ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -அவதாரிகை / 1-1–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

(ஸ்ரீ பெரியாழ்வார் -பொங்கும் பிரிவால் –3-6- வரை அவனை தானே ரஷிக்கும் பாவனையால்
சேஷத்வ பாரதந்தர்ய யாதாத்ம்ய -மங்களா சாசனம் -பண்ணிக் கொண்டே
இன்றும் நித்ய திரு மஞ்சனம் -ஆழ்வார்கள் அனைவருக்கும் நித்யமாகவே நடக்கும் –
பல்லாண்டு கைத்தல சேவை -முதல் இரண்டு பாசுரங்கள் -சாதிப்பார் அரையர்
இதுவே அனைவருக்கும் ரக்ஷகம்
வேதத்துக்கு ஓம் போல் மங்களகரம் –
விஞ்சி இருப்பதாலே பெரியாழ்வார் –
473-பாசுரங்கள் -12 -திருப்பல்லாண்டு -அதன் தொடர்ச்சியாக -461-பாசுரங்கள் பெரியாழ்வார் திருமொழி -)

(ஒவ்வொரு பத்தும் 105- ஆக 420 பாசுரங்களுக்கு மா முனிகள் வியாக்யானம்
ஐந்தாம் பத்து -41-பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் கொண்டு அனுபவிப்போம்
420 வரை பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் கிடைக்காமல் -இட்டு நிரப்ப -பரம பிரமாணிகர்
ஸ்வாபதேச வியாக்யானம் திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்துள்ளார்
விசேஷ அர்த்தங்களையும் பார்ப்போம் –
அரும்பதமும் உள்ளது -ரத்ன கரமாக அர்த்தங்கள் குறிப்பு இருக்கும் –
யுக சந்தியில் முதல்
கலி யுகம் தொடக்கம் -நம்மாழ்வார் -குலசேகர பெருமாள் -பெரியாழ்வார்
விஷ்ணுவின் ரத அம்சம் -ஆனி -ஸ்வாதி -திரு நக்ஷத்ரம்
விஷ்ணுவுக்கு மாமனார் -நம்மால் வணங்கப்படுபவர்
க்ரோதந வர்ஷம் -ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை -முகுந்த பட்டர் பத்மா திருத்தாயார் -விஷ்ணு சித்தர் இயல் பெயர் -)

(புஷ்ப்ப கைங்கர்யம் -மாலா காரர் -போல் -ப்ரஸாத பரம நாதவ் மம கேஹம் உபாகதவ் -சுருள் நாறாத பூ –
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -காயிக புஷ்ப கைங்கர்யம் –
நரபதி வல்லப தேவன் -பரத்வ ஹேதவ் இஹ ஜென்ம-உபாயம் ப்ராப்யம் அறிய -செல்வ நம்பி -சதஸ்ஸூ கூட்ட –
வேண்டிய வேதங்கள் ஓதி -விரைந்து கிளி அறுத்தான்
பரத்வ ஸ்தாபன உத்சவம் இன்றும் கூடல் மதுரை அழகர் கோயிலில் சேவிக்கலாம்
பட்டர் பிரான் -வித்வானுக்கு பிரான் –
அஸ்தானே பயஸங்கை-ஆனை மேல் உள்ள சதங்கை எடுத்து -திருப்பல்லாண்டு
கிருஷ்ண அவதாரம் திரு உள்ளத்தில் கிடக்க-பெரியாழ்வார் திரு மொழி திரு அவதாரம் –
பிள்ளைத்தமிழ் –
3-6- நாவலம் -273- பாசுரங்கள் கிருஷ்ண சேஷ்டிதங்கள் -விபவ –
3-7-/8-நாயிகா தாயார்
3-9-ராம கிருஷ்ண
3-10- அடையாளபதிகம்
4-1- இருவராக அருளிச் செய்த -கண்டார் உளர்
4-2- அர்ச்சா அனுபவம்
முதல் -பதிகம் -தசகம் -திரு மொழி பிரித்தால் -ஒன்பது -கட்டுக்கோப்பு பிரமேயம் ஒன்றாக
ஒரே பதிகம் -21-பாசுரங்கள் -)

ஸ்ரீ யபதியாய்- அவாப்த ஸமஸ்த காமனாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனான சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரன் –
(பெரியாழ்வாரை -ஊர்வலமாக வல்லபதேவன் கூட்டிச் செல்லும் பொழுது )
தனக்கு சந்நிகிதன் ஆன அளவிலே –
பிரணவத்திலே சொல்லுகிறபடியே
அவனை தமக்கு ரஷகனாகவும் -தம்மை அவனுக்கு ரஷக பூதனாகவும் -அனுசந்தித்து –
ஸ்வ சேஷத்வ அநு ரூபமான விருத்தி விசேஷங்களை அவன் திருவடிகளிலே செய்ய அமைந்து இருக்க –

அவனுடைய சர்வ ரஷகத்வாதிகளை அநு சந்திக்கும் முன்னே –
முகப்பிலுண்டான சௌந்தர்யாதிகளிலே ஆழம் கால் பட்டு -அவனை குழைச் சரக்காக நினைக்கையாலும் –

காலம் அதீதமான வஸ்து
(ஸ்ரீ வைகுண்டம் காலம் நடையாடாதே
கால தேச வஸ்து பரிச்சேத ரஹிதன் அவனும் )
காலம் சாம்ராஜ்யம் பண்ணும் தேசத்தில் வந்து
சந்நிஹிதம் ஆவதே -இவ்வஸ்துவுக்கு என்ன தீங்கு வருகிறதோ -என்னும் பயத்தாலும் –

அவனை ரஷ்ய பூதனாக நினைத்து -தாம் ரஷகராய் நின்று மங்களா சாசனம் பண்ணும் அளவில் –
உபய விபூதி யுக்தனான நிலையிலே (முதல் இரண்டு பாசுரங்கள்- திருப் பல்லாண்டில் ) மங்களாசாசனம் பண்ணின
அளவு அன்றிக்கே –
அவன் சம்சாரி சம்ரஷண அர்த்தமாக -பிரதிகூல பூயிஷ்டமான இத் தேசத்தில் வந்து அவதரித்து செய்து
அருளின சேஷ்டிதங்களை அநு சந்தித்து –
அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலே வயிறு எரியும் பிரேம (ஸ்வரூபர் ) ஸ்வபாவர் ஆகையாலே –
(ஞானம் முற்றிய பிரேம நிலையில் -பொங்கும் பரிவு )
திரு அவதார விசேஷங்களுக்கு மங்களா சாசனம் பண்ணி அருளினார் -திரு பல்லாண்டிலே-

அது தன்னிலும் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடுதும் -என்றும் –
(பந்தனை தீர-பிறந்த குழந்தைக்கு -நடுக்கம் தீர )
இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்றும் –
(ஸர்வ ஸ்ரீ ராம நவமி -2021- ஒரே ஸ்ரீ ராம திரு அவதார உத்சவம்)
ஸ்ரீ நரசிம்க ப்ராதுர்பாவதுக்கும் ஸ்ரீ ராமாவதாரத்துக்கும் மங்களாசாசனம் பண்ணின அளவு அன்றிகே –

(மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா பல்லாண்டு என்றும் )
மாயப் பொரு படை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாய
சுழற்றிய ஆழி வல்லானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்றும்-
ஐம் தலைய பைந்நாக தலை பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதும் -என்றும் –
இவர் ப்ராசுர்யேன மங்களாசாசனம் பண்ணிற்று ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு இறே–

ஆழ்வார்கள் எல்லாரும் -ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் -என்றவாறே போர மண்டி இருப்பார்கள் –
அதுக்கடி-
அல்லாத அவதாரம் போல் அன்றிக்கே -சமகாலம் ஆகையாலே -ஒரு செவ்வாய் கிழைமை முற்பட பெற்றிலோமே –
(அல்ப கால உப லக்ஷணம் )
பாவியேன் -பல்லில் பட்டு தெறிப்பதே -என்னும் இழவும் –
பரிவர் தேட்டமான அவதாரம் ஆகையாலே அத்தை அநு சந்திக்கையால் வந்த வயிறு எரிச்சலும் –

ஸ்ரீ ராம அவதாரத்தில் -தகப்பனார் -சம்பராந்தகனாய் -ஏக வீரனாய் இருப்பான் ஒருவன் –
பிள்ளைகள் தாங்களும் ஆண் புலிகள் –
குடி தானே வன்னிய மறுத்து இருப்பதொரு குடி –
இவை எல்லாம் மிகை ஆகும் படி குணத்தாலே நாட்டை எல்லாம் ஒரு மார்பு
எழுத்தாக்கி கொண்டு இருப்பார்கள் –
(ராமோ ராமோ -ஸர்வான் தேவான் நமஸ்காரம் -ஜகத் பூதம் )
ஆகையால் எதிரிகள் என்கிற சப்தம் இல்லை -இங்கன் அன்றிக்கே –

தமப்பன் ஒரு சாது வர்த்தன்-
பிறந்ததும் கம்சன் சிறைக் கூடத்திலே –
வளர்ந்ததும் அவன் அகத்தருகே –
ஸ்ரீ பிருந்தா வனத்திலே எழும் பூண்டுகள் அகப்பட அசூர மயமாய் இருக்கும் –
ரஷகரானவர்கள் ஓரடி தாழ நிற்கில் -பாம்பின் வாயிலே விழும்படியாய் ஆய்த்து அவன்படி இருப்பது –
இப்படியானால் வயிறு எரியாது இரார்களே இவர்கள்-

அவர்கள் எல்லாரையும் போல் அல்ல விறே ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் இவருக்கு உண்டான ப்ராவண்யம் –
அதாவது –
விட்டு சித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலன் -என்கிறபடியே
தான் பிறந்த படியும் வளர்ந்த படியும் இவரை கொண்டு கொள்கைக்காக –
அவன் இவர் திரு உள்ளத்திலே குடி கொண்டு இருக்க –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன்-என்னும்படி அவதார அனுபவமாகிற
போகத்தில் ஒன்றும் நழுவாதபடி-
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -என்று அவதார சமயமே தொடங்கி-
அதிலுண்டான ரசம் எல்லாம் தாமே முற்றூட்டாக அனுபவித்தார் இறே –

இனி –
இவ்விவ்ஷயத்தில் பரிவிலும் வந்தால் -அவர்களுக்கு அது காதாசித்தமாய் -இவருக்கு
நித்தியமாய் இறே இருப்பது –

ஆக –
இப்படி கிருஷ்ண அவதார அனுபவாதிகளிலே ப்ரவர்தரான இவர் –
இவ் வதாரத்துக்கடி சொல்லுகிற இடத்தில் ஸ்ரீ திரு கோட்டியூரின்  நின்றும்  வந்து பிறந்தான் என்பான் என்-
ஸ்ரீ ஷீராப்தி நாதன் தேவர்கள் கோஷ்டியில் எழுந்து அருளி இவர்களுடைய ரஷண சிந்தனை பண்ணினமை தோற்றும் படி –
உரகல்  மெல்லணையனாய்-பள்ளி கொண்டு அருளின ஸ்தலம் ஆகையாலே அந்த ஐக்யத்தை பற்றவும் –

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் -என்றும் தமக்கு மங்களா சாசனத்துக்கு
சஹகாரியான ஸ்ரீ செல்வ நம்பியோடே ஸ்ரீ திரு கோட்டியூர் ப்ரஸ்துதம் ஆகையாலே
அவ் வுகப்பை பற்றவும் -ஸ்ரீ திரு கோட்டியூரை திரு அவதார கந்தமாக அருளி செய்த இதில் விரோதம் இல்லை-

இப்படி ஸ்ரீ கிருஷ்ண அவதார ரசத்தை அனுபவிக்கிற அளவில் -ருஷிகளை போலே
கரையில் நின்று -அவதார குண சேஷ்டிதங்களை சொல்லிப் போகை அன்றிக்கே –
பாவன பிரகர்ஷத்தாலே -கோப ஜென்மத்தை -ஆஸ்தானம் பண்ணி –
யசோதாதிகள் சொல்லும் பாசுரத்தை -தாம் அவர்களாக  பேசி அனுபவித்து சொல்லுகிறார் –

திருவவதரித்து அருளின அளவில் ஸ்ரீ திரு வாய்ப்பாடியில் உள்ளோர் பண்ணின உபலாளநாதிகளை
அனுசந்தித்து இனியராகிறார் இத் திரு மொழியில் –

பெரியாழ்வார் திருமொழி –
105-பாசுரங்கள் பதிகம் தோறும் –
கடைசி பதிகம்- 41-ஆக -461-
ஒரு பிறவியில் இரு பிறவியானவன்
ஷத்ரியன் -ருக்மிணி பிராட்டி பெறுவதற்கு
இடையன் -நப்பின்னை பிராட்டி பெறுவதற்கு

—————————————————-

வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணைய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன்  முற்றம் கலந்து அளராயிற்றே–1-1-1-

பதவுரை
வண்ணம்–அழகு பொருந்திய
மாடங்கள்–மாடங்களாலே
சூழ்–சூழப்பட்ட
திருக்கோட்டியூர்–திருக்கோட்டியூரில் (எழுந்தருளியுள்ள)
கேசவன்–கேசவனென்ற திருநாமமுடையனாய்
நம்பி–கல்யாணகுண பரிபூர்ணனான
கண்ணன்–ஸ்ரீக்ருஷ்ணன்
இன் இல்–(நந்தகோபருடைய) இனிய திருமாளிகையிலே
பிறந்து–திருவவதிரித்தருளின வளவிலே,
(திருவாய்ப்பாடியிலுள்ளார்)
எண்ணெய்–எண்ணெயையும்
சுண்ணம்–மஞ்சள் பொடியையும்
எதிர் எதிர் தூவிட–(ஸந்தோஷத்தாலே ஒருவர்க்கொருவர்) எதிர்த்துத்தூவ,
கண்டக்கினிய–விசாலமாய்
நல்–விலக்ஷணமான
முற்றம்–(நந்தகோபர் திருமாளிகையில்) திருமுற்றமானது
கலந்து–(எண்ணெயும் மஞ்சள் பொடியும் துகையுண்டு) தன்னிலே சேர்ந்து
அளறு ஆயிற்று–சேறாய்விட்டது.

அழகிய மாடங்களாலே
சூழப்பட்ட
ஸ்ரீ திரு கோட்டியூரிலே
பிரசஸ்த கேச யுக்தனாய்
கல்யாண பரிபூர்ணனான
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ நந்தகோபருடைய இனிய மாளிகையிலே
எண்ணையையும் மஞ்சள் பொடியையும்
ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து தூவ
விசாலமாய் தர்ச நீயமான முற்றமானது
எண்ணையும் மஞ்சள் பொடியும் துகை உண்டு தன்னிலே சேர்ந்து
சேறாய் விட்டது –
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் திண்ணை சேர் திரு கோட்டியூர் -என்கிறபடியே –
நானா வித ரத்னங்களை அழுத்தி சமைக்கையால் வந்த அழகை உடைத்தான மாடங்களால் சூழப் பட்ட ஸ்ரீ திரு கோட்டியூரில்
பிரசஸ்த  கேசனாய்-பரிபூர்ண குணனான ஸ்ரீ கிருஷ்ணன்

பிறந்தினில் -பிறந்து இன் இல் -இன் இல் பிறந்து
ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம்  தோன்றாமல் போக வேண்டாதே –
எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற
இனிய இல்லிலே பிறந்து –
அதவா –
பிரம ருத்ராதிகளுக்கு காரண பூதனாய்-பரி பூர்ண குணனானவன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து
அவதரித்த -அளவில் என்னவுமாம் –

எண்ணையும் மஞ்சள் பொடியையும் ஹர்ஷத்தாலே களித்து -ஒருவருக்கு ஒருவர்
எதிர்த்து தூவ –
கண்ணன் முற்றம் -என்றது –
ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த போதே க்ர்ஹ நிர்வாககன்
பிள்ளையாக ஸ்ரீ நந்த கோபர் நினைத்து இருக்கையாலே ஸ்ரீ கண்ணனுடைய முற்றம் என்னுதல் –
கண் நல் முற்றம் –
இடமுடைத்தாய் -தர்ச நீயமான முற்றம் என்னுதல் –
எண்ணையும் மஞ்சளும் -இவை இரண்டும் துகை உண்டு தன்னிலே சேர்ந்து சேறாய் விட்டது –

——————————————-

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பர்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்
றாடுவார்களுமாய ஆயிற்று ஆய்ப்பாடியே -1-1-2-

பதவுரை
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியானது,
ஓடுவார்–(ஸ்ம்ப்ரமித்து) ஓடுவாரும்
விழுவார்–(சேற்றிலே வழுக்கி) விழுவாரும்
உகந்து–உகப்புக்குப் போக்குவீடாக
ஆலிப்பார்–கோஷிப்பாரும்
நாடுவார்–(பிள்ளையைத்) தேடுவாரும்
நம் பிரான்–நமக்கு உபகாரகனான கண்ணன்
எங்கு தான் என்பார்–எங்கேதான் (இராநின்றான்) என்பாரும்
பாடுவார்களும்–பாடுவார்களும்
பல் பறை–பலவகை வாத்யங்கள்
கொட்ட–முழங்க
நின்று–அதற்குப் பொருந்த நின்று
ஆடுவார்களும்–கூத்தாடுவாருமாக
ஆயிற்று–ஆய்விட்டது.

திருவாய்பாடியில் -சம்ப்ரமித்து ஓடுவாரும் –
சேற்றிலே வழுக்கி விழுவாரும் –
பிரேமத்தால் கோஷிப்பாரும்-
பிள்ளையை தேடுவாரும் –
நமக்கு உபகாரனான கண்ணன் –
எங்கே உளன் என்பாரும் –
பாடுவார்களும் –
பல வாத்தியங்களும் முழங்க –
அதற்க்கு பொருந்த நின்று –
நர்த்தனம் பண்ணுவாரும்-ஆக ஆயிற்று –

பிள்ளை பிறந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே சம்ப்ரமித்து ஓடுவார் -விழுவார் –
ஓடச்செய்தே அளற்றிலே வழுக்கி விழுவார் –
ப்ரீதராய் -அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே -ஆர்த்து கொள்ளுவார்
நாடுவார் -பிள்ளை எங்கே எங்கே என்று தேடுவார்
நம்பிரான் எங்குற்றான் என்பர் -கண்டு இருக்க செய்தேயும் -ப்ரீதி
பிரகர்ஷத்தாலே -தங்களுக்கு நிர்வாகரான ஸ்ரீ நந்த கோபன் மகனான
முதன்மை தோற்ற -நமக்கு ஸ்வாமியானவன் எங்கே என்பார் –
பாடுவார்களும் -ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடுவார்களும் –
பல் பறை கொட்ட நின்று ஆடுவார்களும் -பல வாத்தியங்களும் கொட்ட
அதுக்கு பொருந்த நின்று ஆடுவார்களும் –
அங்கன் இன்றிகே -சிலர் தங்களுக்கு தோன்றிய படி கொட்ட -நிரந்வயமாக
கூத்தாடுவார்களும் -என்னுதல் –
பாடுவார்களும் -இத்யாதிக்கு ஒக்க -கீழ் சொன்னவை எல்லா வற்றையும் –
ஓடுவாரும் விழுவாரும் என்று -இங்கனே சம்சயித்து கொள்ளுவது –
ஆயிற்று ஆய்ப்பாடியே -இப்படி திருவய்ப்பாடியிலே பஞ்ச லஷம் குடியில் உள்ளாரில்
ஒருவரும் விக்ரதர் ஆகாமல் இருந்தார் இல்லை என்றபடி –

(சாதன ஸப்தகம்
அநவசாதம் அனு ஹர்ஷம் -கூடாது அப்ராப்த விஷயத்தில்
இங்கு கிடைக்க விடில் அழுதும்
கிட்டினால் ஹர்ஷமும் -ப்ராப்த விஷயம் என்பதால் -உகந்து -அனைத்திலும் உண்டே )

——————————————-

(ரோஹிணி நக்ஷத்ரம்
ஸ்ரவணம் -விஷ்ணு நக்ஷத்ரம் -பொதுவாக சொல்லி –
வெளிப்படையாக சொன்னால் கம்சன் அறிந்து என்னாகுமோ –
இருள் அன்ன மா மேனி இருளில் பிறந்து -அழாமல் -)

பேணிச் சீருடை பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்கு போதுவார்
ஆண் ஒப்பர் இவர் நேரில்லை காண் திரு
வோணத்தான் உலகாளும் என்பார்களே -1 -1 -3-

பதவுரை

சீர் உடை =ஸ்ரீமானான குணங்களை உடைய
பிள்ளை=பிள்ளையான கிருஷ்ணன்
பேணி =கம்சாதிகள் கண் படாதபடி தன்னைக் காத்து வந்து
பிறந்தனில்=பிறந்த அளவில்
தாம் =ஆய்ப்பாடி ஆயர்கள்
காண =பிள்ளையை காண ஆசைப் பட்டு
புகுவார் =உள்ளே நுழைவாரும்
புக்கு =உள்ளே போய் கண்டு
போதுவார் =புறப்படுவாரும்
ஆண் ஒப்பார் =பும்ஸ்த்வம் உடையாரில்
இவன் நேர் இல்லை காண் =இவனோடு ஒத்தவர் இல்லை காண்
இவன்
திரு வோணத்தான் =சர்வேஸ்வரனுடைய
உலகு ஆளும் -லோகங்களை  எல்லாம் ஆளக் கடவன்
என்பார்கள் -என்று சொல்லுவாருமாக ஆனார்கள் –

சீருடை பிள்ளை பேணிப் பிறந்தினில் –
அவதரித்த போதே மாதா பிதாக்கள் சொல்லிற்று செய்கையாலே சீருடைய பிள்ளை என்கிறது –
சீர் =குணம் -அதாவது
சிறைக் கூடத்தில் திரு அவதரித்த போதை திவ்ய வேஷத்தை கண்டு –
கம்சன் நிமித்தமாக பயப்பட்ட மாதா பிதாக்கள் அபேஷிக்க-(உப ஸம்ஹர -அலௌகிகம் )
அப்போதே அந்த திவ்ய வேஷத்தை மறைத்தான் இறே-
இப்படி  உகவாதார் கண் படும் படி தன்னை பேணிக் கொடு வந்து
திருவாய்ப்பாடியிலே புகுந்த பின்பு காணும்-இவன் பிறந்தானாக நினைத்து  இருக்கிறது –

காணத் தாம் புகுவார் –
பிள்ளையை காண ஆசைப்பட்டு தாம் புகுவார்

புக்கு போதுவார் –
புக்கு கண்டு புறப்படுவார்

ஆண் ஒப்பார் இத்யாதி –
சாமுத்ரிக லஷணம் போவார் இவனைப் பார்த்து பும்ஸ்வத்த சாம்யம்
உடையவர்களில் இவனுக்கு சத்ருசர் இல்லை காண் என்பாரும் –
இவனுடைய லஷணம் இருந்தபடியால் திருவோணத்தான் ஆன சர்வேஸ்வரனுடைய லோகம் எல்லாம்
இவன் ஆளும் என்பாராய்-இப்படி பிரீதி வ்யஹாரம் பண்ணினார்கள் என்கை-

அன்றிகே
ஆண் ஒப்பான் இவன் நேர் இல்லை காண் -என்ற பாடம் ஆன போது –
ஆண் ஒப்பான் என்றது ஆண் படி-அதாவது பும்ஸ்தவ லஷணம்
ஒப்பான் என்றது -ஒப்பாம் என்றபடியே –
பும்ஸ்தவ லஷணத்தால் இவனுக்கு எதிர் இல்லை என்று பொருளாகக் கடவது –
புகுவாரும்- போதுவாரும் -உலகாளும் என்பார்களும் ஆனார்கள் –

(கீழ் பாட்டில் -ஓடுவார் -பாடுவார்களும் – ச காரம்-உம்மைத் தொகை – -ஏழு வினைச் சொற்கள்
ஆயிற்று ஆய்ப்பாடி -என்றதை-ஆனார்கள் என்று ஆக்கி –
புகுவாருமாய் போது வாரும் -உலகாளும் என்பார்களும் ஆனார்கள் -மூன்றையும் சேர்த்து -10- இப்பாட்டில் சேர்த்து அந்வயம் )

—————————————————

(பொதுவாக அருளிச் செய்த பாசுரங்கள் இந்த முதல் பதிகம்
மேலே வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே என்பதால் –
இவை யசோதை பாவத்தில் சொன்னவை அல்லவே )

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறு நெய் பால்  தயிர் நன்றாக தூவுவார்
செறி  மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனராய் ஆய்ப்பாடி ஆயரே –1-1-4-

பதவுரை
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியிலுள்ள
ஆயர்–இடையர்கள்
உறியை–(பால் தயிர் சேமித்து வைத்த)உறிகளை
முற்றத்து–முற்றத்திலே
உருட்டி நின்று–உருட்டிவிட்டு
ஆடுவார்–கூத்தாடுவார் சிலரும்,
நறு–மணம்மிக்க
நெய் பால் தயிர்–நெய்யையும் பாலையும் தயிரையும்
நன்றாக–நிச்சேஷமாக
தூதுவார்–தானம் பண்ணுவார் சிலரும்,
செறி மென்–நெருங்கி மெத்தென்றிருக்கிற
கூந்தல்–மயிர் முடியானது
அவிழ–அவிழ்ந்து கலையும்படி
திளைத்து–நர்த்தநம் பண்ணுவார் சிலருமாக,
எங்கும்–சேரி யடங்கலும்
அறிவு அழிந்தனர்–தங்களுடைய விவேகம் ஒழியப் பெற்றனர்.
மதுவனம் அழித்த முதலிகள் போல் (கிருத்ய அக்கருத்ய விவேக சூன்யர் ஆனார்கள்)

திருவாய்ப்பாடியில் உள்ள கோபர்கள்-
பாலும் தயிரும் இருக்கிற உறிகளை
முற்றத்திலே உருட்டி நின்று
ஆடுவாரும்
மணம் மிக்க நெய் முதலியவற்றை
நிச்சேஷமாக
தானம் பண்ணுவாருமாய்
நெருங்கி மெத்தென்ற
மயிர் முடியானது
அவிழ்ந்து களையும் படி
நர்த்தனம் பண்ணி
சேரி அடங்கலும்
மதுவனம் அழித்த முதலிகள் போல் கிருத்ய அக்கருத்ய விவேக சூன்யர் ஆனார்கள்

நறுவிதமான நெய்யும் பாலும் தயிரும் இருக்கிற உறிகளை -த்ரவ்ய கௌரவம்
பாராமல் அறுத்து கொடுவந்து ப்ரீதி பாரவச்யத்தாலே முற்றத்திலே உருட்டி நின்று ஆடுவார்-
க்ருத ஷீர தத்யாதிகளை -பிள்ளைக்கு நன்மை உண்டாக வேணும் -என்று தானம் செய்வார் –
செறிந்து மெத்தென்ற மயிர்முடி அவிழும்படி ச சம்பிரம நர்த்தனம் பண்ணி
திரு ஆய்ப்பாடியில் உள்ள கோபர் ஆனவர்கள் -எங்கும் ஒக்க உகவை தலை மண்டை இட்டு
(மதுவனம் அழித்த முதலிகள் போல் )கிருத்ய அக்கருத்ய விவேக சூன்யர் ஆனார்கள் –

சிலர்  உறியை முற்றத்து  உருட்டி நின்று ஆட-
சிலர் நறு நெய் பால் தயிர் நன்றாக தூவ –
சிலர் செறி மென் கூந்தல் அவிழ திளைத்து –
இப்படி ஆய்ப்பாடி ஆயர் எங்கும் அறிவு அழிந்தனர் என்று கிரியை –

———————————————–

கொண்ட தாளுறி கோலக் கொடு மழுத்
தண்டினர் பறியோலை சயனத்தர்
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் –1-1-5-

பதவுரை
தான் கொண்ட–கால் நெருக்கத்தை யுடைய
உறி–உறிகளையும்
கோலம்–அழகிய
கெரடு–கூர்மையான
மழு–மழுக்களையும்
தண்டினர்–தடிகளையுமுடையராய்
பறி–(தாழை மடலினின்றும்) பறிக்கப்பட்ட
ஓலை-ஓலைகளினாற்செய்த
சயனத்தர்–படுக்கையையுடையராய்
விண்ட–விசஹித்த
முல்லை அரும்பு அன்ன–முல்லையரும்பு போன்ற
பல்லினர்–பற்களையுடையவரான
அண்டர்–இடையரானவர்கள்
மிண்டி–(ஒருவருக்கொருவர்) புகுந்து
நெய் ஆடினார்–நெய்யாடல் ஆடினார்கள்.

கால் நெருக்கத்தை உடைத்தான உறிகளையும் –
பரிசு உண்டாய்( அழகான )கூரியதான மழுக்களையும்-
ஜாத் உசிதமான தடிகளையும் உடையராய் –
(தாழை)மடலில் நின்றும் பறிக்கப்பட்ட ஓலையாலே கோத்து சமைத்த ஸய்யையை (சயனத்தையும் ) உடையராய் கொண்டு –
ஹர்ஷம் தோற்ற ஸ்மிதம் பண்ணுகையாலே -முல்லை அரும்பு விண்டாப் போலே இருக்கிற
பல்லை உடையரான கோபரானவர்கள்-
நெருங்கி புகுந்து நெய்யாடல் ஆடினார்கள் -என்கை-

(அஷ்டமியில் பிறந்து யமுனை கடக்கும் பொழுது நவமி -கற்புடை தங்கை வளைக்காரி பிறந்த திதி
இரவு முழுவதும் நெய்யாடல் )

விண்டின்  முல்லை -என்ற பாடமான போது -விண்டு என்று குன்றாய்-குன்றின் முல்லை
நெருங்கி பூத்தாப் போலே இருக்கிற தோற்றுப் பல்லர்-என்னவுமாம் –
இடைக் கூத்தாடுவார் தோற்றுப் பல்லராய் ஆயிற்று இருப்பது -(சுரைக்காய் சேர்த்தால் போல் )
அண்டர்-தேவரும் -இடையரும் -இவ்விடத்தில் இடையரை சொல்லுகிறது —

—————————————————-

(அர்ஜுனனுக்கு விஸ்வ ரூபம் -காட்டிய ஸ்ரீ கீதாச்சார்யன்
ஜகதாகாரத்வம் –
வியாச பிரசாதத்தாலே சஞ்சயனுக்கும் காட்டி அருளினான்
சிறு பிள்ளையிலே இங்கு இவளுக்கு
விஸ்வமே வடிவம் வேறே
இங்கு வாயுக்கு உள்ள விஸ்வம் )

கையும் காலும் நிமிர்த்து கடார நீர்
பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித் தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே 1-1-6-

பதவுரை
கையும்–திருக்கைகளையும்
காலும்-திருவடிகளையும்
நிமிர்த்து–(நீட்டி) நிமிர்த்து
கடாரம்–கடாரத்தில் (காய்ச்சின)
நீர்–திருமஞ்சனத் தீர்த்தத்திலே
பசு சிறு மஞ்சளால்–குறுங்கண்ணான பசு மஞ்சளால்
பைய–திருமேனிக்குப் பாங்காக
ஆட்டி–ஸ்நாநம் செய்வித்து
ஐய-மெல்லிதான
நா–நாக்கை
வழித் தாளுக்கு–வழித்தவளான யசோதைக்காக
அங்காந்திட-(கண்ணன்) வாயைத்திறக்க, (யசோதையானவன்)
பிள்ளை–கண்ண பிரானுடைய
வாயுள்–வாயினுள்ளே
வையம் ஏழும்–உலகங்களை யெல்லாம்
கண்டாள்–ஸாக்ஷத்கரித்தாள்.

கையும் காலும் நிமிர்த்து –
திரு மஞ்சனம் செய்க்கைக்கு உடலாக திருக் கைகளையும் திருவடிகளையும் நீட்டி –
திரு மேனியின் மார்த்வத்துக்கு அநு குணமாக நிமிர்த்து –

கடார நீர் பைய ஆட்டி –
திருமேனிக்கு அநு குணமாக ஒவ்ஷதங்களும் சுகந்த த்ரவ்யங்களும்  கூட்டி
காய்ச்சின கடாரத்தில் -திரு மஞ்சனத்தாலே -திரு மேனி அலையாமல் -மெல்ல
திரு மஞ்சனம் செய்து –

பசும் சிறு மஞ்சளால் –
இது கீழ் மேலும் அந்வயித்து கிடக்கிறது –
குறும் கண்ணான பசு மஞ்சளை சாய்த்து ஆய்த்து-நீராட்டிற்றும்

ஐய நா இத்யாதி –
அப்படி இருந்துள்ள மஞ்சளாலே மெல்லியதான திரு நாவை வழித்தவளுக்கு-
அதுக்கு உடலாக –

அங்காந்திட –
பிள்ளை உடைய வாயுள்ளே சகல லோகங்களையும் கண்டாள் என்கை –
அதுக்கடி –
அர்ஜுனனுக்கு திவ்ய சஷூசை கொடுத்து விஸ்வரூபம் காட்டினாப் போலே –
இவளுக்கும் திவ்ய சஷூசை கொடுத்து தன் வைபவத்தை காட்டுகை -இறே

——————————————-

வாயுள் வையகம்  கண்ட மட நல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப்  பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே -1-1-7-

பதவுரை

வாய் உள =பிள்ளை  உடைய வாயின் உள்ளே –
வையகம் = உலகங்களை
கண்ட =பார்த்த
மட நல்லார் =மடப்பத்தையும் நன்மையையும் உடைய மாதர் =கோப ஸ்திரீகள்
இவன்
ஆயர் புத்திரன் அல்லன் =கோப குமாரன் அல்லன்
அரும் தெய்வம் -பெறுவதற்கு அரிய தெய்வம்
பாய சீருடை =பரம்பின குணங்களை உடையனாய்
பண்புடை =நீர்மையை உடையனான
பாலகன் =இந்த சிறு பிள்ளை
மாயன் =ஆச்சர்ய சக்தி யுக்தன்
என்று = என்று சொல்லிக் கொண்டு
மகிழ்ந்தனர் =மிகவும் ஆனந்தித்தார்கள்
ஏ-அசை

வாயுள் வையகம்  கொண்ட நல்லார் –
இப்படி திருப் பவளத்தின் உள்ளே லோகங்களை கண்ட –
பவ்யத்தையும் சிநேகத்தையும் உடையவர்கள் –
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -என்று கீழ் ஒருத்தியாக சொல்லிற்று ஆகிலும் –
அநு பாஷணத்திலே பலராக சொல்லுகையாலே -பின்னையும் கூடக் கண்டவர்கள்
உண்டு என்று கொள்ள வேணும் –
அதாவது –
இவள் கண்ட அநந்தரம்-அங்கு -அருகு நின்றவர்களுக்கும் காட்ட –
அவனும் தன் வைபவம் எல்லாரும் அறிக்கைக்காக அவர்களுக்கும்
திவ்ய சஷூசை கொடுத்து காட்ட கூடும் -இறே

ஆயர் புத்திரன் அல்லன் -அரும் தெய்வம் –
ஸ்ரீ நந்தகோபன் மகன் அல்லன் -பெறுதற்கு அரிய சர்வேஸ்வரன் –

பாய சீருடை பண்புடைப் பாலகன் –
பரம்பின கல்யாண குணங்களை -உடையனாய் -நீர்மை உடையனான -சிறு பிள்ளை –

மாயன் -ஆச்சர்ய சக்தன்
என்று மகிழ்ந்தனர் மாதரே
இப்படி சொல்லி மிகவும் ப்ரீதிகளானார்கள் ஸ்திரீகள் என்கை –

வாயுள் வையகம் கண்ட மட நல்லரான -மாதர் –
பாய சீருடைப் பண்புடைப் பாலகன் –
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –
மாயன் என்று மகிழ்ந்தனர் -என்று அன்வயம் –

————————————

(கார்க்காச்சார்யார் -ஸ்ரீ கிருஷ்ண -நாமம் சாத்தும் நாள்
கிருஷ் பூ வாசக சப்தம் -ஆனந்தம் கொடுப்பவன் )

பத்து நாளும் கடந்த விரண்டா நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே–1-1-8-

பத்து நாளும் கடந்த =பத்து நாளும் கழிந்த
இரண்டாம் நாள் = இரண்டாம் நாளான நாம கரண தினத்திலே
எத்திசையும் =எல்லா திக்குகளிலும்
சய மரம் = ஜய சூசுகமான தோரணங்களை
கோடித்து = நாட்டி அலங்கரித்து
மத்த மா மலை = மதித்த யானைகளை உடைய -கோவர்த்தனம் -என்னும் மலையை
தாங்கிய = தரித்து கொண்டு நின்ற
மைந்தனை = மிடுக்கனான கண்ணனை
ஆயர் = இடையர்கள்
உத்தானம் செய்து = கைத் தலத்திலே வைத்து கொண்டு
உகந்தனர் =சந்தோஷித்தார்கள்
ஏ -அசை  —

பத்து நாளும் கடந்த இரண்டாம்  நாள் –
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாளான நாம கரண திவசத்திலே –

எத்திசையும் சயமரம்  கோடித்து –
எல்லா திக்குகளிலும் ஜய சூசுகமான தோரணம் நாட்டி அலங்கரித்து

மத்த மா மலை தாங்கிய மைந்தனை –
வர்ஷ ஆபத் ரஷண அர்த்தமாக -மத்த கஜங்களை உடைத்தான -பெரிய மலையை
தரித்து கொண்டு நின்ற மிடுக்கனை –
பிற்பாடர் ஆகையாலே -தத் காலத்தில் அன்றிக்கே -பிற்காலத்தில் உள்ள
சேஷ்டிதங்களையும்-அவ் வஸ்துவுக்கு நிரூபகமாக்கி அருளி செய்யலாம் இறே ஆழ்வாருக்கு –

உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே –
இடையர் எல்லாரும் சிநேக அதிசயத்தாலே -தனித் தனியே தம் தம்
கைகளில் எடுத்து கொண்டு ப்ரீதரானர்கள் -என்கை– –

———————————————

ஒன்பதாம் பாடு –

(யசோதை வார்த்தையாகவே இது )

திருவவதரித்த அளவில் ஊர் அடங்கலும் செய்த உபலாளந  விசேஷங்களை
அனுசந்தித்து இனியரானார் கீழ் –
இப்பாட்டில் பருவத்துக்கு தகுதி அல்லாத சேஷ்டிதங்களை அனுசந்தித்து –
திருத்தாயார் -சந்நிஹிதர் ஆனவர்களுக்கு சொன்ன பாசுரத்தை –
அவளான பாவனையிலே தாம் அனுபவித்து -இனியர் ஆகிறார் –

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடிக்காலமையால் நான் மெலிந்தேன் நங்காய் -1-1-9-

நங்காய் =பூர்ணைகளான ஸ்திரீகளே
கிடக்கில் = இப்பிள்ளை தொட்டிலில் கிடந்தானாகில் –
தொட்டில் = தொட்டிலானது
கிழிய = சிதில மாம் படி
உதைத்திடும் -உதையா நிற்கும்
எடுத்துக் கொள்ளில் -இப்பிள்ளையை இடுப்பில் எடுத்து கொண்டால்
மருங்கை = இடுப்பை
இறுத்திடும் =முறியா நிற்கும்
ஒடுக்கி =வியாபார ஷபன் அல்லாதபடி செய்து
புல்கில் = மார்வில் அணைத்து கொண்டால்
உதரத்து -வயிற்றிலே
பாய்ந்திடும் = பாயா நிற்கும்
மிடுக்கு = இந்த சேஷ்டைகளை பொறுக்க வல்ல சக்தி
இல்லாமையால் -பிள்ளைக்கு இல்லாமையால் –
நான் = தாயான நான் –
மெலிந்தேன் = மிகவும் இளைத்தேன்
ஏ -அசை

கிடக்கில் -இத்யாதி –
தொட்டிலிலே வளர்த்தினால் -அதிலே கிடந்தானாகில் -தொட்டில் கிழியும் படி உதையா நிற்கும் –

எடுத்துக் கொள்ளில் மருங்கை  இறுத்திடும் –
திருவடிகளின் மார்த்தவத்துக்கு இது பொறாது-என்று அஞ்சி ஒக்கலையில் எடுத்து கொள்ளில் –
புடை பெயர்ந்து ஒக்கலையை முறியா நிற்கும் –

ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும் –
இது அத் திருமேனியின் மார்த்தவத்துக்கு பொறாது -என்று வியாபார ஷமன்
அல்லாதபடி ஓடிக்கி மார்விலே இட்டு கொள்ளில் -திருவடிகளாலே வயிற்றிலே பாயா நிற்கும் –

மிடிக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் –
இந்த சேஷ்டிதங்களை எல்லாம் பொறுக்க வல்ல சக்தி பிள்ளைக்கு போராது என்று –
நான் போர இளைத்தேன் –

நங்காய் என்று ஜாத் யேக வசனமாய் -நங்கைமீர் -என்றபடி –
நீங்கள் எல்லாம் பருவத்துக்கு தக்க சேஷ்டிதங்களை உடைய பிள்ளையை
பெற்று வளர்க்கையாலே -பூரணைகளாய் இருக்கிறீர்கள் இத்தனை –

——————————————————-

அவதாரிகை –
நிகமத்தில் -இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லித்  தலைக் கட்டுகிறார் –

செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே–1-1-10-

செம் நெல்  =செந்நெல் தான்யமானது
ஆர் =நிறைந்து இருக்கிற
வயல் =கழனி  களாலே
சூழ் = சூழப் பட்ட
திரு கோட்டியூர் =திரு கோட்டியூரிலே
மன்னு = நித்ய வாசம் பண்ணுகிற
நாரணன் = நாராயண சப்த வாச்யனாய்
நம்பி = குண பூர்ணனான கண்ணன்
பிறந்தமை = அவதரித்த பிரகாரத்தை
மின்னு நூல் = விளங்கா நின்ற யஜ்ஜோபவீதத்தை உடைய
விட்டு சித்தன் =பெரிய ஆழ்வார்
விரித்த = பரப்பி அருளி செய்ததாய்
இப் பன்னு பாடல் = ஜ்ஞானிகள் அநவரதம் அனுசந்திக்கும் படியான இப் பாசுரங்களை
வல்லார்க்கு = கற்கும் அவர்களுக்கு
பாவம் இல்லை = பாபம் இல்லை
ஏ -அசை

செந்நெல் இத்யாதி
செந் நெலால்  நிறைந்து இருக்கிற வயல்களாலே சூழப் பட்ட திரு கோட்டியூரிலே –
அசாதாரண  விக்ரஹ விசிஷ்டனாய் கொண்டு நித்ய வாசம் பண்ணுகிற –
நாராயண சப்த வாச்யனாய் -கல்யாண குண பரி பூர்ணனானவன் திரு வவதரித்த பிரகாரத்தை –
(ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராப்தி நிகேதன ஆகாதோ மதுராம் புரிம் -பிராமண ஸித்தம் )

மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த –
பட்டர் பிரான் ஆகையாலே விளங்கா நின்றுள்ள திரு யஜ்ஜோபவீதத்தை உடையராய் –
சர்வ வ்யாபகனான சர்வேஸ்வரனை தம் திரு உள்ளத்திலே வைத்து கொண்டு இருக்கையாலே –
விஷ்ணு சித்தர் என்னும் திரு நாமத்தை உடையரான பெரிய ஆழ்வார் –
திரு வவதரித்த காலத்தில் உபலாள நாதிகளோடே கூட விஸ்த்ரனே அருளி செய்த –

இப் பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே –
ரஸ்யதையால் விசேஷ ஜ்ஞானர் ஆனவர்கள் எப்போதும் சொல்லும்படியான
இப் படாலை சாபிப்ராயமாக வல்லவர்களுக்கு –
பகவத் அனுபவ விரோதியான பாபம் இல்லை –

——————————-

அடி வரவு
வண்ணம் ஓடு பேணி உறி கொண்ட கை
வாயுள் பத்து கிடக்கில் செந்நெல் சீதக் கடல்

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: