திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-2-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

எண்பெருக்கு அந்நலத்து, ஒண்பொருள் ஈறுஇல
வண்புகழ் நாரணன், திண்கழல் சேரே.

     பொ-ரை : எண்ணாலே மிக்கு இருப்பனவாய் [மிகப்பலவாய்] ஞானத்திற்கு நிலைக்களமாய் ஞானமயமாய் அழிவு அற்றனவாய் இருக்கிற உயிர்களையும், அழிவு அற்ற வளவிய புகழ்களையுமுடைய நாராயணனது உறுதியான திருவடிகளைச் சேர்வாய்.

 வி-கு : ‘ஈறில’ என்பதனை ஒண்பொருளுக்கும் கூட்டுக. உயிர்கள் பல என்பதும், அழிவற்றவை என்பதும், பரந்தமிழ்ப் பெருமக்களுடைய கொள்கை. ‘மன்னுயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்’ என்ற புறநானூற்றுப் பகுதியையும், ‘மன்னுயிர் எல்லாந் தொழும்’ என்ற திருக்குறளையும் காண்க. ‘ஈறில வண்புகழ் நாரணன்’ என்ற இடத்து ‘மன்பெருஞ் சிறப்பின், தாவா விழுப்புகழ் மாயோன்’ என்ற தொல்காப்பியம் ஒப்பு நோக்குதல் தகும்.

ஈடு : பத்தாம் பாட்டு. ‘அழகிது; அப்படியே செய்கிறோம்; வழிபாடு இயற்றுதற்குப் பற்றுக்கோடான மந்திரம் யாது?’ என்ன, அது இன்னது என்றும், அதனுடைய பொருள் நினைத்தற்கு உரியது என்றும் அருளிச்செய்கிறார். ‘ஆயின், மந்திரம் மாத்திரம் அமையாதோ? அர்த்தமும் அருளிச்செய்ய வேண்டுமோ?’ எனின், இம்மந்திரத்தைப் புறம்புள்ளார் ஜபம் ஹோமம் முதலியவைகளாலே காரியங்கொள்ளாநிற்பர்; நம் ஆசாரியர்கள், ‘ஆத்தும சொரூபம் இன்னபடி என்பதற்கு ஏற்றதாயுள்ள இதனுடைய பொருள் நினைவு மோக்ஷத்திற்குச் சாதனம்’ என்று தாங்களும் நினைந்து, தங்களைக் கிட்டினார்க்கும் உபதேசித்துக்கொண்டு போந்தார்கள். மற்றும் வேதங்களுக்கும் இவ்வாழ்வார்க்கும் இம்மந்திரம் சொல்லச் சமயம் வாய்த்த போது முன்னர் மந்திரத்தைச் சொல்லி, பின்னர் அர்த்தத்தைச் சொல்லுதல்; அன்றி முன்னர் அர்த்தத்தைச் சொல்லி, பின்னர் மந்திரத்தைச் சொல்லுதல் செய்யக் கடவது ஒரு நிர்ப்பந்தம் உண்டாய் இருக்கும்; அதற்குக் காரணம், பொருளின் நினைவு இன்றியமையாதது ஆகையாலே. 1‘யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன்,’ 2‘நாரணன் மூவேழ் உலகுக்கும் நாதன்’ என்பன தமிழ் மறை. 3‘உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்,’ 4‘பரஞ்சோதியும் நாராயணனே; பரமாத்துமாவும் நாராயணனே,’ என்பன வடமொழி மறை.

இத்திருப்பாசுரத்தால் திருமந்திரத்தை அர்த்தத்தோடு அருளிச் செய்கிறார். 5ஆழ்வான் இப்பாட்டளவும் வரப்பணித்து இப்பாட்டு

5. இது, இத்திருப்பாசுரம் திருமந்திரத்தின் பொருள் என்பதற்கும் மந்திரத்தின்
பொருள் ஆசாரியன்பால் கேட்டல் வேண்டும் என்பதற்கும் ஐதிஹ்யம் ஆம்.
ஆழ்வான், கூரத்தாழ்வார். பட்டர், சீராமப்பிள்ளை இவ்விருவரும்
ஆழ்வாருடைய திருக்குமாரர்கள். ஆழ்வாருடைய முந்தின வார்த்தை,
கௌரவத்திலே நோக்கு; பிந்தின வார்த்தை, இனிமையிலே நோக்கு.

வந்தவாறே ‘இத்தையும் உங்கள் ஆசிரியர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள்,’ என்ன, பட்டரும் சீராமப் பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து, ‘இன்ன போது இன்னார் இருப்பார்; இன்னார் போவார் என்று தெரியாது; இருந்து கேளுங்கோள்,’ என்று திருமந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டைக் கூறி, ‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கோள்,’ என்று பணித்தார்.

‘எண்பெருக்கு’ என்கிற இதனால், உயிர்களின் பன்மையினைச் சொல்லுகிறார். ‘நலத்து’ என்கிற இதனால், இவ்வுயிர்கள்தாம் ஞானத்திற்குப் பற்றுக்கோடாகவும் இருக்கும் என்பதனைத் தெரிவிக்கிறார். ‘ஒண்பொருள்’ என்கிற இதனால், உயிர்கள் ஞானமயமாகவும் இருக்கும் என்பதனை அருளிச்செய்கிறார். 1பிரணவத்தில் மூன்றாம் பதமான மகாரத்தாலே, ‘ஞானத்திற்குப் பற்றுக்கோடாகவும் ஞானமயமாகவும் இருக்கும் உயிர்கள்’ என்று கூறப்பட்டிருத்தல் இங்கு அறிதல் தகும். ‘ஆயின், உயிரின் தன்மையினைத் தெரிவிப்பதற்கு ‘நலம், ஒண்மை’ என்னும் இவ்விரண்டுள் ஒன்றே அமையாதோ?’ எனின், உடலானது அறிவின்மைக்கு நிலைக்களமாய் இருத்தலின் பிறபொருளை அறியும் ஆற்றல் இல்லாததாயும், அறிவின் மயமாக இல்லாததனால் தன்னை அறியும் ஆற்றல் இல்லாததாயும் இருக்கும்; உயிர் அவ்வாறு அன்றி, அறிவிற்குப் பற்றுக்கோடாய் இருத்தலின், தன்னையும் பிறபொருளையும் அறிகின்றதாயும்; அறிவின் மயமாக இருத்தலின், தன்னை அறிகின்றதாயும் இருக்கும் என்று இரண்டனுடைய வேற்றுமையினைத் தெரிவிப்பதற்கு இரண்டு அடை மொழிகளைக் கொடுத்து ஓதினார் என்க.

‘ஈறு இல’ என்பதனை ‘ஈறு இலவான ஒண்பொருள்’ என்றும், ‘ஈறு இலவான வண்புகழ்’ என்றும் தனித்தனியே கூட்டுக. ஈறு இலவான ஒண்பொருளையும், ஈறு இலவான வண்புகழையும் உடையன் ஆதலே ‘நாராயணன்’ என்ற சொற்குப் பொருளாம். ‘ஒண்பொருள் ஈறு இல வண்புகழ்’ என்பது எடுத்துக்காட்டு

உவமை; ‘தேவரீருடைய குணங்கள் அன்றோ எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றன?’ என்கிறபடியே, இறைவனுடைய நற்குணங்களைப் போன்று, இவ்வுயிர்களும் நித்தியமுமாய்ப் பிரகாரமுமாய் இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி. ஆக, நித்தியரான 2மூவகைப்பட்ட சேதனரையும், நித்தியமான கல்யாண குணங்களையும் உடையவன் நாராயணன் என்பதாயிற்று. திண்கழல் சேர் – அடியார்களை ஒருகாலும் விட்டுக்கொடாத திண்மையைப் பற்றத் ‘திண்கழல்’ என்கிறார்: ‘இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தம் ஒரு காலத்தில் வந்தது அன்று; என்றும் உள்ளது ஒன்று,’ என்னும் ஞானமுடையாரை ஒரு நாளும் விடான் அன்றே! சேர் – அடைவாய். 3உன்னுடையதாய், உனக்கு வகுத்ததாய் இருந்த பின்பு நீ கடுக உட்கொள்: ‘நம:’ என்றபடி.

இறை பொதுவான சொல்லாக அருளி இது வரை

இனி திரு மந்த்ரம் சொல்லி
பஜனத்துக்கு ஆலம்பமான மந்த்ரம் இன்னது அர்த்தம் அனுசந்தேயம் சொல்கிறார்
இது தன்னை -புறம்புள்ளார்- ஜபம் ஹோமம்
காமம் ஐஸ்வர்யம் பிரயோஜனான்தரம் -உபாசகர் கார்யம் கொள்ளுவார்கள்
வேறு சாதனமும் கூடாது வேறு பிரயோஜனமும் கூடாதே
த்வயம் -பிராட்டி முன்னிட்டு கொண்டு -திருவடி பற்றுவது சகல பல சாதனம்
பூர்வ வாக்கியம் -உத்தர வாக்கியம் -பற்றுதலுக்கு பலன் மிதுனத்தில் அவர்கள் மகிழ்ச்சிக்கு கைங்கர்யம்
சரணம் பற்றி பின்பு பரமாத்மா  கவலை -பட அவனுக்கு மா சுச சொல்வது உத்தர வாக்கியம் –
கேட்டதை தானே கொடுக்க வேண்டுமே -உயர்ந்த வஸ்து கொடுக்க சித்தமாக இருந்தாலும்
ஜபம் ஹோமம் செய்து அல்பம் கேட்டால் –
ஸ்வரூப அனுசந்தானத்துக்கு ஈடாக அர்த்தம்
அவனுக்கே அடிமை பட்ட ஸ்வரூபம் இசைந்து -அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம்
அர்த்த அனுசந்தானம் மோஷம் ஹேது-சாதனம் இல்லை
 பூத பகவத் பிரசாத -ப்ரீதி உண்டாகி -அவன் அருளுகிறான்
இது ப்ரீதிக்கு சாதனம்
தாங்களும் அனுசந்தித்து தங்களை கிட்டினவருக்கும் இதை உபதேசித்து
முன்பே சப்தம் சொல்லி பின்பே அர்த்தம்
இன்றிக்கே அர்த்தம் சொல்லி சப்தம் சொல்வார்
நாரணன் -யாவையும் யாவரும்
நாராக அயனம் யஸ்ய
நாராணாம் அயனம்
தத் புருஷ சமாசம் வேற்றுமை
ஆதாரம் –
இல்லதும் -இருப்பிடமாக கொண்டவன் –
ரின்க் ஷய தாது -ர ந அழியாத பொருள்கள் நரா-நாரா
நாரா பல சமூகம் திரள் கூட்டம் கூட்டமாக
யாவையும் யாவரும் தானாம் -அந்தர்யாமி
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -சப்தம் சொல்லி அர்த்தம்
அந்தர்பகித்ச சத் சர்வம்
நாராயண பரோ ஜோதி –
முன்னும் பின்னும் அர்த்தம் –
திரு மந்த்ரத்தை சார்த்தமாக அருளி செய்கிறார்
ஆழ்வான்-திரு குமாரருக்கு அருளிய ஐதிக்யம்
துவயம் அனுசந்தானம் எம்பார் -முகத்தில் பரிமளிக்க
நீரே ரஷணத்தில் முற்பட்டீர் அதனால் நீரே ஆசார்யர்
அனைவருக்கும் ஏற்றம் கொடுத்து சிம்காசனாதிபதிகள்
வேறு பலரையும் திருத்தி யக்ஜா மூர்த்தி அருளாள பெருமாள் எம்பெருமானார்
மற்றவர் ஒத்துக் கொள்ள அனந்த ஆழ்வானை அவருக்கு ஆசார்யர் ஆக வைத்து
எம்பெருமானார் கை போல் தன்னை நினைத்து கொண்டு செய்து வைத்தார்
எம்பார் திருந்தி வந்தவர் -திருமலை நம்பி திருத்தி பனி கொண்டார்
எம்பெருமானார்  ஸ்ரீ வைஷ்ணவ சாம்ராஜ்யம் வளர்க்க செய்த செயல்
இன்ன போது இன்னார் இருப்பார் தெரியாது மின்னின் நிலையில மன் உயிர் ஆக்கைகள்
இருந்து கேளும் கோள்
இப்பாட்டை இதுக்கு அர்த்தமாக நினைத்து இருங்கோள் என்று பணித்தான்
எம்பெருமானாருக்கும் ஆள வந்தாரை சேவிக்க முடியவில்லையே –
சதாபிஷேகம் ஸ்வாமி-இடம் கால ஷேபம் கேட்டவர்  இதே இடத்தில்
அநேகம் ஜீவாத்மா உண்டே ..
எண் பெருக்கு –
அந் நலத்து -ஞான ஸ்வரூபம் தர்மிக் ஞானம் –
ம காரம் -இருபத்து ஐந்தாம் அஷரமாய்-ஜீவாத்மா இருபத்தஞ்சாம் தத்வம்
மன ஞானே மனு அபபோதனே
ஞான குண ஆஸ்ரயமாயும் ஞாதா -வாயும் –
ஒண் பொருள் -ஒள்ளிய சிறந்த பொருள் நன் பொருள்
அசித் வ்யாவர்த்தி வஸ்து ஜடமாய் இருக்கும் இறே அசைதன்யம்
அதுவும் எண் பெருக்கு ஆக இருக்கும்
தனக்கு தானே பிரகாசித்து கொண்டு மற்றவையும் காட்டும் ஞானம்
ஈறில எகிற இது கீழும் மேலும்அன்வயித்து –
 ஒண் பொருள் வன் புகழ் -முடிவு இல்லாத
மங்கள குணங்களும் -எண்ணிக்கை இல்லாதவை தானே
நித்யமுமாய் பிரகாரமுமாய் இருக்கும் இவ் வஸ்து கல்யாண குணம் போல் -ஆழ்வான்
நாரணன் சொல்லுக்கு அர்த்தம் முன்பு சொல்லி
அவன் தின் கழல்
சம்பந்தம் காதாசித்தம் தவிர்ந்து -நித்யம் -என்பதால்
ஸ்வரூப ஞானம் உள்ளாரை விடான் இறே
திண்மையை பற்ற
அவனும் அவளும் விட்டாலும் கழல் விடாதே
காலை பிடித்து கார்யம் கொள்ளும் -கையை பிடித்து கொள்ளுவது போல் இலையே
உதற முடியாதே
சேர்-ஆஸ்ரி
உன்னுடையதாய் -உனக்கு வகுத்தாய் பிராப்தம் -கடுக சுவீகரி
நம பதார்த்தம் காட்டும்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: