திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-10-5–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்றுஓர்
எண்தானும் இன்றி யேவந்து இயலுமாறு
உண்டானை உலகுஏ ழும்ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே.

பொ-ரை : மனமே, காரியங்கள் வந்து பலிக்குங்காலத்தில் நமது நினைவு சிறிதும் இல்லாதிருப்பினும், தாமாகவே பலித்ததனை இப்பொழுது பார்த்தாய் அன்றோ? பெருவெள்ளத்தால் அழியப் புக்க காலத்தில் அழியாதவாறு ஏழுலகங்களையும் உண்டு காப்பாற்றியவனை’ ஏழுலகங்களையும் ஒப்பற்ற மூன்று அடிகளாலே அளந்து தனக்கு உரித்தாக்கிக்கொண்டவனை நீயும் கண்டு கொண்டாய்.

வி-கு : வாய்க்கின்று-வாய்க்குமிடத்து. இயலுதல் – பலித்தல், ‘உலகேழும்’ என்பதனைத் தாப்பிசைப் பொருள்கோளாக முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் கொள்க. ‘ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும், எனையாளும் ஈசன் செயல்,’ என்பது ஈண்டு ஒப்பு நோக்குக.

ஈடு : ஐந்தாம் பாட்டு. மேல், ‘எண்ணிலும் வரும்’ என்ற எண்தானும் மிகையாம்படி கண்டாயே!’ என்று அவன் படியை நெஞ்சுக்கு 1மூதலிக்கிறார்.

கண்டாயே நெஞ்சே-நான் சொன்னபடியே பலத்தோடே நிறைவு பெற்றபடியைக் கண்டாயே. நெஞ்சே – ஞானம் செல்லுதற்கு வழியாகவுள்ள உனக்குச் சொல்ல வேண்டா அன்றே? கருமங்கள் வாய்க்கின்று – காரியங்கள் பலிக்குமிடத்தில். ஓர் எண்தானும் இன்றியே வந்து இயலுமாறு கண்டாயே – ‘எண்ணிலும் வரும்’ என்றுதான் மிகையாம்படி வந்து பலித்துக்கொண்டு நிற்கிறபடி கண்டாயே. இதனால், பகவானுடைய பிரபாவம் சொல்லுவார் சொல்லும் அளவு அன்றுகாண் என்பது பெறுதும். இத்தலையில் எண் இன்றிக்கே இருக்கப் பலிக்கும் என்னுமிடத்துக்கு உதாரணம் காட்டுகிறார் மேல் : உலகு ஏழும் உண்டானை – பிரளயம் கொண்ட உலகத்துக்கு ‘இறைவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்குவான்’ என்னும் நினைவு உண்டோ? உலகு ஏழும் ஓர் மூன்று அடி கொண்டானை – இறைவன் உலகத்தை முழுதும் அளக்கிற போது ‘நம் தலையிலே திருவடியை வைக்கப்புகாநின்றான்’ என்னும் நினைவு உண்டோ? இதற்கு உதாரணம் தேடிப் போக வேண்டுமோ ஒன்று?கண்டுகொண்டனை நீயும் – விலக்குகைக்குப் பரிகாரமுடைய நீயும் அன்றோ கண்டுகொண்டாய்? பிரளயத்தில் அகப்பட்ட உலகத்திற்குத் தடுப்பதற்கு வழி இல்லை; உலகத்தை அளக்கிற காலத்தில் அறிந்து தடுப்பதற்கு அங்குச் சமயம் இல்லை; அறிந்தால் விலக்கி இருப்பார்கள் அன்றே? 1அசங்கிதமாக வருகையாலே பேசாதிருந்தார்கள் இத்தனை, அவ்வாறு அன்றி விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார், ‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.

அடுத்து எண் தானும் மிகையாம் படி–அதுவும் மிகை ஆனது கண்டாயே நெஞ்சுக்கு மூதலிக்கிறார் இதில் –

கருமங்கள் வாய்க்கின்ற காலத்திலேயே பலிக்கும் இடத்தில் -என்னவும் வேண்டாத படி
வந்த இடம் உண்டோ
பிரளய காலத்தில்
அளந்த பொழுதும்
இரண்டு பொழுதும் ரஷித்தானே யாரும் எண்ணாமல்
நீயே பார்த்தாயே
பலத்துடன் வ்யாப்தம் -சேருவதே பலம்
ஞான பிரசார த்வாரம் நெஞ்சு உனக்கு நான் சொல்ல வேண்டாமே –
நெஞ்சு சககாரமின்றி பார்த்தது பார்த்தது போல் இல்லை -உன் மூலம் தான் பார்க்கிறேன்
கார்யங்கள் பலிக்கும் இடத்தில்
வாய்க்கின்று -கில்லேன் கின்று -போல சப்தங்கள் ஆழ்வார் பிரயோகம்
வாய்க்கின்ற காலத்தில்
மலையாள பாஷை வாசனை –
வாய்க்கின்ற இன்று சுருங்கி
ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
பகவத் பிரபாவம் சொல்லும் அளவு இல்லை காண்
சொல்லுவார் சொல்லுமளவு மட்டும் இல்லை
பேசுவர் அவ்வளவுதான் -அவ்வளவாக ஆக்கிக் கொள்வான்

 

சர்வேஸ்வர ஈஸ்வர கிருஷ்ணா எதி பண்டிதர் -சொல்பம் தான் உக்தம்
ஸ்துதி கொஞ்சம் தான் சக்திக்கு தக்க –
சொவ்லாப்யத்தில்   காட்டுகிறார் இங்கே –
பலிக்கும் இடத்துக்கு உதாரணம் காட்டுகிறார் அபதானங்கள் மேல்
யாரும் நினைக்காமல் பிரார்த்திக்காமல் -பிரளயம் -காலத்தில்
வயற்றில் வைத்து நோக்கி
உலகு ஏழும் இரண்டு இடத்திலும் சேர்த்து கொண்டு அளந்ததும்-
நம் தலை மேல் வைக்க பிரார்த்திக்காமல்-
அபேஷா நிரபேஷமாக– ஆபத்தே செப்பேடாக
மகா பலியால் வந்த இடரை போக்க
தேவர்கள் பிரார்த்திக்க –இந்திரன் இழந்த ராஜ்ஜியம் தான் கேட்டான்
அந்த வ்யாஜ்யத்தில் தானே திருவடி வைத்தான்
கண்டு கொண்டனை
பணம் கிணறு எதற்கு தூறு எடுக்க வேண்டும்
விலக்குகைக்கு பரிகிரகம் பிரகிருதி சம்பந்தம்
தடுக்க கரண களேபரங்கள் இல்லையே பிரளய ஆபத்தில்
இந்திரியங்களும் சரீரமும் இல்லையே -சூஷ்ம நிலை
அந்த விலக்காமை ஒன்றால் –
உலகு அளந்த -அவசரம் இடம் இல்லை -அவசரமாக அளந்தான் –
திடீர் என்று வளர்ந்து தலையில் வைக்க அசந்கிதமாக திடீர் என்று வந்ததால் –
த்ருஷ்டாந்தமிரண்டிலும் பிரதி கூலிகைக்கு பரிகரம் இல்லை
விலக்குகைக்கு பரிகாரம் உள்ள நெஞ்சே நீயம் கண்டு கொண்டாயே –
நீயே போரும் -வேறு திருஷ்டாந்தம் வேண்டாமே –
அங்கு அத்வேஷம் உண்டே –
உனக்கு அனுக்ரகம் செய்தானே மதி நலம் மயர்வற அருளி –

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: