திரு மா மகள் ஏற்றமும் -அவனது உபாய வைபவம்
பிரபத்தி ஸ்வரூபம் சொல்லி நியமங்கள் இல்லை
திரு மா மகள் ஏற்றமும் -அவனது உபாய வைபவம்
பிரபத்தி ஸ்வரூபம் சொல்லி நியமங்கள் இல்லை
அழகியமணவாளச்சீயர் : இவர் பெரியவாச்சான் பிள்ளையினுடைய மாணாக்கர்; திருவாய்மொழிக்குப் ‘பன்னீராயிரப்படி’ என்னும் வியாக்கியானத்தை அருளிச்செய்தவர்; துறவறத்தை மேற்கொண்டவர்; பரசமயகோளரியாய் விளங்கினாராதலின், ‘வாதி கேசரி’ என்ற சிறப்புப்பெயரைச்சேர்த்து, ‘வாதி கேசரி அழகிய மணவாளச்சீயர்’ என்று இவர் வழங்கப்படுவர்; திருவரங்கத்தில் வாழ்ந்தவர். வரதராஜர், சுந்தரஜாமாத்ருமுனி என்பன இவருடைய வேறு திருப்பெயர்கள்.
அனந்தாழ்வான் : இவர் இராமாநுசருடைய மாணாக்கர்; எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர்; தம் ஆசாரியர் கட்டளைப்படி திருமலைக்குச் சென்று, அங்கு ஓர் ஏரியை வெட்டி, அதற்கு ‘இராமாநுசன் புத்தேரி’ என்ற பெயரை அமைத்து, ஒரு நந்தவனத்தை உண்டாக்கி, அதிலிருந்து மலர்களைப் பறித்துத் திருவேங்கடமுடையானுக்கு நாடோறும் புஷ்பகைங்கரியம் செய்து வந்தவர். ஒரு நாள், மலர் பறிக்கையில் நல்லபாம்பு ஒன்று இவர் கையிலே தீண்ட, அதற்குப் பரிகாரம் ஒன்றும் செய்யாது மீண்டு, நீராடி, பின்னரும் சென்று மலர்களைப் பறித்து மாலை தொடுத்துத் திருவேங்கடமுடையானைச் சேவிக்கச் சென்றார்; அவ்வளவில், இறைவனும் திருவாய் மலர்ந்து, ‘விஷந்தீர்க்க வேண்டா என்றிருந்தது என்னை?’ என்று கேட்டருள, இவரும் ‘கடியுண்ட பாம்பு வலிதாகில் திருக்கோனேரியில் தீர்த்தமாடித் திருவேங்கடமுடையானைச் சேவிக்கிறேன்; கடித்த பாம்பு வலிதாகில் விரஜையிலே தீர்த்தமாடி ஸ்ரீவைகுண்டநாதனைச் சேவிக்கிறேன் என்றிருந்தேன்,’ என்று பதில் இறுத்த பரமயோகி; திருவாய்மொழிக்கு ‘ஏய்ந்த பெருங்கீர்த்தி’ என்ற தனியனை அருளிச்செய்தவர். கூரத்தாழ்வானுக்குப் பின் பிறந்தவர் என்று இவரைக் கூறுவர்.
ஆழ்வார் திருவரங்கப்பெருமாளரையர் : இவர் ஸ்ரீ ஆளவந்தாருடைய மாணாக்கர், இராமாநுசருக்கு ஆசார்யர். இராமாநுசருக்குப் பெரியதிருமொழி மூலமும், திருவாய்மொழி மூலமும் கண்ணிநுண் சிறுத்தாம்பு வியாக்கியானமும், துவயார்த்தமும் அருளிச்செய்தவர்; திருவரங்கத்தில் வாழ்ந்தவர்; திருவரங்கத்து இறைவன் முன்னர்த் திவ்வியப்பிரபந்தத்தை இசையோடு பாடி,அபிநயித்துக் காட்டும் அரையர்களுள் தலைவர்; ‘திருவரங்கப் பெருமாளரையர்’ எனவும் வழங்கப்படுவர்.
ஆழ்வான் : இவர் காஞ்சிபுரத்திற்கு அண்மையிலுள்ள கூரம் என்ற ஊரில் அவதரித்தவராய், அத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய ‘ஆழ்வான்’ என்ற திருநாமத்தை வகித்தவராதலால், ‘கூரத்தாழ்வான்’என்று வழங்கப்பட்டார். ‘திருமறு மார்பன்’ என்றது இவரது திருப்பெயர். விழுமிய செல்வமும் உயரிய ஒழுக்கமும் சீரிய கல்வியும் படைத்தவர்; செல்வமனைத்தையுந்துறந்து, திருவரங்கத்தையடைந்து, தம் ஆசாரியரான இராமாநுசருடைய திருவடி நிழலில் ஒதுங்கி வாழ்ந்தவர்; இராமாநுசர் பிரமசூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் செய்த காலத்தில் அவருக்கு உறுதுணையாய் இருந்தவர்; விஹித விஷயத்தையும் துறந்தவர்; சோழவரசன் அவைக்களத்தில் ‘சிவத்துக்குமேற் பதக்கு உண்டு’ என்று தீட்டினவர்; தரிசனத்திற்காகத் தரிசனத்தைக் கொடுத்தவர்; சிஷ்யலட்சணத்திற்கும் ஆசாரிய லட்சணத்திற்கும் எல்லை நிலமானவர்; பட்டருக்கும் சீராமப் பிள்ளைக்கும் தமப்பனார்; அவர்கட்கு ஆசாரியருமாவார். ஆண்டாள் இவருடைய திருத்தேவியார். வானிட்ட கீர்த்தி வளர்கூரத்தாழ்வான்’ என்பர் திவ்வியகவி ஐயங்கார். ‘மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம், குழியைக் கடத்தும் நம் கூரத்தாழ்வான்’ என்பர் அமுதனார். ஒரு நாள் இவர் ‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழியை அநுசந்தித்துக்கொண்டிருக்க, பட்டர், ‘ஐயா, ‘ஆழ்வார் ‘சிறுமாமனிசர்’ என்று சிறுமை பெருமையாகிற பரஸ்பர விருத்த தர்மங்களிரண்டும் ஒரு பொருளிலே கிடக்கும்படி அருளிச் செய்கிறாரே! இது என்?’ என்று கேட்டருள, இவரும், ‘நல்லீர், கேட்டபடி அழகிது! நீர் உபநயனம் ஆகாதவராகையாலே சாஸ்திரங்களைக்கொண்டு இசைவிக்கவொண்ணாது; கண்கூடாக உமக்குக் காட்டுகிறோம்; கேளீர்; திருமேனி சிறத்து ஞானம் பெருத்திருக்கிற சிறியாச்சான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் போல்வாரை காணும் ‘சிறு மா மனிசர்’ என்கிறது, என்று அருளிச்செய்தவர். இவர் அருளிச்செய்த நூல்கள்: வரதராஜ ஸ்தவம், சுந்தரபாஹூ ஸ்தவம், ஸ்ரீவைகுண்ட ஸ்தவம், அதிமாநுஷ ஸ்தவம், யமகரத்நாகரம், கத்யத்ரய வியாக்கியானம் என்பனவாம்.
ஆளவந்தார் : இவர், சிதம்பரத்தையடுத்த காட்டு மன்னார்கோவிலிலே ஆடி மாதத்திலே உத்திராட நக்ஷத்திரத்தில் ஈஸ்வர முனிகட்குப் புதல்வராய்த் தோன்றியவர். மணக்கால் நம்பிகள்தம் ஆசாரியருடைய நியமனத்தின்படியே சென்று, இவர் பிறந்த பன்னிரண்டாம் நாள் இவருக்குச் செய்ய வேண்டுவனவற்றைச் செய்து, ‘யமுனைத்துறைவர்’ என்ற பெயரையும் வைத்து மீண்டனர். ஸ்ரீமந்நாதமுனிகட்குப் பௌத்திரர். இவர், இளமைப்பருவத்தில் மஹாபாஷ்யபட்டர் என்பவரிடத்தில் சாஸ்திராப்பியாசம் செய்தார். அக்காலத்தில், இராச புரோகிதனும் மகா வித்துவானுமான ஆக்கியாழ்வானோடு வாதஞ்செய்யத் தொடங்கிய போது இராசபத்தினியானவள், ‘இவர் தோற்கமாட்டார்’ என்று உறுதி கூற, அரசன் ‘நம் ஆக்கியாழ்வான் தோற்றால் இவருக்குப் பாதி ராச்சியந்தருவேன்.’ என்று சூளுறவு செய்ய, உடனே அங்கு நடந்த பல வகை வாதங்களிலும் யமுனைத்துறைவரே வெற்றியடைய, அது கண்டு, தனது சூளுறவு நிறைவேறினமைபற்றி மகிழ்ச்சி கொண்ட அரசபத்தினி, ‘என்னை ஆள வந்தாரோ!’ என்று கொண்டாடியதனால், அதுமுதல் இவர் ‘ஆளவந்தார்’ என்ற திருப்பெயரால் வழங்கப்பட்டார். மணக்கால் நம்பிகளுடைய உபதேசத்தால் சரணாகதி தருமம் நெஞ்சிலே பட்டு ஆநுகூல்யம் மிகுந்து, அரசவாழ்வில் வெறுப்புற்று, அதனைத் துறந்து, துறவறத்தை மேற்கொண்டு, திருவரங்கத்திலேயே நித்தியவாசஞ்செய்தவர். இப்பெரியார்க்கு மாணாக்கர் பலர். அவர்களுள், திருமலையாண்டான், திருக்கோட்டி நம்பி, திருவரங்கப் பெருமாளரையர், திருமலை நம்பி, பெரிய நம்பி என்பவர்கள் தலைவர்கள். இவருடைய மாணாக்கர்களுள் ‘மாறனேரி நம்பி’ என்னுந் திருக்குலத்து அடியாரும் ஒருவராவர். ‘ஆம்முதல்வன்’ என்று இராமாநுசரை அபிமானித்தவர். அரசன் காரணத்தால் இராமாநுசர் மேற்கே எழுந்தருளின காலத்தில் அங்கு அவர் உபந்யசித்த கட்டளை கேட்டு’ ஆசார்யர்களெல்லாரும் ஆச்சரியப்பட, உடையவரும், ‘என் பரமாசாரியரான ஆளவந்தார் வார்த்தை கொண்டு சொன்னேன் இது; ஆளவந்தார் கோஷ்டியிலே ஒரு நாளாகிலும் சேவிக்கப் பெற்றேனாகில் பரமபதத்திற்கும் இதற்கும் சுருளும் படியும் கட்டிவிடேனோ?’ என்று அருளிச்செய்யும்படியான கல்வியின் பெருமை வாய்ந்த பெரியார். இவர் அருளிச்செய்த நூல்கள் ஆகமப் பிரமாண்யம், புருஷநிர்ணயம், ஆத்துமசித்தி, தோத்திரரத்நம், கீதார்த்த சங்கிரகம், சதுஸ்லோகி என்பன.
ஈஸ்வரமுனிகள் : இவர் ஸ்ரீமந்நாதமுனிகளுடைய திருக்குமாரர்; ஸ்ரீ ஆளவந்தாருக்குத் தமப்பனார். திருவாய்மொழிக்குத் ‘திருவழுதி நாடென்றும்’ என்ற தனியனை அருளிச்செய்தவர்.எம்பார் : இவர், ஸ்ரீபெரும்பூதூருக்கு அண்மையிலுள்ள மழலைமங்கலம் என்ற தலத்தில் இராமாநுசருடைய சிற்றன்னையாரான பெரிய பிராட்டியார் என்பவருக்குப் புதல்வராய் அவதரித்தவர்; பெரிய திருமலை நம்பிகட்கு மருகர்; கோவிந்தப்பெருமாள் என்பது இவருடைய திருப்பெயர். இவர் இளம்பருவத்தில் இராமாநுசரோடு சேர்ந்து யாதவப்பிரகாசரிடம் வேதாந்த பாடம் கேட்டவர்; அக்காலத்து நிகழ்ந்து ஒரு நிகழ்ச்சியால் திருக்காளத்தி மலையிலுள்ள சிவபெருமானுக்கு அணுக்கத்தொண்டராய்ச் சில காலமிருந்தவர்; பின்னர், பெரியதிருமலை நம்பியால் திருத்திப் பணிகொள்ளப் பட்டவர்; பின்னர், இராமாநுசருடைய வேண்டுகோளின்படி உதகதாரா பூர்வமாகப் பெரியதிருமலை நம்பியால் இராமாநுசருக்குக் கொடுக்கப்பட்டவர்; அது முதல், இராமாநுசர் மெய்யில் பிறங்கிய சீரும் அவர் குணானுபவமுமே காலக்ஷேபமாகச் செல்லாநிற்க, ‘மாகாந்த நாரணனார் வைகும் வகையறிந்தோர்க்கு, ஏகாந்தமில்லை இருளில்லை’ என்கிறபடியே, வாழ்க்கை நடத்தி வந்தவர்; இராமாநுசருடைய திருவடி நிழலைப்போன்று அவரை நீங்காது சார்ந்து நிற்பவர். இராமாநுசர் இவருடைய வைராக்கியத்தைக் கண்டு, இவர்க்குச் சந்நியாச ஆச்சிரமத்தைத் தந்தருளித் தமது திருப்பெயர்களுள் ஒன்றான ‘எம்பெருமானார்’ என்ற பெயரை இவருக்குச் சார்த்த, இவர் அப்பெரும்பெயரைத் தாம் தாங்க விரும்பாதவராய்த் ‘தேவரீருக்குப் பாதச்சாயையாயிருக்கிற அடியேனுக்குத் தேவரீர் திருநாமச்சாயையே அமையும்’ என்று விண்ணப்பஞ்செய்ய, இராமாநுசரும் அப்பெயரைச் சிதைத்து, ‘எம்பார்’ என்று பெயரிட்டருளினார். அது முதல் ‘எம்பார்’ என்ற திருப்பெயரே இவருக்கு வழங்கிவரலாயிற்று. இராமாநுசருடைய நியமனத்தின்படி சென்று பட்டர்க்குத் துவய உபதேசஞ்செய்து, ஆசாரியராகி அவர்க்குப் பஞ்ச சம்ஸ்காரங்களையும் திருவாய்மொழி முதலிய கிரந்தங்களையும் அவற்றின் வியாக்கியானங்களையும் அருளினவர்.
எம்பெருமானார் : இவர் ஸ்ரீபெரும்பூதூரிலே ஆசூரிவமிசத்திலே சித்திரை மாதத்திலே திருவாதிரை நக்ஷத்திரத்தில் கேசவப் பெருமாள் தீக்ஷிதருக்கும் ஸ்ரீ பூமிப்பிராட்டியார் என்னும் காந்திமதியம்மையாருக்கும் புதல்வராய்த் தோன்றினார். இவர் பிறந்த பன்னிரண்டாநாள், மாதுலரான பெரியதிருமலை நம்பிகள் இவருக்கு ‘இளையாழ்வார்’ என்ற திருப்பெயரைச் சூட்டினர். ‘எம்பெருமானார்’ என்பது ஆசாரியரான திருக்கோட்டியூர் நம்பிகளால் வைக்கப்பட்டபெயர். இவர் இளமைப்பருவத்தில் யாதவப்பிரகாசர் என்னும் ஏகதண்ட சந்யாசியாரிடம் வேதாந்த பாடம் கேட்டனர், பின்பு அவ்யாதவப்பிரகாசரே இவரிடம் திரிதண்ட சந்யாசாதிகளைப் பெற்றுக் ‘கோவிந்த ஜீயர்’ என்ற பெயரோடு இவருக்கு மாணாக்கராயினார். ஸ்ரீ ஆளவந்தார் இவருக்குப் பரமாசாரியர்; ‘தூய்நெறிசேர், எதிகட்கிறைவன் யமுனைத்துறைவ னிணையடியாம், கதிபெற்றுடைய இராமாநுசன்’ என்பர் அமுசனார். ஸ்ரீ ஆளவந்தாருடைய மாணாக்கர்களான பெரியநம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டன், திருவரங்கப்பெருமாளரையர், திருமலை நம்பி என்னும் ஐவரும் இவருக்கு ஆசாரியர்கள். இவர்களுள், பெரிய நம்பி, இவர்க்குப் பஞ்சசம்ஸ்காரம் செய்தருளித் திருமந்திரம் துவயம் சரமஸ்லோகம் இவற்றையும் உபதேசித்து ‘இராமாநுசன்’ என்ற திருப்பெயரை வைத்து, முதலாயிரம், இயற்பா என்ற ஈராயிர மூலத்தையும் அருளிச் செய்தார். திருக்கோட்டியூர் நம்பி, இவர்க்குத் திருமந்திரார்த்தத்தையும் சரமஸ்லோகார்த்தத்தையும் அருளிச்செய்து, ‘எம்பெருமானார்’ என்ற திருப்பெயரை வைத்தனர். திருமாலையாண்டான், இவர்க்குத் திவ்வியப் பிரபந்த வியாக்கியானம் அருளிச்செய்து ‘சடகோபன் பொன்னடி’ என்ற திருப்பெயரை வைத்தனர். திருவரங்கப் பெருமாளரையர், இவர்க்குப் பெரியதிருமொழி மூலம், திருவாய்மொழி மூலம், கண்ணி நுண்சிறுத்தாம்பு வியாக்கியானம், துவயார்த்தம் ஆகிய இவற்றை அருளிச்செய்து, ‘லக்ஷ்மணமுனி’ என்னும் திருப்பெயரை வைத்தனர். பெரியதிருமலைநம்பி, இவர்க்கு ஸ்ரீராமாயண வியாக்கியானம் அருளிச்செய்து, ‘கோயில் அண்ணன்’ என்ற திருப்பெயரை வைத்தனர்.
இவர், ஸ்ரீ ஆளவந்தாருடைய மூன்று குறைகளையும் தீர்த்தவர்; ‘பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்’ என்கிற ‘உபய விபூதி ஐஸ்வரத்தையும் உமக்கும் உம்முடையார்க்கும் தந்தோம்’ என்று திருவரங்க நாதனால் தரப்பெற்றவர்; திருவரங்கன் செல்வ முற்றும் திருத்தினவர்; செல்வப் பிள்ளையைக் கொணர்ந்து திரு நாராயணபுரத்தில் பிரதிஷ்டை செய்தவர்; உலகினருய்ய இவரால் செய்யப்பட்ட காரியங்கள் இன்னும் மிகப்பல. ‘பிடிக்கும் பரசமயக் குலவேழம் பிளிற வெகுண்டு, இடிக்கும் குரற்சிங்க ஏறனையான் எழுபாரு முய்யப், படிக்கும் புகழ் எம்மிராமாநுசன்’ என்பர் திவ்விய கவி ஐயங்கார். ‘பல்கலையோர் தாம் மனன் வந்த இராமாநுசன்’ என்பது அமுதனார் திருவாக்கு. இவர், தம் அந்திமகாலத்தில்
அருளிச்செய்தவை : (1) ஸ்ரீபாஷ்யத்தை வாசித்தும், வாசிப்பித்தும் போருதல்; அதற்குத் தகுதியில்லாவிடில் (2) அருளிச் செயலை ஓதியும் ஓதுவித்தும் போருதல்; அதற்கும் தகுதியில்லையாகில், (3) உகந்தருளின நிலங்களிலே அமுதுபடி, சாத்துபடி முதலானவற்றையுண்டாக்கி நடத்திக்கொண்டு போருதல்; அதற்கும் தகுதியில்லையாகில், (4) திருநாராயண புரத்தே ஒரு குடில் கட்டிக் கொண்டிருத்தல்; அதற்கும் தகுதியில்லையாகில் (5) துவயத்தை அர்த்தாநுசந்தானம் பண்ணிப் போருதல்; அதற்கும் தகுதியில்லையாகில், (6) என்னுடையவன் என்று அபிமானிப்பான் யாவனொரு பரம பாகவதன் அவனுடைய அபிமானத்திலே ஒதுங்கிப்போருதல். இவர் அருளிச்செய்த நூல்கள் :- ஸ்ரீ பாஷ்யம், வேதாந்தசாரம், வேதாந்த தீபம், வேதாந்த சங்கிரகம், கத்யத்ரயம், உடையவர் நித்தியம், கீதாபாஷ்யம் என்பன. இப்பெரியார், இப்பூவுலகில் நூற்றிருபது வருடங்கள் பஞ்சபூதமயமான தம் திருமேனியோடு வாழ்ந்திருந்தனர்.
குன்றத்துச்சீயர் : இவர் இராமாநுசர் காலத்திலிருந்தவர்; அவருடைய மாணாக்கராகவும் இருத்தல் கூடும். பக். 162இல் காண்க.
சொட்டை நம்பிகள் : ஸ்ரீ ஆளவந்தாருடைய திருக்குமாரர்; ‘என்னாச்சான்’ என்பவருக்குத் தமப்பனார். எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர்; திருவாய்மொழிக்கு ‘மனத்தாலும் வாயாலும்’ என்ற தனியனை அருளிச்செய்தவர்.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் : இவர், பெரிய திருமலை நம்பியின் புதல்வர்; இராமாநுஜருடைய மாணாக்கர்; திருவாய் மொழிக்கு ‘ஆறாயிரப்படி’ என்னும் வியாக்கியானத்தை அருளிச் செய்தவர்; ‘பிள்ளான்’ என்பது இவருடைய இயற்கைப்பெயர். திருக்குருகைப்பிரான் என்பது நம்மாழ்வாருடைய திருப்பெயர்; அவருடைய திருப்பெயரை, அவருடைய நினைவின்பொருட்டுத் தம்மாணாக்கரும் அபிமான புத்திரருமான இவருக்கு வைத்தனர் இராமாநுஜர். பின்னர், ‘திருக்குருகைப்பிரான் பிள்ளான்’ என்றே இவர் அழைக்கப்பட்டனர். தி்ருவரங்கத்தில் வாழ்ந்தவர்; எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர்.
திருக்கோட்டியூர் நம்பி : இவர் ஸ்ரீ ஆளவந்தாருடைய மாணாக்கர்; இராமாநுஜருக்கு ஆசாரியர். இராமாநுஜர், இவரிடமே திருமந்திரார்த்தத்தையும், சரமஸ்லோகார்த்தத்தையுங் கேட்டனர். திருக்கோட்டியூரில் அவதரித்தமையால் திருக்கோட்டியூர் நம்பிஎனப் பெயர் பெற்றார். புதல்வர், தெற்காழ்வான். புதல்வியார், தேவகி பிராட்டியார். ‘சாந்தீபன் பக்கலிலே கிருஷ்ணன் வேதாத்தியயனம் பண்ணினாற்போலேகாணும் உம்முடைய பக்கலிலே எம்பெருமானார் திருவாய்மொழி கேட்கிறதும்; ஆளவந்தார் திருவுள்ளத்திலுள்ள அர்த்தமொழிய இவர்க்கு வேறே பிரகாசியாது என்றிரும்; இவர்க்கு நீர் அறிவின்மையைப் போக்குகிறோம் என்றிராதே கொள்ளும்,’ என்று திருமாலையாண்டானிடத்தில் இராமாநுசருடைய பிரபாவத்தை அருளிச்செய்தவர்.
திருமாலையாண்டான் : இவர், ஸ்ரீ ஆளவந்தாருடைய மாணாக்கர்; இராமாநுசருடைய ஆசிரியர் ஐவருள் ஒருவர். இவரிடமே திருவாய்மொழியைப் பாடங்கேட்டனர் இராமாநுசர். இவர் அவதரித்த ஊர் அழகர் கோவில்; வாழ்ந்த ஊர் திருவரங்கம். மாலாதரர், ஞான பூர்ணர் என்பன இவருடைய வேறு திருப்பெயர்கள்.
தெற்காழ்வான், கோளரியாழ்வான் : இவரிருவரும் பட்டர் காலத்தில் இருந்த அடியார்கள்; திருக்கோட்டியூரில் வாழ்ந்தவர்கள். (பக். 190 காண்க). நஞ்சீயர் : இவர், பட்டருடைய மாணாக்கர்; நம்பிள்ளையின் ஆசாரியர்; திருவாய்மொழிக்கு ‘ஒன்பதினாயிரப்படி’ என்னும் வியாக்கியானத்தை அருளிச்செய்தவர்; ‘வேதாந்தி’ என்ற சிறப்புப் பெயரையுடையவர். இருபெருஞ்செல்வங்களாலும் நிறைவுற்று அவற்றால் வீறுற்று மேல்நாட்டில் இருந்த இவர், பட்டரால் திருத்திப் பணிகொள்ளப்பட்டார். பின்னர்த் துறவறத்தை மேற்கொண்டதனால் ‘சீயர்’ என்றும் பட்டரால் ‘நம்முடைய சீயர்’ என்று அபிமானிக்கப்பெற்றமையால் ‘நஞ்சீயர்’ என்றும் வழங்கப்பட்டனர். இவர் திருவாய்மொழிக்கு நூறுரு பொருள் கூறியருளினார் எனின், இவருடைய ஞானத்திற்கும் ஆற்றலுக்கும் பிறிதொரு சான்றும் வேண்டுமோ? இவர் வாழ்ந்த ஊர் திருவரங்கம். இவர் அருளிச்செய்த வேறு உரைகள்; திருப்பாவைக்கு ஈராயிரப்படி, திருவந்தாதிகள் கண்ணிநுண்சிறுத்தாம்பு திருப்பல்லாண்டு இவைகட்கு வியாக்கியானம், இரஹஸ்யத்ரய விவரணமாக நூற்றெட்டுச் சரணாகதி கத்ய வியாக்கியானம் என்பன.
நம்பி திருவழுதிநாடு தாசர் : இவர் பட்டர் காலத்தவர். ‘இத்தேவசாதி வெறுமரையோ, உப்புச்சாறு கிளருவது எப்போதோ?’ என்று கவிழ்ந்து பார்த்துக்கிடப்பதே, இவன் அழகையும் இனிமையையும் விட்டு’ என்று கூறினவர். (பக். 272காண்க).நம்பிள்ளை : இவர் திருவரங்கத்திற்குத் தெற்கேயுள்ள நம்பூர் என்ற தலத்தில் அவதரித்தவர்; வரதராஜர் என்பது இவருடைய திருப்பெயர்; திருக்கலிகன்றி தாசர் என்பது ஆசாரியரால் இடப்பட்ட பெயர். கந்தாடை தோழப்பரால்‘லோகாசாரியர்’ என்ற திருப்பெயர் இடப்பட்டவர்; நஞ்சீயருடைய மாணாக்கர். நஞ்சீயர், இவருடைய குணாதியங்களைக் கண்டு மகிழ்ந்து ‘நம்பிள்ளையோ!’ என்று தழுவிக்கொண்டார்; அது முதல் ‘நம்பிள்ளை’ என்ற பெயர் இவருக்கு வழங்கலாயிற்று. இவர், தென்சொற்கடந்து வடசொற்கடற்கு எல்லை தேர்ந்தவர்; திருவாய்மொழிக்கு நூறுரு அர்த்தம் நிர்வகித்த தம் ஆசாரியரான நஞ்சீயருக்குச் சதாபிக்ஷேகம் செய்தவர்; ‘ஆத்துமாவிற்குச் சரீரவிஸ்லேஷம் பிறந்தால் பரமபதம் சித்தம்’ என்று அறுதியிட்டிருப்பது எவ்வர்த்தத்தாலே?’ என்று ஒருவர் கேட்க, ‘திருமகள் கேள்வனை உபாய உபேயம் என்று அறுதியிட்டிருப்பது, நெடுங்காலம் இழந்து கிடந்த வஸ்துவைக் காட்டித் தந்த ஆசாரியன் பக்கல் கனக்க விஸ்வாசமுண்டாயிருப்பது. அருளிச் செய்த ஸ்ரீபாஷ்யத்தின்படியே எம்பெருமானார் தரிசன ஸ்தாபனம் பண்ணுவது, ஆழ்வார்கள் அருளிச்செயல்களாலே போது போக்குவது ஆகிய இவை உண்டானால், ‘மீட்சியின்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே’ என்கிறபடியே, பரமபதம் சித்தம்; சந்தேகிக்க வேண்டா,’ என்றருளினவர். பாண்டி நாட்டினின்றும் வைஷ்ணவர் சிலர் வந்து, ‘எங்கட்குத் தஞ்சமாக இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்யவேண்டும்’ என்று விண்ணப்பஞ்செய்ய, ‘கடற்கரைவெளியை நினைத்திருங்கோள்’ என்ன, அவர்களும், ‘மணற்குன்றையும் புன்னை மரங்களடர்ந்த காட்டையும் நினைத்திருக்கவோ?’ என்று விண்ணப்பஞ்செய்ய, கேட்டுப் புன்முறுவல் செய்து, ‘சக்கரவர்த்தி திருமகன் கடற்கரையிலே ஓர் அமிர்தக் கடல் போலே பெரிய வானர சேனையோடே விட்டிருக்க, அக்கரையிலே பையல் இராவணன் இருக்க, எழுபது கோடி சேனைகளும் உணர்ந்து, பெருமாளைக் குறிக்கொண்டு நோக்கிக்கொண்டு போர, அவர்கள் பிரகிருதிமான்களாகையாலே கண்ணுறங்கிக் காலோய்ந்து கைசோர்ந்தவளவிலே, தாமும் தம் திருத்தம்பிமாருமாகத் திருவரையில் கட்டின கச்சும், சுருக்கிய சீராவும் நாணியும், முதுகிலே கட்டின அம்பறாத்தூணியும், கையிலே தரித்துப் பிடித்துப் பெருக்கின திருச்சரமும், தரித்த திருவில்லும் தாமுமாய், சில அண்டஜங்கள் முட்டையிட்டுத் தம் சிறகின்கீழே நோக்கியிட்டுவைக்குமாறு போன்று, எழுபது வெள்ளம் மஹா சேனையையும் நடையாடு மதில்கள் போலே ரக்ஷித்துக்கொண்டு ஓரிரவெல்லாம் சாரிகையாய் வந்த சக்கரவர்த்தி திருமகனுடையகையும் வில்லுமே தஞ்சம் என்று இரும்’ என்று அருளினவர். இப்பெரியாருடைய திவ்யசரிதம் விரிப்பின் பெருகும்.
நம்பியேறுதிருவுடையான் தாசர் : இவர், பட்டர் காலத்தவர். ‘நம்பியேறுதிருவுடையான் தாசர் திருநாட்டுக்கு நடந்தார்’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய, பட்டர் துணுக்குற்று எழுந்துநின்று, ‘அவர் ஸ்ரீ வைஷ்ணவர்களுடன் பரிமாறும்படிக்குத் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்’ என்று பட்டரால் கூறப்படும் பெருமை வாய்ந்தவர். (பக். 204 காண்க) இவர் நாடார் மரபில் தோன்றியவரெனக் கருதப்படுகிறார்.
நாதமுனிகள் : ஆசாரிய பரம்பரைக்கு முதல்வர் இவரே. ‘நாதன்’ என்பது இவருடைய இயற்பெயர். நம்மாழ்வாரால் தமக்கு உபதேசிக்கப்பட்ட அர்த்தங்களை அடைவே எப்பொழுதும் மனனம் செய்துகொண்டு இருக்கின்ற அந்தணர் பெருமான் ஆதலின், ‘நாதமுனி’ என வழங்கப்பட்டார். முனி மனனசீலர். யோகமார்க்கத்தால் நம்மாழ்வாரை நேரிற்கண்டு, திருவாய்மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்களை அவரிடம் பெற்று, அவற்றை இயலும் இசையுமாக வகுத்து உலகத்தில் பரவச்செய்தவர்; திருவாய்மொழிக்கு ‘பக்தாம்ருதம்’ என்ற தனியனை அருளிச்செய்தவர். இவரை, ‘ஆரப் பொழில் தென்குருகைப்பிரான் அமுதத் திருவாய், ஈரத் தமிழினிசையுணர்ந்தோர்கட்கு இனியவர்தம், சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள் நாதமுனி’ என்பர் அமுதனார். இவர் யோகீஸ்வரர்; காட்டுமன்னார் கோவிலில் அவதரித்தவர்; ஸ்ரீ ஆளவந்தாருக்குப் பிதாமகர்; ஈஹ்வரமுனிகளுக்குத் தமப்பனார். அருளிச்செய்த நூல்கள்: நியாயதத்துவம், யோகரஹஸ்யம், புருஷநிர்ணயம் என்பன.
பட்டர் : இவர் கூறத்தாழ்வான் திருக்குமாரர்; திருவரங்கநாதனுடைய திருவருளாற்பிறந்தவர். வானிட்ட கீர்த்தி மகிழ் கூரத்தாழ்வான் மகிழ வந்த, தேனிட்ட தார் நம்பெருமாள் குமாரர்’ என்பர் திவ்வியகவி ஐயங்கார். எம்பாருடைய மாணாக்கர்; பராசரபட்டர் என்பது இவருடைய திருப்பெயர். செய்ந்நன்றியறிதலுக்கு அறிகுறியாக இராமாநுசர் இத்திருப்பெயரை இவருக்கு வைத்தனர். இப்பெரியாருக்குத் தேவியர் இருவர். இவர் தொல்காப்பியம் முதலான இலக்கணங்களையும், தொல்காப்பியங்களான இலக்கியங்களையும் கற்றுத்துறை போயவர். வியாக்கியானத்திலஇவருடைய நிர்வாஹங்கள் மிகச்சிறப்புடையனவாயும் சுவை பயப்பனவாயும் இருக்கும். திருநெடுந்தாண்டகத்தில் ‘மைவண்ண நறுங்குஞ்சி’ என்ற பாசுரத்திற்கு இவர் அருளிச்செய்த வியாக்கியானம் தனிப்பெருஞ்சிறப்புடையது. இராமாநுசருடைய நியமனத்தின்படியே சென்று, மேல் நாட்டிலிருந்து ‘வேதாந்தி’ என்பவரோடு ஒன்பது நாள் வாதஞ்செய்து, அவரை வென்று திருத்திப் பணி கொண்டவர். ‘இவ்விபூதியும் இவ்விபூதிமான்களும் பாக்கியமற்றவர்கள். ஆனால், அடியேன் செய்வது என? நாயுடலுக்கு நறுநெய் தொங்குமோ? இன்னம் சிலநாள் இங்கே அடிமைகொண்டருளில் பரமபதத்திற்கும் இதற்கும் சுருளும்படியுங் கட்டேனோ?’ என்று ராஜகுல மஹாத்மியத்தாலுண்டான செருக்குத் தோன்ற உரைத்தவர்; ‘ஆசனபதமத்திலே பொருந்தியிட்ட திருவடித்தாமரைகளும், அஞ்சலென்ற கையும், கவித்த முடியும், முறுவல் பூத்த சிவந்த திருமுகமண்டலமும், திருநுதலில் கஸ்தூரித் திருநாமமும் பரமபதத்தில் கண்டிலேனாகில் மூலையடியே முரித்துக் கொண்டு குதித்து மீண்டு வருவேன்!’ என்று தம் அன்பெல்லாம் தோன்ற திருவரங்கநாதனைப் பார்த்துக் கூறின ஏற்றம் வாய்ந்தவர். இவர் அருளிச்செய்த நூல்கள் : அரங்கராஜஸ்தவம், ஸ்ரீ குணரத்நகோசம், ஸஹஸ்ரநாம்பாஷ்யம், கிரியா தீபம், அஷ்டஸ்லோகி, சதுஸ்லோகி, துவிஸ்லோகி, தனிஸ்லோகி என்பன.
பராங்குசநம்பி : இவர், எம்பாருடைய திருத்தம்பியாரான சிறிய கோவிந்தப் பெருமாளுடைய புதல்வர். ‘பராங்குசநம்பி’ என்னும் நம்மாழ்வாருடைய இத்திருப்பெயரை அவர் நினைவின் பொருட்டு, இராமாநுசர் இவருக்கு வைத்தனர். இவர் எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர்.
பிள்ளை திருநறையூர் அரையர் : இவர், நஞ்சீயர் காலத்தவர்; எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர். (அவதாரிகை – திருமகள் கேள்வன் ஒன்று. பக். 14. வியாக. பக். 191 காண்க.)
பிள்ளைப்பிள்ளையாழ்வான் : இவர், கூரத்தாழ்வானுடைய மாணாக்கர்; எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர். பிள்ளை என்றும் இவரை வழங்குவர். கூரத்தாழ்வார் திருநாட்டுக்கு எழுந்தருளும் போது, இவர் மடியிலே திருமுடியை வைத்துக்கொண்டு திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்பர். ‘பிள்ளைப்பிள்ளையாழ்வான் மடியிலே திருமுடியையும் ஆண்டாள் மடியிலே திருவடிகளையும் வைத்துக்கொண்டு, உடையவர் திருவடிகளைத் தியானித்துக்கொண்டு அன்றே திருநாட்டுக்கு எழுந்தருளினார்?’ என வருதல் காண்க.
பிள்ளையமுதனார் : (வியாக். பக். 233 காண்க). இவர் திருவரங்கத்தமுதனார் என்று கருதப்படுகின்றார் என்பர்.
பிள்ளையுறங்காவில்லி தாசர் : இவர் இராமாநுசருடைய மாணாக்கர்; சோழன் அவைக்களத்தில் அமர்ந்திருந்த வில்லிகள் மூவருள் ஒருவர்; அரசனிடத்துத் தமக்குக் கிடைக்கும் பொருளனைத்தையும் இராமாநுசர் திருவடிகளிலே சமர்ப்பித்தவர்; மடத்தில் அத்தாணிச்சேவகம் பெற்று வாழ்ந்தவர். இவர் தேவிகள் பொன்னாச்சியார். தேவிகளின் பேரழகில் ஈடுபட்டுத்துவக்குண்டிருந்த இவர், இராமாநுசருடைய திருவருளால் பெரிய பெருமாளைச் சேவித்த பின்னர், பிரபத்தி மார்க்கத்தை மேற்கொண்டவர். ஒரு நாள், உடையவர், ‘அபயப்பிரதானம்’ அருளிச்செய்யாநிற்க, அதனைக்கேட்டிருந்த இவர் எழுந்து வணங்கி நின்றனர்’ ‘பிள்ளாய்! இது என்?’ என்று உடையவர் கேட்டருள, ‘முற்றுந் துறந்து பெருமாள் திருவடிகளே தஞ்சம் என்று வந்து விழுந்த விபீஷணாழ்வானையும் அகப்பட, ‘கொல்லுங்கள்’ என்று கல்லுந் தடியுங்கொண்ட இராமகோஷ்டிக்கு, அடியேன் பசு, பத்தினிகளோடு கூடினவன் ஆளாகப் புகுகிறேனா?’ என்றார். உடையவரும் ‘கேளும் பிள்ளாய்! அஞ்சாதே கொள்ளும் : நான் பெற்றேனாகில் நீர் பெறுகிறீர்; பெரிய நம்பி பெற்றாராகில் அடியேன் பெறுகிறேன்; ஆளவந்தார் பெற்றாராகில் பெரியநம்பி பெறுகிறார்; மற்றுமுள்ளார் பெற்றார்களாகில் இவர்களும் பெறுகிறார்கள்; நம் சடகோபர் ‘அவாவற்று வீடு பெற்றேன்’ என்று தம் திருவாக்காலே அருளிச் செய்கையாலே அவர் பெற்றது சித்தம்; ஆனபின், நமக்கும் சித்தம் என்று இரும். கழுகு உண்ணில் வாழையும் உண்ணும் என்றிரும். ஆன பின்னர், நான் பெற்றேனாகில் நீர் பெறுகிறீர், அஞ்சாதே சுகமே இரும்,’ என்று அருளிச்செய்ய, ஆறியிருந்த பெரியார் இவர். பெருமாள் செய்ய திருநாள் கண்டருளித் திருக்காவேரியில் தீர்த்தம் பிரசாதிக்க எழுந்தருளுகிற போது எம்பெருமானார், முதலியாண்டான் திருக்கைத்தலம்பற்றி எழுந்தருளி நீராடி, மீண்டு எழுந்தருளும்போது இவருடைய திருக்கைத்தலம் பற்றி எழுந்தருள, சேவித்திருந்த முதலிகள் ‘இதற்கு அடி என்?’ என்று விண்ணப்பஞ்செய்ய உடையவரும், ‘ஜன்மம் உயர்ந்திருக்கச்செய்தே தாழ நில்லாநின்றோமே என்ற அபிமானம் உண்டே. அல்லாதார்க்கு, அக்கொத்தையும் இல்லாதவரன்றோ இவர்?’ என்று கூறியருளும்படியான ஞானச் செல்வர் இவர்.
பெரியதிருமலை நம்பி : இவர், ஸ்ரீ ஆளவந்தாருடைய மாணாக்கர்; இராமாநுசருக்கும் எம்பாருக்கும் மாதுலர்; இராமாநுசருக்கு ஆசாரியருமாவர், இவரிடமே ஸ்ரீ ராமாயணத்தின் பொருள் கேட்டனர் இராமாநுசர். நம்பி திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு செய்துகொண்டு திருமலையிலேயே நித்தியவாசஞ் செய்தவர். இராமாநுசர் திருமலைக்கு எழுந்தருளிய காலத்தில் இவர் இராமாநுசரை எதிர்க்கொண்டு வந்து திருவேங்கடமுடையானுடைய தீர்த்தப் பிரசாதத்தை அவருக்குக் கொடுக்க, இராமாநுசரும் இவர் திருவடிகளிலே தண்டன் சமர்ப்பித்துத் ‘தேவரீர் எழுந்தருள வேண்டுமோ? வேறு சிறியவர் இலரோ?’ என்று விண்ணப்பஞ் செய்ய, ‘நாலு திருவீதிகளிலும் ஆராய்ந்து பார்த்தவிடத்திலும் என்னைக்காட்டிலும் சிறியவர்களைக் கண்டிலேன்! என்று விடை கூறிய பெரியார் இவர்.
பெரியவாச்சான் பிள்ளை : இவர் நம்பிள்ளையினுடைய மாணாக்கர்; அவர் திருவருளுக்குப் பூரண பாத்திரமானவர்; திருவாய்மொழிக்கு இருபத்து நாலாயிரப்படி என்னும் வியாக்கியானத்தை அருளிச்செய்தவர்; திவ்வியப் பிரபந்தத்தில் மற்றை மூவாயிரங்கட்கும் வியாக்கியானம் அருளிச்செய்தவரும் இப்பெரியாரேயாவர். இவர் அவதரித்த ஊர், கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள சேங்கநல்லூர் என்பது. இவர் திருவரங்கத்திலேயே வாழ்ந்தவர்; ஸ்ரீ கிருஷ்ணபாதர், அபயப்பிரதானர் என்னும் வேறு திருப்பெயர்களும் இவருக்கு உண்டு. இவர் அருளிச்செய்த வேறு நூல்கள்; தனி ஸ்லோகி, பரந்த ரகசியம், மாணிக்கமாலை, நவரத்நமாலை, சகல பிரமாண தாத்பரியம், அபயப் பிரதான வியாக்கியானம், சரமரஹஸ்யம், அநுஸந்தான ரஹஸ்யம், நியமனப்படி என்பன.
பெரியாழ்வார் : இவர் தென்பாண்டிநாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரிலே, அந்தண வருணத்தில் வேயர் குலத்தில் அவதரித்து, விஷ்ணு சித்தர் என்ற திருநாமம் பெற்று விளங்கியவர்; ஆழ்வார்களுள் ஒருவர்; ஆண்டாளுக்குத் தமப்பனார். திருநந்தவனமுண்டாக்கித் திருமாலை கட்டுதல் முதலியதொண்டுகளைச் செய்து கொண்டு தம்மூர்த் திருமாலை இடையறாது வழிபட்டு வந்தவர். மதுரையில் ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியன் சமயவிசாரஞ்செய்வதில் பெருவிருப்புடையவனாய்ப் ‘பரமார்த்த தத்துவம் இன்னதென்பதைநிரூபிக்கும் பெரியார்க்கு உரியது’ என்று தன் அரண்மனையிற் கட்டிய பொற்கிழியைத் திருமால் திருவருளால் இவர் சமயவாதியர் பலரோடு வாதஞ்செய்து பரத்துவத்தை நிரூபணஞ்செய்து, வெற்றியடைந்து பெற்றவர்; அதனால், ‘பட்டர் பிரான்’ என்ற சிறப்புப் பெயரும் அடைந்தவர். பட்டர்பிரான்-வித்துவான்களுக்குத் தலைவர். இப்பெரியார் காலம், கி.பி. 8-ஆம் நூற்றாண்டாகும். இவர் அருளிச் செய்த நூல்கள்: திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி என்பனவாம்.
மணவாளமாமுனிகள் : இவர், பாண்டி நாட்டிலே திருநெல்வேலி ஜில்லாவில் சிக்கில் கிடாரம் என்ற தலத்தில், ஐப்பசி மாதம், சுக்கிலபக்ஷம், சதுர்த்தசி, வியாழக்கிழமை, மூல நக்ஷத்திரத்தில், திகழக்கிடந்தான் திருநாவீறுடைய அண்ணர் என்பவருக்குப் புதல்வராய்த் தோன்றினார். இவரை ஆதிசேடனுடைய அமிசம் என்றும், இராமாநுசருடைய புனர் அவதாரம் என்றும் கூறுவர் பெரியோர். திருவாய்மொழிப்பிள்ளை என்ற பெரியாரிடம் திருவாய்மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்களின் வியாக்கியானங்களையும், மற்றை ரஹஸ்ய கிரந்தங்களையும் காலக்ஷேபங்கேட்டு, அவற்றின் நுண் பொருளை அலகலகாக அறிந்தவர்; இராமா நுசரிடத்தில் பேரன்பு வாய்ந்தவராதலின், ‘யதீந்திரப்ரவணர்’என்ற திருப்பெயரைப் பெற்றவர். இவர்க்குப் ‘பெரிய ஜீயர்’ என்ற திருப்பெயர் பெரிய பெருமாளால் கொடுக்கப்பட்டது. முப்பத்தாறாயிரப்படி என்னும் வியாக்கியானத்தைத் திருவரங்கத்து எம்பெருமானும் அவனடியார்களும் கேட்கும்படி காலக்ஷேபஞ்சாதித்தவர்; முப்பத்தாராயிரப் பெருக்கர் என்ற திருப்பெயரையும் பெற்றவர்; சொந்த ஊராகிய ஆழ்வார் திருநகரியை விட்டு நீங்கித் திருவரங்கத்திலேயே நித்திய வாசஞ்செய்தவர்; தம் ஆசாரியருடைய நியமனத்தின்படி, அனைவரும் கேட்டு உய்யும்படி அருளிச்செயல்களின் ஆழ்பொருள்களை அள்ளிவழங்கியவர். இவர் அருளிச்செய்த நூல்கள்: தத்வத்திரயம், ரஹஸ்யத்திரயம், ஸ்ரீ வசன பூஷணம், ஆசார்ய ஹ்ருதயம், ஞான சாரம், பிரமேயசாரம், பெரியாழ்வார் திருமொழிக்கும் இராமாநுச நூற்றந்தாதிக்கும் வியாக்கியானங்கள், திருவாய்மொழி நூற்றந்தாதி, உபதேசரத்தினமாலை, ஆர்த்திப்பிரபந்தம், எதிராஜவிம்ஸதி, திருவாராதனக் கிரமம் என்னும் நூல்களும் பிறவுமாகும்.
முதலாழ்வார்கள் : பொய்கையார், பூதத்தார், பேயார் என்ற இம்மூவரும் முதலாழ்வார்கள் என்று வழங்கப்படுவர். மற்றை ஆழ்வார்கட்கெல்லாம் முன்னே அவதரித்தமையால், முதலாழ்வார்கள் ஆனார்கள். இவர்களுள் பொய்கையார் காஞ்சியிலும், பூதத்தார் திருக்கடன்மல்லையிலும், பேயார் மைலாப்பூரிலும் அயோனிஜர்களாய் ஓரே மாதத்தில் அடுத்தடுத்த நக்ஷத்திரங்களில் அவதரித்தவர்கள். இவர்கள் காலம், கி. பி 5, 6 ஆம் நூற்றாண்டுகளின் பின் முன் பகுதிகளாகும். தனித்தனியே சஞ்சரித்து வந்த இவர்கள் திருக்கோவலூரில் நெருக்கமான இடை கழி ஒன்றில் மழை பெய்த ஒருநாளிரவு ஒதுங்குவதற்காகச் சந்திக்க நேர்ந்த போது, இறைவன் இவர்கட்கு அருள்புரிய விரும்பி இவர்கட்கிடையில் நான்காமவராய் இருந்து இருளில் நெருக்க, அதனையறிய வேறு விளக்கின்மையால் தங்கள் ஞானமாகிய விளக்கேற்றிப் பாட, அப்பெருமான் அங்கு இவர்கட்குக் காட்சி கொடுத்தனர் என்பது இவர்களது சரித்திரச் சுருக்கமாகும். ‘பாவருந் தமிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநா ளிரவில், மூவரும் நெருக்கி மொழி விளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநன்னாடு’ என்பது வில்லி பாரதம் தற்சிறப்புப்பாயிரம். இவர்களுள், பொய்கையாரைச் ‘சாவவுங் கெடவும் பாட வல்லவரும், முக்காலமும் உணர்ந்தவருமாகிய இருடி’ என்று யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் கூறுவர். அவ்விருத்திகாரர் ஆரிடமான கவிகட்கு உதாரணங்காட்டி வருமிடத்து, ‘அவை, உலகியற்செய்யட் கோதிய உறுப்புகளில் மிக்குங் குறைந்தும் வரும்,’ என்றும், அவ்வாரிடம் பாடுதற்குரியார், ‘ஆக்குதற்குங் கெடுத்தற்கும் ஆற்றலுடையோராய் முக்காலமுமுணர்ந்த இருடிகள்,’ என்றும், அவராவார், பொய்கையார், குடமூக்கிற்பகவர், பூதத்தார், காரைக்காற்பேயார், மூலர் முதலியோர்’ என்றும் கூறுவர். இதனால், இவர்கள் முக்காலமுமுணர்ந்த மகரிஷிகள் என்பது பெறப்படுகின்றது. இவர்கள் அருளிச்செய்த நூல்கள், முறையே முதல் திருவந்தாதி, இரண்டாந் திருவந்தாதி, மூன்றாந்திருவந்தாதி என்பனவாம்.
வடக்குத் திருவீதிப்பிள்ளை : இவர் நம்பிள்ளையினுடைய பூர்ணமான திருவருளுக்குப் பாத்திரமானவர்; ஈடு முப்பத்தாறாயிரப் படி என்னும் வியாக்கியானத்தை எழுதி உபகரித்தவர்; மகாவிரக்த சீலர்; அஷ்டாதச ரஹஸ்யத்தை அருளிச்செய்த பிள்ளைலோகாசாரியரும், ஆசாரிய ஹ்ருதயம் அருளிச்செய்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் இவருடைய திருக்குமாரர்கள். கூரகுலோத்தம தாசர். இவருடைய மாணாக்கர் இவர் திருவரங்கத்தில் அவதரித்து, அங்கேயே வாழ்ந்தவர். திராவிட வேதாந்த தேசிகர், ஸ்ரீ கிருஷ்ணபாதர் என்னும் வேறு திருப்பெயர்களும் இவர்க்கு உண்டு.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
1. ப்ருந்தாவநம் பகவதா க்ருஷ்ணேநாக்லிஷ்டகர்மணா
ஸூபேந மநஸா த்யாதம் கவாம் வ்ருத்திமபீப்ஸீதா.
2. உத்பந்ந நவஸஷ்பாட்யா ஸக்ரகோபாஸ்த்ருதாமஹீ
ஸ்தலீமாரதகீவாஸீத் பத்மராக க்ருதாந்தரா.
3. “ப்ரதாநக்ஷேத்ரஜ்ஞபதி: குணேஸ:
ஸம்ஸாரபந்த ஸ்திதிமோக்ஷஹேது:”
4. தைவீஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம்ஏதாம் தாந்தி தே.
5. ஜராமரணமோக்ஷாய மாம் ஆஸ்ரித்ய யதந்தி யே
தே பிரஸ்ம தத்விது: க்ருத்ஸ்நம் அத்யாத்மம் கர்மச
அகிலம்
6. ஸம்ஜ்ஞாயதே யேந தத்அஸ்ததோஷம் சுத்தம் பரம்
நிர்மலம் ஏகரூபம்
ஸம்த்ருச்யதே வாபி அதிகம்யதே வா தத் ஜ்ஞாநம்
அஜ்ஞாநம் அத: அந்யத் உக்தம்.
7. தத்கர்ம யந்நபந்தாய ஸா வித்யா யாவி முக்தயே
ஆயாஸாய அபரம் கர்ம வித்யா அந்யா ஸில்பநைபுணம்.
8. கலௌ ஜகத்பதிம் விஷ்ணும் ஸர்வஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம்
நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்ட உபஹதா ஜநா:
9. துர்லபோ மாநுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷணபங்குர:
தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்ட ப்ரியதர்ஸநம்.
10. மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ கஸ்சித் யததி ஸித்தயே
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந்மாம் வேத்தி தத்வத:
11. தத: அகில ஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநா
தேவகீபூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா.
12. ஹஸிதம் பாஷிதம் சைவ கதி: யா யச்ச சேஷ்டிதம்
தத்ஸர்வம் தர்மவீர்யேண யதாவத் ஸம்ப்ரபஸ்யதி:
13. உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீது ஆத்மா ஏவ மே மதம்
ஆஸ்தித: ஸஹியுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம்.
14. பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த: லக்ஷ்மணோலக்ஷ்மி வர்த்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:
15. நசஸீதா த்வயாஹீநா நசஅஹமபி ராகவ
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யாவிவ
உத்த்ருதௌ.
16. நதேவலோக ஆக்ரமணம் ந அமரத்வம் அஹம் வ்ருணே
ஐஸ்வர்யம் வாபி லோகாநாம் காமயே ந த்வயா விநா.
17. அஹம்தாவத் மஹாராஜே பித்ருத்வம் நோபலக்ஷயே
ப்ராதா பர்த்தாச பந்துஸ்ச பிதாச மம ராகவ:
18. பவாம்ஸ்து ஸஹவைதேஹ்யா கிரிஸாநுஷூ ரம்ஸ்யதே
அஹம்ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்சதே.
19. விஸ்தரேண ஆத்மநோ யோகம் விபூதிஞ்ச ஜநார்த்தன
பூய: கதய த்ருப்தி: ஹி ஸ்ருண்வதோ நாஸ்திமே அம்ருதம்
20. கர்மாபிதப்தா: பர்ஜந்யம் ஹ்லாதயந்தமிவ ப்ரஜா:
நததர்ப ஸமாயாந்தம் பஸ்யமாநோ நராதிப:
21. தர்மாத்மா ஸத்யஸௌசாதி குணாநாம் ஆகர: ததா
உபமாநம் அஸேஷாணாம் ஸாதூநாம்ய: ஸதாபவத்.
22. அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத:
க்ருதஞ்ஜஸ்ய பஹூஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாம நாமத:.
23. மாநிஷாத பாதிஷ்டாம் த்வமகம: ஸரஸ்வதீ: ஸமா:
யத்க்ரௌஞ்சமிதுநாத் ஏகம் அவதீ: காமமோஹிதம்.
24. மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவருத்தேயம் ஸரஸ்வதீ
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குரு த்வம் ரிஷிஸத்தம.
25. ஹரிகீர்த்திம் விநாஏவ அந்யத் ப்ராஹ்மணேந நரோத்தம
பாஷாகாநம் நகாதவ்யம் தஸ்மாத் பாபம் த்வயாக்ருதம்.
26. பரமாத்மநி யோரக்த: விரக்த: அபரமாத்மநி
ஸர்வைஷணா விநிர்முக்த: ஸபைக்ஷம் போக்தும் அர்ஹதி.
27. அகுத்ஸிதே கர்மணி ய: ப்ரவர்த்ததே
நிவ்ருத்த ராகஸ்யக்ருஹம் தபோவநம்.
28. ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஸ்ச ப்ரத்யகாத்மந:
ப்ராப்தி உபாயம் பலம் ப்ராப்தே: ததாப்ராதிவிரோதிச
வதந்தி ஸகலா வேதா: ஸேதிஹாஸ புராணகா:
முநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந:
29. உத்திஷ்ட உத்திஷ்ட கிம்ஸேஷே ராஜந் புத்ரமஹாயஸ:
த்வத்விதா நஹி ஸோசந்தி ஸந்த: ஸதஸி ஸத்தமா:.
30. ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா
ப்ராது:ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்த்தும் அர்ஹஸி.
31. ஸகாமம் அநவாப்யைவ ராமபாதௌ உபஸ்ப்ருஸன்
நந்திக்ராமே அகரோத் ராஜ்யம் ராமாகமந காங்க்ஷயா.
32. ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவ அதர்வணாநிச
ஸர்வம் அஷ்டாக்ஷராந்தஸ்தம் யச்ச அந்யதபி வாங்கமயம்.
33. யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ
ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் நபிபேதி குதஸ்சநேதி.
34. ஸர்வே க்ஷயாந்தாநிசயா: பதநாந்தா: முச்சரயா:
ஸம்யோகா விப்ரயோகாந்தா மரணாந்தஞ்ச ஜீவிதம்.
35. ஸமஸ்த கல்யாண குணாத்மக: அஸௌ.
36. வர்ஷாயுதை: யஸ்யகுணா நஸக்யா வக்தும் ஸமேதைரபி
ஸர்வலோகை:
மஹாத்மந: ஸங்கசக்ராஸி பாணே: விஷ்ணோர்ஜிஷ்ணோர்
வஸூதேவாத்மஜஸ்ய.
37. ஜ்ஞாந விஜ்ஞாந ஸம்பந்ந: நிதேசே நிரத: பிது:
தாதுநாமிவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்.
38. தே தம்ஊசு: மஹாத்மாநம் பௌர ஜாநபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே.
39. ஸ்வாபாவிகாநவதிகாதிஸயாஸங்க்யேய கல்யாண
குணகண:
40. யதா ஸைந்தவகந: அநந்தர: அபாஹ்ய: க்ருத்ஸ்ந:
ரஸ கநஏவ, ஏவம்வா அரே அயமாத்மா அநந்தர:
அபாஹ்ய: க்ருத்ஸ்ந: ப்ரஜ்ஞாந கநஏவ.
41. தம் அக்ரதும் பஸ்யதி வீதஸோக:
தாது: ப்ரஸாதாத் மஹிமாநம்ஈஸம்.
42. வ்யஸநேஷூமநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
உத்ஸ வேஷூச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி.
43. அஸந்நேவ ஸபவதி அஸத் ப்ரஹ்மேதிவேதசேத்
அஸ்தி ப்ரஹ்மேதிசேத வேத ஸந்தமேநம் ததோவிது: இதி.
44. மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:
பந்தாய விஷயாஸங்கி முக்த்யை நிர்விஷயம் மந:
45. நம: புரஸ்தாத் அத ப்ருஷ்டத: தே நம: அஸ்துதே ஸர்வத
ஏவ ஸர்வ
அநந்தவீர்ய அமிதவிக்ரம: த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி
தத: அஸிஸர்வ:
46. யதோவா இமாநிபூதாநி ஜாயந்தே யேநஜாதாநி ஜீவந்தி
யத்ப்ரயந்தி அபிஸம்விஸந்தி தத்விஜிஞ்ஜாஸஸ்வ தத்
ப்ரஹ்ம.
47. ந சக்ஷூஷா க்ருஹ்யதே நாபிவாசா, மநாஸாது விஸூத்தேந,
48. அதாத ஆதேச: நேதிநேதி நஹி ஏதஸ்மாத் இதிநேதி
அந்யத்பரம் அஸ்தி.
49. யம் ஆத்மா நவேத, யம் ப்ருதிவீ நவேத.
50. ஆநந்தோ ப்ரஹ்மேதி வ்யஜாநாத்.
51. ப்ரஹித: ப்ரதநாய மாதவாந் அஹம் ஆகாரயிதும் மஹீப்ருதா
நபரேஷூ மஹௌஜஸ: சலாதபகுர்வந்தி மலிம்லுசா இவ.
52. நதஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே ந தத்
ஸமஸ்ச அபி அதிகஸ்ச த்ருஸ்யதே,
பராஸ்யஸக்தி: விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ
– ஜ்ஞாநபல க்ரியாச.
53. ஸஉத்தம:புருஷ: ஸதத்ர பர்யேதிஜக்ஷத் க்ரீடன்
ரமமாண: ஸ்தீரிபி: வா யாநைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜ
நம் ஸ்மரந் இதம்ஸரீரம்.
54. பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம்.
– தைத்திரீயநாரா. 11 : 8.
55. யச்சகிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஸ்யதே ஸ்ரூயதேபிவா,
அந்தர் பஹிஸ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:
56. தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ராவிஸத் ததநுப்ரவிஸ்யஸ்ச்ச
த்யச்ச அபவத்.
57. அந்த: ப்ரவிஷ்ட: ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா.
58. த்வாஸூபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமாநம் வ்ருக்ஷம்
பரிஷஸ்வஜாதே, தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி
அநஸ்நந் அந்ய: அபிசாகஸீதி
59. கிம்நு ஸ்யாத் சித்தமோஹ: அயம்பவேத் வாதகதி: துஇயம்
உந்மாதஜ: விகாரோவா ஸ்யாத்இயம் ம்ருகத்ருஷ்ணிகா.
60. கச்சித் நதுஷ்டோவ்ரஜஸி ராமஸ்ய அக்லிஷ்ட கர்மண:
இயம்தே மஹதீ ஸேநா ஸங்காம் ஜநயதீவமே
61. சத்ருக்நஞ்ச அப்ரவீத் ஹ்ருஷ்ட: தாநமாத்யாம்ஸ்ச ஸர்வஸ:
மந்யே ப்ராப்தாஸ்ஸ்ம தம்தேஸம் பரத்வாஜ:யம் அப்ரவீத்
62. க்வதே ராமேண ஸம்ஸர்க்க: கதம் ஜாநாஸி லக்ஷ்மணம்
வாநராணாம் நராணாஞ்ச கதம் ஆஸீத ஸமாகம:.
63. ஸர்வர்க்ஷ ஹரிஸைந்யாநாம் ஸூக்ரீவம் அகரோத் பதிம்
ராம ஸூக்ரீவயோ: ஐக்யம் தேவிஏவம் ஸமஜாயத.
64. ஸர்வம்கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநிதி ஸாந்த உபாஸீத.
65. தத்ஸத்யம் ஸ ஆத்மா தத்த்வமஸி ஸ்வேதகேதோ.
66. நஹிபாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம் பவத்யந்யஸ்ய கஸ்யசித்.
67. யத்வேதாதௌ ஸ்வர: பரோக்தோ வேதாந்தேச ப்ரதிஷ்டித:
தஸ்ய ப்ரக்ருதிலீ நஸ்ய ய: பர: ஸமஹேஸ்வர:
68. அஞ்சலி: பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவப்ரஸாதிநீ.
69. க்ருதாபரா தஸ்யஹிதே நாந்யத் பஸ்யாமி அஹம்க்ஷமம்
அந்தரேண அஞ்ஜலிம் பத்வா லக்ஷ்மணஸ்ய ப்ரஸாதநாத்.
70. யோயோ யாம் யாம் தநும்பக்த: ஸ்ரத்தயார்ச்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்.
71. ஸதயாஸ்ரத்தயா யுக்த: தஸ்யாராதநமீஹதே
லபதேசத்த: காமாந் மயைவ விஹிதாந் ஹிதாந்
72. அருணயா பிங்காக்ஷ்யா ஸோமங்க்ரீணாதி.
73. அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே
வ்யாகரவாணி.
74. யஸ்யாத்மா ஸரீரம். . .யஸ்யப்ருதிவீ ஸரீரம்.
75. ஆத்மந ஆகாஸ: ஸம்பூத:, ஆகாஸாத்வாயு:
76. சத்வார்யேவ பூதாநி மிதஸ்ஸம்பத்தாநி.
77. பஹூயாம் ப்ரஜாயேயேதி.
78. யமாத்மா ந வேத.
79. அக்ஷரம் அம்பராந்த த்ருதே:
80. கஸ்மிந்நு கலு ஆகாஸ ஓதஸ்ச ப்ரேரதஸ்ச.
81. யஸ்ய ப்ரஹ்மச க்ஷத்ரஞ்ச உபேபவத ஓதந;
ம்ருத்யு: யஸ்ய உபஸேசநம் கஇத்தா வேத யத்ர ஸ:
82. பர: பராணாம் பரம: பரமாத்மா ஆத்மஸம்ஸ்தித:
ரூபவர்ணாதி நிர்த்தேஸ விஸேஷண விவர்ஜித:
83. விஷ்ணு: ஆத்மா பகவதோ பவஸ்ய அமிததேஜஸ:
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸவிஷேஹே மஹேஸ்வர:
84. யோ ப்ரஹ்மாணம் விததாதிபூர்வம்
யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை.
85. ஏதௌ த்வௌ விபுத ஸ்ரெஷ்டௌ ப்ரஸாத
க்ரோதஜௌ ஸ்மிருதௌ
ததா தர்ஸித பந்தாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகௌ.
86. ஏஷம ஆத்மா அந்தர்ஹ்ருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா:
87. அத்ர க்ருத்ர: பததி.
88. ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகி: பகவாந்ருஷி:
89. பாட்யே கேயேச மதுரம் ப்ரமாணை: த்ரிபி: அந்விதம்
ஜாதிபி: ஸ்ம்தபி: பத்தம் தந்த்ரீலய ஸமந்விதம்.
90. பாதபத்த: அக்ஷரஸம: தந்திரீலய ஸமமவித:
91. காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஈத்ருஸை: கரவாணி
அஹம்.
92. உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்யைகாந்திகாத்யந்திக
பக்தியோகைகலப்ய:
93. நாஸம்வத்ஸர வாஸிநே ப்ரப்ரூயாத்.
94. ஸோஹம் பருஷிதஸ்தேந தாஸவச்ச அவமாநித:
த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் ஸரணம் கத:
95. பரித்யக்தா மயா லங்கா மித்ராணிச தநாநிச
பவத்கதம்மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநிச.
96. யமோ வைவஸ்வதோ ராஜா ய: தவஏஷஹ்ருதிஸ்தித:
தேந சேதவிவாதஸ்தே மா கங்காம் மா குரூந் கம:
97. அநாத்மநி ஆத்மபுத்தி: யா அஸ்வே ஸ்வமிதி யா மதி:
அவித்யா தருஸம்பூதி பீஜம் ஏதத் த்விதா ஸ்திதம்
98. அச்யுத அஹம் தவஅஸ்மி இதி ஸைவ ஸம்ஸார பேஷஜம்.
99. ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம்
விஷ்ணுபோதம் விநாநஅந்யத் கிஞ்சித் அஸ்திபராயணம்.
100. ஜ்யோதீம்ஷிவிஷ்ணு: புவநாநிவிஷ்ணு: வநாநிவிஷ்ணு:
கிரயோதிஸஸ்ச
நத்ய: ஸமுத்ராஸ்ச ஸஏவ ஸர்வம் யதஸ்தி யந்நாஸ்திச
விப்ரவர்ய.
101. ஸத்யஞ்ச அந்ருதஞ்ச ஸத்யம் அபவத்.
102. ப்ரஸாத பரமௌ நாதௌ மம கேஹம் உபாகதௌ
தந்யோஹம் அர்ச்சயிஷ்யாமி இத்யாஹ மால்யோபஜீவந:
103. ஸமோஹம் ஸர்வபூதேஷூநமேத்வேஷ்ய: அஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி துமாம் பக்த்யா மயிதே தேஷூ சாப்யஹம்.
104. வாஸூதேவோஸி பூர்ண:
105. இதாநீம் மாக்ருதா வீர ஏவம் விதம் அசிந்திதம்
த்வயி கிஞ்சித் ஸமாபன்னே கிம்கார்யம் ஸீதயாமம.
106. பஹூநாம் ஜந்மநாம் அந்தேஜ்ஞாநவாந் மாம்ப்ரபத்யதே
வாஸூதேவ: ஸ்ர்வம் இதி ஸ மஹாத்மா ஸூதுர்லப:
107. மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸூஹருத்கதி:
நாராயண:
108. பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தாரமித்ரா தயோபிவா
ஏகைக பலலாபாய ஸர்வலாபாய கேஸவ:
109. ப்ராயஸ: பாபகாரித்வாத் ம்ருத்யோ: உத்விஜதே ஜந:
க்ருதக்ருத்யா: பாதீக்ஷந்தே ம்ருத்யும் ப்ரியம் இவ அதிதிம்.
110. ஸர்வே வேதா: ஸர்வ வேத்யா: ஸஸ்ஸ்த்ரா:
ஸர்வேயஜ்ஞா: ஸர்வ இஜ்யாஸ்ச க்ருஷ்ண:
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே
தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாபதா:
111. நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண:பர:
நாராயணபரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண:பர:.
112. நித்யம் த்வதேக பரதந்த்ர நிஐஸ்வரூபா:
பாவத்க மங்கள குணாஹி நிதர்ஸனம் ந:
113. பித்யதே ஹ்ருதய க்ரந்தி: சித்யந்தே ஸர்வ ஸம்ஸயா:
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந் த்ருஷ்டே பராவரே
114. ததோமாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம்.
115. பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜூந
தாந்யஹம் வேத ஸர்வாணி நத்வம் வேத்த பரந்தப.
116. ஜந்ம கர்மச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி
ஸோர்ஜூந.
117. மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந
தோஷோ யத்யபிதஸ்ய சியாத் ஸதாம்ஏதத் அகர்ஹிதம்.
118. அப்ரவீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதோ விபீஷண:
அந்தரிக்ஷ கத:ஸ்ரீமாந் ப்ராதாவை ராக்ஷஸாதியம்.
119. லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: பஹி: ப்ராண இவாபர:
120. இமௌ ஸ்ம முநிஸார்த்தூல கிங்கரௌ ஸமுபஸ்திதௌ
ஆக்ஞாபய யதேஷ்டம் வை ஸாஸநம் கரவாவகிம்.
121. பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்
புருஷம் ஸாஸ்வதம் திவ்யம் ஆதிதேவம் அஜம் விபும்.
122. பக்த்யாது அநந்யயா ஸக்ய: அஹமேவம் வித: அர்ஜூந
ஜ்ஞாதும் த்ருஷ்டுஞ்ச தத்த்வேந ப்ரவேஷ்டுஞ்ச பரந்தப,
123. ப்ராம்யதாம் அதர ஸம்ஸாரே நராணாம் கர்மதுர்கமே
ஹஸ்தாவலம்பநோஹ்யேகோ பக்தி கரீதோ ஜநார்தந:
124. ஹிமவாந் மந்தரோ மேரு: த்ரைலோக்யம் வா ஸஹாமரை:
ஸகயம் புஜாப்யாம் உத்தர்த்தும் ந ஸங்க்யே பரதாநுஜ:
125. வாயு ஸூநோ: ஸூஹ்ருத்த்வேந பக்த்யா பரமயா ச ஸ:
ஸத்ரூணாம் அப்ரகம்ப்யோபி லகுத்வம் அகமத் கபே:
126. அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா
நத்வம் ஸமர்தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம்வநே.
127. ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ.
128. தாம்நா சைவோதரே பத்வா-ப்ரத்ய பத்நாத் உலூகலே
க்ருஷ்ணம் அக்லிஷட கர்மாணம் ஆஹச இதம் அமர்ஷிதா.
129. யதி ஸக்நோஷி கச்ச த்வம் அதிசஞ்சல சேஷ்டித
இதி உக்த்வா அதநிஜம் கர்ம ஸா சகார குடும்பிநீ.
130. மந்யே ஸாபரணா ஸூப்தா ஸீதா அஸமிந் ஸயநோத்தமே
தத்ர தத்ர ஹி த்ருஸ்யந்தே ஸக்தா: கநக பிந்தவ:
131. ததவஸ்தம் து பரதம் ஸத்ருக்ந: அநந்தரஸ்தித:
பரிஷ்வஜ்ய ருரோத உச்சை: விஸம்ஜஞ: ஸோக கர்ஸித:
132. ஸாதம் ஸமீக்ஷ்யைவ ப்ருஸம் விஸம்ஜ்ஞா கதாஸூ
கல்பேவ பபூவ ஸீதா.
சிரேண ஸம்ஜ்ஞாம் ப்ரதிலப்யசைவ விசிந்தயாமாஸ
விஸாலநேத்ரா.
133. அஜாயமாநோ பஹூதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்.
|
164. தத் விப்ராஸ: விபந்யவ: ஜாக்ருவாம்ஸ: ஸமிந்ததே
விஷ்ணோ: யத் பரமம்பதம்.
165. அயம் அபர: காரக நியம:
166. ஆத்மாவா அரேத்ரஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய: மந்தவ்ய:
நிதித்யாஸிதவ்ய:
167. ஆர்த்தோ வா யதிவா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:
அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா.
168. ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பர பலார்த்தந:
மாம்நயேத் யதி காகுத்ஸ்த: தத்தஸ்ய ஸத்ருஸம் பவேத்.
169. ஹம்ஸகா ரண்டவாகீர்ணாம் வந்தே கோதாவரீம் நதீம்
க்ஷீப்ரம் ராமாய ஸம்ஸத்வம் ஸீதாம் ஹரதி ராவண:
170. ஆஸோக ஸோகாபநுத ஸோக உபஹத சேதஸம்
த்வந்நாமாநம் குருக்ஷிப்ரம் ப்ரியாஸந்தர்ஸநேந மாம்.
171. ஸபர்யாபூஜித: ஸம்யக் ராமோ தஸரதாத்மஜ:
பம்பாதீரே ஹநுமதா ஸங்கதோ வாநரேணஹ,
172. ஸப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகுநந்தந:
ஸீதாம்உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவ்ரதம்.
173. ஏஹபஸ்ய ஸரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்
ஹதாநாம் ராக்ஷஸை: கோரை: பஹூநாம்
பஹூதாவநே.
174. விக்ராந்த: த்வம் ஸமர்த்த: த்வம் ப்ராஜ்ஞ: த்வம்
வாநரோத்தம
யேநஇதம் ராக்ஷஸபதம் த்வய ப்ரதர்ஷிதம்.
175. ததாவித்வாந் புண்யபாபே விதூயநிரஞ்ஜந: பரமம்
ஸாம்யம் உபைதி.
176. அக்ரூர: க்ரூரஹ்ருதய: ஸீக்ரம் ப்ரேரயதே ஹயாந்.
177. பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே
ஸ்வயந்துருசிரே தேஸே க்ரியதாம் இதி மாம் வத.
178. ஏஷ ஸர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:
மயாகாலம் இமம் ப்ராப்ய தத்த்: தஸ்ய மஹாத்மந:
179. லோகே த்வந்முகஸத்ருஸம் க்வாபிந த்ருஷ்டம் இதி மயி
வததி ராகாத்
ஹரிஹரிகுபிதாஸா அபூத் அந்யத் உபக்ராந்தம் அந்யத்
ஆபதிதம்.
180. ஸாப்ரஸ்கலந்தீ மதவிஹ்வலாக்ஷீ ப்ரலம்பகாஞ்சீ
குணஹேமஸூத்ரா
ஸலக்ஷணா லக்ஷ்மண ஸந்நிதாநம் ஜகாம தாரா நமிதாங்க
யஷ்டி:
181. கோஸஹஸ்ர ப்ராதாதாரம் உபதாயபுஜம் மஹத்.
182. தத்சித்த விமலாஹ்லாத க்ஷீணபுண்யசயா ததா
ததப்ராப்தி மஹாதுக்கவிலீநா ஸேஷபாதகா.
சிந்தயந்தீ ஜகத்ஸூதிம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்வாஸ தயாமுக்திம் கதாஅந்யா கோபகந்யகா.
183. அதவாகிம் ததாலாபை: அபராக்ரியதாம் கதா.
அப்யஸௌ மாதரம் த்ரஷ்டும் ஸக்ருத்அபி ஆகமிஷ்யதி
184. நசாஸ்ய மாதா நபிதா நசாந்ய:
ஸ்நேஹாத் விசிஷ்ட: அஸ்தி மயா ஸமோவா
தாவத்த்யஹம்தூத ஜிஜீவிஷேயம்
யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய.
185. ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே
அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத்விரதம் மம.
186. ஜீவந்தீம் மாம் யதாராம: ஸம்பாவயதி கீர்த்திமாந்
தத்த்வயா ஹநுமந் வாச்யோ வாசாதர்மம் அவாப்நுஹி.
187. பத்மஸௌகந்திகவஹம் ஸிவம் ஸோகவிநாஸநம்
தந்யா லக்ஷ்மண ஸேவந்தே பம்போபவந மாருதம்.
188. அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்சு: விதாதா க்ருதலக்ஷண:
189. பாபாநாம்வா ஸூபாநாம்வா வதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சிந்ந அபராத்யதி.
190. ஸகுருஷ்வ மாஹாத்ஸாஹ க்ருபாம் மயி நரர்ஷப
ஆந்ருஸம்ஸ்யம் பரோதர்ம: த்வத்தஏவ மயாஸ்ருத:
191. கிம்கோபமூலம் மநுஜேந்தரபுத்ர கஸ்தேந ஸந்திஷ்டதி
வாங்கிநிதேஸே
கஸ்ஸூஷ்க வ்ருக்ஷம்வநம் ஆபதந்தம் தவாக்நிம் ஆஸீததி
நிர்விஸங்க:
192. லௌகிகம் வைதிகம் வாபிததா ஆத்யாத்மிகம் ஏவ வா
ஆத்தீத யதோஜ்ஞாநம் தம்பூர்வம் அபிவாதயேத்.
193. ஜடிலம் சீரவஸநம் ப்ராஞ்ஜலிம் பதிதம்புவி
ததர்ஸராமோ துர்தர்ஸம்யுகாந்தே பாஸ்கரம்யதா.
194. ஸ்ருஷ்ட: த்வம் வநவாஸாய ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே
ராமே ப்ரமாதம் மாகார்ஷீ: புத்ர ப்ராதரி கச்சதி.
195. அபஏவ ஸஸர்ஜாதௌ தாஸூவீர்யம் அபாஸ்ருஜத்.
196. வாஹிவாதயத: காந்தா தாம்ஸ்ப்ருஷ்ட்வா மாமபிஸ்ப்ருஸ
த்வயி மே காத்ரஸ்ம்ஸ்பர்ஸ: சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:
197. விசித்ரா தேஹஸம்பத்தி: ஈஸ்வராய நிவேதிதும்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி ஸம்யுதா.
198. அகாலபலிநோ வ்ருக்ஷா: ஸர்வேசாபி மதுஸ்ரவா:
பவந்து மார்க்கே பகவந்நயோத்யாம் ப்ரதி கச்சத:
199. யதிப்ரீதி: மஹாராஜ யதி அநுக்ராஹயதா மயி
ஜஹிமாம் நிர்விஸங்க: த்வம் ப்ரதிஜ்ஞாம் அநுபாலய.
200. நகலு அத்யைவ ஸௌமித்ரே ஜீவிதம் ஜாஹ்நவீஜலே
த்யஜேயம் ராகவம்வம்ஸே பர்த்து: மாபரிஹாஸ்யதி.
201. நஷ்டோமோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரஸாதாத்
மயா அச்யுத
ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யேவசநம்தவ.
202. க்ருஷ்ணாஸ்ரயா: க்ருஷ்ணபலா: க்ருஷ்ணநாதஸ்ச பாண்டவா:
க்ருஷ்ண: பராயணம் தேஷாம் ஜ்யோதிஷாமிவ சந்த்ரமா:
203. ஹேஸூந்தர ஏகதரஜந்மநி க்ருஷ்ணபாவே
த்வௌ மாதரௌச பிதரௌச குலேஅபித்வே
ஏகக்ஷணாத் அநுக்ரஹீதவத: பலம்தே
நீளாகுலேந ஸத்ருஸீகில ருக்மணீச.
204. துல்யஸீலவயோ வ்ருத்தாம் துல்யாபிஜந லக்ஷணாம்
ராகவ: அர்ஹதி வைதேஹீம் தம்சஇயம் அஸிதேஷணா.
205. ஸ: அவதீர்ணோ ஜகர்யத்தே மாம் அக்ரூரேதி வக்ஷ்யதி.
206. ஸதேவ ஸோம்யஇதம் அகர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்.
207. ஸப்ரஹ்மா ஸஸிவ: ஸேந்த்ர: ஸோக்ஷர: பரம: ஸ்வராட்.
208. தயா அவலோகிதா தேவா விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தயா
லக்ஷ்ம்யா மைத்ரேய ஸஹஸா பராம் நிர்விடுதிமாகதா:
209. நதேரூபம் நச ஆகாரோ ந ஆயுதாநி நசாஸ்பதம்
ததரபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே.
210. ததஸ்ய ப்ரியம் அபிபாதோ அஸ்யாம் நரோயத்ர
தேவயவ: மதந்தி
உருக்ரமஸ்ய ஸஹிபந்து: இத்தா விஷ்ணோ: பதேபரமே
மத்வ உத்ஸ:
211. கஇதி ப்ரஹ்மணோநாம ஈஸோஹம் ஸர்வதேஹிநாம்
ஆவாம்தவாங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்.
212. ஸ்துத: அஹம் யஸ்ந்வயா பூர்வம் புத்ரார்த்திந்யா ததத்யதே
ஸபலம் தேவி ஸஞ்ஜாதம் ஜாதோஹம் யத்தவ உதரரத்.
213. ப்ராதுர்ப்பவதி லோகாநாம் பாலநார்த்தம் ஸ்வலீலயா
ந ஏஷ கர்ப்பத்வம் ஆபேதேநயோந்யாம் அவஸத் ப்ரபு:
214. தஸ்யா: ஸ்தநம் பபௌ க்ருஷண: ப்ராணை: ஸஹநநாதச
ஸ்தந்யம்தத் விஷஸம்மிஸ்ரம் ஆஸீத்ஜகத்குரோ:
215. திலதைலவத் தாருவஹ்நிவத் துர்விவேச
த்ருகுண க்ஷண க்ஷரண ஸ்வபாவ அசேதந
ப்ரக்ருதிவ்யாப்திரூப துரத்யய பகவந் மாயா
திரோஹித ஸ்வப்ரகாஸ:
216. த்வதங்க்ரி முத்திஸ்ய கதாபி கேநசித்
யதா ததாவாபி ஸக்ருத்க்ருத: அஞ்ஜலி:
ததைவ முஷ்ணாத்யஸூபாந்யஸேஷத:
ஸூபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே.
217. பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்ய ப்ரயச்சதி
ததஹம் பத்தியுபஹ்ருதம் அஸ்நாமி ப்ரயதாத்மந:.
218. அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவநேஜநாத்
அந்யத் குஸல ஸம்ப்ரஹ்நாத் நசஇச்சதி ஜநார்த்தந:
219. யா: க்ரியா: ஸம்ப்ரயுக்தா: ஸ்யு: ஏகாந்தகத புத்திபி:
தா: ஸர்வா: ஸிரஸா தேவ: ப்ரதி க்ருஹ்ணாதி
வை ஸ்வயம்.
220. ஏதத் ஸாமகாயந் ஆஸ்தே.
221. ந கண்டகாரிகா புஷபம் தேவாய விநிவேதயேத்.
222. ஸாஸ்த்ர யோநித்வாத்.
223. தேவாநாம் மாநவாநாஞ்ச ஸாமாந்யம் அதிதைவதம்
ஸர்வதா சரணத்வந்த்வம் வ்ரஜாமி ஸரணம்தவ.
224. ஸகலுஏவம் வர்த்தயந் யாவதாயுஷம் ப்ரஹ்மலோகமபி
ஸம்பத்யதே நசபுநராவர்த்ததே நசபுநராவர்த்ததே.
225. ஏஷஹிஏவ ஆநந்தயாதி.
226. அஸ்ரத்ததாநா: புருஷா: தர்மஸ்ய அஸ்ய பரந்தப
அப்ராப்யமாம்நிவர்த்தந்தே ம்ருத்யு ஸம்ஸாரவர்த்மநி.
227. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்
யயம்.
228. சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸூக்ருதிந: அர்ஜூந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸூ: அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச
பரதர்ஷப.
229. ய ஆத்மதா பலதா.
230. தம்த்ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர கதாதரம்
அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்.
231. அத்யமே மரணம் வாபி தரணம் ஸாகரஸ்யவா.
232. யத்ர ருஷய: ப்ரதமாஜா யே புராணா:
233. ராமேண ஹி ப்ரதிஜ்ஞாதம் ஹர்யர்க்ஷ கண ஸந்நிதௌ
உத்ஸாதநம் அமித்ராணாம் ஸீதா யை: பரிவஞ்சிதா.
234. ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா
விபீஷணோவா ஸூக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்.
235. ஆக்யாஹி மம தத்த்வேந ராக்ஷஸாநாம் பலாபலம்.
236. யத்ர க்ருஷ்ணௌ ச க்ருஷ்ணாச ஸத்யபாமாச பாமிநீ
நச அபிமந்யு: நயமௌ தம் தேஸம் அபிஜக்மது:
237. வஸீ வதாந்ய: குணவாந் ருஜூ: ஸூசி:
ம்ருது: தயாளு: மதுர: ஸ்திர: ஸம:
238. உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்க ஸோபிநா.
239. ஸ்ரக் வஸ்த்ராபரணை: யுக்தம் ஸ்வாநு ரூபை: அநுபமை:
சிந்மயை: ஸ்வப்ரகாஸைஸ்ச அந்யோந்ய ருசிரஞ்ஜகை:
240. சக்ஷ்ர்தேவாநாமுத மர்த்யாநாம்.
241. நது மாம் ஸக்ஷ்யஸே த்ருஷ்டும் அநேகஏவ ஸ்வசக்ஷூஷா
திவ்யம் ததாமி தேசக்ஷூ: பஸ்ய மே யோகம் ஐஸ்வரம்.
242. யஸ்ய ப்ரஸாத ஸததம் ப்ரஸீதேயு: இமா: ப்ரஜா:
ஸ ராமோ வாநரேந்த்ரஸ்ய ப்ரஸாதம் அபிகாங்க்ஷதே.
243. ஏஷ தத்வாச வித்தாநி ப்ராப்யச அநுத்தமம் யஸ:
லோகநாத: புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி.
244. ஏஷ ஸர்வாயுதோபேத: சதுர்பி: ஸஹராக்ஷஸை:
ராக்ஷஸோப்யேதி: பஸயத்வம் அஸ்மாந் ஹந்தும் ந ஸம்ஸய:
245. யோ வாசி திஷ்டன் வாச: அந்தர: யம் வாக் நவேத
யஸ்ய வாக் சரீரம்.
246. அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்
அஹமந்நாதோ அஹமந்நாத:.
247. வத்யதா மேஷ தண்டேந தீவ்ரேண ஸ்சிவைஸ்ஸஹ
ராவணஸ்ய ந்ருஸம்ஸஸ்ய ப்ராதா ஹிஏஷ விபீஷண:
248. பரதஸ்ய வதே தோஷம் ந அஹம் பஸ்யாமி ராகவ
பூர்வாபகாரிணாம் த்யாகோ நஹி அதர்மோ விதீயதே.
249. அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீநி ஆயுதாநி தம்
ரக்ஷந்தி ஸகலாபதப்ய: யேநவிஷ்ணு: உபாஸித:.
250. ஸமுத்ரம் ராகவோ ராஜா ஸரணம் கந்தும் அர்ஹதி.
251. தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷூ நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரம் அஸூபாந் ஆஸூரீஷ்வேவயோநிஷூ
252. இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
நசாஸூஸ்ரூஷவே வாச்யம் நசமாம் ய: அப்யஸூயதி.
(359
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
‘ஆறு கிண்ணகமெடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறியுண்டு போய்க் கடலிலே புகும்; நீர்வஞ்சிக்கொடி முதலானவை வளைந்து பிழைக்கும்; அவை போல’
‘சூரியன்முன் நட்சத்திரங்கள் போலவும், மஹாமேரு மலையினுச்சியில் நின்றவனுக்குக் கீழுள்ள கடுகு முதலியவை போலவும்’ பக். 60. ‘கண்ட இடமெங்கும் பயிர்பட்டிருக்கும் நன்செய் நிலம் போன்று’ பக். 60. ‘கரை கட்டாக் காவிரி போன்று’
‘நாமனைவரும் பிரபந்நர்களாய் இருப்பினும், ஓராண்டிற்கு அல்லது ஆறு மாதங்கட்கு வேண்டும் உணவுப்பொருள்களைத் தேடிக்கொள்வது போன்று’ பக். 63. ‘மார்பின் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப்போன்று’ பக். 63.
‘யானைக்குக் குதிரை வைத்தல் போன்று’
‘இருவர்கூடப் பள்ளியிலோதியிருந்தால், அவர்களுள் ஒருவனுக்கு உயர்வு உண்டாயின், மற்றையவன் அவனோடே ஒரு சம்பந்தத்தைச் சொல்லிக்கொண்டு கிட்டுமாறு போன்று’
‘அருச்சுனன் பல முறை வணங்கக்கூறியது போன்று’
‘நெற்செய்யப் புல் தேயுமா போலே’
‘அணு அளவினதான ஆத்துமாவை அறியுமாறு போன்று’
‘பிறவிக்குருடன் பொருள்களைப் பார்க்கின்றிலன் எனினும், தெளிந்த பார்வையினையுடையவனும் பார்க்கின்றிலன் எனினும், பார்க்கமாட்டாமையில் இருவரும் ஒப்பாதல் போல’
‘இறைவனாகிய தான் உயிர்களைச் சரீரமாகக்கொண்டு தாரகனாய் எல்லாரையும் ஏவுகின்றவனாய் இருப்பது போன்று’
‘அரசர்கட்கு நாடெங்கும் தமது ஆணை செல்லுமாயினும், தங்கள் தேவியரும் தாங்களுமாகப் பூந்தோட்டங்கள் சிலவற்றைக்
குடநீர் வார்த்து ஆக்குவது அழிப்பதாய் விளையாட்டின்பம் தூய்க்குமாறு போன்று’
‘செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு, பின்னையும் அவ்வாபரணத்தை வாங்கிச் செப்புக்குள்ளே இட்டு வைக்குமாறு போன்று’
‘அய்யன் பாழியில் ஆனை போர்க்கு உரித்தாகாதது போன்று’
‘ஆகிருதியினைச் சொல்லுகிற சொல்லானது வடிவிலே சென்று, முடிந்து நிற்குமாறு போன்று’
‘குணத்தோடு கூடிய பொருள் தோன்றாநிற்கவும், செந்நிறம் என்னும் குணத்தையே முக்கியமாகக் கொள்வது போன்று’
‘விருக்ஷல விவாக மந்திரம் போலே’
‘இச்சரீரத்துக்கு ஆத்துமா தாரகனாய் நியாமகனாய்ச் சேஷியாய் இருப்பது போன்று’
‘பல தூண்களில் ஓர் உத்திரம் கிடப்பது போல’
‘உளன் என்கிற சொல்லால் சொன்னால், உனக்கு விருப்பமான இல்லாமை சித்திக்காதது போன்று’
‘ஓர் அண்டத்தைச் சமைத்து, அவ்வண்டத்தில் ஒருவனைத் தனியாக வைத்தது போன்று’
‘இச்செய் அடைய நெல் என்றால், நெல்லை விளைக்குமது என்று காட்டுமாறு போன்று’
‘சிறுகுழந்தை கையிலே பாம்பைப் பிடித்துக்கொண்டு கிடந்தால் போகடச்சொல்லி, பின்னர்ப் ‘பாம்பு’ என்பாரைப் போலவும், ஒருவன் வீட்டிற்குள்ளே கிடந்து உறங்காநிற்க, நெருப்புப் பற்றிப் புறம்பே எரிந்தால், ‘வெளியே வா’ என்று சொல்லி, பின்னர் ‘நெருப்பு’ என்பாரைப் போலவும்’
‘சண்டாளர் இருப்பிடத்தைப் பிராமணர்க்கு ஆக்கும் போது அங்குள்ளவற்றுள் சிலவற்றைக் கொள்வதும் சிலவற்றைக் கழிப்பதும் செய்யார்; அது போன்று’
‘அரசகுமாரன் அழகு சிறையிலே கிடந்தால், முடி சூடி அரசை நடத்துவதிலும் சிறை விடுகைதானே பயனாக இருக்குமாறு போன்று’
‘மிகத் தாழ்ந்த பொருளை உள்ளே வைத்து மெழுக்கூட்டினதைப்போன்று’
‘திறந்து கிடந்த வாசல்கள்தோறும் நுழைந்து திரியும் பொருள் போன்று’
‘கெடுமரக்கலம் கரை சேர்ந்தார்போன்று’
‘அங்கநா பரிஷ்வங்கம் போன்று’
‘திரை மாறின கடல் போலே’
‘கட அளவிடக் கூடாததாகவிருப்பினும் அதனுள்ளில் மீன் முதலிய பொருள்களுக்கு வேண்டினபடி புகலாமன்றே! அது போன்று’
‘பாழிலே மேட்டிலே பாய்கிற நீரைப் பள்ளத்திலே பயிரிலே பாய்ச்சுவாரைப் போன்று’
‘இன்பத்தில் இச்சையுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப் போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்குரிய காலத்தை எதிர் நோக்கிக்கொண்டிருத்தல் போன்று’
‘இருகை முடவனை ‘யானையேறு’ என்றால் அவனால் ஏறப் போகாதது போன்று’
‘அறவோர் சிலர் ஏரி கல்லினால், சேற்றிலே தலையை நொழுந்திப் பட்டுப்போகாநிற்பர் சிலர்; விடாயர் அதிலே முழுகி விடாய் தீர்ந்து போகாநிற்பர்.’
‘ஒருவன் கறுத்திருக்க, ஒருவன் சிவந்திருக்கிறபடி கண்டாயே’
‘கருமுகை மாலை போலே எடுத்து ஏறிட்டுக்கொண்டு போனான்
‘பெருமாளும் பிராட்டியும் பள்ளிகொண்டருளின இடத்தை ஸ்ரீகுகப்பெருமாள் நோக்கிக்கொண்டு கிடந்தாற்போன்று’
‘பசியர்க்குத் தாந்தாம் உண்ணும் உணவினைப் பகுந்திடுவாரைப்போன்று’
‘பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைக் கூட்டங்கள் மொய்த்துக்கொண்டு கிடந்தாற்போன்று’
‘மோஹித்துக் கீழே வீழ்ந்த ஸ்ரீபரதாழ்வானைப் போன்று’
‘சக்கரவர்த்தி நான்கு ஆஹூதி பண்ணி நான்கு இரத்தினங்களை எடுத்துக்கொண்டாற்போன்று’
‘ஒருவன் ஒருவனை, ‘உனக்கு ஒரு மாத ஜீவனத்துக்கு என்னவேணும்?, என்றால், தன் மனைவி மக்களையுங்கூட்டிக்கொண்டு ‘எனக்குக் கலநெல் வேணும்’ என்பது போன்று’
‘இலிங்கத்துக்கே உயர்வு தோற்றும்படியாய் இருப்பதொரு பிரபந்தம் செய்து தரல் வேண்டும் என்பாரைப் போன்று’
‘சாலில் எடுத்த நீர் போன்று’
‘பாரி மாண்டல்யம் முதலியவைகள் நித்தியமாக இருக்கவும், நித்திய பரதந்திரமாய் இருக்குமாறு போன்றும், இறைவனுடைய சொரூபத்தைப் போன்று அவன் குணங்களும் நித்தியமாக இருக்கவும், அக்குணங்கள் நித்திய பரதந்திரமாயிருக்குமாறு போன்றும்’
‘பருவமல்லாத காலங்களில் கடல் தீண்டலாகாது என்னுமாறு போன்று’
‘பால் குடிக்கும் குழந்தைகள், தாயின் மார்பினை அகலின் நாக்கு வரளுமாறு போன்று’
‘சாமந்தர்கட்குப் புறம்பே நாடுகள் மிகுதியாக இருந்தாலும், மாளிகைக்குள்ளே செம்பாலே நாழியரிசியைத் தங்கட்கு மேன்மையாக நினைத்திருப்பதைப் போன்று’
‘வேற்றரசர்களால் கலகங்கள் உண்டான காலங்களில் அடையவளைந்தானுக்குள்ளே குடி வாங்கியிருந்து. கலகம் நீங்கியவாறே புறம்பே புறப்பட்டாலும், ‘இவ்விடம் இன்னார் பற்று; இவ்விடம் இன்னார் பற்று’ என்று பின்னும் தம் இடத்தைச் சொல்லி வைக்குமாறு போன்று’
‘சிறையிலே இருந்த இராசகுமாரன் தலையிலே முடியை வைத்துப் பின்னைச் சிறையை வெட்டி விடுவாரைப் போன்று’
‘இது மற்றொரு காரகம் என்னுமாறு போன்று’
‘பசியில்லாத காலத்தில் உணவு நோயினைத் தருவதாம் எனப்படுதலால், நோயின் மூலத்தை அறியும் மருத்துவர்கள், ‘உணவு உண்ணலாகாது’ என்று விலக்குமாறு போன்று’
‘தாமரை திருவடிகளுக்குப் போலியாக இருக்க, ‘வையங் கொண்ட தடந்தாமரை’ என்று தாமரையாகவே திருவடிகளைப் பேசுவது போன்று’
‘சக்கரவர்த்தி திருமகள் திருவவதரித்த பின்பு வானரசாதி வீறு பெற்றாற்போன்று’
‘குழந்தை தாயின் உறுப்புகள் எல்லாங்கிடக்க, மார்பிலே வாய்வைக்குமாறு போன்று’
‘ஆசாரியனுடைய ஞானத்தை உத்தேசித்துச் சிஷ்யன் வணங்குவது போன்று’
‘வழி பறிப்பார் கையிலே அகப்பட்டு நிற்கத் தாய் முகத்திலே விழித்தாற்போன்று’
‘என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னிட்டுப்போலேகாணும் காரியங்கொள்ளுவது’
‘திருமகள் கேள்வன் என்பது போன்று’
‘அரசகுமாரர்கட்கு உரிய அவ்வக்காலங்களில் வெள்ளிலை இடாத போது அவர்கள் வருந்துவார்கள்; அது போன்று’
‘கடலேறி வடிந்தாற்போலே’
‘கலவியாலுண்டான பரவசத்தன்மை அடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாற்போன்று’
‘கோடியைக் கண்ணியாக்கியது போன்று’
‘திருமுகம் மறுத்தவன் கடையீட்டுக்குக் கேட்காததைப் போன்று’
‘விடாயன் தண்ணீர்ப்பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது போன்று’
‘கடலிலே ஏற்றமிட்டுத் தண்ணீர் அரிதாம்படியான பாவைத்தைப் பண்ணியவர்களைப் போன்று’
‘கள்ளிச்செடிக்கு மஹாவிருஷம் என்று பெயரிருப்பதைப் போன்று’
‘இராசாக்கள் இராசத்துரோகம் செய்தவர்களை நலிகைக்கு வேற்காரரை வரவிடுமாறு போன்று’
‘பால் குடிக்க நோய் தீருமாறு போன்று’
‘யானைக்கு உதவ வந்து தோன்றியது போன்று’
‘தார்மிகன் வைத்த தண்ணீர்ப்பந்தலை அழிப்பாரைப் போன்று’, ‘ஊருணியிலே கள்ளியை வெட்டி எறிவாரைப் போன்று,’ அமிருதத்திலே விஷத்தைக் கலப்பாரைப் போன்று’
‘திருவாய்ப்பாடியில் வெண்ணெயினைப் போன்று’
‘விபீஷணனைச் சேர்த்துக்கொண்டான்போலவும்’, ‘அருச்சுனனைப் போரினைச் செய்வித்தாற்போலவும்’
‘தார்மிகனாய் இருப்பானொருவன் இராசத தாமத குணங்களால் மேலிடப்பட்டவனாய் வீட்டில் தீயினை வைத்து, சத்துவம் தலையெடுத்தவாறே வருந்துமாறு போன்று’
‘காட்டுப்பசுவினைக் கண்டவாறே வீட்டிலுள்ள பசு நினைவிற்கு வருதல் போன்று’
‘சண்டாளன் ‘வேதம் போகாது’ என்று தான் சொல்லப்பெறுவனோ? அது போன்று’
‘சூட்டுநன்மாலைகள் தூயன ஏந்தி’ என்னுமாறு போன்று
‘வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனை, தாய் தந்தைகள் நினைக்குமா போலவும்’
‘இட்சுவாகு குலத்தினர் நடுவே வந்து அவதரித்து அவர்களோடே எண்ணலாம்படி இருக்குமாறு போன்றும், யாதவர்கள் நடுவே வந்து அவதரித்து அவர்களோடு ஒக்க எண்ணலாம்படி இருக்குமாறு போன்றும்’
‘பெறுகைக்கு ஈடாக முன்னரே நோன்பு நோற்று வருந்திப் புத்திரனைப் பெற்ற தாயானவள் அவன் நடக்க வல்லனான சமயத்தில் ‘வேறு தேசம் போவேன்’ என்றால், விட்டு ஆறியிராதது போன்று’
‘ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போன்று’
‘மாம்பழத்தோடு ஒரு வித சம்பந்தமில்லாதிருக்கவும் ஒருவகை வண்டு ‘மாம்பழவுண்ணி’ என்ற பெயரை அடைவது போன்று’
‘எடுக்கப்பட்ட சாரத்தையுடைய பூப்போன்று’
‘போம்பழியெல்லாம் அமணன் தலையோடே போமாறு போன்று’
‘சுண்டுவில் நிமிர்க்குமாறு போன்று’
‘மதுவாகிற அசுரனைப் போக்கியது போன்று’
கலத்திலிட்ட சோற்றை விலக்குவாரைப் போன்று’
‘சம்சாரிகளில் அறிவு கேடர் முற்றறிவினர் என்னுமாறு போன்று’, ஆத்துமாவிற்கு ஞான ஆனந்தங்களைப்போன்று’
‘விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாறு போன்று’
‘ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போன்று
‘பிடிதோறும் நெய்யொழியச் செல்லாத சுகுமாரரைப் போன்று’
‘ஸ்ரீ மதுரகவிகளையும் நாதமுனிகளையும் போல்வார்’
‘கடலிலே முத்துப்பட்டது என்றுமாறு போன்று’
‘செல்வக்கிடப்பு உண்டாயினும் மஹிஷி ஸ்வேதத்துக்கு ஆளிட ஒண்ணாதது போன்று’
‘புறம்பே ஒருவனுக்கு ஒருவன் விருந்திடும் போது நெடுநாள் பச்சை தேடி விருந்திட்டால், ‘இவன் உண்டு என்ன குறை சொல்லப் புகுகிறானோ?’ என்று நெஞ்சாறலோடே தலைக்கட்ட வேண்டி வரும்; மகன் தமப்பனுக்கு விருந்திட்டால், உண்டாகில் உள்ள குறை தமப்பனதாய் நெஞ்சாறல்படவேண்டாதே இருக்கலாமன்றே? அதுபோன்று’
‘சன்னி சுரம் வந்தவர்களைப் போன்று,’ ‘இரத்தினாகரம் போலே’
‘அவனை அடைவதற்கு முன்பு இடையிலே உள்ள நாள்கள் ஒரு கடல் போன்று தோன்றுதல் போன்று’
‘கரும்பு தின்னக் கூலி போன்று’
‘மாதாவைப் பேணுதல் அழகிது என்னுமாறு போன்று’
‘சாணிச்சாற்றைப் போன்று சுத்தன் என்று கொண்டார்கள்’
‘ஆடு அறுத்துப் பலியிட்டுப் பணப்பையாக்கி, தான் விரும்பிய காலத்தில் நுகர்தற்குச் சேமித்து வைக்கும் சேமநிதி போன்று’
‘வேரிலே வெப்பந்தட்டினால் கொழுந்து முற்பட வாடுவது போன்று’
‘செடி சீய்த்துக் குடியேற்றின படை வீடுகளை விடாதே இருக்கும் அரசர்களைப் போன்று’
‘விளக்குத் தன்னையுங் காட்டிப் பொருளையும் காட்டுவது போன்று’
‘நிலா, தென்றல், சந்தனம் பிறர்க்கேயாக இருக்குமாறு போன்று’
‘பிரளயங்கொண்ட பூமியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு எடுத்தது போன்று’
‘இக்கடலை முடித்தல் அல்லது, இதனைக் கடத்தல் செய்யுமதற்கு மேற்பட இல்லை என்றது போன்று’
‘காதலிமாட்டு அழுக்கு உகப்பாரைப்போலே’
‘தேனைக்குடிப்பதற்கு இழிந்த வண்டுகளானவை பெருங்கடலிலே இழிந்தாரைப் போன்று’
‘வள்ளலே, உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல’
‘மனைவியை அணைதல் மனைவிக்கு இன்பினை அளித்தல் போன்று’
‘காமத்தில் இச்சையுடைய ஒரு பெண்ணிற்குப் போக சின்னங்கள் தாரகமாக இருத்தல் போன்று’
‘அரசனுடைய சந்நிதியில் கூனர் குறளர்களாய் வசிப்பது போன்று’
‘விடாயர் மடுவிலே புக்கு ஆடியது போன்று’
‘இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாயானவள் இருவர்க்கும் பால் கொடுக்கத் தகுதியாக நடுவே கிடக்குமாறு போன்று’
‘வானவர் நாடு என்னுமாறு போன்று’
‘குணங்களால் அடிமைப்பட்டேன் என்று இளைய பெருமாள் கூறியது போன்று’
‘எப்பொழுதும் துதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற நித்திய சூரிகளைப்போன்று’
எனக்கு அவன் குணங்கள் என்றும் தாரகமாக இருத்தல் போன்று’
‘வெண்ணெயில் செய்த விருப்பம் பொய்யில்லாதது போன்று’
இன்ன படைவீட்டைக் கொண்டாள் என்று கூறுவது போன்று.
‘பிரளய ஆபத்தில் பூமி தன் வயிற்றில் புகாவிடில் தரியாதது போன்று’
‘சிலரை வசீகரிக்க நினைத்தவர்கள் கையிலே மருந்து கொண்டு திரியுமாறு போன்று’
‘அரசர்கள் கறுப்புடுத்துப் புறப்பட்டால், விரும்புகிற காலத்தில் முகங்காட்டுகைக்காக அந்தரங்கர் மறைந்து திரிவர்; அது போன்று’
‘உலகமே உருவமாய் இருக்கும் தனது தன்மையைக் காட்டியது போன்று’
‘குளப்படியிலே கடலை மடுத்தாற்போன்று’
‘பெருக்காறு கழித்தாற்போன்று’
‘மலரில் மணம் வடிவு கொண்டாற்போன்று’
‘நம்மைக் கொல்ல வருகிறான் என்று சுக்கிரீவன் முதலியோர் கூறியது போன்று’
‘அத்திக்காயில் அறுமான் போன்று’
‘தம்மால் காதலிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்லும் ஆடவர்கள், தம்மை அலங்கரித்துக்கொண்டு போமாறு போன்று’
‘கற்பகத்தரு பணைத்தாற்போன்று’
‘பெருவெள்ளத்திலே ஒரு சுழி போன்று’
‘நெய்யுண்ணி என்னுமாறு போன்று’
‘இராசாக்கள் அந்தப்புரத்தில், ஒரு கட்டிலினின்றும் மற்றைக் கட்டில் ஏறப்போகாநிற்க, அந்தரங்கர் நடுவே முகங்காட்டித் தங்காரியம் கொண்டு போமாறு போன்று’
‘ஆயிரங்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக்கொள்ளும் என்னுமாறு போன்று’
‘நெய்தற்காடு அலர்ந்தாற்போலே’
‘சொன்ன காரியத்தைச் சடக்கெனச் செய்த நல்ல புத்திரர்களை மடியிலே வைத்துக் கொண்டாடும் தாய் தந்தையர்களைப் போன்று’
‘பகவத் விஷயம் பிறர் அறியலாகாது என்றிருக்கும் திருக்கோட்டியூர் நம்பியைப் போலே’
‘குழந்தை கிணற்றில் விழுந்தால் ஒக்கக் குதிக்கும் தாயைப் போலே’
‘சத்துவகுணத்தையுடைய ஒருவன் தமோ குணத்தால் மேலிடப்பட்டவனாய் ஒரு வீட்டில் நெருப்பை வைத்து, சத்துவம் தலையெடுத்தவாறே வருந்துமாறு போன்று’
‘புருடோசத்தை நாய் தீண்டினாற்போன்று’
‘ஓட்டு அற்ற செம்பொன் போன்று’
‘பெருவிலையனாய் முடிந்து ஆளலாம்படி கைப்புகுந்து புகழையுடைத்தான நீலமணி போல’
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பிள்ளைதிருநறையூர் அரையர் : “ஒரு குருவி பிணைத்தபிணை ஒருவரால் அவிழ்க்கப்போகிறதில்லை; சர்வசக்தி கருமானுகுணமாகப் பிணைத்த பிணையை அவனையே கால் கட்டியவிழ்த்துக் கொள்ளுமித்தனைகாண்.”
ஆழ்வான் : “ஆழ்வான் பிள்ளைப்பிள்ளையைப் பார்த்து நிர்க்குணமென்பார் மிடற்றைப் பிடித்தாற்போலே ஆழ்வார் ‘நலமுடையவன்’ என்றபடி கண்டாயே.”
எம்பார் : “ஆழ்வார் பிரபந்நரோ, பத்திநிஷ்டரோ?” என்று எம்பாரைச் சிலர் கேட்க, “ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்குத் தேக யாத்ராசேஷம்,” என்று அருளிச்செய்தார். ‘எவ்வாறு?’ எனின், நாமனைவரும் பிரபந்நர்களாகவிருப்பினும், ஓராண்டிற்கு அல்லது, ஆறு மாதங்கட்கு வேண்டும் உணவுப் பொருள்களை முன்னரே தேடிக்கொள்ளுகிறோமன்றோ? அது போன்று, ‘உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணனே’ ஆவன் இவர்க்கு.
எம்பார் : ‘தொழில் செய்வதற்காயின் இறைவன் திருவருள் வேண்டும்; தொழில் செய்யாதிருப்பதற்கு அவன் அருள் வேண்டுமோ?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, ‘சுவர்க்கத்தினின்றும் விழுகிற திரிசங்குவைச் சத்திமான் நிற்கச் சொல்ல நிற்க வேண்டிற்றுக் கண்டாயே! அப்படியே, நிவர்த்திக்கும் அவன் வேணுங்காண்,’ என்று அருளிச்செய்தார்.
நஞ்சீயர் : ஒருவனுக்கு வைஷ்ணவத்துவம் உண்டு இல்லை என்னுமிடம் தனக்கே தெரியுங்காண்,’ என்று சீயர் பலகாலும் அருளிச்செய்வார்; அதாவது, பிறர் அநர்த்தம் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்குவானாகில், அவன் நமக்குப் பகவத் சம்பந்தம்உண்டு’ என்றிருக்க அடுக்கும்; ‘இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு!’ என்றிருந்தானாகில், அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை’ என்றிருக்க அடுக்கும்,’ என்பதாம்.
பட்டர் : சம்பந்த ஞானமே வேண்டும் என்றார்; ‘எங்ஙனம்?’ எனின், ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்றிருக்குங்காலத்தில் பொருள் தேடும் விருப்பினால் வெளி நாடு சென்றான்; அவளும் கருவுயிர்த்தாள்; மகனும் தக்க வயது அடைந்து தனக்கும் தகப்பனாருடைய வாணிகமே தொழிலாய்ப் பொருள் தேடப் போனான்; இருவரும், தத்தமக்கு வேண்டிய சரக்குப் பிடித்துக் கொண்டு வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள்; அஃது, அவ்விருவருக்கும் இடம் போதாமையால் அம்பறுத்து எய்ய வேண்டும்படி விவாதமுண்டான சமயத்தில், இருவரையும் அறிவான் ஒருவன் வந்து, ‘இவன் உன் தமப்பன்; நீ இவன் மகன்,’ என்று அறிவித்தால், கீழ் இழந்த நாள்களுக்குச் சோகித்து, இருவர் சரக்கும் ஒன்றாய், அவன் காப்பாற்றுகின்றவனாய், இவன் காப்பாற்றப்படும் பொருளாய்க் கலந்துவிடுவார்களன்றோ? அது போன்று ‘சீவான்மாவும் பரமான்மாவும் சரீரமாகிற ஒரு மரத்தினைப் பற்றியிருந்தால் ஒருவன் இருவினைப் பயன்களை நுகராநிற்பவன்; நாம் ஏவப்படும் பொருள் என்னும் முறையறியவே பொருந்தலாமன்றே!
‘ஓர் அரசகுமாரன் பூங்காவொன்றினைக் கண்டு புக அஞ்சினால், ‘இது உன் தமப்பனதுகாண்’ என்னவே, நினைத்தபடி நடந்து கொள்ளலாமன்றோ! ஆன பின்னர், ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்’ என்னும் நினைவே வேண்டுவது, தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம்,’ என்கிறார்.
எம்பெருமானார் : ஓர் அயநத்தினன்று குன்றத்துச் சீயர் எம்பெருமானார் ஸ்ரீபாதத்திலே புக, அவருடைய சிறு பெயரைச் சொல்லி, ‘சிங்கப்பிரான்! இன்று அயநங்காண்’ என்ன, திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாதிருக்க, ‘உயிர் உடலை விட்டு நீங்கும் அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில் ஓராண்டு கழியப்பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்ததில்லையோ!’ என்றருளிச்செய்தார்.
ஆழ்வான் : ஆழ்வான் இப்பாட்டளவு வரப் பணித்து, இப்பாட்டு வந்தவாறே ‘இத்தையும் நும் ஆசிரியர் பக்கல் கேட்டுக் கொள்ளுங்கள்,’ என்ன, பட்டரும் சீராமப்பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து, ‘இன்ன போது இன்னார் இருப்பார், இன்னார் போவார் என்று தெரியாது. இருந்து கேளுங்கள்,’
என்று திருமந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டைக் கூறி, ‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கள்’ என்று பணித்தார்.
எம்பெருமானார் : சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விவரமாகச் சொல்லிக்கொண்டு போந்தோம்; அதுதானே இவர்களுக்கு ‘இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடலாயிற்று; அவ்வெளிமைதானே பற்றுகைக்கு உடலாயிற்று உமக்கு ஒருவருக்குமே! என்று எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச்செய்தார்.
பட்டர் : ‘சர்வேஸ்வரனை அடைந்தானாகில் அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனையடையுமிடத்தில் இவன் குற்றம் பாராதே தன்னிழலிலே இவனை வைத்து, அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி, ‘நாளும் நந்திருவுடையடிகள்தம் நலங்கழல் வணங்கி,’ என்னாநின்றது கண்டீரே!’ என்றருளிச்செய்தார்.
முற்காலத்தில் சிற்றறிஞன் ஒருவன், ‘பற்றற்ற பரமஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன; உண்மைப் பொருளை உள்ளவாறு கூறுகின்றன’ என்று இத்திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இத்திருவாய்மொழி வந்த அளவில் ‘இது காமுகர் வாக்கியமாக இருந்ததே!’ என்று கைவிட்டுப் போனானாம்; ‘இறைவன் கேட்கத்தக்கவன், நினைக்கத்தக்கவன், தியானம் செய்யத்தக்கவன், பார்க்கத்தக்கவன்’ என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், நல்வினை அற்றவனாதலாலே.
பட்டர் : ‘சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்த பின்பு வானர சாதி வீறு பெற்றாற்போலே காணும், ஆழ்வார்கள் திருவவதரித்த பின்பு திரியச் சாதி வீறு பெற்றபடி,’ என்று ரசோக்தியாக அருளிச் செய்வர்.
தெற்காழ்வான் : ‘ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாதுகாண்: தெற்காழ்வார் கையில் திருவாழியாலே வினையை அறுத்துக்கொண்டு போகில் போகும் அத்தனை ஒழிய, ஒன்றிரண்டு முழுக்கால் போகாதுகாண் நான் பண்ணின பாவம்!’ என்று திருக்கோட்டியூரிலே தெற்காழ்வான் கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத் துறையில் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது.
பட்டர் : பட்டரை ஒரு தமிழ்ப் புலவர், ‘கேட்டிரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன, ‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்றிருக்க வேண்டாவோ?’ என்றருளிச்செய்தார்; கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதுமுளதோ?’ என்ன, ‘புல்லிக் கிடந்தேன்,’ ‘காதலர் தொடுவுழித் தொடுவுழி’ என்பன போன்ற தமிழ்ப்பாக்களை நீ அறியாயோ?’ என்றருளிச்செய்தார்.
பட்டர் : ‘நம்பியேறு திருவுடையான் தாசர் திருநாட்டுக்கு நடந்தார்,’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய, பட்டர் துணுக்கென்று எழுந்து நின்று, ‘அவர் ஸ்ரீவைஷணவர்களுடன் பரிமாறும், படிக்குத் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்,’ என்றருளிச்செய்தார்.
பெரிய திருமலைநம்பி : பெரிய திருமலை நம்பி, தமது இறுதிக் காலத்திலே, தமக்கு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்; அவர் திருமுன்பு திருத்திரையை வாங்கச் சொல்லி, ‘சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான், இனியுனது, வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.
பட்டர் : புகைபூவே – அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும். இவ்விடத்தில், பட்டர் ‘செதுகையிட்டுப் புகைக்க அமையும், கண்டகாலி இடவும் அமையும்’ என்றருளிச்செய்வர். இங்ஙனம், பட்டர் அருளிச்செய்தவாறே, ‘இறைவனுக்குக் கண்டங்கத்தரிப்பூவை அருச்சித்தல் கூடாது’ என்று சாஸ்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று நஞ்சீயர் கேட்க, ‘அவனுக்கு ஆகாது என்கிறதன்று; பறிக்கிற அடியார் கையில் முள் பாயும் என்பதற்காகத் தவிர்த்தனகாணும்! ‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும்முன் கண்டக்கால்’ என்று இறைவனுக்கே உரிய திருத்துழாயோடு அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத் திருமங்கை மன்னன் அருளிச்செய்கிறது கண்டீரே! இதனால், இறைவன் பொருளில் ஏற்றத்தாழ்வு பார்ப்பது இன்று என்பது விளங்குமே! மற்றும், பிரகிருதி சம்பந்த
மில்லாத பொருள்தான் வேண்டும் என்றிருந்தானாகில், ‘புள்ளாய் ஓரேனமுமாய்’ அவதரிப்பானோ? ஸ்ரீவைகுண்டத்தில் இரானோ?’ என்றருளிச்செய்தார்.
நம்பி திருவழுதி நாடு தாசர் : நம்பி திருவழுதி நாடு தாசர், ‘இத்தேவசாதி வெறுமரையோ, உப்புச்சாறு கிளருவது எப்போதோ?’ என்று பார்த்துக் கிடப்பதே இவன் அழகையும் இனிமையும் விட்டு!’ என்பராம்.
பட்டர் : பட்டர் திருவோலக்கத்துக்குச் சாஸ்திரியாயிருப்பார் ஒரு பிராமணர் பல காலும் செல்வர்; அவரைக் கண்டால் பட்டர் ‘வந்தாயோ, போனாயோ’ என்று சாமான்யமாக வியவஹரித்து அருளிச்செய்வர்; ஒரு ஸ்ரீவைஷ்ணவர், பலகாலும் சேவிக்க எழுந்தருளுவர்; அவரைக் கண்டால் மிகவும் கிருபை பண்ணி ஆதரித்துக் கொண்டு எழுந்தருளியிருப்பார். இதனைப் பல காலும் கண்டிருப்பார் ஒருவர் வந்து, பட்டரைச் சேவித்து, ‘ஸ்வாமீ’ தேவரீர் திருவோலக்கத்துக்கு வருகிற சாஸ்திரி பிரசித்தராயிருக்கிறவர்; அவர் வந்தால் சாமான்யமாக வியவஹரித்தருளுகிறது, ஒரு சாது ஸ்ரீவைஷ்ணவர் வந்தார் என்றால் அவரை மிகவும் பிரதிபத்தி பண்ணி அருளுகிறது காரணத்தை எனக்கு அருளிச்செய்ய வேண்டும்,’ என்ன, ‘ஆனால், எப்போதும் போலே நாளையும் அவ்விரண்டு பேர்களும் வருவார்கள்; அப்போது நீயும் எப்போதையும் போலே பார்த்திரு; காரணம் சொல்லுகிறோம்’ என்ன, அவரும் அப்படியே பார்த்திருக்க, அவரை எப்போதையும் போலே வினவியருளி, ‘நீர் ஆரைத்தான் பரதத்துவம் என்று நினைத்திருக்கிறது?’ என்ன, ‘சில பிரமாணங்கள் பிரஹ்மாவே பரதத்துவம் என்று சொல்லுகின்றன; சில பிரமாணங்கள் விஷ்ணுவே பரதத்துவம் என்று சொல்லுகின்றன; சில பிரமாணங்கள் சிவனே பரதத்துவம் என்று சொல்லுகின்றன; ஆகையினாலே, நம்மாலே நிச்சயிக்கப் போமோ?’ என்ன, ‘நன்று’ என்று இருந்து, அவர் போனவாறே, ஸ்ரீவைஷ்ணவர் எழுந்தருளிச் சேவிக்க, அவரையும் கிருபை செய்தருளி, ‘தேவரீர் யாரைத்தான் பரதத்துவம் என்றிருப்பீர்?’ என்ன, ‘தேவரீர் ஸ்ரிய:பதி நாராயணனே பரதத்துவம் என்றருளிச்செய்யுமே! அஃதொழிய அடியேன் வேறு ஒன்றறியேன்,’ என்ன, ‘இன்னம் உமக்குத் தஞ்சமாக நினைத்திருப்பது என்?’ என்ன, ‘எம்பெருமானார் திருவடிகளே உபாயமும் உபேயமும் என்று பிரசாதித்தருளுமே, அத்தையே தஞ்சமாக நினைத்
திருப்பேன்,’ என்ன, திருவுள்ளம் உவந்து, ‘அபசாரத்தை க்ஷமித்தருள்க! திருமாளிகைக்கு எழுந்தருள்க!’ என்றருளிச்செய்து பார்த்திருந்தவரைப் பார்த்து, ‘கண்டீரே இருவர்க்கும் உண்டான தாரதம்யம்? ஆகையாலே, இவரை வணங்கவோ, அவரை வணங்கவோ? இப்படியன்றோ ஸ்வரூப ஸ்திதி இருந்தது?’ என்றருளிச்செய்ய, அவரும் கிருதார்த்தரானார் என்ற ஐதிஹ்யம் ‘துயக்கன் மயக்கன்’ (பா. 95) என்ற பாசுரத்தில், ஜீயர் அரும்பதத்தில் காணப்படுகின்றது.
வேல்வெட்டி நம்பியார் : வேல்வெட்டி நம்பியார், நம்பிள்ளையைப் பார்த்து, ‘பெருமாள் கடலைச் சரணம் புகுகிற காலத்தில் கிழக்கிருத்தல் முதலிய சில நியமங்களோடே சரணம் புக்கார்; ஆதலின், இப்பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள் வேண்டியிருக்கிறதோ?’ என்று கேட்க, ‘அரசரான இராகவர் கடலைச் சரணம் அடைவதற்குத் தக்கவர்’ என்று பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீ விபீஷணாழ்வான்; அவன் தான் பெருமாளைச் சரணம் புகுகிறவிடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்றில்லை; ‘ஆக இத்தால் சொல்லிற்றாயிற்று என்?’ என்னில், ‘பெருமாள், இட்சுவாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே சில நியமங்களோடே சரணம்புக்கார்; ஸ்ரீவிபீஷணாஷ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்; ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா; அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா; ஆகையாலே, சர்வாதிகாரம் இவ்வுபாயம்,’ என்றருளிச் செய்தார்.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியைத் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
பணிசெய் ஆயிரத் துள்இவை பத்துடன்
தணிவி லர்கற்ப ரேல்கல்வி வாயுமே.
பொ-ரை : முன்றானையிலே முடிந்து ஆளலாம்படி சுலபனாய் இருக்கிறவனை, நித்தியசூரிகள் தலைவனை, தனக்குத்தானே ஆபரணம் போன்ற அழகினையுடையவனை, அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் சொற்களைக்கொண்டு அடிமை செய்யும் ஆயிரத் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்கவேண்டும் என்
னும் ஆசை குறைவு இல்லாதவர்களாகிக் கற்பார்களேயாயின், கல்வியின் பயனான தொண்டு செய்தல் அவர்களுக்கு உளதாம்.
வி-கு : தணிவிலர் – முற்றெச்சம். கல்வி என்பது அதன் பயனாகிய அறிவிற்காகி, அவ்வறிவு அதன் பயனாய தொண்டிற்கு ஆயிற்று; இருமடி ஆகுபெயர்.
ஈடு : முடிவில், ‘இப்பத்தைக் கற்றவர்கள் தன்னின் மேம்பட்டது இல்லாத புருஷார்த்தமான பகவானுடைய கைங்கரியத்தைப் பெறுவர்,’ என்கிறார்.
மணியை – முன்தானையிலே முடிந்து ஆளலாம்படி கைப்புகுந்திருப்பான் என்று அவனுடைய சௌலப்பியத்தைச் சொல்லுகிறார். ‘தென்குறுங்குடி நின்ற’ என்கிற இடத்தில் சௌலப்பியம். வானவர் கண்ணனை – இதனால், ‘உம்பர் வானவர் ஆதியம் சோதி’ என்கிற மேன்மையைச் சொல்லுகிறார். தன்னதோர் அணியை-இதனால் ‘அச்செம்பொனே திகழும் திரு மூர்த்தி’ என்கிற வடிவழகை நினைக்கிறார். இம்மூன்றுங்கூடின பசுங்கூட்டே பரத்துவம் எனப்படுதலின், இவற்றை ஈண்டு ஒருசேர அருளிச்செய்கிறார். தென்குருகூர்ச்சடகோபன் சொல்பணி செய் ஆயிரம் – ஆழ்வார் அருளிச்செய்ததாய் ‘நாம் இங்குத்தைக்குக் கிஞ்சித்கரித்தோம் ஆக வேண்டும்’ என்று, சொற்கள்தாம் ‘என்னைக்கொள், என்னைக் கொள்’ என்று 1‘மிடைந்தசொல்’ என்கிறபடியே, சொற்கள் பணி செய்த ஆயிரம் பாசுரங்கள். இனி, ‘சொல் பணி செய் ஆயிரம்’ என்பதற்கு, ‘சொற்களால் பணி செய்த ஆயிரம்; அதாவது, வாசிகமான அடிமையைச் சொல்லுகிறார்’ என்று பொருள் கோடலுமாம்.
உடன் தணிவிலர் கற்பரேல்-அபிப்பிராயத்தோடு கற்பாராகில். தணிவு – முயற்சி அற்று இருத்தல்; அதாவது, ‘வரில் போகடேன், கெடில் தேடேன்’ என்றிருக்கை அன்றி, சிரத்தை மாறாமல் கற்பராகில் என்றபடி. கல்வி வாயும் –2‘ஒண்தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே, ஞானமாகில் பகவத்விஷயத்தைப் பற்றியல்லது இராமையாலே, இதனைக்கற்க, இதற்குப் பலமாகத்தொண்டினை இது தானே தரும். இனி, இதற்குக் (கல்விதானே பயன்’ என்று பொருள் கூறலும் ஒன்று.
இத்திருவாய்மொழியில், மேல் பரக்க அருளிச்செய்யப் புகும் பொருள்களை எல்லாம் சுருக்கமாக முதற்பாட்டிலே அருளிச்செய்தார்; இரண்டாம் பாட்டில் ‘பரமபத்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க முகங்காட்டும்,’ என்றார்; மூன்றாம் பாட்டில், ‘கண்டாயே அவன் சொரூபம் இருந்தபடி; நீயும் உன் சொரூபத்துக்குத் தக்கபடி நிற்கப்பாராய்,’ என்றார்; நான்காம் பாட்டில் சொரூபத்திற்குத் தகுதியாக நெஞ்சு தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடினார்; ஐந்தாம் பாட்டில், மேல் ‘எண்ணிலும் வரும்’ என்றது, பலத்தோடே சேர்ந்து முடிவுற்றபடியை நெஞ்சுக்கு அருளிச்செய்தார்; ஆறாம் பாட்டில், ‘நாம் இருவரும் இப்படி நிற்கப் பெறில் நமக்கு ஒரு கேடும் வாராது,’ என்றார்; ஏழாம் பாட்டில், மேல் இவர் அஞ்சினபடியே விடிந்தபடி அருளிச்செய்தார்; எட்டாம் பாட்டில் திருநாமத்தைக் கேட்டவாறே தம்முடைய காரணங்களுக்குப் பிறந்த வேறுபாட்டைச் சொன்னார்; ஒன்பதாம் பாட்டில், ‘வேறுபட்டவர் ஆகாதே மறந்தாலோ?’ என்ன, ‘என் மனத்திலே இருக்கிறவனை மறக்கப்போமோ?’ என்றார்; முடிவில், கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டினார்.
முதற்பதிகத்தால், ‘எல்லாரினும் அறப்பெரியன் இறைவன்’ என்றார்; இரண்டாம் பதிகத்தால், ‘வணங்கத் தக்கவன்’ என்றார்; மூன்றாம் பதிகத்தால், ‘அவன்தான் எளியவன்,’ என்றார்; நான்காம் பதிகத்தால், ‘எளியனானவன் குற்றங்களைப் பொறுப்பவன்,’ என்றார்; ஐந்தாம் பதிகத்தால், ‘அவன் சீலவான்,’ என்றார்; ஆறாம் பதிகத்தால், ‘எளிதாக ஆராதிக்கத் தக்கவன்,’ என்றார்; ஏழாம் பதிகத்தால், ‘எல்லை இல்லாத இனியன்,’ என்றார்; எட்டாம் பதிகத்தால், அவனுடைய ஆர்ஜவ குணத்தை அருளிச்செய்தார்; ஒன்பதாம் பதிகத்தால், பொறுக்கப் பொறுக்க இன்பத்தினைக் கொடுப்பவன் என்றார்; பத்தாம் பதிகத்தால், ‘இத்தன்மைகளையுடையவன் ஒருவன் இறைவன் ஆதலின், ஒருவிதக்காரணமும் இன்றியே உயிர்களை அங்கீகரிப்பவன்,’ என்றார்; ஆகையாலே, ‘அவன் துயரறு சுடரடி தொழுது எழு என்மனனே’ என்று தம் திருவுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்து தலைக்கட்டினார்.
ஆக, ‘அடி தொழுது எழு’ என்று தொடங்கி, ‘கல்வி வாயும்’ என்று முடித்ததனால், ஒரு மனிதன் விரும்பிப் பெறத் தக்க உயர்வு அற உயர்ந்த உறுதிப்பொருள், பகவானுக்குச்
செய்யும் கைங்கரியமேயாம் என்பதனை முதல் நூறு திருப்பாசுரங்களால் அறுதியிட்டு அருளிச்செய்தார் ஆயிற்று.
திருவாய்மொழி நூற்றந்தாதி
பொரும்ஆழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறுஓர் ஏதுஅறத் தன்னைத் – திரமாகப்
பார்த்துஉரைசெய் மாறன் பதம்பணிக என்சென்னி;
வாழ்த்திடுக என்னுடைய வாய்.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
மறப்பும் ஞானமும் நான்ஒன்று உணர்ந்திலன்
மறக்கும் என்றுசெந் தாமரைக் கண்ணொடு
மறப்ப றஎன்னுள் ளேமன்னி னான்தன்னை
மறப்ப னோஇனி யான்என் மணியையே?
பொ-ரை : மறப்பு என்பதனையும் ஞானம் என்பதனையும் நான் சிறிதும் அறிந்திலேன்; அறிவிற்கு அடைவு இன்றி இருந்த என் பக்கல் அறிவைப் பிறப்பித்தான்; பிறப்பித்தவன், நான் மறக்கக் கூடும் என்று நினைத்து, செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களாலே குளிர நோக்கிக்கொண்டு ஒருநாளும் மறக்க ஒண்ணாதபடி என்னுள்ளே வந்து நிலைபெற்று நின்றான்; அவ்வாறு நின்றவனை, எனக்கு மணியைப் போன்றவனை யான் இனி எங்ஙனம் மறப்பேன்?
வி-கு : உணர்ந்திலன்: எதிர்மறை. ‘அற’ என்னும் எச்சத்தை ‘மன்னினான்’ என்னும் வினையாலணையும் பெயருடன் முடிக்க. என் மணியை மறப்பனோ?’ எனக் கூட்டுக.
ஈடு : பத்தாம் பாட்டு. ஆயினும், வருந்தியாகிலும் மறந்தாலோ?’ என்ன, ‘நெஞ்சில் இருளை அறுத்துக்கொண்டு எப்பொழுதும் வசிக்கின்றவனை மறக்க விரகு உண்டோ?’ என்கிறார்.
மறப்பும் ஞானமும் நான் ஒன்று உணர்ந்திலன் மறப்பு என்றும் ஞானம் என்றும் ஒன்றை நான் அறிந்திலேன், ‘ஆயின், நான் ‘ஞானம் என்பது ஒன்றனை உணர்ந்திலேன்’ என்ற போதே ‘மறப்பும் உணர்ந்திலேன்’ என்பது தானே போதரும் அன்றே? அங்ஙனம் இருக்க, மறப்பும் ஒன்று உணர்ந்திலன்’ என்றது என்னை?’ எனின், 1‘நான் ஒரு சேதநனாய் நினைத்தேனாகில் அன்றே மறப்பது? நினைத்தேன் நான் ஆயின அன்று அன்றே மறந்தவனும் நான் ஆவேன்? அதாவது, ஞானத்திற்குப் பற்றுக்கோடாய் இருப்பது ஒன்றே அஞ்ஞானத்திற்கும் பற்றுக்கோடாய் இருக்கும்; ஆதலால் அறிவு அற்ற பொருளாய்க் கிடந்தேன்,’ என்பதனைத் தெரிவித்தபடி. மறக்கும் என்ற செந்தாமரைக் கண்ணொடு மறப்பு அற என்னுள்ளே
மன்னினான்தன்னை – 1இப்படி இருக்கிற நான் நினைத்தேனாகவும் 2நினைவையும் என் தலையிலே ஏறிட்டு, ‘பிறந்த ஞானத்துக்குப் பிரிவு வர ஒண்ணாது’ என்று பார்த்து அழகிய திருக்கண்களாலே குளிர நோக்கிக் கொண்டு, தன்னைப்பற்றி எனக்கு வரும் மறதி போம்படி என் மனத்திலே நித்தியவாசம் செய்கிறவனை. ‘புறம்பே வேறு ஒரு பொருளில் நோக்குள்ளவன்’ என்று தோற்ற இருந்திலன் ஆதலின், ‘மன்னினான்’ என்கிறார்.
மறப்பனோ இனி யான் என் மணியையே-மறவாமைக்குக் கருவி அவன் கையிலே உண்டாய் இருக்க, இனி மறக்க உபாயம் உண்டோ? மேல் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாமல் கழிந்தமை போன்று, இனி மேல் வருகின்ற காலமும் மறக்க விரகு இல்லை என்பதனைத் தெரிவித்தபடி. 3‘மறந்தேன் உன்னை முன்னம்’ என்கிறபடியே, அநாதி காலம் மறந்தே போந்தவர் ஆதலின், அது தோன்ற ‘யான்’ என்கிறார். ‘பெருவிலையனாய் முடிந்து ஆளலாம்படி கைப்புகுந்து புகழையுடைத்தான நீலமணி போலே இருக்கிற தன்னை எனக்கு அனுபவ யோக்கியமாம்படி செய்துவைத்தான்,’ என்பார் ‘என் மணியை’ என்கிறார்.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பி யைத்தென் குறுங்குடி நின்றஅச்
செம்பொ னேதிக ழும்திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதிஅம் சோதியை
எம்பி ரானைஎன் சொல்லிம றப்பனோ.
பொ-ரை : அழகிய திருக்குறுங்குடி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை, அந்தச் செம்பொன் போன்று விளங்குகிற அழகிய திருமேனியையுடையவனை, பரமபதத்தில் எழுந்தருளியிருக்கின்ற நித்தியசூரிகளுடைய தொழில்கட்கெல்லாம் காரணனான பரஞ்சோதியை, எனக்கு உதவியைச் செய்தவனை நான் என்ன காரணத்தைக் கூறி மறப்பேன்?
வி-கு : ‘‘நம்பி’ என்பது, ‘நமக்கு இன்னார்’ என்னும் பொருள்பட வருகின்ற சொல்’ என்பர் சேனாவரையர். (தொ. சொ. 163.) மூர்த்தி – வடிவத்தையுடையவன். உம்பர் – மேலிடம். ‘மறப்பனோ’ என்பதில் உள்ள ஓகாரம் எதிர்மறை.
ஈடு : ஒன்பதாம் பாட்டு 2‘நீர்தாம் இங்ஙனே கிடந்து வருந்திஉழலாமல், இறைவனை மறந்து சம்சாரிகளைப்போன்று உண்டு
உடுத்துத் திரியமாட்டீரோ?’ என்ன, ‘நான் எத்தைச் சொல்லி அவனை மறப்பது?’ என்கிறார்.
நம்பியை – நற்குணங்கள் எல்லாம் நிறைந்தவனை. தென்குறுங்குடி நின்ற – கலங்காப்பெருநகரத்தைக் கலவிருக்கையாகவுடையவன், அத்தை விட்டு என்னைப் பற்றத் திருக்குறுங்குடியிலே காலத்தை எதிர் நோக்கிக்கொண்டு நிலையியற் பொருள்போன்று நின்றவன். பரமபதத்தில் குணங்களுக்குச் 1சத்பாவமே உள்ளது ஆதலானும், குணங்கள் நிறம் பெற்று நிறைவுடன் விளங்குதல் இங்கே ஆதலானும், ‘குறுங்குடி நின்ற நம்பியை’என்கிறார். இதனால், ‘குணங்களில் குறைவுள்ளவன், தூரத்திலேயுள்ளவன் என்று நினைத்து, நான் மறக்க வேண்டுமே,’ என்பதனைத் தெரிவித்தபடி. அச்செம்பொனே திகழும் திருமூர்த்தியை – உபமானம் அற்றதாய், 2ஓட்டு அற்ற செம்பொன் போன்று எல்லை அற்ற ஒளி உருவமாய், வாக்கு மனங்களால் அளவிட்டு அறிய முடியாத திவ்விய மங்கள விக்கிரகத்தையுடையவனை. இதனால் ‘வடிவழகிலே குறையுண்டாய்த் தான் மறக்கவோ?’ என்பதனைத் தெரிவித்தபடி.
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை – உண்டாக்கப்பட்ட இங்கேயுள்ள தேவர்களைப் போன்று அன்றி, மேலான நித்திய சூரிகளுடைய சத்து முதலானவற்றிற்கும் தானே கடவனாய், அவர்களுக்கு அனுபவிக்கத் தகுந்த திவ்விய மங்கள விக்கிரகத்தை உடையவனை. இத்தால்: அவ்வழகை அனுபவிக்க இட்டுப் பிறந்த நித்தியசூரிகளைச் சொன்னபடி. எம்பிரானை-அவர்கள் அனுபவிக்கும் 3படியை எனக்கு உபகரித்தவனை. என் சொல்லி மறப்பனோ – எத்தைச் சொல்லி மறப்பேன்? 4அபூர்ணன் என்று மறக்கவோ? தூரத்திலே உள்ளவன் என்று மறக்கவோ? வடிவழகு இல்லை என்று மறக்கவோ? மேன்மை இல்லை என்று மறக்கவோ? எனக்கு உபகாரகன் அலன் என்று மறக்கவோ? எத்தைச் சொல்லி மறப்பேன்? என்றபடி.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
செல்வ நாரணன் என்றசொல் கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பக லும்இடை வீடுஇன்றி
நல்கி என்னைவி டான்நம்பி நம்பியே.
பொ-ரை : திருநாராயணன் என்னும் பெயரை வழியே செல்வான் ஒருவன் கூறக் கேட்ட அளவில் கண்கள் நீர் பெருகாநிற்கும்; யானும், ‘எங்குற்றாய் எம்பெருமான்!’ என்று தேடாநின்றேன். இது என்ன ஆச்சரியம்! எல்லாக் குணங்களும் நிறைந்த இறைவன், சிறந்த இராக் காலமும் சிறந்த பகற்காலமும் ஒழிவின்றி என்னைப் பெரியவனாக நினைத்து விரும்பி என்னை விட்டு நீங்காதவன் ஆகின்றான்.
வி-கு : திருவே செல்வமாதலின், திருநாரணனைச் ‘செல்வ நாரணன்’ என்கிறார். நாடுவன் என்ற முற்றிற்கு ‘யான்’ என்னும்எழுவாய் வருவிக்க. ‘நன்’ என்னும் அடையினை ‘அல்லு’க்கும் கூட்டுக. ‘நம்பி’ இரண்டனுள் ஒன்று பெயர்ச்சொல்; ஒன்று வினையெச்சம். ‘நம்பி விடான்’ என மாற்றுக.
ஈடு : எட்டாம் பாட்டு. 1‘நாம் இதற்கு முன்பு நினைத்தும் பேசியும் தப்பச் செய்தோம், இனித் தவிருமித்தனை’ என்று ‘அவன் குணங்கள் நடையாடாதது ஓரிடத்தில் கிடக்க வேண்டும்’ என்று போய், ஒரு குட்டிச்சுவரின் அருகில் முட்டாக்கு இட்டுக்கொண்டு கிடந்தார்; அங்கே, வழியே செல்கின்றான் ஒருவன் சுமை கனத்து ‘ஸ்ரீமந் நாராயணன்’ என்றான்; அச்சொல்லைக் கேட்டுத் தம்முடைய கரணங்கள் அங்கே அன்புடைமையாகிறபடியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்.
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் கண் பனி மல்கும் நாடுவன் – திருநாரணன் என்ற சொல் செவிப்பட்ட அளவிலே, கண்ணானது என்றனை ஒழியவே நீர் மல்கப்புக்கது; நெஞ்சும் அவ்வளவிலே, ‘எங்குற்றாய்?’ என்று தேடப்புக்கது. 2ஆழ்வார் பரிசரத்திலே பிரமசாரி எம்பெருமான் பெயர் சொல்வார் ஒருவரும் இலராதலின், ‘செல்வ நாரணன் என்ற’ என்கிறார். விஷத்தை நீக்கும் மந்திரம் போன்று, பொருள் உணர்வு வேண்டாதே அச்சொல்லே இவர் நோவுபடுகைக்குப் போதியதாய் இருத்தலின், ‘சொல் கேட்டலும்’ என்கிறார். மாயமே – ஈது ஓர் ஆச்சரியம் இருந்தபடி என்? 3பொருள் உணர்வு இன்றியே சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் கண் பனி மல்குகின்றது; நெஞ்சு தேடுகின்றது. ஆதலின், ‘மாயமே’ என்கிறார். இனி, ‘அல்லேன் என்று அகலுகைக்கு நான் வேண்டியிருந்தது, ஆவேன் என்று கூடுகைக்கு நான் வேண்டிற்று இல்லையாய் இருந்ததே’ என்பார், ‘மாயமே’ என்கிறார் எனலுமாம்.
‘ஆயின், அவன் செய்கிறது என்?’ என்னில், அல்லும் நன்பகலும் இடைவீடு இன்றி நல்கி நம்பி என்னை நம்பி விடான் – இரவு பகல் என்னும் வேறுபாடு அற என்னிடத்தில் அன்பு வைத்து,குணங்களால் நிறைந்த இறைவன், என்னைத் தன்னுடையவனாக நினைத்து, என்னை நீங்குதற்கு மனம் இல்லாதவன் ஆகின்றான். மேல் 1‘வெந்நாள்’ என்பவர், ஈண்டு ‘அல்லும் நன்பகலும்’ என்கிறார்; தம்முடைய ஆசை எல்லாம் ஒழிய, தம்முடைய உறுப்புகளுக்குப் பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி இறைவன் மேல் விழுகிற காலம் ஆதலின். தாம் ஒருகால் தேடி விடாநிற்க, இறைவன் இடைவிடாதே விரும்புகிறான் ஆதலின், ‘இடைவீடின்றி’ என்கிறார். இனி, ‘என்னை விடான் நம்பி நம்பியே’ என்பதற்கு, ‘என்னை – அபூர்ணனான என்னை, நம்பி – பெருமதிப்பனாக நினைத்து, விடான் – விடுகின்றிலன்’ என்று பொருள் கூறலுமாம். ‘சம்சாரி சேதனனைப்பெற்று, பெறாப்பேறு பெற்றானாய் இருக்கிற இவனையே உலகத்தார் பரிபூர்ணன் என்கிறார்கள்,’ என்பார் ‘நம்பியே’ என ஏகாரங்கொடுத்து ஓதுகிறார்.
‘நம்பி, அல்லும் நன்பகலும் இடைவீடு இன்றி நல்கி, நம்பி என்னைவிடான்; மாயமே!’ எனக் கூட்டுக
1. ‘கேட்டலும்’ என் கையாலே, அசம்பாவிதமான இடத்தில் இருத்தல் சித்தம்
என்று திருவுள்ளம் பற்றி அவதாரிகை அருளிச் செய்கிறார்.
2. ‘வழியே செல்கின்றவன் ஸ்ரீமந்நாராயணன் என்பானோ?’ என்னும்
வினாவிற்கு விடையாக ‘ஆழ்வார் பரிசரத்திலே’ என்று தொடங்கும்
வாக்கியத்தை அருளிச்செய்கிறார். ‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப்
போல் அவனுடைய பேருந் தார்களுமே பிதற்ற’ (6. 7 : 2,) என்ற
திருப்பாசுரம் ஈண்டு நினைவு கூர்க.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
எந்தையே என்றும் எம்பெரு மான்என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெரு மான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே.
பொ-ரை : ‘எந்தையே! எம்பெருமானே!’ என்று நித்தியசூரிகள் தங்கள் மனத்திலே வைத்துத் துதிக்கும்படியான செல்வனை, மிக்க தீயவினைகளையுடைய யானும் ‘எந்தையே!’ என்றும், ‘எம்பெருமானே!’ என்றும் மனத்திலே வைத்துத் தியானிப்பேன், வாயாலும் சொல்லுவேன்; இஃது என்னே!’ என்பதாம்.
வி-கு : எந்தை என்பது, என் தந்தை என்றதன் மரூஉ என்பர். வானவர் என்றது – நித்தியசூரியகளை.
ஈடு : ஏழாம் பாட்டு. 1மேல் இவர் அஞ்சியது போன்றே முடிந்தது; ‘தாழ்ந்தவன்’ என்று அகலுகிறார்.
எந்தையே என்றும் – என்னிடத்தில் அன்புடையவனே என்றும். எம்பெருமான் என்றும் – எனக்கு வகுத்த சுவாமியே என்றும். சிந்தையுள் வைப்பன் – எத்தனை விஷயங்களை நினைத்துப் போந்தநெஞ்சிலே வைத்தேன். சொல்லுவன்-நான் அறிந்ததாக நெஞ்சிலே வைத்துத் தூஷித்த அளவேயோ? பிறர் அறியும்படி வைத்தேன். பாவியேன் – 1விலக்ஷண போக்கியமான இப்பொருளை அழிக்கைக்கு நான் ஒரு பாவி உண்டாவதே! சத்துவ குணத்தையுடைய ஒருவன் தமோ குணத்தால் மேலிடப்பட்டவனாய் ஒரு வீட்டில் நெருப்பை வைத்து, சத்துவம் தலை எடுத்தவாறே வருந்துமாறு போன்று ‘பாவியேன்’ என்கிறார். ‘ஆயின், பகவானை நினைக்கையும் சொல்லுகையும் பாவத்தின் பயனோ?’ என்னில், 2புரோடாசத்தை நாய் தீண்டினாற்போன்று நித்தியசூரிகள் அநுபவிக்கும் பொருளை அழிக்கை பாவத்தின் பலம் அன்றோ? எந்தை எம்பெருமான் என்று வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை-நினையாவிடில் அரைக்கணம் தரிக்கமாட்டாத நித்தியசூரிகள் நினைத்து அநுபவித்து அவ்வநுபவம் வழிந்து ‘எங்களுக்குப் பரிவன் ஆனவனே! சுவாமியானவனே!’ என்று தங்கள் நெஞ்சிலே வைத்துச் சொல்லும்படியான செல்வத்தையுடையவனை நானும் சொன்னேன்; ஆதலால், இப்பொருளை ஒருவர் நம்பாதபடி அழித்தேன்,’ என்கிறார். ‘
1. ‘மேல் இவர் அஞ்சியது போன்றே முடிந்தது’ என்றது, ‘துஞ்சும்போதும்
விடாது தொடர்கண்டாய்’ என்றதனை நோக்கி.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்