திரு-விருத்தம்-55-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
இவள் விட்ட தூதுக்கு வந்து கலந்து -பிரிய நினைத்து -பிரிந்தால் வரும் அளவும் -இவள்
ஜீவித்து இருக்கைக்காக -இப்படி இருக்கிற இவன் -பிரிந்தால் தாழான் -என்று அவள் நெஞ்சில்-படுகைக்காக -நலம் பாராட்டு என்பதோர் கிளவியாய் -அவளைக் கொண்டாடுகிறான் –
 குலே மஹதி சம்பூதே -என்று பெருமாளும் கொண்டாடினார் இறே-

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55- 

பாசுரம் -55-வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ -நலம் பாராட்டுதல்-சார்வே தவ நெறி -10-4-
 வண்டுகளோ வம்மின் –வண்டுகாள் வாரும் கோள்-
நீர்ப் பூ இத்யாதி –மூன்று வகை யாதல் நாலு வகை யாதல் -சொல்லக் கடவது -இறே
நிலப்பூவும் கொடிப்பூவும் என்று -நிலத்திலே இரண்டாக்கி -மற்றை இரண்டையும் கூட்டி நாலாக-சொல்லுவாரும் உண்டு -நல்ல மலர் பொழில் நாலும் நுழைவீர் காள்-என்னக் கடவது இறே -பூ உள்ள இடம் எங்கும் மது பானம் உண்ணிக் களித்து -அதுவே யாத்ரையாக -திரிகிற உங்களக்கு-நல்லதோர் வார்த்தை சொல்லுகிறேன் வாரும் கோள்
ஏனம் இத்யாதி –
அத்விதீயமான மகா வராகமாய் -இப்பூமியை தன திருவடிகளால் துகைத்து -அது தன்னை அடைய-தன் திரு மேனியிலே செருக்காலே எங்கும் ஏறிட்டு கொண்டவன் –
வைகுந்த மன்னாள் –
காதா சித்தமாக அவன் வந்து ரஷித்து போம் இவ்விபூதி போல் அன்றியிலே -அவன் சதா
சன்னதி பண்ணுகிற அவ்விபூதியோடு ஒத்து -உள்ளவள் இறே இவள் –
தன் சன்னதியிலே வேறு ஒன்றின் உடைய போக்யதை நெஞ்சில் படாதபடி இருக்கும் அவன்–சர்வம் யதேவ நியமேன–ஸ்தோத்ர ரத்னம் – 5-அனைத்தும் யாருடையதோ – இறே
குழல் வாய் விரை போல் –
இவளுடைய குழலில் பரிமளம் போல்
விண்டு இத்யாதி –
நீங்கள் தட்டித் திரிகிற விச்மயநீயமான பூமியில்  இப்படி சென்று காலம் பார்த்து இருக்க
வேண்டாதபடி இருப்பதொரு மலர் உண்டோ –
ச்வாபதேசம்
இத்தால் பர வியூக விபவாதிகள் எங்கும் புக்கு பகவத் குணங்களை அனுபவித்து
திரிகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அக்குணங்களில் அவஹாகித்து இருக்கிற இவர் படி
நீங்கள் அனுபவிக்கிற அவ்விஷயத்தில் தானுண்டோ -என்று தம்மை அனுபவிக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தையை -அவர்கள் பாசுரத்தாலே தாம் அனுபவிக்கிறார் –
அம்பச்யபாரே-புவனச்ய மத்யே -நாகச்யப்ருஷ்டே -என்னக் கடவது இறே –
அம்பச்ய -வியூகம்
புவனச்ய -விபவம் அர்ச்சை
நாகசா -பரம்
இவையே இங்கு மூன்று வித மலர்கள் என்று உரைக்கப்பட்டன –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: