திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-2-6–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

பற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய்அவன், முற்றில் அடங்கே.

பொ-ரை : இறைவனும் பற்றையுடையவனாகி உலகத்துப் பொருள்கள் எல்லாமாகவும் நின்றான்; ஆதலால், நீயும் பற்றையுடையையாய் அவ்விறைவனுடைய தொண்டுகள் அனைத்திலும் சேர்க,’ என்கிறார்.

வி-கு : பற்றிலன் – பற்றினையுடையவன்; இல் – வீடு அதாவது, இருப்பிடம். பற்றிலையாய் – பற்றினையுடையையாய், முற்றில் – முழுவதிலும்.

ஈடு : ஆறாம்பாட்டு. பற்றுமிடத்தில் வரும் இடையூற்றை நீக்குதலை அருளிச்செய்தார் மேல்; ‘ஆயின், நீர் பரிகாரம் சொல்லுகைக்கு எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாய், சேஷியாயிருக்கிற அவன்தான் நமக்குக் கைப்புகுந்தானோ?’ என்ன, அவன் பக்கல் திருத்த வேண்டுவது ஒன்று இல்லை; அவன் பற்றுக்கு இருப்பிடமானவன் என்கிறார்.

பற்றிலன் – அன்பை உறைவிடம் ஆக உடையவன். பற்றிலன் என்பது – பற்றிலான் என்பதன் விகாரம்; ‘அகத்திலான்’ என்பது போன்று; அகத்திலான் – அகத்திலே இருப்பவன். ‘அன்புள்ளவனாயினும் இறைவன் அன்றோ அவன்?’ எனின், ஈசனும் – இறைமைத் தன்மை கழற்ற ஒண்ணாமையாலே கிடக்குமித்தனை. ‘கழற்றொண்ணாமையால் கிடந்தாலும் அச்சத்திற்குக் காரணமாமே?’ எனின், ஆகாது; அவ்விறைமைத்தன்மை இவ்வன்பு குணமாகைக்காகக் கிடக்கிறது; அஞ்சுதற்கு உடல் அன்று; பெரியவன் எளிமையே குணம் என்று சொல்லப்படும். ‘ஆயின், இதனை நாம் காணும் இடம் உண்டோ?’ எனின், 1‘பூவில் கண் வைத்துத் தொடுக்கில் அதில் ஆசை பிறக்கும் என்று கண்ணை மாற வைத்துத் தொடுத்து, பூவிற்றுப் பிழைக்குமத்தனை வறியவரான ‘மாலாகாரர்’ தண்ணளியே இவர்கட்கு விஞ்சியிருப்பது. மேன்மை கழற்ற ஒண்ணாமையாலே கிடந்தது இத்தனை; ‘இரண்டும் அவ்விறைவனிடத்தில் தங்கியிருக்க, தண்ணளியே உள்ளது என்று அறிந்தபடி என்?’ என்னில், சேஷிகளாய் இருப்பார்க்கு அடியார்களை அழைத்துக் காரியம் கொள்ளலாய் இருக்க, நெடுந்தெருவே போகிறவர்கள், ‘நான் இருந்த முடுக்குத் தெருத் தேடி வந்த போதே தண்ணளியே விஞ்சியிருக்கும் என்னும்

இடம் தெரிந்தது இல்லையோ?’ 1என்றும் ‘ஒக்கச் சஞ்சரிக்கிற வழியிலே நிதி எடுப்பாரைப்போலே, என்னுடைய அடிமைக்குத் தக்கதான தொழிலிலே சேர்ந்து அவன் விருப்பின்படி என்னை உபயோகித்துக்கொள்ள எதிர்பாராநின்றேன்,’ என்றும் கூறினார் என்று விஷ்ணு புராணம் கூறுமாற்றால் அறிதல் தகும்

முற்றவும் நின்றனன் – 2‘எல்லாப் பிராணிகளுக்கும் நான் ஒத்தவன்; எனக்கு எவனும் பகைவன் இலன்; அன்பனும் இலன்; எவர்கள் என்னைப் பத்தியால் அடைகின்றார்களோ, அவர்கள் போலவே நானும் அவர்களிடத்தில் அன்புடன் வசிக்கின்றேன்,’ என்கிறபடியே அடையும் திறத்தில் ஒத்தவனாய் இருந்தான். 3இத்தலை இருந்தபடி இருக்கத் தான் எல்லார்க்கும் ஒத்திருக்கை. பற்றிலையாய் – நீயும் பற்றினையுடையையாய். அவன் முற்றில் அடங்கு – 4‘நான் எல்லா அடிமைகளும் செய்வேன்,’ என்கிறபடியே, அவனுடைய எல்லாத் தொண்டுகளிலும் சேர்வாய்.

  இனி, இப்பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும்படி: பற்றிலன் ஈசனும் – 1‘எங்கும் நிறைந்து எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாக இருத்தலின் வாசுதேவன் ஆகிறாய்,’ என்கிறபடியே, எல்லா நற்குணங்களோடும் கூடினவனாய், ஞானம் ஆனந்தம் குற்றம் இன்மை இவற்றையே வடிவாக உடையவனாய், ஏவப்படுகின்றவர்களான நித்தியசூரிகளை உடையவனாய்த் திரை மாறின கடல் போலே பரமபதத்தில் எழுந்தருளி இருக்கின்றவனும் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அல்லன். ‘ஆயின் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அன்றிக்கே இருந்தால் குறைபாடு இரானோ?’ என்னில,

    முற்றவும் நின்றனன் – அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றமும் இன்று வந்து அடைகிற இவனாலே ஆம்படி நின்றான்; ‘ஆயின், அப்படி நின்ற இடம் உண்டோ?’ எனின், 2‘இன்று வந்து அடைந்த சுக்கிரீவனுக்கு ஒரு வாட்டம் வரில், பசுவானது அன்று ஈன்ற கன்றின் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றையும் கொம்பிலே கொள்ளுமாறு போன்று,3நித்தியாஸ்ரிதையான பிராட்டியாலும் காரியம் இல்லை,’ என்றான் ஸ்ரீ ராமபிரான்.

பற்றிலையாய் – விட ஒண்ணாதாரை நீ ஒரு தலையாக விட்டான் அவன்; அவன் ஒரு தலையானால் விடலாமவற்றை விடத்தட்டு என் உனக்கு? அவன் முற்றில் அடங்கு – அவனையே எல்லாமாகப் பற்றப் பார்: ஆயின், அவன் எல்லாமாக இருப்பனோ? எனின், 4‘எல்லாப் பொருளும் வாசுதேவனே’ என்றும், 5‘தாயும் தகப்பனும் உடன் பிறந்தோனும் வீடும் காப்பாற்றுமவனும் நட்டோனும் கதியும் நாராயணனே ஆவன்,’ என்றும், ‘சுற்றத்தார்களில் ஒவ்வொருவர் ஒவ்வொரு பயன்பொருட்டு,’ என்றும் வருவனவற்றால் அவன் எல்லாமாக இருப்பான் என்பது ஓர்தல் தகும்.

அப்படி பட்ட நிலை நின்ற புருஷார்த்தம் –

அந்தராய பரிகாரம் சொல்ல
அவாப்த சமஸ்த காமன் சேஷி கை புகுமோ
பற்ற முடியுமா
அவன் பக்கல் திருத்த வேண்டியது இல்லை
சங்க ஸ்வாபன் கூடி இருக்கும் ஸ்வாபம் உள்ளவன்
இரண்டு வியாக்யானம்
பற்றிலன் ஈசன் பற்று இல்லை முழுதுமாய் நிற்கிறான்
பற்று -சங்கம்
வாசத்தானம் ஆக கொண்டவன்
இலான் பிரிக்காமல் பற்றை உடையவன்
பற்றை உடையவன் பற்றிலன்
இங்கு உண்டோ இங்கு இல்லை அகத்திலான் சொல்ல கடவது இறே அது போல்
சாவேன் -இரண்டு அர்த்தம் சொல்லலாமே அபிப்ராயம் வைத்து அர்த்தம்
பட்டர் நிர்வாகம்பற்று இல்லாதவன்
ஈசவரத்வம் கழற்றி வைக்க முடியாதே சங்க ஸ்வாபம் இருந்தாலும்
பயப்படுகைக்கு உடல் இல்லை ஈச்வரத்வம்
சங்கைக்கு உதவுமே பரத்வம்
அதற்க்கு தான் ஈச்வரத்வம் கொண்டவன்
பெரியவன் எளிமையே குணம்
ஸ்லோகம் கொண்டு வியாக்யானம் செய்கிறார்
மாலாகாரர் -முடுக்கு சந்து -டொக்கு தேடி போனானே
ஈசன் -பற்றிலன் சங்கை ஸ்வாபம் -பிரசாதவ்  பரமோ -மால்யோப ஜீவன –
பராசத பரமவ் -சௌலப்யம் நாதவ் -பரத்வம்
இருவரும்  வந்ததால் துவி வசனம்
கழற்றி வைத்து போக முடியாதே பரத்வத்தை
இரண்டும் ஆஸ்ரய கதமாக இருக்க
பிரசாதம் மிக்கவன் மம கிரகம் உபாகதவ் -செஷிகளாய் இருப்பார் சேஷி பூதரை அழைத்து கார்யம் கொள்ள இருக்க
நெடும் தெருவில் போவார் -நான் இருக்கும் முடுக்கு தெரு வந்தார்
பிரசாதம் விஞ்சி
நிதி எடுப்பாரை போலே –
அழித்து கெடுத்து -ஸ்வரூப -வியாபாரம் செய்து ஜீவித்து
அழித்து கெடுத்து -சரீர ஜீவனம் கேட்டு ஆத்ம உஜ்ஜீவனம்
சாத்தார வீதி -சாதாத ஸ்ரீ வைஷ்ணவ வீதி ஸ்ரீ ரெங்கம் பூணல் இன்றி –
தட்டான் சாத்தான் -மடிசாரு பூணல் இன்றி ஒருவர் மற்றவரை கெடுத்தார் வசனம்
சாமான்ய வ்ருத்தி-மாலய உபஜீவனம் -அத்தை அழித்து கெடுத்து
ஸ்வரூப வ்ருத்தியில் ஜீவிக்க போகிறேன்
கைங்கர்யம் சித்திக்கட்டும் -ஆத்மாவை உஜீவிப்பிக்க
சூட்டு நன் மாலைதூயவான ஏந்தி நிர்ப்பார்  -நித்யர்சொல்லும் பாசுரத்தை இவன் சொல்ல பெற்றான்
மாலய உப ஜீவனம் மாலையை வித்து
கண்ணனை மாறு அடித்து -பார்க்காமல் தொடுத்து
பார்த்தால் அழகு நாம் கொள்ளலாம் கொண்டால் நஷ்டம்
கண் கூட வைக்காமல் முகம் திருப்பி தொடுப்பவன்
அப்படி பட்டவன் கைங்கர்யம் செய்ய -தன்யோகம் –
உபன்யாசம் பூர்வ அவலோகனம் செய்தே பண்ண வேண்டும்
சவரம் கத்தி -புதிசாக செய்வது போலே புத்தி தீட்டி வைத்து கொள்ள வேண்டும்
உத்தர அவலோகனம் சிஷ்யனுக்கு வேண்டும்
அழித்து கெடுத்து -சு போக்கியம் அழியாத
ஆசார்யர் கடாஷத்தால் இந்த அர்த்தம் கிட்டியது
நாதன் பிரசாதபரமாவ் -காட்டி
முற்றவும் நின்றனன் ஆஸ்ர்யணம் சமம்
பொதுவாக இருக்கிறன்
இத்தலை இருந்தபடி இருக்க தான் பொதுவாக -ஒத்து இருக்கிறன்
நீயும் பற்று இலையாய் பற்றை உடையவனாய் -கொண்டு
சங்கத்தை உடையனாய்
எல்லா கைங்கர்யத்திலும் அன்வயிக்க வேண்டும்
அஹம் சர்வம் கரிஷ்யாமி -அவன் முற்றிலடங்கு
அதவா
பட்டர் அருளி செய்தபடி
பற்று இலன் –
இல்லாதவன் -பரம பதத்தில் –
முற்றவும் -இன்று ஈன்ற கன்று இடம் முற்றவும் நின்றனன்
முன் அடியாரவர் இடம் கூட பற்று இன்றி இருக்கிறான்
பாப சாகரத்தில் இருந்து அவனை கிட்டினாலும்
வாசு தேவ அதி பூர்ண -சமஸ்த கல்யாண குணாத்மகன் திரை மாறிய கடல்
நித்யர் பக்கல் பற்று இன்றி
அவர்கள் ஏற்றம் இவனால் என்பதால்
கிம் கார்யம் சீதையா மம -எனபது போல்
உப்பரிகை இராவணன் கிரீடம் பறித்த சுக்ரீவன் இடம் பெருமாள் அருளிய வார்த்தை –
உமக்கு ஏதாவது ஆகி இருந்தால்
நித்ய அநபாயினி
திர்யக் இன்று ஆஸ்ரயிக்க-நித்ய ஆஸ்ரையை பிராட்டி
அன்றுஈன்ற கன்றின் மேல் -ஆசை கொண்டு –
முன்னீன்ற முன் அணை கன்றையும் கொம்பிலே கொள்ளுமா போலே
பற்றிலன் ஈசனும் -முற்றவும் அத்தனை பேரில் காட்டிய பிரியம்
விட ஒன்னாதாரை அவன் ஒரு தலையாக விட்டான் -இவன் தன விட்டான் அவன் விட வில்லை
உன் ஒருத்தனுக்காக
அவன் ஒரு தலையான் ஆனால் நீ விட கூடாதா
சப்தாதி விஷயங்களை நீ விட கூடாதா
எல்லாம் அவனாக கொண்டு மாதா பிதா -பர்தா சுக்ருதி கதி எல்லாம் நாராயணா
தார மித்ராதி யோபி கேசவ –
யார் ஒருவனை பற்றினால் எல்லாம் அடைந்தவன் ஆவாயோ
 எகிகா லாபாய சர்வ லாபாயா போலே
முற்றில் அடங்கே
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: