திரு விருத்தம் -52-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை-
கால மயக்கு துறை —
அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியேன் என்று வார்கின்றதே – 52-
 
பாசுரம் -52–அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே -கால மயக்கு –அந்தாமத் தன்பு -2-5-
அழைக்கும் கரும் கடல்-
அபாம்பி சுக்லம்-என்று ஜலத்துக்கு ஸ்வாபம் வெளுப்பே ஆகிலும்  -நீர் செறிவாலே
கறுத்து இருக்கும் -இறே-கீழ் கறுத்து மேல் வெளுத்த திரைகளை உடைத்தாய் இருந்த போது -நீல-ரத்னத்தாலே செய்ததொரு -ஸ்தலத்திலே ஸ்படிகத்தாலேசோபன பரம்பரையாக படுத்தால் போல்-ஆயிற்று இருக்கிறது –
சக்யம் -இத்யாதி -மேகங்களான சோபன பங்க்திகளாலே ஆகாசத்திலே ஏறி -அக்காலத்திலே அலர கடவ-குடஜங்களையும் அர்ஜூனங்களையும் கொண்டு -நம் குருவான ஆதித்யனுடைய மத்யத்திலே-சதாத்யேயனாய் இருக்கிற சர்வேஸ்வரனை உபாசிக்கை சக்யமாய் இருந்தது -இதுக்கு குறை இத்தைனையும் இறே
சகயம் அம்பர மாருஹ்ய மேக சோபான பந்க்திபி
குடஜ்   அர்ஜுன   மாலாபிர் அலங்கர்த்தும் திவாகர –
மால்யமான் என்னும் மலை பகுதியில் இருந்த போது பெருமாள் இளைய பெருமாள் இடம் அருளிய வார்த்தை
நாம்பெரிய பெருமாளை சமாராதனம் பண்ணப் புக்கால் -சஹாபத்ன்யா -என்றபடி -கூட நின்று எடுத்து-கை நீட்டும் மைதிலி உண்டாக பெறாத இது ஒன்றும் இறே குறை

வெண் திரைக்கே கொண்டு போய் –அத்திரைகளால் அலைக்கிற இதிலே நீர் நடுக்க -நடுங்க கொண்டு போய்-அலர்வாய் -அலர் -தாமரை-தாமரைப் பூவைப் போலே இருந்துள்ள திருப் பவளத்தை உடையவள்-என்னுதல் -அலரிலே உண்டானாவள் -தாமரையை தனக்கு பத்தி ஸ்தானமாய் உடையவள் என்னுதல்

மழைக் கண் மடந்தை –
போக ஸ்தானத்தையும் பார்த்து இவளையும் பார்த்தால்-பின்னை அவள் பின்னே போம்படியாய் -ஒரு பாட்டம் மழை விழுந்தால்  போலே ஆயிற்று -குளிர நோக்கினால் நோக்கி இருப்பது -பின்னை அவள் கருத்தை பின் செல்ல வேண்டும்படியாய் இற்று இருப்பது –
அரவணை ஏற –
திரு அனந்தாழ்வான் மேலே சம்ஸ்லேஷ அர்த்தமாக சென்று ஏற –

மண் மாதர்-பூமிப் பிராட்டி

விண் வாய் அழைத்து –
விண்ணாகிற வாயாலே அழைத்து -என்னுதல் –
விண்ணிலே நின்று அழைத்து என்னுதல் –
திரைகள் மேல் நோக்கிக் கொந்தளித்து -ஆகாசத்திலே சப்தித்த போது பூமியானது
அழைத்தால் போலே ஆயிற்று  இருக்கிறது –
புலம்பி
பல பாசுரங்களை சொல்லி புலம்பி
முலை மலை மேல் நின்றும் –
முலைகளாகிற மலைகளில் நின்றும்
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு பூமி விபூதி ஆகையாலே -மலைகளை முலைகளாக சொல்லலாம் இறே-காரார் வரை கொங்கை -இத்யாதி-ஆறுகளாய் –வர்ஷித்தவாறே -மலைகளில் நின்றும் அருவிகள் விழுந்து நிரம்பி போகா நிற்கும் இறே –
மழைக் கண்ண நீர் –
மழை போல் இருந்துள்ள கண்ணீர் –
மற்றை போது மழையான கண்ண நீர் தானாய் இருக்கும் இறே
திருமால் கொடியேன் என்று –
இருவருமான சேர்த்தி பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் -அது நமக்கு இழவுக்கு உடல் ஆவதே -நீர்மைக்கு உடலானது -க்ரௌர்யத்துக்கு உடலாய் தலை கட்டுகிறதே –
என்று வார்கின்றதே –
அவனுடைய கொடுமையை சொல்லி அழுகிறவளுடைய கண்ணீர் ப்ரவஹிக்கிற படி காண் -பிராட்டியும் சர்வேஸ்வரனும் சம்ச்லேஷத்தில் ஆரம்பிக்க -ஸ்ரீ பூமிப் பிராட்டி அது கண்டு பொறுக்க மாட்டாமை-அழுகிறாள்  காண் என்று-
அவன் குறித்து போன கார்காலம் வந்து வர்ஷிக்க அத்தை மயக்குகிறாள் தோழி
அவளோடு அவன் கலந்தபோது அவயவியோடு கலந்தால் போலே இவர்கள் இருக்கவும் -இவர்களோடு கலந்த போது தன்னுடைய ஸ்தன பாஹூ  திருஷ்டிகள் உடன் கலந்தால் போலே அவள் நினைத்து இருக்கவும் –
இப்படி இவர்களுடைய ஸ்வரூபமாய்
அபரிச்சின்ன விஷயம் ஆகையாலே –
எல்லாரும் கூடி அனுபவிக்க வேண்டி இருக்க -இருவருக்கும் பாத்தம் போராதே
ஷூத்தர விஷயங்களில் உண்டான சாபத்ன்யம் இவ்விஷயத்தில் உண்டாக சொல்லுமது
உபபநநாம்படி எங்கனே என்ன –
இச் சோத்யத்துக்கு முன்புள்ள முதலிகள்    -தானும் அவளுமான போகத்துக்கு நாம் ஸ்ரக் சந்தனாதிகளோ பாதியாய் இருக்க  என்ன அநாதரித்து போவதே    என்று இன்னாதாய் அழுகிறாள் -என்று பரிகரித்தார்கள் –
இத்தை ஆளவந்தார் கேட்டருளி –
வடிவிணை இல்லா மலர் மகளை இந்நீர் நடுங்க நடுங்கும்படி கடலிலே கொடு போவதே -படுக்கையாக நான் கிடக்க செய்தே -என்று ஸ்ரீ பூமிப் பிராட்டி அழுகிறாள் காண் -என்று அருளி செய்தார்-
இத்தை  ஸ்ரீ பட்டர் -கேட்டருளி -இது   எல்லாம் வேண்டாம் காண்-
அனுபபன்னமாய் இருப்பதோர் அர்த்தத்தை சொல்லவே -இது எங்கனே கூடும்படி என்று
தலைமகள் நெஞ்சிலே படும் –அவள் விசாரித்து நிர்ணயிக்கும் காட்டில் அவன் வந்து கொடு நிற்கும் -என்னும் விஸ்ரம்பத்தாலே சொன்னார்களாக அமையும் காண் -என்று அருளி செய்தார்-
—————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: