திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-3-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

எளிவரும் இயல்வினன் நிலைவரம்பு இலபல பிறப்பாய்
ஒளிவரும் முழுநலம் முதல்இல கேடுஇல வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரு மருளினோடு அகத்தனன்புறத்தனன் அமைந்தே.

    பொ-ரை : இறைவன், குளிர்ந்த பக்குவமான திருவகுளோடே அடியார்கட்கு அகத்தனனாயும் அல்லாதார்க்குப் புறத்தனனாயும்சமைந்து, முதல் இல்லாதனவும் கேடு இல்லாதனவும் ஒளிவளரப்பெறுவனவும் ஆன நற்குணங்களையுடையவனாய், வீடாகிய தெளிந்த உலகத்தினைக் கொடுக்குந் தன்மை எக்காலத்தும் நீங்காதவனாய், ஒரு நிலையும் ஒரு நியதியும் இல்லாத பல பிறவிகளையுடையவனாய், எளிமை வருதலை இயல்பாகவுடையவன் என்பதாம்.

வி-கு : ‘முதல் இல, கேடு இல’ என்பன, நலத்திற்கு அடைமொழி. இறையோன் என்பதற்கு ஐந்தாம் பாட்டின் விசேடக்குறிப்பில் எழுதியதை நினைவு கூர்க. ‘நிலைமையது’ என்பதில் ‘அது’ பகுதிப் பொருள் விகுதி. ‘அமைந்து’ என்னும் எச்சத்தை ‘எளிவரும்’ என்பதில் உள்ள வரும் என்னும் வினையுடன் முடிக்க.

ஈடு :
 இரண்டாம் பாட்டு ‘எத்திறம்’ என்ற ஆழ்வார் ஆறு மாதம் மோஹித்துக் கிடந்தார் என்பது பிரசித்தம் அன்றோ? இவர் மோஹித்துக் கிடக்க, 1பெருமாளும் பிராட்டியும் பள்ளி கொண்டருளின இடத்தை ஸ்ரீ குகப்பெருமாள்நோக்கிக்கொண்டு கிடந்தாற்போன்று, ஸ்ரீ மதுரகவி முதலான பெரியோர் அனைவரும் பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைக்கூட்டங்கள் மொய்த்துக் கொண்டு கிடக்குமாறு போன்று, இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள். பெருமாளும் பிராட்டியும் துயின்று இடத்தை நோக்கி இருந்த ஸ்ரீகுகப்பெருமாள் பசியர்க்குத் தாந்தாம் உண்ணும் உணவினைப் பகுந்து இடுவாரைப் போன்று, அங்கு வந்த ஸ்ரீ பரதாழ்வானுக்குத் தாம் நோக்கிக்கொண்டிருந்த இடத்தைகாட்ட, அவ்விடத்தைக் கண்டவாறே 2‘தொட்டால் முடிந்துவிடுவானோ!’ என்று சத்துருக்கனன் எண்ணும்படி 1மோஹித்துக் கீழே வீழுந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று, மோஹித்துக் கிடந்த இவர், 2விசாலமான கண்களையுடைய பிராட்டி பல நாழிகைகள் கழித்து மூர்ச்சை தெளிந்து, பின்னர்ச் சிந்தித்தாள்,’ என்பது போன்று பெரியோர்களுடைய நல்வினைப்பயனால் காலம் உணர்த்த உணர்ந்து, ‘நான் இங்குச் சொல்லியது என்?’ என்று கேட்டார். ‘ஆயின், அங்கு அனுபவிக்கும் பெரியோர் உளரோ?’ எனின், அது 3‘நல்லார் நவில் குருகூர்’ அன்றே? ஆதலால், அங்குள்ள பெரியோர் அனைவரும் இவரைப் பற்றிப் 4படுகாடு கிடந்தனர். கேட்டதற்குப் ‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ என்று கூறி, அதனை விளக்குவதற்கு அதன் தொடர்ச்சியாக ‘மத்துறு கடைவெண்ணெய்’ என்பது முதலாகச் சிலவற்றைக் கூறி, ‘எத்திறம்’ என்று மோஹித்துக் கிடந்தீர், என்றார்கள், 5‘தப்பச்செய்தோம்; அழித்துச் சூளுறவு செய்ய வேண்டும்,’ என்கிறார் இரண்டாம்பாட்டில். அதாவது, பிறர்க்கு உபதேசம் பண்ணப்புக்குத் தாம் அனுபவித்தார் முதற்பாட்டில்; இப்பாட்டுத் தொடங்கிப் பிறர்க்கு உபதேசம் செய்கிறார் என்றபடி. மேல்பாட்டில் கூறிய எளிமையினை வகைப்படுத்தி அருளிச் செய்கிறார் இப்பாட்டில்.

எனிவரும் இயல்வினன் – எளிமையை இயல்பாகவுடையவன். ‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ என்றார் மேல்; தன்னிடத்து அன்புடையார் மாட்டுத் தானும் அன்புள்ளவனாய் இருத்தல் ஒரு குணம் அன்று ஆதலின், அதனை மறுத்து, ஈண்டு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார். எல்லார்க்கும் ஒவ்வொரு காலத்தில் எளிமை கூடும்; இவனுக்கு எளிமை சொரூபம் என்பதனைத் தெரிவிப்பதற்கு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார் என்றபடி. நிலை

5. ‘தப்பச்செய்தோம்,’ என்றது, பிறர்க்கு உபதேசம் செய்யப் புருந்தவர், அது
செய்யாது! தாமே அனுபவித்தது.வரம்பு இல – இன்ன அவதாரம் இன்ன செயல் என்பது இல்லை; ‘நிலை இல, வரம்பு இல’ என ‘இல’ என்பதனை ‘நிலை’ என்பதுடனும் கூட்டுக. இனி, பட்டர் இவ்விரு பொருளையும் ‘நிலை இல’ என்பதன் பொருளாகவே கொண்டு, ‘வரம்பு இல’ என்பதற்கு, வேறு பொருள் அருளிச்செய்வர். அதாவது, ‘அவதரித்து எளியனாய் நின்ற நிலை தன்னிலே பரத்துவம் தோற்ற நிற்கிலும் நிற்கும்,’ என்று. தேர்ப்பாகனாய்த் தாழ் நிற்கச்செய்தே 1ஸ்ரீவிஸ்வரூபத்தைக் காட்டியும், தான் புத்திரப் பேற்றின்பொருட்டுப் போகாநிற்கச்செய்தே கண்டாகர்ணனுக்கு மோக்ஷத்தைக் கொடுத்தும், ஏழு வயதிலே கோவர்த்தன மலையைத் தரித்துக்கொண்டு நின்றும் செய்தவை. இத்தாற்பெறப்படுவது, ‘ஒன்றிலும் ஒரு நியதி இன்று; காப்பதற்கு உறுப்பாம் அத்தனையே வேண்டுவது; ஏதேனுமாக அமையும் இவனுக்கு,’ என்கை.

பல பிறப்பாய்-தெளிவுடைய தான் சொல்லும் போதும் 2‘பல பிறவி’ என்பன்; உண்மையினைக் கூறும் வேதங்கள் கூறும்போதும் 3பல வேறுபட்ட சாதிகளில் பிறக்கிறான்’ என்று கூறும்; அவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லுவார்,4‘பல பிறப்பு’ என்பர். பிறருக்காகத் தாழ நின்றோம் என்ற நினைவு சிறிதும் இன்றி, அவ்வப் பிறவியின் தன்மைக்குத் தக்கவாறு இருந்தான் ஆதலின், ‘பிறந்து’ என்னாது ‘பிறவியாய்’ என்கிறார். ‘ஆயின், பரத்துவ நினைவு சிறிதும் இன்றி இருந்தான் என்பதனை நாம் அறியுமாறு யாங்ஙனம்?’ எனின், 5‘என்னை நான் மனிதனாகவே நினைக்கின்றேன்;’ என்ற ஸ்ரீ ராமன் வார்த்தையாலும், 6நான் உங்கட்குச் சுற்றத்தவனாய்ப் பிறந்திருக்கிறேன்,’ என்ற ஸ்ரீகிருஷ்ணன் வார்த்தையாலும் அறிதல் தகும். ஒளிவரும் முழுநலம்-நீங்கின தீவினைகளையுடைத்தாய் இருத்தல்முதலிய தன்மைகள் உயிர்கட்கு இருப்பினும், பிறவிகள் காரணமாக அவற்றிற்கு மறத்தல் முதலிய தன்மைகளும் இன்பத்துன்பங்களும் உளவாம்; இறைவன் தன்னைத் தாழ விட்டுப் பிறக்கப் பிறக்க, நற்குணங்கள் ஒளி பெற்று வாராநிற்கும். ‘ஆயின், இருவர்க்கும் பிறவி ஒத்து இருக்க, இறைவனுக்கு நற்குணங்கள் ஒளி பெறுகைக்குக் காரணம் யாது?’ எனின், 1‘அவன் பிறந்தவனாய் நன்மையுடையவனாகவே இருக்கின்றான்,’ என்கிறபடியே, கர்மம் காரணமாகப் பிறக்கும் பிறவியாய் இருப்பின், பிறக்கப் பிறக்கப் புகர் அழியும்; திருவருள் காரணமாக வருகிற பிறவி ஆகையாலே புகர் பெற்று வாராநிற்கும். அவ்விறைவனே புகழையுடையான் என்றபடி.

‘அக்குணங்கள்தாம் இருக்கும்படி என்?’ என்னில், முதல் இல கேடு இல-ஒரு நாள் வரையிலே தோன்றி ஒரு நாள் வரையிலே முடியுமவை அல்ல; சொரூபத்தோடு சேர்ந்தவைகளாய் இருக்கின்றன. வீடாம் தெளிதரும் நிலைமையது, மோக்ஷமாகிற தெளிவு; பரமபதம். அதனைத் தரும் தன்மை என்றும் ஒத்திருக்குமவன். அவன் இங்கே வந்து அவதரிக்கிலும் சோக மோஹங்களைப் பண்ணும் இவ்விடம்; இவன் அங்கே செல்லினும் தெளிவைப் பண்ணும் அவ்விடம்; ஆதலால், ‘வீடாம் தெளி’ என்கிறார். 2‘தெளி விசும்பு’ என்பர் மேலும். ‘ஆயின், இக்குணம் ‘ஒளிவரும் முழுநலம்’ என்றதிற்புகாதோ?’ எனின், மோக்ஷத்தை அளிக்கும் இறைமைக்குணம் தனியே சொல்ல வேண்டுவது ஒரு குணம் ஆகையாலே சொல்லுகிறார்; மேலும், அவதாரத்துக்குப் பயன் இதுவே அன்றோ? முழுவதும் ஒழிவிலன்-மேலே கூறிய 3இரண்டனையுங் கூட்டிச் சொல்லுகிறார். இறையோன்-மேல் ‘வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன்’ என்றார்; அவ்வீட்டினை அளித்தல் ஈஸ்வரனுக்கே உள்ளது ஒன்று ஆதலின், அதனைத் தெரிவிக்கும்பொருட்டு அதனை அடுத்து ‘இறையோன்’ என்கிறார். இனி, மேல் ‘பல பிறப்பாய்’ என்றாராதலின், அவ்வாறு பிறப்பினும், ஈஸ்வரத் தன்மையில் குறையாதே நிற்பான்என்பதனைத் தெரிவிக்கும்பொருட்டு ‘இறையோன்’ என்கிறார் என்னலும் ஆம். அளிவரும் அருளினோடு – குளிர்ந்து பக்குவமான அருளோடே. இனி, இதற்கு, ‘அருளால் வரும் அருளோடே’ என்று பொருள் கூறி, ‘அருளால் வரும் அருளாவது, காரணம் இன்றியே செய்யும் திருவருள்,’ என்று கூறலுமாம். அகத்தனன் – அடியார்கட்குக் கழுத்திலே ஓலை கட்டித் ‘தூது போ’ என்னலாம்படி இருப்பான். புறத்தனன் – அடியார் அல்லாதவருக்கு அந்நிலை தன்னிலே கிட்ட ஒண்ணாதபடி இருப்பான். அமைந்து – இப்படிச் சமைந்து.

‘இறையோன், அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனனாய் அமைந்து, முதல் இல கேடு இலவாம் ஒளிவரும் முழுநலம், வீடாம் தெளிதரு நிலைமையது முழுவதும் ஒழிவிலனாய், நிலை வரம்பில் பல பிறப்பாய், எளிவரும் இயல்வினன்’ எனச்சொற்களைக் கூட்டிப் பொருள் முடிவு காண்க.

மோஹித்து இருந்தது பிரசித்தம் இரே
பலிதமான வர்ஷம் பஷிகள் மொய்த்து -கிடைக்குமா போல் – பார்த்து கொண்டு இருப்பது போல்
மதுர கவி பிரக்ருதிகள் சத் ஜனங்கள் நல்லார் நவில் குருகூர்
ஸ்ருங்கி பேர புரம்-பெருமாளும் பிராட்டிகுகன் நோக்கி கிடந்தது போல் –
சாபரணா-பிராட்டி ஆபரணங்கள் சூட்டி கொண்டு
வழி நடந்த விடாயால் கழற்றாமல் சயனிக்க –
தங்க துகள் விழுந்து கிடக்க
சப்தனாக சத்ருணன் -மோகித்து கிடந்தான் பரத ஆழ்வான்
குகன் அந்த இடம் காட்ட
மோகிதவள் காலம்  உணர்த்த உணர்ந்தது போல் -சுந்தர காண்டத்தில் திருவடியால்
ஸ்ரீ ராமாயணம் கேட்டு
அனுபவம் செய்பவர் பாக்யத்தால்  -நல்லார் நவில் குருகூர்
உணர்ந்த அநந்தரம் -எத்தை
சிலவற்றை சொல்ல -பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிரசக்த அநு பிரசக்தமாக சில அருளி
வெண்ணெய் களவு
பாட்டை முடிய சொல்லில் மீளவும் மோகித்து
தப்பை சொன்னோம்
அழுத்தி பிரதிக்ஜை செய்ய வேண்டும்
பர உபதேசம் இழிந்ததை விட்டு சுய அனுபவம் செய்தேன் மோகித்தேன்
எளிவரும் இயல்விணன் –
ச்நேகிகளுக்கு ச்நேகயாய் இருப்பது குற்றம் அன்றோ பெரிய விஷயம் இல்லை
பத்துடை அடியவர்க்கு எளியவன் சொன்னது தப்பு
பர உபதேசம் இங்கே காட்டுவது சரி இல்லை
எப்போதும் எளியவன்  –
சொபாதிகம் இல்லை ஜலத்துக்கு -குளிர்மை ஸ்வாபம் போல் எளிமை இவனுக்கு ஸ்வாபம்
பக்தி காரணம் கொண்டு எளிமை இல்லை
எளிவரும் இயல்வினன் -என்கிறார் இதில் -இதனால் அழித்து பிரதிக்ஜை செய்கிறார்
இதுவும் பர உபதேசம் -முதல் பாசுரம் தான் அனுபவித்தார்
எளிமை எங்கே காட்டினான்
நிலை இல்லாமல் வரம்பு இல்லாமல் பல பல பிறவிகளில்
பிறக்கும் பொழுதும் ஒளி வரும் முழு நலம் தேஜஸ் கூடி கொண்டே ஆனந்தம் மிக்கு
ஆரம்பம் இல்லை முதல் இல்லை கேடு இல்லை முடிவும் இல்லை
தெளி தரும் ஞானம் மலர வைக்கும்
இதை தருவதில் -வீடு கொடுப்பதில் –
முழுவதும் ஒழிவிலன் இறையோன்
அளிவரும் அருள் குளிர்ச்சி
அகத்தனன் அடியார்வர்களுக்கு
புறத்தனன் மற்றவர்களுக்கு
மோஷ பிரதத்வம்செய்கிறான்
வீடாம் –
சந்தர காந்த ஆனனம் ராமம்
சமாசம் -சந்தரனை காட்டிலும் தத் புருஷ சமாசம் தப்ப சொன்னோம்
அதீவ பிரிய தர்சனம்
பகுனி -நிறைய அவதாரங்கள் –
வேதம் பகுதா விஜாயதே
என் நின்ற யோனியுமாய் இறந்தாய் –
பல பிறப்பாய்
காதா சித்தம் இல்லை எளிமை
நிலை வரம்பு
இன்ன அவதாரம் இன்ன செஷ்டிதம் எனபது இல்லை -பூர்வர் நிர்வாகம்
பட்டர் இரண்டையும் நிலை இன்றி ஆக கொண்டு வரம்பு ஒன்றிலும் நியதி இல்லை
ரஷனத்துக்கு உறுப்பாக அனைத்தையும் செய்வான்
எளியனாக இருந்து அவதரித்தாலும் பரத்வம்தொன்ற -வரம்பு இன்றி இருந்தானே
சாரத்தியம்-விஸ்வரூபம்
கண்டாகர்ணன் மோட்ஷம் -ருத்ரன் இடம் பிள்ளை பிராத்திக்க போகும் பொழுது –
அவன் கேட்ட வரம் நிறைவேற்ற போனான்
ஏழு திரு நஷத்தரத்தில் கோவர்த்தனம்
வாயுள் வையகம் கண்ட மட நல்லாள்
அப்பூச்சி காட்டுகின்றான் இடையர் பிள்ளைகளுக்கு
பல பிறப்பாய் -அவதாரம் எண்ணிக்கை இல்லையே
தானே பகுனி சர்வக்ஜன் சொல்லி கொள்கிறான்
வதமும் பகுதா விஜாயதே
அவன் கொடுத்த அறிவு கொண்டு பல பிறப்பாய் -என் நின்ற யோனியுமாய் பிறந்தாய்
பிறப்பாய் -பரார்தமாக தாழா நின்றோம் -என்று தன் பக்கலில் புரை இன்றி -ஆய சப்தம் –
மனசில் ஆசை உடன் பிறந்தான் -வேண்டி தேவர் இறக்க
ஆத்மாநாம் மானுஷம் மன்யே -நினைத்து இருக்கிறேன் அர்த்தம் இல்லை -பகு மன்யே மதித்து கொண்டு
பேரு மகிழ்ச்சி அடைகிறேன்
அஹம் வோ பாந்தக ஜாதக -தேவவா தாபவோவா யஷவா கந்தர்வாவ
நானும் இடையன் -ஆய -அர்த்தம் அதுவாகவே ஆகி விட்டான்
மானமில்லா பன்றியாய் –
ஒளி வரும் முழு நலம்
அபக்த பாப்மா விஜுரா -சத்யா சங்கல்ப எட்டு குணங்களும் ஜீவாத்மாவுக்கும் உண்டே
நிஷ்க்ரிஷ்ட -ஜீவனுக்கு சரீரம் விட்ட பின் பே
பாப சம்பந்தம் -ஜன்ம நிபந்தனமான -விகாரதிகள்
சர்வேஸ்வரன் -கல்யாண குணங்கள் புகர் பெற்று வாரா நிற்கும்
-சாணை இட்ட மாணிக்கம் போல் தேஜஸ் மிக்கு
கர்ம நிபந்தம் இன்றி அனுக்ரகம் அடியாக வரும் ஜன்மம்
சகா உ -ஏவா-காரம் ஸ்ரேயான் பவதி -அவன் மட்டுமே ஸ்ரேயஸ் அடைகிறான்
சகாஸ்ரேயான்  உ -ஸ்ரேயஸ் மட்டுமே அடைகிறான்
அடைந்தே தீருகிறான் உகாரம் எங்கும் கொண்டு
முதல் இல கேடு இல முழு நலம்
ஸ்வரூபத்தில் அந்தர்கதமாக உள்ளன
வீடுக்கும் கொள்ளலாம் இதை
வீடாம்
ஒளி வரும் முழு நலம் -தனியாக சொல்ல வேண்டுமா
மோஷ பரதத்வம்
ஜகத் உத்பவ  ஸ்திதி பிரநாசம் சொல்லி ஆள வந்தார் முத் தொழில் -சம்சார விமோசனம்
நான்கு தொழில்
அகில புவன ஜன்ம –ஆதி சப்தம் -வினத பூத ரசஹை தீஷிதன் எம்பெருமானார் ராஷை மோஷ பிரதத்வம்
மொஷமாகிய தெளிவி -அதை கொடுக்க நலுவாதவன்
தெளிவை தர பரம பதம்
முட்டாளான நமக்கு தெளிவி கிட்டுமே அங்கெ
புத்தி சாலி அவன் இங்கு வந்து அவதரிகினும் சோக மோகம் தரும்
இருள் தரும் மா ஞாலம் இது
தெருள் தரும் வீடு அது
அதை தரும் தன்மையில் -நீங்காத
முழுவதும் ஒழிவிலன்
கீழ் சொன்ன இரண்டையும் கூட்டி சொல்கிறார்
அவதாரம் -செய்யும் பொழுதும் மோஷம் கொடுத்து அருளினாரே
மோஷ பரதத்வ குணம் -விடாதே கூடி வந்து அவதரிக்கும்
இறையோன் -அவன் ஒருவனுக்கே மோஷ பரதத்வம்
அஜோபிசன் -அவ்வைய ஆத்மா நியாம்யர் நடிவில் நியாமகத்வம் குறையாமல் பிறக்கிறான்
அவதரிக்கும் பொழுது ஈச்வரத்வம் குறையாமல்
குளிர்ந்த அருள்
ஆஸ்ரிதர்க்கு கழுத்தில் ஓலை கட்டி
அகத்தனன் யசோதாதிகள்
துரி யோதனன் -புறத்தவர் -கிட்ட ஒண்ணாதே
அமைந்தே -இப்படி சமைந்து இருப்பான்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: