ஒருபோதும் சொல்லத் தக்கது அன்று,’ என்றவனைப் போன்று படுகிறார். ‘ஏன்? முதல் முன்னம் அதிகாரி சோதனை செய்து உபதேசித்தால் ஆகாதோ?’ எனின், திரௌபதி குழல் விரித்துக் கிடக்கிற படியைப் பார்த்து, செய்வது காணாமல் சொல்லிக்கொண்டு நின்றான்; பின்னர், பொருளின் கனத்தைப் பார்த்து, ‘கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டோம்’ என்று 4‘பதண் பதண்’ என்றான் என்க. இனி, இதற்கு நெஞ்சே, சீரிய பொருளைச் சொன்னேன்; ஆதலால், உபதேசத்திற் குறை இல்லை; இனி, இதனை நினையாதார் இழக்குமித்தனை என்கிறார் எனலுமாம், இனி, தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் மணிவண்ணனாய் எந்தையான ஈசன், நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்று ஓர் நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன், 5‘சத்யம் சத்யம்’ என்கிறபடியே, இது மெய் என்கிறார் என்றலும் ஒன்று.

  தாயும் தந்தையும் ஆய் – தாய் தந்தையர்களைப்போன்று அன்புள்ளவனாய். இவ்வுலகினில் வாயும் ஈசன் – அவர்கள் அளவு அன்றிக்கே, குழந்தை கிணற்றில் விழுந்தால் ஒக்கக்குதிக்கும் தாயைப் போலே, சம்சாரத்திலே ஒக்க விழுந்து எடுக்குமவன். ‘அடையத்தக்கவன் ஆகையாலே ‘இங்கு வந்து அவதரிக்கிறான்’ என்பார். ‘ஈசன்’ என்கிறார். இனி, ‘இங்கு வந்து அவதரித்து ஈர் அரசு தவிர்க்கையாலே ‘ஈசன்’ ஆனான்’ எனலுமாம். மணிவண்ணன் எந்தையே-தன் வடிவழகைக் காட்டி இவரை முறையிலே நிறுத்தினான். சிற்றின்பங்களில் விருப்புள்ளவர் ஆகாதபடி இவரை மீட்டு நன்னெறியில் நிறுத்துவதற்கு இறைவனுடைய வடிவழகு காரணமாய் இருந்ததாதலின், அதனை ‘மணிவண்ணன்’ என்ற சொல்லாற் குறித்தும், தன் சேஷித்துவத்தைக் காட்டி இவருடைய சேஷத்துவத்தை நிலை நிறுத்தினவன் ஆதலின், அவனை‘எந்தையே’ என்ற சொல்லாற்குறித்தும் தெரிவிக்கிறார்.

சுலபன் விடான் இறே
நம் அயோக்யதை அனுசந்தித்து அகலா விடில் விடான்
துஞ்சும் போதும் விடாதே தொடர் கண்டாய் முன் சொல்லியும்
நீயும்நானும் இந்த நேரான பாதை-விலக்காமை
ஒரு நோயும் -நைச்ய அனுசந்தானம்
திரு மேனி அழகு -சம்பந்தம் ஸ்வாமி இதனால் விடான்
அப்புள்ளின் பின் போன நீயும் -முன்புற்ற நெஞ்சும் -தனி நெஞ்சம் -நீயும் –
நானும் உன்னை பரிகாரமாக கொண்ட நானும்
பல அனுபவம் செய்ய நாம்– ந நமேயம் –பிரதி கூல்யம் இன்றி இருந்தால்  போதுமே
மேல் மற்று ஓர் நோயும் சார் கொடான்
விட்டு வைக்க மாட்டான்
நோய் -பல வகை
-நிஷித்த அனுஷ்டானம் பாகவத அபசாரம் போல்வன
நிஷிதம் தான் நாலு வகை பட்டு இருக்கும் –
தன்னை ஒழிய பிரயோஜனந்தம் கொண்டு அகல விடுதல்-
அல் வழக்கு போலே
அயோக்ய அனுசந்தானம் கொடு அகல விடுதல்
வேறு ஒரு சாதனா பரிக்ரகம் செய்து அகல விடுதல்
முன்பு பண்ணின பாப பலம் மூலம் அகல விடுதல் –
நெஞ்சே –
நாம் இருப்பது பிராரப்த கர்ம பலம் தான்– பண்ணுவது இல்லை எப்படி சொல்லலாம் –
ஆர்த்த பிரபன்னனுக்கு அதிலும்  விடுவிக்க –
உடனே மோஷம் யாரும் வர மாட்டார்களே -மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
நெஞ்சமே சொன்னேன்
பிறர் அறியலாகாது திரு கோஷ்டியூர் நம்பி போல்
அதிகாரம் இல்லாதவர் அறிய கூடாது –
நாலாறும் அறியும் இடங்களிலும் திரு கோஷ்டியூர் நம்பி
வைரம் தொங்கி விட்டு யாரும் பார்க்க விடமாட்டார்களே
விஷய சீர்மை குறித்து -18 தடவை அதிகாரி சோதித்து –
எம்பெருமானார் யாருக்கும் கிடைக்காமால் அதிகாரி துர்லப்யம் குறித்து வெளி இட்டார்
ஏகாந்தமாக அனுபவித்து
திரு கோஷ்டியூர் நம்பி பிரபாவம் யாரும் அறியாமல் அங்கெ -திரு குருகை பிரான் என்ற பெயராம்
நமஸ்காரம் செய்து விழுந்து எழுந்து இருந்து 12 4 நாச்சியார் திரு மொழி வியாக்யானம்
இதம் தி நாதபச்க்யாயா -கண்ணன் துடித்தான்
சொன்னேன் -படுகிறார்
தர்வ்பதி  குழல் விரித்து இருப்பதை கண்டுசொல்லி அல்லேல் விடேன் என்று சொன்னானே
கைப்பட்ட மாணிக்கத்தை கடலில் போட்டால் போல பதன் பதன் -துடித்தான் –
துர்மே முட்டாளே கண்ணனே பின்பு சொன்னான் அர்ஜுனனை
ஓர் எண் தானும் வந்து கலப்பான் என்பதைசொன்னேனே -அடித்து கொள்கிறார் –
பிறர் அறியலாகாது-திரு கோஷ்டியூர் கீதாசார்யன் போலே -சொல்லி விட்டு துடிக்கிறார்
உய்யக்கொண்டாருக்கு உடையவர் அருளிய வார்த்தை போல் -பிரபத்தி -ஈஸ்வர கடாஷம் இன்றி –
முமுஷுபடி சூத்திரம் -பக்தி யோக நிஷ்டர் ஆகையாலே
வித்வான் என்பதால் அர்த்தத்துக்கு இசைந்தீர் பாஹ்ய ஹீனர் ஆனதால் இழந்தீர்
தாயும் தந்தை போல் பரிவனாய்
அவ்வளவும்  இன்றிக்கே –
இவ்விலகினில் – வாயும் ஈசன் -ஒக்க விழுந்து -வாயும் ஈசன் விபவ அவதாரம்
ஹேது என் என்னில் ஈசன் பிராப்தன்
இங்கு வந்து அவதரித்து ஈரசு தவிர்க்கையால்
ஒரு உறையில் இரண்டு வாள்  கூடாதே

 

நானே எஜமானன் நீ இல்லை
மணி வண்ணன் வடிவு அழகை காட்டு விஷயாந்தர ப்ராவண்யம் தவிர்ந்து
எந்தை சேஷி -சேஷ பாவம்
தாயும்தந்தையுமாய்
சத்யம் சத்யம் வியாசர்  வார்த்தை போல் வேதம் -கேசவன்-

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: