திரு-விருத்தம்-54-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே -என்றாளே –
வீச வேண்டிற்று இல்லை-இவளுடைய உக்தி மாத்ரத்தாலே உணர்த்தாள்
உறங்கின போது பசி பொறுக்கலாம்-உணர்ந்தால் ஜீவித்து  அல்லது நிற்க ஒண்ணாது இறே –
மோகம் தானே நன்றாம்படி யாய் இருந்தது-இனி அங்கு நின்றும் ஓர் ஆள் வந்து தரித்தல்-இங்கு நின்று ஆள் விட்டு வரவு பார்த்து இருந்து தரித்தல் -செய்ய வேண்டும்படியாய் ஆயிற்று
இங்கு நின்றும் ஒருவர் வரக் கண்டது இல்லை -தன் பரிகாரத்தில் கால்நடை தருவார் இல்லையாய் ஆயிற்று-இனித் தன் பரிசரத்தில் வர்த்திக்கிற வண்டுகளை தூது விடுகின்றாள் –
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –
பாசுரம்-54-வீசும் சிறகால் பறத்தீர் -வண்டு விடு தூது –கேசவன் தமர் -2-7
 வீசும் சிறகால் –
வீசுகையாவது -அசைந்து வருகையை சொல்லுவது
வேகத்தை சொல்லுதல்
பரந்து இருக்கையை சொல்லுதல்
சிறகால் பறத்தீர் –
தனக்கு சிறகும் இன்றியே கால் கொண்டு ஆயிற்று நடப்பது –
அது தானும் இட்டகால் இட்ட கையாய் -திருவாய்மொழி -7-2-4-இறே தான் இருக்கிறது -விண்ணாடு நுங்கட்கு எளிது –
பூமியை விட்டு அந்தரிஷத்தே கிளம்பின போதே -பரம பதத்துக்கு போக உடலாக இவ்வளவு-போயிற்றன என்று இருக்கிறாள் –
பரம பதம் ஆகில் மேலே என்று இறே இவள் இருப்பது
மேலுலகங்களின் மீது போய் -நாச்சியார் திருமொழி -10-2–இத்யாதி
நுங்கட்கு எளிது –
இனி உங்களுக்க் தோள் தீண்டி இறே அது –
எங்களுக்கு இறே அவ்விடம் அரிது
கால்நடை தந்து போவார் எல்லாம் போவது பரம பததுக்கே என்று இருக்கிறாள்-
பேசும்படி யன்ன பேசியும் போவது –
அங்கு போனால் சொல்லும் பாசுரத்தை -அப்படியே என் முன்னே ஒருகால்
சொல்லிப் போக வேணும்

நெய் தொடு இத்யாதி –அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து -பூமியிலே வந்து அவதரித்து -தன் பக்கல் ஆசாலேசம் உடையாருடைய ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது-தரியாதானாய் -அது தான் நேர் கொடு நேர் கிடையாமையாலே களவு கண்டு அமுது செய்து -தன்னை உகவாத சிசுபாலாதிகள் ஏசும்படியாய் இருக்கிறவர்-எம்மீசர் -நித்ய சூரிகளுக்கு நிர்வாஹனான மேன்மையாலும் -ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள-த்ரவ்யத்தால் அல்லது தரியதானாய் இருக்கிற சீலாதி அதிசயத்தாலும் ஆக என்னை-அனந்யார்ஹை ஆக்கினவர்

மாசின் மலரடி –
மாசில்லாத மலரடி
இதுக்கு முன்பு சிலர் தூதுவிட தான் பிற்பாடானாய் இருக்கும் மாசு இல்லையாய்   ஆயிற்று-இத்தலை தூதுவிடிலும் -அங்கு நின்றும் வந்தார்கள் வாயிலே வார்த்தை சொல்லி விடும் அத்தனை -இறே
யதாதம் புருஷவ்யாக்ரம் -பருவம் கழிந்தது இறே
இனி இவர்க்கு சொல்லித்தான் செய்தேன் என்று இருக்க வேண்டா
நினைத்த போதே நினைத்தது எல்லாம் செய்து தலைக் கட்ட வல்ல  வாண் புலி –
காதரை –கண்டாய் இறே
ஒரு நீர் சாவியை யாய்  இவை உறாவிக் கிடக்கிற படி
சிலர் பட்டினி விட சிலர் ஜீவித்தாவோபாதி -விடாய்த்த விக் கரணங்களை கொண்டு முடிந்து போய்- வேறு ஒரு சரீர பரிகிரகம் பண்ணி இவரை அனுபவிக்க இருக்கை அன்றிக்கே-விடாய்த்த இவற்றைக் கொண்டே ஸ்பர்சிக்கும்படி பண்ண  வேணும்
சகாமாஹம்-அவரைப் போலே வரில் பொகடேன்-கெடல் தேடேன் – என்று இருக்கும் அளவு அல்லேன் நான் –
ததா குருதயாம்மயி -அவருடைய சக்தியில் குறை இன்றிக்கே இருக்க செய்தே -இவ்வளவாக கார்ய கரமாக கண்டிலோம் –
உன் கிருபையாலே அதுவும் பலிக்கும்படி பண்ணித் தர வேணும்
எம்மை சேர்விக்கும் வண்டுகளே –
என்னை அங்கே சேர விடுகையே நிரூபகமாக உடைய வண்டுகள் அன்றோ -நீங்கள் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: