திரு விருத்தம் -53-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
இவள் இருந்து பகட்ட கேளாது இறே அது -காலமும் அதுவேயாய் -வர்ஷமும் மெய்யாய் நிலை நின்றவாறே
அவன் வரவு காணாமை -இவள் மோஹித்தாள் -இவளுடைய ஸ்லாக்யத்துக்கு அனுரூபமாக பந்துக்கள் கலங்கி –
வழி அல்லா வழியே  பரிகரிக்க இழிய -இவள் பிரகிருதி அறிந்து இருப்பாள் ஒரு மூதறிவாட்டி –
நீங்கள் செய்கிறது பரிகாரம் அன்று –
இவள் பிழைக்க வேணும் ஆகில் நான் சொல்லுகிறபடியே  இங்கனம் பரிகரிக்க பாருங்கோள்-என்கிறாள்-
வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்   கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 –
பாசுரம் 53-வார் ஆயின முலையாள் இவள் -கட்டுவிச்சி கூறுதல்-வைகுந்தா மணி வண்ணனே -2-6-
வாராயின முலையாள் இவள்
நீங்கள் செய்கிற வில் விளையாட்டுக்கள் கொண்டு பரிகரிக்கும் பருவம் அல்ல –
கால ஷேபம் பண்ணாதே கடுக   சிகித்சித்து  கொண்டு நிற்கும்படி அன்றோ இவள் பருவம் இருக்கிறது –
வாராயின முலையாள் இவள் –
வாராலே ஆர்த்த முலை -வாராலே தாங்கப்பட்ட முலையை உடையவள்
வாராலே தரித்தல் -நாயகன் தன் மார்பாலே தரித்தல் செய்யுமித்தனை போக்கி
இவள் தன்னாலே தரிக்கும் அளவில்லை –
என்னிவை தானே வாளாவெனக்கு பொறை எனக்கு  -என்ன கடவது இறே
கன்னவிலும் காட்டகத்து -பெரிய திருமடல்-கல்லே என்று சொல்லப்படுகிற காட்டுள்ளே
ஓர் வல்லிக் கொடி மலரின்-ஒரு பூம் கொடியில் பரிமள பிரசுரமான மலரில் –
நன்றறு வாசம்-அநுப புக்தமான செவ்விப் பரிமளத்தை
மாற்றார் யானும் எய்தாமே -போக்தாக்கள் புசிக்க பெறாதே
மன்னும் வறு நிலத்து  வாளான்குகுத்தது போல்-தான் முளைத்த வெறும் தரையிலே ஒரு பிரயோஜனம் இல்லாதபடி -வ்யர்த்தமே மீள எடுக்க-ஒண்ணாதபடி மங்குமா போலே
என்னுடைய பெண்மையும் என்னலனும்   என் முலையும்-அக்கொடியும் பூம் கொத்தும்  பரிமளமும் இருக்கிற படி
மன்னு மலர் மங்கை மைந்தன் -பிரணய தாரையிலே பெருய பிராட்டி யரோடே ச்ரோத்ரி யானவனே வேணும் இவளுக்கு தேசிகனாம் போது
கண புரத்து பொன் மலை போன்று நின்றவன் தன்-பெரிய பிராட்டியும் தானுமாய் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க ஒண்ணாது-திருக் கண்ண புரத்திலே வந்து நிற்கிறவனாக வேணும்
பொன்னகலம் தோயாவேல் -அவனுடைய வீறுடைத்தான மார்பிலே அணைக்கப் பெற்று தன்னுடைய கிலேசம் தீரா ஆகில்-
என்னிவைதான் வாளா-இவற்றினுடைய சிருஷ்டிக்கு ஒரு பிரயோஜனம்   வேண்டாவோ
எனக்கே பொறையாகி-இருவர் கூட தரிக்கிற இத்தை -நான் ஒருத்தியும் எங்கனே தரிக்கும்படி எனக்கே தான்
சுமை ஆயிடுக -இவை தான் முதுகிலே  ஆக பெற்றோம் ஆகில் கண் காண இருந்து செவ்வி அழிய வேணுமோ
மூவாமை காப்பதோர் மன்னு மருந்து அறிவீர் இல்லையே –
இதுக்கு பட்டர் –
நாட்டில் ஓர் அந்தர் ஆளிகர் இல்லையோ  என்கிறார் காண் -என்று அருளி செய்தார் –
(கொடி -ஜீவன் / மலர் -ஞானம் / நறு மணம் -பக்தி -/ திருமங்கை ஆழ்வார் ஞானம் பக்தி அனுபவிக்க திருமால் ஒருவனால் முடியும் என்றபடி –
ஆந்தராளிகர் -தலைவன் தலைவி நடுவில் ஊடலை தீர்க்கும் நடுவர் -)
இவ்வார்த்தை கேட்ட போது பிள்ளை திரு நறையூர் அரையர் உள்ளிட்டார் அடைய
நாலைந்து நாழிகை போது வேறொரு வார்த்தைக்கு இடம் கொடாதே-கொண்டாடியவர்கள்-பட்டது காணும் -என்று ஜீயர் அருளி செய்வர் –
பெரிய திருமடல் பாசுரம் -88 92- -வரிகளுக்கு வியாக்யானம் செய்து அருளுகிறார்

வளர்த்ததனால் பயன் பெற்றேன் -என்கிற பாட்டை -பட்டர் அருளி செய்த சில வார்த்தைகளை கேட்டு -இதுக்கு முன் பூர்வாசார்யர்கள் பக்கலிலும் இவ் வார்த்தை கேட்டு அறியோம் -என்று கொண்டாட -பிள்ளாய் பண்டும் இப்படி ஸ்லாகித்தாரும் உண்டு காணும் – ஒரி திர்யக்கை வளர்த்து -திரு நாமங்களை கற்பித்து -பின்னை அது சொல்லக் கேட்டு -அதன் காலிலே விழுந்தாரும் உண்டு காணும் -என்று அருளி செய்தார் -நீர் உமக்கு வேண்டின நிலையிலே ஹேதுக்களை வையும் -உம்மை அனுபவிக்கிற இது -இழவாது ஒழியும் அத்தனையே வேண்டுவது -என்றாராம் –

உடையார் சுப்ரமணிய பட்டர் எம்பெருமான் எழுந்து அருளி இருக்கிற காலத்தில் –
இங்கே வந்து திருபுன்னை கீழே பெருமாளை சேவித்து இருக்க –
எம்பெருமானாரை சிலர் வந்து அனுவர்த்திக்கிறபடியை கண்டு -ஜீயரே நான் கேட்க வேண்டி இருக்கிறதொரு-வார்த்தை உண்டு -என்ன
அது ஏது -என்ன –
சர்வேஸ்வரன் திரு முன்பே நம்மை சிலர் தண்டன் இடா நின்றார்கள் –
அவர்களும் விவஷியதராயிரா நின்றார்கள்-நாமும் அது வேண்டா என்கிறி லோம்-இதுக்கடி என் -என்ன –
இது தான் கேட்க வேண்டுவதொரு வார்த்தை யாகிலும் நீர் கேட்குமது என் -என்று அருளி செய்தார் –
எனக்கு வாசி என் -என்ன
நீர் ராஜ சேவை பண்ணித் திரிந்தவர் அன்றோ -ராஜாவின் பக்கலிலே ஒருவன் கார்யம்
கொள்ள வந்தால் -அவனுடைய பாதுகைகளை எடுத்து தலையிலே வைத்து கொள்ளா
நின்றால்-அவை தன்னை தலையில் வைக்க வேண்டா-என்னுமோ -அவன் தான் அவற்றை கொண்டாடுகிறானோ-அவற்றை கொண்டாடுகிறான் ஆகில் அவை தான் கார்யம் செய்ய வேணும் -இறே-ஆன பின்பு -இத்தால் – ப்ரீதினானவன் ராஜாவே அன்றோ -என்று அருளி செய்தார்-வாராயின முலையாள் இவள் –
வார் தான் இம் முலையோடு சம்பதித்து ஸ்வரூபம் பெரும்படியான முலையை உடையவள் -என்னவுமாம் –
நாயகன் தானும் இம்முலையோடே அணைந்து இறே தன ஸ்வரூபம் பெறுகிறது –
அகலகில்லேன் இறையும் -என்றும்
ந ச சீதா த்வயாஹின-என்றும் இறே அங்குள்ளார் படி
நோவுக்கு ஹேது பூதன் ஆனவனுக்கும் நோவுக்கும் உண்டான அவிபாகத்தாலே
வானோர் தலைமகனாம் சீராயின நல் நோய்  -என்கிறது –
சீராயின -கனவிய நோய் –ஒருவரால் பரிகரிக்கிறோம் என்று தொடங்க அரிய நோய்
தெய்வ நோய் -அப்ராக்ருதமான  நோய்
நல் நோய் -கைக் கூலி கொடுத்து கொள்ள வேணும் நோய் –
அன்றிக்கே
நித்ய சூரிகளுக்கு நிர்வாஹனான மேன்மையையும் -கல்யாண குணங்களையும் உடைய-பர தேவதை அடியாக வந்த நோய் -என்னுதல்

தெய்வத் தண் அம் துழாய் -இத்யாதி-இந்நோய்க்கும் இவளுக்கு பரிஹரிக்கிற உங்களுக்கும் அனுரூபமாக பரிஹரிக்க பாரும் கோள்-தேவதாந்திர கடாஷ கொள்வதோ -என்று அது குடிப் பழி இறே

தெய்வம் -இத்யாதி –
அவன் திருமேனியில் ஸ்பர்சத்தாலே அவன் தன்னோபாதியும் ஸ்லாக்கியமாய்
இருந்துள்ள -திருத் துழாயில் தாராகிலும் –
அதில் தழை ஆகவுமாம்
அதில் கொம்பாகவுமாம்
கீழ் வேராகவுமாம்-
அத்தோடு சம்பந்தித்த மண் ஆகிலுமாம்
ஏதேனும் ஒன்றை கொண்டு வந்து பரிகரிக்க பாரும் கோள் –
இதர ஸ்பர்சங்கள் தூரப் போந்ததும் பாதகமாம் போலே பகவத் விஷயத்தில்
தூரே உண்டான சம்பந்தமும் நோவுக்கு பரிகாரமாம் இறே –
ஸ்பர்ச வேதி ஆகையாலே -இவ்வருகே போர போர உறைத்து இருக்கும் -இறே-தம்மடியார் அடியார் -இத்யாதி –
———————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: