திரு விருத்தம் -51-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
இவன் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு பாதகம்
ஆகிற படியை சொல்கிறது -பதினாலாண்டு கூடிப் போன வழியை ஒரு பகலே வாரா
நிற்க செய்தே -க்ரம ப்ராப்தி பற்றாமை நடுவே திருவடியை வரக் காட்டினார் இறே-
அப்படியே இங்கு ஓர் ஆள் வராவிட்டால் கண்டதெல்லாம் பாதகமாம் இறே –
சங்கத்யாத் பரத ஸ்ரீ மான் ராஜ்யே நார்த்தீ ஸ்வயம் பவேத் -ஐயர்நியமிக்க -ஆச்சி உடைய வர வ்யாஜத்தாலே -நாம் ராஜ்யத்தை தனக்கே கொடுத்து போரச் செய்தேயும் –
நம்மை பின் தொடர்ந்து வந்து -சொன்ன நாள் எல்லை கழிந்தால் -பின்னை ஒரு ஷணம் நான்-தாழ்க்கில் தன்னை கிடையாது -என்னும்படி நம் நெஞ்சிலே படுத்திப் போனான் -இன்று நாம் சென்று-கிட்டினால் பதினாலாண்டு பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே -நீ முடி சூடு என்றால் -அல்லேன் -என்னாதே -அத்தை இசையப் பெறுவது காண்-ஐயர் நம்மை முடி சூட்டப் பாரித்து பெறாதே ஒழிந்த இழவு -நாம் பிள்ளையை-முடி சூட்டிக்  கண்டு தீரப் பெறுவது காண் –
சநைர் ஜகாம சாபேஷ -என்கிறத்தை சாவேஷ -என்று திருத்தி -கீழ் விழியாலே பார்த்து போனார்-என்று பொருள் சொன்னபடியை -பட்டர் கேட்டருளி -அது வேண்டா காண் -கிடந்த பாடம் தனக்கே-பொருள் சொல்லலாம் காண் என்று -இவ் உபகரணங்களைக் கொண்டு நாம் பிள்ளையை முடி சூட்டிக்-காணப் பெற்றிலோம் என்னும் அபேஷையோடே போனார் என்கிறது காண் -என்று அருளி செய்தார் –
அத்தலை மகன் வந்து கிட்டுவதற்கு முன்னே இறே

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
அலை  கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –

பாசுரம் -51-மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய -கடலோசைக்கு ஆற்றாத தலைவி இரங்கல் –நண்ணாதார் முறுவலிப்ப -4-9-
-மலை கொண்டு மத்தா –
அசல -பதார்த்தத்தை ஸ்வ புத்ய அதீனமாக திரியும்படி பண்ணினான் –
அரவால் -அதி மிதுனமான வாசுகியை கயிறாக கொண்டான்-சுழற்றிய-வைத்த நேர்ப்பம் இருந்த படி -அமிர்தம் எழும் அளவும் செல்லத் தானே திரியும் படி –
குசவன் திரிகை ஒருகால் திரித்து விட்டால் சிறிது போது திரியுமா போலே –
சர்வ சக்தி திரித்தது ஆகையாலே கார்யம் முடியும் தனையும் திரிந்தது –
இத்தால் சகல பதார்த்தங்களின் உடைய பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஸ்வ புத்தி அதீனம் என்றபடி –
மாயப்பிரான் –
ஆஸ்ரிதமான குண சேஷ்டிதங்கள்  உடையவன்-மாயிரும்குன்றம் –பெரிய திருமொழி -5-7-4-இத்யாதி -சாத்தின திருமாலையும் பரி வட்டமும் அலைய நின்று  கடைந்த படி
பிரான் -எனக்கு அவ்வடிவு அழகை  உபகரித்த உபகாரகன் -இவருடைய அம்ருதம் இருந்த படி

அலை கண்டு இத்யாதி –
தன்னை கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி நெஞ்சிலே மந்தரத்தை நட்டு உலக்கையை-விடு நகம் கட்டி நல ஜீவனை வாங்கிக் கொண்டவன் பாடு சென்று அத்தை மீட்டுக் கொள்ள மாட்டாது -கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து –நாச்சியார் திருமொழி -10-9-என்கிற அவன் பாடு போக மாட்டாது

பரதர் இத்யாதி –
வளை விற்கும் செட்டிகள் பக்கலிலே விலைக்கு  கொண்ட சங்கங்களை வாங்கிக் கொள்ள பாரா நின்றது –
நாங்கள் தன்பாடே சென்றோமோ
தன்னை நெருக்கி கொண்டோமோ
வேரித் துழாய் துணையா –
நறு நாற்றத்தை உடைய திருத் துழா யை தனக்கு கூட்டுப் படையாக கொண்டு –
அங்கு நின்று மிலை யமுது கொண்டு வந்து காணும் நலிகிறது –
சக்கரவர்த்தி  திருமகனை அண்டை கொண்டு மகாராஜர் வாலியை அறை கூவினால் போலே-திருத் துழையை அண்டை கொண்டு நலியத் தொடங்கிற்று –

தேன நாதேன மகதா
மகதா -மகாராஜர் மிடற்றில் தசைப் புக்கு உரம் உண்டு என்று தோற்றும்படி இருக்கை –
நிர்ஜகாம -புறப்பட்டான் -பண்டு சிலர் அறை கூவ இருந்து அறியாதவன் –
அநுமான்ய-
ஆண்களோடு கலக்க வேண்டாவோ என்றான் –
ததா-சர்வ ஸ்வஹரணம் பண்ணினாலும் புறப்பட ஒண்ணாத அவஸ்த்தை –
பர்த்தாரம் பரிஷச்யஜே -உக்காசைப் பட்டு இருக்குமே அவள்
துலை கொண்டு
தானும் ஒரு துலை இட்டுக் கொண்டு
தாயம் இத்யாதி –
தாயம் -ஞாதிகள் நாலைந்து க்ரயம் சென்று போனத்தை-எங்களது என்று தொடருவாரைப்  போலே  -சங்கு களுக்கு  உத்பத்தி ஸ்தானம் தன பக்கலிலே ஆகையாலே -சஜாதீயம் -என்று தொடரா நின்றது –
அழைக்கின்றதே –
கார்யப்பாட்டால் கூப்பிடா நின்றது –
வழிப்பறிக்காரர் அழைக்குமா போலே -ஒரு சர்வ சக்தி தன் தோள் வலியாலே உலக்கையை விடு நகம்-கட்டி தன் பக்கல் உள்ளது கொண்டு அன்று அங்கு ஒரு குரல் கூப்பிட மாற்று இட்டு இல்லை -அபலை என்று பற்றி நலிய தொடங்கிற்று

நிச்வசஞ் சக்ரவாகாநாம்  -பிரிவிலே ஆகையாலே அவற்றின் பேச்சு அசஹ்யமான    படி–சஹசாரணாம்-பூர்வா அவஸ்தையில் அவற்றைப் போலே அக்தே தாமும்-புண்டரீக விசாலாட்ஷி-வேல் போலே அவற்றின் சப்தம் -செவி வழியே குளிக்கப் புக்கவாறே வெளுக்க விழித்த-விழி இருந்தபடி -கதேமேஷா பவிஷ்யதி –

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: