திரு விருத்தம் -50-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
இதுக்கு முன்பு இங்கன் இருப்பதொரு ராத்ரி வ்யசனம் அனுபவித்து அறியோம் என்னும்படி-அவசாதம் மிக்கவாறே -போத யந்த பரஸ்பரம் -பண்ணி  இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக தலை மகன் வருகிறான் –
வினை முற்றி மீண்ட தலைமகன் -பதினாலாம் ஆண்டு போன வழியை ஸ்ரீ பரதாழ்வான்
ப்ரக்ருதியை அறிகையாலே -பெருமாள் ஒரு பகலே மீண்டால் போல் -த்வரித்து வருகிறானாய்-இருக்கிறது -தலைமகன் சாரதியை பார்த்து சொல்லுகிறான் –

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ  கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-

பாசுரம் -50-ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை -தலைவன் மீண்டு வருகையைத் தேர்பாகனிடம் கூறல் -கிளரொளி இளைமை -2-10

வியாக்யானம் –
ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை –ஒள்ளிய நுதலை உடைய இவளுடைய மாமை –
ஒளி உண்டு -நிறத்தில் புகர்-அது பயப்பதற்க்கு முன்பே -அது விவர்ணம் ஆவதற்கு முன்பே –
ஒண்ணுதல் மாமை -பத்து மாசம் பெருமாளும் பிராட்டியும் பிரிந்தவோபாதி  இறே இவர்கள் பிரிவும் -பிரிந்த போன நாளைக்கு பாதேயம் இருக்கிறபடி –
சந்த்ரகாந்தா நநாம் சூப்ரூம-என்றார் இறே பெருமாள் -இவ்வழகு இழந்தால் ஆறி இருக்க ஒண்ணாது -என்கையும்-
விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும் -த்வரித்து கொண்டு நம்முடைய தேரானது கிட்ட வேண்டும் –
அவள் தான் வை வர்ண்யத்தாலே நமக்கு பழி இடுவதற்கு முன்பே -நீ த்வரையாலே
அப் பழியைத் துடைத்து தர வேணும் –
வலவ -இங்கும் சாரதி கையது போலே காணும் கார்யம்
கடா நின்று நண்ணுதல் வேண்டும் -நடத்தா நின்று கொண்டு நம் தேர் கிட்ட வேணும் –

தேன்  நவின்ற இத்யாதி -நடத்துகிற உனக்கும் அங்கே போகப் புக்கால் -பிரயோஜனம் உண்டாம்படி காண்-தேசம் இருப்பது -என்கிறான் -தேன் நவின்ற மா மலைக்கே –என்னுதல்-தேனுண்டு –வண்டுகள் மது பான மத்தமாய்க் கொண்டு பாடுகிற அவற்றின் உடைய பாட்டேயாய் இருக்கிற-திருமலை என்னுதல்-
அன்றிக்கே –
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-என்கிறபடயே-தேனாக சொல்லப்பட்ட -விண் முதல் நாயகன் -என்னுதல் –
நீண் முடி இத்யாதி -பிரிந்த நாளில் ச்ரமம் எல்லாம் ஆறும்படியாய் காண் தேசம் இருப்பது –
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய நீண் முடி உண்டு -திரு அபிஷேகம் -அதில் வெண் முத்து வாசிகைஉண்டு-
வெளுத்த முத்து ஒழுங்கு -அத்தன்மையதாய்-அதின் படியை உடைத்தாய் –
திருமலை வ்ருத்தாந்தத்துக்கு ஸ்ரீ வைகுண்ட படியை திருஷ்டாந்தமாக சொல்லாம் படி யாய் ஆயிற்று –
இவருக்கு கண்ணால் காண்கிற இடத்திலும் அவ்விடம் விசதமாய் இருக்கிறபடி –
பர்வதத்துக்கு அக்நி  மத்தையை சாதியா நின்றால்-மகா நதிகள் வ்யாப்தி க்ரகன பூமியாய்-இருக்குமா போலே –
இங்குற்ற சீலம் தரை காண ஒண்ணாதோ பாதி யாய் இருக்கையாலே இவ்விடம் நிலம் அன்று இறே –

சத்கார்ய வாதம் ஆகையாலே -இச் சீலம் அங்கேயும் உண்டு என்று பிரமாணங்கள் சொல்ல-விச்வசிக்கும் இத்தனை இறே -கண்ணால் கண்டு அனுபவிகலாவது இங்கே இறே –
மண் முதல் சேர்வுற்று -பூமி அளவுவந்து கிட்டி-அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே -வழியில் ச்ரமம் அடங்கலும் தீருகிறது இறே அங்கே புக்கவாறே –
குளிர் அருவி வேம்கடம் -இறே –
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர் வுற்ற அருவிகள் ப்ரவஹியா நின்றுள்ள
மாமலைக்கே விரைந்து நம் தேர் நண்ணுதல் வேண்டும் –

ச்வாபதேசம்-
இத்தால் ஆழ்வாருடைய ஆற்றாமையை கண்ட பாகவதர்கள் இவரை
ஆஸ்வசிப்பிக்கைக்காக வருகிறபடியை சொல்லுகிறது –
திரு மலையிலே -நிற்கிறவன் சீலத்திலே அகப்பட்டு -திரு அருவிகளின் நடுவே பெருமாளை கை பிடித்த பின் -பிராட்டி மிதிலையை நினையாதால் போலே -திரு நகரியையும் மறந்து ஆழ்வார் எழுந்து அருளி இருந்த இருப்பை
அனுபவிக்க வேணும் என்று -அனுகூலர் அடைய த்வரித்துக் கொண்டு வருகிற படியை சொல்லுகிறது –

—————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: