திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-2-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

 

ஒடுங்க அவன்கண், ஒடுங்கலும் எல்லாம்
விடும்பின்னும் ஆக்கை, விடும்பொழுது எண்ணே.

    பொ-ரை : அவ்விறைவனிடத்தில் சென்று சேரவே, உங்களிடத்தில் வந்து சேர்ந்திருக்கின்றன எல்லாம் தாமாகவே விட்டு நீங்கும்;

அதற்குமேல், உயிரானது உடலை விட்டு நீங்குங்காலத்தை எண்ணி இரு என்பதாம்

வி-கு : ‘ஒடுங்க, விடும்’ என முடிக்க, கண் என்பது, ஏழனுருபு. ஒடுங்கலும் – உம் அசைநிலை. இனி, இதனை ‘எல்லாம்’ என்ற சொல்லோடுங் கூட்டி ஒடுங்கலும் எல்லாமும் விடும் எனப் பொருள் கூறலுமாம். எண் என்பது, முன்னிலை ஏவல். ஏகாரம்: அசைநிலை.

ஈடு : ஒன்பதாம் பாட்டு. இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்த ஞானம் உண்டாகவே தன் சிறுமை பார்த்து அகல வேண்டா என்றும், வணங்குதலாவது – இவன், இறைவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு உறுப்பு ஆக்குகை என்றும் அருளிச் செய்தார், மேல் இரண்டு திருப்பாசுரங்களால்; ‘இது தன்னரசு நாடாய் அடையத் தக்க பொருள் அவன் அல்லாமையால் வழி படாது இருக்கின்றேமோ! வழிபட ஒட்டாமல் தடுக்கும் விரோதிகள் மிகுதியாக இருத்தலால் அன்றோ நாங்கள் வழிபடாது இருக்கிறோம்?’ என்ன, ‘நீங்கள் அவனைக் கிட்டவே அவை அடைய விட்டுப் போம்,’ என்கிறார் இத்திருபாசுரத்தில்.

அவன்கண் ஒடுங்க – 1பிரகாரமாக இருக்கும் நீங்கள் பிரகாரியாக இருக்கின்ற அவன் பக்கலிலே சென்று சேர, ஒடுங்கலும் எல்லாம் விடும் – செய்யத்தக்கனவற்றைச் செய்ய, தகாதவை எல்லாம் தாமாகவே விட்டுநீங்கும்; ஆத்துமாவின் சொரூபத்துக்குத் தக்கவற்றைச் செய்யவே, சொரூபத்துக்கு விரோதிகளாக உள்ளவை எல்லாம் விட்டுப்போகும் என்றபடி. ‘ஒடுங்கல்’ என்கையாலே இவை ஆத்துமாவிற்கிடப்பன அல்ல; ஆத்துமாவிற்கு விரோதியாய்க் கொண்டு வந்தேறி என்னுமிடம் தோன்றுகிறது. இனி, ‘ஒடுங்கல்’ என்பதனை 2மெலித்தல் விகாரமாகக் கொண்டு ‘இவனுக்குக் குறைவைப் பிறப்பிக்குமவை’ எனலுமாம். எல்லாம் விடும் – அறிவின்மை, கருமம், 3வாசனை, ருசி இவையெல்லாம் அடியோடே

விட்டுக் கழியும் 1‘வானோ மறிகடலோ,’ ‘மாடே வரப் பெறுவராம் என்றே வல்வினையார்’ என்னும் பாசுரங்களை நினைவு கூர்க.

‘இவை நீங்கினால், பின்னர் இவன் செய்யத்தக்க காரியம் யாது?’ எனின், பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்-‘ பத்தியினால் வந்த ராஜகுலங்கொண்டு பலன் தப்பாது, தன்னடையே வருகிறது,’ என்று ஆறியிருத்தல் அன்றிக்கே, காரணமான அறிவின்மை முதலியவைகள் கழிந்தனவாகில், அவற்றின் காரியமான இச்சரீரமும் ஒருபடி போய்,2தண்ணீர் துரும்பு அற்றுப் பலன் கைப்புகுந்தது ஆவது எப்போதோ என்று அதற்கு விரல் முடக்கி இருக்கும் இத்தனை. ‘ஆயின், 3கேவலனைப் போன்று உடலின் நீக்கத்தினை மட்டும் விரும்புவது என்?’ என்னில், இன்பத்தில் இச்சையுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப் போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்கு உரிய காலத்தை எதிர் நோக்கிக்கொண்டு இருத்தல் போன்று, இவனும் பேற்றுக்கு உறுப்பாக உடலை விட்டு உயிர் நீக்குங் காலத்தினை எதிர்பார்த்திருக்கக் கடவன். 4‘கொங்கை மேற் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள், தங்குமேல் என் ஆவி தங்கும்,’ என்று அழுக்குக் கழற்றி ஒப்பித்துப் பார்த்து இருந்தாள் ஒரு பிராட்டி. அப்படியே, 5அழுக்கு உடம்பு’ என்கிற இவ்வழுக்கு நீங்கி மோக்ஷமாகிய பலத்தை அடைதல் எப்போதோ என்று பார்த்திருக்கும் இத்தனை.

1. வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் – ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்
வன்துயரை யாவா மருங்கு.

 ‘ஆயின, கூற்றுவன் ஒருவன் இருக்க, பேற்றினை எதிர்பார்த்து இருத்தல் என்பது எவ்வாறு பொருந்தும்?’ எனின்,1‘மனிதன் பாவத்தினைச் செய்தவனாய் இருத்தலின், யமனைக் கண்டு அஞ்சுகிறான்; செய்யவேண்டுமவற்றைச் செய்து முடித்தவர்கள் யமனை அன்புள்ள விருந்தினைப் போன்று எதிர்பார்க்கிறார்கள்,’ ஆதலின், பொருந்தும் என்க. ‘ஆயின், செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்தவர்க்கு அன்றோ அது சாத்தியம்?’ எனின், செய்யவேண்டியவற்றைச் செய்து முடித்தவர் ஆவார், 2‘அரசனே சாஸ்திரங்களோடு கூடின எல்லா வேதங்களும், அறியத் தக்க எல்லாப் பொருள்களும், எல்லா யாகங்களும், யாகங்களில் ஆராதிக்கப்படுகின்ற எல்லாத் தேவர்களும் கிருஷ்ணனேயாவன் என்று எந்த அந்தணர்கள் கிருஷ்ணனை உள்ளவாறு அறிகின்றார்களோ, அவர்கள் எல்லா யாகங்களையும் செய்து முடித்தவர்கள் ஆகின்றார்கள்,’ என்கிறபடியே, எம்பெருமாளையே பற்றுக்கோடாகப் பற்றின அடியார்களே யாவர். 3ஓர் அயனத்தின் அன்று குன்றத்துச்சீயர் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே புக, அவருடைய சிறுபேரைச் சொல்லி, ‘சிங்கப் பிரான்! இன்று அயநங்காண்,’ என்ன, திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாது இருக்க, உயிர் உடலை விட்டு நீங்கும். அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில் ஓரண்டு கழியப் பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ!’ என்று அருளிச்செய்தார்.

எம்பார் ஒரு முறை, ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு ‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ! பலமும் இனிக் கைப்புகுந்ததே அன்றோ! இனி, சிந்தாவிஷயம் உண்டோ?’ என்று அருளிச்செய்தார்.

சம்பந்த ஞானம்
பசிக்கும் முறை சொல்லி
இது தன்னரசு நாடாய்
அவனை அடைய கிட்ட இவை விலகும்
விரோதிகள் பல இருக்க
அவனை கிட்டவே தன்னடியே போகும்
ஒடுங்க அவன் கண்
ஒடுங்களும் எல்லாம் விடும்
பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணு
சரண் அடைந்து -மோட்ஷம் நிச்சயம் என்று உறுதி
நடுவில் உள்ள காலம் -கழிக்க
ஒடுங்களும் எல்லாம் விடும்
நெல் செய்ய புல் தேயுமா போலே
அப்ராப்தம் எல்லாம் ஓடி விடும்
ஒடுக்கி கொண்டு இருப்பவை ஸ்வரூப விரோதி வந்தேறி இவை
ஒடுக்கல் -சங்கோசம் பிறப்பிக்கும் அவை
எல்லாம் விடும் அவித்யா கர்மா வாசனை ருசி
வானோ மறிகடலோ கானோ எங்கேயோ போகும்
பேராளன் பேர் ஓத சிந்திக்க -ஓடி போகும்
மாடே வர பெறுமோ
பெரிய திரு அந்தாதி பாசுரங்கள் -இரண்டும்
வல் வினையார் –
இவை போம் அகில் இவனுக்கு கர்த்தவ்யம் என்
உபாசனதால் வந்த ராஜ குலம்-மகாத்மயம் பக்தி யோகம் என்பதால் -பாஷ்யம் அருளின பின் -இப்படி அருளுகிறார்
பலம் தன்னடியே வரும் ஆரி இருக்காமல்
அவித்யை போன பின் சரீரமும் போய் பிராப்தி எப்போது என்று எதிர் பார்த்து
தண்ணீர் துரும்பு அற்று -பிரதானம் ஒன்றும் பண்ண வேண்டாமே நம்மால்
கிருபா பிரவாகம் -நம் பிரத்யனம் துரும்பு போல்
விரல் முடிக்கு
காமிநி அழுக்கு கழற்றி போகத்தில் -கொங்கை மேல் குங்குமத்தில் குழம்பு அழிய புகுந்து
மிர்த்யு ப்ரியம் இவ அதிதிம் -ராஜ சூயை –
கிருத க்ருத்யா-பிரியமான விருந்து வர எதிர் பார்த்து இருப்பது போல்
ராஜா -கணக்கு இரண்டு நாள் வேலை பத்து நாள் அவகாசம் கதை -காஞ்சி ஸ்வாமி அருளி
கிருத க்ருத்ய சித்த சாதனம் -எம்பெருமானை பற்றுதல் –
சர்வ யக்ஜா சமாப்த -கிருஷ்ணம் உள்ள படி அறிந்து கொள்வதே செய்த வேள்வியர்  ஆவார்
தீர்த்தமும் -பார்த்தனை பார்ப்பதன் முன் அருளாள பெருமாள் எம்பெருமானார்
ஐதிகம் காட்டி –
அயனத்தில் -குன்னத்து ஜீயர் எம்பெருமானார் திரு அடி புகுந்து
சிறு பேர் சிங்க பிரான் சொல்லி –
இன்று அயனம் கிடாய்
பேசாது இருக்க -திரு உள்ளத்தில் ஓடுவது என்னது என்று அறியாமல் -இருக்க-
தேக சமனந்தரத்தில் பிராப்தி கண் அழிவு இன்றி -காலம் தடை -அதில் கொஞ்சம் போன மகிழ்ச்சி
ஒன்றாய் இருந்தது இல்லையோ -எம்பெருமானார் அருள –
எண்ணுவாயாக
எண்ணே
யேவகாரம்
எம்பார் -காரணமான பொது கழிந்த பின் காரியம் கழிந்தது தான் –
சிந்தா விஷயம் வேண்டுமோ என்றாராம்
உடலும் தன்னடியே கழிந்து பெரும் கிட்டுமே எண்ணவும் வேண்டுமோ
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: