திரு விருத்தம் -48-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

 

அவதாரிகை –
இஸ் சம்சாரத்தில் நம்மை வைத்த இதுக்கு ஹேது ஏதோ -என்று இறே இவர் நொந்தது –
இவருக்கு இவ்விருப்பு நிலம் கொதிப்பது -ச்வார்த்தமாக இருக்கிறோம் என்று இருக்கலில் இறே –
அங்கன் இன்றிக்கே -நமக்காக இருக்கிறீர்-என்னும் இடத்தை அறிவிக்கவே இவரை தரிப்பிக்கலாம் -மேல் இவர் போய் பெற இருக்கிற ஸ்வரூபமும் இதுவே என்று பார்த்து -வாரீர் நீர் உமக்கு இங்கு ஒரு-சம்பந்தம் உண்டாய் இருக்கிறீர் அல்லீர் -நமக்காக இருக்கிறீர் அத்தனை -நாமும் ரசித்து நம்முடையாரும்-ரசிக்கும்படியாக உம்மை கொண்டு நம் சீல வ்ருத்தங்களை வெளி இடப் பார்த்தது -அதுக்காக வைத்தோம் இத்தனை காணும் -என்று ஈஸ்வரன் அறிவிக்க -ஆனால் தட்டென்-நம் ச்வரூபத்தோடு சேர்ந்தததுவுமாய்-நாம் பெற இருக்கிறது இது வாகில் குறை என் -என்று
விஷயீகரித்த படியை கண்டு விஸ்மிதராய்-அவ்விஷயீ காரத்தை பேசுகிறார்-

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –

பாசுரம் -48-மெல்லியல் ஆக்கிக் கிருமி -நன்னிமித்தம் கண்டு -பல்லிக்குரல் கேட்டதை -தான் ஆறி இருத்தலை தலைவி தோழிக்கு கூறுதல் –
என்றைக்கும் என்னை -7-9–

பதவுரை

மெல் இயல்–மென்மையான தன்மையையுடைய
ஆக்கை–உடம்பை யுடைத்தான
கிருமி–புழுவானது
குருவில்–புண்ணிலே
மிளிர் தந்து–வெளிப்பட்டு
அதுவே–அவ்விடத்திலேயே
செல்லிய–நடமாடும்படியான
செலதைத்து–ஸ்வபாவத்தையுடையது; (அது)
உலகை என காணும்–உலக நடத்தையை எங்ஙனம் அறியும்?
(அறியமாட்டாது; அதுபோல)
என்னாலும்–என்னைக் கொண்டும்.
தன்னைச் சொல்லிய–தன்னைப் பாடுவித்த
சூழல்–சூழ்ச்சியை யுடைய
திருமாலவன்–ச்ரிய பதியான அப்பெருமானுடைய
கவி–புகழுரையை
யாது கற்றேன்–(யான்) யாதென்று அறிவேன்?
பல்லியன் சொல்லும்–பல்லியின் வார்த்தையையும்
சொல் ஆ கொள்வதோ–(பின் நிகழ்ச்சியை முன்குறிக்குஞ்) சொல்லாகக் கொள்ளுதலோ
பண்டு பண்டே உண்டு–மிக வெகு காலமாகவுள்ளது

வியாக்யானம் –
மெல்லியல் ஆக்கை இத்யாதி –
இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே என்னுடைய  ஜ்ஞானத்துக்கு விஷயம்
ஆவது ஏக தேசம் கிடீர் -நான் அறிவது ஒன்றும் இல்லை என்னும்படி இருக்கிற
என்னை கொண்டு கிடீர் இத்தை தலை கட்டிற்று என்கிறார் –
மெல்லியல் ஆக்கை கிரிமி -ம்ருது ஸ்வாபமான சரீரத்தை உடைய கிரிமியானது –
இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்று படப் பொறாதே முடியும்படியான
மிருதுவான சரீரத்தை உடைய -ஒன்றாக எண்ணப்படாத சூத்திர ஜந்துவானது –
குருவில் மிளிர் தந்து -கிரந்தியாலே மிளிர்ந்து -உற்பத்தியும் விநாசமும் ஒழிய மின்றிக்கே –
நடுவு பட்டதொரு காலம் இன்றிக்கே -தோற்றி மாயும் படி இருக்கையாலே -மிளிர்ந்தது
என்கிறது –
பஞ்சாக்னி வித்தையில் -சொல்லுகிறபடியே புருஷார்த்ததோப யோகியாய் இருப்பதொரு-சரீரத்தை பரிகிரக்கில் இறே பிறந்தது என்னாலாவது –
ஆங்கே -அந்த கிரந்தியிலே
செல்லிய செல்கைத்து-செல்லுகிற செல்லுகையை உடைத்து –
நடக்கிற யாத்ரையை உடைத்தானது -உத்பத்தியும் ஜீவனமும் நடுவு பட்ட நாளில் பரிபவமும் விநாசமும்-இவை அடங்க அங்கேயாய் இருக்கும் இறே -அங்கே இறே அழகு செண்டு ஏறுகிறது -நெற்காய்க்கும் மரம் எது -என்று இருப்பாரைப் போலே-அக்க்ராந்திக்கு அவ்வருகு அறியாத இது
உலகை என் காணும் –
லோக வ்ருத்தாந்தத்தில் என்ன அறியவற்று-இது கிடீர் நான் தன்னளவில் நின்ற நிலை -என்னாலும் -இப்படி அஞ்ஞான அசக்திகளுக்கு எல்லை நிலமான
என்னைக் கொண்டு -தன்னை -உலகை என் காணும் -என்கிற லோக வ்ருத்தாந்த்தத்திலே தான் ஒன்றை
என்னைக் கொண்டு -சொல்லி வைத்தானோ -யதோவாசோ நிவர்த்தந்தே -என்று சுருதி ஸ்ம்ருதாதிகள் நமக்கு நிலம் அன்று என்று
மீண்ட தன்னை –
சொல்லிய -சொல்லி வைப்பதாக கணிசித்து இருந்தானாய்-
இது எவ்வளவாய் தலை கட்டுமோ என்று இருக்கிறதோ –
சொல்லி யற்றதாயிற்று -இப்படி சொல்லிவிக்கைக்கு ஹேது என் என்னில் –
சூழல் -ஆச்சர்ய சக்தி யுக்தன் ஆகையாலே
திரு மால் -இந்த ஆச்சர்ய சக்தி தான் புறம்பு கிடவாதே -இவ்வாஸ்ரயத்தில்
கிடக்க வேண்டுவான் என் என்னில் -ஸ்ரிய பத்தி ஆகையாலே –
திருமாலவன் கவி -அவனும் அவளுமான சேர்த்திக்கு தகுதியான கவி –
இத்தால் -ஸ்ரீ ராமாயணத்தில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –
தாயாஸ் சரிதம் மகத்-என்று தொடங்க செய்தே அவளை ஒழிய
தனியே இறே இருந்து கேட்டது –
யாது கற்றேன் -என்னுதல் –
ஆறு கற்றேன் என்னுதல் –
அவன்  கவி யாது கற்றேன் என்னுதல் –
யாதொன்று நான் கற்றது -அது திருமாலவன் கவி -என்னுதல் -கற்றேன் -என் முன் சொல்லும் -என்கிறபடியே அவன் முன்னே  சந்தை இட –
நான் பின்னே சொன்னேன் இத்தனை -ஆனாலும் இது தலை கட்டின படி
எங்கனே என்ன –
பல்லியின் சொல்லும் இத்யாதி -அல்பஜ்ஞராய் இருப்பார் ஒன்றை தொடங்கினால்-
ஞானாதிகராய் இருப்பார் அத்தை நன்றாக்கி தலைக் கட்டி கொள்ள கடவதாய் இருப்பது ஓன்று-உண்டு இறே -பல்லியானது ஓர் அர்த்த பிரத்யாயகம்  இல்லாதபடி -தன்னுடைய
ப்ரீத்திய  ப்ரீதிகளாலே -நத்து நத்து -என்ன -அத்தை ஞானவான் களாய்  இருப்பார்
தம்தாமுடைய லாப அலாபங்களுக்கு உடலாக்கி கோலா நிற்ப்பர்கள் இறே –
அப்படியே நான் எனக்கு பிரதிபந்தங்களை சொல்ல -அத்தை தனக்கு ஈடாம் படி
நன்றாக தலைக் கட்டிக் கொண்டான் –
பண்டு பண்டே -பழையதாக இப்படி போருவதொரு மரியாதை உண்டு இறே –
அத்தை இப்போது என் பக்கலிலே கை காணும்படி பண்ணினான் –

——————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: